Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது ? திருப்பி கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது? திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்.!

jayamohan2232-1560571142.jpg

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் புளித்துப்போன தோசை மாவு குறித்து கடைக்காரரிடம் கேட்ட எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

இதற்காக ஏராளமான விருதுகளை குவித்துள்ளார் ஜெயமோகன். அதுமட்டுமின்றி நான் கடவுள், அங்காடித்தெரு, கடல், ரஜினியின் நடிப்பில் வெளியான 2.0 விஜயின் சர்கார் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார்.

புளித்துப்போயிருந்த தோசை மாவு

இந்நிலையில் நேற்றிரவு ஜெயமோகன் பார்வதிபுரத்தில் வீட்டின் அருகே உள்ள கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது தோசை மாவு வாயில் வைக்க முடியாத அளவுக்கு மிகவும் புளித்துப்போயிருந்துள்ளது.

திருப்பிக்கொடுத்த ஜெயமோகன்

இதையடுத்து கடைக்கு மீண்டும் சென்ற ஜெயமோகன், மாவு புளித்துப்போயிருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனக்கு அந்த தோசை மாவு வேண்டாம் என்றும் கூறியுள்ளார் ஜெயமோகன்.

வாக்குவாதம் முற்றி கைகலப்பு

இதனால் கடைக்காரர் செல்வத்துக்கும், எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட ஜெயமோகன்

அப்போது கடைக்காரர் செல்வத்துடன் சேர்ந்து அங்கிருந்த சிலரும் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெயமோகன் வடசேரி காவல்நிலையத்தில் மளிகைக்கடைக்காரர் செல்வம் மீது புகார் அளித்துள்ளார்.

மருத்துவமனையில் ஜெயமோகன்

போலீசார், மளிகைக்கடைக்காரர் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே எழுத்தாளர் ஜெயமோகன் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவு விவகாரத்தில் எழுத்தாளர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://tamil.oneindia.com/news/kanyakumari/writer-jayamohan-has-been-attacked-by-the-shop-keeper-in-kannyakumari-354135.html

  • கருத்துக்கள உறவுகள்

``நான் தாக்கப்பட்டேன்; காவல் நிலையத்தில்தான் அவரின் தொடர்புகள் புரிந்தது!” - எழுத்தாளர் ஜெயமோகன்

கெட்டுப்போன தோசைமாவு வழங்கியது குறித்து தட்டிக்கேட்ட பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது கடைக்காரர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் வசித்துவருகிறார். இவர் நேற்று மாலை ஒரு கடையில் தோசை மாவு வாங்கிச் சென்றுள்ளார். வீட்டில் சென்று மாவு பாக்கெட்டைப் பார்த்தபோது அது மிகவும் கெட்டுப்போய் இருந்துள்ளது. இதையடுத்து, தோசை மாவை அதே கடையில் கொண்டு கொடுத்துள்ளார். தோசை மாவு கெட்டுப்போனதாகப் புகார் கூறியுள்ளார். இதில் தோசை மாவு விற்பனை செய்த கடையில் இருந்த பெண்ணின் கணவர் செல்வம் அங்கு வந்து ஜெயமோகனிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜெயமோகன் வீட்டுக்குச் சென்ற கடைக்காரர் செல்வம் அங்குநின்று மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

ஜெயமோகன்

தாக்குதலைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். புகாரின் பேரில் நேசமணிநகர் போலீஸார் கடைக்காரர் செல்வத்தைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஜெயமோகன் தனது இணையதளத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டிருக்கிறார், அதில், ``சேதி உண்மை. ஒரு சிறு விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன் . இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்துவிட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திருப்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார்.  நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள் என வீசிவிட்டு திரும்பினேன். அருகே அவர் கணவர் நின்றிருந்தார். ஏற்கெனவே குடித்து தகராறு செய்தபடி நின்றிருக்கிறார் .

ஜெயமோகன்

என்னைத் தாக்க ஆரம்பித்தார். தாடையில் அடித்தார். கீழே விழுந்தபோது உதைத்தார். என் கண்ணாடி உடைந்தது.. பலமுறை தாக்கி கெட்டவார்த்தை சொன்னார்.  பின்னர் வீடு வந்தேன். அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் மகளையும் வசைபாடினார். வீட்டுக்குள் நுழைய முயன்றார்.  அதன் பின்னரே காவல் நிலையம் சென்று புகார் கொடுத்திருக்கிறேன். காவல் நிலையம் சென்றபின்னர்தான் ஒரு கேடியின் தொடர்புகள் புரிந்தது. வழக்கறிஞர்கள். அரசியல் தலைவர்கள் வந்து அவனுக்காக வாதாடினார்கள். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கிறேன். சிறு காயங்கள் உள்ளன” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

 

https://www.vikatan.com/news/tamilnadu/159770-writer-jeyamohan-attacked-by-a-shop-owner.html

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சக எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கபட்டதை ஓரெணியில் நின்று முழுமூச்சாகக் கண்டிப்போம்.
-வ.ஐ.ச.ஜெயபாலன்

ஜெயமோகன்மீது அநீதியான தாக்குதல் நடந்த சேதி அதிற்ச்சியும் சோர்வும் கவலையும் தருகிறது. 
.
தரமற்ற உணவுப் பொருளை விற்ற ஒருவர் உள்ளூர் ததாபோல நடந்துகொள்வதை சக எழுத்தாளனைத் தாக்குவதை, வீட்டுக்கே சென்று மனைவி பிள்ளைகளைத் மிரட்டுவதை சக எழுத்தாளன் என்கிற முறையில் அனுமதிக்க முடியாது. 
.
எழுத்தாளர்கள் மத்தியில் நிலவும் ஜெயமோகன்பற்றிய சாதக பாதக உரையாடல்கள் அவரவர் நிலைபாடும் தெரிவுமாகும். ஆனால் சக எழுத்தாளனுக்கு எதிரான அநீதியை கண்டு கண்டிபது எங்கள் பொறுப்பும் தலையாய கடமையுமாகும்.

கும். சக எழுத்தாளர்மீது அநீதியான முறையில் தாக்குதல் நடந்த சம்பவத்தை நாம் அனைவரும் ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும். 
- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்.

 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

சக எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கபட்டதை ஓரெணியில் நின்று முழுமூச்சாகக் கண்டிப்போம்.
-வ.ஐ.ச.ஜெயபாலன்

ஜெயமோகன்மீது அநீதியான தாக்குதல் நடந்த சேதி அதிற்ச்சியும் சோர்வும் கவலையும் தருகிறது. 
.
தரமற்ற உணவுப் பொருளை விற்ற ஒருவர் உள்ளூர் ததாபோல நடந்துகொள்வதை சக எழுத்தாளனைத் தாக்குவதை, வீட்டுக்கே சென்று மனைவி பிள்ளைகளைத் மிரட்டுவதை சக எழுத்தாளன் என்கிற முறையில் அனுமதிக்க முடியாது. 
.
எழுத்தாளர்கள் மத்தியில் நிலவும் ஜெயமோகன்பற்றிய சாதக பாதக உரையாடல்கள் அவரவர் நிலைபாடும் தெரிவுமாகும். ஆனால் சக எழுத்தாளனுக்கு எதிரான அநீதியை கண்டு கண்டிபது எங்கள் பொறுப்பும் தலையாய கடமையுமாகும்.

கும். சக எழுத்தாளர்மீது அநீதியான முறையில் தாக்குதல் நடந்த சம்பவத்தை நாம் அனைவரும் ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும். 
- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்.

 

புளித்த மாவை உரிய மரியாதையான முறையில் - பொருத்தமான  உணர்ச்சிவசப்படாத வார்த்தைப் பயன்பாடுகளுடன் - திரும்பக் கொடுக்க முயன்றிருந்தால் அடி வாங்குவதில் முடிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சொல்லக்கூடிய பரம்பரையில் வந்தவர் என நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் சொல்லத்தக்க வார்த்தைகளாக தெரியவில்லையே   பொயட் சொல்வது .

"அநீதியான முறையில் தாக்குதல்" -- தீர்ப்பும் வேறு சொல்லி விட்டீர்கள் போல் தெரிகிறதே  😉

 

  • கருத்துக்கள உறவுகள்

"ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையேயல்ல" என்றதற்குப் பொங்காத அறிவுஜீவிகள் தோசைமாவுக்குப் புளித்துப் பொங்குவார்கள்; அறமென்றும் வன்முறையென்றும் படமெடுத்து ஆடுவார்கள் பாருங்கள்.

காரியார்த்தமான கண்ணியவான்கள்!

 

https://www.facebook.com/search/top/?q=thamizhnathy nathy&epa=SEARCH_BOX

  • கருத்துக்கள உறவுகள்

தோசை மா.... புளிக்கிறது,  தோசைக்கு.... நல்லது தானே....  😎  🤣
சின்ன விஷயத்தை, தலைப்பு  செய்தி ஆக்கிய, தமிழக ஊடகங்களுக்கு  நன்றி  சார்.  😝

  • கருத்துக்கள உறவுகள்

ஆதீக, ஆதிக்க வர்க்கத்தின் அடி வருடி ஒரு கடைநிலை தோசை கடை பெண்ணுடன் வம்புக்கு போய் புருசனிடம் வாங்கி கட்டியுள்ளார்.

உழைக்கும் வர்க்கப் பெண்களை எப்படியும் ஏசலாம், என்னவும் செய்யலாம் எனும் ஜெயமோகன் போன்ற பத்தாம் பசலிகளின் மனோ நிலைக்கு நல்ல பாடம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

தோசை மா.... புளிக்கிறது,  தோசைக்கு.... நல்லது தானே....  😎  🤣
சின்ன விஷயத்தை, தலைப்பு  செய்தி ஆக்கிய, தமிழக ஊடகங்களுக்கு  நன்றி  சார்.  😝

எது சின்ன விஷயம்,  ஜெமோ  எனும் காவாலி தோசை மா விற்கும்  பெண்ணின் கணவனிடம் அடி வாங்கியதா , நோ யுவர் ஆனர் !! 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, poet said:

சக எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கபட்டதை ஓரெணியில் நின்று முழுமூச்சாகக் கண்டிப்போம்.
-வ.ஐ.ச.ஜெயபாலன்

ஜெயமோகன்மீது அநீதியான தாக்குதல் நடந்த சேதி அதிற்ச்சியும் சோர்வும் கவலையும் தருகிறது. 
.
தரமற்ற உணவுப் பொருளை விற்ற ஒருவர் உள்ளூர் ததாபோல நடந்துகொள்வதை சக எழுத்தாளனைத் தாக்குவதை, வீட்டுக்கே சென்று மனைவி பிள்ளைகளைத் மிரட்டுவதை சக எழுத்தாளன் என்கிற முறையில் அனுமதிக்க முடியாது. 
.
எழுத்தாளர்கள் மத்தியில் நிலவும் ஜெயமோகன்பற்றிய சாதக பாதக உரையாடல்கள் அவரவர் நிலைபாடும் தெரிவுமாகும். ஆனால் சக எழுத்தாளனுக்கு எதிரான அநீதியை கண்டு கண்டிபது எங்கள் பொறுப்பும் தலையாய கடமையுமாகும்.

கும். சக எழுத்தாளர்மீது அநீதியான முறையில் தாக்குதல் நடந்த சம்பவத்தை நாம் அனைவரும் ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும். 
- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்.

 

விகடன் சொல்வது என்னவென்றால், புளித்தது காணாது என்று தான் சண்டை போட்டாராம்.

இதை பெரிதாக்கி அவர் தான் உலகளாவிய ரீதியில் நாறிப்போயிருக்கிறார், தவிர்த்து இருக்கலாம் என்கிறது, விகடன்.

பாருங்க, நோர்வேயில் இருந்து நம்ம பொயட் அய்யாவே குளம்பீட்டாரே.

இவர் பெரிய விருதுகள் எல்லாம் வாங்கிய படைப்பாளி. அவர்கள், ஒரு தோசை மாவு அரைத்து வித்து வாழ்க்கையை ஓட்டும் பாமரர்கள்.

தோசை மாவை தூக்கிக் கொண்டு திரும்பி போனதே சின்னத்தனம், கொடுத்த பின்னர் பெரிய மனது பண்ணி நகர்ந்து போகாமல், அங்கே நின்று, பெண்மணியிடம், எல்லை மீறிய வகையில், தவறுதலாக பேசி, கணவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றார் என்று மீம்ஸ் போட்டு தாக்குகிறார்கள்.

இது தெரியாமல், பொயட் அய்யா வேற கூட்டம் சேர்கிறார். 

ஒரு தோசை மா தொழிலாளிக்காக நாமும் பொங்குகிறோம்.

இவர் பெரிய எழுத்தாளர் என்றால், கொம்பா முளைத்து இருக்கிறது?

பொயட் அய்யா, ஏழைகள், வலிமை இல்லாதவர் பக்கம் நிற்பதே தர்மம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Nathamuni said:

விகடன் சொல்வது என்னவென்றால், புளித்தது காணாது என்று தான் சண்டை போட்டாராம்.

இதை பெரிதாக்கி அவர் தான் உலகளாவிய ரீதியில் நாறிப்போயிருக்கிறார், தவிர்த்து இருக்கலாம் என்கிறது, விகடன்.

பாருங்க, நோர்வேயில் இருந்து நம்ம பொயட் அய்யாவே குளம்பீட்டாரே.

இவர் பெரிய விருதுகள் எல்லாம் வாங்கிய படைப்பாளி. அவர்கள், ஒரு தோசை மாவு அரைத்து வித்து வாழ்க்கையை ஓட்டும் பாமரர்கள்.

தோசை மாவை தூக்கிக் கொண்டு திரும்பி போனதே சின்னத்தனம், கொடுத்த பின்னர் பெரிய மனது பண்ணி நகர்ந்து போகாமல், அங்கே நின்று, பெண்மணியிடம், எல்லை மீறிய வகையில், தவறுதலாக பேசி, கணவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றார் என்று மீம்ஸ் போட்டு தாக்குகிறார்கள்.

இது தெரியாமல், பொயட் அய்யா வேற கூட்டம் சேர்கிறார். 

ஒரு தோசை மா தொழிலாளிக்காக நாமும் பொங்குகிறோம்.

இவர் பெரிய எழுத்தாளர் என்றால், கொம்பா முளைத்து இருக்கிறது?

பொயட் அய்யா, ஏழைகள், வலிமை இல்லாதவர் பக்கம் நிற்பதே தர்மம்.

 

தடித்த  இனம்  இனத்தோடு சேருகிறது

விடுங்க 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதன் பின்னோட்டங்களையும் வாசிக்கவும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகன் சில்லறை விடயங்களைத் தவிர்த்து தனது வெண்முரசு நிகழ்காவியத்தை எழுதி முடிப்பதில் கவனமாக இருக்கவேண்டும்.  காவியத்தை முழுமையாகப் படிக்க காத்திருக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

 

..

தாக்கப்பட்டேன்

இச்செய்தியைப் பற்றி பலர் கேட்டனர். சேதி உண்மை. ஒரு சிறு விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்து விட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திரும்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார் நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள் என வீசிவிட்டு திரும்பினேன். அருகே அவள் கணவன் நின்றிருந்தான். உரிமையாளன். பெரியகுடிகாரன். ஏற்கனவே குடித்து தகராறு செய்தபடி நின்றிருக்கிறான். நான் கவனிக்கவில்லை.

என்னை தாக்க ஆரம்பித்தான். தாடையில் அடித்தான். கீழே விழுந்தபோது உதைத்தான். என் கண்ணாடி உடைந்தது. பலமுறை தாக்கி கெட்டவார்த்தை சொன்னான். பிடித்து அகற்றினர். அவனுடைய கடை வேலையாட்கள் அவர்கள். வீடு வந்தேன். அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் மகளையும் வசைபாடினான். வீட்டுக்குள் நுழைய முயன்றான். அதன் பின்னரே காவல் நிலையம் சென்று புகார் கொடுத்திருக்கிறேன். காவல் நிலையம் சென்ற பின்னர்தான் ஒரு கேடியின் தொடர்புகள் புரிந்தது. வழக்கறிஞர்கள். அரசியல் தலைவர்கள் வந்து அவனுக்காக வாதாடினார்கள்.

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இருக்கிறேன். சிறு காயங்கள் உள்ளன .

வழக்கு பதிவு செய்யப்படும் என நினைக்கிறேன். நீதி கிடைக்குமென்றும்.

 

https://m.jeyamohan.in/122884#.XQVEsCXTVR4

 

 

  • கருத்துக்கள உறவுகள்
  8 hours ago, poet said:

நண்பர்களே. சண்டை போட வேண்டிய இடங்களில் ஜெயமோகனுடன் நான் சண்டை போட்டுள்ளேன். ஒரு உள்ளூர் அரசியல் செல்வாக்குள்ள குட்டி தாதா எழுத்தாளர் ஒருவரை அடித்ததுடன் நிறுத்தவில்லை.   பின்னர் வீடுதேடி சென்று மனைவி மக்களை மிரட்டியிருக்கிறார். ஒரு எழுத்தாளனாக்கூட அமைதியாக இருந்த்திருக்கக்கூடும் நிச்சயம் ஒரு ஈழத்தமிழ் கணவனாக தந்தையாக  என்னால் மட்டுமல்ல உங்களால்கூட அமைதியாக இருந்திருக்க முடியாது அல்லவா.   அது நம் இரத்ததில் உள்ள அறமல்லவா?

வேற திரில போடவேண்டியதை இங்க மாறிப் போட்டிவிட்டீர்களோ?

Just now, Nathamuni said:
  8 hours ago, poet said:

நண்பர்களே. சண்டை போட வேண்டிய இடங்களில் ஜெயமோகனுடன் நான் சண்டை போட்டுள்ளேன். ஒரு உள்ளூர் அரசியல் செல்வாக்குள்ள குட்டி தாதா எழுத்தாளர் ஒருவரை அடித்ததுடன் நிறுத்தவில்லை.   பின்னர் வீடுதேடி சென்று மனைவி மக்களை மிரட்டியிருக்கிறார். ஒரு எழுத்தாளனாக்கூட அமைதியாக இருந்த்திருக்கக்கூடும் நிச்சயம் ஒரு ஈழத்தமிழ் கணவனாக தந்தையாக  என்னால் மட்டுமல்ல உங்களால்கூட அமைதியாக இருந்திருக்க முடியாது அல்லவா.   அது நம் இரத்ததில் உள்ள அறமல்லவா?

வேற திரில போடவேண்டியதை இங்க மாறிப் போட்டிவிட்டீர்களோ?

தமிழகத்தில் அரசியல் செல்வாக்குள்ள குட்டி தாதா, தோசை மாவு விற்பவர் என்பதை நம்ப முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அடிவாங்கியதை எள்ளி நகையாடுவதைவிட வலிமையானது
 *Kavitha Bharathy* யின் இந்த சாடல்

————————————
ஈழ உரிமைப்போரை ஒடுக்க 
இந்திய அமைதிப்படை வன்கொடுமைகள் செய்த வன்கொடுமைகளை
நீங்கள் ஆதரித்தீர்கள் ஜெயமோகன்..

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம்பேர் கொல்லப்பட்டபோதும் நீங்கள் இனப்படுகொலையாளிகள் பக்கமே நின்றீர்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராடத்தில்
கொல்லப்பட்டவர்களுக்கு 
எதிராகவே நின்றீர்கள்

கெளரி லங்கேஷ், கல்புர்கி போன்றவர்கள் கொல்லப்பட்டபோதும்
நீங்கள் கொன்றவர்கள் பக்கமே நின்றீர்கள்..

உரிமைப்போரை ஒடுக்குபவர்களே
எப்போதும் உங்களுக்கு உவப்பானவர்கள்..

ஆனால்
தோசை மாவுக்காக நீங்கள் சண்டையிட்டு தாக்கப்பட்டபோது
சமூகம் உங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து
உங்கள் பக்கமே நிற்கிறது

மாவோ, மண்ணோ, மொழியோ, இனமோ, மானமோ... 
இனியாவது நீங்கள் உரிமைக்காகப் போராடுபவர்கள், அதற்காக உடமை,  உயிகளை இழப்பவர்கள் பக்கம் நில்லுங்கள்..

அதிகாரத்தால் கொல்லப்படுகிறவர்களின் உயிர்
புளித்த மாவை விடவும் மேலானது..

அ மார்க்ஸ் முகநூல் பதிவிலிருந்து:

முகநூல் பதிவிலிருந்து: ஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'
ஜெயமோகன் பிரச்சினை குறித்து முழு விவரங்களையும் கேட்டு அறிந்தேன். நாகர்கோவில் நண்பர்கள் உதவினார்கள். ஒரு சாதாரண பிரச்சினையை அவர்  இத்தனை சிக்கலாக்கியிருக்க வேண்டியதில்லை. உள்ளூர் நண்பர்கள், இது போன்று மாவு பாக்கெட்கள் விற்கும் சிறு கடைக்காரர்கள் ஆகியோரிடமும் பேசியபோது ஜெயமோகன் சற்றுப் பொறுமையாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. அன்றாடம் எத்தனையோ அநீதிகளைப் பொறுத்துக் கொண்டு போகிறோம். உடைந்து கிடக்கும் சாலைகள், ஏமாற்றும் கான்டிராக்டர்கள் இவை குறித்தெல்லாம் நாம் கவலைப்படாமல் கடந்து போய் விடுகிறோம். இப்படியான பிரச்சினைகளை இந்த 'லெவலு'க்குக் கொண்டு சென்றிருப்பது ஒரு அப்பட்டமான "மிடில் கிளாஸ் மென்டாலிடி" என்றுதான் சொல்ல வேண்டும்.

திருச்சியிலிருந்து ஒரு நண்பர் ஜெயமோகன் 2008 ல் எழுதிய பதிவொன்றை அனுப்பி இருந்தார். ஒரு முறை ஜெயமோகன் ATM கதவு ஒன்றைச் சரியாகத் திறக்கத் தெரியாமல் அதை உடைத்துத் திறந்து வெளிவந்தன் கதையை அவரே எழுதியது அது. அதைப் படிக்கும்போது தான் ஒரு எழுத்தாளன் என்கிற வகையில் ஏகப்பட்ட சிந்தனைகளைச் சுமந்து எப்போதும் தாஸ்தாவெஸ்கி, காம்யூ போன்ற சிந்தனைகளில் ஈடுபட்டிருக்கும்போது இபடித்தான் பொறுமை இல்லமல் நடந்து கொள்ள முடியும் என அவர்  மூர்க்கமாக நடந்து கொண்ட அச் சம்பவத்தையும் தனது மேதமையின் அடையாளமாகச் சித்திரிக்கும் அம் முயற்சி உண்மையில் நேற்று வாசிக்கும்போது எனக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்தியது. ATM கதவை உஅடைப்பது பெரிய குற்றம். அது வழக்காகி இருந்தால் சிக்கல். எனினும் ஒரு எழுத்தாளர் என்கிற வகையில் அந்த வங்கி அதிகாரிகள் மிக்க பொறுமையுடன் அந்த நிகழ்வைக் கையாண்டுள்ளனர், அவர்களே அதை 'ரிப்பேர்' செய்து உரிய தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு வழக்கு ஏதும் இல்லாமல் செய்துள்ளனர். 

இப்படியான ஒரு புளித்த மாவுப் பிரச்சினையில் நானாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் எனச் சற்று யோசித்துப் பார்த்தேன். மாவு புளித்திருக்கு என மனைவி சொல்லி இருந்தால், "சரி அதைத் தூக்கி எறி. வீட்டில் கோதுமைக் குருணை இருந்தால் கொஞ்சம் கஞ்சி போடு. சாப்பிட்டுவிட்டுப் படுப்பொம். உடம்புக்கும் நல்லது" என்று அது இப்படியான சமபவமாக ஆக்கப்படாமல் கழிந்திருக்கும். 

இரண்டு விடயங்கள் முடிக்கு முன்: 

1. அந்த கடைக்காரர் செல்வம் என்பவர் குறித்தும் நாகர்கோவில் நண்பர்கள் ரொம்பவும் நல்ல அபிப்பிராயத்தையே  சொல்கின்றனர்.

2. மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அளவிற்கு ஜெயமோகனுக்கு ஒன்றும் இல்லை. வழக்கை மெய்ப்பிப்பதற்காகவும், வலுவாவதற்காகவும் வழக்கமாக எல்லோரும் செய்யும் தந்திரம்தான் இது என்பதை பாரதி மணி போன்ற பெரியவர்களும் கூடப் பதிவு செய்துள்ளனர். அரசு மருத்துவர் ஒருவர் இப்படி வழக்குக்காக அரசு மருத்துவமனையில் வந்து வேண்டுமென்றே படுத்துக் கொள்வது எப்படி ஒரு உண்மையான நோயாளிகுக் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதியைப் பாதிக்கிறது என அவர் உளமார்ந்த வருத்ததுடன் எழுதியிருந்தது நெஞ்சைத் தொடுகிறது..

இந்தப் பின்னணியில் நான் ஜெயமோகனிடம் முன்வைக்கும் அன்பான வேண்டுகோள் இதுதான். ஜெயமோகன் கடைக்காரர் செல்வத்தின் மீது தொடுத்துள்ள வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டு இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும். 

நாகர்கோவில் எழுத்தாள நண்பர்களான லட்சுமி மணிவண்ணன் முதலானோர் இதற்கு உதவ வேண்டும்..

ஜேயமோகனிடமிருந்து வேறு பல நியாயமான காரணங்களுக்காக கருத்து வேறுபடுபவர்கள் இச்சம்பவத்தைப் பயன்படுத்தி அவரை வசைபாடுவதைநிறுத்திக் கொள்வோம்.

இனி என் தரப்பிலிருந்து தோழர்களுக்கு :

👆இந்தக் குழாயடிச் சண்டை நமக்கு எதற்கு என சில நண்பர்கள் நினைக்கலாம். எப்போதும் போராளிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் எவ்வளவு மலிவானவர்கள் என்பதை இந்நிகழ்ச்சி காட்டுவதாக நான் நினைக்கிறேன். மேலும் "இச்சம்பவத்தைப் பயன்படுத்தி (நியாயமான வேறு காரணங்களுக்காக) ஜெயமோகனை வசைபாடுவதை நிறுத்திக் கொள்வோம்" என்ற அ.மார்க்ஸின் வேண்டுகோளை நான் நிராகரிப்பதற்காக யாழ் சொந்தங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் பற்றி… ஜெயமோகன்

அன்புள்ள நண்பர்களுக்கு,

நான் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். தாடையிலும் தோள்பட்டையிலும் வலியும் ரத்தகீறல்களும் உள்ளன. கீழே விழுந்தமையால் உடல் வலியும். ஆனால் ஆஸ்பத்திரி வார்டில் இருந்த பிற நோயாளிகளின்  துன்பங்கள் அழுகைகள்  நடுவே தூங்க முடியவில்லை. ஆகவே வந்துவிட்டேன்.தனியார் மருத்துவமனையில் சற்று மருத்துவம் செய்யவேண்டியிருக்கலாம்.

சில செய்திகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தாக்கியவர் திமுகவின் அடிமட்டப் பொறுப்பில் இருப்பவர். ஆனால் முழுக்கமுழுக்க குடிவெறியால் நிகழ்ந்த தாக்குதல் இது. ஏற்கனவே பகல்முழுக்க குடிவெறியில் கலாட்டா செய்துகொண்டிருந்திருக்கிறார். அவர் கடையை கவனிக்கவில்லை என குற்றம்சாட்டி அவர் மனைவி கடையில் அமர்ந்திருக்கிறார். அவர்கள் முன்னரே சண்டையிட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள். என்ன ஏது என தெரியாமல் நான் நடுவே புகுந்து மாவு பற்றிக் கூறினேன். அது கூட தெரிந்தவர் என்பதனால் “ஏன் இதையெல்லாம் பார்க்கமாட்டீர்களா?” என்ற அர்த்ததில்தான். இவன் தாக்க ஆரம்பித்துவிட்டான். ஏன் என்று அவனுக்கே தெரிந்திருக்காது.

இப்போதுகூட  “குடிவெறியில் தெரியாமல் செய்துவிட்டான்’ என்பதே அவர்களின் பதிலாக இருக்கிறது. ஆனால் சற்று அதிகமான தாக்குதல்தான். இளவயதினனான, குற்றப்பிண்ணணி உடைய ஒருவனின் அடிகள் எளியவை அல்ல. அவனுடன் இருந்தவர்களும் குடித்திருந்தமையால் சற்றுநேரம் எவருமே பிடித்துவிலக்கவில்லை. அதன்பின்னரும் புகார்செய்யவேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஏனென்றால் இது என் நிலம் , இந்தமக்கள் இப்படி இருப்பதை நான் நன்கறிவேன். அதன்பின் அவன் வீட்டுக்கு வந்து மனைவியையும் மகளையும் வசைபாடி தாக்கமுற்பட்டமையால்தான் இரண்டு மணிநேஎரம் கடந்து காவலரிடம் செல்லவேண்டியிருந்தது. அதன்பின்னர் காவலர்கள் கைதுசெய்து ரிமாண்ட் செய்திருக்கிறார்கள்

இதில் இதுவரை கட்சி அரசியல் இல்லை. திமுகவின் வழக்கறிஞர் மகேஷ் காவல்நிலையம் வந்து அவன் இருந்த நிலையை பார்த்ததுமே என்னிடம் மன்னிப்புகோரிவிட்டு  சென்றுவிட்டார். திமுக மிகமிக பண்பட்ட ரீதியில்தான் நடந்துகொண்டிருக்கிறது. அடிப்படையில் திமுக ஒர் அறிவுத்தளம் கொண்ட கட்சி என்ற எண்ணமே எப்போதும் என்னிடம் இருக்கிறது. நான் மு.கருணாநிதி அவர்கள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த காலகட்டத்திலும் கூட அவர் மேல் தனிப்பட்ட முறையில் நம்பிக்கை கொண்டிருந்தேன். என் பாதுகாப்பு பற்றி ஐயம் கொண்டதே இல்லை. இன்றும் திமுக மேல் எனக்கு அந்நம்பிக்கை உண்டு.

இன்று இதில் தலையிட்டு தொடர்ந்து அழுத்தம் அளிப்பவர்கள் சில தனிப்பட்ட அரசியல்வாதிகள். அந்த அரசியல்வாதிகளுடைய குற்றச்செயல்களுக்கான கருவி இவனும் இவன் உடன்பிறந்தவர்களும். அதில் உண்மையில் கட்சிச்சார்புகள் இல்லை. விரிவாக பின்னர் எழுதுவேன். எல்லா பெயர்களுடனும். எதையும் மறைக்கப்போவதில்லை.

பொதுவாக சிற்றூர்களை ஒட்டி உருவாகும் புறநகர்களில் உள்ள பிரச்சினை இது. பார்வதிபுரத்திற்கும் சாரதாநகருக்கும் சம்பந்தமே இல்லை. இங்குள்ள எவரும் பார்வதிபுரம் சந்திப்புக்கு அந்தியில் செல்ல மாட்டார்கள். இங்குள்ள கடைகளில் பொருட்கள் வாங்க மாட்டார்கள். இங்குள்ளவர்களிடம் தொடர்பும் வைத்திருக்க மாட்டார்கள். இவர்கள் அவர்களின் வழக்கமான சச்சரவுகள், குடிக்கொண்டாட்டம், கோயில்விழாக்களில் அடிதடி என வேறு உலகில் வாழ்பவர்கள். இங்கு மட்டும் அல்ல தமிழகம் முழுக்கவே அந்திக்குப்பின் குடி ஒரு பெரும் சமூகச் சிக்கலாக மாறிவிட்டிருக்கிறது. இதே நிலை எவருக்கும் இன்று வரக்கூடியதே.

இங்கிருந்து தொடர்ச்சியாக அவர்களிடம் புழங்குபவர்களில் ஒருவன் நான். பெரிய பழக்கம் ஏதும் இல்லை என்றாலும் அவர்களை கவனித்துக்கொண்டே இருக்கிறேன் என்னை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது, நான் அன்னியமாகிவிடக்கூடாது என்பதனால் என் முகம் தொலைக்காட்சியில் வருவதை தவிர்த்துவிடுகிறேன். சினிமா பிரமோக்களில்கூட தோன்றுவதில்லை. உண்மையில் அன்று நான் தாக்கப்பட்டபோது பார்வதிபுரத்தில் எவருமே தலையிடவில்லை. எவரும் வீட்டுக்கு வரவில்லை. காரணம் இதுவே. என்னை எவருக்கும் தெரியாது, தாக்கியவன்மேல் அச்சம் உண்டு

குற்றவாளி தொடர்ந்தும் பார்வதிபுரம் சந்திப்பில் கலாட்டா செய்துகொண்டிருந்தமையால் அங்கிருந்துதான் காவலர்களால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நண்பர் லக்ஷ்மி மணிவண்ணனுடன் நான் தனியாகவே காவல்நிலையம் சென்றேன். அங்கே நான் செல்வதற்கு முன்னரே ஏழு கார்களில் அவனுடைய ஆதரவாளர்களான அரசியல்வாதிகள் வந்து அவனுக்காகப் பேசிக்கொண்டிருந்தனர். காவலர் எவருக்கும் என்னை தெரியவில்லை. லக்ஷ்மி மணிவண்ணன் என்னை எழுத்தாளர் என்று திரும்பத்திரும்பச் சொன்னபின்னரும் ”எந்த ஆபீஸில் எழுத்தாளர்?” என்றுதான் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

காவல்நிலையத்திலேயே அவன் கலவரம் செய்துகொண்டிருந்தான். செய்திகள் வெளிவந்த பின்னரே நான் எவர் என அவர்களுக்கு புரிந்து வழக்கு பதிவாகியது. அதுவும் மிக நீர்த்த ஒரு வடிவில். அவ்வளவு அழுத்தம் இருந்தது, இப்போதும் உள்ளது. அதன்பின்னர்தான் அவர்களின் வழக்கறிஞர்கள் வெவ்வேறு வகையில் நிகழ்ச்சியை ஜோடனை செய்ய தொடங்கினர். அந்தப்பெண்மணியை ஆஸ்பத்திரியில் படுக்கச்செய்தனர். அவனை ஆஸ்பத்திர்யில் சேர்க்க முயன்றனர். ஆனால் அந்தப் பெண்மணியும்சரி தாக்கியவனும்சரி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை, முற்றிலும் சாதாரணநிலையில் இருக்கிறார்கள் என மருத்துவக் கல்லூரியின் டாக்டர்கள் கூறிவிட்டனர்.

நான் இந்நிலத்தை என்னுடையது என நினைப்பவன். ஆகவே எந்த சச்சரவின் நடுவிலும் நான்  சாதாரணமாக புழங்கிக்கொண்டிருப்பேன். நள்ளிரவில்கூட  நடை செல்வேன். இதைப்பற்றி பலர் தொடர்ச்சியாக எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அந்த எச்சரிக்கையை நான் கவனித்ததில்லை. . ஆகவே இது எதிர்பார்த்திருக்கவேண்டியதுதான். பார்வதிபுரம் பகுதியே ஏழுமணிக்குமேல் குடிகாரர்களின் உலகமாகத்தான் இருக்கிறது. எல்லாரும் தெரிந்த முகங்கள்தானே என்பது என் எண்ணம். குடிகாரர்களுக்கு அப்படி கணக்கெல்லாம் இல்லை போலிருக்கிறது

இத்தனைக்கும் அப்பால் இது என் நிலம். இங்கிருந்தே நான் என் வாழ்க்கையை கண்டடையமுடியும். எழுத முடியும். இவர்களிடமிருந்து விலகினால் எழுத முடியாது. ஆனால் முன்பு போல நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு தன்னந்தனியாக  நடக்கச்செல்வேனா என்று தெரியவில்லை.

 

 

https://www.jeyamohan.in/122898#.XQYo8C3TVR4

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகன் மீதான தாக்குதல் 

ஆர். அபிலாஷ்
 
ஜெயமோகன் ஊர்ப்பிரச்சனைகளில் தலையிடுகிறவரோபொதுவெளியில் வம்புக்கு போகிறவரோ அல்லதக்கலை-நாகர்கோயிலில் அவர் வாழ்ந்த ஆரம்ப வருடங்களில் நானும் அதேஊரில் இருந்த்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் - சுவரில் ஒருபல்லி போவது போல தனியாக தன் உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்அவராக முயற்சி எடுத்து எல்லாரிடமும் (சகபணியாளர்கள்சுற்றம்ஊர்பொதுஜனம்பழக மாட்டார்இது நகரங்களில் வாழும் மனிதர்களின்பழகுமுறைஆனால் ஜெயமோகன் ஊரில் நடக்கும் எல்லாவிசயங்களையும் நன்கு அறிந்து வைத்திருப்பார்.
 நான் ஊரில் இருக்கையில் தான் அவரை முதலில் சந்தித்தேன்அப்போது எனக்கு 16 வயதிருக்கும்ஜெயமோகனை இரண்டாவதுமுறை சந்தித்த போது அவர் என் அப்பாவைப் பற்றி போகிற போக்கில்குறிப்பிட்டது நினைவுள்ளதுஅவருக்கு என் குடும்பத்தினரைபழக்கமில்லைஆனால் தன்னை ஒருமுறை கடந்து போகிறவரதுபின்னணியையும் விசாரித்து தெரிந்து வைத்துக் கொள்வார்என்வீட்டுக்கு வெகு அருகில் நடந்த ஒரு நள்ளிரவு மாந்திரிக சடங்கு பற்றிஒருநாள் குறிப்பிட்டார்அதை நானே பார்த்திருக்கவில்லையாரும்கவனித்து என்னிடம் சொல்லவும் இல்லைஅதேநேரம் ஜெயமோகன்அறிந்திருந்தார்அவர் நாட்டுநடப்புகளில் கலந்து கொள்ளசமூகமாக்கல் பண்ண மெனக்கெட மாட்டார்நடைமுறைக் காரணம்தான் என நினைக்கிறேன் - தன் நேரம் குறித்து மிதமிஞ்சிய அக்கறைகொண்டவர் அவர்ஒவ்வொருவரிடமாய் குசலம் விசாரித்து அண்ணாதம்பிமாமாமச்சான் என உறவு பாராட்டினால் அது அவரது நேரத்தைபறிக்கும்அடுத்து அவர் தன்னைப் போன்று தீவிரமான மனநிலையும்ஈடுபாடும் கொண்டவர்களிடத்தே பழக வேண்டும்அல்லாவிடில் அதுதன்னை நீர்க்கச் செய்யும் என நினைக்கிறார்
 
இதை நான் தவறெனக் கூற மாட்டேன்நமது மனம் விசித்திரமானதுஒரு மனிதனின் தீவிரமும் மனக்குவிப்பும் குலைய ரொம்ப நேரம்எடுக்காது - நமது நட்பு வட்டம் நம் தேர்வுக்குள்ளானதாய் இருந்தால்நம்மால் மிகுந்த ஆற்றலுடன் பணி செய்ய முடியும்தினமும்வெட்டிப்பேச்சு பேசுகிறவர்களுடன் எட்டு மணிநேரம் பேசுங்கள்ஒரேவாரத்தில் ஒன்று உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் அல்லது பெரியகனவுகள் சிதைந்து சாமான்யமாகிப் போவோம்சுருக்கமாய்ஜெயமோகன் சாமான்யர்களை கவனிப்பார்அவர்களுடன் இருப்பார்அவர்களைப் பற்றி எழுதுவார்ஆனால் அவர்களுடன் சம்பாஷித்துஅவர்களைப் போன்றே தன்னை காட்டிக் கொள்ள மாட்டார்இதன்விளைவு தான் ஊரில் அவர் மீது சிலருக்கு உள்ள பகை.
 
இதை நான் தக்கலையில் அவர் தொலைபேசித் துறையில் பணி செய்யும்போதே கவனித்திருக்கிறேன்அவர் ஒரு பெரிய நாவலை கையில் ஏந்திபடித்தபடி சாலையில் நடப்பார்என் அத்தான் வீட்டுக்கு வந்தால்(என்னை புண்படுத்தும் நோக்கில்இதைச் சொல்லி ஜெ.மோவை பகடிபண்ணுவார்பத்மநாபபுரத்தில் அவருக்கு வீட்டை வாடகைக்குவிட்டவர்களுக்கும் அவர் அந்நியர் தான்ஒருவேளை ஜெயமோகன்சென்னையிலோ பெங்களூரிலோ வாழ்ந்திருந்தால் இந்தஅணுகுமுறையினால் எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காதுஆனால் ஊரில்நீங்கள் மற்றமையாகபொருந்தாதவராகஉதிரியாகஅன்னியோன்யமாய் பழகாதவராக இருந்தால் வெறுக்கப்படுவீர்கள்ஏனென்றால் அது சாதி அடையாளங்களுடன்யாருடைய இடம் என்னயாருடைய தாத்தாபாட்டனார் யார் என்பது வரை தெரிந்து வைத்துக்கொண்டு பழகும் மனிதர்களால் ஆனதுஅங்கு நீங்கள் ஒன்றுசாதியமைப்பு ஒன்றின் உறுப்பினராகவோ அல்லது அதற்குவெளியாளாகவோ மட்டுமே இருக்க முடியும்ஜெயமோகனைப்போன்றவர்கள் இந்த இருமைக்குள் மாட்டாதவர்கள்மற்றபடி அவரதுதிமிரோ சமூகமாக்கல் திறனின்மையோ அவரை அப்படி ஊரில் இருந்துவிலக்கி வைப்பதாய் நான் நினைக்கவில்லை
 
இதை ஏன் வலியுறுத்தி சொல்கிறேன் என்றால்ஜெயமோகன் அண்டைஅயலாருடன் நன்கு பழகி பிரசித்தமாய் இருப்பவர் என்றால்அந்தகடைக்கார அம்மணியிடமும் சுமூகமாய் பேசி நைசாய் விசயத்தைசமாளித்திருப்பார்இந்த பிரச்சினையும் காவல் நிலையம் வரைசென்றிருக்காதுஊர் பிரமுகர்கள்அயலாருடன் சேர்ந்து இந்தபிரச்சனையை பேசி முடித்திருக்கலாம்ஆம் அது ஊர்க்காடு அல்லநாகர்கோயில் டவுன்ஆனால் அது இன்னமும் பாதி ஊர் தான்.
 
அடுத்துஅந்த ஊர் மக்களிடம் கண்ணியமான professionalism, நுகர்வோரை பவ்யமாய் நடத்தும் பொலிவை எல்லாம் காண முடியாதுஊரிலேயே அங்கு பிறந்த வளர்ந்த என்னையே அங்குள்ளகடைக்காரார்கள் வெகுவாக கடுப்பேற்றி இருக்கிறார்கள்ஒட்டல்சர்வரில் இருந்து பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர் வரை சிங்கம்சூர்யா போலத் தான் பேசுவார்கள்காசு கொடுக்கிறவரை கடன் வாங்கவந்தவரைப் போல் அலட்சியமாய் நடத்துவார்கள் (கவிஞர் நட.சிவகுமார்இதை தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்), ஆனால் அன்பாய்கனிவாய் பழகினால் ஓடி ஓடி வேலை செய்வார்கள்இதனால் தான்ஊரில் நீங்கள் வெற்றிலை பார்க்கு வாங்க போனாலும் அங்கேஉட்கார்ந்திருப்பவரை “மாமாஅண்ணே” என விளித்து அணுக்கமாய்பழகி வர வேண்டும்அப்போது தான் உடனே வெற்றிலை பாக்கைநீட்டுவார்கள்பாக்கு தலைக்கு ஏறி செருக வைக்கிறதுவேற கொடுங்கஎன கேட்டு வாங்கலாம்முறைத்தபடி இதையே சொல்லில் கேட்டால்போலே ****மோனே” என அநாயசமாய் வைவார்கள்நான்படித்தவன்பெரிய வேலையில் இருக்கிறவன் என்றெல்லாம் அவர்களிடம்சொன்னால் புரியாதுஇதனால் தான் நீங்கள் தக்கலையிலோநாகர்கோயிலிலோ ஓட்டலில் நல்ல மரியாதை கிடைக்கவேண்டுமென்றால் சர்வர்களை பெயர் சொல்லி அழைக்குமளவுக்குதெரிந்து வைத்திருக்க வேண்டும்இல்லாவிட்டால் கோப்பையைவைப்பார்கள்ஆனால் தண்ணீர் ஊற்ற மாட்டார்கள்தட்டு அழுக்காகஇருக்கிறது என்றால் முறைத்து விட்டுப் போவார்கள்சாப்பாடு கொண்டுவருவதை வேண்டுமென்றே தாமதப்படுத்துவார்கள்
இறுதியாகஎங்கள் ஊர் மக்கள் எடுத்ததெற்கெல்லாம் கைநீட்டுவார்கள்கடந்த முறை என் அக்கா மகன் பெங்களூரில் இருந்துஊருக்கு சென்றிருந்த போது தெருவில் போகும் ஒரு குடிகாரனுக்கும்அவனுக்கும் கைகலப்பாகி விட்டதுஇதை அடுத்து அந்த நபரின்உறவினர்கள் கும்பலாய் அடிக்க வந்து விடுவார்க்ளோ என அம்மாபயந்தபடி இருந்திருக்கிறார்சென்னையில் ஏதாவது தகராறென்றால்இரு தரப்பினரும் எட்டி நின்று கால் மணிநேரம் கத்தி விட்டுநேரமானதும் கிளம்பி சென்று விடுவார்கள்ஆனால் ஊரில் இமையைமூடும் முன்பு கையை நீட்டி விடுவார்கள்வசைச்சொற்களும் அடியும் ஒரேநொடியில் கிளம்பி வரும்சின்ன மனஸ்தாபத்துக்காக தெருவில் கிடந்துபுரண்டு சண்டை போடுகிறவர்களை என் இளமையில்பார்த்திருக்கிறேன்என் குடும்பத்துக்குள்ளே நான் அடிதடியைபார்க்காத நாளில்லைஒருமுறை அப்பா ஒரு புத்தகத்தை என் கால் மீதுவீசிடநான் கோபத்தில் நான் ஒரு ஸ்பெனரை தூக்கி அப்பாவின்முகத்தில் வீச அவரது உதடு பெரிதாக கிழிந்து விட்டதுஅப்பா என்னைஉடனே மன்னித்து விட்டார்ஆனால் என் அத்தானோ நான் என்அப்பாவை அடித்து உதட்டை கிழித்து விட்டதாய், “ஆள் பயங்கரசட்டம்பியாக்கும்” என ஊரெல்லாம் செய்தியை பரப்பி விட்டார்நான்எங்கு போனாலும் கேலியாய் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்என்னைப் போன்ற அப்பிராணிகளுக்கே இப்படியான வரலாறு இருக்கும்போது சொந்தமாய் கடை வைத்திருக்கும்அரசியல் பின்னணி கொண்டஒரு வியாபாரியை சொல்லவா வேண்டும்?
இந்த அனுபவப் பின்புலத்தில் இருந்து கொண்டு எனக்கு அன்றுஜெயமோகனுக்கு வசந்தம் ஸ்டோர்ஸில் என்ன நடந்திருக்கும் எனபுரிந்து கொள்ள முடிகிறது.  
இச்செய்தியை கேட்டதில் இருந்தே ஒரு பக்கம் அதிர்ச்சிவருத்தம்இன்னொரு பக்கம் ஊரில் வைத்து ஜெயமோகனுக்கு இப்படி நிகழ்ந்துவிட்டதே என அவமானமாகவும் உள்ளதுநாகர்கோயிலே கொண்டாடவேண்டிய மேதை அல்லவா அவர்
அது ஜெயமோகன் பிறந்த வளர்ந்த மண்ணும் தான்ஆனால் சுபாவத்தில்அவர் அந்த மண்ணின் மைந்தர் அல்லஅவர் மொழியில் குமரிக்காரர்ஆனால் சுபாவத்தில் நகரவாசிஎதிர்காலத்தில் ஜனங்களுக்கு அவர் மீதுகூடுதல் மரியாதையும் அக்கறையும் விளைய வேண்டும்அவரும் ஊர்மக்களுடன் நெருங்கி பழகும் சந்தர்பங்கள் அமைய வேண்டும்.
இது ஒரு வாடிக்கையாளருக்கும் வியாபாரிக்குமான கைகலப்புஇதில்எழுத்தாளர் எங்கே வந்தார் என முகநூலில் சிலர் கேட்பதைகவனித்தேன்புறமே பார்க்க அப்படித் தெரியலாம்ஆனால் எழுத்தாளன்நுட்பமானவன்மென்மையானவன்போற்றி பாதுகாக்க வேண்டியவன்இதை நுண்ணுணர்வு கொண்ட சமூகங்கள் அறிந்திருக்கும்அவனதுகுழந்தைத்தனங்களை அது பொறுத்துக் கொள்ளும்அவனால்கிடைக்கும் பெருமையும் கலாச்சார பங்களிப்பும் குமரி மண்ணின்வாசனை இலக்கிய அந்தஸ்து பெறுவதும் இதற்கான பெறுமதியாகஇருக்கும்இன்றும் நான் நாகர்கோயிலைப் பற்றி குறிப்பிடுகயில் வாசிப்புபழக்கம் கொண்டவர்கள் சு.ராஜெ.மோஇன்னும் சிலபடைப்பாளிகளின் பெயரைப் பற்றி கேட்டு எப்படி இத்தனைஎழுத்தாளர்கள் ஒரே மண்ணில் இருந்து என வியப்பார்கள்இந்தமாதிரியான பெருமை தோசை மாவு விற்பவர்களால் வராதுபணத்துக்காக மட்டும் வேலை செய்பவர்களால் வராதுமுசுடான பலஎழுத்தாளர்களை அறிவேன் - எம்.டி கேரளாவில் அப்படித் தான்இருக்கிறார்கிரிஷ் கர்நாட் கர்நாடகாவில் அப்படியே வாழ்ந்தார்எதிரில் வருபவர்களை தலையுயர்த்திக் கூட பார்க்க மாட்டார்கள்அதற்காக அம்மக்கள் எம்.டியையோ கர்நாடையோ மிதிக்கமாட்டார்கள்மதிப்பார்கள்
 
எழுத்தாளனிடம் யாருக்கும் பிரச்சனை வரக் கூடாது என்றோஎழுத்தாளனுடன் தகராறு வந்தால் ஊர்க்காரர்கள் தலைகுனிந்துவணங்கி பணிய வேண்டும் என நான் கோரவில்லைஆனால்இப்படியான தகராறுதாக்குதல் நிகழும் போது நாம் அதிகம்யோசிக்காமல் ஒரு கலைஞனைஅறிவுஜீவியைஎழுத்தாளனைஆதரிக்க வேண்டும்அதுவே ஒரு பண்பட்ட சமூகத்துக்கு அழகு.
 

Edited by கிருபன்
தூசணச்சொல் அழிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புளிச்சமாவு ஜெயமோகனுக்காக எம்.பிக்களை திரட்டும் விசிக ரவிக்குமார்...! இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை தெரியுமா ?

16thjayamohan-jpg_1200x630xt.jpg

புளிச்சமாவு ஜெயமோகனுக்காக விழுப்புரம் ரவிக்குமார் எம்.பி,  பெண் எம்பிக்களிடம் ஆதரவு திரட்டும் விஷயம் தெரிந்த அந்த பகுதியிலுள்ள பெண்கள் மற்றும் கடைக்காரர்கள் அனைவரும் ஒன்று  கூடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல  கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு திடீர்ன்னு பைக்குல வந்த ஜெயமோகன், ஏண்டி நாயே தே...மவளே... என்ன மாவடி கொடுத்திருக்கன்னு கேட்டுக்கிட்டே மாவு பாக்கெட்டை தூக்கி என்னோட மூஞ்சில வீசினாரு... 'நீதானே பார்த்து எடுத்துட்டுப்போன? இப்பவந்து இப்படி பேசுற?' ந்ன்னு கேட்டேன். உடனே, தண்ணீர் சொம்பை வேகமாக தள்ளிவிட்டுட்டு உள்ளவந்து என் முடியப்பிடிச்சு இழுக்க முயற்சி பண்ணினாரு... பக்கத்துல இருந்த என்னோட கணவர் அந்தாள நெட்டி தள்ளி அடிச்சிட்டாரு... அந்தாளால எங்க மானமே போயிடுச்சு.

அன்னைக்கு வந்த ஆளு மாவு பிடிக்கல. காச கொடுன்னு கேட்டிருந்தா கொடுத்திருப்பேன். இப்படி அசிங்க அசிங்கமா பேசலாமா? எனக்கு அவரை யார்ன்னுக்கூட தெரியாது. ஆனா, நீங்களே சொல்லுங்க... என் கணவருக்கு அவரைத் தெரியுமாம். தெரிஞ்சிருந்தும் அடிச்சார்ன்னா அதுக்குக்காரணம், ஒரு மனைவியை கண்ணு முன்னாடி அப்படி தரக்குறைவா பேசினா எந்தக்கணவன் தான் பார்த்துக்கிட்டு சும்மா நிற்கமுடியுமா?  என  மாவுக்கடைக்காரர் சம்சாரம் கீதா கண்ணீரோடு சொல்கிறார்.

திமுகவை சார்ந்தவரின் கடைக்கு சென்று,  அவரது சம்சாரத்தின் மூஞ்சில் புளிச்ச மாவை  வீசி  வீசி அடித்துள்ளார் ஜெயமோகன். இதனால் காண்டான  கடைக்காரர் ஜெயமோகனை ரோட்டிலேயே புரட்டி எடுத்துள்ளார். சராசரி மனிதர்கள் எல்லோருமே, தனது மனைவியை ஒருவன் அசிங்க அசிங்கமாக திட்டும்போது இப்படி அடிக்கத்தான் செய்வார்கள்? என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர் பொதுவான நெட்டிசன்கள்.

ஆனால், நடந்தாது என்னன்னு கூட தெரியாமல் புளிச்சமாவு ஜெயமோகனுக்காக உதயசூரியன் சின்னத்தில் ஜெயிச்ச விழுப்புரம் எம்.பியும் தி.மு.க.வின் ரவிக்குமார்,  மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசனும், அவசர அவசரமாக ஒரு பெண்ணிடம் அடாவடி செய்த ஜெயமோகனுக்காக வக்காளத்து வாங்கியிருப்பது மட்டுமல்லாமல், போலீசுக்கு பிரஷர் கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

காரணம் கேட்டால் ஒரு எழுத்தாளரை அடிச்சு அட்மிட் பண்ண வச்சிட்டாங்கன்னு சொல்கிறார்கள் இந்த எழுத்தாளர்கள். ஆனால், உண்மை என்னன்னு விசாரிச்சா? கடைக்காரர் செல்வத்தின் சம்சாரம் கீதா நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அட்மிட்டான, ஒன்றரை மணிநேரம் கழித்து தான், திடீரென வந்து அட்மிட் ஆனாராம் புளிச்சமாவு ஜெயமோகன், எழுத்தாளர்கள் எம்.பி. கூட்டாளிகள்  பிரஷரால், கடைக்காரர் செல்வத்தை  போலீஸ் கைது செஞ்ச மேட்டர் தெரிஞ்சதும்  டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டார்.

ஆனால், ஜெயமோகனால் பாதிக்கப்பட்ட கீதா தற்போதுவரை  சிகிச்சை பெற்று வருகிறாராம். இதுல இன்னொரு கொடும என்னன்னா? , திமுகவைச் சேர்ந்த கடைக்கார் செல்வத்துக்கு எதிரா கேஸை ஸ்ட்ராங் பண்ண, பெண் எம்பிக்களும், எழுத்தாளர்களுமான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி  உள்ளிட்ட எழுத்தாளர்களை வக்காளத்துக்கு கூப்பிடவும் பிளான் போட்டுள்ளார்களாம்.

புளிச்சமாவு ஜெயமோகனுக்காக பெண் எம்பிக்களிடம் ஆதரவு திரட்டும் விஷயம் தெரிந்த அந்த பகுதியிலுள்ள பெண்கள் மற்றும் கடைக்காரர்கள் அனைவரும் ஒன்று கூடி புளிச்சமாவு ஜெயமோகனால் பாதிக்கப்பட்ட கீதாவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

https://tamil.asianetnews.com/crime/vck-ravikumar-support-dosa-maavu-jeyamogan-pt6lih

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

 

 

????

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
On 6/15/2019 at 3:47 PM, Nathamuni said:

விகடன் சொல்வது என்னவென்றால், புளித்தது காணாது என்று தான் சண்டை போட்டாராம்.

இதை பெரிதாக்கி அவர் தான் உலகளாவிய ரீதியில் நாறிப்போயிருக்கிறார், தவிர்த்து இருக்கலாம் என்கிறது, விகடன்.

பாருங்க, நோர்வேயில் இருந்து நம்ம பொயட் அய்யாவே குளம்பீட்டாரே.

இவர் பெரிய விருதுகள் எல்லாம் வாங்கிய படைப்பாளி. அவர்கள், ஒரு தோசை மாவு அரைத்து வித்து வாழ்க்கையை ஓட்டும் பாமரர்கள்.

தோசை மாவை தூக்கிக் கொண்டு திரும்பி போனதே சின்னத்தனம், கொடுத்த பின்னர் பெரிய மனது பண்ணி நகர்ந்து போகாமல், அங்கே நின்று, பெண்மணியிடம், எல்லை மீறிய வகையில், தவறுதலாக பேசி, கணவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றார் என்று மீம்ஸ் போட்டு தாக்குகிறார்கள்.

இது தெரியாமல், பொயட் அய்யா வேற கூட்டம் சேர்கிறார். 

ஒரு தோசை மா தொழிலாளிக்காக நாமும் பொங்குகிறோம்.

இவர் பெரிய எழுத்தாளர் என்றால், கொம்பா முளைத்து இருக்கிறது?

பொயட் அய்யா, ஏழைகள், வலிமை இல்லாதவர் பக்கம் நிற்பதே தர்மம்.

பொயட் ஐயா நடிச்சதிலயே பிடிச்ச படம் ஆடுகளம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

????

அழிக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் மறந்துவிட்டேன்.

Quote பண்ணியதை நீங்கள்தான் அழிக்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏற்கனவே புளித்துப்போன மாத்தானே .....
நமக்கு இதற்குள் என்ன வேலை? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/15/2019 at 7:39 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் புளித்துப்போன தோசை மாவு குறித்து கடைக்காரரிடம் கேட்ட எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

இதற்காக ஏராளமான விருதுகளை குவித்துள்ளார் ஜெயமோகன். அதுமட்டுமின்றி நான் கடவுள், அங்காடித்தெரு, கடல், ரஜினியின் நடிப்பில் வெளியான 2.0 விஜயின் சர்கார் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார்.

புளித்துப்போயிருந்த தோசை மாவு

தோசை மாவு பிரச்சனைக்கும் இவர்ரை வரலாறு அவசியமா தோழர்? 😂

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் அறப்படித்த மூஞ்சூறு கூழ்ப்பானைக்குள்  விழுவது தான் வழமை. இப்ப புளித்த தோசை மா பானை போல கிடக்கு.

இனிமேல் இந்த பிரகிருதி புமாஜெமோ ( புளித்த மா ஜெய மோகன் ) என அறியப் படுவாராக !

 

Edited by சாமானியன்
அது பூனையல்ல மூஞ்சூறு

  • கருத்துக்கள உறவுகள்
On 6/15/2019 at 7:55 AM, கிருபன் said:

``நான் தாக்கப்பட்டேன்; காவல் நிலையத்தில்தான் அவரின் தொடர்புகள் புரிந்தது!” - எழுத்தாளர் ஜெயமோகன்

கெட்டுப்போன தோசைமாவு வழங்கியது குறித்து தட்டிக்கேட்ட பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது கடைக்காரர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயமோகன்

 

Image may contain: one or more people

இங்கு,  புளிச்சமா... திருப்பி எடுக்கப் படும்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 6/15/2019 at 10:25 AM, goshan_che said:

ஆதீக, ஆதிக்க வர்க்கத்தின் அடி வருடி ஒரு கடைநிலை தோசை கடை பெண்ணுடன் வம்புக்கு போய் புருசனிடம் வாங்கி கட்டியுள்ளார்.

உழைக்கும் வர்க்கப் பெண்களை எப்படியும் ஏசலாம், என்னவும் செய்யலாம் எனும் ஜெயமோகன் போன்ற பத்தாம் பசலிகளின் மனோ நிலைக்கு நல்ல பாடம்.

 

"ஆதீக, ஆதிக்க வர்க்கத்தின் அடிவருடி", எவ்வளவு அபாண்டமான குற்றச்சாட்டு?  நீங்கள் அவரின் பக்கத்தை வாசிப்பதில்லை என்பது தெரியுது.

தமிழில் ஒரு பெரும் படைப்பை ( வெண்முரசு) நிகழ்த்தும் ஒருவரின் மனநிலை கொந்தளிப்பாகவும், ஒரு எழுத்தாள மேதையின் குழப்படியாகவுமே பார்க்காமல்,  இங்கு யாழில் கழுவி ஊத்துவதும் சகிக்க முடியேல்ல......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.