Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
May 21, 2019

gnanasara-thero-found-guilty-sandya-ekna

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஞானசார தேரரை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைளை, சட்ட மா அதிபர் திணைக்களம் முன்னெடுத்து வருவதாகவும், அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பிலேயே ஞானசரர் தேரர் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதால், அவரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வது, நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையுமென, ஞானசாரரால் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தப்பட்ட பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். மேலும், ஞானசரரின் விடுதலை தனக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அதற்கு எதிராக மீண்டும் தான் நீதிமன்றம் செல்வதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. #ஞானசாரதேரர் #சந்தியாஎக்னலிகொட

http://globaltamilnews.net/2019/122381/

அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின் இவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியில் பரவி வந்தது.

இவர் விடுதலை செய்யப்பட்டால் மைத்திரியும் கொஞ்சம் மக்கள் ஆதரவை பெறுவார், இவரும் வெளியில் வந்த பின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக சிறை வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ganasara.jpg

அதற்கமைவாக ஜனாதிபதி ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் சற்றுமுன்னர் கையெழுத்திட்டுள்ளார். 

http://www.virakesari.lk/article/56512

  • கருத்துக்கள உறவுகள்

மினகெட்டு வெசாக் கூடு கட்டி தாமரை பூ கொண்டு போய் கையில் நூல் கட்டினது எல்லாம் வீணா போச்சு வாப்பா ..........................................

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

மினகெட்டு வெசாக் கூடு கட்டி தாமரை பூ கொண்டு போய் கையில் நூல் கட்டினது எல்லாம் வீணா போச்சு வாப்பா ..........................................

அவர் விடுதலை ஆகிட்டாராம் செய்திகள் சொல்லுது 

49 minutes ago, பெருமாள் said:

மினகெட்டு வெசாக் கூடு கட்டி தாமரை பூ கொண்டு போய் கையில் நூல் கட்டினது எல்லாம் வீணா போச்சு வாப்பா ..........................................

அடுத்த கட்ட ஆட்டம் ஆரம்பம் சிங்கம் களமிறங்கிட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலோலியூரான் ரவீ..ன் said:

அடுத்த கட்ட ஆட்டம் ஆரம்பம் சிங்கம் களமிறங்கிட்டுது.

தேவை  கருதி....

எதிரி  என்றாலும்  இது    போன்ற  ஆட்டங்களுக்கு  சிங்களவனிடம்  நாம  பிச்சை  வாங்கணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, விசுகு said:

தேவை  கருதி....

எதிரி  என்றாலும்  இது    போன்ற  ஆட்டங்களுக்கு  சிங்களவனிடம்  நாம  பிச்சை  வாங்கணும்

  10 வருசத்துக்கு பிறகும் எங்கடையள் இப்பவும் புலிவாந்தி எடுத்துக்கொண்டு திரியிறதை என்னவெண்டு சொல்லுறது?????   சிங்களம் ரொம்ப ரொம்ப நல்லது போலை கிடக்கு.....

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவர் விடுதலை ஆகிட்டாராம் செய்திகள் சொல்லுது 

நாளை (23) மாலை தான் விடுவிக்கப்படுவாராம்.

இன்று பிற்பகல் அசாத் சாலி இவரை சிறையில் சென்று சந்தித்திருந்தாராம்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Lara said:

நாளை (23) மாலை தான் விடுவிக்கப்படுவாராம்.

இன்று மாலை அசாத் சாலி இவரை சிறையில் சென்று சந்தித்திருந்தாராம்.

வெளியே வந்து எங்களுக்கு எதிராக சதிராட வேண்டாமென கேட்க போயிருப்பாரோ?

அமெரிக்காவிலேயே தாக்குதல் நடத்தப்படுகின்றது என்றால் இந்த தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையல்ல – அசாத் சாலி

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்தப்படுமானால், இந்த நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையல்ல என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு ஞானசார தேரரை, மேல் மாகாண ஆளுநர் இன்று (புதன்கிழமை) சந்தித்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான ஞானசார தேரரின் எதிர்வுகூறல்கள் மிகச் சரியாக அமைந்திருந்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், தேரருடன் காணப்பட்ட மத ரீதியிலான வேறுபாடுகள் அவர் சிறைக்கு செல்வதற்கு முன்னதாகவே சுமூகமாகிவிட்டதாகவும், தேசிய அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்ள இரு சமூகத்தவர்களின் இணைப்புடன் குழுவொன்று ஆரம்பிக்கப்படவிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒரே குடையின் கீழ் பணியாற்ற வேண்டிய முக்கிய தருணம் தற்போது எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்னும் இரண்டொரு தினங்களில் கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறேன் என்றும் கூறினார்.

http://athavannews.com/ஞானசாரரின்-விடுதலை-குறித/

Edited by Lara

45 minutes ago, ஈழப்பிரியன் said:

வெளியே வந்து எங்களுக்கு எதிராக சதிராட வேண்டாமென கேட்க போயிருப்பாரோ?

அசாத் சாலி பணத்தை வாங்கிக்கொண்டு அரசுடன் சேர்ந்து இயங்கும் ஒருவர். ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டால் அதனால் அவருக்கு பாதிப்பு இருக்காது என நினைக்கிறேன். சாதாரண முஸ்லிம்களுக்கு தான் பாதிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

நாளை (23) மாலை தான் விடுவிக்கப்படுவாராம்.

இன்று மாலை அசாத் சாலி இவரை சிறையில் சென்று சந்தித்திருந்தாராம்.

 

59 minutes ago, ஈழப்பிரியன் said:

வெளியே வந்து எங்களுக்கு எதிராக சதிராட வேண்டாமென கேட்க போயிருப்பாரோ?

நான் தான் மைத்திரியிடம் சொல்லி, கையை பிடித்து  பேனாவை வைத்து கையெழுத்து போட வைத்தவன் எண்டு சொல்ல போய்  இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, standing
 

இன குரோதம் தொடக்கம் இன வன்முறை என அத்துணை அசிங்கங்களையும் செய்து நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட ஞானசார தேரர் அவர்களை சிறை சென்று சந்தித்து ஜனாதிபதி விடுவித்து இருக்கிறார்.

ஆனால் சந்திரிகா கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டவர்களுக்கு உதவியதாக ரகுபதி சர்மா என்கிற சைவ மத குருவிற்கு 300 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது .இந்த வழக்கில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் பலவந்த படுத்தி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு இருந்தது .நீதிமன்றத்தில் இது தொடர்பாக மத குரு சொன்ன போதும் அவர் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள படவில்லை

நீதி துறை மற்றும் நிறைவேற்று அதிகாரம் சிறுபான்மை சமூகங்களை ஓரவஞ்சனையாக நடத்துவதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

2 hours ago, Nathamuni said:

நான் தான் மைத்திரியிடம் சொல்லி, கையை பிடித்து  பேனாவை வைத்து கையெழுத்து போட வைத்தவன் எண்டு சொல்ல போய்  இருப்பார்.

Minister Ravi Karunanayake and Governor Azath Salley met with Venerable Galagoda Aththe Gnanasara Thero today (May 22).

Speaking to the media Governor Azath Salley said that they hope that Gnanasara Thero will be released soon and noted that they have also spoken to the President concerning the release of  Gnanasara Thero.

He added that what was mentioned by Gnanasara Thero in the past has now been proven and all nationalities in Sri Lanka must stand together.

He added that the country cannot go forward divided and that there must be national reconciliation.

https://www.newsfirst.lk/2019/05/22/ravi-karunanayake-and-azath-salley-meet-gnanasara-thero/

😀😀

On 5/21/2019 at 4:58 PM, பிழம்பு said:

ஞானசாரரால் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தப்பட்ட பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். மேலும், ஞானசரரின் விடுதலை தனக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அதற்கு எதிராக மீண்டும் தான் நீதிமன்றம் செல்வதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள-பௌத்த மத்தியில் சுய நீதிக்காக போராடும் ஒருசிலரில் இவரும் ஒருவர். சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் சார்பாக சிந்திக்குமே தவிர தனது நீதித்துறை சிங்கள-பௌத்த இனமதவெறியர்களால் அவமதிக்கப்பட்டதை கூட கணக்கில் எடுக்காது. 

பொதுபலசேனா ஆதரவாளர்கள் சிறைச்சாலைக்கு வெளியில் ஞானசார தேரர் விடுதலைக்காக காத்திருக்கிறார்களாம். ஆனால் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதற்கான உத்தியோகபூர்வ பத்திரம் இன்னும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வந்துசேரவில்லையாம்.

CCC4192B-7DD2-42F8-874E-2CE663BB9094.jpg

Edited by Lara

இப்பொழுது கிடைத்து விட்டதாம்.

A6994975-8B9E-4507-875A-FC48EF14A714.jpg

எல்லாரும் (சிங்களவர் தான்) இந்தாள்ட வெளிவருகையை ஆவலோடு எதிர் பாக்கினாமாம்!
ஆள் வந்த பிறகு ஆப்பு மைத்திரிக்கும், சாலிக்கும் நிச்சயம் இருக்கு!

வெளியில் கூட்டமாக நிற்போர்

D7P-GSfU0AA-cA4?format=jpg&name=large

D7P-IDTUcAAR--L?format=jpg&name=large

விடுதலை செய்யப்பட்டு விட்டார்.

40C11DFC-DAD3-4E86-91B5-B97605482B9B.jpg

Edited by Lara

இது ( இவரின் விடுதலை) எங்கே போய் முடியப்போதோ 🙂 

 

ஞானசார தேரரின் விடுதலை குறித்து சுமந்திரனின் ஊடக அறிக்கை.

D7RUX4nV4AEnecH?format=png&name=900x900

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.