Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னாரில் “சிவ சேனை” பெயரில் சுவரொட்டிகள்

Featured Replies

56 minutes ago, Eppothum Thamizhan said:

புலம்பெயர் நாடுகளில் வியாபாரத்துக்காக கோவிலைக்கட்டி அதில்  பணமோசடிகளாலும் பூசகர்களுடன் ஏற்படும் சிறு சிறு மனக்கசப்புகளால் நடக்கும் இப்படிப்பட்ட வாக்குவாதங்களையும் சண்டைகளையும் ஏன் மதத்தோடும்  கலாச்சாரத்தோடும் முடிச்சு போடுகிறீர்கள்.

இதைவிட மிக கேவலமான சண்டைகள் இலங்கை பாராளுமன்றத்தில் மட்டுமல்ல ஐரோப்பிய பாராளுமன்றங்களில் கூட நடைபெறுகிறதே. அதை வைத்து அந்தந்த நாட்டு கலாச்சாரங்கள் கேவலமானவை என சொல்வீர்களா? என்  தேவாலயங்களில்கூட போதகர்களின்  கேட்ட நடத்தைகளால் மக்கள்முன் அவரை அடித்து துவைத்த சம்பவங்களும் நடந்திருக்கிறதே.

ஓரிருவரின் அல்லது ஒரு குழுவின் நடத்தையை வைத்து ஒரு இனத்தையோ மதத்தையோ குற்றம்சாட்டுவது சிறுபிள்ளைத்தனம் . இது இயலாமையால் வருவதே.

இப்படிக் கூறுவீர்கள் என்று தெரியும். இது ஒரு சிறிய எடுத்துக்காட்டுமட்டுமே புலம்பெயர் நாடுகளில் ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்குமே கெட்ட பெயரை பெற்றுத்தந்த தந்து கொண்டிருக்கும்  பல ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடப்பது  உங்களுக்கு  மட்டுமல்ல எல்லோருக்குமே தெரியும். இருப்பினும்  அப்படி ஒன்றுமே இல்லை நாம் தாம் உலகின் உன்னதமான கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் என்று எமக்குள்ளேயே கிணற்றுத்தவளைகள் போல் சப்பைக்கட்டு கட்டி திருப்தி கொள்வோம்.👋👋

Edited by tulpen

  • Replies 75
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

இப்படிக் கூறுவீர்கள் என்று தெரியும். இது ஒரு சிறிய எடுத்துக்காட்டுமட்டுமே புலம்பெயர் நாடுகளில் ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்குமே கெட்ட பெயரை பெற்றுத்தந்த தந்து கொண்டிருக்கும்  பல ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடப்பது  உங்களுக்கு  மட்டுமல்ல எல்லோருக்குமே தெரியும். இருப்பினும்  அப்படி ஒன்றுமே இல்லை நாம் தாம் உலகின் உன்னதமான கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் என்று எமக்குள்ளேயே கிணற்றுத்தவளைகள் போல் சப்பைக்கட்டு கட்டி திருப்தி கொள்வோம்.👋👋

நாம் உன்னத கலாச்சாரத்தை கொண்டவர்கள் என்று நான் எங்கும் கூறவில்லையே! ஓரிரு அல்லது ஒருநூறு தனி நபர்களின் நடத்தையை வைத்து ஒரு இனத்தின் மத மொழி கலாச்சாரத்தை குறை கூறாதீர்கள்.

நாளுக்குநாள் அல்லது கிழமைக்கு கிழமை அல்லது மாத்திற்கு மாதம் தமது துணைகளை மாற்றி மாற்றி வாழும் வெளிநாட்டு சமூகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட, பழகிப்போன உங்களுக்கு தாயக தமிழ் கலாச்சாரம் இழிவாக தெரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லைத்தான்!

Edited by Eppothum Thamizhan

2 hours ago, Eppothum Thamizhan said:

நாளுக்குநாள் அல்லது கிழமைக்கு கிழமை அல்லது மாத்திற்கு மாதம் தமது துணைகளை மாற்றி மாற்றி வாழும் வெளிநாட்டு சமூகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட, பழகிப்போன உங்களுக்கு தாயக தமிழ் கலாச்சாரம் இழிவாக தெரிவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லைத்தான்!

எதைப்பற்றி கதைத்தலும் இந்த ஒரு விடயத்தை மட்டும் தான் எப்போதும் உங்களைப்போன்றவர்களால் பேச முடியும். அதுவும் தாயகத்தில் நடைபெறவில்லையா என்றால் அதுவும் உண்மை இல்லை. எல்லாம் ஒளித்து மறைத்து நடைபெறுகிறது. மதங்களைப்பற்றி மூடப்பழக்கங்களை பற்றி தொடங்கிய விவாதம் வேறு எங்கோ சம்பந்தம் இல்லாமல் வந்து நிற்கிறது.  Good bye. Have a nice weekend 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2019 at 3:34 AM, Eppothum Thamizhan said:

அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். உங்கள் மதத்தை உங்கள் வீட்டுடனும் தேவாலயத்துடனும் வைத்துக்கொள்ளுங்கள். அதை என் மற்றவன் வீட்டிற்கு  சென்று போதித்து மதம் மாற்ற முனைகிறீர்கள் என்பதுதானே பிரச்சனையே!

சாதிப்பிரச்சனை, நிற துவேசம் என்பன எல்லா நாட்டிலும் ஏன் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கூட..இருக்கிறது. அப்படி இல்லை என்று வாதிடும் உங்களுடன் கருத்தாடுவதில் பயனில்லை.

ஒருவன் தனது மனைவியையோ அல்லது கூடப்பிறந்தவர்களையோ கூட்டிக்கொடுப்பதால் சலுகைகளும் துன்பங்களுக்கு தீர்வும் கிடைக்கும் என்றால் அதைக்கூட செய்யலாம் என்பீர்களா? அதெப்படி மதம் மாறுவதால் இவை கிடைக்கும் என்றால் மதம் மாறலாம் என்பதை இவ்வளவு இலகுவாக நியாயப்படுத்துகிறீர்கள்.

எமது இனத்தின் அடையாளம் மதமும் மொழியுமே. அதை தொலைத்துவிட்டு எமது துன்பங்கள் தீர மத மொழி மாற்றங்களே தீர்வென்றால் சிங்களவராகவும் புத்தனாகவும் மாறி நமது நாட்டிலேயே வாழலாமே. போராட்டங்களே தேவை இல்லையே.

நீங்கள் அப்படியான வாழ்க்கையே மேலென நினைத்தால் நீங்கள் வாழும் நாட்டின் அடையாளத்துடன் வாழ்ந்துவிட்டு போங்கள். தயவு செய்து இலங்கை தமிழனென்று அடையாளப்படுத்தி எமக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய போராளிகளையும் மக்களையும் கொச்சை படுத்தாதீர்கள்.

உங்களை ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் அவர்களது நாட்டில் அனுமதித்தது உங்களிடம் வேலை வாங்கி அவர்களின் பொருளாதார நலன்களை மேம்படுத்தவே அன்றி உங்களில் உள்ள அக்கறையால் அல்ல.

எ.த,

இதில் இருப்பதெல்லாம் அர்த்தமில்லாத கோபக் கருத்துக்கள்! ஆனால், உங்களுக்கல்ல, இதை வாசிப்போருக்காகப் பதில் சொல்ல வேண்டும்: ஒருவன் தன் குடும்பத்தைக் கூட்டிக் கொடுப்பதும் மதம் மாறுவதும் ஒரே மாதியானவை அல்ல! இது உங்களுக்குப் புரியாது, விட்டு விடுங்கள்!

நான் சொல்வதே, யார் நினைத்தாலும் எந்த அடையாளத்துடனும் வாழ்ந்து விட உரிமை உண்டு! அதை நீங்கள் கேட்க உரிமையில்லை! என் அடையாளம் பற்றி நீங்கள் கோபப் பட்டால் அது உங்கள் மனப் பிரச்சினை! நான் மருந்தெடுக்க இயலாது!

இறுதிப் பகுதி: இப்படியொரு கற்பனையை நம்மில் பலர் வைத்திருக்கிறார்கள். "நாம் ஓடி வரவில்லை, இருக்கக் கேட்கவில்லை. எங்களை தங்கள் நன்மைகளுக்காக இங்கே ஏற்றுக் கொண்டார்கள், ஏனெண்டால் நாங்க இல்லாட்டி இந்த நாடு வளராமல் வீணாப் போய் விடும்!" . ஓம், எ.த, உங்கள் எங்கள் போன்றோர் அதிகம் வாழ்கிற தென்னாசியா எல்லாவற்றிலும் கொடி கட்டிப் பறக்கிறது, அதே கொடியை இங்க நாட்ட மேற்கத்தையன் உங்களையும் என்னையும் அழைக்கிறான்! கற்பனைக்கு எல்லை போடக் கூடாது, அப்படியே நம்புங்கள்!😀

பதில் எழுத யோசிக்காதையுங்கோ! போய் உங்கள் தமிழ் அடையாளத்தைக் காக்க கீ போட் போர் நடத்துங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2019 at 8:47 PM, Maruthankerny said:

அடுத்தவன் கருத்து எழுதினால் ...
மட்டுஉறுப்பினர் வந்து பார்க்க வேணும் !

என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை! வேறு திரி விடயமா? நான் சொல்வது "நினைப்பதை விதிகளை மீறாமல் சொல்லவே யாழ் களம்". விதி மீறினால் முறையிடலாம்! மட்டு வந்து என்னை அடக்கி வாசிக்கச் சொல்லலாம்! சக உறுப்பினர் சொல்ல முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, tulpen said:

நான் நம்புகிறேனோ இல்லையோ விவாதங்களின் போது ஒருவர் தனது நம்பிக்கைகாக வாதாடும் போது உங்கள் நம்பிக்கைகளில் என்ன அப‍த்தங்கள் உள்ளன என்பதை உதாரணங்களுடன் சுட்டிக்காட்டுவதே அறிவு பூர்வமான விவாதம். அதுவே இயல்பு. உங்களால் முடிந்தால் நான் கூறிவை தவறானவை என்று விவாதியுங்கள். அதுவே நியாயமானது கூட. 

துல்பன்,நீங்கள் தான் மேலே இரிகாசங்களை மேற் கோள் காட்டி அதில் எப்படி எல்லாம் சாதி பிரிர்த்தார்கள் என்று சுட்டிக் காட்டினீர்கள் ...நீங்கள் அதை ஏற்றுக் கொண்ட படியால் தான் அதை சுட்டிக் காட்டினீர்கள்.
இரிகாசங்களில் சொன்னதை யார் இப்போது கடைப்பிடிக்கிறார்கள் ..உங்களை மாதிரி ஒரு சிலர் தான் வேலை வெட்டி இல்லாமல் அதை வாசித்து கொண்டு அதில் உள்ள குறைகளை மட்டுமே தூக்கிப் பிடிச்சுக் கொண்டு ,முக்கியமாய் சாதி பார்த்துக் கொண்டு திரிகின்ற ஆட்கள்...முதலில் நீங்கள் திருந்ததுங்கோ ...உலகம் தன்னாலே திருந்தும்  

1 hour ago, ரதி said:

ஒரு விடயம் தொடர்பக விவாதிக்கும் போது அது தொட்பான் சான்றுகளுடன் கருத்தாடல் செய்வதே ஆரோக்கியமான நாகரீகமான விவாதம் ஆகும். மகாபாரதத்தையும். இராமாயணத்தையும் வேலை வெட்டி இல்லாமல் இப்போது  நான் வாசிக்கவில்லை.பாடசாலை போகும் பருவத்தில் வாசித்தது. எமது சமுதாயத்தினால புனித காவியங்களாக காட்டப்பட்டு  எமக்கு தரப்படுபவற்றில் தர்க்கரீதியாக கேள்வி எழுப்பும் உரிமை எனக்கு உண்டு. அறிவு பூர்வமாக கருத்தாடல் செய்யும் யாழ்கள நண்பர்களால அதைப் புரிந்து கொள்ள முடியும்  பிள்ளையான் போன்ற தறுதலைகளை தலைவனாக மதிக்கும்  உங்களுக்கு இதை புரிந்து கொள்வது கஷ்ரம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. Good night ! Schlaf gut 

ஒன்றை சுட்டிக்காட்டுவது என்றால் அதை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமா ரதி?

மகாபாரதம், வர்ணாச்சிரமம் போன்றவன தான் சாதியத்தின் அடிப்படையே. இதிகாசங்கள் படு பொய்யானவை. ஆனால் இந்த பொய்யுக்கு இருக்கும் சக்தி அதீததாமனது. ஒரு இந்து இன்னொரு இந்துவை சிறுமைப்படுத்தவும், அடக்குவதற்கும் ஆதாரமாக இருப்பது இந்த பொய்யான கட்டுக் கதைகள் அடங்கிய இதிகாசங்கள் தான். சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு மகாவம்சம் எனும் புனைவுகளுடனான வரலாற்று நூல் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றதோ அதே போன்றுதான் இந்து மத இதிகாசங்கள் பல சாதியத்துக்கு அடிப்படையாக அமைகின்றன.

இந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் சாதியத்துக்கும் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கும் சாதியத்துக்கும் வழக்கங்களிலும் அடக்குமுறைகளிலும் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சாதியம் இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

புலம்பெயர் தேசங்களில் ஒருவரை சிறுமைப்படுத்துவதற்கும், அடக்குவதற்கும் அதிக வாய்ப்புகள் இல்லாமையால் திருமணம் போன்ற விடயங்களில் மட்டும் சாதியம் கெட்டியாக தன்னை பேணி வருகின்றது. ஆனால் தாயகத்தில் இன்று மிக வேகமாக மீண்டும் வளர ஆரம்பித்து இருக்கு. கோயில்களில் தேரை இழுப்பதற்கு தடை என்பதில் இருந்து இளம் சமுதாயம் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒருவரை சாதி சொல்லி திட்டியும் தம் சாதியை உயர்வாக எழுதியும் வருவது வரை அங்கு மீண்டும் சாதியம் வேகமாக வளர்கின்றது.
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்களும் சமூக நெறி தவறிய சம்பவங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற விடயத்தையாவது அறிந்து இருப்பீர்கள் என நம்புகின்றேன். இவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக இருப்பதே இந்த போலி இதிகாசங்களினூடாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதியம்.

2 hours ago, நிழலி said:

கோயில்களில் தேரை இழுப்பதற்கு தடை என்பதில் இருந்து

வரணி பகுதியில் இடம்பெற்ற இந்த தேர் இழுத்தல் சம்பவம் இந்து / சைவ சமூகம் விழித்தெழுந்து மிகமிகக் கொடிய சாதீய ஏற்றத் தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது. அந்தக் கோவிலின் நிர்வாகத்தினர் தமது கழிசடைக் குணங்களை ஆலயம் போன்ற இடங்களில் காட்டுவதை இந்து / சைவ சமூகம் வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும்! இல்லையென்றால் அதுவும் தமிழினத்தின் அழிவுக்கு தான் வழிவகுக்கும்.

நான் அறிந்தவரை சைவ சமயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்பதை 64 நாயன்மார்கள் எனப்படுபவர்களின் பின்னணி காட்டுகிறது. இதை தெரியாதவர்களாக இந்து / சைவ சமூகம் இருப்பது கேவலமானது.

அத்துடன் இந்து / சைவ சமூகம் தமிழ் கடவுள் எனப்படுபவர்களை புறக்கணித்து குரங்குகளை (அனுமான்), கழுதைகளை வழிபட முற்படுவது மிகமிகக் கேவலமாக தெரிகிறது. 15, 20 வருடங்களுக்கு முன்னர் இந்த குரங்குகளை வழிபாடும் கேவல மனநிலைகளை நாம் கண்டதில்லை.

இந்த வட இந்தியத் திணிப்புகளுக்கு பின்னணியில் தமிழின அழிப்பின் பங்காளியான இந்திய அரச பயங்கரவாதிகளின் முகவர்கள் இருக்கிறார்கள். சிவசேனை போன்றவர்கள் இவற்றை கட்டுப்படுத்தாமல் / எதிர்க்காமல் இயங்குவதில் அர்த்தமில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நிழலி said:

ஒன்றை சுட்டிக்காட்டுவது என்றால் அதை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமா ரதி?

மகாபாரதம், வர்ணாச்சிரமம் போன்றவன தான் சாதியத்தின் அடிப்படையே. இதிகாசங்கள் படு பொய்யானவை. ஆனால் இந்த பொய்யுக்கு இருக்கும் சக்தி அதீததாமனது. ஒரு இந்து இன்னொரு இந்துவை சிறுமைப்படுத்தவும், அடக்குவதற்கும் ஆதாரமாக இருப்பது இந்த பொய்யான கட்டுக் கதைகள் அடங்கிய இதிகாசங்கள் தான். சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு மகாவம்சம் எனும் புனைவுகளுடனான வரலாற்று நூல் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றதோ அதே போன்றுதான் இந்து மத இதிகாசங்கள் பல சாதியத்துக்கு அடிப்படையாக அமைகின்றன.

இந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் சாதியத்துக்கும் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கும் சாதியத்துக்கும் வழக்கங்களிலும் அடக்குமுறைகளிலும் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சாதியம் இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

புலம்பெயர் தேசங்களில் ஒருவரை சிறுமைப்படுத்துவதற்கும், அடக்குவதற்கும் அதிக வாய்ப்புகள் இல்லாமையால் திருமணம் போன்ற விடயங்களில் மட்டும் சாதியம் கெட்டியாக தன்னை பேணி வருகின்றது. ஆனால் தாயகத்தில் இன்று மிக வேகமாக மீண்டும் வளர ஆரம்பித்து இருக்கு. கோயில்களில் தேரை இழுப்பதற்கு தடை என்பதில் இருந்து இளம் சமுதாயம் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒருவரை சாதி சொல்லி திட்டியும் தம் சாதியை உயர்வாக எழுதியும் வருவது வரை அங்கு மீண்டும் சாதியம் வேகமாக வளர்கின்றது.
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்களும் சமூக நெறி தவறிய சம்பவங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற விடயத்தையாவது அறிந்து இருப்பீர்கள் என நம்புகின்றேன். இவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக இருப்பதே இந்த போலி இதிகாசங்களினூடாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதியம்.

இந்தியா மற்றும் கம்பராமயணம்,மகாபாரதம் என்பவற்றை விடுத்து ஈழம் என்ற கோட்பாட்டுக்குள் வாருங்கள்.

ஆதியான சாதி பற்றி நிறைய உரையாடலாம்.
என்னைப் பொறுத்த வரைக்கும் சாதி பேதங்கள் களையப்பட வேண்டும்.

எனது கேள்வி எங்கிருந்து ஆரம்பிப்பது?

பலன்கள்-: நிறையவே உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களால் புனையப்படும் அடிப்படையற்ற கதைகளே சரித்திரங்களையும், மத, இன , மொழி, அடையாளங்களின் இருப்பையும் தீர்மானிக்கும் சக்திகளாக இன்றும் இருப்பதால், நாம் இவற்றிலிருந்து விலகி நடத்தலவசியம். நிழலியின் கருத்து அருமை.

அதேபோல, இங்கே துல்பெனால் இவை மேற்கோள் காட்டப்பட்டமை அவற்றை விமர்சிக்கும் பாங்கிலேயன்றி ஏற்றுக்கொண்டதனால் அல்ல என்பதே எனது அபிப்பிராயம்.

8 hours ago, குமாரசாமி said:

எனது கேள்வி எங்கிருந்து ஆரம்பிப்பது?

பலன்கள்-: நிறையவே உள்ளது. 

நிழலியின் கருத்துக்கள் அருமை. சாதியத்தின் ஊற்று இந்து மதத்தில்தான் தொடங்குகின்றது. 

துல்பான் சுட்டிக்காட்டியது போன்று எல்லா மதங்களிலும் பல முட்டாள்தனமான பிற்போக்குத்தனமான கருத்துக்கள் நிறையவேயுள்ளன.

மாற்றங்கள் எமக்குள்ளேதான் தொடங்கமுடியும் மற்றவரை மாறும்படி கேட்பது குழப்பத்தில்தான் முடியும்.

எனது பின்புலம் இந்து மதத்தினைச் சார்ந்ததாயின் இந்துமதத்திலுள்ள குழறுபடிகளை அடையாளம் கண்டு நான்தான் என்னை திருத்த முயலவேண்டும் அதனை விமர்சிக்கவேண்டும். 

அதைவிடுத்து இசுலாம் மதத்தினையோ அல்லது கிறித்துவ மதத்தினையோ குறைபிடித்து குற்றம் சாட்டுவது இனமதமோதலையே தோற்றுவிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

ஒரு விடயம் தொடர்பக விவாதிக்கும் போது அது தொட்பான் சான்றுகளுடன் கருத்தாடல் செய்வதே ஆரோக்கியமான நாகரீகமான விவாதம் ஆகும். மகாபாரதத்தையும். இராமாயணத்தையும் வேலை வெட்டி இல்லாமல் இப்போது  நான் வாசிக்கவில்லை.பாடசாலை போகும் பருவத்தில் வாசித்தது. எமது சமுதாயத்தினால புனித காவியங்களாக காட்டப்பட்டு  எமக்கு தரப்படுபவற்றில் தர்க்கரீதியாக கேள்வி எழுப்பும் உரிமை எனக்கு உண்டு. அறிவு பூர்வமாக கருத்தாடல் செய்யும் யாழ்கள நண்பர்களால அதைப் புரிந்து கொள்ள முடியும்  பிள்ளையான் போன்ற தறுதலைகளை தலைவனாக மதிக்கும்  உங்களுக்கு இதை புரிந்து கொள்வது கஷ்ரம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. Good night ! Schlaf gut 

நன்றி...இயலாத கட்டத்தில் இதிலும் பார்க்க கேவலமாய் எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்....பல பேர் உதைத் தான் இங்கு செய்கிறார்கள்.பிள்ளையான் என்ட தலைவன் இல்லை...ஆனாலும் உங்களுக்கு பிள்ளையானைப் பற்றி கதைக்க தகுதி இல்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

நன்றி...இயலாத கட்டத்தில் இதிலும் பார்க்க கேவலமாய் எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன்....பல பேர் உதைத் தான் இங்கு செய்கிறார்கள்.பிள்ளையான் என்ட தலைவன் இல்லை...ஆனாலும் உங்களுக்கு பிள்ளையானைப் பற்றி கதைக்க தகுதி இல்லை.

பிள்ளையான் துரோகியாக இருந்தாலும் கிழக்கில் அவர் முதலமைச்சராக இருந்த போது செய்த சேவைகளை ( காணி பறிபோகல,மதமும் மாறல)  யாரும் செய்யல என்று சிலருக்கு இன்னும் தெரியாது ரதி 

40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பிள்ளையான் துரோகியாக இருந்தாலும் கிழக்கில் அவர் முதலமைச்சராக இருந்த போது செய்த சேவைகளை ( காணி பறிபோகல,மதமும் மாறல)  யாரும் செய்யல என்று சிலருக்கு இன்னும் தெரியாது ரதி 

பிள்ளையான் செய்த சேவைகளில் ஒன்றுதான், பரராசசிங்கத்தைப் போட்டுத் தள்ளியது.

அவர் செய்த சேவையின் நிமித்தம், இலங்கை அரசும் அவரைக் கௌரவித்திருக்கிறது - கம்பிகளுக்குப் பின்னால்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, thulasie said:

பிள்ளையான் செய்த சேவைகளில் ஒன்றுதான், பரராசசிங்கத்தைப் போட்டுத் தள்ளியது.

அவர் செய்த சேவையின் நிமித்தம், இலங்கை அரசும் அவரைக் கௌரவித்திருக்கிறது - கம்பிகளுக்குப் பின்னால்.

 உனமையில் அவர்தான் போட்டது என்று உங்களுக்கு தெரியுமா என்ன??  அப்போ ராஜிவ் காந்தியை  போட்டவர் இறந்து போக மற்றவர்களை ஜெயிலில் வைத்திருக்கிறார்கள் ??  சுட்டவனுக்கே வெளிச்சம் 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2019 at 11:19 AM, manimaran said:

மாற்றங்கள் எமக்குள்ளேதான் தொடங்கமுடியும் மற்றவரை மாறும்படி கேட்பது குழப்பத்தில்தான் முடியும்.

அப்போ நாமும் கிறீஸ்தவர்கள், முஸ்லிம்கள் போல் மதம் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று சொல்கிறீர்களா? எமது சைவ மத்திற்க்கு அது  தேவையில்லை என்பது எனது நிலைப்பாடு. எமது சமயத்தில் நிறைய  நல்ல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. மகாபாரதமும் ராமாயணமும் சைவ சமய நூல்களில்லை . அவை ஆரிய இதிகாசங்கள். அதை நாம் தூக்கிப்பிடிப்பதுமில்லை. எமது  தேசம் ராவணன் தேசம் என்று தெரிந்தும் ராமாயணத்தை நாம் கடைப்பிடித்தால் அதை விட அயோக்கியத்தனம் எதுவுமில்லை. என்னை பொறுத்தவரையில் இவையிரண்டும் just fantasy stories  அவ்வளவே. எமது சமையத்தில் கூறப்பட்டுள்ள நல்ல விடயங்களை உள்வாங்கி அதன்படி நடந்தாலே போதுமானது.
 
அதைவிடுத்து இசுலாம் மதத்தினையோ அல்லது கிறித்துவ மதத்தினையோ குறைபிடித்து குற்றம் சாட்டுவது இனமதமோதலையே தோற்றுவிக்கும்.

இங்கு யாரும் மதங்களை குறைகூறவில்லை. இந்த திரியே கட்டாயா மதமாற்ற எதிப்பு பற்றியது. இதில் இங்கு பல சட்ட வல்லுநர்கள் சட்டம் கதைத்து கொண்டிருப்பதால்தான் திரியின் போக்கே மாறியது. எமது மதத்தில் குறையில்லை என்று யாரும் சொல்லவில்லை. மதத்தில் உள்ள குறைகளால்தான்  மக்கள் மதம் மாறுகிறார்கள் என்று சொல்லிவிட்டு பல சந்ததிகளை கடந்தும் மதம் மாறியவர்களும் அதே சாதிய கோட்பாடுகளுடன்தான் இப்போதும் இருக்கிறார்கள் அதற்கும் எமது சைவ சமயம்தான் காரணமென்று தாம்  இலவசங்களுக்காக சோரம் போனதற்கு நியாயம் கற்பிக்கிறார்கள். 

வத்திக்கானும், மத்திய கிழக்கு நாடுகளும் மற்றவர்களை மதம் மாற்றுவதற்கு பல பில்லியன் டாலர்களை ஆண்டுதோறும் செலவளிப்பது  இங்கு பலருக்கு தெரியாதது போல் நடிக்கிறார்கள் அல்லது அது சரியே என்று வாதிடுகிறார்கள். 

எமது போராட்டம் இனத்தை மையப்படுத்தியே ஆரம்பமானது. அதற்காக கட்டாய மத மாற்றத்தை அவர்கள் ஆதரித்தார்கள் என்பது பொருளல்ல. ஒரு இனத்தின் இருப்பு அதன் மத மொழி கலாச்சார அடையாளங்களால்தான் தக்கவைக்கப்படுகிறது.

On 1/13/2019 at 9:31 AM, தனிக்காட்டு ராஜா said:

 உனமையில் அவர்தான் போட்டது என்று உங்களுக்கு தெரியுமா என்ன??  அப்போ ராஜிவ் காந்தியை  போட்டவர் இறந்து போக மற்றவர்களை ஜெயிலில் வைத்திருக்கிறார்கள் ??  சுட்டவனுக்கே வெளிச்சம் 

சுட்டவன் வெளிச்சத்திற்கு வந்தபடியால்தான், பிள்ளையான் இருளில் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

சுட்டவன் வெளிச்சத்திற்கு வந்தபடியால்தான், பிள்ளையான் இருளில் இருக்கிறார்.

அப்ப சுட்டவர் பிள்ளையான் இல்லைதானே :34_rolling_eyes:

3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப சுட்டவர் பிள்ளையான் இல்லைதானே :34_rolling_eyes:

ஏன் பிள்ளையான் மீண்டும் வெளிச்சத்திற்கு வர முடியாமல் தவிக்கிறார்?

சுட்டவர் என்றபடியாலா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

ஏன் பிள்ளையான் மீண்டும் வெளிச்சத்திற்கு வர முடியாமல் தவிக்கிறார்?

சுட்டவர் என்றபடியாலா?

இல்லை பொய்யாகவே  சோடிச்ச வழக்கினால் போனவாரம் விடுதலை கொடுத்திருக்க வேண்டும் ஆனால் கொடுக்கல திகதி பிற்போடப்பட்டிருக்கு அரசியல் பேரம் பேசலில் பிள்ளையான் சில கட்சிக்காரர்களை அணுசரித்து போகவில்லை அப்படி போனால் அடுத்த மாதமே விடுதலை அதை அரசியல் வாதிகள் விரும்பல முஸ்லிம் , தமிழ் ஆனால் சிங்கள பிரபலம் இணையச்சொல்லி கேட்கிறது ஆனால் இணைய பிள்ளையான் விரும்பல விரும்பினால் விடுதலை உறுதி :):104_point_left:

18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்று வெளியில் வராவிட்டால், அவர் நாளை வெளியில் வருவார்.

அதுவல்ல இங்கு பிரச்சனை.

அவர் இதுவரை இருளில் இருப்பது,  சுட்டவர் என்று வெளிச்சமாகியபடியால்தானே!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, thulasie said:

இன்று வெளியில் வராவிட்டால், அவர் நாளை வெளியில் வருவார்.

அதுவல்ல இங்கு பிரச்சனை.

அவர் இதுவரை இருளில் இருப்பது,  சுட்டவர் என்று வெளிச்சமாகியபடியால்தானே!

சபா முடியல சாட்சியங்களும் சந்தர்ப்பங்களும் தான் அவர் உள்ளே இருக்க காரணம்  அவருக்கு ஆதரவு நான் கிடையாது :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎11‎/‎2019 at 9:11 PM, நிழலி said:

ஒன்றை சுட்டிக்காட்டுவது என்றால் அதை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமா ரதி?

மகாபாரதம், வர்ணாச்சிரமம் போன்றவன தான் சாதியத்தின் அடிப்படையே. இதிகாசங்கள் படு பொய்யானவை. ஆனால் இந்த பொய்யுக்கு இருக்கும் சக்தி அதீததாமனது. ஒரு இந்து இன்னொரு இந்துவை சிறுமைப்படுத்தவும், அடக்குவதற்கும் ஆதாரமாக இருப்பது இந்த பொய்யான கட்டுக் கதைகள் அடங்கிய இதிகாசங்கள் தான். சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு மகாவம்சம் எனும் புனைவுகளுடனான வரலாற்று நூல் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றதோ அதே போன்றுதான் இந்து மத இதிகாசங்கள் பல சாதியத்துக்கு அடிப்படையாக அமைகின்றன.

இந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் சாதியத்துக்கும் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கும் சாதியத்துக்கும் வழக்கங்களிலும் அடக்குமுறைகளிலும் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சாதியம் இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

புலம்பெயர் தேசங்களில் ஒருவரை சிறுமைப்படுத்துவதற்கும், அடக்குவதற்கும் அதிக வாய்ப்புகள் இல்லாமையால் திருமணம் போன்ற விடயங்களில் மட்டும் சாதியம் கெட்டியாக தன்னை பேணி வருகின்றது. ஆனால் தாயகத்தில் இன்று மிக வேகமாக மீண்டும் வளர ஆரம்பித்து இருக்கு. கோயில்களில் தேரை இழுப்பதற்கு தடை என்பதில் இருந்து இளம் சமுதாயம் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒருவரை சாதி சொல்லி திட்டியும் தம் சாதியை உயர்வாக எழுதியும் வருவது வரை அங்கு மீண்டும் சாதியம் வேகமாக வளர்கின்றது.
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் தலித்துக்களுக்கு எதிரான தாக்குதல்களும் சமூக நெறி தவறிய சம்பவங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற விடயத்தையாவது அறிந்து இருப்பீர்கள் என நம்புகின்றேன். இவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக இருப்பதே இந்த போலி இதிகாசங்களினூடாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதியம்.

இரிகாசங்களை வாசித்து விட்டு அதில் உள்ள குறை,நிறைகளை ஏற்றுக் கொள்வதோ அல்லது தவிர்ப்பது என்பது வேறு...ஆனால் அதை வாசித்து விட்டு எப்ப பார்த்தாலும் அதில் உள்ள சாதிய வேற்றுமையை அல்லது குறைகளை மட்டுமே கதைப்பது ஒரு வித மன நோய் 
இதே இரிகாசங்களில் எத்தனையோ நல்ல விஷயங்களும் சொல்லப்பட்டு இருக்குது.எப்படி வாழனும் அல்லது வாழக் கூடாது என்றும் சொல்லி இருக்குது...அதை பற்றி ஒன்றுமே அவர் கதைத்ததில்லை.

சாதியின் அடிப்படை இந்து என்பதாலேயே அல்லது சைவன் என்றதாலேயே உருவானதில்லை...தமிழன் என்ட  இன குழுவின் அடிப்படையில் உருவானது...சாதி பற்றி கதைக்க வேண்டும் என்றால் தமிழர்களை பற்றி கதையுங்கள் அல்லது சிங்களவர்கள் அல்லது ஆங்கிலேயர் என்று கதையுங்கள் ..அதை விடுத்து சாதி இந்து ,சாதி இந்து என்ன இது?...மற்ற மதங்களிலோ அல்லது இனங்களிலோ சாதி இல்லாத மாதிரியும் எமது மதத்தில்  மட்டும் தான் அது காணப்படுகின்ற மாதிரியும் அல்லவா எழுதுகின்றார்.

சாதி இல்லாமல் ஒழியணும்  என்பது தான் இங்கு எல்லோரது விருப்பம்.ஆனால்,எப்ப பார்த்தாலும் ஒரு மதத்தை இழுத்து வைத்து கதைப்பது என்பது மதத் துவேசம்...இவரைப் போன்றவர்களுக்கும்,கடும் போக்கு முஸ்லீம்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

சாதியை விட் டால் எமது மதத்தை பற்றி குறை கூற ஒன்றுமில்லை...ஆகவே அவர்கள் சாதியை தூக்கிப் பிடிக்கிறார்கள்....மற்றப் படி அவர்ளுக்கு சாதி ஒழியனும் என்பதில் ஒரு வித அக்கறையும்  இல்லை 

இரிகாசங்களில் சாதி வெறி அதிகமாய் காணப்படுகிறது என்றால் பிறகு எதற்கு இதில் அதை தூக்கிப் பிடிக்கிறார்?...ஒதுக்கி அல்லவா வைக்க வேண்டும்...இதிலிருந்து அவரது நோக்கத்தை விளங்கிக் கொள்ளுங்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.