Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலியில் இருந்து அவுஸ்ரேலியா, ஐரோப்பா வரை விமான சேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியில் இருந்து அவுஸ்ரேலியா, ஐரோப்பா வரை விமான சேவை

பலாலி விமான நிலையத்தை 20 பில்லியன் ரூபா செலவில் அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏ-320, ஏ—321 விமானங்கள் பயன்படுத்தக் கூடிய வகையில், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை 3500 மீற்றராக விரிவாக்கப்படும்.

இதன்மூலம், இந்தியா, அவுஸ்ரேலியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 7200 கி.மீ சுற்றுவட்டத்துக்குள் இருக்கும் நாடுகளுக்கான நேரடி விமான சேவைகளை இங்கிருந்த நடத்த முடியும்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது, ஓடுபாதை அபிவிருத்தியை முன்னுரிமை கொடுத்து முதற்கட்டமாக மேற்கொள்ளுமாறு சிறிலங்கா பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

அருகில் உள்ள கட்டடங்களை தற்காலிகமாக புறப்படுகை மற்றும் வருகை முனையங்களாகப் பயன்படுத்தலாம் என்றும், அவ்வாறான நடைமுறை பல நாடுகளில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிரந்தர முனைய கட்டடங்களை இரண்டாவது கட்ட அபிவிருத்திப் பணியின் போது கட்ட முடியும் என்றும்,  முதலில் விமான நிலையம் கணிசமான விமானப் போக்குவரத்தை ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் அபிவிருத்தியில் அரசாங்கம் உயர் முன்னுரிமை கொடுப்பதாகவும், குடாநாட்டின் அனைத்துலக விமான நிலையம் பிராந்தியத்தில் பாரிய பொருளாதார எழுச்சியை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன்போது விமான நிலையத்துக்கான மின்சாரம் , குடிநீர் வசதிகள், வீதி, எரிபொருள் களஞ்சியப்படுத்தல் வசதிகள் தொடர்பாகவும் நீண்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம், வடக்கிலுள்ள மக்களுக்கு அதிகளவு நன்மைகள் கிடைக்கும் என்றும்,  வணிக மற்றும் தொழில் வாய்ப்புகள் கிட்டும் என்றும், சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடையும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2019/02/18/news/36467

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

அவுஸ்ரேலியா

கொழும்பில் இருந்து சிட்னிக்கு  இன்னும் விமானசேவை தொடங்கவில்லை இந்த இலட்ச‌ணத்தில் .....பலாலி டு சிட்னி.....நம்பிட்டோம்... 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, putthan said:

கொழும்பில் இருந்து சிட்னிக்கு  இன்னும் விமானசேவை தொடங்கவில்லை இந்த இலட்ச‌ணத்தில் .....பலாலி டு சிட்னி.....நம்பிட்டோம்... 

ஒரு  செக்கன்  என்றாலும் கற்பனை  செய்ய  விடமாட்டீயளே...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, putthan said:

கொழும்பில் இருந்து சிட்னிக்கு  இன்னும் விமானசேவை தொடங்கவில்லை இந்த இலட்ச‌ணத்தில் .....பலாலி டு சிட்னி.....நம்பிட்டோம்... 

அவையள் வாயாலை வடை சுட்டுக்கொண்டிருக்கினம்....நீங்களும்  இதை ஒரு கதையெண்டு தூக்கிபிடிக்கிறியள்...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இது செய்யாப்படும். இதன் மூலம் பல புலம்பெயர் மக்கள் நன்மையடைவர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

ஏ-320, ஏ—321 விமானங்கள்

அவற்றின் அதிக பட்ச பறப்பு 6500km என்கினம் நேரடி பறப்பு கேள்விதான் .

5 minutes ago, colomban said:

நிச்சயமாக இது செய்யாப்படும். இதன் மூலம் பல புலம்பெயர் மக்கள் நன்மையடைவர்.

புலம்பெயருக்கு பூசை பண்ணி காரியம் ஆகாது  வடகிழக்கில் ஓரளவுக்காவது இயல்பு நிலையை கொண்டுவந்து கேப்பபிளவு போன்ற இடமக்களுக்கு காணியை குடுத்து கள்வர் கொள்ளையர் வால் வெட்டு குழுக்களை அடக்கினாலே புலம்பெயர் எட்டிபார்க்கும் இல்லையேல் அங்கு வந்து திரும் புவர்கள் தான் அடிக்கடி வருவினம் இன்னும் 40 வருடம்கள் தாண்டி சொந்த மண்ணை பார்க்காத புலம்பெயர் நிறைய இருக்கினம் . இன்னும் பதின்ஐந்து இருபது வருடங்களில் இவ்வளவு பேர் போய் வருவார்களா என்பது கேள்வி குறி தான் .

4 hours ago, பெருமாள் said:

அவற்றின் அதிக பட்ச பறப்பு 6500km என்கினம் நேரடி பறப்பு கேள்விதான் .

The aircraft family can accommodate up to 236 passengers and has a range of 3,100 to 12,000 km (1,700 to 6,500 nmi), depending on model.

https://en.wikipedia.org/wiki/Airbus_A320_family

6 hours ago, putthan said:

கொழும்பில் இருந்து சிட்னிக்கு  இன்னும் விமானசேவை தொடங்கவில்லை இந்த இலட்ச‌ணத்தில் .....பலாலி டு சிட்னி.....நம்பிட்டோம்... 

ஆனால் Melbourne க்கு நேரடி சேவை இருக்குதே // தெரியாதா 

பறப்பு நேரம்  - 10 மணி 05 நிமிடம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, விசுகு said:

ஒரு  செக்கன்  என்றாலும் கற்பனை  செய்ய  விடமாட்டீயளே...??

விசுகர்! சிங்கள சிறிலங்காவை வைச்சு கற்பனை பண்ணுறதுக்கும் ஒரு அளவிருக்கு கண்டியளோ.....

முருகண்டி கோயில் வாசல்லை கொத்துரொட்டி கடை இருக்கிற மாதிரி நான் கனவு கண்டன்......இத்து எப்பிடியிருக்கு? :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, colomban said:

நிச்சயமாக இது செய்யாப்படும். இதன் மூலம் பல புலம்பெயர் மக்கள் நன்மையடைவர்.

சிங்கள அரசுக்கு ஈழத்தமிழர்கள் பொன்வாத்து முட்டை மாதிரி.

அது அன்றும் இன்றும்...
சேர்.பொன் இராமநாதன் காலம் தொட்டு இன்றுவரைக்கும் தமிழர்களிடமிருந்தே சகலதையும் அறுவடை செய்கின்றார்கள்.

இது இப்படியிருக்க....

பலாலி விமானநிலையத்தையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்தினால் கதை அவ்வளவுதான்.

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இலையான் அடிக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அவையள் வாயாலை வடை சுட்டுக்கொண்டிருக்கினம்....நீங்களும்  இதை ஒரு கதையெண்டு தூக்கிபிடிக்கிறியள்...:grin:

எலக்சனில நிக்கிறார் ரணில்... இன்னும் வடை சுடுவார்....

அது சரி, மகிந்த கட்சியின் துட்டு வள்ளல், ஒரு பெரிய தூள் கோஸ்டியை, துபாயில நரித்தனமா மாட்டி வைத்துட்டாராமே...

2 hours ago, Nathamuni said:

எலக்சனில நிக்கிறார் ரணில்... இன்னும் வடை சுடுவார்....

இனப் படுகொலைகாரர்களின் ஜால்ரா கோஷ்டிகள் இப்போதிருந்தே "எல்லாம் அந்தமாதிரி இருக்கு" என்று துள்ளப் போகிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

கொழும்பில் இருந்து சிட்னிக்கு  இன்னும் விமானசேவை தொடங்கவில்லை இந்த இலட்ச‌ணத்தில் .....பலாலி டு சிட்னி.....நம்பிட்டோம்... 

விட்டுபாத்தவங்கள் நீங்கள் ஒருவருமே ஏறவில்லை என்று நிற்பாட்டிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஜீவன் சிவா said:

The aircraft family can accommodate up to 236 passengers and has a range of 3,100 to 12,000 km (1,700 to 6,500 nmi), depending on model.

https://en.wikipedia.org/wiki/Airbus_A320_family

ஆனால் Melbourne க்கு நேரடி சேவை இருக்குதே // தெரியாதா 

பறப்பு நேரம்  - 10 மணி 05 நிமிடம் 

அதுதான் சிட்னி என்று போட்டிருக்கிறேன்....மெல்பேர்ன் தெரியும்:14_relaxed:

11 hours ago, குமாரசாமி said:

பலாலி விமானநிலையத்தையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்தினால் கதை அவ்வளவுதான்.

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இலையான் அடிக்க வேண்டியதுதான்.

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தினால், மத்தள விமான நிலையத்தைவிட பரிதாபமாக இருக்கும்.

கட்டுநாயக்க விமான நிலையம்போல் ஒருபோதும் வராது.

8 minutes ago, thulasie said:

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தினால், மத்தள விமான நிலையத்தைவிட பரிதாபமாக இருக்கும்.

கட்டுநாயக்க விமான நிலையம்போல் ஒருபோதும் வராது.

அது வடபகுதியின் வர்த்தக பொருளாதார வளர்சசி, சுற்றுலாத்துறை வளச்சி போன்ற விடயங்களில் தங்கி உள்ளது. பரிதாபமாக இருக்கும் என்று எடுத்த எடுப்பில் கூற முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தி வட பகுதியை ஒர் சிறந்த ஆன்மிக சுற்றுலாதளமாக மாற்றலாம். இதன் மூலம் பல அன்னிய செலவாணியை பெறலாம். தொழில் வாய்ப்பும் அதிகரிக்கும். 

2 hours ago, colomban said:

பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தி வட பகுதியை ஒர் சிறந்த ஆன்மிக சுற்றுலாதளமாக மாற்றலாம். இதன் மூலம் பல அன்னிய செலவாணியை பெறலாம். தொழில் வாய்ப்பும் அதிகரிக்கும்

  • பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தி வட பகுதியை ஒர் சிறந்த மகிழ்சியான சுற்றுலாதளமாக மாற்றலாம். இதன் மூலம் பல அன்னிய செலவாணியை பெறலாம். தொழில் வாய்ப்பும் அதிகரிக்கும்

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இனி கொழும்புக்கு வர தேவையில்லை நேரடியாக பலாலிக்கு வந்தே இறங்கலாம், டோன்ற் வெறி அவனுகள் செய்யுறானுகள் இல்லையோ அப்படி சர்வதேச விமான நிலையமாகினால் கனபேர் வந்து இறங்குவார்கள் என நினைக்கிறன் இது கற்பனக்கல்ல  அப்படியே யாழில் தரமான ஆஸ்பத்திரி , கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் வடக்கு செம யான அபிவிருத்தி காணப்போகிறது :)

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

விட்டுபாத்தவங்கள் நீங்கள் ஒருவருமே ஏறவில்லை என்று நிற்பாட்டிவிட்டார்கள்.

இனியும் ஏறமாட்டோம்... I love.பண்டாரநாயக்க விமானநிலையம்:14_relaxed:

34 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இனி கொழும்புக்கு வர தேவையில்லை நேரடியாக பலாலிக்கு வந்தே இறங்கலாம், டோன்ற் வெறி அவனுகள் செய்யுறானுகள் இல்லையோ அப்படி சர்வதேச விமான நிலையமாகினால் கனபேர் வந்து இறங்குவார்கள் என நினைக்கிறன் இது கற்பனக்கல்ல  அப்படியே யாழில் தரமான ஆஸ்பத்திரி , கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் வடக்கு செம யான அபிவிருத்தி காணப்போகிறது :)

அப்படி வரும் என்று நாங்கள் 74,75 ஆண்டுகளில் நினைத்தோம்....யாழில் நியுமார்க்கட்,புகையிரத நிலையம் எல்லாம் கட்டி அழகாக இருந்த காலம் ஒன்று இருந்தது அதை திட்டமிட்டு நாசமாக்கியோர் யார் என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை....ரணில் விரும்பினாலும் மகிந்தா விரும்பவேணுமே.... 

2 hours ago, putthan said:

அப்படி வரும் என்று நாங்கள் 74,75 ஆண்டுகளில் நினைத்தோம்....யாழில் நியுமார்க்கட்,புகையிரத நிலையம் எல்லாம் கட்டி அழகாக இருந்த காலம் ஒன்று இருந்தது அதை திட்டமிட்டு நாசமாக்கியோர் யார் என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை....

ஐயோ

அந்தாள் துரோகியல்லோ 

சுட்டுக் கொன்றவர்கள் தியாகிகள் இல்லையா 

என்ன லொள்ளப்பா இது 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜீவன் சிவா said:

ஐயோ

அந்தாள் துரோகியல்லோ 

சுட்டுக் கொன்றவர்கள் தியாகிகள் இல்லையா 

என்ன லொள்ளப்பா இது 

தியாகி ,துரோகி எல்லாம் இதுக்குள் எதற்கு ஜீவா.....காவல் காக்க வேண்டிய பொலிஸார் அதை அந்த மார்க்கட்டை எரித்து நாசமாக்கியதை தான் சொன்னேன் ....அன்றே மத்திய அரசு தகுந்த நட‌வடிக்கை எடுத்திருந்தால் இன்று இவ்வளவு தூரம் இது போய் இருக்காது..

.அது சரி சிறந்த நூலகத்தை எரித்தவர்களுக்கு மார்க்கட் எரிப்பது பெரிய வேலையா என்ன?

தேர்தல் காலத்தில் எவ்வளவு வாக்குறுதிகளையும் வழங்கலாம் ,ரணில் அடுத்த ஜனாதிபதியாக வந்தாலும் இது நடக்குமா என்பது சந்தேகம்.....ம‌கிந்தா வந்தால் நிச்சயம் இது நடக்காது(விமான நிலையம் ,காகேசந்துறை திட்டங்கள்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.