Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, valavan said:

இந்த தாக்குதலின் மூலம் தமிழனும் சிங்களவனும் பகையை கொஞ்சமாவது மறந்து செண்டிமீட்டர் அளவில் ஒன்றுபடுவான் என்று தெரிந்திருந்தால் 

மறந்தும்  மருந்துக்குகூட இந்த தாக்குதலை செய்திருக்க மாட்டார்கள்.

இந்த தாக்குதலை செய்தவர்கள் யார்? இது அவர்களின் நோக்கமாக இருந்தால்? 

  • Replies 63
  • Views 6.4k
  • Created
  • Last Reply
2 hours ago, Jude said:

உலகில் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் விசா பெற வேண்டிய நிலையில் உள்ளது. அந்த அந்த நாடுகள் தான் விசா அலுவலகங்களை வடக்கு கிழக்கில் திறக்க வேண்டும். 

எந்தெந்த நாட்டு விசா வடக்கு கிழக்கில் பெறும் நிலையை விரும்புகிறீர்கள்?

கொழும்பு போய் தான் விசா பெற வேண்டுமானால் கொழும்பு போயே விமானம் ஏறலாமே. பலாலியில் சர்வதேச விமான நிலையம் எதற்கு? 😎

யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் ஆரம்பித்த மாதிரி நுணாவிலான் அவர்கள் இணைத்த இணைப்பிலுள்ள நாடுகளுக்கான விசா பெறும் வகையில் அந்நாடுகளும் துணை தூதரகமோ, அல்லது வேறு ஏதும் அலுவலகமோ திறந்து விசா வழங்கும் முறையை கொண்டு வரலாம். நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பலாலியிலிருந்து விமானம் செல்வதாக கூறப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி 

இதை தமிழர்கள் தாங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் விஜய் படங்களை எடுப்பதை விட்டிட்டு 
  
Jaffna Airways என ஒன்றை உருவாக்க்கி இதன் மூலம்  தமிழர்களை வருமாறு ஊக்கப்படுத்த வேண்டும். 

மேலும்  duty free / rent a car / போறன்றவை திற‌ந்து அங்குள்ள இளைஞசர் யுவதிகளுக்கு பல வேலை வாய்ப்புக்களை உருவாக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

பலாலிக்கு வரும் விமானத்தில் வருபவர்களுக்கு நுழைவு விசா, பலாலி விமான நிலையத்திலேயே வழங்குவார்கள்.அதற்கு வருபவர்கள் கொழும்பு போக தேவை இல்லை.

பலாலியில் விமானம் ஏறுபவர்கள் அந்த விமானம் நேரடியாக செல்லும் நாட்டுக்கு மட்டும் செல்பவர்களாக மட்டுமே இருக்க போவதில்லை. உதாரணமாக உகண்டா போகும் ஒருவரும், சோமாலியா போகும் ஒருவரும், அமெரிக்கா போகும் ஒருவரும் பலாலியில் இருந்து துபாய் போகும் விமானத்தில் ஏறி பின்னர் துபாயில் தாம் போகும் இடங்களுக்கான விமானத்தில் ஏறுவர். இவர்கள் துபாய்க்கு வடக்கில் விசா எடுத்து பின்னர் துபாயில் தாம் போகும் நாடுகளுக்கு விசா எடுக்கும் நடைமுறைக்கு தேவையான நிர்வாக அமைப்புகள் எந்த நாட்டிலும் இல்லை. பலாலியில் விமானம் ஏறுபவர்கள் உலகின் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு போபவர்களாகவும், பலாலிக்கு வருபவர்கள் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களாகவும் இருப்பர்.

ஆகவே இந்த நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் எந்த எந்த நாடுகள் வடக்கில் துணை தூதரகம் அல்லது விசா அலுவலகம் திறக்க வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டால் அந்த நாடுகளுக்கு மக்களும் அரசியல் தலைவர்களும் வேண்டுகோள் விடுக்கலாம். இந்தியாவுக்கு வடக்கில் இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஆகவே அவர்களின் துணை தூதரகம் உள்ளது. முஸ்லிம் மக்கள் கேட்டால் துபாய் தனது அலுவலகத்தையும் திறக்க கூடும். சீனாவுக்கும் ஆர்வம் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தமிழர்களின் பொருண்மியத்தை நீண்ட கால நோக்கில் கட்டி எழுப்பவும்.. பலாலியை இராணுவ மயமாக்கத்தில் இருந்து விடுவிக்கவும் சகல வகையிலும் செயற்படுதல் அவசியம். இது ஒரு பலாலி விடுவிப்பாக அமைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.. சிறந்தது. 

2 hours ago, Jude said:
பலாலிக்கு வரும் விமானத்தில் வருபவர்களுக்கு நுழைவு விசா, பலாலி விமான நிலையத்திலேயே வழங்குவார்கள். அதற்கு வருபவர்கள் கொழும்பு போக தேவை இல்லை.

பலாலியில் விமானம் ஏறுபவர்கள் அந்த விமானம் நேரடியாக செல்லும் நாட்டுக்கு மட்டும் செல்பவர்களாக மட்டுமே இருக்க போவதில்லை. உதாரணமாக உகண்டா போகும் ஒருவரும், சோமாலியா போகும் ஒருவரும், அமெரிக்கா போகும் ஒருவரும் பலாலியில் இருந்து துபாய் போகும் விமானத்தில் ஏறி பின்னர் துபாயில் தாம் போகும் இடங்களுக்கான விமானத்தில் ஏறுவர். இவர்கள் துபாய்க்கு வடக்கில் விசா எடுத்து பின்னர் துபாயில் தாம் போகும் நாடுகளுக்கு விசா எடுக்கும் நடைமுறைக்கு தேவையான நிர்வாக அமைப்புகள் எந்த நாட்டிலும் இல்லை. பலாலியில் விமானம் ஏறுபவர்கள் உலகின் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு போபவர்களாகவும், பலாலிக்கு வருபவர்கள் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களாகவும் இருப்பர்.

ஆகவே இந்த நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் எந்த எந்த நாடுகள் வடக்கில் துணை தூதரகம் அல்லது விசா அலுவலகம் திறக்க வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டால் அந்த நாடுகளுக்கு மக்களும் அரசியல் தலைவர்களும் வேண்டுகோள் விடுக்கலாம். இந்தியாவுக்கு வடக்கில் இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஆகவே அவர்களின் துணை தூதரகம் உள்ளது. முஸ்லிம் மக்கள் கேட்டால் துபாய் தனது அலுவலகத்தையும் திறக்க கூடும். சீனாவுக்கும் ஆர்வம் இருக்கலாம்.

பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவது முக்கியமாக இந்தியாவுடனான விமானப்போக்குவரத்தை ஆரம்பிக்க. அதன் பின் தான் ஏனையவற்றுக்கு முக்கியத்துவம்.

பலாலிக்கு வந்திறங்குவோரை மட்டும்  கருத்தில் கொண்டு விமானம் ஓட்ட மாட்டார்கள். வந்திறங்குவோருக்கு ஏற்ப ஏறுவோரும் இருக்க வேண்டும்.

சில நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வர முடியும். (ஆனால் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் திரும்ப வேண்டும்).

இலங்கையிலிருந்து வெளியே செல்பவர்களாக இருப்பின் இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோர் தான் அதிகம்.

வேறு பல முக்கிய நாடுகளுக்கு செல்ல விரும்புவோர் இருப்பினும் இலங்கையிலிருந்து சென்று அங்கே அகதி கேட்டு விடுவார்கள் என நினைத்து பலரது விசா கோரிக்கை நிராகரிக்கப்படுவதுண்டு. சிலருக்கு வழங்கப்படுவதுமுண்டு.

கட்டுநாயக்கா விமான நிலையம் இருக்கத்தக்கதாக பலாலி விமான நிலையத்திற்கு அதிக விமானம் வந்து செல்லுமா என்பது கேள்விக்குறி. விமானம் ஓடத்தொடங்கியதும் தான் அது பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் vfs மூலம் சில நாடுகளுக்கு விசா விண்ணப்பிப்பர். பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்ட பின் vfs மூலமே மேலும் பல நாடுகளுக்கு விசா விண்ணப்பிக்கும் நிலை உருவாக்கப்படலாம்.

Edited by Lara

2 hours ago, colomban said:

நல்லதொரு முயற்சி 

இதை தமிழர்கள் தாங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் விஜய் படங்களை எடுப்பதை விட்டிட்டு 
  
Jaffna Airways என ஒன்றை உருவாக்க்கி இதன் மூலம்  தமிழர்களை வருமாறு ஊக்கப்படுத்த வேண்டும். 

மேலும்  duty free / rent a car / போறன்றவை திற‌ந்து அங்குள்ள இளைஞசர் யுவதிகளுக்கு பல வேலை வாய்ப்புக்களை உருவாக்கலாம்.

சுத்தம்

அங்கு உள்ளவர்கள் எப்படி அந்த விமான நிலையத்தை வைத்து எப்படி வெளி நாடு சென்று அசைலம் அடிக்கலாம் என்று தான் யோசிப்பார்கள்.

ஏன் விரைவில்  பாருங்கோ எவனாவது முகப்புத்தகத்தில் கதை கட்டுவான் அந்த விமான நிலையத்தில் இருந்து  சென்றால் இலகுவில் செல்லாம் என்றும் உங்கட தொலைபேசி இலக்கத்தை தாங்கோ என்பான் உடனே எல்லாறும் நம்பரை போட்டு விட்டு இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி... பலாலியைச் சுற்றி வாழந்த பல தமிழ் குடும்பங்கள், தங்கள் வீடுகள், காணிகள், தோட்டம் துரவுகளைவிட்டுக் கொழும்பிலும். புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கிறார்கள். இவர்களில் பலர் தங்கள் சொத்துக்களை தங்கள் உறவினர்களுக்கு, அல்லது ஏழை எளியவர்களுக்கு வழங்கிவிடும் மனநிலையும் இல்லாது.... எப்போ விலை கூடும்,  ஏறும் அப்போது விற்றுப் பெரும் பணம் புரட்டலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இது பலருடன் கதைத்த அனுபவத்தில் அறிந்த உண்மை.

அப்படிப் பெரும் தொகை கொடுத்து வாங்கக்கூடியவர்களாக தமிழர்கள் இல்லை என்பது வெள்ளிடைமலை. சர்வதேச விமான நிலையமென்றால் அங்கு பணிபுரியப்போகும் பணியாளர்கள் யார்..... நிச்சயம் தமிழர் ஒரு சுண்டக்காய் அளவு இருந்தாலும், அவர்கள் சிங்கள அரசுசார்ந்த பணியாளர்களாகவே இருப்பார்கள். தற்பொழுதபகூட பலாலி விமானநிலையம் சென்றால் அங்கு தமிழ் உத்தியோகத்தர்களைக் காண்பது அரிது. முன்நாள் முதல்வர் விக்கினேசுவரன் அவர்கள் கூறியதுபோல் முதலில் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெறவேண்டும். அதன்பின் அபிவிருத்தி தானே விருத்திபெறும்.  

12 minutes ago, nedukkalapoovan said:

பலாலியை இராணுவ மயமாக்கத்தில் இருந்து விடுவிக்கவும் சகல வகையிலும் செயற்படுதல் அவசியம். இது ஒரு பலாலி விடுவிப்பாக அமைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.. சிறந்தது. 

இராணுவத்திடம் இருப்பது தான் எமக்கு பாதுகாப்பு, இல்லாவிட்டால் அரபு நிதி உதவியுடன் இந்த காணிகள் அவர்களுக்கு விற்கப்படும்.எங்கடைகளும் வித்து போட்டு இங்க வந்து அசைவம் அடிக்குங்கள்;இல்லா விட்டால் புலம்பெயர் நாடுகளில் வீட்டு mortgage கட்டுவீனம், இல்லா விடில் 2/3 வது வீட்டுக்கு deposit கட்டுவீனம், Audi Q7 வாங்கி ஓடுவீனம், 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Dash said:

வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு ஊரில் உள்ள சொத்துக்களை வித்துச் சுட்டு வாழ்வதுகளை ஒன்றும் செய்ய ஏலாது. அவர்களை திருத்தனும் என்றால்..அமெரிக்க அதிபர் ரம் செய்வது போல மேற்கு நாடுகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து அகதி அந்தஸ்துக் கோரிய அனைவரையும் அவரவர் நாட்டுக்கு அமைதி நிலையை காட்டி திருப்பி அனுப்பினால்.. அன்றி.. இவர்களைத் திருத்த ஏலாது.

ஆனாலும்.. ஊரில் போய் வாழனும் என்று விரும்பும் பல உறவுகளையும்.. ஊரில் உள்ள சொத்துக்களை பரம்பரைக்கும் காக்க வேண்டும் என்று செயற்படும் உறவுகளையும் நாம் காண்கிறோம். 

13 hours ago, Jude said:

இந்த தாக்குதலை செய்தவர்கள் யார்? இது அவர்களின் நோக்கமாக இருந்தால்? 

இந்த தாக்குதலை செய்யாதவர்கள் யார்? இது அவர்களின் நோக்கமாக இல்லாது இருந்தால்?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Rajesh said:

இந்த தாக்குதலை செய்யாதவர்கள் யார்? இது அவர்களின் நோக்கமாக இல்லாது இருந்தால்?

சும்மா இருப்பது சுகம்.😀 - யோகர் சுவாமிகள்

3 minutes ago, Jude said:

சும்மா இருப்பது சுகம்.😀 - யோகர் சுவாமிகள்

ஓ! அவரையும் தெரியுமோ?
பரவாயில்ல, இப்ப ஆவது ஒரு உருப்படியான ஒருவரின் போதனை ஞாபகம் வந்திருக்கே!

  • கருத்துக்கள உறவுகள்

விமானநிலையம் தொழில்பட தொடங்கியதும், சென்னை, திருச்சி விமான நிலையங்களில் இருந்து கணிசமான பயணிகளின் பறப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

கொச்சின் பொதுவாக கொழும்பை விட 100£ குறைவாக டிக்கெட் இருக்கும் ஊர். எதாவது ஒரு இந்திய அல்லது மத்திய கிழக்கு விமானம் கொச்சின் போகும் விமானத்தையோ அல்லது கோட் ஷேர் செய்தோ பலாலிக்கு கொழும்பைவிட ஐரோபாவில் இருந்து 80£ குறைவாக டிக்கெட் போட்டால், ஒரு தொகை ஐரோப்பிய/கனேடிய தமிழ் பயணிகள் இதை விரும்புவர்.

வானுக்கு கொடுக்கும் செலவு, 8 மணத்தியால அசதியான பயணம், விபத்து ஆபத்து இவற்றை ஒப்பிடும் போது, நானாக இருந்தால் £50 வரை கூடக் கொடுத்தேனும் நேரே பலாலி போவதையே விரும்புவேன்.

விமான நிலையம் செயல்படத் தொடங்கவும், லைக்கா போன்றோர் வீண் ஜம்பத்துக்காகவேனும் ஒரு no frills airline ஒன்றை, பழைய 771 தட்டிவான் ரேஞ்சிலாவது இந்தியாவரை இயக்குவார்கள் என நினக்கிறேன்.

இலங்கையில் இருந்து வெளியே போகும், இலங்கை பிரஜைகள் என்று பார்த்தால், இந்தியாவுக்கு யாழிலே வீசா எடுக்கலாம். யூகே வீசா முழுக்க முழுக்க ஒன்லைன்/தபால் மூல விண்ணப்பம். சிங்கபூர், துபாய் ஒன் அரைவல்.  ஆகவே இது பெரிய பிரச்சனையாக இராது.

மருது போல இந்த துறைசார் நிபுணர்கள் என்ன நினக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

எல்லாம் சரி... பலாலியைச் சுற்றி வாழந்த பல தமிழ் குடும்பங்கள், தங்கள் வீடுகள், காணிகள், தோட்டம் துரவுகளைவிட்டுக் கொழும்பிலும். புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கிறார்கள். இவர்களில் பலர் தங்கள் சொத்துக்களை தங்கள் உறவினர்களுக்கு, அல்லது ஏழை எளியவர்களுக்கு வழங்கிவிடும் மனநிலையும் இல்லாது.... எப்போ விலை கூடும்,  ஏறும் அப்போது விற்றுப் பெரும் பணம் புரட்டலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இது பலருடன் கதைத்த அனுபவத்தில் அறிந்த உண்மை.

அப்படிப் பெரும் தொகை கொடுத்து வாங்கக்கூடியவர்களாக தமிழர்கள் இல்லை என்பது வெள்ளிடைமலை. சர்வதேச விமான நிலையமென்றால் அங்கு பணிபுரியப்போகும் பணியாளர்கள் யார்..... நிச்சயம் தமிழர் ஒரு சுண்டக்காய் அளவு இருந்தாலும், அவர்கள் சிங்கள அரசுசார்ந்த பணியாளர்களாகவே இருப்பார்கள். தற்பொழுதபகூட பலாலி விமானநிலையம் சென்றால் அங்கு தமிழ் உத்தியோகத்தர்களைக் காண்பது அரிது. முன்நாள் முதல்வர் விக்கினேசுவரன் அவர்கள் கூறியதுபோல் முதலில் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெறவேண்டும். அதன்பின் அபிவிருத்தி தானே விருத்திபெறும்.  

இதை ஊரில் உள்ளவன் சொல்ல வேணும்.எங்களை மாதிரி எல்லா அபிவிருத்திகளின் நன்மைகளும் அனுபவக்கிறன் சொல்க்குடாது.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, சுவைப்பிரியன் said:

இதை ஊரில் உள்ளவன் சொல்ல வேணும்.எங்களை மாதிரி எல்லா அபிவிருத்திகளின் நன்மைகளும் அனுபவக்கிறன் சொல்க்குடாது.நன்றி.

எல்லா அபிவிருத்திகளின் நன்மைகளும் அனுபவிக்கும் புலம்பெயர் நாடொன்றில் இருந்து, முன்னாள் முதல்வர் விக்னேசுவரன் அவர்கள் இதனைச் சொல்லவில்லை, ஊரிலிருந்தே சொன்னார். அவர் சொன்னதையே நானும் குறிப்பிட்டேன். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

சும்மா இருப்பது சுகம்.😀 - யோகர் சுவாமிகள்

2 hours ago, Rajesh said:

ஓ! அவரையும் தெரியுமோ?
பரவாயில்ல, இப்ப ஆவது ஒரு உருப்படியான ஒருவரின் போதனை ஞாபகம் வந்திருக்கே!

உருப்படியான ஒருவரின் உருப்படியான போதனை. 

  • கருத்துக்கள உறவுகள்

பூசலார் நாயனாரை போல் ஒரு செய்தி பலகனவுகள் காணுகின்றோம்  என்ன களவாணி நோக்கத்துக்கு இரண்டு நாடும் அவசரபடுகினம் என்று தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

விமானநிலையம் தொழில்பட தொடங்கியதும், சென்னை, திருச்சி விமான நிலையங்களில் இருந்து கணிசமான பயணிகளின் பறப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

கொச்சின் பொதுவாக கொழும்பை விட 100£ குறைவாக டிக்கெட் இருக்கும் ஊர். எதாவது ஒரு இந்திய அல்லது மத்திய கிழக்கு விமானம் கொச்சின் போகும் விமானத்தையோ அல்லது கோட் ஷேர் செய்தோ பலாலிக்கு கொழும்பைவிட ஐரோபாவில் இருந்து 80£ குறைவாக டிக்கெட் போட்டால், ஒரு தொகை ஐரோப்பிய/கனேடிய தமிழ் பயணிகள் இதை விரும்புவர்.

வானுக்கு கொடுக்கும் செலவு, 8 மணத்தியால அசதியான பயணம், விபத்து ஆபத்து இவற்றை ஒப்பிடும் போது, நானாக இருந்தால் £50 வரை கூடக் கொடுத்தேனும் நேரே பலாலி போவதையே விரும்புவேன்.

விமான நிலையம் செயல்படத் தொடங்கவும், லைக்கா போன்றோர் வீண் ஜம்பத்துக்காகவேனும் ஒரு no frills airline ஒன்றை, பழைய 771 தட்டிவான் ரேஞ்சிலாவது இந்தியாவரை இயக்குவார்கள் என நினக்கிறேன்.

இலங்கையில் இருந்து வெளியே போகும், இலங்கை பிரஜைகள் என்று பார்த்தால், இந்தியாவுக்கு யாழிலே வீசா எடுக்கலாம். யூகே வீசா முழுக்க முழுக்க ஒன்லைன்/தபால் மூல விண்ணப்பம். சிங்கபூர், துபாய் ஒன் அரைவல்.  ஆகவே இது பெரிய பிரச்சனையாக இராது.

மருது போல இந்த துறைசார் நிபுணர்கள் என்ன நினக்கிறீர்கள்?

இப்போது ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் (இனொன்று பேருக்கு மட்டும் இருக்கு) கொழும்பில் தமது 
கட்டுப்பாட்டில் இருப்பதால் பெரிதாக சட்ட திடடம் ஒன்றும் இல்லை 
நானோ நீங்களோ கூட ஒரு விமானத்தை வாங்கி சென்னை 
விமான நிலையத்துக்கு பயணிக்க கூடியதாக இருக்கிறது.
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக வரும்போது 
சட்டதிட்டங்கள் மாறும் என்பதே எனது எதிர்பார்ப்பு. 

இங்கு பயணிகளாகவும் வருமானம் தருவிகளாகவும் 
மட்டுமே தமிழர்கள் இருப்பார்கள் என்பதுதான் எனது 
எண்ணம். இவற்றை சரியாக நிறுவி பலன் பெற கூடிய அரசியல் 
தலைமை எதுவும் எம்மிடம் இல்லை.
1990 களில் அஷ்ரப் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த போது 
ஏர்லங்கா விமான சேவையின் பணிப்பெண்களாக 40 வீதம் வரை 
முஸ்லீம் பெண்களை உள்ளே புகுத்தினார்.
அப்படி செய்ய கூடிய யாரும் எமக்கு இல்லை என்பதுதான் உண்மை. 

விமான சேவையை இலங்கையிலே பதிவு செய்தால் 
குறைவான பணம்தான் கேட்க்கிறார்கள் .... 2 மில்லியன் உள்ளான ரூபாய்கள் மட்டுமே. 

https://www.caa.lk/images/stories/pdf/regulations/Fees_Charges.pdf

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

சும்மா இருப்பது சுகம்.😀 - யோகர் சுவாமிகள்

 யோகர் அவர் பாட்டுக்கு சொல்லீட்டுப் போட்டார். வடிவேலு சாமிகளிட்ட கேளுங்கோ சும்மா இருப்பது எவ்வளவு கஸ்டம் என்று 😂.

ஒரு பொல்லாப்பும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

இப்போது ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் (இனொன்று பேருக்கு மட்டும் இருக்கு) கொழும்பில் தமது 
கட்டுப்பாட்டில் இருப்பதால் பெரிதாக சட்ட திடடம் ஒன்றும் இல்லை 
நானோ நீங்களோ கூட ஒரு விமானத்தை வாங்கி சென்னை 
விமான நிலையத்துக்கு பயணிக்க கூடியதாக இருக்கிறது.
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக வரும்போது 
சட்டதிட்டங்கள் மாறும் என்பதே எனது எதிர்பார்ப்பு. 

இங்கு பயணிகளாகவும் வருமானம் தருவிகளாகவும் 
மட்டுமே தமிழர்கள் இருப்பார்கள் என்பதுதான் எனது 
எண்ணம். இவற்றை சரியாக நிறுவி பலன் பெற கூடிய அரசியல் 
தலைமை எதுவும் எம்மிடம் இல்லை.
1990 களில் அஷ்ரப் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த போது 
ஏர்லங்கா விமான சேவையின் பணிப்பெண்களாக 40 வீதம் வரை 
முஸ்லீம் பெண்களை உள்ளே புகுத்தினார்.
அப்படி செய்ய கூடிய யாரும் எமக்கு இல்லை என்பதுதான் உண்மை. 

விமான சேவையை இலங்கையிலே பதிவு செய்தால் 
குறைவான பணம்தான் கேட்க்கிறார்கள் .... 2 மில்லியன் உள்ளான ரூபாய்கள் மட்டுமே. 

https://www.caa.lk/images/stories/pdf/regulations/Fees_Charges.pdf

உண்மைதான். இங்கே சிவியை உதாரணம் காட்டி பலர் சொன்னது போல, இங்கே விமானநிலைய பொறுப்பதிகாரி முதல், பாதுகாப்பு கடமையில் இருக்கும் விமானப்படை வீரர் வரை 80% தொழில்கள் தமிழர் அல்லாதோருக்கே போகும். ஆனால் 20% தொழில்களாவது உள்ளூர் வாசிகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் அது, இதுவரை இல்லாத 20% என்பதும் உண்மையே.

யுத்தம் முடிந்து, 2010 இல் போனபோது, முறிகண்டியில் பெரேரோ அண்ட் சன்ஸ் ஐ பார்த போது, எங்கள் தெருவோர உணவங்கள் ஈட்டிய வருவாயை இவர்கள் எடுக்கிறார்களே என எண்ணினேன். உள்ளே போய் பார்த்ததும் வேலையாட்கள் யாவரும் தமிழராய் இருக்க, குறைந்த பட்சம், தெருவோர தமிழ் கடைக்கார் கொடுப்பதை விட கூடிய சம்பளத்துக்கு இவர்களுக்காவது வேலை கிடத்திருக்கிறதே எனவும் தோன்றியது.

விமானநிலையம் வருவதால், வர்த்தகம் பெருகும், ஆகவே அதில் பல தனியார் துறை வாய்புகள் உருவாகலாம். உதாரணத்துக்கு நாமே கூட, கொழும்பில்  3 நாள் தங்கி செலவழிக்கும் காசை ஊரில் அல்லவா செலவழிப்போம்.

இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்தால்,பெங்களூரு போன்ற சைபர் சிட்டிகளுக்கு ஒரு சட்டிலைட் சிட்டியாக கூட யாழை ஆக்கலாம். 

இவை எல்லாற்றையும் விட பாக்குநீரிணைக்கு இரு மருங்கும் இருக்கும் தமிழர்கள் நேரடி தொடர்பை ஏற்படுத்துவர். 

இப்படி பல அனுகூலங்களை நான் இதில் காண்கிறேன்/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

மிகச்சரியான ,தெளிவான நோக்கு அண்ணை 
என்னதான் சிங்களவர்கள் கடை வைத்தாலும் கொள்வனனவு செய்யப்போவது நாம் தானே 
எமது சிந்தனையில் மாற்றத்தை கொண்டுவருவோம் ,பத்து ரூபாய் அதிகமென்றாலும் கொள்வனவினை தமிழர்களிடமே மேற்கொள்வோம் .போகும் பணம் தமிழர்களுக்கே போய் சேரட்டும் ,ஆனால் தமிழ் முதலாளிகள் இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பகல் கொள்ளை அடிக்க முற்படக்கூடாது, இருபக்கமும் ஒத்துழைப்பு இருப்பின் சிறுக சிறுக எம்மவர் பொருளாதாரத்தை நாமே முன்னேற்றலாம்  

9 hours ago, பெருமாள் said:

பூசலார் நாயனாரை போல் ஒரு செய்தி பலகனவுகள் காணுகின்றோம்  என்ன களவாணி நோக்கத்துக்கு இரண்டு நாடும் அவசரபடுகினம் என்று தெரியவில்லை .

இந்தியா வெளிப்படையாக கூறியது,

இந்தியாவுக்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க, இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள.

இலங்கை வெளிப்படையாக கூறியது,

இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள.

இவ்விரு நாடுகளும் வெளிப்படையாக கூறாதது இந்திய, ஜப்பான், அமெரிக்க படை எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தும் என்பது. 😎

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Lara said:

போக போகத்தான் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Lara said:

.இவ்விரு நாடுகளும் வெளிப்படையாக கூறாதது இந்திய, ஜப்பான், அமெரிக்க படை எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தும் என்பது. 😎

1987 - 1990 வரை இந்தியா பயன்படுத்தியது. சர்வதேச விமானநிலையமாக்கினால் தான் இந்தியாவால் எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும் என்பது சரியாக படவில்லை. ஏனைய நாட்டு இராணுவங்களுக்கும் இது பொருந்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.