Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அம்பாறையில் தேடுதல் நடவடிக்கையின்போது தொடர் குண்டுவெடிப்பு; போலீசாருடன் துப்பாக்கிச்சண்டை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Breaking News image

அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அம்பாறை பகுதியில் இன்று மாலை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் மருந்து வகைகள், வயர்கள், சுலோகங்களுடனான கொடிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தை அடுத்து, அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48069152?ocid=wstamil.chat-apps.in-app-msg.whatsapp.trial.link1_.auin

சம்மாந்துறையில் பதற்றம்! பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட ஆயுதகுழு

Report us Vethu 54 minutes ago

சம்மாந்துறையில் பொலிஸாருக்கும் குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோக மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. கடும் மோதல் சம்பவத்தினை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்கொலை குண்டுகள் தயாரிக்கும் நிலையம் ஒன்று உள்ளதாக ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய பொலிஸார் குறித்த பகுதிக்கு இன்று மாலை சென்றுள்ளனர்.

அங்கு சென்று சோதனையிட்ட போது, குழுவொன்று பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை அந்தப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீடொன்றில் இருந்து வெடி பொருட்கள் தற்கொலை அங்கிகள் மற்றும் ட்ரோன் கெமராக்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பதுங்கியுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளை கைது செய்யும் நோக்கில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/security/01/213227?ref=breaking-news

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் இருந்து இஸ்லாமிய அரசு, இலங்கைக்கு பாய்ந்து விட்டார்கள். போலுள்ளது.

*****

சற்று முன்னர் காரில் வரும் போது, ரேடியோவில்,  பிரித்தானிய அரசு, இலங்கைக்கு தேவை இல்லாமல் பயணம் செய்ய வேண்டாம் என அறிவித்துள்ளதாக சொன்னார்கள்.

அங்குள்ளவர்களை பத்திரமாக கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கிறார்களாம்.

அதேவேளை பெரிய உல்லாசப்பயண நிறுவனங்கள், மிகவேகமாக cancelation நடப்பதாகவும், அரசின் அறிவித்தல் காரணமாக, கழிக்க முடியாது என்பதால், முழு பணத்தினையும், திருப்பி கொடுப்பதாக சொல்கிறார்கள்.

******

தமிழர்களுக்கு தீர்வு கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்ற மிதப்பில் இருந்த சிங்களவர்களுக்கு தேவையானது தான்.

முன்னர் ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். பிரித்தானிய பேரரசின் வீழ்ச்சி, எங்கோ இருந்து வந்த ஹிட்லருடன் ஆம்பித்தது. அதேபோல், சிங்களத்துக்கு எதோ ஒன்று வரும் என்று.

இனி இலங்கையின் முதன்மை வருமான துறையான உல்லாசப் பயணத்துறை நீண்ட காலத்துக்கு வீழ்ந்தே இருக்கும் போல தெரிகின்றது.
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

இனி இலங்கையின் முதன்மை வருமான துறையான உல்லாசப் பயணத்துறை நீண்ட காலத்துக்கு வீழ்ந்தே இருக்கும் போல தெரிகின்றது.
 

டாலர் 200 த் தாண்டும் போல.

முஸ்லீம் தலைவர்கள் சொன்னது இப்ப தான் தொடங்கியிருக்கு.
அவர்கள் ஒன்றும் சும்மா சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டகலபிஸ்தான் உருவாக்காமல் ஒயமாட்டார்கள் போல் கிடக்கு... 🙂

  • கருத்துக்கள உறவுகள்

சாய்ந்தமருது பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் துப்பாக்கிச்சூடு – Update

Sri-Lanka-2.jpg

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்குரிய குழுவினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் அங்கிகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த போது துப்பாக்கி பிரயோகம் நடத்த நேரிட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

சம்மாந்துறையில் வெடிபொருட்களுடன் 7 பேர் கைது! – (முதலாம் இணைப்பு)

அம்பாறை – சம்மாந்துறையில் வீடொன்றில் இருந்து பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஐ.ஸ். அமைப்பின் கொடியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்பிரிவின், இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் இணைந்து குறித்த வீட்டினை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

குறித்த வீட்டின் ஒரு பகுதி வாடகைக்கு அடையாளம் தெரியாத சிலரால் பெறப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்ற கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 7பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறன்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/898186-2/

பதற்றத்திற்கு மத்தியில் கல்முனை, சம்மாந்துறை பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்

 In இலங்கை      April 26, 2019 3:39 pm GMT      0 Comments     

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-2.jpg

கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பிரதேசத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது

இந்த பொலிஸ் பிரிவுகளில், பொலிஸார் மறுஅறிவித்தல் விடுக்கும் வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும் நிந்தவூர், கல்முனையில் ஜும்மா பள்ளிவாசல்கள் மூடபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

 

http://athavannews.com/கல்முனை-சம்மாந்துறை-பதற/

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு பக்கம் பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்த்திட்டானுகள்  மீண்டும் சில காலங்கள் கழிந்த பின்னர் சந்திக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கு பக்கம் பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்த்திட்டானுகள்  மீண்டும் சில காலங்கள் கழிந்த பின்னர் சந்திக்கலாம் 

பாதுகாப்பாக இருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் ஒருவர் சுடப்பட்டார், ஊரடங்கு உத்தரவுவுடன், வீடுவீடாக தேடுதல்.

முஸ்லீம் பகுதி எங்கும் ராணுவமயம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கு பக்கம் பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்த்திட்டானுகள்  மீண்டும் சில காலங்கள் கழிந்த பின்னர் சந்திக்கலாம் 

பாதுகாப்பு சம்பந்தமான சிக்கல்கள் மிகுந்த விடயங்களிலிருந்து தள்ளி இருங்கள்

1 minute ago, Nathamuni said:

கிழக்கில் ஒருவர் சுடப்பட்டார், ஊரடங்கு உத்தரவுவுடன், வீடுவீடாக தேடுதல்.

மீண்டம் கிழக்கு ரத்தக்களறியை  சந்திக்கப்போகிறதா???

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கு பக்கம் பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்த்திட்டானுகள்  மீண்டும் சில காலங்கள் கழிந்த பின்னர் சந்திக்கலாம் 

ராஜா புது மாப்பிள்ளை தானே இது தான் நல்ல சந்தர்ப்பம் மனைவியோடு சந்தோசமாக இருங்கள்.
விரைவில் எங்களுக்கு நல்ல சேதி சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

பாதுகாப்பு சம்பந்தமான சிக்கல்கள் மிகுந்த விடயங்களிலிருந்து தள்ளி இருங்கள்

மீண்டம் கிழக்கு ரத்தக்களறியை  சந்திக்கப்போகிறதா???

அதே நாடகமேடை. பாதிக்கப்படுபவர்கள் மட்டும் மாற்றம்.

மயில் போட ஆட கிளம்பி, அன்னம் தன்நடையை இழந்த கதை போல, இலங்கை சோனகர்கள், மத்திய கிழக்கின் அரபிகளாக தம்மை மாத்த முணைந்து, அதற்கான விலையை கொடுக்கப்போகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அதே நாடகமேடை. பாதிக்கப்படுபவர்கள் மட்டும் மாற்றம்.

மயில் போட ஆட கிளம்பி, அன்னம் தன்நடையை இழந்த கதை போல, இலங்கை சோனகர்கள், மத்திய கிழக்கின் அரபிகளாக தம்மை மாத்த முணைந்து, அதற்கான விலையை கொடுக்கப்போகின்றனர்.

முடிந்தவரை   எண்ணைய்  ஊற்றுவது தான் தமிழரின் ............???

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப்  பிரச்சினையாக இருந்தாலும்... அதன் மூல காரணத்தை அறிந்து,
அதனை ஆரம்பத்திலேயே.. சுமூகமாக பேசித் தீர்த்தால்... ஓருவருக்கும்  பாதிப்பு இல்லை.
அதனை முற்ற  விட்டு, குளிர் காய வெளிக்கிட்டால்...
இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் அனர்த்தத்தை, யாராலும் தடுக்க முடியாது.

தமிழர்களை... பேய்க்காட்ட  வெளிக்கிட்டு, 
கடைசியில்...  முஸ்லீம்  மூலம்,  சிங்களம்   
"முழி பிதுங்கி"  நிற்கிறது.  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சாய்ந்தமருது மோதலில் தீவிரவாதிகள் உயிரிழப்பு! – இராணுவம் தகவல்

சாய்ந்தமருது துப்பாக்கிக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டின் முடிவில் தீவிரவாதிகள் என அறியப்படும் உயிரிழந்த இருவரது  உடல்களை தாங்கள் அவதானித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பலர் பலியாகியிருக்கலாம் எனவும் பொது மகன் ஒருவரும் உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஆயுதங்களும் தற்கொலை அங்கியும் அப்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது துப்பாக்கி மோதல்: இதுவரை 3 பேர் உயிரிழப்பு? – (நான்காம் இணைப்பு)

கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இதுவரையில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரவிக்கின்றது.

இதேவேளை, சம்மாந்துறையில் பாதுகாப்புத் தரப்பினருக்கும், ஆயுதக் குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோக மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சாய்ந்தமருது களப்புப் பகுதியில் தொடர்ந்தும் துப்பாக்கிச் சண்டை – (மூன்றாம் இணைப்பு)

சாய்ந்தமருது – சவளக்கடை  களப்புப் பகுதியில் தொடர்ந்தும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கும் ஐ.எஸ். தொடர்பான ஆயுதக் குழு என சந்தேகிக்கும் குழுவுக்குமிடையில் இந்த மோதல் இடம்பெற்றுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 

http://athavannews.com/898186-2/

 

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ செய்திகள் www.hirunews.lk

 

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.எஸ் பயங்காரவாதிகளின் ஆடைகளும் ஆயுதங்களும் மீட்பு
 
Gavitha / 2019 ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமை, பி.ப. 07:53Comments - 0Views - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்குச் சொந்தமான சில பொருள்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேரக தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆடைத் தொகுதியொன்றும் ஐ.எஸ் என்று எழுதப்பட்ட அவர்களுடைய கொடியொன்றும் மீட்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, 150 ஜெலெட்க்னைட் குச்சிகளும் 100,000 இரும்பு குண்டுகளும் ஒரு ட்ரோன் கமொராவும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

  •  

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஐ-எஸ்-பயங்காரவாதிகளின்-ஆடைகளும்-ஆயுதங்களும்-மீட்பு/150-232456

கல்முனை - சவலக்கடை, சம்மாந்துறையில் ஊரடங்கு

Editorial / 2019 ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமை, பி.ப. 09:26 Comments - 0
கல்முனை - சவலக்கடை, சம்மாந்துறையில் ஊரடங்கு

கல்முனை – சவலக்கடை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களுக்கு, மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில், பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாகக் கூறப்படும் வீடொன்றை, இராணுவத்தினர், பொலிஸ் அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது, பயங்கரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. 

அதனையடுத்து, அங்கு மூன்று பாரிய வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அங்கு, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது. 

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கல்முனை-சவலக்கடை-சம்மாந்துறையில்-ஊரடங்கு/175-232459

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கு பக்கம் பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்த்திட்டானுகள்  மீண்டும் சில காலங்கள் கழிந்த பின்னர் சந்திக்கலாம் 

பாதுகாப்பாக இருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

படையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கல்முனை – 5 பேர் உயிரிழந்ததாக தகவல்

Kalmunai-Situation.jpg

அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசம் முற்றுமுழுதாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை 7.30 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் உள்ள வொலிவேரியன் என்னும் சுனாமி வீட்டுத்திட்ட பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த படையினர் மீது குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது, பதிலுக்கு தாக்கிய நிலையில் இரவு 10.30மணி வரையில் குறித்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றுள்ளன.

அதனைத்தொடர்ந்து குறித்த பகுதி முழுமையாக பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் விசேட தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்த தாக்குதல்கள் காரணமாக ஐந்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டு பெண்களும் அடங்குவதாக அங்கிருந்துவரும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளுக்குள் ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலமை நிலவிவருகின்றது.

இதேவேளை, இன்று சம்மாந்துறையில் வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பெருமளவான வெடிபொருட்களும் தீவிரவாதிகளின் பெனர்கள், உடைகளும் மீட்கப்பட்டிருந்தன.

கல்முனை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/படையினரின்-முழு-கட்டுப்ப/

 

  • கருத்துக்கள உறவுகள்

சாய்ந்தமருது மோதலில் குறைந்தது 15 பேர் பலியாகியிருப்பதாக ராணுவம் அறிவித்துள்ளது என்று பி பி சி கூறுகிறது. ராணுவம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, அவர்கள் மீது குண்டுத்தாக்குதலு துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டதாம். ராணுவம் திருப்பித் தாக்கியதில் பலர் கொல்லப்படூள்ளதாகவும் கூறப்படுகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.