Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2019 at 11:47 AM, அக்னியஷ்த்ரா said:

நீங்கள் அவ்வாறு நினைத்துக்கொண்டால் அதற்க்கு நானொன்றும் செய்ய முடியாது 
மேலே எழுதியதில் கல்முனை தரமுயர்த்தலையே செய்ய முடியாத என்ற வசனத்தை பாவிக்கும் போது 
இதனை உங்களை நோக்கித்தான் பாவித்திருக்கிறேன் என்றா நினைக்கிறீர்கள்..அந்தளவுக்கு Sense இல்லாதவர்களா நாங்கள் ....? 
தனியை பற்றி தெரியாது நான் இப்போது சிங்கையில் இருப்பதால் தொடர்பில் இல்லை 
நன்றி வணக்கம் 

கோஷன் அக்னியஸ்திராவின் கருத்து உங்களை நோக்கி எழுதப்பட்டதாக எனக்கும் படவில்லை.
உள்ளூரில் உள்ள கையாலாகாத "அரசியல் தனத்தை" சொன்னது போலத்தான் எனக்கும் பட்டது.

  • Replies 112
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஃஃசம்சும் பெட்டி வாங்கினார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

பெட்டி வாங்கினார் என்பது அரசியலில் எல்லோர் மேலும் வைக்கப்படும் குற்றச்சாட்டுத்தான்.

பெட்டி வாங்குபவர் ஆதாரம் வைத்து வாங்க மாட்டார் என்பதும் சரியே.

ஆகவே பெட்டி பற்றி கதைப்பது வீன்வேலை.

ஆனால் பெட்டி வாங்குவதை விட சம் சும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிவிட்டனர் என்பதே அவர்கள் மேல் உள்ள பாரிய குற்றச்சாட்டு.

சம்சும் சொன்னமாரி தீர்வு திட்டத்தை கொண்டு வந்திருந்தால் இப்போதும் நான் அவர்களையே ஆதரித்திருப்பேன். 

ஆனால் அவர்கள் செய்ததோ விக்கியரோடு சண்டை.  

விக்கியர் எலக்சென் வெண்ட நேரம் ஒரு அருமையான மொமெண்டம் ( மன்னிக்கவும் பெருமாள் பெளதீகவியலில் கற்ற தமிழ்ச் சொல் மறந்து விட்டது) ஏற்பட்டிருந்தது. 

இதை வைத்து நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒரு பலமான அமைப்பை கட்டி எழுப்பி இருக்கலாம். ஆனால் இந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டார்கள்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தாமைக்கு புலம்பெயர் அமைப்புக்கள் விலகி நிண்டதும் கொடி பிடிப்போம் என்று அடம் பிடித்ததும் கூட ஒரு காரணமே. 

ஆனால் இந்த வழுக்கலின் சிங்கப் பங்கு (அட அதாங்க லயன் ஷேர்) சம்சும் மையே சேரும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

சரி

அப்போ  தமிழரின் தாயக  வாழ்வு???

இது தான் பிரச்சனையே.அப்போ தமிழர்களின் வாழ்வு என்டு வந்திருக்க வேணும்.நிலத்தை தக்க வைப்பதில் தாயகத்தில் வாழும் மக்களை  மட்டும் கை காட்டுவதில் பலன் இல்லை.போததற்கு அவர்கள் வாழும் நாட்டடையும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தையும் கேலி பண்ணியவாறு.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

ஆனால் பெட்டி வாங்குவதை விட சம் சும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிவிட்டனர் என்பதே அவர்கள் மேல் உள்ள பாரிய குற்றச்சாட்டு.

சம்சும் சொன்னமாரி தீர்வு திட்டத்தை கொண்டு வந்திருந்தால் இப்போதும் நான் அவர்களையே ஆதரித்திருப்பேன். 

ஆனால் அவர்கள் செய்ததோ விக்கியரோடு சண்டை.  

விக்கியர் எலக்சென் வெண்ட நேரம் ஒரு அருமையான மொமெண்டம் ( மன்னிக்கவும் பெருமாள் பெளதீகவியலில் கற்ற தமிழ்ச் சொல் மறந்து விட்டது) ஏற்பட்டிருந்தது. 

இதை வைத்து நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒரு பலமான அமைப்பை கட்டி எழுப்பி இருக்கலாம். ஆனால் இந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டார்கள்.

ஆனால் இந்த வழுக்கலின் சிங்கப் பங்கு (அட அதாங்க லயன் ஷேர்) சம்சும் மையே சேரும்.

சொல்ல வார்த்தைகளில்லை எப்படி நாம் இருவரும் முரண்படுகின்றோம் என்று தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

விக்கியர் எலக்சென் வெண்ட நேரம் ஒரு அருமையான மொமெண்டம் ( மன்னிக்கவும் பெருமாள் பெளதீகவியலில் கற்ற தமிழ்ச் சொல் மறந்து விட்டது) ஏற்பட்டிருந்தது. 

திருடனை நாலு பேர் விசாரிக்கும்போது திருடன் நாலு ஆங்கில வார்த்தை பேசினால் விசாரிப்பவர் படிச்சவரா இருந்தாலும் படிக்காதவரா இருந்தாலும் ஒரு  கனம் தடுமாறுவினம் அந்த இடைவெளியில் திருடன் சுதாகரித்து கொள்ளுவான் (justin உங்களை திருடன் என்று சொல்லவில்லை ) அதே போலத்தான் இலகுவாக நேர்மை என்று அடித்துவிட்டு போக வேண்டியவர் விசுகரின்  கனதியான கேள்விகளுக்கு  பதில் இல்லாமல் திசை திருப்பும் விளயாட்டு மற்றபடி சில புழக்கம் அற்றவை இலகுவாக்க ஆங்கிலத்தில் போடுவது கருத்தை சொல்லுபவர்களுக்கு இலகுவாக்கும் உங்கள் மொமெண்டம் தமிழ் உந்தம் என்று வரனும் என்று நினைக்கிறன் கூகிளை கிண்டியதில் அப்படித்தான் காட்டுது.   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

கோஷன் அக்னியஸ்திராவின் கருத்து உங்களை நோக்கி எழுதப்பட்டதாக எனக்கும் படவில்லை.
உள்ளூரில் உள்ள கையாலாகாத "அரசியல் தனத்தை" சொன்னது போலத்தான் எனக்கும் பட்டது.

நன்றி.

அவரும் அப்படித்தான் சொல்கிறார். எனவே நானும் அதையே எற்றுக்கொண்டுவிட்டேன்.

2 hours ago, விசுகு said:

சொல்ல வார்த்தைகளில்லை எப்படி நாம் இருவரும் முரண்படுகின்றோம் என்று தெரியவில்லை 

எனக்கும் உங்களுக்கும் மட்டும் இல்லை. இங்கே எதிரும் புதிருமாக கதைக்கும் நம் எல்லொருக்கும் இடயேயும் நூழிழைதான் வித்தியாசம். எமது எல்லோரதும் அடிபடை நோக்கமும் ஒன்றுதான். எமது மக்களின், கெளரவமான, அமைதியான வாழ்வு. எம் இனத்தின், கலாச்சாரத்தின், மொழியின் நீட்சி. எமது நிலத்தின் பாதுகாப்பு.

2 hours ago, பெருமாள் said:

திருடனை நாலு பேர் விசாரிக்கும்போது திருடன் நாலு ஆங்கில வார்த்தை பேசினால் விசாரிப்பவர் படிச்சவரா இருந்தாலும் படிக்காதவரா இருந்தாலும் ஒரு  கனம் தடுமாறுவினம் அந்த இடைவெளியில் திருடன் சுதாகரித்து கொள்ளுவான் (justin உங்களை திருடன் என்று சொல்லவில்லை ) அதே போலத்தான் இலகுவாக நேர்மை என்று அடித்துவிட்டு போக வேண்டியவர் விசுகரின்  கனதியான கேள்விகளுக்கு  பதில் இல்லாமல் திசை திருப்பும் விளயாட்டு மற்றபடி சில புழக்கம் அற்றவை இலகுவாக்க ஆங்கிலத்தில் போடுவது கருத்தை சொல்லுபவர்களுக்கு இலகுவாக்கும் உங்கள் மொமெண்டம் தமிழ் உந்தம் என்று வரனும் என்று நினைக்கிறன் கூகிளை கிண்டியதில் அப்படித்தான் காட்டுது.   

உந்தத்துக்கு நன்றி😂. மணியம், செளந்தி எல்லோரும் உந்தி, உந்தி ஊட்டினாலும் உந்தம் மறந்தே போய்விட்டது 😂

ஜஸ்டீனுக்கு நான் வக்காலத்து வாங்க தேவையில்லை( உண்மையிலேயே ஈழப்பிரியன் சொன்னது போல் அவர் வக்கீலாக வந்திருக்க வேண்டிய ஆள்) ஆனால் இண்டர்கிரிட்டி எனும் ஆங்கிலச் சொல்லில் இருக்கும் கனதியான அர்த்தம், நேர்மை எனும் சொல்லில் இல்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

அண்மையில்

செல்வம் அடைக்கலநாதன்

மற்றும்  மாவை சேனாதிராசா ஆகியவர்களது தாயக வீடுகள் சார்ந்து

படங்கள்வெளியாகி  தாயக  மக்களால் விமர்சிக்கப்பட்டன

எனக்கே  தனிப்பட  சிறீதரனிடம் அனுபவமுண்டு

எந்த அனுபவத்தில்  அல்லது  ஆதாரத்துடன்

Justin அவர்களை  அப்படி  சொல்வது  தவறு  என்கிறார்??

நான் சம்பந்தரையும் சுமந்திரனையும் பற்றி மட்டுமே சொன்னேன் என்பதைக் கவனிக்கவும்! மாவை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. செல்வம்: முன்னாள் போராளிகள் பா.உக்களாக வந்த போது என்ன செய்தார்கள் என்று ஏற்கனவே எழுதியுள்ளேன் மேலே! 

அரசியல் வாதிகள் தீர்வு நோக்கி என்ன செய்கிறார்களோ என ஆராய்வதை விட எமது மக்கள் தாயகப்பகுதிகளில் தமது இருப்பை மற்றும் வளங்களை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என எழுதினால் மிகப் பயன் உள்ளதாய் இருக்கும் என நினைக்கிறேன் .. நான் தாயகத்திலிருந்து( கிராமத்திலிருந்து) வெளியேறி கிட்டத்தட்ட13 ஆண்டுகள்

அப்போதிருந்த நிலைக்கும் இப்போதுள்ள நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது அப்போது இயக்கம் இருந்தது எல்லாவற்றையும் பார்த்து கொள்ளும் எனும் நிலை மாறி கிராம மக்கள் தங்களிற்கிடையே குழுக்களை அமைத்து ( கமக்கார அமைப்பு / வேறு ) தமது வளங்களை / இருப்பை தக்க வைக்க போராட தொடங்கி உள்ளனர் 

நான் அறிந்த வரையில் எனது கிராமத்தில் இப்போது 

வயல் நிலங்களை நிரவி வீடுகள் ஆக்குதல் முற்றாக தடை ( அனுமதி எடுக்கவே ரொம்ப கஸ்டம். தகுந்த காரணங்கள் காட்டி கமக்கார அமைப்பின் கடிதம் கொண்டுபோகணும் 

மண் ஏற்றுதல்/ மணல் ஏற்றுதல் தடை 

அண்மையில் ஒருவர் பொலிஸக்கு காசு கொடுத்து மண் ஏற்றி உள்ளார் கமக்கார அமைப்பின் தலையீட்டினால் ,பொலிஸ் வேறு வழியின்றி அவரை கைது செய்ததுடன்  ஏற்றி்ய மண் அவ்வளவையும் ஏற்றிய இடத்தில் திரும்ப போட உத்தரவு 

குழாய் கிணறு அடிக்க அனுமதி பெற வேண்டும் நீர் மட்டத்தை பேணுவதற்கு 

குழாய்கிணற்று மூலம் பாசனம் செய்வது முற்றிலும் தடை

குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் சுகாதாரமற்ற முறையில் கோழிபண்ணை வைக்க்தடை 

மரம் வெட்ட அனுமதி பெற வேண்டும் 

அத்துடன் ஊரில் உள்ள பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிலும்  ஊர்பொடியள் தான் முன் நிக்கிறார்கள் என்கிறார் அம்மா யாரும் ஒரு புது முகம் சந்தேகப்படும்படி ஊரில் நடமாடினால் உடனே மறித்து யார் வீட்டிற்கு வந்துள்ளீர்கள் என்பது போன்ற விபரங்களை கேட்கிறார்கள்,

யுத்தம் முடிந்த காலப்பகுதியில் அதிகரித்து காணப்பட்ட திருட்டு கசிப்பு காய்சல் என்பன அறவே குறைந்துள்ளன.குடித்து விட்டு வந்தாலோ/ சாராயம் எடுத்து வந்தாலோ பொலிஸ் கைது செய்கிறார்கள்...

இவை எமது கிராமத்தில் தற்போது உள்ள சில நடைமுறைகள்

கரையோரக்கிராமங்களில் கூட நீங்கள் கேள்விப்படிருப்பீர்கள் சட்டநடவடிக்கை மூலம் சட்ட விரோத மீன்பிடி / கடல்லட்டை பிடிப்போரை வெளியேற்றியமை 

அங்குள்ள மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் ,என்னைப்பொறுத்தளவில் அரசியல்வாதிகளை நம்புவதை விட மக்களை நம்பலாம், சமூக மட்டத்தில் உள்ள அமைப்புக்களை வலுப்படுத்தலாம்  ஊருக்கு போய் ஆடு வெட்டி பந்தா காட்டுவதை விட அங்கு உள்ள இளைஞர்களின் விளையாட்டு அமைப்புகளிற்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுக்கலாம்

கோயில்களிற்கு வழங்கும் பணத்தை குறைத்து பாடசாலைகளிற்கான  ஒரு கிணறு அமைக்கவோ மாணவர்களிற்கான தரமான கழிப்பறை அமைக்கவோ ,கிராமத்தில் உங்கள் மறைந்த பெற்றோர் நினைவாக பஸ் நிலையம் அமைத்தோ கொடுக்கலாம் 

வெறுமனே அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவதால் என்ன நடக்க போகிறது? இப்போதைக்கான தற்காலிக தீர்வு அங்குள்ள மக்களின் இருப்பை தக்கவைத்தலும் எமது நிலம் / வளம் பறி போகாமல் காத்தலும்  எமது மக்களை பொருளாதார ரீதியில் உயர்த்தலும் 

பொருளாதார அபிவிருத்திக்கு மனோகணேசன் / விஜயகலா போன்றோரினை ஏதோவொரு வழியில் பயன்படுத்தலாம் 

இது சம்பந்தமாக ஊரில் உள்ளோர் இன்னும் விரிவாக எழுதலாம் . என நம்புகிறேன் 

இது இத்திரிக்கு தொடர்பில்லாமலும் இருக்கலாம் அப்பிடி எனில் மன்னிச்சுக்க 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, அபராஜிதன் said:

மன்னிக்க மாட்டோம் ஏனென்றால் இது இத் திரிக்கு 100% தொடர்பான விடயம் 

  • கருத்துக்கள உறவுகள்

20 minutes ago, அபராஜிதன் said:

என்னைப்பொறுத்தளவில் அரசியல்வாதிகளை நம்புவதை விட மக்களை நம்பலாம், சமூக மட்டத்தில் உள்ள அமைப்புக்களை வலுப்படுத்தலாம்  ஊருக்கு போய் ஆடு வெட்டி பந்தா காட்டுவதை விட அங்கு உள்ள இளைஞர்களின் விளையாட்டு அமைப்புகளிற்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுக்கலாம்

கோயில்களிற்கு வழங்கும் பணத்தை குறைத்து பாடசாலைகளிற்கான  ஒரு கிணறு அமைக்கவோ மாணவர்களிற்கான தரமான கழிப்பறை அமைக்கவோ ,கிராமத்தில் உங்கள் மறைந்த பெற்றோர் நினைவாக பஸ் நிலையம் அமைத்தோ கொடுக்கலாம் 

வெறுமனே அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவதால் என்ன நடக்க போகிறது? இப்போதைக்கான தற்காலிக தீர்வு அங்குள்ள மக்களின் இருப்பை தக்கவைத்தலும் எமது நிலம் / வளம் பறி போகாமல் காத்தலும்  எமது மக்களை பொருளாதார ரீதியில் உயர்த்தலும்

மிக்க நன்றிகள் அபராஜிதன்.. நான் இந்த திரியில் வந்து இதை எழுதுவதா இல்லையா என தடுமாறிக் கொண்டிருந்த விஷயங்களை நீங்கள் எழுதியமைக்கு..

பொருளாதார ரீதியிலும் அதே சமயம் சில சமூக விழிப்புணர்வுகளும் வேண்டும் என்பது என் கருத்து.. 

  • கருத்துக்கள உறவுகள்

201808142042195046_BJP-MPs-petition-to-P

முதலில் அவையளின் இன பெருக்க வீதத்தை கட்டுப்படுத்த வழிய பாருங்கள்.. "ஈழஸ்தான்" அமைந்து அப்புறம் அதற்கு ஒரு போராட்டம் ..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

201808142042195046_BJP-MPs-petition-to-P

முதலில் அவையளின் இன பெருக்க வீதத்தை கட்டுப்படுத்த வழிய பாருங்கள்.. "ஈழஸ்தான்" அமைந்து அப்புறம் அதற்கு ஒரு போராட்டம் ..😢

அதை கட்டுப்படுத்த இயலாது, ஒன்று செய்யலாம் எங்கடை சனம் 25-30 வயதிற்குள் திருமணம் செய்து 5/6 பிள்ளையளை பெறலாம்!

நானும் நண்பர்களிடம் சொல்லி பாத்தன்! அவங்கள் 2க்கு மேல அசையாங்களாம்! பெத்து வளர்த்தால் தான் கஸ்ரம் தெரியுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

உங்கள் மொமெண்டம் தமிழ் உந்தம் என்று வரனும் என்று நினைக்கிறன் கூகிளை கிண்டியதில் அப்படித்தான் காட்டுது.   

சரியான பதில் ...உந்தம் என்பதே சரி 
உந்தம் =திணிவு * வேகம் 
p=m*v
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அபராஜிதன் said:

அரசியல் வாதிகள் தீர்வு நோக்கி என்ன செய்கிறார்களோ என ஆராய்வதை விட எமது மக்கள் தாயகப்பகுதிகளில் தமது இருப்பை மற்றும் வளங்களை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என எழுதினால் மிகப் பயன் உள்ளதாய் இருக்கும் என நினைக்கிறேன் .. நான் தாயகத்திலிருந்து( கிராமத்திலிருந்து) வெளியேறி கிட்டத்தட்ட13 ஆண்டுகள்

அப்போதிருந்த நிலைக்கும் இப்போதுள்ள நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது அப்போது இயக்கம் இருந்தது எல்லாவற்றையும் பார்த்து கொள்ளும் எனும் நிலை மாறி கிராம மக்கள் தங்களிற்கிடையே குழுக்களை அமைத்து ( கமக்கார அமைப்பு / வேறு ) தமது வளங்களை / இருப்பை தக்க வைக்க போராட தொடங்கி உள்ளனர் 

நான் அறிந்த வரையில் எனது கிராமத்தில் இப்போது 

வயல் நிலங்களை நிரவி வீடுகள் ஆக்குதல் முற்றாக தடை ( அனுமதி எடுக்கவே ரொம்ப கஸ்டம். தகுந்த காரணங்கள் காட்டி கமக்கார அமைப்பின் கடிதம் கொண்டுபோகணும் 

மண் ஏற்றுதல்/ மணல் ஏற்றுதல் தடை 

அண்மையில் ஒருவர் பொலிஸக்கு காசு கொடுத்து மண் ஏற்றி உள்ளார் கமக்கார அமைப்பின் தலையீட்டினால் ,பொலிஸ் வேறு வழியின்றி அவரை கைது செய்ததுடன்  ஏற்றி்ய மண் அவ்வளவையும் ஏற்றிய இடத்தில் திரும்ப போட உத்தரவு 

குழாய் கிணறு அடிக்க அனுமதி பெற வேண்டும் நீர் மட்டத்தை பேணுவதற்கு 

குழாய்கிணற்று மூலம் பாசனம் செய்வது முற்றிலும் தடை

குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் சுகாதாரமற்ற முறையில் கோழிபண்ணை வைக்க்தடை 

மரம் வெட்ட அனுமதி பெற வேண்டும் 

அத்துடன் ஊரில் உள்ள பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிலும்  ஊர்பொடியள் தான் முன் நிக்கிறார்கள் என்கிறார் அம்மா யாரும் ஒரு புது முகம் சந்தேகப்படும்படி ஊரில் நடமாடினால் உடனே மறித்து யார் வீட்டிற்கு வந்துள்ளீர்கள் என்பது போன்ற விபரங்களை கேட்கிறார்கள்,

யுத்தம் முடிந்த காலப்பகுதியில் அதிகரித்து காணப்பட்ட திருட்டு கசிப்பு காய்சல் என்பன அறவே குறைந்துள்ளன.குடித்து விட்டு வந்தாலோ/ சாராயம் எடுத்து வந்தாலோ பொலிஸ் கைது செய்கிறார்கள்...

இவை எமது கிராமத்தில் தற்போது உள்ள சில நடைமுறைகள்

கரையோரக்கிராமங்களில் கூட நீங்கள் கேள்விப்படிருப்பீர்கள் சட்டநடவடிக்கை மூலம் சட்ட விரோத மீன்பிடி / கடல்லட்டை பிடிப்போரை வெளியேற்றியமை 

அங்குள்ள மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் ,என்னைப்பொறுத்தளவில் அரசியல்வாதிகளை நம்புவதை விட மக்களை நம்பலாம், சமூக மட்டத்தில் உள்ள அமைப்புக்களை வலுப்படுத்தலாம்  ஊருக்கு போய் ஆடு வெட்டி பந்தா காட்டுவதை விட அங்கு உள்ள இளைஞர்களின் விளையாட்டு அமைப்புகளிற்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுக்கலாம்

கோயில்களிற்கு வழங்கும் பணத்தை குறைத்து பாடசாலைகளிற்கான  ஒரு கிணறு அமைக்கவோ மாணவர்களிற்கான தரமான கழிப்பறை அமைக்கவோ ,கிராமத்தில் உங்கள் மறைந்த பெற்றோர் நினைவாக பஸ் நிலையம் அமைத்தோ கொடுக்கலாம் 

வெறுமனே அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவதால் என்ன நடக்க போகிறது? இப்போதைக்கான தற்காலிக தீர்வு அங்குள்ள மக்களின் இருப்பை தக்கவைத்தலும் எமது நிலம் / வளம் பறி போகாமல் காத்தலும்  எமது மக்களை பொருளாதார ரீதியில் உயர்த்தலும் 

பொருளாதார அபிவிருத்திக்கு மனோகணேசன் / விஜயகலா போன்றோரினை ஏதோவொரு வழியில் பயன்படுத்தலாம் 

இது சம்பந்தமாக ஊரில் உள்ளோர் இன்னும் விரிவாக எழுதலாம் . என நம்புகிறேன் 

இது இத்திரிக்கு தொடர்பில்லாமலும் இருக்கலாம் அப்பிடி எனில் மன்னிச்சுக்க 

உங்களது  கருத்தோடு  முரண்பாடில்லை

ஏனெனில் ஊர் சம்பந்தமாக முன்னேற்றங்களுக்குக்கான நடவடிக்கைகளை ஏற்கனவே  ஆரம்பித்தவர்களில்

எனது ஊரவர்  முக்கியமானவர்கள்

தேசியம் தாயகம்  என  நின்ற  நான் கூட 

2009 க்கு  பின்னர் அதில்  ஒதுங்கினேன்

காரணம் நீங்கள்  மேலே  சொல்வதை  உணர்ந்ததால் தான்.

அது சார்ந்த சில  நடவடிக்கைகளை இங்கே  நான் பதிவதற்கும் காரணம்

மற்றவர்களை   ஊக்குவிக்கவே.

ஆனால் அனுபவத்தினூடாக எமது  ஊர்  சார்ந்த நடவடிக்கைகளுக்கு 

ஒரு  எல்லைக்கோடுண்டு 

அதை  தாண்ட  முடியாது

அத்துடன்  எமது (புலத்தின்) நல்லெண்ணங்களையும்  அங்குள்ள அரசியல்வாதிகள் 

தமது சுயநலத்துக்கு  பாவிப்பதுடன் தமது அரச  ஒதுக்கீடுகளை பதுக்கிக்கொள்கின்றனர்

வீதிகளை  பராமரிப்பது,   துப்பரவு  செய்வது  

வைத்தியசாலைகளை பராமரிப்பது, அபிவிருத்தி  செய்வது

பாடசாலைகளை  பராமரிப்பது,   கட்டிடம்  கட்டுவது, அதனை  திறப்பது,  மாணவர் உணவிலிருந்து உபகரணம்வரை

இவற்றைக்கூட எம்மேல்  போட்டு விடுகிறார்கள்.

இந்த  அனுபவத்தாலும் 

தமிழக அரசியலாக  எம்மவர்கள்  வந்து விடக்கூடாது என்ற வேதனையிலுமே அவர்களை  சாடுகின்றோம்

நன்றி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பரொருவரின் சமூக ஆற்றலை முன்னேற்றும் நோக்கிலான தனி நபர் முயற்சி , மிகவும் வரவேற்கத்தக்க முன்மாதிரி. செய்வதறியாரடி என்று முயங்கியிராமல் வீணையை புழுதியில் விழ விடாமல் அல்லது விழுந்ததை எடுத்து  தூசி தட்டி செப்பனிடும் செயல்.  

அவருடைய பதிவை மொழி பெயர்க்காமல் அப்படியே  பதிவிடுகிறேன் , ஏதேனும் கருத்து மாற்றங்கள் மொழி பெயர்ப்பில் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதால். 

  அன்பர்களுக்கு ஏற்புடைத்ததாக இருக்கும் என நம்புகிறேன். 

 I was facing opposition in my family when I helped some charitable organisations or fundraising events. Since 2014, I told my wife I wanted to sacrifice my one day towards helping the needy families and you will have no rights to oppose as other six days are spent for my life and the family. Since then I have been driving a taxi on Saturdays about 12 -14 hours and helping many families on going or set up their livelihood by providing them with  well for farming, setting up chicken farm etc. Recently my second son joined me in helping one of the families.

புலம் பெயர் நாட்டில் வளர்ந்து உத்தியோகம் பார்க்கும் மகனும் இதில்   இணைகிறார்….

  • கருத்துக்கள உறவுகள்

மேலே அபரஜிதன் சொல்வதில் நியாயம் இருந்தாலும், விசுகு சொல்வதுதான் நடைமுறை உண்மை. தவிரவும் ஒவ்வொருவரும் தனி மனித அளவில் இயலுமானதை செய்து கொண்டுதானே வாறம்?

எப்படி என்றாலும் ஜனநாயக நாடு, மக்கள் பிரதிநிதிகள்தான் முடிவெடுப்பர் என்றுதான் கடைசியில் முடிப்பார்கள்.

மக்கள் குறைந்த பட்சம், கிராமம் கிராமம் என இல்லாமல், பாரளுமன் தொகுதி அடிப்படையிலாவது ஒன்று கூடி, சிவில் சமூக அமைப்பு ஒன்றை, அரசியல்வாதிகள் தவிர்த்து அமைத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு அமைப்பு பின் அவற்றின் மாவட்ட, மாகாண ஒன்றியம் என செயல்படலாம். 

கிட்டத்தட்ட சாரணர் அமைப்பை, லயன்ஸ் கிளப்பை போல.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, அபராஜிதன் said:

அரசியல் வாதிகள் தீர்வு நோக்கி என்ன செய்கிறார்களோ என ஆராய்வதை விட எமது மக்கள் தாயகப்பகுதிகளில் தமது இருப்பை மற்றும் வளங்களை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என எழுதினால் மிகப் பயன் உள்ளதாய் இருக்கும் என நினைக்கிறேன் .. நான் தாயகத்திலிருந்து( கிராமத்திலிருந்து) வெளியேறி கிட்டத்தட்ட13 ஆண்டுகள்

அப்போதிருந்த நிலைக்கும் இப்போதுள்ள நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது அப்போது இயக்கம் இருந்தது எல்லாவற்றையும் பார்த்து கொள்ளும் எனும் நிலை மாறி கிராம மக்கள் தங்களிற்கிடையே குழுக்களை அமைத்து ( கமக்கார அமைப்பு / வேறு ) தமது வளங்களை / இருப்பை தக்க வைக்க போராட தொடங்கி உள்ளனர் 

நான் அறிந்த வரையில் எனது கிராமத்தில் இப்போது 

வயல் நிலங்களை நிரவி வீடுகள் ஆக்குதல் முற்றாக தடை ( அனுமதி எடுக்கவே ரொம்ப கஸ்டம். தகுந்த காரணங்கள் காட்டி கமக்கார அமைப்பின் கடிதம் கொண்டுபோகணும் 

மண் ஏற்றுதல்/ மணல் ஏற்றுதல் தடை 

அண்மையில் ஒருவர் பொலிஸக்கு காசு கொடுத்து மண் ஏற்றி உள்ளார் கமக்கார அமைப்பின் தலையீட்டினால் ,பொலிஸ் வேறு வழியின்றி அவரை கைது செய்ததுடன்  ஏற்றி்ய மண் அவ்வளவையும் ஏற்றிய இடத்தில் திரும்ப போட உத்தரவு 

குழாய் கிணறு அடிக்க அனுமதி பெற வேண்டும் நீர் மட்டத்தை பேணுவதற்கு 

குழாய்கிணற்று மூலம் பாசனம் செய்வது முற்றிலும் தடை

குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் சுகாதாரமற்ற முறையில் கோழிபண்ணை வைக்க்தடை 

மரம் வெட்ட அனுமதி பெற வேண்டும் 

அத்துடன் ஊரில் உள்ள பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிலும்  ஊர்பொடியள் தான் முன் நிக்கிறார்கள் என்கிறார் அம்மா யாரும் ஒரு புது முகம் சந்தேகப்படும்படி ஊரில் நடமாடினால் உடனே மறித்து யார் வீட்டிற்கு வந்துள்ளீர்கள் என்பது போன்ற விபரங்களை கேட்கிறார்கள்,

யுத்தம் முடிந்த காலப்பகுதியில் அதிகரித்து காணப்பட்ட திருட்டு கசிப்பு காய்சல் என்பன அறவே குறைந்துள்ளன.குடித்து விட்டு வந்தாலோ/ சாராயம் எடுத்து வந்தாலோ பொலிஸ் கைது செய்கிறார்கள்...

இவை எமது கிராமத்தில் தற்போது உள்ள சில நடைமுறைகள்

கரையோரக்கிராமங்களில் கூட நீங்கள் கேள்விப்படிருப்பீர்கள் சட்டநடவடிக்கை மூலம் சட்ட விரோத மீன்பிடி / கடல்லட்டை பிடிப்போரை வெளியேற்றியமை 

அங்குள்ள மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் ,என்னைப்பொறுத்தளவில் அரசியல்வாதிகளை நம்புவதை விட மக்களை நம்பலாம், சமூக மட்டத்தில் உள்ள அமைப்புக்களை வலுப்படுத்தலாம்  ஊருக்கு போய் ஆடு வெட்டி பந்தா காட்டுவதை விட அங்கு உள்ள இளைஞர்களின் விளையாட்டு அமைப்புகளிற்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுக்கலாம்

கோயில்களிற்கு வழங்கும் பணத்தை குறைத்து பாடசாலைகளிற்கான  ஒரு கிணறு அமைக்கவோ மாணவர்களிற்கான தரமான கழிப்பறை அமைக்கவோ ,கிராமத்தில் உங்கள் மறைந்த பெற்றோர் நினைவாக பஸ் நிலையம் அமைத்தோ கொடுக்கலாம் 

வெறுமனே அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவதால் என்ன நடக்க போகிறது? இப்போதைக்கான தற்காலிக தீர்வு அங்குள்ள மக்களின் இருப்பை தக்கவைத்தலும் எமது நிலம் / வளம் பறி போகாமல் காத்தலும்  எமது மக்களை பொருளாதார ரீதியில் உயர்த்தலும் 

பொருளாதார அபிவிருத்திக்கு மனோகணேசன் / விஜயகலா போன்றோரினை ஏதோவொரு வழியில் பயன்படுத்தலாம் 

இது சம்பந்தமாக ஊரில் உள்ளோர் இன்னும் விரிவாக எழுதலாம் . என நம்புகிறேன் 

இது இத்திரிக்கு தொடர்பில்லாமலும் இருக்கலாம் அப்பிடி எனில் மன்னிச்சுக்க 

இதுதான் எனது நீன்டகால நிலைப்பாடு.இந்த நிலமை வெகு விரைவில் வரும்.மற்றும்படி இங்கு இருந்து தாயகத்தில் எது எங்கை இருக்குது.என்ன நடக்குது என்டு தெரியாமல் தங்கள் வித்துவத்தை மட்டும் வேண்டும் என்றால் காட்ட ஏதும் எழுதலாம்..அம்பிட்டுத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அபராஜிதன்,எழுதினது வடக்குக்கு வேண்டுமானால் சரி வரலாம்.கிழக்கிற்கு சரி வராது  
கிழக்கில் முஸ்லிம்களும் தமிழர்களும் கலந்து வாழ்கிறார்கள்.
ஒப்பீட்டளவில் வடக்கில் இருந்து வெளி நாட்டுக்கு குடி பெயர்ந்தவர்கள் அதிகம்.
அவர்கள் தங்கள் கிராமங்களை கொஞ்சம்,கொஞ்சமாய்  அபிவிருத்தி செய்து கொள்வார்கள்.
என்ன தான் வட,கிழக்கு இணைப்பு என்று கதைத்தாலும் அக்னி சொன்ன மாதிரி வடக்கு வேற,கிழக்கு வேற.
கிழக்கு மக்கள் பொருளாதார,கல்வி ரீதியாய் தங்களை பலப்படுத்த வேண்டிய தேவை அதிகம் உள்ளது.
அவர்கள் சிங்களவர்களால் எதிர் நோக்கும் பிரச்சனைகளை விட முஸ்லிம்களால் எதிர் நோக்கும் பிரச்சனைகள் அதிகம்.
பொதுவாக ஈழத்தில் இருக்கும் எல்லோருக்கும் தமிழீழம், வட ,கிழக்கு ஒன்றிணைந்த சுயாட்சி போன்றவற்றில் விருப்பம் இருந்தாலும், இப்போதைக்கு இது பற்றி கவலைப்பட வேண்டிய தேவை கிழக்கு மக்களுக்கு இல்லை .
அவர்களுடைய தேவை எல்லாமே இப்போது பொருளாதார ரீதியாய் தம்மை பலப்படுத்தல் , முஸ்லிம்களை கிழக்கில் கட்டுப்படுத்தல் போன்றனவாகும் 
கிழக்கை தக்க வைத்துக் கொள்ள அல்ல காப்பாற்ற ஒரு வலுவான தமிழ் தலைமை அவசியம்.. அதை  காப்பாற்ற கூட்டமைப்பு தவறி விட்டது...இனி மேலும் அவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை .
கிழக்கில் முஸ்லிம்கள் இன்னும் பலமாய்த் தான் இருக்கிறார்கள்.
இவர்களை அடக்க கூடிய ஒரு சரியான தலைமையைத் தான் அங்குள்ள மக்கள் தேடுகிறார்கள் அது பிள்ளையானாக இருந்தாலும்  சரி,கோத்தாவாக இருந்தாலும் சரி அவர்களுக்குத் தான் வோட் போடுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனோ,சம்மந்தரோ ஊழல் செய்தால் என்ன ,செய்யாட்டில் என்ன இப்படி சும்மா பதவியில் பொம்மை மாதிரி இருக்கிறதை விட கோயிலில் சிலையாக இருக்கலாம்...தங்கட பதவியை வைத்து தமிழருக்கு செய்த ஏதாவது ஒரு நல்ல விடயம் ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ ச‌ம்ம‌ந்த‌ன் என்ர‌ முதிய‌வ‌ர் மேல் இருந்த‌ ந‌ம்பிக்கை 2009ம் ஆண்டே போய் விட்ட‌து /

என் போன்ர‌ பிள்ளைக‌ளுக்கு ச‌ம்ம‌ந்த‌ன‌ தெரிய‌ கார‌ண‌ம் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் மூல‌ம் தான் / அதுக்கு முத‌ல் இவ‌ர‌ யார் என்று கூட‌ தெரியாது /

ச‌ம்ம‌ந்த‌னுக்கு பின்னால் ப‌டித்த‌ அறிவான‌ இளைஞ‌ர்க‌ள் ஒரு போதும் போக‌ மாட்டார்க‌ள் , 
த‌லைவ‌ரை இன்னும் உயிருக்கு உயிரா நேசிக்கிர‌ இளைஞ‌ர்க‌ளும் இவ‌ருக்கு பின்னால் போக‌ மாட்டார்க‌ள் /

நாம் சிறு வ‌ய‌தில் ஊரில் வாழ்ந்த‌ கால‌த்தில் ( எங்க‌ளுக்கு க‌ஞ்சா என்றால் என்ன‌ என்று தெரியாது ) ஆனால் இப்ப‌ இருக்கிர‌ ப‌ஸ்ச‌ங்க‌ள் க‌ஞ்சா என்ர‌ போதை பொருளுக்கு அடிமையாய் போய் விட்டார்க‌ள் /

அதோடு எம் த‌மிழ் பெண்க‌ள்
ஆண்க‌ளின் காம‌ வெறிக்கு ஆள் ஆக‌ ப‌டின‌ம் ( அதுக்கு தான் அன்மையில் என் தோழ‌ர்க‌ள் எம் த‌மிழ் பெண்க‌ளை இழிவு ப‌டுத்தின‌வைக்கு இருட்ட‌டி குடுத்த‌வை ) அதோடு ஒரு காம‌ வெறிய‌னின் வாழ்க்கை அந்த‌ இட‌த்திலே  முடிஞ்ச‌து /

த‌லைவ‌ரை நேசிக்கிர‌ பிள்ளைக‌ள் ப‌ல‌ ம‌றைமுக‌ தாக்குத‌ல‌ ர‌க‌சிய‌மாய் செய்தாலும் , சிங்க‌ள காவ‌ல்துறையே சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கு க‌ஞ்சா போன்ர‌ போதை பொருட்க‌ளை  வேண்டி குடுத்து த‌வ‌றான‌ முறையில் அந்த‌ ப‌ஸ்ச‌ங்க‌ளை வ‌ழி ந‌ட‌த்தின‌ம் /

எப்ப‌டி இருந்த‌ என‌து ஊர் இந்த‌
நிலைக்கு வ‌ந்து விட்ட‌தே என்று
நினைத்து ம‌ன‌சுக்குள் அழுதேன் 😓/

வெளிப்ப‌டையாய் சொல்ல‌னும் என்றால் என் ந‌ண்ப‌ர்க‌ள் சிங்க‌ள‌
காவ‌ல்துறைக்கு ஒரு போதும் ப‌ய‌ப்பிட்ட‌து இல்லை / 

சிங்க‌ள‌வ‌ன் ப‌ல‌ வேச‌ம் போட்டா அதுக்கு மேலால‌ என்ர‌ தோழ‌ர்க‌ள் ப‌ல‌ வேச‌ம் போட்டு செய்ய‌ வேண்டிய‌தை செய்து முடிப்பார்க‌ள் /

என‌து ந‌ண்ப‌ர்க‌ளோடு சேர்ந்து நானும் என் இன‌த்துக்காக‌ ந‌ல்ல‌ ஒரு காரிய‌த்தை துனிவாய் செய்தேன் என்று நினைக்க‌ 
பெருமையாய் இருக்கு / 

இப்ப‌டி த‌மிழீழ‌த்தில் ஒவ்வொரு ஊரிலும் குறைந்த‌து கொஞ்ச‌ இளைஞ‌ர்கள் இருந்தாலே ( ப‌ல‌ சின்ன‌ பெடிய‌ங்க‌ளை க‌ஞ்சா போன்ர‌ போதை பொருள்க‌ள் பாவிப்ப‌தை நிறுத்தி  ம‌ற்றும் அவ‌ங்க‌ளை திருத்த‌லாம்  , பெண்க‌ளின் வாழ்க்கையோடு காம‌ வெறி விளையாட‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் வ‌ரும் /

On 7/3/2019 at 3:31 PM, goshan_che said:

ஒபாம, ஜனாதிபதியாக, மிலிபேண்ட் யூகே வெளிநாட்டமைச்சராக இருந்த போதே முள்ளிவாய்க்காலைத் தடுக்கவில்லை. இப்போ டிரம்ப், ஜோன்சன் ஆளும் சூழ்நிலையில் இது ஒரு போதும் சாத்தியப்படாது.

On 7/3/2019 at 4:58 PM, Justin said:

ஒபாமாவால் தடுக்கப் பட முடியாத இனப் படுகொலையை ஜோன்சனும், ட்ரம்பும், ஐரோப்பாவில் பெருகி வரும் வலது சாரிகளும் இனித் தடுக்கார் என்பது மட்டுமல்ல, நடந்தால் ஊக்குவிப்பார்கள் என்று இங்கு பல தடவை எழுதப் பட்டு விட்டது! இனி அடுத்த 10 ஆண்டுகளுக்கு சர்வதேச தலையீட்டை நம்பி எதுவும் செய்வது, 9/11 இற்குப் பின்னான நிலைமை தெரியாமல் புலிகளின் தலைமை ராஜபக்ஷவைப் பதவிக்குக் கொண்டு வந்த தவறுக்கு ஒப்பானது! 

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, இஸ்ரேல், ரஷ்யா மற்றும் பல நாடுகளும் சேர்ந்து தான் புலிகளையும், தமிழர்களையும் கொன்று இனப்படுகொலையை நடத்தியவர்கள். ஏதோ அவர்களுக்கு சம்பந்தமில்லாமல் இலங்கை அரசு தனியே இனப்படுகொலையை நடத்தியது போல் நினைக்கவும் சிலர் உள்ளார்கள்.

டரம்ப் புலிகள் பலமாக இருந்த நிலையில் ஜனாதிபதியாக வரவில்லை, எனவே அன்றைய சூழ்நிலையை இன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிட முடியாது. 9/11 தாக்குதலை புஷ் நடத்தியவர் என முன்னர் கூறியவர் ட்ரம்ப்.

On 7/3/2019 at 4:50 PM, Justin said:

ஈழப்பிரியன் அண்ணை, பெட்டியை சம் சும் வாங்கினார்கள் என்பதற்கு ஏதாவது செய்தி ஆதாரம் வைத்திருக்கிறீர்களா? அல்லது சும்மா போகிற போக்கில் அடிச்சு விடுகிற கற்பனையா?

சம், சும் பெட்டி வாங்கினார்களா இல்லையா என்பதை பற்றி நான் கதைக்க வரவில்லை.

ஆனால் பெட்டி வாங்குபவர்கள் ஊடகங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு தான் வாங்குவார்கள் என நினைக்குமளவில் தான் நீங்கள் உள்ளீர்கள் என்பதை நினைக்க என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Lara said:

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, இஸ்ரேல், ரஷ்யா மற்றும் பல நாடுகளும் சேர்ந்து தான் புலிகளையும், தமிழர்களையும் கொன்று இனப்படுகொலையை நடத்தியவர்கள். ஏதோ அவர்களுக்கு சம்பந்தமில்லாமல் இலங்கை அரசு தனியே இனப்படுகொலையை நடத்தியது போல் நினைக்கவும் சிலர் உள்ளார்கள்.

டரம்ப் புலிகள் பலமாக இருந்த நிலையில் ஜனாதிபதியாக வரவில்லை, எனவே அன்றைய சூழ்நிலையை இன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிட முடியாது. 9/11 தாக்குதலை புஷ் நடத்தியவர் என முன்னர் கூறியவர் ட்ரம்ப்.

சம், சும் பெட்டி வாங்கினார்களா இல்லையா என்பதை பற்றி நான் கதைக்க வரவில்லை.

ஆனால் பெட்டி வாங்குபவர்கள் ஊடகங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு தான் வாங்குவார்கள் என நினைக்குமளவில் தான் நீங்கள் உள்ளீர்கள் என்பதை நினைக்க என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 😂

லாரா,

நான் முன்பே எழுதி விட்டேனே முள்ளிவாய்காலில், மேற்குலகு கூட்டுகளவாணி, இலங்கை கூட்டாளி களவாணி என்று. எனதும், ஜஸ்ரினதும் கேள்வி, இவர்கள் இனப்படுகொலைய காட்டி எமக்கு தீர்வு பெற்று தருவார்கள் என்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது?

7 hours ago, goshan_che said:

லாரா,

நான் முன்பே எழுதி விட்டேனே முள்ளிவாய்காலில், மேற்குலகு கூட்டுகளவாணி, இலங்கை கூட்டாளி களவாணி என்று. எனதும், ஜஸ்ரினதும் கேள்வி, இவர்கள் இனப்படுகொலைய காட்டி எமக்கு தீர்வு பெற்று தருவார்கள் என்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது?

நீங்கள் அவர்களுக்கு தெரிந்து நடந்தது, அதனால் கூட்டுக்களவாணிகள் என எழுதினீர்கள். ஒபாமா ஜனாதிபதியாகவும் மிலிபேண்ட் யூகே வெளிநாட்டமைச்சராகவும் இருந்த போதே முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை, இப்பொழுது ட்ரம்ப் ஜோன்சன் ஆளும் சூழ்நிலையில் இது ஒருபோதும் சாத்தியப்படாது என்றும் எழுதினீர்கள்.

தெரிந்து நடந்தது, முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை என்பதற்கும் சேர்ந்து முள்ளிவாய்க்காலை நடத்தினார்கள் என்பதற்கும் வேறுபாடு உள்ளது.

ஜஸ்ரினின் கருத்துக்கும் லைக் போட்டிருந்தீர்கள் எனவே அவர் கருத்தையும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். அவர் இன்னும் ஒரு படி மேலே போய் ஒபாமாவால் தடுக்கப்பட முடியாத இனப்படுகொலை என எழுதியிருந்தார்.

இங்கு ட்ரம்பை இழுப்பது தேவையில்லாத வேலை. புலிகள் பலமாக இருந்த நேரம் ட்ரம்ப் ஜனாதிபதியாக வந்திருந்தால் புலிகளுக்கு சார்பான முடிவை எடுத்தாலும் எடுத்திருக்கலாம். இப்பொழுது பலமில்லாத தமிழர்கள், பத்தாக்குறைக்கு எதற்கும் இலங்கை, இந்தியா, மேற்குலகுக்கு தலையாட்டு பொம்மையாக தமிழ் தலைமைகள் உள்ள போது யாரும் தமிழர்களுக்கு தீர்வு தர முன்வர மாட்டார்கள். தவிர ட்ரம்ப் ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றுக்கு எதிரானவர். UNHRC இலிருந்து அமெரிக்காவை விலக்கியவர், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக கருத்து கூறியவர். 

முஸ்லிம் தலைவர்கள் போல் தமிழ் தலைவர்கள் பேரம் பேசுவதில்லை. ரணிலை ஆட்சியில் தக்க வைக்க முயற்சி செய்த அளவுக்கு தமிழர்களுக்காக முயற்சி செய்வதில்லை. பிரிட்டன், கனடா என்று அடிக்கடி சென்று வந்த கூட்டமைப்பினர் அம்மக்களின் பணத்தை பெற்று தன்னும் ஊரிலுள்ள மக்களுக்கு உதவி செய்யவில்லை. சீனாவுடன் பேச வெளிக்கிட்டாலாவது ஏனைய நாடுகள் இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க முன்வரலாம். ஆனால் அதையும் செய்ய மாட்டார்கள். தாம் விலகி புதியவர்களுக்கு இடம் விட்டுக்கொடுக்கவும் மாட்டார்கள். 

தமிழ் தலைமையின் உதவி இல்லாமல் தமிழர்கள் தீர்வு எதையும் பெற முடியாது. 

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

மன்னிக்க வேண்டும். நீங்கள் வாலை விட்டு விட்டு, தும்பை பிடிக்கிரீகள்.

மேற்குலகுக்கு தெரிந்து இலங்கை முள்ளிவாய்காலை நடத்தியதா? அல்லது மேற்குலகும் சேர்ந்து முள்ளிவாய்காலை நடத்தியதா என்பது இங்கே தேவையற்ற ஆராய்சி (irrelevant). 

இப்படி பட்ட மேற்குலகு அதே போர்குற்றச் சாட்டை முன்வைத்து, இலங்கையை பயமுறுத்தி எமக்கு தீர்வு பெற்றுத் தரும் என எண்ணுவது எவ்வகையில் சாத்தியமானாது, என்பதே நானும் ஜஸ்ரினும் கேட்டது

டிரம்ப் அப்போது இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று யாரும் சொல்லவில்லை. 

ஒபாமாவை நெருங்கி தமிழர் தரப்பு இருந்ததாக சொல்லப்பட்டது. மிலிபாண்டின் தொகுதியில் தமிழர் வாக்கு கணிசம். ஆனால் டிரம்ப், ஜோன்சனுக்கு நெருக்கமாக தமிழர் தரப்பு இல்லை. இப்போ டிரம்ப், ஜோன்சன் ஒபாமா/மிலிபாண்ட் அளவுக்கேனும் எங்களை திரும்பியும் பார்க்க மாட்டார்கள்.

சீனா பக்கமே தமிழ்தலைமைகள் திரும்பாமை பற்றி உங்கள் விமர்சனம் நியாயமானதே. அழுகிற பிள்ளைக்குத்தான் தாயே பால் கொடுப்பாள். சும்மா ஒப்புக்கேனும் சீனாவுக்கு ஒரு விசிட் அடித்தாலாவது, இந்தியாவுக்கு தமிழர் தரப்பை taken for granted ஆக நினைக்க கூடாது என்ற எண்ணம் வரும். ஆனால் இந்தியாவை பகைக்க தேவையில்லை. இதை செய்யும் கெட்டித்தனம் சம்சும்+விக்கி யிடம் இருக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமே மிச்சம்.

Edited by goshan_che

2 hours ago, goshan_che said:

லாரா,

மன்னிக்க வேண்டும். நீங்கள் வாலை விட்டு விட்டு, தும்பை பிடிக்கிரீகள்.

மேற்குலகுக்கு தெரிந்து இலங்கை முள்ளிவாய்காலை நடத்தியதா? அல்லது மேற்குலகும் சேர்ந்து முள்ளிவாய்காலை நடத்தியதா என்பது இங்கே தேவையற்ற ஆராய்சி (irrelevant). 

இப்படி பட்ட மேற்குலகு அதே போர்குற்றச் சாட்டை முன்வைத்து, இலங்கையை பயமுறுத்தி எமக்கு தீர்வு பெற்றுத் தரும் என எண்ணுவது எவ்வகையில் சாத்தியமானாது, என்பதே நானும் ஜஸ்ரினும் கேட்டது

டிரம்ப் அப்போது இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று யாரும் சொல்லவில்லை. 

ஒபாமாவை நெருங்கி தமிழர் தரப்பு இருந்ததாக சொல்லப்பட்டது. மிலிபாண்டின் தொகுதியில் தமிழர் வாக்கு கணிசம். ஆனால் டிரம்ப், ஜோன்சனுக்கு நெருக்கமாக தமிழர் தரப்பு இல்லை. இப்போ டிரம்ப், ஜோன்சன் ஒபாமா/மிலிபாண்ட் அளவுக்கேனும் எங்களை திரும்பியும் பார்க்க மாட்டார்கள்.

நான் வாலை விட்டு தும்பை பிடிக்கவில்லை.

மேற்குலகிற்கு தெரிந்து முள்ளிவாய்க்கால் நடந்ததா அல்லது மேற்குலகும் சேர்ந்து முள்ளிவாய்க்காலை நடத்தியதா என்பது தேவையற்ற ஆராய்ச்சி என்றால் அது பற்றி நீங்கள் யாரும் முன்னர் கருத்து வைத்திருக்க கூடாது. கருத்து வைக்கப்பட்ட பின் அதை மறுத்து கருத்து வைப்பது இயல்பு தானே. உலக நாடுகளின் உதவியில்லாமல் இலங்கை அரசு தனியே போர் நடத்தியிருந்தால் புலிகளை வென்றிருக்காது.

அன்றைய தமிழர் நிலையும் இன்றைய தமிழர் நிலையும் வேறு என்பதனால் தான் அன்று ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்திருந்தால் என நான் எழுதியிருந்தேன். அது எனது கருத்து.

ஒபாமாவை நெருங்கி தமிழர் தரப்பு இருந்தும் ஒபாமா சொன்னது புலிகளை ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடையும் படி. (அதைவிட பல உதவிகளையும் இலங்கை அரசுக்கு அமெரிக்கா செய்தது). மிலிபாண்டின் தொகுதியில் தமிழர் வாக்கு கணிசமாக இருந்தும் பிரிட்டன் இலங்கை அரசுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து கொண்டிருந்தது.

மேற்குலகு போர்க்குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கையை பயமுறுத்தி எமக்கு தீர்வு பெற்று தருவார்களா என்ற கேள்வியை கேட்க முன் தமிழர் தலைமை பலமில்லாத போது, தமிழர் தலைமைக்கு தீர்வில் அக்கறையில்லாத போது, தமிழர்களால் யாருக்கும் பயனில்லாத போது ஏனைய நாடுகள் தீர்வுக்கு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்குமா என்ற கேள்வியையும் கேட்க வேண்டும். மேற்குலகுக்கு தேவை இருந்தால் அதை அவர்கள் செய்வார்கள். ஆனால் அவர்களுக்கு தேவை இப்பொழுது இல்லை.

UNHRC இலிருந்து அமெரிக்காவை வெளியேற்றிய ட்ரம்பிடம் அதே UNHRC இன் தீர்மானத்தை காட்டி எவ்வாறு கதைக்க முடியும் என்பதற்காக தான் ட்ரம்ப் ஐநா க்கு எதிரானவர் என கூறி எழுதியிருந்தேன்.

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.