Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுரேன் ராகவன் தலைமையில் ஆரம்பமாகும் வட.மாகாண பௌத்த மாநாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Buddhis-Conference.jpg

சுரேன் ராகவன் தலைமையில் ஆரம்பமாகும் வட.மாகாண பௌத்த மாநாடு

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் வழிகாட்டலில் வட.மாகாண பௌத்த மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) வவுனியா ஸ்ரீ போதி தட்சிணாராம விகாரையில் இடம்பெறவுள்ளது.

வடக்கு கிழக்கு ஆகிய மாகாணங்களின் பிரதம சங்கைக்குரிய நாயக்கர், வவுனியா மாவட்ட தலைவர் பூஜ்ஜிய சியம்பலா கஸ்வௌ விமலசார தேரர், புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோரின் தலைமையில் இந்த பௌத்த மாநாடு நடைபெறவுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்படும் இந்த பௌத்த மாநாடு, வட.மாகாண ஆளுநர் அலுவலகத்தின் கீழான புத்தசாசன அமைச்சு, பிரதேச அரசியல் தலைவர்கள், முப்படையினர் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் பூரண பங்களிப்புடன் இடம்பெறவுள்ளது.

வவுனியா ஸ்ரீபோதி தட்சிணாராம விகாரையில் நாளை காலை 8.15க்கு சமய வழிபாடுகளின் பின்னர் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளுடனான மத அனுஷ்டானங்களோடு இம்மாநாடு நடைபெறவுள்ளது.

http://athavannews.com/சுரேன்-ராகவன்-தலைமையில்/

சிங்கள-பௌத்த மதவெறியர்களின் எடுபிடிகளால் இவற்றைத் தான் சாதிக்க முடியும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, போல் said:

சிங்கள-பௌத்த மதவெறியர்களின் எடுபிடிகளால் இவற்றைத் தான் சாதிக்க முடியும்!

தமிழினத்தவனை வைத்தே தமிழினத்தை வேரறுக்கின்றார்கள்.
இந்த கொடுமை வேறெந்த இனத்திலும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்குள்.. துரையப்பாக்கள்.. டக்கிளசுக்கள்.. கருணாக்கள்.. கதிர்காமர்கள்.. சுமந்திரன்கள்.. மலிந்து கிடப்பது தெரியாமல்.. இந்த இனத்திற்கும் ஒரு விடுதலை வேண்டும் என்று நினைத்தவர்களே முட்டாள்கள்.. ஆகி நிற்கின்றனர் இன்று. 

  • கருத்துக்கள உறவுகள்

கடலினூடாக எரியும் தீப்பந்தத்தை கொண்டு சென்று சேர்க்கவேண்டிய தேவை அவர்களுக்கும் உண்டு எங்களுக்கும் உண்டு.

எம்மவர்கள்.............

கொண்டு செல்ல எம்மவர்கள் பலரும் முயற்சித்தார்கள் - சிலர் உண்மையாகவே சிலர் பம்மாத்துக்கு.

ஆயினும் பலர் தொடக்கம் முடிவு இரண்டிலும் நின்று கொண்டு தீப்பந்தம் அணையாமல் வருமா வராதா என தர்க்கிப்பதிலேயே காலத்தைக் கொண்டு போயினர், போய்க்கொண்டு இருக்கின்றனர்.

இன்றும் பூமிப்பந்து  ஒரு முழுச் சுற்று சுற்றி விட்டு மீண்டும் மறு   சுற்றுக்கு ஆயத்தமாகின்றது ।।।।

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

தமிழினத்தவனை வைத்தே தமிழினத்தை வேரறுக்கின்றார்கள்.

தமிழினத்தவனல்ல தமிழினத்திற்குள் புகுந்து நானும் தமிழன் என்று காட்டுபவனை வைத்தே தமிழினத்தை வேரறுக்கின்றார்கள். மரபுவழிப் பரிசோதனைக்கு உட்படுத்தினால் இவர்களைக் கண்டுகொள்ளலாம்.😲

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Paanch said:

தமிழினத்தவனல்ல தமிழினத்திற்குள் புகுந்து நானும் தமிழன் என்று காட்டுபவனை வைத்தே தமிழினத்தை வேரறுக்கின்றார்கள். மரபுவழிப் பரிசோதனைக்கு உட்படுத்தினால் இவர்களைக் கண்டுகொள்ளலாம்.😲

சிங்கள அரசியல் வாதிகளுட‌ன் இணக்க அரசியல் நட‌த்தினாலும் எம்மவர்களுக்கு பயனில்லை,எதிர்ப்பு அரசியல் நடத்தினாலும் பயனில்லை என்பதை நாம் தெளிவாக அறிந்துவிட்டோம்...

ஆகவே தொடர்ந்து தமிழினம் அங்கு வாழவேண்டும் என்றால் சில விடயங்களை சமாளிக்கத்தான் வேண்டும்...

இந்த விழாவுக்கு ஐயர்மார் போக வேண்டும் அர்ச்சனை செய்யவேண்டும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, Paanch said:

தமிழினத்தவனல்ல தமிழினத்திற்குள் புகுந்து நானும் தமிழன் என்று காட்டுபவனை வைத்தே தமிழினத்தை வேரறுக்கின்றார்கள். மரபுவழிப் பரிசோதனைக்கு உட்படுத்தினால் இவர்களைக் கண்டுகொள்ளலாம்.😲

2009 க்கு பின் சிங்கள அரசின் உண்மை நிலை தெரிந்தும்......

இல்லாத புலியை நினைத்து  இன்றும் வாந்தியெடுக்கும் மாற்றுக்கருத்து   மாணிக்கங்களைப்பற்றி   என்ன நினைக்கின்றீர்கள்?:)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

2009 க்கு பின் சிங்கள அரசின் உண்மை நிலை தெரிந்தும்......

இல்லாத புலியை நினைத்து  இன்றும் வாந்தியெடுக்கும் மாற்றுக்கருத்து   மாணிக்கங்களைப்பற்றி   என்ன நினைக்கின்றீர்கள்?:)

அரிப்பு எடுக்கும் போது சொறிந்து கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தமும் அதனை தோற்றுவித்த புத்தனும் தமிழர்களாலேயே வணங்கி வழிபடப்பட்டனர். நாயன்மார்களின் எழுச்சியின் பின் பௌத்தம் தமிழர் வழிபாட்டிலிருந்து வழக்கொழிந்தது.
ஆனால் பின்பு வந்த சிங்களவர்கள் பௌத்தத்தை பற்றி பிடிப்பது தம்மை தனித்துவமான இனமாக காட்டவே.
இப்போது புத்தனை ஆக்கிரமிப்பு சின்னமாக்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

2009 க்கு பின் சிங்கள அரசின் உண்மை நிலை தெரிந்தும்......

இல்லாத புலியை நினைத்து  இன்றும் வாந்தியெடுக்கும் மாற்றுக்கருத்து   மாணிக்கங்களைப்பற்றி   என்ன நினைக்கின்றீர்கள்?:)

புலிகள் திரும்ப வந்தால் வாந்தி நின்றுவிடும். இது எப்படி என்றால்....! மிதமிஞ்சி சாராயம் குடித்து வாந்தி எடுப்பவனுக்கு, மீண்டும் சிறிது சாராயம் குடிக்கக் கொடுத்தால் வாந்தி நின்றுவிடுகிறது.!! 🤣 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

பௌத்தமும் அதனை தோற்றுவித்த புத்தனும் தமிழர்களாலேயே வணங்கி வழிபடப்பட்டனர். நாயன்மார்களின் எழுச்சியின் பின் பௌத்தம் தமிழர் வழிபாட்டிலிருந்து வழக்கொழிந்தது.
ஆனால் பின்பு வந்த சிங்களவர்கள் பௌத்தத்தை பற்றி பிடிப்பது தம்மை தனித்துவமான இனமாக காட்டவே.
இப்போது புத்தனை ஆக்கிரமிப்பு சின்னமாக்குகிறார்கள்.

ஐம்பெரும் காப்பிய காலத்து தமிழரின் மதமான பௌத்தத்தை மணிமேகலை காலத்தின் மணிபல்லவத்தில் மீண்டும் புதுப்பிக்கும் ஆளுனரின் முயற்சிக்கு வாழ்த்துகள். அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் ஆதிக்கத்தில் உள்ள பௌத்தத்தை விடுவித்து உண்மையான பௌத்தத்தை ஏனைய பௌத்த நாடுகளின் ஆதரவுடன் வட கிழக்கில் வளர்ச்சி அடைய செய்து சிங்கள இனவாத பிக்குகளின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள முடியும்.

பெரும்பாலான சிங்கள மக்கள் பிக்குகளுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக நம்பி அவர்களுக்கு அஞ்சுகிறார்கள் இந்து கடவுள்களிடமும் தெய்வீக சக்தி இருப்பதாக நினைக்கிறார்கள். தமிழ் பௌத்தம் இரெண்டையும் இணைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

வட கிழக்கில் வளர்ச்சி அடைய செய்து சிங்கள இனவாத பிக்குகளின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள முடியும்.

. தமிழ் பௌத்தம் இரெண்டையும் இணைக்கும்.

பெள‌த்தம் வளர்ச்சியடையலாம் வரவேற்கின்றேன் ,ஆனால் சிறிலங்காவை பொறுத்தவரை  பெளத்தத்துடன் சேர்ந்து சிங்கள இனவாதமும் வளர்ச்சியடையும் ....அதை தடுத்து நிறுத்தமுடியாது.........

மேலும் தமிழ் பெளத்தர்கள் என்ற இன்னுமோர் இனம் வடக்கு கிழக்கில் உருவாகும் .....ஏற்கனவே 
தமிழ் பேசும் இந்துக்கள்
தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள்
தமிழ் பேசும் இஸ்லாமியர்
தமிழ் பேசும் பறங்கியர்
இனி புதுசா 
தமிழ் பேசும் பெளத்தர்கள்...தாங்காதடா சாமி நம்ம வட‌க்கு கிழக்கு..
புத்தருக்கு அபிசேகம் செய்ய ஐயர்மார் ரெடியா.... 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

தமிழ் பேசும் பெளத்தர்கள்...தாங்காதடா சாமி நம்ம வட‌க்கு கிழக்கு..
புத்தருக்கு அபிசேகம் செய்ய ஐயர்மார் ரெடியா.... 

புத்தருக்குத் தமிழால்  அபிசேகம் செய்ய ஐயர்மார் ரெடியா......?? 🤔 

தமிழர் வணங்கும் கடவுள்களுக்கே தமிழ் விளங்காது.....!!😲

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

புத்தருக்குத் தமிழால்  அபிசேகம் செய்ய ஐயர்மார் ரெடியா......?? 🤔 

தமிழர் வணங்கும் கடவுள்களுக்கே தமிழ் விளங்காது.....!!😲

வாயை சீலையால் மூடிக்கட்டி கொண்டு அபிசேகம் செய்யலாம்...
😁

தமிழர்களில் படித்தவர்கள் எனப்படுபவர்களில் பெரும்பாலனவர்கள் பாமரர்கள்.   (அவர்கள் ஒகஸ்ஃபோர்டில் அல்லது கேம்பிறிச்சில் படித்தவர்களாயினும்)  மேற்கு நாடுகளில் படித்தவர்களானாலும் கூட தமிழர்களிடையே உள்ள பிற்போக்குவாதங்களை ஊக்குவித்து  அதனை பேணிப்பாதுகாத்து வருவதில்  இந்த படித்த வர்ககத்தினர் என்று அழைக்கப்படும் பாமரர்களுக்கு பெரும் பங்கு உண்டு. எனது பார்வையில் இந்த சுரேஸ் ராகவனும் அந்த வகையை சேர்ந்தவராகவே உள்ளார். இலங்கைத்தீவில் ஆயுதப் போராட்டம் உருவாக விதை போட்டவர்களும் இந்த பாமர‍ர்களே. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

பெள‌த்தம் வளர்ச்சியடையலாம் வரவேற்கின்றேன் ,ஆனால் சிறிலங்காவை பொறுத்தவரை  பெளத்தத்துடன் சேர்ந்து சிங்கள இனவாதமும் வளர்ச்சியடையும் ....அதை தடுத்து நிறுத்தமுடியாது.........

பெளத்தத்துடன் சேர்ந்து சிங்கள இனவாதம் ஆரம்பம் முதலே வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது. ஒன்றும் செய்யாவிட்டால் நிச்சயமாக அதை தடுத்து நிறுத்த முடியாது. நாம் என்றாவது இந்த சிங்கள இனவாதத்தை தடுக்க தக்க ஆயுதமாக  தமிழ் பௌத்தத்தை பயன்படுத்தலாமா என்று பொழுதுபோக்குக்காவது சிந்தித்தது  உண்டா? இல்லையே? ஒன்றும் செய்யாவிட்டால் நிச்சயமாக சிங்கள இனவாதத்தை தடுத்து நிறுத்த முடியாது. தமிழ் பௌத்தத்தை பயன்படுத்தி பார்க்கலாமே?

5 hours ago, putthan said:

மேலும் தமிழ் பெளத்தர்கள் என்ற இன்னுமோர் இனம் வடக்கு கிழக்கில் உருவாகும் .....ஏற்கனவே 
தமிழ் பேசும் இந்துக்கள்
தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள்
தமிழ் பேசும் இஸ்லாமியர்
தமிழ் பேசும் பறங்கியர்
இனி புதுசா 

மக்களை பல பிரிவினராக பார்க்கலாம். கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒரு குழுவினர் அல்ல. கத்தோலிக்கர் ஒரு புறம். பல்லாயிரம் அல்லேலுயா குழுக்கள் பல புறம் என்று அவர்களே பல பிரிவுகள். இதற்கு மேல் பல சாதிகள். மட்டக்களப்பார், யாழ்ப்பாணிகள் வேறு ஊர்ப் பிரிவுகள் பிரதேச வாதம். படித்த மேல்தட்டு வர்க்கம். பாட்டாளிகள். முதலாளிகள் வகை ... இப்படி பல வகையில் மக்களை பிரிக்கலாம். இதற்குள் தமிழ் பௌத்தரால் பெரும் பாதிப்பு ஒன்றும் வந்து விடப்போவதில்லை. சில பாதிப்புகள் வந்தாலும், சிங்கள இனவாதத்தை மேற்கொள்ள இது உதவினால் நன்மை பாதிப்புகளிலும் பார்க்க அதிகம். 

5 hours ago, putthan said:

புத்தருக்கு அபிசேகம் செய்ய ஐயர்மார் ரெடியா.... 

கத்றகம தேவாலே யில் கதிர்காம கந்தனுக்கும் பத்தினி தேயோ தேவாலே யில் கண்ணகிக்கும் சிங்கள பூசாரிகள் அபிசேகம் செய்கிறார்களே? ஐயர் மார் வராவிட்டால் தமிழர் தமிழில் அபிசேகம் செய்யலாம் இல்லையா? மணிமேகலை தமிழ் பிக்குணி தானே? சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பௌத்தத்தை போதித்த போதிதருமரும் தமிழரே. இளங்கோ அடிகளும் தமிழ் பௌத்த பிக்கு. தமிழர் மீண்டும் பிக்குகளாகலாம். சிங்களவரின் பௌத்த ஆதிக்கம் உடைய வைக்கலாம்.

2 hours ago, tulpen said:

தமிழர்களில் படித்தவர்கள் எனப்படுபவர்களில் பெரும்பாலனவர்கள் பாமரர்கள்.   (அவர்கள் ஒகஸ்ஃபோர்டில் அல்லது கேம்பிறிச்சில் படித்தவர்களாயினும்)  மேற்கு நாடுகளில் படித்தவர்களானாலும் கூட தமிழர்களிடையே உள்ள பிற்போக்குவாதங்களை ஊக்குவித்து  அதனை பேணிப்பாதுகாத்து வருவதில்  இந்த படித்த வர்ககத்தினர் என்று அழைக்கப்படும் பாமரர்களுக்கு பெரும் பங்கு உண்டு. எனது பார்வையில் இந்த சுரேஸ் ராகவனும் அந்த வகையை சேர்ந்தவராகவே உள்ளார். இலங்கைத்தீவில் ஆயுதப் போராட்டம் உருவாக விதை போட்டவர்களும் இந்த பாமர‍ர்களே. 

பாமரர் என்றால் சுயநலவாதிகள் என்று பொருள் வழங்குகிறீர்களா? தமிழ் சொற்களுக்கு நாம் நினைத்த அர்த்தம் கொடுத்து தமிழை குழப்பலாமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

surean-rahawan-720x450.jpg

பௌத்த மாநாட்டுக்கு இலட்சக்கணக்கில் செலவழித்த யாழ். ஆளுநர்!

வடக்கில் நடைபெற்ற பௌத்த மாநாட்டுக்கு 9 இலட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை பௌத்த மாநாடு நடைபெற்றது.

இதற்காக 9 இலட்சத்து 16 ஆயிரத்தி 600 ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலக தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது.

இவ்வாறு ஒருநாள் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கான தேநீர் மற்றும் உணவுக்காக 2 இலட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாயும், கொடி கட்டுதல் மற்றும் நூல் கொள்வனவுக்காக 59 ஆயிரத்து 100 ரூபாயும், பதாகை அலங்காரத்திற்கு 4 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், விஹாரை நுழைவாயில் அலங்காரம்  மற்றும் அலங்கார பந்தல் அமைப்பு உள்ளிட்ட இதர செலவு 1 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாயுமாக 9 இலட்சத்து 16 ஆயிரத்தி 600 ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை யாழில் கடந்த வாரம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஜெனீவாவில் நாம் ஒருநாள் செலவு செய்யும் பணத்திற்கு இங்குள்ள ஏழை குடும்பம் ஒன்றினை ஆறு மாத காலத்திற்கு வசதியாக வாழவைக்க முடியுமென்றும் ஏழை குடும்பத்திலிருந்து வந்தவன் எனும் ரீதியில் தேவையற்ற செலவுகளை செய்ய மாட்டேன் எனவும் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பௌத்த-மாநாட்டுக்கு-இலட்ச/

  • கருத்துக்கள உறவுகள்

என் கடன்பணி செய்து கிடப்பதே!
ஜூட் அண்ணாவின் கருத்துக்கு அமைவாக தமிழ் பௌத்தத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஆளுநர் இறங்கிற்றாரோ?!
இல்லாட்டி ஆளே இல்லாத கடையில யாருக்கு ரீ ஆத்துறார்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

என் கடன்பணி செய்து கிடப்பதே!
ஜூட் அண்ணாவின் கருத்துக்கு அமைவாக தமிழ் பௌத்தத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஆளுநர் இறங்கிற்றாரோ?!
இல்லாட்டி ஆளே இல்லாத கடையில யாருக்கு ரீ ஆத்துறார்?

அவரது முதல் நோக்கம் தனது பதவியை உறுதிப்படுத்துவது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பற்றிய அவரது அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Jude said:

பெளத்தத்துடன் சேர்ந்து சிங்கள இனவாதம் ஆரம்பம் முதலே வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது. ஒன்றும் செய்யாவிட்டால் நிச்சயமாக அதை தடுத்து நிறுத்த முடியாது. நாம் என்றாவது இந்த சிங்கள இனவாதத்தை தடுக்க தக்க ஆயுதமாக  தமிழ் பௌத்தத்தை பயன்படுத்தலாமா என்று பொழுதுபோக்குக்காவது சிந்தித்தது  உண்டா? இல்லையே? ஒன்றும் செய்யாவிட்டால் நிச்சயமாக சிங்கள இனவாதத்தை தடுத்து நிறுத்த முடியாது. தமிழ் பௌத்தத்தை பயன்படுத்தி பார்க்கலாமே?

பெளத்தர்களாக தமிழர்கள் சிலர் மாறினால், அவர்கள் தனித்துவமாக இயங்க முடியாது. மொத்தமாக சிங்கள பெளத்தத்திற்குள் உள்வாங்கப்பட்டு விடுவார்கள். இதற்கு நல்லதொரு உதாரணம், சிலாபம், நீர்கொழும்புப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்க் கிறீஸ்த்தவர்கள் இன்று மொத்தமாக சிங்கள இனத்திற்குள் உள்வாங்கப்பட்டிருப்பது.

இதேபோன்று, இரத்தினபுரிப் பகுதியில், றப்பர்த் தோட்டங்களில் வேலைசெய்வதற்கென்று குடியேறிய பல தமிழர்கள் தமது அடையாளத்தை இழந்து சிங்களவர்களாக மாறி வருகிறார்கள். 

பெளத்ததிற்கு தமிழர் மாறுவதால், சிங்களவரின் ஆதிக்கம் அவர்களுக்குள் ஊடுருவிவிடும், பின்னர் மெது மெதுவாக அவர்கள் சிங்களத்திற்குள் உள்வாங்கப்பட்டு விடுவார்கள். 

அவர்கள் செய்யவிரும்புவதை, நாமே செய்துமுடிப்பதாக இது அமைந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Jude said:

. நாம் என்றாவது இந்த சிங்கள இனவாதத்தை தடுக்க தக்க ஆயுதமாக  தமிழ் பௌத்தத்தை பயன்படுத்தலாமா என்று பொழுதுபோக்குக்காவது சிந்தித்தது  உண்டா? இல்லையே? ஒன்றும் செய்யாவிட்டால் நிச்சயமாக சிங்கள இனவாதத்தை தடுத்து நிறுத்த முடியாது. தமிழ் பௌத்தத்தை பயன்படுத்தி பார்க்கலாமே?

பொழுது போக்குக்கு தான் நான் புத்தன் என்று பெயர் வைத்துள்ளேன்.,.சிங்கள‌வ‌ர்கள் பிள்ளையாரை வழிபடுவது போல பல இந்துக்கள் புத்தரை வழிபடுகிறார்கள்....தமிழ் சாரதிகள் தங்களது வாகன‌த்தில் புத்தரின் பட‌ங்களுக்கு பூவும் வைத்து வழிபடுகிறார்கள்....
கிறிஸ்தவர்கள் தமிழர்களாகவும் ,சிங்களவர்களாகவும் இருக்கின்றனர் ...சிங்கள கிறிஸ்தவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களை தங்களுடைய இனமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்....சிங்களவர்கள் என்ற இனவாத ஆணவ போக்குத்தான் அவர்களிடையே உண்டு....

இந்தியாவில் இப்பொழுது பல மனிதசாமிமார்(சாய்பாபா,சீரடி பாபா) தங்களது  உபதேசங்களில் உலகில் உள்ள சகல மதங்களின் சின்னங்களையும் பயன்படுத்துகிறார்கள்...அது அந்த மத அமைப்பினர் மட்டுமே உள்வாங்குகின்றனர் பிறமதத்தினர் உள்வாங்குவதில்லை...

வெசாக் பண்டிகைக்கு  கிறிபத் படைத்து கொண்டாடுகிறார்கள் ,கிறிஸ்மஸ்க்கு கெக் வெட்டி கொண்டாடுகிறார்கள் சாய்பாபா பக்தர்கள்....புலம்பெயர் பிரதேசங்ளில் கோவிலுக்கு செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கையை விட இந்த சாய் மல்டி மதவழிபாட்டுக்கு செல்லுவோரின் எண்ணிக்கை அதிகம்...
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

கிறிஸ்தவர்கள் தமிழர்களாகவும் ,சிங்களவர்களாகவும் இருக்கின்றனர் ...சிங்கள கிறிஸ்தவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களை தங்களுடைய இனமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்....சிங்களவர்கள் என்ற இனவாத ஆணவ போக்குத்தான் அவர்களிடையே உண்டு....

பெரும்பான்மையான சிங்கள கிறிஸ்தவர்கள் இனவாதிகள் அல்ல. சொந்த அனுபவத்தில் நான் இதனை சொல்ல முடிகிறது. இதற்கு காரணம் சிங்கள கிறிஸ்தவர்களை சிறுபான்மையாக  மட்டுமல்ல இனத்துரோகிகலாகவே சிங்கள பௌத்தர்கள் பார்க்கிறார்கள். பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்கள் இலங்கைக்கு தமிழர்கள் அனைவரையும் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் தான் கொண்டு வந்தார்கள் என்றே கருதுகிறார்கள். இந்த சிங்கள பௌத்தர்களில் நன்கு கல்வி கற்று வெளிநாடுகளில் வாழ்பவர்களும் இலங்கை அரசின் உயர்மட்ட அலுவலர்களாக இருந்தவர்களும் அடக்கம்.

இன்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க ஆதிக்க நோக்கங்களுக்கு விடுதலை புலிகளை கிறிஸ்தவர்ளே பின்னின்று ஊக்குவித்தார்கள் என்பதே சிங்கள பௌத்தர்களின் வாதமாக இருக்கிறது. யு.என்.பி. யில் பெருமளவு கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். ரணில் விக்க்ரமசிங்கவும்  கிறிஸ்தவ பின்னணியை கொண்டவரே. யு.என்.பி.  ஐரோப்பா மற்றும் அமெரிக்க நலன்களுக்கு ஆதரவான கட்சி.ஆகவே இந்த கிறிஸ்தவ பின்னணியை கொண்டவர்களை சிங்கள  பௌத்தர்கள் துரோகிகளாக பார்க்கிறார்கள். சிங்கள பௌத்தர்களை சாந்தப்படுத்தும் நோக்கில் சிங்கள கிறிஸ்தவ தலைவர்கள் சிங்கள  பௌத்த மேலாண்மையை  ஏற்றுக்கொண்டு அறிக்கைகள் விடும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.

சிங்கள கிறிஸ்தவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் மத ரீதியில் பல நிகழ்வுகளில் ஒன்றாக சந்திப்பது வழக்கம். மடு திருப்பதி ஆண்டாண்டு சிங்கள கிறிஸ்தவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் சந்திக்கும் ஒரு இடமாக இருக்கிறது. காலம் சென்ற வைத்தியரும் அரசியல்வாதியுமான ஜெயலத் ஜெயவர்த்தன தமிழரின் அபிமானம் பெற்ற சிங்கள கிறிஸ்தவர். இவர் போல பலர் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

பெளத்தர்களாக தமிழர்கள் சிலர் மாறினால், அவர்கள் தனித்துவமாக இயங்க முடியாது. மொத்தமாக சிங்கள பெளத்தத்திற்குள் உள்வாங்கப்பட்டு விடுவார்கள். இதற்கு நல்லதொரு உதாரணம், சிலாபம், நீர்கொழும்புப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்க் கிறீஸ்த்தவர்கள் இன்று மொத்தமாக சிங்கள இனத்திற்குள் உள்வாங்கப்பட்டிருப்பது.

சிலாபம், நீர்கொழும்புப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்க் கிறீஸ்த்தவர்கள் சிங்களவர்கள் மத்தியில் வாழ்ந்த மக்கள். அவர்கள் மதம் மாறவில்லை - இனம் மாறினார்கள். அவர்களுக்கு தமிழ் பாதிரி இருக்கவில்லை தமிழ் பாடசாலையும் இருக்கவில்லை.  நீர்கொழும்பில் இவ்வாறு இனம் மாறிய ஒரு குடும்பத்தை மூன்று தலைமுறைகளாக நான் அறிவேன். அவர்களை இனம் மாற்றிய சிங்கள பாதிரி இருந்த கத்தோலிக்க தேவாலயத்தையும் போய் பார்த்தேன். அவர்கள் முற்றிலும் சிங்கள பிரதேசத்தில் எந்தவிதமான தமிழ் ஆதரவும் இன்றி வாழ்ந்த மக்கள். அவர்களை ஆதரித்தது அவர்களது  மதம் ஒன்றே.

யாழ்ப்பாணத்தில் தமிழர் பௌத்தரானால் அவர்கள் தமிழ் பிரதேசத்தில் சிங்களம் தெரியாத மக்கள் மத்தியில் வாழும் பௌத்தராக, சிங்களம் பேசத்தெரியாத பௌத்தராக இருப்பார்கள். அவர்கள் எப்படி சிங்களவராக மாற முடியும்? தமிழ் தெரியாத சிங்கள பிக்குகள் எவ்வளவு வேகமாக சிங்களத்தை தமிழருக்கு படிப்பிக்க முடியும்? என்றும் நடக்க முடியாதது அது. ஆகவே தமிழ் பௌத்தம் சிங்கள பௌத்தத்துக்கு நிகராக வளர்ச்சி பெறும். தமிழருக்கு இன்று பன்மொழி புலமை இருக்கிறது. தமிழ் நாட்டு அம்பேத்கார் வழி பௌத்தரின் உறவும் ஏற்படும். இந்த பௌத்த மறுமலர்ச்சி ஜப்பானிய மற்றும் சிங்கபூர் பௌத்தர்களின் உதவியுடன் வீரியம் பெற்று சிங்கள பௌத்தத்துக்கு சவாலாக மாற முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Jude said:

பெளத்தத்துடன் சேர்ந்து சிங்கள இனவாதம் ஆரம்பம் முதலே வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது. ஒன்றும் செய்யாவிட்டால் நிச்சயமாக அதை தடுத்து நிறுத்த முடியாது. நாம் என்றாவது இந்த சிங்கள இனவாதத்தை தடுக்க தக்க ஆயுதமாக  தமிழ் பௌத்தத்தை பயன்படுத்தலாமா என்று பொழுதுபோக்குக்காவது சிந்தித்தது  உண்டா? இல்லையே? ஒன்றும் செய்யாவிட்டால் நிச்சயமாக சிங்கள இனவாதத்தை தடுத்து நிறுத்த முடியாது. தமிழ் பௌத்தத்தை பயன்படுத்தி பார்க்கலாமே?

தமிழ் கிறீஸ்தவர்கள் எல்லோரும் தமிழ் பெளத்தர்களாக தயாரா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.