Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணுவில் டொக்ரரா?
தொடருங்கோ மல்லி...😋

  • Replies 58
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
5 hours ago, ஏராளன் said:

இணுவில் டொக்ரரா?
தொடருங்கோ மல்லி...😋

நிச்சயமாக அந்த மருத்துவரையும் மனதில் நிறுத்தித் தான் எழுதினேன், ஏராளன். என்னையும் மிகவும் பாதித்த நிகழ்வு அது. எனினும் சம்பவங்கள் நிஜமல்ல! 😊

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் வாசித்தேன் நன்றாக எழுதுகிறீர்கள். தொடருங்கள் மல்லிகை வாசம் உங்கள் அனுபவத் தொடரை.

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது  தான்  கண்ணில் பட்டது ஒரே  மூச்சில்  வாசித்து  முடித்தேன்.

 

அற்புதமாக கதை   சொல்கிறீர்கள்

இடைக்கிடை நாட்டு  நடப்புக்களையும்

அதன்  தற்போதைய  போக்குகளையும்

பூடகமாக  சுட்டிக்காட்டுவது அருமை (கோயில்  கோபுரங்கள்  மட்டுமே புணரமைக்கப்பட்டு   உயர்ந்து நிற்பது)

வாழ்த்துக்கள்

தொடருங்கள்

தொடர்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, மல்லிகை வாசம் said:

நிச்சயமாக அந்த மருத்துவரையும் மனதில் நிறுத்தித் தான் எழுதினேன், ஏராளன். என்னையும் மிகவும் பாதித்த நிகழ்வு அது. எனினும் சம்பவங்கள் நிஜமல்ல! 😊

அந்த டொக்டர் ஏன் இறந்தவர் காட் அட்டாக்கா?...அவரது இறப்பு மிகவும் கவலையானா ஒரு விசயம்...ஊர் மக்களுக்கு நல்ல சேவை செய்தவர் என்று கேள்விப் பட்டேன்...ஒரு கோயிலில் அவரைக் கூப்பிட்டு கெளரப் படுத்தினார்கள்...கொஞ்ச நாளில் இறந்து விட்டார் என்று நினைக்கிறேன்  😟

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2019 at 9:55 PM, புங்கையூரன் said:

உங்கள் கனவு...அதிகமாகக் கறுப்பு வெள்ளையில் வருமா....அல்லது ஈஸ்மன்ற் கலரில் வருமா....?
நினைவிருந்தால் சொல்லுங்கள்,  ஈழப்பிரியன்!
நான் கேட்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது....!

புங்கை இதை கனவென்று சொன்னாலும் எல்லாமே நிஜத்தில் நடப்பது போலத் தான்.இதில் கலர் என்ற சொல்லுக்கே இடமில்லை.

  • தொடங்கியவர்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்றுதான் வாசித்தேன் நன்றாக எழுதுகிறீர்கள். தொடருங்கள் மல்லிகை வாசம் உங்கள் அனுபவத் தொடரை.

நன்றி அக்கா 😊

10 hours ago, விசுகு said:

இடைக்கிடை நாட்டு  நடப்புக்களையும்

அதன்  தற்போதைய  போக்குகளையும்

பூடகமாக  சுட்டிக்காட்டுவது அருமை (கோயில்  கோபுரங்கள்  மட்டுமே புணரமைக்கப்பட்டு   உயர்ந்து நிற்பது)

கதையின் இடையிடையே இவை பற்றியும் குறிப்பிடுதல் அவசியம் எனப்பட்டது அண்ணா. மேலும் விபரமாக எழுத அவா எனினும் சுருக்கத்துக்காக நீண்ட வர்ணனைகளை முடிந்த அளவு தவிர்த்துக்கொள்கிறேன். வாசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி அண்ணா. 😊

  • தொடங்கியவர்
8 hours ago, ரதி said:

அந்த டொக்டர் ஏன் இறந்தவர் காட் அட்டாக்கா?...அவரது இறப்பு மிகவும் கவலையானா ஒரு விசயம்...ஊர் மக்களுக்கு நல்ல சேவை செய்தவர் என்று கேள்விப் பட்டேன்...ஒரு கோயிலில் அவரைக் கூப்பிட்டு கெளரப் படுத்தினார்கள்...கொஞ்ச நாளில் இறந்து விட்டார் என்று நினைக்கிறேன்  😟

நண்பர்களுடன் பேசிய போது அப்படித்தான் சொல்கிறார்கள், ரதி. இளவயதில் மாரடைப்பு யாழில் சகஜமாகிவிட்டது போலிருக்கிறது. 😥

உங்கள் நகரிலும் ஓரிரு வருடங்கள் தொழிற்பயிற்சியின் நிமித்தம் வசித்திருக்கிறார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலிருந்து புலம் பெயர்ந்து வந்த ஒருவரை...சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன்!

இது தேவதைகள் வாழும் தேசம் என்று சிட்னியைக் கூறினார்!

அட..அனியாயமாய் வாழ்நாட்களை...ஊரில் வீணாக்கி விடடேனே..என்றும் கவலைப் பட்டார்!

சரியாக நான்கு வருடங்கள் கழித்துக் கோவிலில் ஒரு நாள் சந்தித்த போது....என்ன இருந்தாலும் ஊரைப் போல வராது தானே...என்று கூறிக் கொண்டிருந்தார்!

தொடருங்கள்...மல்லிகை!

  • தொடங்கியவர்
13 hours ago, புங்கையூரன் said:

இது தேவதைகள் வாழும் தேசம் என்று சிட்னியைக் கூறினார்!

சரியாக நான்கு வருடங்கள் கழித்துக் கோவிலில் ஒரு நாள் சந்தித்த போது....என்ன இருந்தாலும் ஊரைப் போல வராது தானே...என்று கூறிக் கொண்டிருந்தார்!

இது அக்கரைப்பச்சை என்று பலர் சொல்வார்கள், புங்கை அண்ணா. எனினும் இது ஒவ்வொரு மனிதரின் தாயக மற்றும் வெளிநாட்டு வாழ்க்கைச் சூழலையும், அவரது அனுபவங்களையும் பொறுத்தது என நினைக்கிறேன். 😊

கருத்துக்கு நன்றி அண்ணா. 😊

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மல்லிகை வாசம் said:

நண்பர்களுடன் பேசிய போது அப்படித்தான் சொல்கிறார்கள், ரதி. இளவயதில் மாரடைப்பு யாழில் சகஜமாகிவிட்டது போலிருக்கிறது. 😥

உங்கள் நகரிலும் ஓரிரு வருடங்கள் தொழிற்பயிற்சியின் நிமித்தம் வசித்திருக்கிறார் என நினைக்கிறேன்.

நீங்கள் மட்டக்கிளப்பில் இருந்தால்,🙂இருந்தேன் என்று சொல்வது தானே😥 அது என்ன நினைக்கிறேன் என்பது🤔 ...மட்டு நகர் என்ட சொந்த இடமில்லை...அப்பாவின் தொழில் நிமிர்த்தம் நாங்கள் அங்கே இருந்தோம் 

  • தொடங்கியவர்
6 minutes ago, ரதி said:

நீங்கள் மட்டக்கிளப்பில் இருந்தால்,🙂இருந்தேன் என்று சொல்வது தானே😥 அது என்ன நினைக்கிறேன் என்பது🤔 ...மட்டு நகர் என்ட சொந்த இடமில்லை...அப்பாவின் தொழில் நிமிர்த்தம் நாங்கள் அங்கே இருந்தோம் 

இல்லை ரதி. தாயகத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என எனக்குத் தெரியாது. நான் மட்டு நகரைக் குறிப்பிடவில்லை. 😊

நான் லண்டனைக் குறிப்பிட்டேன். அங்கே அவர் சென்று வந்ததாகக் கேள்விப்பட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மல்லிகை வாசம் said:

இல்லை ரதி. தாயகத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என எனக்குத் தெரியாது. நான் மட்டு நகரைக் குறிப்பிடவில்லை. 😊

நான் லண்டனைக் குறிப்பிட்டேன். அங்கே அவர் சென்று வந்ததாகக் கேள்விப்பட்டேன். 

ஓ..தவறுதலான புரிதலுக்கு மன்னிக்கவும் 

  • தொடங்கியவர்
1 minute ago, ரதி said:

ஓ..தவறுதலான புரிதலுக்கு மன்னிக்கவும் 

பரவாயில்லை, ரதி. நானும் நேரடியாகக் கூறியிருக்கலாம். 😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 மல்லிகை! உங்கள் தொடர்கதையை வாசிப்பவர்களில் நானுமொருவன்.

தொடருங்கள். மனதில் கற்பனைகள் இருந்தாலும் எழுத்துவன்மை எல்லோருக்கும் வராது.

உங்களுக்கு நிறையவே இருக்கின்றது. வாழ்த்துக்கள்.👍

  • தொடங்கியவர்
12 hours ago, குமாரசாமி said:

 மல்லிகை! உங்கள் தொடர்கதையை வாசிப்பவர்களில் நானுமொருவன்.

தொடருங்கள். மனதில் கற்பனைகள் இருந்தாலும் எழுத்துவன்மை எல்லோருக்கும் வராது.

உங்களுக்கு நிறையவே இருக்கின்றது. வாழ்த்துக்கள்.👍

வாசித்துக் கருத்தெழுதியமைக்கு நன்றி அண்ணா. இக்கதையை சுருக்கமாக எழுதிமுடித்துவிடத் தான் முதலில் எண்ணினேன். எனினும் நாளடைவில் உங்கள் போன்ற சக உறவுகளின் ஊக்குவிப்பு வார்த்தைகள் இதை மேலும் மெருகூட்டத் தூண்டின. இதுவே நான் முதன் முதலில் எழுதும் ஓர் சிறு தொடர்கதை. உங்கள் எல்லோரையும் மனதில் கொண்டு இனிதான இந்த எழுத்து அனுபவத்தைத் தொடர்கிறேன். மீண்டும் ஊக்குவித்தமைக்கு நன்றி அண்ணா. 

(நான் யாழில் பார்வையாளனாக இருந்தபோது நீங்கள் சுருக்கமாக - ஆனால் நறுக்கென இங்கே எழுதும் வரிகளும் தான் என்னை யாழில் இணைந்து எழுதத் தூண்டின. அதற்கும் நன்றி!) 😊

  • தொடங்கியவர்

புதையலைத் தேடி... (பாகம் 8 )

மருத்துவரின் நினைவுகளோடு வசந்தனுக்குச் சில தினங்கள் கழிந்து இன்னொரு வாரமும் ஓடிவிட்டது. மருத்துவர் வீட்டினருக்கு முடிந்த உதவிகள் செய்வது, சித்தியின் வீடு என அவனுக்கு அந்த வாரம் கழிந்தது.

அன்றொருநாள் அதிகாலை 5 மணியளவில் வசந்தன் சித்தியின் வீட்டில் அவனுக்குத் தரப்பட்ட அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இது நாள் வரை இட, நேர மாற்றங்கள், மருத்துவரின் பிரிவுத்துயர் என நிறைவான தூக்கம் அவனுக்குக் கிடைக்கவில்லை. எனினும் அன்றிரவு வழமைக்கு மாறாக ஓர் முழுமையான தூக்கம் அவனுக்குக் கிடைத்தது. அந்த வைகறைப் பொழுதில் அருகிலிருந்த பிள்ளையார் கோயில் மணியோசை கேட்டு அவன் மெதுவாகக் கண்விழித்தான். வழமையாகக் குழம்பிய தூக்கத்துடன் 7 மணி வரையும், அதற்கு அப்பாலும் கட்டிலில் கிடந்து செல்போனின் அலாரத்துக்கு துயிலெழும்புபவன் அன்று கோவில் மணியோசை கேட்ட உடனேயே விழித்தெழுந்து கட்டிலில் அமர்ந்தான். 

ஒரு சில நிமிடங்கள் 'கணீர்... கணீர்' என்று அடித்து ஓய்ந்த அந்த மணியோசையில் லயித்திருந்தவன், பின்னர் வெளியே மரங்களில் சிறு குருவியினங்கள் கூட்டாக இசைக்கும்  கணத்தில் மெய்மறந்தான். அவனது சித்தி ஒவ்வொரு காலையிலும் வானொலியில் கேட்கும் சுப்புலக்ஷ்மி அம்மாவின் சுப்ரபாதமும் அவன் தூக்கத்தைத் தெளிய வைத்தது. அங்கு இவை எல்லாமே வழமையான நிகழ்வுகள் தாம், எனினும் வசந்தனுக்கு எல்லாமே புதிதாக இருந்தது. இனம் புரியாத ஆனந்த உணர்வு அவன் தேகமெங்கும் முழுமையாகப் பரவி நிற்க கட்டிலிலிருந்து வழமைக்கு மாறான உற்சாகத்துடன் துள்ளியெழுந்து வீட்டு முற்றத்துக்கு ஓடினான். சூரியோதயத்துக்கு முந்தைய மெலிதான ஒளியிலும், தைமாதப் பனிமூட்டத்துக்கு ஊடாகவும் தெரிந்த மஞ்சள் செவ்வந்திமலர்களும், பாதி மலர்ந்த செவ்வரத்தம் பூக்களும் அவன் மனதை மேலும் மலர வைத்தன. குளிர்ந்த தென்றற்காற்று அவன் உடலை வருடிச் செல்ல முற்றத்தில் அங்கும் இங்கும் சற்று நேரம் உலாவியவன், சட்டென அவன் மனதில் தோன்றிய ஓர் எண்ணம் அவனை உந்த அடுப்படியில் புட்டுக்கு மாக்குழைத்துக் கொண்டிருந்த சித்தியிடம் சிறு குழந்தை போல ஓடிச் சென்றான். 

அடுப்படிக்கு வசந்தன் வந்ததைக் கண்ட சித்தி "என்ன தம்பி, இண்டைக்கு வெள்ளனவே எழும்பியாச்சோ? தேத்தண்ணி போட்டுத்தாறன், குடியுங்கோ" என்று கேட்டபடி அவனுக்குத் தேநீர் ஊற்றத் தயாரானாள். வழமையாகப் பல் மினுக்கிவிட்டே தேநீர் அருந்தும் பழக்கமுடையவன் "சரி சித்தி" என்று சொல்லிவிட்டு, "இண்டைக்கு எல்லாமே புதுசா இருக்குச் சித்தி" என்றான் மெலிதான ஆனால் ஆச்சரியம் நிறைந்த குரலில் சிறு புன்னகையுடன். 

"அப்படியோ? இல்லை தம்பி, நான் வழமையா வெள்ளனவே எழும்பி சமைக்க...." என்று ஆரம்பித்த சித்தியை இடைமறித்து "இல்லை சித்தி, இப்ப காலைல எழும்பினதிலிருந்து மனசு நிறைஞ்சது போல இருக்கு; இப்படி நான் உணர்ந்து நிறைய வருஷமாச்சு" என்றான் வசந்தன். 

"எப்பவும் காலையில வெள்ளனவே எழும்பினா உடம்புக்கு மட்டுமில்ல, மனதுக்கும் நல்லது" என்று சித்தி சொல்லவும் "நான் சிட்னியிலும் இப்படி வெள்ளனவே எழும்பி இருக்கிறன். அப்பவும் கிடைக்காத மனத் தெளிவு இப்ப இங்க கிடைக்கிற போல இருக்கு. மனசில நிறைய எண்ணங்கள் ஒண்டையொண்டு முந்தியடிச்சுக்கொண்டு ஓடித்திரியுது; ஆனாலும் மனம் ஒருக்காலும் இல்லாத மாதிரி தெளிவா இருக்கு. புதுசா இருக்கு..." என்று வசந்தன் நிம்மதியான பெருமூச்சுடன் சொன்னான்.

"தெளிவா இருக்கு எண்டு சொல்றீங்கள் தம்பி, ஆனால் நிறைய எண்ணங்கள் ஓடுது எண்டும் சொல்லுறிங்கள். எனக்குக் குழப்பமா இருக்கு" என்று சித்தி குழப்பமான புன்னகையுடன் சொல்ல, "எல்லாத்தையும் சொல்லுறன் சித்தி" என்று சொன்ன வசந்தன் தன் மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை அதே ஓட்டத்துடன் இப்படிச் சொன்னான்:

"சித்தி, 20 வருஷத்துக்குப் பிறகு ஊருக்கு இப்ப வரேக்க நான் ஒரு உல்லாசப்பயணி போல ஒரு மனநிலையில் தான் வந்தனான். இதுவரை காலமும் வர மனமில்லாமல் இருந்து, ஒரு அரை மனத்தோட தான் சிட்னியில் இருந்து வெளிக்கிட்டனான். இங்க உங்களோட கோயில்கள், சுற்றுலா என்றெல்லாம் போய்வந்தது, உங்கட மரவள்ளித் தோட்டக்காணியில கொஞ்ச நாள் தோட்ட வேலை செய்தது, ஊர்ப் பெடியங்களோட சேர்ந்து சிரமதானம் செய்தது - இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தேன்; மனசெல்லாம் நிறைஞ்சிருக்கு."

இதற்குச் சித்தி "நிறைய வருஷங்களுக்குப் பிறகு பிறந்த ஊரைச் சுற்றிப் பார்த்திருக்கிறீங்கள். இங்க கலியாண வீடு என்றும், பிறந்த நாள் என்றும் ஊராரோட சேர்ந்து உதவியெல்லாம் செய்திருக்கிறீங்கள். அந்தக் கொண்டாட்டங்களில கலந்து கொண்டதும் உங்களுக்கு ஒரு மன நிறைவைக் கொடுத்திருக்கும்" என்று சொல்ல, சற்று நேரம் சிந்தித்துவிட்டு வசந்தன் சொன்னான்: 

"ஒரு கடமைக்காக வேண்டா வெறுப்பாகவும், சும்மா ஒரு விடுப்புப் பார்க்கலாம் என்றும் தான் இந்தக் கொண்டாட்டங்களில முதலில் கலந்துகொண்டனான். 20 வருஷத்துக்கு முன்னர் நான் கல்யாணியைக் காதலித்துப் பதிவுத்திருமணம் செய்த போது எம்மிருவர் குடும்பங்கள் மட்டுமல்ல ஊரே எங்களை ஒதுக்கிவைத்தது. அதனால எனக்கு ஊரார் மேல ஏற்பட்ட வெறுப்பு ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்தவர் மேலயும் ஏற்பட்டது. சிட்னில கூட நான் எங்கட ஆக்களோட பெரிசாப் பழகுறதில்லை. எங்கட கோயில்கள், நிகழ்வுகளிலயும் பெரிசா ஈர்ப்பில்லாமல், எனக்குத் தெரிந்த கொஞ்ச வெள்ளைக்கார, சைனீஸ் ஆக்களோட மட்டும் நேரம் கிடைக்கும்போது பழகிறனான்." 

"அவுஸ்திரேலிய வாழ்க்கை முறைக்கு நானும், கல்யாணியும் கொஞ்சம் பழக்கப்படுத்திக் கொண்டோம். எண்டாலும் அதில முழுமையா ஒட்டவும் முடியாமல், விடுபடவும் முடியாமல் 'இரண்டும்கெட்டான்'களாக ஒரு அமைதியான நாட்டில வசதியான வாழ்க்கை வாழுறம் என்று எண்ணிக்கொண்டு எங்களை நாங்களே ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறம் எண்டு இப்ப தான் விளங்குது. காதலித்துக் கட்டிய மனைவி, மனத்துக்குப் பிடிச்ச வேலை, அரவணைக்க ஓர் மகன், சொந்த வீடு, கார், நல்ல பாங்க் பலன்ஸ் இவை மட்டும் இருந்தாலே வாழ்க்கை நல்லா இருக்கும் என்று இவ்வளவு  காலமும் நினைச்சதும் பிழை தான் என்றும் இப்ப தான் விளங்குது" 

இவ்வாறு மூச்சுவிடாமல் உணர்ச்சி பொங்கப் பேசிய வசந்தனை இடைமறித்த சித்தி "இவ்வளவும் இருந்தாலே போதும் தானே? வேறு என்ன வேணும்?" என்று தேநீரை அவனிடம் கொடுத்தபடி கேட்க "உண்மையான மகிழ்ச்சி வேணும், சித்தி. என்ன தான் வசதி இருந்தாலும் நான் அறியாமலேயே எனக்குள் ஒரு வெறுமை உணர்வு இவ்வளவு காலமும் இருந்திருக்கு. தாய்மண்ணை விட்டுப் புகுந்த நாட்டுக்கேற்ப என்னை மாற்றிக்கொள்ள முயன்று என் சுயத்தை இழந்தது கூடத் தெரியாமல் இவ்வளவு காலமும் நான் காலத்தை ஓட்டிட்டன்" என்று கூறிக்கொண்டிருக்கையில் அவனது மனதில் மின்னல் வெட்டினாற்போல் ஓர் எண்ணம் உதித்தது. 

தேநீரை மெதுவாக உறிஞ்சியபடி அந்த எண்ண ஓட்டத்திலேயே சற்றுநேரம் நிலைத்திருந்தவன் இவ்வாறு தொடர்ந்தான்: "சித்தி, சிட்னில காலைக்கனவு ஒன்றில ஊரில் புதையல் ஒன்று கிடைக்கப் போவதாய்க் கண்டேன். ஊருக்கு வந்து இவ்வளவு காலமும் அந்தப் புதையலை எங்கெல்லாமோ தேடி நாயாய்  அலைந்தேன். ஆனாலும் இப்போ இவ்வளவு நேரமும் உங்களுடன் பேசியதிலிருந்து தான் எனக்குப் புரிகிறது, இது நாள் வரை எனது மனமும் என்னை அறியாமலே எனக்குள்ளே ஒரு புதையலைத் தேடிக்கொண்டிருந்தது என்று. அந்தப் புதையலை இப்போது - இதோ இந்தக் கணத்தில் தான் கண்டு பிடித்துவிட்டேன்! எனது காலைக் கனவில் தோன்றிய அந்த மர்மப் புதையல் எனது சுயம் தான்! எனது சுயமே தான்! புலம்பெயர் வாழ்வில் நான் விரும்பியோ, விரும்பாமலோ, அறிந்தோ, அறியாமலோ மாற்றங்களுக்கு உட்படவேண்டிய கட்டாயத்தில் நான் சேகரித்த மனக்குப்பைகளை கடந்த இருவாரத்தில் சித்தி உங்களின் விருந்தோம்பலும், அந்த மருத்துவர் அண்ணாவின் மரணமும், இங்கு கிடைத்த இன்னும் பல அனுபவங்களும் ஆழமாகக் கிளறி, தொலைந்து போன என் சுயத்தை புதையலாக மீண்டும் எனக்குப் பெற்றுத் தந்துவிட்டன."

இவ்வாறு வசந்தன் தான் தேடிய புதையலைக் கண்டுபிடித்த குதூகலத்தில் உணர்ச்சிகள் பொங்கப் பேசுவதை, சித்தி ஆச்சரியத்துடன் வாயடைத்துக் கேட்டுக்கொண்டிருக்க அவன் மேலும் தொடர்ந்தான். "எனது சுயம் - அதாவது என்னை நானாக ஆக்குவது இங்கு எனக்குக் கிடைத்த உங்களைப் போல நல்ல உறவுகளும், எனது அன்னைத் தமிழ் மொழியும், காலம் காலமாக இந்த தமிழ் மண் நமக்குத் தந்த கலாச்சார விழுமியங்களும் தான். இன்று தான் நான் இதை உணர்ந்துகொண்டேன். இனிமேல் நான் தேடிக்கண்டுகொண்ட புதையலைக் கொண்டு எனது வாழ்வை மேலும் மகிழ்ச்சியானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றிக்கொள்ள இன்றே முயற்சிகளைத் தொடங்குவேன்" என்று கூறியபடி சித்தியின் கைகளைப் பற்றிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டான் வசந்தன். 

அவன் கூறியதன் முழு அர்த்தமும் சித்திக்குப் புரிந்ததோ இல்லையோ "தம்பி... நீரும், கல்யாணியும், அனந்தனும் எனக்குக் கிடைத்த சொத்துக்கள். நீங்கள் எப்பவும் சந்தோஷமா இருக்கணும். என்ர வாழ்த்துக்கள் உங்களுக்கு எப்பவும் இருக்கும்" என்றாள் முகம் நிறைந்த புன்னகையுடன். 

****************************

தன் சுயமான புதையலைக் கண்டறிந்த சூட்டோடு அந்த புதையலை ஆவணப்படுத்தவேண்டும், இல்லையேல் சிட்னிக்குப் போனதும் மீண்டும் அதைத் தொலைத்துவிடுவோம் என்று எண்ணிய வசந்தன் தனது அனுபவங்களை ஓர் கொப்பியில் சம்பவங்களாக, கவிதையாகக் குறித்துக்கொண்டான்; அவனது ஊரில் புதிதாக அறிமுகமான நல்ல உறவுகள், நண்பர்களுடன் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்துக்கொண்டான். யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு கலைஞர்களை நேர்முகம் கண்டு அவற்றை ஒளிப்பதிவும் / ஒலிப்பதிவும் செய்துகொண்டான். யாழின் அழகையும், கலாச்சார சின்னங்களையும் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் எடுத்துக்கொண்டான். கால ஓட்டத்தையும் தாண்டி அவனுக்கு மட்டுமல்ல அவனைப் போன்ற ஏனையருக்கும் பயன்பெற  இவை எல்லாவற்றையும் தொகுத்துத் தனது வலைத்தளத்தில் 'நான் தேடிக் கண்டுகொண்ட சுயம் எனும் அற்புதப் புதையல்' என்ற தலைப்பில் ஓர் பயண அனுபவமாகப் பதிந்தான். இது வசந்தனின் சுயத்தை மீண்டும் இழக்காமல் பேண எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதார ஆவணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

அந்த ஆவணப்பதிவிலிருந்து ஓர் சில வாக்கியங்கள்: 

"தாய்மண்ணில் என் பயணத்தில் மீண்டும் ஓர் குழந்தை போல் ஜனனித்தேன்! இயந்திர மனிதன் போல் இருந்த நான் மீண்டும் மனிதனானேன்!" 

"பொன்னும், பொருளும் தான் புதையலா மனமே? உன் உள்ளே நீ கண்ட உன் சுயமே பெரும் புதையல்!"

(வசந்தனின் புதையலுக்கான தேடலின் கதை இனிதே முற்றும், இனி அவன் வாழ்வில் முயற்சிகள் தொடரும்!)

(கனவும், தேடலும், கதாபாத்திரங்களும் கற்பனை. தாயக அனுபவங்கள் சில நிஜங்களை அடிப்படியாகக் கொண்ட கற்பனை)

நன்றி  😊

 

Edited by மல்லிகை வாசம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

வாசித்துக் கருத்தெழுதியமைக்கு நன்றி அண்ணா. இக்கதையை சுருக்கமாக எழுதிமுடித்துவிடத் தான் முதலில் எண்ணினேன். எனினும் நாளடைவில் உங்கள் போன்ற சக உறவுகளின் ஊக்குவிப்பு வார்த்தைகள் இதை மேலும் மெருகூட்டத் தூண்டின. இதுவே நான் முதன் முதலில் எழுதும் ஓர் சிறு தொடர்கதை. உங்கள் எல்லோரையும் மனதில் கொண்டு இனிதான இந்த எழுத்து அனுபவத்தைத் தொடர்கிறேன். மீண்டும் ஊக்குவித்தமைக்கு நன்றி அண்ணா. 

(நான் யாழில் பார்வையாளனாக இருந்தபோது நீங்கள் சுருக்கமாக - ஆனால் நறுக்கென இங்கே எழுதும் வரிகளும் தான் என்னை யாழில் இணைந்து எழுதத் தூண்டின. அதற்கும் நன்றி!) 😊

D1TdHdZV4AAoaPh.jpg

:grin:

  • கருத்துக்கள உறவுகள்

தன் சுயத்தை தான் தேடிக் கண்டடைவதே உண்மையான சுயம்.......அழகான தத்துவம், கதையில்   அருமையான புதையல் ...பாராட்டுக்கள் மல்லிகை வாசம்......!    🌺

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மல்லிகை வாசம் said:

அந்தப் புதையலை இப்போது - இதோ இந்தக் கணத்தில் தான் கண்டு பிடித்துவிட்டேன்! 

இது தான் உண்மையான நிலையான புதையல்.

மல்லிகைவாசம் சுவியும் நீங்களும் இரு தண்டவாளங்கள்.

நாங்கள் அதில் எப்போதும் பயணிக்கத் தயாராக இருக்கிறோம்.

அருமையான தொடைரப் படைத்து இருக்கிறீர்கள் மல்லிகை வாசம். வசந்தன் தன் பெற்றோரிடம் சேர்வதே அவர் கனவில் கண்ட புதையலாக இருக்கும் ,அப்படியே முடிவு அமையும் என நான் நினைத்திருந்தேன்.இறுதியில் தன் சுயத்தையே புதையலாக தேடிக்கண்டதாக முடித்ததிருப்பது அபாரம்.  வாாழ்த்துக்கள். 

  • தொடங்கியவர்
17 hours ago, suvy said:

தன் சுயத்தை தான் தேடிக் கண்டடைவதே உண்மையான சுயம்.......அழகான தத்துவம், கதையில்   அருமையான புதையல் ...பாராட்டுக்கள் மல்லிகை வாசம்......!    🌺

வாசித்து ஊக்குவித்தமைக்கு நன்றி, சுவி அண்ணா 😊

  • தொடங்கியவர்
16 hours ago, ஈழப்பிரியன் said:

இது தான் உண்மையான நிலையான புதையல்.

மல்லிகைவாசம் சுவியும் நீங்களும் இரு தண்டவாளங்கள்.

நாங்கள் அதில் எப்போதும் பயணிக்கத் தயாராக இருக்கிறோம்.

ஈழப்பிரியன் அண்ணா, அப்படி என்னை சுவியண்ணாவுடன் ஒப்பிடாதீர்கள். அவரிடமிருந்தும், உங்களிடமிருந்தும் சிறியோர் நாம் கற்க நிறைய இருக்கிறது. 

ஏதோ என்னால் முடிந்த அளவு உங்களுக்குப் பிடித்தது போல் எழுதியிருக்கிறேன் என்பதில் திருப்தி. 

மீண்டும் ஊக்குவிப்புக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா. 😊

  • தொடங்கியவர்
17 hours ago, ஜெகதா துரை said:

அருமையான தொடைரப் படைத்து இருக்கிறீர்கள் மல்லிகை வாசம். வசந்தன் தன் பெற்றோரிடம் சேர்வதே அவர் கனவில் கண்ட புதையலாக இருக்கும் ,அப்படியே முடிவு அமையும் என நான் நினைத்திருந்தேன்.இறுதியில் தன் சுயத்தையே புதையலாக தேடிக்கண்டதாக முடித்ததிருப்பது அபாரம்.  வாாழ்த்துக்கள். 

ஜெகதா துரை, வசந்தன் பெற்றோருடன் சமாதானமாவதையும் இறுதியில் சேர்ப்பதற்கு எண்ணியிருந்தேன். எனினும், சுயம் என்ற புதையல் அவன் வாழ்வில் இழந்த பலவற்றை மீளப் பெறுவதற்கு முதற்படியாக அமையலாம் என்ற அளவில் இந்த அளவில் கதையை முடித்தேன். பெற்றோருடன் சேர்வதும் இதில் உள்ளடங்கும். 😊

வாசித்துக் கருத்துச் சொன்னமைக்கு நன்றி, ஜெகதா துரை. 😊

  • கருத்துக்கள உறவுகள்

புதையல் கிடைக்குமா கிடைக்காதா எண்டு எண்ணிக்கொண்டிருக்க மிக அருமையான எதிர்பாரா முடிவோடு கதையை நேர்த்தியாக முடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.