Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மாங்குயில் said:

உண்மைதான். 

அதனால்தான், எனக்குத் தெரிந்தவைகளை மாத்திரம் இங்கு எழுதுகிறேன்.

இயேசுவின் உண்மையான மேய்ச்சல், காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரேலிய சமுதாயத்திற்குத்தான்.

உங்களை போன்ற புற ஜாதிகளுக்கல்ல.

இதை நான் சொல்லவில்லை.

உங்களின் பைபிள் சொல்கிறது.

அன்று ஜேசு வாழ்ந்த இடத்திலிருந்தவர்கள், அவரின் வார்த்தையை கேட்டு பின்பற்றியவர்கள் இஸ்ராஜெலர். ஆனால் இன்று அந்தப் போதனை பரந்து, விரிந்து இங்கு திரியில் விவாதப் பொருளாய் நிக்குது. அதன் அர்த்தம் அதை பின்பற்றுவோர் யாவருக்கும் பொருந்தும். முதலில் அங்கு யாரைப் பற்றி, என்ன சொல்லி இருக்கிறது என்பதை தயவு செய்து வாசியுங்கள். அதன் பின் எழுதுங்கள். அர்த்தம் உள்ளதாகவும், ஏளனப் படுத்தபட முடியாததாகவும் இருக்கும். 'கேள்விசெவியன் ஊரைக்கெடுத்தானாம் என்றொரு ஒரு பழமொழி உண்டு.'

  • Replies 412
  • Views 39k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

"உண்மைதான். 

அதனால்தான், எனக்குத் தெரிந்தவைகளை மாத்திரம் இங்கு எழுதுகிறேன்"

ஏற்கனவே சிக்கி சின்னாபின்னமாகியிருக்கும் இத் திரியில் உங்களது கருத்தும் எண்ணைய் ஊற்றிவிடுமோ என அஞ்சுகிறேன் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, satan said:

அடுத்திருப்பவர்களது வறுமையை தாழ்த்திப் பேசுவதால் நாங்கள் உயர்ந்தவர்களாக மாறுவதில்லை. அவர்களுக்கு கைகொடுத்து உயர்த்தும் போது அவர்களோடு சேர்ந்து  நாமும் உயருகிறோம்.

நன்றி. சரியான இடத்தை அடைந்து விட்டோம் என  நான் நினைக்கிறேன். எனவே   நான் இதிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

பிறரின் வறுமையை தாழ்த்திப் பேசுவது ஓர் இழிந்த குணம்.

பிறரின் வறுமையை செழுமைப்படுத்துகிறோம் என்ற பாங்கில், பிரதிபலன் கருதி பைபிளை பிறரின் கையில் திணிப்பது, அதை விட இழிந்த குணம்.  இப்படி உதவி செய்வது, தர்மம் ஆகாது.

இதைத்தான் இங்கு எழுதுபவர்கள், மத வியாபாரம் என்று சொல்கிறார்கள். 

4 minutes ago, satan said:

அன்று ஜேசு வாழ்ந்த இடத்திலிருந்தவர்கள், அவரின் வார்த்தையை கேட்டு பின்பற்றியவர்கள் இஸ்ராஜெலர். 
 
இதைத்தான் சொன்னேன்.  இயேசு இஸ்ரேலிய சமுதாயத்திற்கு மாத்திரம் வந்தவர் என்று.  

உங்களை போன்ற புற ஜாதியினருக்கு வரவில்லையென்று. 

இயேசுவிற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, மாங்குயில் said:

பிறரின் வறுமையை தாழ்த்திப் பேசுவது ஓர் இழிந்த குணம்.

பிறரின் வறுமையை செழுமைப்படுத்துகிறோம் என்ற பாங்கில், பிரதிபலன் கருதி பைபிளை பிறரின் கையில் திணிப்பது, அதை விட இழிந்த குணம்.  இப்படி உதவி செய்வது, தர்மம் ஆகாது.

இதைத்தான் இங்கு எழுதுபவர்கள், மத வியாபாரம் என்று சொல்கிறார்கள். 

மாங்குயில்...  மிக,  அருமையான ... கருத்து. 
மற்ற மதங்கள, திணிக்காதீர்கள். 

On 10/17/2019 at 6:29 PM, Maruthankerny said:

இலங்கையில் வசிக்கும்போதே நான் 1987-88 இல் இருந்து ஜெகோவாவின் 
மாத சஞ்சிகையான  விழித்தெழு வை வாசித்து வருகிறேன் இவர்கள் காவற்கோபுரம் என்று 
ஒரு சஞ்சிகையும் தருவார்கள் அது அதிகமாக பைபிள் சார்ந்து இருப்பதால் எனக்கு பைபிள் அறிவு ஆரம்பத்தில் 
இல்லாததாலும் அதை வாசிப்பது இல்லை. இப்போதும் தொடர்ந்தும் வாசிக்கிறேன் பல அறிவியல் தகவல்களோடு பைபிள் பற்றியும் அறிவை பெறுகிறேன்.

ஜெகோவாக்காரர் பிறந்தநாள், கிறிஸ்மஸ், ஈஸ்ரர், விடுமுறை நாட்கள் என எதையும் கொண்டாடுவதில்லை.

மைக்கல் ஜக்சன் கூட Jehovah's Witnesses இல் இருந்த போது இவற்றை கொண்டாடவில்லை. 1987 இல் Christian ஆக மாறிய பின் 1993 இல் Elizabeth Taylor தான் அவரை முதல் முதலில் கிறிஸ்மஸ் கொண்டாட வைத்தார்.

On 10/22/2019 at 1:34 PM, மாங்குயில் said:

இயேசு யூதர் அல்லர் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள்.

On 10/24/2019 at 2:19 PM, மாங்குயில் said:

இஸ்ரேலியர்கள் எல்லாரும் யூதர் கிடையாது.

இயேசுவும் யூதர் கிடையாது.

உங்களுக்கு தெரியாவிட்டால் நீங்கள் தான் தேடி அறிய வேண்டும். யேசு ஒரு யூதர். 😀

  • கருத்துக்கள உறவுகள்
On 10/26/2019 at 12:09 AM, மாங்குயில் said:

பிறரின் வறுமையை செழுமைப்படுத்துகிறோம் என்ற பாங்கில், பிரதிபலன் கருதி பைபிளை பிறரின் கையில் திணிப்பது, அதை விட இழிந்த குணம்.  இப்படி உதவி செய்வது, தர்மம் ஆகாது.

இதைத்தான் இங்கு எழுதுபவர்கள், மத வியாபாரம் என்று சொல்கிறார்கள். .

பைபிளை மற்றவர்களுக்கு பரப்புவது கிறீஸ்தவர்களின் மதக்கடமையாகும். கிறீஸ்தவர்களின் மதக்கடமையை “இழிந்த குணம்” என்றும் “மத வியாபாரம்“ என்றும் சைவர்கள் இங்கு எழுதுவது சைவர்களின் மத துவேசத்துக்கு உதாரணம். தமிழ் தேசியம் என்ற போர்வையில் இந்த மத துவேசம் பிடித்த சைவர்களுடன் கிறீஸ்தவர்கள் இனியும் ஒட்டிக்கொண்டு இருப்பது முட்டாள்தனமானது.

On 10/26/2019 at 12:09 AM, மாங்குயில் said:

இதைத்தான் சொன்னேன்.  இயேசு இஸ்ரேலிய சமுதாயத்திற்கு மாத்திரம் வந்தவர் என்று.  

உங்களை போன்ற புற ஜாதியினருக்கு வரவில்லையென்று. 

இயேசுவிற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, Lara said:

உங்களுக்கு தெரியாவிட்டால் நீங்கள் தான் தேடி அறிய வேண்டும். யேசு ஒரு யூதர். 😀

எனக்குத் தெரிந்தபடியால்தான், இயேசு ஒரு யூதர் அல்ல என்று சொல்கிறேன்.

Google இல் தேடி விடை காண முடியாது.

4 minutes ago, மாங்குயில் said:

எனக்குத் தெரிந்தபடியால்தான், இயேசு ஒரு யூதர் அல்ல என்று சொல்கிறேன்.

Google இல் தேடி விடை காண முடியாது.

கிறிஸ்தவர்களின் பைபிளில் கூட யேசு யூதர் என்று தான் உள்ளது.

25 minutes ago, Jude said:

பைபிளை மற்றவர்களுக்கு பரப்புவது கிறீஸ்தவர்களின் மதக்கடமையாகும். 

பைபிளைப் பரப்புவது கிறிஸ்தவர்களின் மதக்கடமை எனில், தாம் காலம் காலமாக வாழ்ந்துவந்த மண்ணின் பண்பாடு, கலாச்சாரம் பாதிக்கப்படும் வகையில் மதவியாபாரமாக கிறிஸ்தவ மதம் பரப்பப்படும் விதத்தை விமர்சிக்கும் உரிமையும், தமது மதமாகிய சைவசமயம்/இந்து மதத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் சைவர்கள்/இந்துக்களுக்கு உண்டு.

41 minutes ago, Jude said:

கிறீஸ்தவர்களின் மதக்கடமையை “இழிந்த குணம்” என்றும் “மத வியாபாரம்“ என்றும் சைவர்கள் இங்கு எழுதுவது சைவர்களின் மத துவேசத்துக்கு உதாரணம்.

மற்றய மதங்களை மதிக்கும் குணம் இந்து சைவர்களுக்கு உண்டு. அதேவேளை இன்னொரு மதம் நமது தாய்மண்ணில் Corporate பாணியில் ஊடுருவி நம்பண்பாட்டுக்கு குந்தகமாக இருப்பதை எதிர்ப்பது துவேஷ குணம் அல்ல. தமது மதத்தை நேர்மையாகப் பின்பற்றும் கிறிஸ்துவர்களே இதை ஏற்றுக்கொள்வர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, Lara said:

கிறிஸ்தவர்களின் பைபிளில் கூட யேசு யூதர் என்று தான் உள்ளது.

இயேசுவிற்கும் பைபிளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று ஏலவே சொல்லி இருக்கிறேன்.

இஸ்ராயீலின் சந்ததிகளில் உள்ளவர்தான், இயேசு என்பவர்.

யூதர்களும் இஸ்ராயீலின் சந்ததிகள்தான்.

ஆனால், இயேசு யூதர் கிடையாது.

46 minutes ago, Jude said:

தமிழ் தேசியம் என்ற போர்வையில் இந்த மத துவேசம் பிடித்த சைவர்களுடன் கிறீஸ்தவர்கள் இனியும் ஒட்டிக்கொண்டு இருப்பது முட்டாள்தனமானது.

சைவர்களுடன் கிறிஸ்துவர்கள் ஒட்டிக்கொண்டு இருப்பது முட்டாள்தனம் எனில், அந்த முட்டாள்தனத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் எம் மண்ணை பலவந்தமாக ஊடுருவி கிறிஸ்தவ மதத்தை இங்கு பரப்பிய ஐரோப்பியரும், அமெரிக்கன் மிஷனறிகளுமே என்பதை மறக்க வேண்டாம். 

இதன் தொடர்சியே இன்றும் நிகழ்கிறது. இந்த ஒட்டுண்ணித்தனத்தையே நாம் விமர்சிக்கிறோம்.

12 minutes ago, மாங்குயில் said:

இயேசுவிற்கும் பைபிளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று ஏலவே சொல்லி இருக்கிறேன்.

இஸ்ராயீலின் சந்ததிகளில் உள்ளவர்தான், இயேசு என்பவர்.

யூதர்களும் இஸ்ராயீலின் சந்ததிகள்தான்.

ஆனால், இயேசு யூதர் கிடையாது.

யேசு என்ற ஒருவர் உண்மையில் இருந்தார் என்பதையே நீங்கள் பைபிளை வைத்து தானே நம்புகிறீர்கள்?

யேசு ஒரு யூதர். யேசுவிடம் ஆரம்பத்தில் போதனை பெற்றவர்கள் யூதர்கள். பின்னர் தான் அது கிறிஸ்தவ மதமாக தனித்து உருவானது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

ஜெகோவாக்காரர் பிறந்தநாள், கிறிஸ்மஸ், ஈஸ்ரர், விடுமுறை நாட்கள் என எதையும் கொண்டாடுவதில்லை.

மைக்கல் ஜக்சன் கூட Jehovah's Witnesses இல் இருந்த போது இவற்றை கொண்டாடவில்லை. 1987 இல் Christian ஆக மாறிய பின் 1993 இல் Elizabeth Taylor தான் அவரை முதல் முதலில் கிறிஸ்மஸ் கொண்டாட வைத்தார்.

அட போங்கப்பா....., இந்த மத மாறிகள் இப்ப hall எடுத்து பூப்புனித நீராட்டுவிழா செய்யுதுகள்..

வீட்டில் குப்பைத்தண்ணி வார்த்து போதகர் வந்து ஜெபம் செய்து பின்னர் hall எடுத்து நடைபெறுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
On 10/25/2019 at 6:18 PM, Rajesh said:

சைவரிகளிடம் என்றுமே இல்லாத ஒன்றை இருப்பதாக கதையளக்கிறீகள்!

நீங்க பிளேட்டை மாத்தி போட்டு முஸ்லிகள் போல கேவலமான தொழிலை செய்கிறீர்கள்.

மதம்மாற்ற வெறியர்களின் காடைத்தனத்தை எதிர்ப்பது மதத்துவேசம் ஆகாது.

உண்மைல மதத்துவேசம் உள்ள மதங்கள் சைவம் தவிர்ந்த பௌத்த, முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களை குறிப்பிடலாம்.

போனவருடம் யாழில் ஒரு கோவிலில் தேர் இழுக்கும்போது உயர்சாதியினர் மாத்திரம் இழுத்தார்கள்.

பின்பு தாழ்ந்த சாதியினர் வந்து இழுக்க முயன்றபோது அவர்களை தடுத்து ஒரு JCP crane இயந்திரம் மூலம் இழுத்து சென்றது செய்தியக பத்திரிக்கையில் வந்தது.  தன்னுடய சொந்த மக்களின் ஒரு பிரிவினரை இவ்வாறு இழிவாக நடத்துகின்ற சமூகத்தை எங்கும் காண முடியாது. 

யாழ் சாதிய போட்டி jcb இயந்திரம் மூலம் தேர் இழுத்த கொடுமை

By
Kannan
 -
June 7, 2018
 
%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-300யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவம் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த ஆலயத்தில் இன்று காலை ஆயிரக்கணக்காண பக்தர்கள் புடை சூழ்ந்திருந்த போதும் அந்தப் பகுதியில் முதலாவது சமூக வர்க்கத்தினர் என தம்மை தாமே அடையாளப்படுத்திய சிலர் குறித்த தேரின் வடத்தை பிடித்து இழுக்கும் உரிமை ஏனைய பக்தர்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தேரை இழுக்கும் சக்தி அந்த நபர்களிடம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவர்கள் jcb இயந்திரம் மூலம் தேர்வடம் பிடித்து இழுத்துள்ளமை பொரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் வரணி சிமில் அம்மன் ஆலயத்தின் பல வருட இதிகாசங்களை கொண்ட பூர்வீக சிறப்பை இழிவுபடுத்தியுள்ளதாக அந்தப்பகுதி அடியவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

https://www.todayjaffna.com/121843

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, MEERA said:

அட போங்கப்பா....., இந்த மத மாறிகள் இப்ப hall எடுத்து பூப்புனித நீராட்டுவிழா செய்யுதுகள்..

வீட்டில் குப்பைத்தண்ணி வார்த்து போதகர் வந்து ஜெபம் செய்து பின்னர் hall எடுத்து நடைபெறுகிறது

எங்கடை பங்சனுகள் தோத்துப்போகும்....உரஞ்சி உரஞ்சி குத்தியாட்டம் போடுறதிலை வலு கெட்டிக்காரர்.
#கண்ணாலை கண்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

கிறிஸ்தவர்களின் பைபிளில் கூட யேசு யூதர் என்று தான் உள்ளது.

யூத முறைப்படி அவருக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டது என்று தெள்ளத் தெளிவாக‌ உள்ளது

தமிழருக்கு எந்த வித பிரியோசனமும் இல்லாத இந்த திரி; தமிழரிடையே குரோதம் வளர்க்க துணை போகும் இல் திரி ஏன் மூடாமல் இருக்கின்றது; 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியை ஞானசார தேரரும் படிக்கிறார் போல் இருக்கு.

3 hours ago, MEERA said:

அட போங்கப்பா....., இந்த மத மாறிகள் இப்ப hall எடுத்து பூப்புனித நீராட்டுவிழா செய்யுதுகள்..

வீட்டில் குப்பைத்தண்ணி வார்த்து போதகர் வந்து ஜெபம் செய்து பின்னர் hall எடுத்து நடைபெறுகிறது

3 hours ago, குமாரசாமி said:

எங்கடை பங்சனுகள் தோத்துப்போகும்....உரஞ்சி உரஞ்சி குத்தியாட்டம் போடுறதிலை வலு கெட்டிக்காரர்.
#கண்ணாலை கண்டது.

Jehovah's Witnesses ஐ முறையாக பின்பற்றுபவர்கள் பிறந்தநாள், கிறிஸ்மஸ், ஈஸ்ரர், மற்றும் ஏனைய விடுமுறை நாட்களை பாகன்களின் வழிபாட்டு முறை என கூறி கொண்டாடுவதில்லை.

வருத்தமாக இருந்தாலும், அவசர தேவையாக இருந்தாலும் blood transfusion ஐ ஏற்பதில்லை. அதனால் பலர் மரணித்திருக்கிறார்கள்.

மைக்கல் ஜக்சன் Thriller பாடல் வெளியிட்ட போது ஏற்பட்ட எதிர்ப்பும் ஜெகோவா முறைப்படி அவரது “elders” ஆக இருந்தவர்கள் Smooth Criminal பாடலுக்கு துப்பாக்கி பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என கூறியமை போன்றன காரணமாக தான் அவர் அதை கைவிட்டு Christian ஆக மாறினார் என கேள்விப்பட்டேன். வேறு காரணங்களும் உள்ளதா தெரியவில்லை.

Edited by Lara

4 hours ago, Jude said:

பைபிளை மற்றவர்களுக்கு பரப்புவது கிறீஸ்தவர்களின் மதக்கடமையாகும். கிறீஸ்தவர்களின் மதக்கடமையை “இழிந்த குணம்” என்றும் “மத வியாபாரம்“ என்றும் சைவர்கள் இங்கு எழுதுவது சைவர்களின் மத துவேசத்துக்கு உதாரணம். தமிழ் தேசியம் என்ற போர்வையில் இந்த மத துவேசம் பிடித்த சைவர்களுடன் கிறீஸ்தவர்கள் இனியும் ஒட்டிக்கொண்டு இருப்பது முட்டாள்தனமானது.

ஜீட் ,

கிறிஸ்தவம் கூறிய கட்டுப்பெட்டிதனமாக வாழ்க்கைக்குள்  ஐரோப்பிய மக்களை இருக்கும் வரை  ஏறத்தாள 15 நூற்றாண்டுகளாக  அவர்களால் எந்த முன்னேறத்தையும் காண முடியவில்லை. மதம் சார்ந்த நம்பிக்கைகளை குறைத்து அறிவியல் தேடலை ஆரம்பித பிறகு தான் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட தொடங்கியது.  அறிவியலாளர் அலபேர்ட ஐன்ஸ்ரைன் கூட பைபிள் என்பது  புனைவுகளுடான சிறுபிள்ளை தனமாக புராணம் என்றே கூறினார். இன்றைய ஐரோப்பியர்கள் மத‍ நம்பிக்கைகளை ஒரு சம்பிரதாயமாக  மட்டுமே மேற்கொண்டு வருகிறார்கள். கடவுள் கொடுப்பார் என்ற குருட்டு  நம்பிக்கையை விடுத்து தாம் உழைத்தால் தான் வாழலாம் என்ற ஜதார்த்தத்தை உணர்ந்தவர்களாக  உள்ளார்கள். உத்தியோகபூர்வமாக மத‍த்தை கைவிட இல்லையே தவிர நடைமுறையில் மத நம்பிக்கை அற்ற சமுதாயமாகவே அவர்களில் பெரும்பான்மை மக்கள் வாழ்கிறார்கள். ஐரோப்பாவில் வாழும் எங்களால் அதை உணர முடிகிறது.  உப்பு சப்பற்ற மனித முன்னேற்றத்திற்கு உதவாத மூட நம்பிக்கைகளை அவர்கள்  புறம் தள்ளி பல காலம் ஆகிவிட்டது. ஆகவே மத கடமை என்று மனித முன்னேற்றதிற்கு எது வித‍த்திலும் உதவாத மூடத்தனங்களை மக்கள் மத்தியில் விதைக்காதீர்கள். எமது நாட்டில் பரப்ப படுவது 15 ம் நூற்றாண்டுக்கு முன்னால் ஐரோப்பிய மக்களால் தற்போது கைவிடப்பட்ட மத கொள்கைகளேயே.

எமது தமிழ் மக்கள் இந்து மதம் என்ற பக்கா மூடதனத்திற்கு சிக்குண்டு ஏற்கனவே கடைப்பிடித்த சைவ மத‍த்தில் உள்ள சில நல்ல த‍த்துவங்களை கூற மறந்து இந்து மதம் விதைத்துவிட்ட விஷமான வடிகட்டிய மூடக்கொள்கைகளே த‍மது கலாச்சாரம் என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ மதம் தான் கலாசாரம் என்பதே சிலரின்  வாதம். மத‍ம் என்பது கலாச்சசாரத்தின் ஒரு சிறு பகுதியே தவிர அது தான் கலாச்சாரம் என்று இல்லை. அண்மையில் கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் அங்கு வாழ்ந்த மக்களை எவ்வளவு எழுத்தறிவுடன் எவ்வாறு ஒரு நகர நாகரீகத்தை கட்டி எழுப்பியிருந்தார்கள் என்பதன் நிருபணம் தான் தமிழருக்கு பெருமை சேர்த்த‍தே தவிர அவர்களின் மதம் அல்ல. கண்டு பிடிக்கபட்ட பல ஆயிரக்கணக்கான பொருட்களில் மத‍ம் தொடர்பாக எந்த தடயமும் கண்டு பிடிக்கபடவில்லை என்பதில் இருந்து கல்வி அறிவுடன் திகழ்ந்த அந்த மக்கள் மதம் தொடர்பாக பெரிய ஈடுபாட்டுடன் இருக்கவில்லை என்பது நிரூபிக்கபட்டுள்ளது. எமது வரலாற்றில் எம்மோடு ஒட்டிவிட்ட ஒட்டுண்ணிகளான மதங்களை புறக்கணித்து மனிதர்களாக  இணைந்து வாழும் போது எம்மால் பல சாதனைகளை கட்டி எழுப்ப முடியும்.  (இந்த நிலையில் கிறிஸ்தவம், இஸ்லாம் தான் ஒட்டுணிகள் இந்து மதம் ஏதோ தமிழரின் பூர்வீக மதம் என்று புலுடா வேறு. எல்லா மதங்களும் மனிதர்களன் பலவீனத்தில் வந்த ஒட்டுண்டிகள் தான்)

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, tulpen said:

இந்த திரியில் கூறப்பட்ட ஒரேயொரு நல்ல  கருத்து இதுதான். உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். 

3 hours ago, Dash said:

தமிழருக்கு எந்த வித பிரியோசனமும் இல்லாத இந்த திரி; தமிழரிடையே குரோதம் வளர்க்க துணை போகும் இல் திரி ஏன் மூடாமல் இருக்கின்றது; 

விடுங்கள் ஐயா,  யார் யார் மத துவேஷிகள்,  யாரெல்லாம் சாதிவெறிர்  எவரெல்லாம் உண்மையாக ஈழத்தை நேசிப்பவர்கள் என்று அடையாளம் காணக்கிடைக்கும் அறிய சந்தர்ப்பம்  இது.  

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தவகையில் ஜேசு கூறியதெல்லாம் " உன்னைப்போல் உன் அயலானையும் நேசி """""" என்பதை மட்டுமே.  

2000 வருடங்களுக்கு முன்னர் மத்தியகிழக்கு நாடு ஒன்றில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை 2019லில் வரிக்குவரி வாசித்து கடைப்பிடிக்க முனைவது சரிதானா?  அப்புத்தகம் எழுதப்பட்ட காலம், சூழல்,  தேவை,  யாருக்காக,  என்ன தேவைக்காக எழுதப்பட்டது பற்றியெல்லாம் சிறிதும் யோசிப்பதில்லையா ?  ஒரு புத்தகத்தில் உள்ள நல்ல,  தேவையான விடயங்களை எடுத்துக்கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் வரிக்கு வரி கடைபிடிக்கவேண்டுமானால் இந்துக்கள் (சைவர்கள் அல்ல )எல்லோரும் மஹாபாரத காலத்துக்கும்,  கிறிஸ்தவர்கள் எல்லோரும் 2000 வருடங்களுக்கு முந்திய  மத்தியகிழக்கு வாழ்க்கைமுறைக்கும்தான் போக வேண்டிவரும்.  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் போர்க்காலத்தில் கூட தமிழ் கிறீஸ்தவர்களும் சிங்கள கிறீஸ்தவர்களும் ஒருவருக்கு ஒருவர் உதவி இருக்கிறீர்கள்.
இலங்கை மக்கள் இன ரீதியாகவோ மொழி ரீதியாகவோ பிளவு பட்டிருப்பதிலும் பார்க்க மதரீதியாகவே அதிகம் பிளவு பட்டு இருக்கிறார்கள்.

ஆகவே தமிழ் கிறீஸ்தவர்கள் சிங்கள கிறீஸ்தவர்களுடன் இணைந்து தம்மை “கிறீஸ்தவர்கள்” என்று மட்டுமே அடையாள படுத்தி கொண்டு தம்மை என்றும் ஆதரித்து வரும் ஐக்கிய தேசிய கட்சியை இலங்கை முழுவதும் பலப்படுத்த வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் தேசியவாதம், சிங்கள தேசிய வாதம், பௌத்த மத ஆதிக்கவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், சைவ மத துவேசம் போன்றவற்றை இலங்கை கிறீஸ்தவர்கள் அமெரக்க ஐரோப்பிய அவுஸ்திரேலிய கிறீஸ்தவர்களின் ஆதரவுடன் எதிர்கொள்ள முடியும். தமிழ் பேசும் கிறீஸ்தவர்கள் தமிழ் தேசியவாதத்தை கைவிட வேண்டும். 

மத நம்பிக்கை அற்ற அறிவார்ந்த சமூகம் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் முன்னாள் கம்யூனிச நாடுகளிலும் பெருகி வருகிறது. இலங்கையில் இந்த சமூகம் போதுமான அளவில் உருவாக இன்னும் இருநூறு ஆண்டுகளாவது ஆகும். அதுவரை மதரீதியான சமூகங்களே சாத்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Jude said:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.