Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு நேரடி ரிப்போர்ட் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://www.jaffnamuslim.com/2019/04/exclusive.html

காட்டிக்கொடுத்தவனுகளேஇந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்ஒரு நேரடி ரிப்போர்ட் !

April 27, 2019

காட்டிக்கொடுத்தவனுகளே இந்தா காச சப்புங்கடா…” தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் ஒரு நேரடி ரிப்போர்ட் !

எமது விசேட செய்தியாளர் சாய்ந்தமருதில் இருந்து

அடேய் காட்டிக் கொடுத்தவனுகளா இந்தா இந்த காச எடுத்து சப்புங்கடா உங்களுக்காகத்தான்டா உயிரைக் கொடுக்கப் போறோம் மூதேசிகளா.

இப்படிக் கத்தியபடி சாய்ந்தமருது ,வெலிவேரியன் கிராமத்தில் வாடகைக்கு இருந்த வீட்டின் பக்கத்துக்கு வீடுகளுக்கு பண நோட்டுக்களை அள்ளி வீசியிருக்கின்றனர் தற்கொலைதாரிகள்

கடந்த 18 ஆம் திகதி இந்த வீட்டை வாடகைக்கு பெற்ற இருவர் அந்த வீட்டில் தங்காமல் போய்விட்டு இரண்டு நாட்கள் சென்ற பின்னர் 8 பேருடன் வந்துள்ளனர்.சிறு பிள்ளைகள் நால்வர் ,2 பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் வந்து தங்கியிருந்த போது அவர்களில் சந்தேகம் கொண்ட வீட்டின் உரிமையாளர் அவர்களிடம் விபரம் கேட்கச் சென்றதாக தகவல்.அப்போது ஒருவர் ஆயுதம் ஒன்றைக் காட்டி ஒருவரும் வாய்திறக்கக் கூடாதென எச்சரித்துள்ளார்.

என்றாலும் இந்த தகவல் சற்று வெளியில் கசிந்ததையடுத்து அங்குள்ள ஒருவர் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் முறையிட்டுள்ளார். மக்களுடன் மிக நட்புடன் பழகும் இந்த உத்தியோகத்தர் இன்னும் இரு உத்தியோகத்தர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றபோது துப்பாக்கிதாரிகள் சுட ஆரம்பித்தனர் .இதையடுத்து நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்த அந்த உத்தியோகத்தர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.

மக்கள் பதற்றத்தில் அங்குமிங்கும் செல்ல ஆரம்பித்த நிலையில் இனி நிலைமை விபரீதமாகப் போகிறது என்பதை உணர்ந்த துப்பாக்கிதாரிகள் பெரிய உரப்பையை வெளியில் எடுத்துவந்து அதில் இருந்த பணத்தை கட்டுக் கட்டாக வீசி கேவலமான வார்த்தைகளை கூறி திட்டியுள்ளனர். காட்டிக் கொடுத்த நாசமறுத்தவனுகளே மூதேசிகளா .. இந்த பணத்தை எடுத்து சப்பிக் கொண்டிருங்கடா உங்களுக்காகத்தான்டா உயிரைக் கொடுக்கிறோம்…” என்று கூறியபடி பணக்கட்டுகளை இவர்கள் வீசியபோதும் மக்கள் எவரும் அதனை கிஞ்சித்தும் கணக்கெடுக்காமல் தமது பாதுகாப்பை தேட ஆரம்பித்தனர்.

பின்னர் படையினர் வந்ததையடுத்து நிலைமை மோசமானது.சரணடையுமாறு அவர்களை பணித்தபோதும் அதனை செவிமடுக்காத தற்கொலைதாரிகள் குண்டை வெடிக்க வைத்துள்ளனர். புத்தம் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட வேன் ஒன்றும் அங்கு இருந்துள்ளது.

முக்கிய தாக்குதல் ஒன்றை நடத்த இவர்கள் திட்டமிட்டு வந்திருக்கலாமென சொல்லப்படுகிறது. காத்தான்குடியை சேர்ந்தவர்கள் இவர்களென பொலிஸார் கூறுகின்றனர்.

வவுணதீவு துப்பாக்கி !

இதேவேளை வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதலையும் இந்தக் குழுவே செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் வாகன சாரதி காத்தான்குடி -3, மீன் சந்தை வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய முகமது சரீப் ஆதம் லெப்பை கபூர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

கபூரிடமிருந்து கைத் துப்பாக்கி மற்றும் லப்டொப் ஆகியன மீட்கப்பட்டுள்ளன .பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் திடுக்கிடும் பல இரகசிங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தான் ஸஹரானின் வாகன சாரதியாக 35 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலை செய்ததாகவும், கடந்த நவம்பர் மாதம் 19 திகதி வவுணதீவு பொலிஸ் சோதனை சாவடியில் இருந்த பொலிஸாரை கத்தியால் தானே குத்தி கொலை செய்ததாகவும் நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் தொடர்பான திட்டங்களை வகுக்கும்போது தான் உடனிருந்ததாகவும், கல்முனை சாய்ந்தமருதில் அடுத்த தற்கொலை தாக்குதல் தொடர்பாக திட்டமிட்டபோது அங்கும் தான் இருந்ததாகவும் பொலிஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

.எஸ் காணொளி ஒளிப்பதிவு !

தாக்குதலுக்கு முன்னர் தக்பீர் கூறிய காணொளியை இந்த சந்தேகநபர்கள் சம்மாந்துறை ,சம்புமடு சென்னல் கிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து ஒளிப்பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த விடியோவை எடுத்தவர்கள் ,எடிட் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியவர்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன.மூன்று கிழமைகளுக்கு முன்னரே இந்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. பாதணி செய்யும் கைத்தொழில் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக கூறியே இந்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டாலும் அதன் உரிமையாளர் சந்தேகம் கொண்டு இதனை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

(இந்த செய்தியை சம்பவ இடத்தில் இருக்கும் தமிழன் செய்திச் சேவையின் செய்தியாளர் நேரடியாக பார்த்தும் மக்களிடம் பேசியும் கேட்டும் எழுதியிருந்தார்.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தகவல்களை கூறிய பொதுமக்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை )

அம்பாறை சாய்ந்தமருதில் உயிரிழந்த வாடகை வீட்டினர் பற்றிய தகவல் தெரிந்தது எப்படி?

_106617897_sainthamaruthu-01.jpg

இலங்கையின் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று, வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

பலியானோரில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவர்.

சாய்ந்தமருதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 'பொலிவேரியன்' வீட்டுத் திட்டத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றை வாடகைக்குப் பெற்று, அதில் வெளி ஊரைச் சேர்ந்த சிலர் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள், இவர்கள் குறித்து அங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகத்தினரும், பொதுமக்கள் சிலரும் இணைந்து, குறித்த வீட்டில் இருந்தவர்களிடம் பேசியுள்ளனர். ஆனாலும், அவர்கள் முரண்பாடான வகையில் நடந்து கொண்டதன் காரணமாக, அந்தப் பகுதி கிராம சேவகருக்கு, குறித்த வீட்டில் தங்கியிருந்தோர் பற்றி தாங்கள் அறிவித்ததாக, அங்குள்ள றிஸ்வான் எனும் இளைஞர் பிபிசி தமிழிடம் கூறினார்.

இதன் பின்னர், அங்கு வந்த கிராம சேவகரை குறித்த வீட்டில் இருந்தோர் மிரட்டியதாகவும், இதனையடுத்து, அவர்கள் பற்றி போலீஸாருக்கு தாங்கள் அறிவித்ததாகவும் றிஸ்வான் தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த இடத்துக்கு போலீஸார் மற்றும் படையினர் வந்தபோது, அந்த வீட்டில் இருந்தவர்கள் குண்டை வெடிக்கச் செய்துள்ளனர்.

மேலும், படையினர் மீது அவர்களில் சிலர் துப்பாக்கித் சூடு நடத்தியதாகவும், பதிலுக்கு படையினரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது.

"இரவு 7.00 மணியளவில் முதல் குண்டுச் சத்தம் கேட்டது. அதன் பின்னர் சற்று நேர இடைவெளியில் இரண்டாவது குண்டும், சிறிது நேரத்தில் மூன்றாவது குண்டும் வெடிக்கும் சத்தம் கேட்டது" என்று சாய்ந்தமருதைச் சேர்ந்த ஊடகவியலாளர் யூ.கே. கால்தீன் பிபிசி தமிழிடம் கூறினார்.

_106617899_sainthamaruthu-10.jpg

வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8.00 மணி தொடங்கி இரவு 11.00 மணி வரையில், துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்ததாகவும் கால்தீன் தெரிவித்தார்.

சம்பவத்தில் மேற்படி வாடகை வீட்டில் தங்கிருந்த 15 பேர் இறந்துள்ளதோடு, அந்தப் பகுதியில் வசிக்கும் பாத்திமா அஸ்ரிபா எனும் 21 வயதுடைய பெண் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் தற்செயலாகச் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு, தமக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியில் தனது கணவருடன் வீட்டுக் திரும்பிக் கொண்டிருந்த போதே, துப்பாக்கிச் சூட்டுக்கு மேற்படி பெண் இலக்காகி உயிரிழந்துள்ளதாக, அவரின் உறவினர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த பெண்ணின் கணவர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாய்ந்தமருது - பொலிவேரியன் பகுதியிலுள்ள வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தவர்கள் என நம்பப்படும் 15 பேரில், இருவரின் உடல்கள் வீட்டுக்கு வெளியிலும் ஏனைய உடல்கள் வீட்டுக்கு உள்ளேயும் காணப்பட்டன.

வீட்டின் உள்ளே காணப்பட்ட சில உடல்கள் முற்றாக எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டினுள் இறந்து கிடந்தவர்களில் பெண் ஒருவரினதும், இரண்டு சிறுவர்களினதும் உடல்களை அடையாளம் காணக் கூடியதாக இருந்தது.

இந்த சம்பவத்தில் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வேன் ஒன்று, அவர்கள் தங்கியிருந்த வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சேதமடைந்து காணப்பட்டது.

_106617901_sainthamaruthu-09.jpg

குறித்த வீட்டின் வெளியில் சில சந்தேகத்துக்குரிய ஆடைகளின் பாகங்களையும் காணக்கூடியதாக இருந்தது.

இலங்கையில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர்கள் எனத் தெரிவித்து ஐ.எஸ். அமைப்பினர் வெளியிட்டதாகக் கூறப்படும் காணொளியில் காணப்படுவோர் அணிந்திருக்கும், ஆடைகளுக்கு ஒப்பானவையாக, சம்பவ இடத்தில் காணப்படும் ஆடைகளின் பாகங்கள் உள்ளன.

இந்த நிலையில், பொலிவேரியன் வீட்டுத்திட்டத்தில் போலீஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு, அங்கு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

சம்பவ இடத்துக்கு நீதவான் இன்று, சனிக்கிழமை, காலை வருகை தந்து, பிரேதங்களைப் பார்வையிட்டார்.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் வசிக்கும் அனைத்து பொதுமக்களையும் அருகிலுள்ள பாடசாலை வளாகத்துக்குள் அழைத்து, அவர்கள் பற்றிய பதிவுகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சந்தேகத்தின் பேரில் அங்குள்ள சிலரை படையினர் கைது செய்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48077568

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை சாய்ந்தமருதில் உயிரிழந்த வாடகை வீட்டினர் பற்றிய தகவல் தெரிந்தது எப்படி?

யூ. எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக, அம்பாறையிலிருந்து
 
இலங்கையின் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று, வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

பலியானோரில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவர்.

சாய்ந்தமருதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 'பொலிவேரியன்' வீட்டுத் திட்டத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றை வாடகைக்குப் பெற்று, அதில் வெளி ஊரைச் சேர்ந்த சிலர் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள், இவர்கள் குறித்து அங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

சாய்ந்தமருது - பொலிவேரியன் பகுதியிலுள்ள வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தவர்கள் என நம்பப்படும் 15 பேரில், இருவரின் உடல்கள் வீட்டுக்கு வெளியிலும் ஏனைய உடல்கள் வீட்டுக்கு உள்ளேயும் காணப்பட்டன.

வீட்டின் உள்ளே காணப்பட்ட சில உடல்கள் முற்றாக எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டினுள் இறந்து கிடந்தவர்களில் பெண் ஒருவரினதும், இரண்டு சிறுவர்களினதும் உடல்களை அடையாளம் காணக் கூடியதாக இருந்தது.

இந்த சம்பவத்தில் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வேன் ஒன்று, அவர்கள் தங்கியிருந்த வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சேதமடைந்து காணப்பட்டது.

Sri Lanka bombings

குறித்த வீட்டின் வெளியில் சில சந்தேகத்துக்குரிய ஆடைகளின் பாகங்களையும் காணக்கூடியதாக இருந்தது.

இலங்கையில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர்கள் எனத் தெரிவித்து ஐ.எஸ். அமைப்பினர் வெளியிட்டதாகக் கூறப்படும் காணொளியில் காணப்படுவோர் அணிந்திருக்கும், ஆடைகளுக்கு ஒப்பானவையாக, சம்பவ இடத்தில் காணப்படும் ஆடைகளின் பாகங்கள் உள்ளன.

இந்த நிலையில், பொலிவேரியன் வீட்டுத்திட்டத்தில் போலீஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு, அங்கு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்துக்கு நீதவான் இன்று, சனிக்கிழமை, காலை வருகை தந்து, பிரேதங்களைப் பார்வையிட்டார்.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் வசிக்கும் அனைத்து பொதுமக்களையும் அருகிலுள்ள பாடசாலை வளாகத்துக்குள் அழைத்து, அவர்கள் பற்றிய பதிவுகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சந்தேகத்தின் பேரில் அங்குள்ள சிலரை படையினர் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட தேவாலயங்களில் ஒன்றான கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

புனித அந்தோணியார் தேவாலயம் மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகளின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

புனித அந்தோணியார் தேவாலயத்தின் கட்டடம் மற்றும் அதனை சுற்றிலுள்ள வீதி ஆகியன தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன.

போலீசார் மற்றும் முப்படைகளின் முழுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இந்த புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தாக்குதல் நடத்தப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப் பகுதி வரை குறித்த பகுதி அதிவுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு, அந்த இடத்திற்குள் செல்ல அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புனரமைப்பு பணிகளின் ஈடுபட்டுள்ள ஊழியர்களும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எதிர்வரும் சில தினங்களில் இந்த புனரமைப்பு பணிகள் நிறைவடையும் என பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

அதன்பின்னர், அந்த பகுதிக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் அறநெறி பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை நடத்தப்படாது என இந்து விவகார அமைச்சர் மனோ கணேஷன் இன்று தெரிவித்தார்.

நாட்டில் நிலைமை வழமைக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அறநெறி பாடசாலைகளை நடாத்துமாறு அதற்கு பொறுப்பானவர்களிடம் அமைச்சர் மனோ கணேஷன் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48077568

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஏன் மீசை வைப்பதில்லை  ?

  • கருத்துக்கள உறவுகள்

கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அப்பாவிகளைக் கொல்வதற்காகச் சபதம் செய்கிறான். 

இவர்கள் முற்றாக அழிக்கப்படுவதைத்தவிர வேறு வழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அப்பாவிகளைக் கொல்வதற்காகச் சபதம் செய்கிறான். 

இவர்கள் முற்றாக அழிக்கப்படுவதைத்தவிர வேறு வழியில்லை.

பிரச்சனை ,ஆயுதம் இல்லாமல் உள்வாங்கப்பட்டோர் எதிர்காலத்தில் என்ன செய்வார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரஞ்சித் said:

கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அப்பாவிகளைக் கொல்வதற்காகச் சபதம் செய்கிறான். 

இவர்கள் முற்றாக அழிக்கப்படுவதைத்தவிர வேறு வழியில்லை.

ஒன்றுமே புரியாமல், கொலை செய்யப்போகும் தந்தை மடியில் பாசத்துடன் இருக்கும் மகனை பார்த்தால் பதறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சாமானியன் said:

இவர்கள் ஏன் மீசை வைப்பதில்லை  ?

முன்தோல் நீக்கம், அக்குள், பிறப்புறுப்பு உரோமச் சவரம். நகம் வெட்டல் ஆகிய நாலும் ஐந்தாவதாக மீசைக் குறைப்பு என்ப அவர்களுக்கு விதிக்கப்பட்ட 5 ஒழுக்கங்கள்.

முற்றாக வழிப்பதா இல்லை டிரிம் மட்டுமா என்பதில் அவர்களுக்குளேயே முரண்பாடிருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

முன்தோல் நீக்கம், அக்குள், பிறப்புறுப்பு உரோமச் சவரம். நகம் வெட்டல் ஆகிய நாலும் ஐந்தாவதாக மீசைக் குறைப்பு என்ப அவர்களுக்கு விதிக்கப்பட்ட 5 ஒழுக்கங்கள்.

முற்றாக வழிப்பதா இல்லை டிரிம் மட்டுமா என்பதில் அவர்களுக்குளேயே முரண்பாடிருக்கிறது.

இது உண்மையில் எனக்கு புதிய தகவல் Gosha-Che.
அது சரி தாடி வைக்க வேண்டும்  மீசை ஆகாது என்பதில் எங்கோ உதைக்கின்றது.

முத்தமிடுதலை நல்லவிதமாகக் கொண்டுபோகும் நோக்கில் மீசையில் கை வைத்திருப்பார்களோ  

  • கருத்துக்கள உறவுகள்

முரண்பாடுகளின் மூட்டைதானே மதம். அதில் இதொன்று.

இவர்களாவது முத்தத்துக்கு முன்னுரிமை கொடுபதாவது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ருவிற்றர் வீடியோவ கவனிச்சனிங்களா? தலைமுடி ஒட்ட வெட்டிய நபர் மதம் மாறிய தமிழர் போல!
மற்றவருக்கு கைவிரல்கள் இல்லை, நடுவில் இருப்பவருக்கு 50 வயதிற்கு மேலிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஏராளன் said:

மற்றவருக்கு கைவிரல்கள் இல்லை, 

ஒரு கண்ணும் கொஞ்சம் சேதம். சிரியாவில் சண்டை பிடித்தவனாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது நியாயமேயில்லை  .

வார இறுதி சூப்பர்மார்கெட் விசிட் என்பது எனக்கு எப்போதும் பரபரப்பும் விருப்பமும் நிறைந்ததொன்று.  விச்ராந்தியாக விரும்பின கடைக்குள்ள ஏறி புதிதாக என்ன வைத்திருக்கிறார்கள்,  குறிப்பிட்ட பொருள் மற்றய கடையில் மலிவாக போட்டிருக்கிறார்களே என்னையா ஏமாற்.ற முடியும் என்ற சுய முதுகு தட்டுதல்  என்று கல கலகலப்பாக போகும்.  

இன்றைக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவம்     

பிரதான வாசலால் உள் நுழைந்ததும் முழிவியளாமே    சரியில்லை.

தாடி வைத்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் இன்னொரு இளைஞனிடம் விளங்காத ஒரு மொழியில் சுட்டு விரலை பல திசைகளிலும் ஆட்டி மிகவும் ஆக்ரோஷமாக எதோ சொல்லிக் கொண்டிருந்தான்,

 எனக்கு இந்த வீடியோ ஞாபகம் வந்து விட்டது ,

தேங்காய்ப்பூ துருவல், பால் , மாஸ்கிங் டேப் என்ற இந்த மூன்றையும் வாங்கி விட்டு உடனேயும் இடத்தைக் காலி பண்ணி விட வேண்டும் என மனம்  சொல்லிற்று     இதுவரை  அனுபவித்திருந்திராத உணர்வு -  பயம்”.

அவுஸ்திரேலியாவிலிருந்து திரும்பும் போது தான் radicalised    பண்ணுப்பட்டுத் திரும்பினார் ( ன் ) என செய்திகள் வேறு.

உடனேயும் வேறு வழியால் போய் பொருட்கள் மூன்றையும் வாங்கி விட்டு திரும்பும் போது திறந்த சிற்றுண்டிச்ச்சாலை ஊடாக வர வேண்டியியிருந்தது. அவ்வளவு கூட்டம் இல்லை .உண்மையில் அந்த வரியில் ஒரு ஆள் மட்டும் தான் கடந்து போகும் போது கண்ணை உயர்த்தி சற்றுப் பார்த்தேன். திடுக்கிட்டு பொறி கலங்கி போனேன் .

உடம்பை மூடிய உடையுடன் தலைக்கு மொட்டாக்கும் போட்டு - முகம் மட்டும் தெரியுது - பெண்ணொருத்தி ( என்று தான் நினைக்கிறேன் ) - பக்கத்தில் baby பாஸ்கெட் இனுள் ஒரு சிறு குழந்தை - மொபைல் போன் இல் மிகவும் சீரியஸாக ஆனால் சத்தம் இல்லாமல் கதைத்துக் கொண்டிருந்தாள். குழந்தை என்னைப் பார்த்து சிரித்தது.  எனக்கு வீடியோ இல் அவனது மடியில் இருந்த சிறுவன் எனக்கு கை காட்டுவது போல ஒரு பிரமை.       

பயத்தில  எனக்கு மயக்கம் வராத குறை.  எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுஎன்ர   வார இறுதியே நாசமாக்கிப் போச்சுது என்று உடனேயேயும் இடத்தைக் காலி பண்ணி வீடு வந்து சேர்ந்தேன்.  

மனைவிக்கு ஒரே அதிசயம்.  எப்படியும் ஒன்று  அல்லது ஒன்றரை மணித்தியாலயம் எண்டாலும் மார்கெட்டுக்குள்ள வாய் பார்க்கிற மனுஷன் இண்டைக்கு  இருபது நிமிஷத்துக்குள்ளயே திரும்பி அறைக்குக்குள்ள போய் சாத்திப் போட்டு இருக்குது,  சண்டை கூட ஒண்டும் பிடிக்கேல்லை  என்ன பிரச்சனை என்று திரும்ப திரும்ப கேட்ட படி  .

என்னத்தையெண்டு சொல்லுறது !!

அல்லா, ஆட்கொண்டருளினார்.

கிளம்பப்போறன் சிரியாவுக்கு என்று சொல்லிவிடுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

இது நியாயமேயில்லை  .

வார இறுதி சூப்பர்மார்கெட் விசிட் என்பது எனக்கு எப்போதும் பரபரப்பும் விருப்பமும் நிறைந்ததொன்று.  விச்ராந்தியாக விரும்பின கடைக்குள்ள ஏறி புதிதாக என்ன வைத்திருக்கிறார்கள்,  குறிப்பிட்ட பொருள் மற்றய கடையில் மலிவாக போட்டிருக்கிறார்களே என்னையா ஏமாற்.ற முடியும் என்ற சுய முதுகு தட்டுதல்  என்று கல கலகலப்பாக போகும்.  

பயத்தில  எனக்கு மயக்கம் வராத குறை.  எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுஎன்ர   வார இறுதியே நாசமாக்கிப் போச்சுது என்று உடனேயேயும் இடத்தைக் காலி பண்ணி வீடு வந்து சேர்ந்தேன்.  

மனைவிக்கு ஒரே அதிசயம்.  எப்படியும் ஒன்று  அல்லது ஒன்றரை மணித்தியாலயம் எண்டாலும் மார்கெட்டுக்குள்ள வாய் பார்க்கிற மனுஷன் இண்டைக்கு  இருபது நிமிஷத்துக்குள்ளயே திரும்பி அறைக்குக்குள்ள போய் சாத்திப் போட்டு இருக்குது,  சண்டை கூட ஒண்டும் பிடிக்கேல்லை  என்ன பிரச்சனை என்று திரும்ப திரும்ப கேட்ட படி  .

என்னத்தையெண்டு சொல்லுறது !!

இதைத்தான் பயங்கரவாதம் என்று சொல்லுவது. எப்பிடி வேலை செய்யுது பாருங்கள்.

இனி ஒருமுறை உங்களை சிங்களவராகவும் கொழும்பில் மத்திய வங்கி பக்கத்தால் வேலைக்கு போபவர் என்றும் நினைத்து கொள்ளுங்கள்.

தப்பிவிட்டீர்கள் மத்திய வங்கி வெடித்த போது. அடுத்த தேர்தலில் கோத்தபாயவுக்கா ரனிலுக்கா உங்கள் வாக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Jude said:

ஜூட், இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராகப் படவில்லை? 1995 இல் நீங்கள்கூடத் தீவிர புலி அனுதாபிதானே? அப்போது இருந்த உங்களின் மனோநிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 

எல்லோரும் சிங்களவராக இருந்து பாருங்கள், முஸ்லீமாக இருந்துபாருங்கள் என்று மற்றவர்களைக் கேட்கிறோம், ஆனால் நாம் தமிழராக இருந்துபார்க்க நினைப்பதில்லை. 

ஒரு சில பொழுதுகளுக்காகவாவது தமிழர்களாக இருந்துபார்ப்போம். எனக்காக நாமே அனுதாபப்படவில்லையென்றால், எவருமே அனுதாபப்படப்போவதில்லை.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிக்கு மட்டுமே நாங்க எதிரி ..

மற்றும்படி 

தமிழன் அப்படி ஒன்றும்...

கூட இருந்தே குழி ப்றிக்கும் நம்பிக்கை துரோகம் செய்பனல்ல என்று....

இன்று உணர்ந்திருக்கும் சிங்களவர்களுக்கு நன்றிகள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Jude said:

இதைத்தான் பயங்கரவாதம் என்று சொல்லுவது. எப்பிடி வேலை செய்யுது பாருங்கள்.

இனி ஒருமுறை உங்களை சிங்களவராகவும் கொழும்பில் மத்திய வங்கி பக்கத்தால் வேலைக்கு போபவர் என்றும் நினைத்து கொள்ளுங்கள்.

தப்பிவிட்டீர்கள் மத்திய வங்கி வெடித்த போது. அடுத்த தேர்தலில் கோத்தபாயவுக்கா ரனிலுக்கா உங்கள் வாக்கு?

புலிகளின் தாக்குதலுக்கும் தௌஹீத் ஜமாஅத்  தாக்குதலுக்கும் அடிப்படை வித்தியாசங்கள் இருக்கின்றன என மகிந்த மாமா சொல்லியிருப்பதாக ஞாபகம்.  எனவே எனது வோட்டு மகிந்தவுக்கே.  கொத்தானுக்கோ அல்லது சமணல காரனுக்கோ அல்ல  .

அவருக்கு பயங்கரவாதம் என்றால் என்ன என்று தெளிவு ஏற்பட்டிருக்கிறது போலும்.   நீங்களும் அவரிடம் தெரிந்து கொள்ளலாம், தெளிவைப் பகிர்ந்து கொள்ளலாம்.   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

ஜூட், இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராகப் படவில்லை? 1995 இல் நீங்கள்கூடத் தீவிர புலி அனுதாபிதானே? அப்போது இருந்த உங்களின் மனோநிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 

எல்லோரும் சிங்களவராக இருந்து பாருங்கள், முஸ்லீமாக இருந்துபாருங்கள் என்று மற்றவர்களைக் கேட்கிறோம், ஆனால் நாம் தமிழராக இருந்துபார்க்க நினைப்பதில்லை. 

ஒரு சில பொழுதுகளுக்காகவாவது தமிழர்களாக இருந்துபார்ப்போம். எனக்காக நாமே அனுதாபப்படவில்லையென்றால், எவருமே அனுதாபப்படப்போவதில்லை.

அவரை அல்லா, ஆட்கொண்டருளியுள்ளார். ஆளை அவர் பாட்டில விடுங்கோ.

ஏன் மத்திய வங்கி, போன ஞாயிரு, சேர்ச் எண்டு வைப்பமே....

ஒவ்வொரு ஏழை முஸ்லீமும், பிழைப்பை நடாத்த வெளியே போக முடியாமல் தவிக்கிறான்.

நாம் அனுபவித்ததால், அவர்கள் அவலம் புரிகிறது.

முன்னரே சொன்னேன், முஸ்லீம் மக்களது பொருளாதார பலம் சிதைக்கப்படும் அல்லது பறிக்கப்படும் என. 

இரண்டு மகன்கள், மருமகள் ஜிகாதிகளாக இறக்க, கைதான பணக்கார வியாபாரியின் வங்கி லாக்கரில் இருந்து எடுத்த, வைரம், கோடிக்கணக்காண பணம், குண்டு வெடித்த அவரது வீட்டில் இருந்து எடுத்திருப்பதாக இன்று சொல்லியுள்ளனர்.

பெரும் பணக்கார இஸ்லாமியர்களிடம் பணம் கப்பமாக பிடுங்கப்படும், கொடுக்கமறுத்தால், இஸ்லாமிய தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு உள்ளே போடப்படுவர்.

சிங்களவர்கள் இதில் திறமையானவர்கள். இந்த ஆபத்தான  சுயநல காரணத்தால் தான் பாதுகாப்பு துறையினர், எச்சரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை போலுள்ளது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி வீதிகளில் பேரீச்ச  மரங்களை வைத்த போது என்னைப்போல் சிலர் இங்கே கண்டித்த ஞாபகம் உள்ளது. அந்த மரங்கள் இன்று நன்கு வளர்ந்துவிட்டன, இன்ஷா அல்லா!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குண்டுவெடிப்பு: தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜஹ்ரான் ஹசிமின் தந்தை, சகோதரர்கள் சுட்டுக்கொலை

ராய்டர்ஸ்கொழும்பு
lankjpg
கல்முனையில் உள்ள வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களை பார்வையிட்ட ராணுவ அதிகாரிக் : ஏபி 

கல்முனையில் உள்ள வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களை பார்வையிட்ட ராணுவ அதிகாரிக் : ஏபி 

இலங்கையில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட ஜஹ்ரான் ஹசமின் தந்தை, இரு சகோரதரர்கள் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்.

கொழும்பு நகரில் இருந்து 360 கி.மீ தொலைவில் உள்ள கல்முனை எனும் நகரில் ஒரு வீட்டில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று சோதனையிட முயன்றபோது போலீஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 3 ஐஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அந்த வீட்டில் இருந்தவர்களில் 6 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 15 பேர் வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து உயிரிழந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த 15 பேரில் 3 பேர்  ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தன்னுடைய அமாக் இணையதளத்தில் இன்று வெளியிட்டிருந்தது.

இதற்கிடையே  சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரில் ஒருவர் தந்தை, அவரின் இரு மகன்கள் என்று போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் இலங்கையில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

njtjpg

முகத்தை மூடாமல் நிற்கும் ஜஹ்ரான் ஹசிம் 

சுட்டுக்கொல்லப்பட்ட மூன்றுபேரில் ஒருவரின் பெயர் முகமது ஹசிம், இவரின் இரு மகன்கள் ஜைனி ஹசிம், ரில்வான் ஹசிம் ஆகியோர் என்பது தெரிந்தது. இவர்கள் சமீபத்தில் யூடியூப்பில் வெளியிட்ட வீடியோவில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிராக நாம் போர் தொடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தனர்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹசிம்மின் மைத்துனர் நியாஸ் ஷெரீப்தான் கூறுகையில், " போலீஸார் சுட்டுக்கொன்ற 3 பேரில் ஒருவர் ஹசிமின் தந்தை முகமது ஹசிம், அவரின் மகன்களும், ஜஹ்ரான ஹசிம்மின் சகோதரர்களான ஜைனி ஹசிம், ரில்வான் ஹசிம் ஆகியோர்தான்" எனத் தெரிவித்தார்.

கல்முனை வீட்டில் வெடிகுண்டு வெடித்து இறந்த 15 பேரில் 3 பேர் ஹசிமின் தந்தையும், சகோதர்கள். இவர்கள் மூன்றும் யூடிப்பில் அடிக்கடி இஸ்லாம் குறித்து  ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டபின், நாடுமுழுவதும் முக்கிய இடங்களில் 10 ஆயிரம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேசிய தவ்ஹித் ஜமாத், மற்றொரு அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களோடு தொடர்புடையவர்களை பிடிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சோதனையிட்டு வருகின்றனர்.

https://tamil.thehindu.com/world/article26971812.ece

  • கருத்துக்கள உறவுகள்

“என்ட வாப்பா.. என்ட வாப்பா”: சாவின் விழிம்பு வரை சென்று மீண்ட தீவிரவாதியின் குழந்தை

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் தீவிரவாத குழுவுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், 6 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 6 சிறுவர்கள் என 15 பேர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவரும் குழந்தை ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருந்த வீட்டை இராணுவத்தினர் தாக்கப்போவது தெரிந்ததும் தீரவிரவாதிகள் மூவரும் காணொளி மூலம் தாங்கள் பேசுவதை பதிவுசெய்தனர். இதன்போது இவர்களின் மடியில் ஒரு குழந்தை அழுத்துகொண்டிருந்தது. இராணுவத்தினர் இந்த வீட்டை தாக்கியபோது அவர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டதுடன் பின்னர் குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். இதன்போது 15 பேர் பலியாகினர். இவ்வாறு
உடல் சிதறி பலியான 15 பேருடன் உயிருடன் ஒரு குழந்தை அழுதுகொண்டு இருந்துள்ளது. இந்த குழந்தையை இராணுவத்தினர் பாதுகாப்பாக ஏந்திக்கொண்டு வந்து முதலுதவிகளை செய்தனர்.

இதன்போது “என்ட வாப்பா.. என்ட வாப்பா..” என அந்த குழந்தை அழுததை காணக்கூடியதாக இருந்தது.

http://www.samakalam.com/செய்திகள்/என்ட-வாப்பா-என்ட-வாப்பா/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

உடல் சிதறி பலியான 15 பேருடன் உயிருடன் ஒரு குழந்தை அழுதுகொண்டு இருந்துள்ளது. இந்த குழந்தையை இராணுவத்தினர் பாதுகாப்பாக ஏந்திக்கொண்டு வந்து முதலுதவிகளை செய்தனர்.

பாலச்சந்திரன் நினைவில் வருவதனை தவிர்க்க முடியவில்லை.

ஏன் கருணா consultant இன் சேவையை இவங்கள் இந்த முறை பெற்றுக் கொள்ளவில்லையாமா ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

.

ஜூட், இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராகப் படவில்லை? 1995 இல் நீங்கள்கூடத் தீவிர புலி அனுதாபிதானே? அப்போது இருந்த உங்களின் மனோநிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 

1995 இல் நடந்த மத்திய வங்கி தாக்குதலுக்கு விடுதலை புலிகள் உரிமை கோரவில்லை. அப்போதும் அந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து இருந்தேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.