Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு எரிவாயு, இரு எண்ணெய் படிமங்கள் கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இரு எரிவாயு, இரு எண்ணெய் படிமங்கள் கண்டுபிடிப்பு
 
|

mannar.jpgமன்னார் கடற்பரப்பில் இரண்டு எரிவாயு படிமங்களும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ?இரண்டு எரிவாயுப் படிமங்களிலும், 9 ட்ரில்லியன் கன அடி எரிவாயுவும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களிலும், 2 பில்லியன் பரல் எண்ணெயும் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு எரிவாயுப் படிமங்களில் சிறியதான டொராடோ படிமத்தில் இருந்து 350 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயுயைப் பெற முடியும். இதன் மூலம், 350 மெகாவாட் மின் நிலையத்தை 10 ஆண்டுகளுக்கு இடைவிடாமல் இயக்க முடியும்.

இரண்டாவது எரிவாயுப் படிமத்தில், 1000 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயு இருக்கக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயுவை முதலில் மின் உற்பத்திக்கும், பின்னர் உள்நாட்டு தேவைக்கும் பயன்படுத்த முடியும். இந்த இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆய்வு அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும். பகிர்வு அடிப்படையில் உற்பத்தி செய்யத் தயாராக உள்ள முதலீட்டாளருடன் இது தொடர்பான உடன்பாடு கையெழுத்திடப்படும்.

ஏற்கனவே, 12 முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.? என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.elukathir.lk/NewsMain.php?san=24508

  • கருத்துக்கள உறவுகள்

வெளிக்கிடடி மன்னாருக்கு.....

ஏத்தனை வருசமா கண்டு பிடிக்கிராங்க்ள் 

  • கருத்துக்கள உறவுகள்

டெய்லி மிரர் பத்திரிகையில் 2007ல் இதே போல செய்தி வந்த போது, இந்த பக்கம் எண்ணெய் உண்மையிலேயே இருந்தால், இந்நேரம் இந்தியாக்காரர்கள், அந்த பக்கமா இருந்து நிலத்துக்கு கீழாக குழாயைப் போட்டு, உறிஞ்சி இருப்பார்கள்.  ஆகவே சும்மா பீலா விடாதீர்கள் என்று பின்னூட்டம் போட்டு இட்டு இருந்தேன்.

பலர் அதுவே உண்மை என்று சொல்லி இருந்தார்கள்.

12 வருசத்துக்கு பின்னர் மீண்டும் கதை விடுகினம். இன்றும் நான் சொன்னதே உண்மை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இது மட்டும் நிஜமானால் யார் கண்டது ஈழத்துக்கு ஒரு விடிவும் கிடைக்கலாம்.....!   🤨

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணையோ எரிவாயுவோ இருந்தால் எங்களுக்கு மலிவாக கிடைக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, suvy said:

இது மட்டும் நிஜமானால் யார் கண்டது ஈழத்துக்கு ஒரு விடிவும் கிடைக்கலாம்.....!   🤨

எப்பவோ இருந்து இதைத்தான் சொல்கிறார்கள். இருந்தால் எடுக்க  நிற்க  அந்த கடற்பரப்பு Marine park என்று பிரகடனப்பட்டிருக்கு . எப்படி அகழ்வார்கள்? ஏதாவது வழிமுறை இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nilmini said:

எப்பவோ இருந்து இதைத்தான் சொல்கிறார்கள். இருந்தால் எடுக்க  நிற்க  அந்த கடற்பரப்பு Marine park என்று பிரகடனப்பட்டிருக்கு . எப்படி அகழ்வார்கள்? ஏதாவது வழிமுறை இருக்கும் 

இது ஏப்ரல் பூல் செய்தி போல கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

இது மட்டும் நிஜமானால் யார் கண்டது ஈழத்துக்கு ஒரு விடிவும் கிடைக்கலாம்.....!   🤨

2 hours ago, nilmini said:

எப்பவோ இருந்து இதைத்தான் சொல்கிறார்கள். இருந்தால் எடுக்கவேண்டியதுதானே .  நிற்க  அந்த கடற்பரப்பு Marine park என்று பிரகடனப்பட்டிருக்கு . எப்படி அகழ்வார்கள்? ஏதாவது வழிமுறை இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, putthan said:

வெளிக்கிடடி மன்னாருக்கு.....

முந்தி தான் அலவாங்கு பிக்கானுடன் போக வேண்டும்.
இப்போ இருந்த இடத்திலிருந்தே டாலரை விசுக்விட்டால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் கடல்படுக்கையில்  இருந்து மசகு எண்ணை கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தால் வடமாகாண மக்கள் சந்தோசப்பட எதுவுமில்லை.
இதற்கு காரணங்களாக பலவற்றை குறிப்பிடலாம்.
1. இந்த கடற்பிரதேசத்தை நம்பி மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள பலதமிழ் குடும்பங்கள் தொழில் வாய்ப்பினை இழக்க நேரிடும்.
2. எண்ணை அகழ்வில் ஈடுபட கடலில் நிறுத்தப்படும் பாரிய தளங்களில்(oil platform), படகுகள், கப்பல்கள் இருந்து வெளியேறும் எண்ணை மற்றும் இரசாயன கழிவுகள் கடல் வளத்தை அழிப்பதுடன் கடல் நீரை மாசுபடுத்தும்.
3. இந்த தளங்களில் இருந்து வெளியேறும் எரிவாயு காற்றுமண்டலத்தை மாசுபடுத்தும்.
4. மன்னார் கடல் மிகவும் குறுகிய கடல் பிரதேசம். இது இந்துசமுத்திர பெருங்கடலுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இணைந்துள்ளதால் பாரிய தளங்களில் எதிர்பாராத விபத்துகள் (leakage, acute discharge, blowout) நேரும்போது கட்டுப்பாட்டை இழக்கும் எண்ணைக்கிணறுகளிலிருந்து வெளியேறும் மசகு எண்ணை கடலில் கலந்து அங்குள்ள மீன், தாவரங்கள், உயிரினங்களை அழிப்பதுமட்டுமல்லாது பலதசாப்த காலங்களுக்கு  சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தும்.
5. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் காரணிகளைக்கண்டறிவதற்கும் கடற்கரையில் பாதுகாப்பு வலயமொன்றை ஏற்படுத்தவும் பரந்துபட்ட பக்கசார்பற்ற ஆய்வுகள் மேற்கொண்டு முதற்கட்ட ஏற்பாடுகளை செய்ததற்குமான ஆதாரங்கள் அரசதரப்பில் இருந்து வெளியிடப்படவேண்டும்.

ஆங்கிலத்தில் மேலதிக தகவல்களுக்கு http://www.ptil.no

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

எண்ணையோ எரிவாயுவோ இருந்தால் எங்களுக்கு மலிவாக கிடைக்குமோ?

இப்ப உலகத்திலை நம்பர் வண் செய்தியாய் இருக்கிற வெனிசுலாவிலையும் எண்ணை எக்கச்சக்கமாய் இருக்குதாம்.......ஆனால் பொதுசனத்துக்கு சாப்பிட குடிக்க எந்த வசதியுமில்லையாம்.தலையிடிக்குக்கூட மருந்தில்லையாம்..... சனம் மீன்பிடிக்கிற இடத்திலையும் எண்ணை மிதக்குதாம்.

அரசியல் ஒழுங்காய் இருந்தால் தண்ணியில்லாத காடும் செழிப்பாகத்தான் இருக்கும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

கலோ.. கிந்தியவா ? சீனாவா .. ? கடைய எப்ப சார் திறப்பிங்க...🤔

DtaqBbQU0AAeq7Z.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vanangaamudi said:

மன்னார் கடல்படுக்கையில்  இருந்து மசகு எண்ணை கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தால் வடமாகாண மக்கள் சந்தோசப்பட எதுவுமில்லை.
இதற்கு காரணங்களாக பலவற்றை குறிப்பிடலாம்.
1. இந்த கடற்பிரதேசத்தை நம்பி மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள பலதமிழ் குடும்பங்கள் தொழில் வாய்ப்பினை இழக்க நேரிடும்.
2. எண்ணை அகழ்வில் ஈடுபட கடலில் நிறுத்தப்படும் பாரிய தளங்களில்(oil platform), படகுகள், கப்பல்கள் இருந்து வெளியேறும் எண்ணை மற்றும் இரசாயன கழிவுகள் கடல் வளத்தை அழிப்பதுடன் கடல் நீரை மாசுபடுத்தும்.
3. இந்த தளங்களில் இருந்து வெளியேறும் எரிவாயு காற்றுமண்டலத்தை மாசுபடுத்தும்.
4. மன்னார் கடல் மிகவும் குறுகிய கடல் பிரதேசம். இது இந்துசமுத்திர பெருங்கடலுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இணைந்துள்ளதால் பாரிய தளங்களில் எதிர்பாராத விபத்துகள் (leakage, acute discharge, blowout) நேரும்போது கட்டுப்பாட்டை இழக்கும் எண்ணைக்கிணறுகளிலிருந்து வெளியேறும் மசகு எண்ணை கடலில் கலந்து அங்குள்ள மீன், தாவரங்கள், உயிரினங்களை அழிப்பதுமட்டுமல்லாது பலதசாப்த காலங்களுக்கு  சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தும்.
5. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் காரணிகளைக்கண்டறிவதற்கும் கடற்கரையில் பாதுகாப்பு வலயமொன்றை ஏற்படுத்தவும் பரந்துபட்ட பக்கசார்பற்ற ஆய்வுகள் மேற்கொண்டு முதற்கட்ட ஏற்பாடுகளை செய்ததற்குமான ஆதாரங்கள் அரசதரப்பில் இருந்து வெளியிடப்படவேண்டும்.

ஆங்கிலத்தில் மேலதிக தகவல்களுக்கு http://www.ptil.no

உண்மை ஐயா,

1994/1998 காலப்பகுதியில் இத்கையா‍‍‍‍‍‍   ஒர் அமெரிக்காவின்  Houstan - TX  ஐ தளமாக கொண்ட‌ கம்பனி ஒன்றில் வேலை செய்தேன். இயற்கைக்கு பாதிப்பில்லாமல் செய்வார்கள். ஆனலும் இலங்கையில் இது செய்ய முடியாது. இயற்கை பாதிப்படையும்

  • கருத்துக்கள உறவுகள்

சூழலை மாசுபடுத்தாமல் நிலத்திற்கு கீழ் இருந்து மசகு எண்ணையை  மேலே கொண்டுவர நடைமுறையில் இருக்கும் எந்தவொரு தொழில்நுட்பத்தாலும்  முடியாது. ஆனால் மசகு எண்ணை வளமுள்ள பிரதேசங்களில் உள்ள  வளிமண்டல சுற்றுச்சூழல் எந்தளவுக்கு மாசின் அளவை தாக்குப்பிடிக்கும் என்பதுதான் முக்கியம். 

பலதரப்பட்ட ஆய்வுகள் மூலம் பாதுகாப்பான அதி உயர்மட்ட மாசின் அளவு கண்டறியப்பட்டு அந்த அளவை மீறும் எண்ணைக்கம்பனிகளுக்கு பாரிய தண்டப்பணம் விதிக்கப்படும் அல்லது எண்ணை அகழ்வுக்காக வழங்கப்பட்ட வர்த்தக அனுமதி இரத்துச்செய்யப்படும். இதை சரியானமுறையில் நடைமுறைப்படுத்துவது மிகச் சிக்கலான விடையம். சிறிலங்கா போன்ற நாடுகளில் எண்ணைக்கம்பனிகள்  பொதுநலம் குறித்து அக்கறைகொள்ளாத அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்களுக்கு இலஞ்சம் கொடுத்து சரிக்கட்டமுயற்சிப்பதும் எதிர்பார்க்கவேண்டிய ஒன்று.

மசகு எண்ணை வளத்தை கையாளும் நுட்பத்தை முன்னுதாரணமாக இருந்து  நிர்வகிக்கும் நாடுகள் உலகில் மிகச் சில மட்டுமே காணமுடியும். பல நாடுகளில் தகுந்த விதிமுறைகள் இல்லாததால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வளங்களை சுரண்டுவதும் ஊழலை வளர்ப்பதும்தான் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் கிடைக்கும் அனைத்து இலாபமும் முற்று முழுதாக அரச கஜானாவை சென்றடைவதில்லை.

மசகு எண்ணை வயல்கள் குத்தகைக்கு விடப்படும் போது அதில் குறைந்தபட்சம் 51 வீதத்தை நாட்டின் கனிமவள முதலீடுகளுக்குப் பொறுப்பான அரசநிறுவனம் தனக்கு ஒதுக்கிவைத்துக்கொள்வதால் எண்ணை வயல் அனைத்திலும் அரசுதான் கூட:டு ஒப்பந்த அடிப்படையில் நிறுவப்படும் எண்ணை அகழ்வுப் பணியில் அதிக பங்குதாரர் உரிமையை கொண்டிருக்கும். இதனால் இயற்கை வளத்தில் இருந்து கிடைக்கும்  வருமானத்தில் 51 வீதத்தை  நாட்டுக்கே திரும்பி கிடைப்பதை உறுதி செய்வதுமட்டுமின்றி எண்ணை வயலை குத்தகைக்கு எடுத்த கம்பனியின் மீதமுள்ள 49 வீத  வருமானத்திற்கு வருமானவரியும் அறவிடப்படும். இவ்வளவு வரிகள் செலுத்திய பின்னரும் எண்ணைக்கம்பனிகளுக்கு கிடைப்பது  இலாபம்தான்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத அளவுக்கு சொறிலங்கா பொருளாதாரம் இப்படி கற்பனை செய்திகளை நம்பி இருக்கும் அளவுக்கு வங்குரோத்து நிலை ,

மன்னாரில் எண்ணெய் கண்டுபிடிப்பினம் ,விலை மதிக்கமுடியாத இரத்தின கல் தொகுதி எடுப்பினம் கடைசியில்  புஸ்வானமாய் போகும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.