Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01_SriLanka.adapt_.1900.1-1200x550-1-720x450.jpg

சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது?

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுதந்திரதின நிகழ்வு குறித்து முன்னேற்பாட்டு கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) அனர்த்த முகாமைத்துவம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே, சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், அனைத்து அமைச்சுக்கள், கொழும்பு மாநகரசபை மற்றும் முப்படையின் பங்களிப்புடன் சுதந்திரதின நிகழ்வை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரும்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் சுதந்திர தினத்தையொட்டி மரம் நடும் திட்டத்தையும் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசு பதவியேற்றதன் பின்னர், 2016ஆம் ஆண்டில் காலி முகத்திடலில் நடைபெற்ற 68ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் முதன்முறையாக தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சுதந்திர-தினத்தன்று-தமிழ/

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

2016ஆம் ஆண்டில் காலி முகத்திடலில் நடைபெற்ற 68ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் முதன்முறையாக தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் போது நாங்கள் தமிழில்தானே சுதந்திர கீதம் பாடப் போகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் போது நாங்கள் தமிழில்தானே சுதந்திர கீதம் பாடப் போகிறோம்

தமிழ்நாட்டில் தமிழர்கள் என்ன மொழியில் சுதந்திர கீதம் பாடுகிறார்கள்?

’’சுதந்திர கீதம்” என்ற இரண்டு சொற்களுமே தமிழ் இல்லையே?

 

 

26 minutes ago, கற்பகதரு said:

தமிழ்நாட்டில் தமிழர்கள் என்ன மொழியில் சுதந்திர கீதம் பாடுகிறார்கள்?

’’சுதந்திர கீதம்” என்ற இரண்டு சொற்களுமே தமிழ் இல்லையே?

 

 

இதற்கான தமிழ்ச் சொல் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

அது அவர்களது நாட்டின் சுதந்திர கீதம் அதை அவர்கள் எந்த மொழியிலும் பாடிவிட்டுப்போகட்டுமே, வடக்குக்கிழக்கிலும் அவர்கள் தமிழ்மக்களை சிங்கள மொழியில் பாடச்சொல்லல்லாம் பிரச்சனை இல்லை காரணம் காலம்காலமாக நாம் கிந்தி மொழிப்பாடல்களை கேதிறோமே அதற்கு ஏதாவது அர்த்தம் தெரியுமா அதேபோல் இதையிம் கடந்துபோய்விடவேண்டியதே. 

இவை எதைக்குறிக்கிறது எனில்  நாம்வேறு நீங்கள் வேறு கூடிய விரைவில் எம்மிடமிருந்து நீங்கள் பிரிந்து சென்றுவிடுங்கள் எனக்கூறுகிறார்கள் என்பதை. அது எங்களுக்கு மகிழ்சியே. அதுக்கு ஏன் ஐயா அழுகிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் போது நாங்கள் தமிழில்தானே சுதந்திர கீதம் பாடப் போகிறோம்

தமிழருக்கு  ?

சுதந்திரம் ?

😂

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி.

  • கருத்துக்கள உறவுகள்

 

9 hours ago, கற்பகதரு said:

’’சுதந்திர கீதம்” என்ற இரண்டு சொற்களுமே தமிழ் இல்லையே?

 

8 hours ago, tulpen said:

இதற்கான தமிழ்ச் சொல் என்ன?

விடுதலைப்பாட்டு

Edited by கற்பகதரு

இன்னும் ஒரு பத்து வருடத்தில், சிங்கள வைபவத்தில்,  சீன மொழியிலும் பாடப்படலாம் 🙄

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

இதற்கான தமிழ்ச் சொல் என்ன?

அதன் பெயரே “சுதந்திர கீதம்” இல்லை. தேசிய கீதம்.

அது சரி தேசியம் என்பது தமிழா வட மொழியா!🤔

தேஸ் - எனும் நாட்டை குறிக்கும் வடமொழியின் வழிவந்ததா தேசமும்-தேசியமும்?

அடங் கொய்யா, தமிழ் தேசியம், தமிழ் தேசியம் என்று கிடந்து மாரடிக்கிறோமே, அதில் உள்ள தேசியமே தமிழ் வார்த்தை இல்லையா 😷

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது?

 

நீங்க வேறு நாடையா

நாங் வேறு நாடு.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

நீங்க வேறு நாடையா

நாங் வேறு நாடு.

https://kailaasa.org

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

கைலாசவைப் பற்றி நிறையவே தகவல் வருகிறதே.

சரி தமிழர்களுக்கென யார் தலைமையிலாவது ஒரு தனிநாடு உருவாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

சரி தமிழர்களுக்கென யார் தலைமையிலாவது ஒரு தனிநாடு உருவாகட்டும்.

சீமானைக் கேட்டுப் பாருங்கள். ஒருவேளை சாத்தியமாகலாம்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kavi arunasalam said:

சீமானைக் கேட்டுப் பாருங்கள். ஒருவேளை சாத்தியமாகலாம்

ஐயா

ஏன் கேட்டு பார்ப்பான்?

ஓட்டு போட்டு பாருங்க.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kavi arunasalam said:

சீமானைக் கேட்டுப் பாருங்கள். ஒருவேளை சாத்தியமாகலாம்

இதுக்குமொரு காடூன் போடலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

இதுக்குமொரு காடூன் போடலாமே.

போட்டால் போச்சு. சண்டமாருதன் கேட்டால் உங்களைத்தான் சொல்லுவேன்.

089500-ED-DDEE-4759-9992-ED6-ECF3928-FF.

On 12/24/2019 at 11:15 AM, தமிழ் சிறி said:

சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது?

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மிக நல்ல விடயம்.

தமிழர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை போர்க்குற்றவாளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசு வெளிப்படுத்தியுள்ளது.

பெப்ரவரி 4 என்பது சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் சுதந்திரமாக தமிழினப் படுகொலைகளை மேற்கொள்ள கிடைத்த சந்தர்ப்பத்தை கொண்டாடும் நாளாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தேசிய கீதம்: தமிழில் பாட தடை: என்ன நடக்கிறது அங்கே? - விரிவான தகவல்கள்

ரஞ்சன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாட தடை: என்ன நடக்கிறது அங்கே?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையின் தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால், இரண்டு இனங்கள் என்ற பொருளை வெளிப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் ஒரே இனம் என்ற அடிப்படையிலேயே தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய கீதத்தை இரண்டு தடவைகள் பாடுவதிலேயே நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என அவர் கூறினார்.

இந்தியாவிலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதை அவர் இதன்போது நினைவூட்டினார்.

இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாட தடை: என்ன நடக்கிறது அங்கே?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அரசியல்வாதிகள் கண்டனம்

தேசிய கீதத்தைத் தமிழ் மொழியில் பாட முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் இதனை பிபிபி தமிழுக்கு கூறினார்.

தேசிய கீதம் இலங்கை அரசியலமைப்பில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.

ராமலிங்கம் சந்திரசேகரன்படத்தின் காப்புரிமைRAMALINGAM CHANDRASEGARAN - FACEBOOK Image captionராமலிங்கம் சந்திரசேகரன்

தேசிய கீதத்தைச் சிங்கள மொழியில் மாத்திரம் பாடுவது என்ற தீர்மானமானது, நாட்டிலுள்ள இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் ஒரு விடயம் என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயமானது, இன நல்லிணக்கத்திற்கோ அல்லது மத நல்லிணக்கத்திற்கோ சாதகமான ஒன்றல்ல எனவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் இந்த தீர்மானமானது, இனவாத, மதவாத செயற்பாடுகள் மாத்திரமன்றி, ஒரு இனத்தின் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடு எனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிடுகின்றார்.

இனவாத, மதவாத செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு சென்று, தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாகவே தான் இதனை கருதுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட முடியாது என்ற அறிவிப்பைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் சிங்கள மொழி எவ்வாறு அரசகரும மொழியாகக் காணப்படுகின்றதோ, அதேபோன்று தமிழ் மொழியும் அரசகரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI Image captionகோப்புப்படம்

இந்த நிலையில், சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிடுகின்றார்.

சிங்கள மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்பதற்காக, நாட்டை சிங்கள மயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் பேசப்படும் என செல்வம் அடைகலநாதன் உறுதியளித்தார்.

சிங்கள மொழிக்கு உள்ள அதிகாரம், தமிழ் மொழிக்கும் காணப்படுகின்றமையினால், அதனை யாரும் தடுத்து நிறுத்தி விட இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் குறிப்பிடுகின்றார்.

மனோ கணேசனின் ட்விட்டர் பதிவு

இலங்கையின் 2020ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம், தமிழ் மொழியில் பாட மறுப்பு தெரிவிக்கப்பட்டமையானது, தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாரிய பாதிப்பான விடயம் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

தனது ட்விட்டர் தள குறிப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ட்விட்டர் பதிவுபடத்தின் காப்புரிமைMANO GANESHAN TWITTER

சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் தேசிய மற்றும் உத்தியோகப்பூர்வ மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் இலங்கை அரசியலமைப்பின் 16ஆவது திருத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு சுதந்திர கிடைத்ததை நினைவுக்கூறும் வகையில் டோரிங்டன் பகுதியிலுள்ள சுதந்திர சதுக்கத்தை திறக்கும் நிகழ்வு 1949ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் தேதி நடத்தப்பட்டதாகவும், அதில் தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பாடப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் மனோ கணேஷன் பதிவிட்டுள்ளார்.

'தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடலாம்'

இலங்கையில் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் இந்த நாட்டின் தேசிய மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதென சிரேஷ்ட சட்டத்தரணி ராஜகுலேந்திரா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அத்துடன், தேசிய கீதம் சிங்களத்தில் எவ்விதம் இசைக்கப்பட வேண்டும், தமிழ் மொழியில் எவ்விதம் இசைக்கப்பட வேண்டும் என்பதை 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் மிக தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இலங்கை அரசியலமைப்பு

இலங்கையில் ஓரினத்தவர்கள் மாத்திரமே வாழ்கின்றார்கள் என்ற அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனின் கருத்தை சட்டத்தரணி ராஜகுலேந்திரா நிராகரித்தார்.

இலங்கையர்களின் பிறப்பு சான்றிதழில் தேசிய இனம் என்ன என வினவப்பட்டுள்ளதாகவும், அதுவொரு அரச ஆவணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு தேசிய இனம் என்ற இடத்தில் இலங்கை தமிழ், சிங்களவர், இலங்கை சோனகர் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர் என்ற நான்கு இனங்களில் யார் என்பதை எழுத வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அவ்வாறென்றால், கடந்து வந்த அரசாங்கங்கள் இலங்கையில் நான்கு இனங்கள் வாழ்ந்து வருவதை ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இந்நிலையில், இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதத்தை பாட அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி ராஜகுலேந்திரா குறிப்பிடுகின்றார்.

2016ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற அனைத்து சுதந்திர தின நிகழ்வுகளிலும் தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-50912472

On 12/24/2019 at 11:15 AM, தமிழ் சிறி said:

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுக்குப் போய் தமிழன் அலட்டிக்கலாமா?

சொறிலங்காட தேசிய கீதத்தை நான் வாழ்நாளில பாடினதே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Rajesh said:

இதுக்குப் போய் தமிழன் அலட்டிக்கலாமா?

சொறிலங்காட தேசிய கீதத்தை நான் வாழ்நாளில பாடினதே இல்லை.

நைசு 

கன அமைச்சர் ஏன் தமிழ் எம்பி மாருக்கு தேசிய கீதம்  பாடத்தெரியுமோ என்பது பாரிய சந்தேகம் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நைசு 

கன அமைச்சர் ஏன் தமிழ் எம்பி மாருக்கு தேசிய கீதம்  பாடத்தெரியுமோ என்பது பாரிய சந்தேகம் 

நானறிய  தேசிய கீதம் என்பது  பாடியதாக நினைவில் இல்லை. உங்களுக்கு நினைவில் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

’தாய்நாட்டை தமிழ் மொழியில் போற்றும் தேசிய கீதத்தை அகற்ற வேண்டாம்’

image_1372296018.jpg

“ஒரே நாடு, மூன்று மொழிகள்” என்ற அடிப்படையில்  இந்த நாட்டை ஒன்று சேர்த்து, சிங்கள, தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத, பிரிவினைவாதிகளை தோற்கடிக்கும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளதாவது,

“எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என துறைசார் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை வாழ் தமிழ் மொழி பேசும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

“இத்தகைய முடிவு, இலங்கையின் அரசியலமைப்பில் இணை ஆட்சி மொழியாகவும், இணை தேசிய மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தமிழ் மொழியை புறந்தள்ளி இலங்கையை மொழி இனரீதியாக பிரிக்கும் ஒரு பிரிவினைவாத செயல் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.  

“உங்கள் பதவியேற்பு நிகழ்வின் ‘அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக செயற்படுவேன்’ என்று நீங்கள் நாட்டுக்கு தந்த உங்கள் உறுதிமொழியின் அடிப்படையில் தமிழ் மொழியிலான  தேசிய கீதத்தை அகற்றும் இந்த முடிவை ரத்து செய்ய  துறைசார் அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்

“மூன்று மொழிகளையும் பேசி, எழுதி, தேசிய மொழிகள் மூலம் தேசிய ஒருமைபாட்டை ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்ட கட்சித் தலைவர் என்ற முறையிலும், 67 வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதை உறுதி செய்ய பாடுபட்ட ஒருவன் என்ற முறையிலும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் விவகாரங்களை கையாண்ட  முன்னாள் அமைச்சர் என்ற முறையிலும் நான் இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

“இந்தியாவின் பெருமகன் ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் சீடனாக, கொல்கத்தா சாந்தி நிகேதனில் பயின்ற, நமது நாட்டு தேசிய கவிஞர் அமரகோன் அவ்வேளையில் எழுதி, இசையமைத்த, அன்றைய தேசிய பாடல்தான், பின்னாளில் நமது தேசிய கீதமாக அங்கீகாரம் பெற்றது என்பதை ஞாபகப்படுத்துகிறேன். 

இந்த தேசிய கீதத்தை இலங்கையின் தமிழ் அறிஞர் நல்லதம்பி, வரிக்குவரி அப்படியே தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளார். ஒரே அர்த்தத்தில், ஒரே இசை வடிவில், நமது தாய் நாட்டை, “நமோ நமோ மாதா” என சிங்களத்திலும், “நமோ நமோ தாயே” என தமிழிலும் பாடும் தேசிய கீதம் எமக்கு கிடைத்துள்ளது எமது அதிஷ்டமாகும் என நான் நினைக்கிறேன். 

“இதை பிரதானமாக கொண்டு மொழி உரிமைகளை பயன்படுத்தி நாம் இந்நாட்டில் வாழும் இரண்டு மொழிகளை பேசும் இனத்தவர்களையும் இலங்கையர்களாக  ஒன்று சேர்ப்போம் என் நான் உங்களுக்கு கோரிக்கை விடுக்க விரும்புகிறேன்.  

 “அதிகார பகிர்வை வலியுறுத்தும் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் தொடர்பாக உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். எனினும் மொழியுரிமை என்பது 13ஆம் திருத்தம் மூலம் எமது அரசியலமைப்பில் உட்புகுத்தப்படவில்லை.  16ஆம் திருத்தம் மூலமாக மொழியுரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியலமைப்பின் 4ஆம் அத்தியாயத்தில், இலங்கையின் இணை ஆட்சி மொழிகளாகவும், தேசிய மொழிகளாகவும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அதேவேளை ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

“ஒரே நாடு, மூன்று மொழிகள்” என்ற அடிப்படையில்  இந்த நாட்டை ஒன்று சேர்த்து, சிங்கள, தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத, பிரிவினைவாதிகளை தோற்கடிக்கும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என உங்களை வேண்டுகிறேன்.  

“உங்கள் அரசாங்கத்தில் இருக்கின்ற சிலர், “ஒரே மொழி” என்ற கொள்கையை முன்னெடுக்க முயல்கின்றனர். இத்தகையை கொள்கைதான் 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு அடுத்து வந்த பல்லாண்டுகளாக இந்த நாட்டை படுகுழியில் தள்ளியது. உண்மையில் ஒரே மொழி என்று சொல்லும் போது ஒரே நாடு என்ற கொள்கைதான் பலவீனமாகிறது.

"இவர்கள், உலகில் எங்கேயும் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் கிடையாது என்று கூறுகின்றனர். இது பிழையான தகவல். உலகில் பல நாடுகளில் தேசிய கீதம், அவ்வந்த நாடுகளில் பேசப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பாடப்படுகின்றன. சில நாடுகளில் ஒரே கீதத்தில் இரண்டு மொழி வரிகள் இடம்பெறுகின்றன.  

"அதேவேளை, பதினைந்து தேசிய மொழிகளை கொண்ட இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தி மொழியில் இருக்கின்றது என்றும் இதே சிலர் கூறுகின்றனர். இதுவும் பிழை. இந்தியாவின் தேசிய கீதம், இலங்கை தேசிய கீதத்தை எழுதிய அமரகோனின் குருவான ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் தமது தாய்மொழி வங்காளியில் எழுதப்பட்டது. 

"வங்காள மொழி இந்தியாவின் சிறுபான்மையினரின் மொழியாகும். அதற்காக நாம் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மாத்திரம் பாட வேண்டும் என நாம் கூறவில்லை.  தமிழிலும் பாடுவோம் என்றுதான் கூறுகிறோம்.

"சிங்கள, தமிழ் நாடுகளை தவிர்த்து, இலங்கை நாட்டை கட்டி எழுப்புங்கள். தமிழிலும் இலங்கை தேசிய கீதத்தை பாடுவது தேசாபிமான நடவடிக்கை ஆகும். சில போலி தேசியவாதிகள், மொழி இனங்களை ஒன்று சேர்க்கும்  இந்த தேசாபிமான நடவடிக்கையை நிறுத்தி விட  முயல்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம் என உங்களை நான் கோருகிறேன்.” என, மனோ எம்பி, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பியுள்ள தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/தயநடட-தமழ-மழயல-பறறம-தசய-கததத-அகறற-வணடம/175-243013

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என துறைசார் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை வாழ் தமிழ் மொழி பேசும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

முன்னால் அமைச்சர் சொல்வது சரிதான். எனக்கு இந்த விசயத்தைக் கேள்விப் பட்டதும் இருதயமே நின்று விடும் போல இருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கக் கொடியோன் சம்பந்தன்இசுமத்திரன் குழு கலந்துகொள்ளுமா?இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

சிங்கக் கொடியோன் சம்பந்தன்இசுமத்திரன் குழு கலந்துகொள்ளுமா?இல்லையா?

தலைவர நாசூக்காக மருத்துவமனையில் போய் படுத்துவிடுவார் என எண்ணுகிறேன்.

தேர்தலும் வாறபடியால் மற்றவர்களும் ஏதாவது சாட்டு சொல்லி பின்வாங்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.