Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கல் பானையை தமது சின்னமாக அறிவித்தது தமிழ் மக்கள் கூட்டணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக பொங்கல் பானை அறிவிக்கப்பட்டுள்ளது.

TMK.jpg

இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், தனது பொங்கல் வாழ்த்துடன் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகம் வாழ் எனது இனிய தமிழ் உறவுகளுக்கு பொங்கல் பானை சார்பில் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை உழவர் திருநாளாம் இன்று மதம், குலம், நாடு கடந்து சகல தமிழ்ப் பேசும் உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொங்கல் பானை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் என்பதை நான் சொல்லி எனது இனிய உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/73251

  • கருத்துக்கள உறவுகள்

cv-wikky.jpg

பொதுத்தேர்தல் – விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியின், சின்னம் வெளியிடப்பட்டது!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக, பொங்கல் பானைச் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், தனது பொங்கல் வாழ்த்துடன் விடுத்துள்ளார்.

உலகம் வாழ் உறவுகளுக்கும் தனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், பொங்கல் பானை, தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் என்பதையும் அறிவித்தார்.

அந்தவகையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனன் தலைமையிலான கட்சி போட்டியிட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பொதுத்தேர்தல்-விக்னேஸ்/

  • கருத்துக்கள உறவுகள்

பானையை போட்டுடக்காவிட்டால் மகிழ்ச்சி.

அது சரி அந்தப் பானையில் என்ன கூழோ காச்சப் போகிறார்கள்.  😀

  • கருத்துக்கள உறவுகள்

447-A886-B-312-E-46-D9-BF94-60735-EDD957

  • கருத்துக்கள உறவுகள்

blobid1530256080352.jpg

பானைக்குள் நண்டுகளை போட்டுவிட்டால் ஒன்றை ஒன்று முன்னேற விடாமல் இழுத்து கொண்டு கிடக்கும்..👍

பானை இப்போது மடடக்களப்பில் வெளிவந்திருக்கிறது। அதாவது மட்டுநகரில் தமிழனின் வாக்குகள் மேலும் சின்னாபின்னமாகப்போகுது। ஊர் ரெண்டுபடடால் கூத்தாடிக்கு கொண்டாடடமென்று சோனவன் இப்பவே திடடம் போட்டிருப்பான் எப்படி தமிழனுடைய பிரதிநிதித்துவத்தை கைப்பற்றலாமெண்டு।

ரிஷர்டும் ஹக்கீமும்  எட்கெனவே ஒன்றாக  போட்டிபோட  தீர்மானித்திருக்கிறார்கள் ।  சோனவன் ஒருசேர தமிழன் பிரிந்துபோகிறான்। எந்த ஒரு அறிவுள்ள மட்டு மக்களும் இதை ஏற்றுக்கொள்ள மாடடார்கள்।

யாழ்பாணத்தான் இங்கு வந்து தமிழர்களின் ஓட்டுக்களை பிரித்துவிட்ட்ன என்றும் தமிழர் பிரதிநிதிகளை குறைத்துவிடடார்கள் என்று சொல்லும் ஒரு நிலைமை இங்கு வரும்। இங்குள்ள நிலைமையும் யாழ் நிலைமையும் வித்தியாசம் என்பதை மனதில் வைத்து அரசியல் செய்தால் நல்லது। இல்லாவிடடாள் பானைக்கு புள்ளடிக்கு பதிலாக பொல்லடிதான் மக்கள் கொடுக்க நேரிடும்।

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

blobid1530256080352.jpg

பானைக்குள் நண்டுகளை போட்டுவிட்டால் ஒன்றை ஒன்று முன்னேற விடாமல் இழுத்து கொண்டு கிடக்கும்..👍

நாங்க யாரு ..... டமில்ஸ் . ஈல டமில்ஸ் எல்லோ. ?? 😀

On 1/16/2020 at 3:31 PM, Vankalayan said:

யாழ்பாணத்தான் இங்கு வந்து தமிழர்களின் ஓட்டுக்களை பிரித்துவிட்ட்ன என்றும் தமிழர் பிரதிநிதிகளை குறைத்துவிடடார்கள் என்று சொல்லும் ஒரு நிலைமை இங்கு வரும்।

உங்களிடம் ஊறிப்போயுள்ள பிரதேசவாத விஷம் வெளியே கொட்டப்படுகிறது.

ஒன்றுமே சாதிக்க வக்கில்லாத சம்மந்தன்-சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பை குப்பைக்கூடையில் போட்டுவிட்டால் தமிழரின் பலம் வடக்கிலும் கிழக்கிலும் அதிகரிக்கும்.

5 hours ago, போல் said:

உங்களிடம் ஊறிப்போயுள்ள பிரதேசவாத விஷம் வெளியே கொட்டப்படுகிறது.

ஒன்றுமே சாதிக்க வக்கில்லாத சம்மந்தன்-சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பை குப்பைக்கூடையில் போட்டுவிட்டால் தமிழரின் பலம் வடக்கிலும் கிழக்கிலும் அதிகரிக்கும்.

வங்காலயான் கூறியது யதார்தத நிலையை என்றே நான் விளங்கி கொள்ளுகிறேன். வித்தியாசமான கருத்துக்கள் இருக்கலாம். பலமும் இருக்கலாம்  ஆனால் அக்கருத்துக்கள், எமது பலங்கள்  யதார்தத நிலையை அநுசரித்து  போனாலே வெற்றி கிடைக்கும் என்பதையே முள்ளிவாய்ககால் எமக்கு உணர்த்தியது. 

On 1/19/2020 at 3:46 PM, tulpen said:

வங்காலயான் கூறியது யதார்தத நிலையை என்றே நான் விளங்கி கொள்ளுகிறேன்

ஆனா அதான் முள்ளிவாய்க்காலுக்கான யதார்த்தம் என்பதை விளங்காதது ஏனோ?

On ‎1‎/‎18‎/‎2020 at 11:25 PM, போல் said:

உங்களிடம் ஊறிப்போயுள்ள பிரதேசவாத விஷம் வெளியே கொட்டப்படுகிறது.

ஒன்றுமே சாதிக்க வக்கில்லாத சம்மந்தன்-சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பை குப்பைக்கூடையில் போட்டுவிட்டால் தமிழரின் பலம் வடக்கிலும் கிழக்கிலும் அதிகரிக்கும்.

நான் பிரதேச வாதம் கதைக்கவில்லை। Tulpen எழுதியதுபோல யதார்த்தத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிடடால் நான் ஒன்றும் செய்யமுடியாது।

யாரிடம் பிரதேசவாதம் ஊறியிருக்கிறது என்று இப்பொழுது உங்களுக்கு சொல்லுகிறேன்। நீங்கள் சொல்லுகிற மக்கள் வன்னி தமிழர்களையோ, கிழக்கு தமிழர்களையோ தமிழர்களாக நினைப்பதில்லை।

யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திகளை அல்லது மற்றைய தேவைகளை கொண்டுசெல்லும்போது ஏன் வன்னி கிழக்கு  மக்களை புறக்கணிக்கிறீர்கள்। எத்தனை தடவைகள் வெளி நாட்டு தூதுவர்களை, வெளிநாட்டு பிரதிநிதிகளை , முதலீட்டர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து செல்லுகிறீர்கள்। ஏன் வன்னி கிழக்குக்கு அழைத்து செல்வதில்லை। அத்தி பூத்தாப்போல எப்பவாவது ஒரு தடவை இது கிழக்கில் நடக்கும்।

கடந்தகாலங்களில் எப்படியும் யாழ்ப்பாண அதிகாரிகளே வன்னி , கிழக்கில் முதன்மை உத்தியோகத்தர்களாக இருக்கவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்கள்। வன்னி கிழக்கு பிரதேசத்தவர்கள் அப்படியான பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பியதே இல்லை।  உங்களுக்கு உதாரணத்துக்கு சிலவற்றை சொல்லுகிறேன்।

மட்டுவில் அரச அதிபராக திரு மோனகுருசாமி அவர்கள் இருந்தார்கள்। அவர் அந்த பிரதேசத்தை சேர்ந்தவர்க இருந்ததால் சிலருக்கு அதில் விருப்பமிருக்கவில்லை। எனவே புலிகள் மூலமாக காய் நகர்த்தினார்கள்। இறுதியாக அவர் காயப்பட்டு செயட்பட முடியாமல் போனது। இவர் எனது ஆசிரியராகவும் இருந்தார்। பின்னர் SLAS பரீட்ச்சை மூலமாக நிர்வாக  சேவைக்குள் உள்ளேற்கப்படடார்।  வேறு சில காரணங்களை கூறினாலும் அவர் மடடக்களப்பை சேர்ந்தவர் என்பதுதான் முக்கிய காரணம்।

அடுத்தது வவுனியாவில் அந்த நாட்களில் ஒரு சங்கம் இருந்தது। அதுதான் யாளகற்றி சங்கம்। யாழ்பாணத்தவரை அங்கிருந்து அகற்றுவது। இவர்கள் எங்கு குடியேறினாலும் அங்குள்ள மக்களுக்கு அது பிரச்சினையாக இருந்தது। இருந்தாலும் அது சரியோ பிழையோ என்று சொல்லமாடடேன் , நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்।

அடுத்தது மன்னார் அரச அதிபராக இருந்த மன்னரைசேர்ந்த திரு மரியதாசன் குரூஸ் அவர்கள்। இவர் அரச அதிபரானது அங்குள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து குடியேறியவர்களூக்கு பிடிக்கவில்லை। எனவே அவர்கள் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களூடாக இவரை மாற்ற முயட்சித்தார்கள்। அது முடியாமல் போனபோது புலிகளை வைத்து காய் நகர்த்தினார்கள் ।

இவர்மீது பிழையான குற்றச்சாட்டுக்களை வைத்து மரணதண்டனை நிறைவேற்ற புலிகளை கங்காரு நீதி மன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட்து। அந்த நீதிமன்றில் ஐந்து பேர் இருப்பார்கள்। அவரர்களுக்கு தலைமை நீதிபதியாக அப்போது சலீம் (இயக்க பெயர்)என்னும் புலிதான் இருந்தார்। அங்கு இரண்டுக்கு இரண்டு என்னும் அளவில் இருந்ததாம் ஐந்தாவது இருப்பவரின் கைகளில்தான் முடிவு இருந்தது,  இப்போது இவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை ) அதட்கு எதிராக வாக்களித்துவிடடார்।

அவர் அரச அதிபருக்கு தெரிந்தவரும்  , அறிந்தவருமாக இருந்தபடியால்  அதட்கு சம்மதிக்கவில்லை ।  இல்லாவிடடால்  மண்டையில்  போட்டிருப்பார்கள் । இத்துடன்  விடவில்லை। அவரது சாரதிக்கு  பணம்  கொடுத்து  புலிகள்மூலமாக  குண்டுகளை  அவரது வாகனத்தில்  கொழும்புக்கு  அனுப்பி  சதி செய்தார்கள் । இருந்தாலும் இறைவன்  தன்னை  காப்பாற்றியதாக  கூறினார்  । அவர் இரண்டு மாதம்  போலீஸ்   காவலில்  இருக்க  நேரிட்ட்து ।

அதன்  பின்னர் இது   வரைக்கும்  யாழ்ப்பாணத்தவரே  அந்த கதிரையில்  அமர்ந்திருக்கிறார்கள் । மன்னாரில்  எத்தனையோ  தகுதியானவர்கள்  இருந்தாலும் அவர்களுக்கு சந்தர்ப்பம்  கொடுக்கப்படவில்லை ।இப்போது இவர் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியில் ஆலோசகராக கடமை புரிகிறார்।

 இதைப்போல இன்னும் எத்தனையோ எழுதலாம்। இனியாவது யார் பிரதேச வாதம் பேசுகிறார்கள் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்। இங்கு நான் பெயர்கள் குறிப்பிடடதான் நோக்கம் உண்மையை வெளிப்படுத்துவதட்கே।

 மத்தபடி சம்பந்தனோ, சுமந்திரனோ, விக்கியோ  எவர் வந்தாலும் எல்லாம் ஒன்றுதான்।  

10 hours ago, Vankalayan said:

நான் பிரதேச வாதம் கதைக்கவில்லை। Tulpen எழுதியதுபோல யதார்த்தத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிடடால் நான் ஒன்றும் செய்யமுடியாது।

பிரதேசவாதத்தை வலிந்து வெளிப்படுத்தி கதைத்துவிட்டு யதார்த்தம் என்ற முகமூடிக்குள் மறைவது நல்லதல்ல. 

17 hours ago, Vankalayan said:

யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திகளை அல்லது மற்றைய தேவைகளை கொண்டுசெல்லும்போது ஏன் வன்னி கிழக்கு  மக்களை புறக்கணிக்கிறீர்கள்। எத்தனை தடவைகள் வெளி நாட்டு தூதுவர்களை, வெளிநாட்டு பிரதிநிதிகளை , முதலீட்டர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து செல்லுகிறீர்கள்। ஏன் வன்னி கிழக்குக்கு அழைத்து செல்வதில்லை। அத்தி பூத்தாப்போல எப்பவாவது ஒரு தடவை இது கிழக்கில் நடக்கும்।

இப்பிடியெல்லாம் பச்சைப் பொய்களை எழுதி புலத்தில் நடப்பவை பற்றிய அறிவில்லாத புலம்பெயர்ந்தவர்களை ஏமாற்றலாம். யாழ்பாணத்தைவிட வன்னியிலும், கிழக்கிலும் நடந்த அபிவிபிருத்திகள் பலமடங்கு அதிகம்.

பிரதேசவாதம் பேசி தங்களுக்கு சுயலாபத்தை பெற முயலும், தங்கள் குறைகளை மறைக்க நினைக்கும் கருணா போன்ற நபர்கள் இப்பிடியெல்லாம் பச்சைப் பொய்களை அவிழ்த்துவிடுவதில் வல்லவர்கள். 

11 hours ago, போல் said:

பிரதேசவாதத்தை வலிந்து வெளிப்படுத்தி கதைத்துவிட்டு யதார்த்தம் என்ற முகமூடிக்குள் மறைவது நல்லதல்ல. 

உண்மை சுடும்। நான் அங்கு எழுதியது எல்லாம் உண்மை। இன்னும் வேணுமெண்டால் நிறைய எழுதலாம்। 

4 hours ago, Rajesh said:

இப்பிடியெல்லாம் பச்சைப் பொய்களை எழுதி புலத்தில் நடப்பவை பற்றிய அறிவில்லாத புலம்பெயர்ந்தவர்களை ஏமாற்றலாம். யாழ்பாணத்தைவிட வன்னியிலும், கிழக்கிலும் நடந்த அபிவிபிருத்திகள் பலமடங்கு அதிகம்.

பிரதேசவாதம் பேசி தங்களுக்கு சுயலாபத்தை பெற முயலும், தங்கள் குறைகளை மறைக்க நினைக்கும் கருணா போன்ற நபர்கள் இப்பிடியெல்லாம் பச்சைப் பொய்களை அவிழ்த்துவிடுவதில் வல்லவர்கள். 

உண்மை சுடும்। நான் அங்கு எழுதியது எல்லாம் உண்மை। இன்னும் வேணுமெண்டால் நிறைய எழுதலாம்। உங்களுக்கு இதில் பொதுவாக எழுதுவது , மற்றவர்கள் உண்மையை தெரிந்துகொள்வது விருப்பமில்லாவிட்ட்தால் உங்களது ஈமெயில் விலாசத்தை தெரியப்படுத்தினால் உங்களுக்கு தனிப்படட ரீதியில் தகவல்கள் ஆதாரத்துடன் எழுதுவேன்। *****

10 hours ago, Rajesh said:

இப்பிடியெல்லாம் பச்சைப் பொய்களை எழுதி புலத்தில் நடப்பவை பற்றிய அறிவில்லாத புலம்பெயர்ந்தவர்களை ஏமாற்றலாம். யாழ்பாணத்தைவிட வன்னியிலும், கிழக்கிலும் நடந்த அபிவிபிருத்திகள் பலமடங்கு அதிகம்.

பிரதேசவாதம் பேசி தங்களுக்கு சுயலாபத்தை பெற முயலும், தங்கள் குறைகளை மறைக்க நினைக்கும் கருணா போன்ற நபர்கள் இப்பிடியெல்லாம் பச்சைப் பொய்களை அவிழ்த்துவிடுவதில் வல்லவர்கள். 

அதானே!

வன்னியிலும், கிழக்கிலும் நடந்த அபிவிருத்திகளை தெரியாமல் சகல உண்மைகளும் எனக்கு மட்டுமே அத்துப்படி என்கிற ரேஞ்சில ரீல்விட்டுடு, யாழ்பாணத்தான் மட்டக்களப்பான் என்று பிரதேசவாத்தை உசுப்பிவிட்டுடு , இப்ப உண்மை சுட பிளேட்டை மாத்தி போடக்கூடாது அண்ணே!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர், இப்படி மட்டக்களப்பில் வாழும் பூர்வீகத் தமிழர் என்றுமே வேறுபாடு காட்டியதில்லை, செயற்பட்டதும் இல்லை.

வேறுபாடு காட்டிச் செயற்பட்ட அனைவருமே மட்டக்களப்புக்கு முலில்வந்து குடியேறிய யாழ்ப்பாணத்தவர்கள். பின்வந்தவர்கள் தங்களை மிஞ்சி வளர்ந்துவிடாதிருக்க பிரதேச வாதத்தை கையில் எடுத்திருந்தார்கள். 

மட்டக்களப்பில் பிதேசவாதம் பேசுபவர்களை ஆராய்ந்தால் நிச்சயம் அவர்கள் பூர்வீகம் யாழ்பாணமாக இருக்கும். 

15 hours ago, Gowin said:

அதானே!

வன்னியிலும், கிழக்கிலும் நடந்த அபிவிருத்திகளை தெரியாமல் சகல உண்மைகளும் எனக்கு மட்டுமே அத்துப்படி என்கிற ரேஞ்சில ரீல்விட்டுடு, யாழ்பாணத்தான் மட்டக்களப்பான் என்று பிரதேசவாத்தை உசுப்பிவிட்டுடு , இப்ப உண்மை சுட பிளேட்டை மாத்தி போடக்கூடாது அண்ணே!

நான் பிரதேச வாதம் கதைக்கவில்லை। Tulpen எழுதியதுபோல யதார்த்தத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிடடால் நான் ஒன்றும் செய்யமுடியாது।

யாரிடம் பிரதேசவாதம் ஊறியிருக்கிறது என்று இப்பொழுது உங்களுக்கு சொல்லுகிறேன்। நீங்கள் சொல்லுகிற மக்கள் வன்னி தமிழர்களையோ, கிழக்கு தமிழர்களையோ தமிழர்களாக நினைப்பதில்லை।

யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திகளை அல்லது மற்றைய தேவைகளை கொண்டுசெல்லும்போது ஏன் வன்னி கிழக்கு  மக்களை புறக்கணிக்கிறீர்கள்। எத்தனை தடவைகள் வெளி நாட்டு தூதுவர்களை, வெளிநாட்டு பிரதிநிதிகளை , முதலீட்டர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து செல்லுகிறீர்கள்। ஏன் வன்னி கிழக்குக்கு அழைத்து செல்வதில்லை। அத்தி பூத்தாப்போல எப்பவாவது ஒரு தடவை இது கிழக்கில் நடக்கும்।

கடந்தகாலங்களில் எப்படியும் யாழ்ப்பாண அதிகாரிகளே வன்னி , கிழக்கில் முதன்மை உத்தியோகத்தர்களாக இருக்கவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்கள்। வன்னி கிழக்கு பிரதேசத்தவர்கள் அப்படியான பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பியதே இல்லை।  உங்களுக்கு உதாரணத்துக்கு சிலவற்றை சொல்லுகிறேன்।

மட்டுவில் அரச அதிபராக திரு மோனகுருசாமி அவர்கள் இருந்தார்கள்। அவர் அந்த பிரதேசத்தை சேர்ந்தவர்க இருந்ததால் சிலருக்கு அதில் விருப்பமிருக்கவில்லை। எனவே புலிகள் மூலமாக காய் நகர்த்தினார்கள்। இறுதியாக அவர் காயப்பட்டு செயட்பட முடியாமல் போனது। இவர் எனது ஆசிரியராகவும் இருந்தார்। பின்னர் SLAS பரீட்ச்சை மூலமாக நிர்வாக  சேவைக்குள் உள்ளேற்கப்படடார்।  வேறு சில காரணங்களை கூறினாலும் அவர் மடடக்களப்பை சேர்ந்தவர் என்பதுதான் முக்கிய காரணம்।

அடுத்தது வவுனியாவில் அந்த நாட்களில் ஒரு சங்கம் இருந்தது। அதுதான் யாளகற்றி சங்கம்। யாழ்பாணத்தவரை அங்கிருந்து அகற்றுவது। இவர்கள் எங்கு குடியேறினாலும் அங்குள்ள மக்களுக்கு அது பிரச்சினையாக இருந்தது। இருந்தாலும் அது சரியோ பிழையோ என்று சொல்லமாடடேன் , நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்।

அடுத்தது மன்னார் அரச அதிபராக இருந்த மன்னரைசேர்ந்த திரு மரியதாசன் குரூஸ் அவர்கள்। இவர் அரச அதிபரானது அங்குள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து குடியேறியவர்களூக்கு பிடிக்கவில்லை। எனவே அவர்கள் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களூடாக இவரை மாற்ற முயட்சித்தார்கள்। அது முடியாமல் போனபோது புலிகளை வைத்து காய் நகர்த்தினார்கள் ।

இவர்மீது பிழையான குற்றச்சாட்டுக்களை வைத்து மரணதண்டனை நிறைவேற்ற புலிகளை கங்காரு நீதி மன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட்து। அந்த நீதிமன்றில் ஐந்து பேர் இருப்பார்கள்। அவரர்களுக்கு தலைமை நீதிபதியாக அப்போது சலீம் (இயக்க பெயர்)என்னும் புலிதான் இருந்தார்। அங்கு இரண்டுக்கு இரண்டு என்னும் அளவில் இருந்ததாம் ஐந்தாவது இருப்பவரின் கைகளில்தான் முடிவு இருந்தது,  இப்போது இவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை ) அதட்கு எதிராக வாக்களித்துவிடடார்।

அவர் அரச அதிபருக்கு தெரிந்தவரும்  , அறிந்தவருமாக இருந்தபடியால்  அதட்கு சம்மதிக்கவில்லை ।  இல்லாவிடடால்  மண்டையில்  போட்டிருப்பார்கள் । இத்துடன்  விடவில்லை। அவரது சாரதிக்கு  பணம்  கொடுத்து  புலிகள்மூலமாக  குண்டுகளை  அவரது வாகனத்தில்  கொழும்புக்கு  அனுப்பி  சதி செய்தார்கள் । இருந்தாலும் இறைவன்  தன்னை  காப்பாற்றியதாக  கூறினார்  । அவர் இரண்டு மாதம்  போலீஸ்   காவலில்  இருக்க  நேரிட்ட்து ।

அதன்  பின்னர் இது   வரைக்கும்  யாழ்ப்பாணத்தவரே  அந்த கதிரையில்  அமர்ந்திருக்கிறார்கள் । மன்னாரில்  எத்தனையோ  தகுதியானவர்கள்  இருந்தாலும் அவர்களுக்கு சந்தர்ப்பம்  கொடுக்கப்படவில்லை ।இப்போது இவர் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியில் ஆலோசகராக கடமை புரிகிறார்।

 இதைப்போல இன்னும் எத்தனையோ எழுதலாம்। இனியாவது யார் பிரதேச வாதம் பேசுகிறார்கள் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்। இங்கு நான் பெயர்கள் குறிப்பிடடதான் நோக்கம் உண்மையை வெளிப்படுத்துவதட்கே।

 மத்தபடி சம்பந்தனோ, சுமந்திரனோ, விக்கியோ  எவர் வந்தாலும் எல்லாம் ஒன்றுதான்।  

நான் பிரதேசவாதம் பேசவில்லை।இருந்தாலும் நீங்கள் சுயநலவாதிகளாக இருக்கும்போது நாங்கள் பிரதேசவாதம் பேசுவதில் தவறில்லை।  

  •  
19 hours ago, Vankalayan said:

அடுத்தது மன்னார் அரச அதிபராக இருந்த மன்னரைசேர்ந்த திரு மரியதாசன் குரூஸ் அவர்கள்। இவர் அரச அதிபரானது அங்குள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து குடியேறியவர்களூக்கு பிடிக்கவில்லை। எனவே அவர்கள் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களூடாக இவரை மாற்ற முயட்சித்தார்கள்। அது முடியாமல் போனபோது புலிகளை வைத்து காய் நகர்த்தினார்கள்

பிரதேசவாதம் என்ட கண்ணாடியை நீங்க போட்டுகொண்டு எல்லாத்தையும் பார்ப்பது உங்களுக்கு வழமையான வேலை போல. 

  • கருத்துக்கள உறவுகள்

 இதுக்குத்தான் பொங்கல் பானையை வாசலில வைக்கவேண்டம் எண்டனான் கண்ட கண்ட நாய்ங்க எல்லாம் வந்து நக்கப்போகுது

Edited by Elugnajiru

3 hours ago, Elugnajiru said:

 இதுக்குத்தான் பொங்கல் பானையை வாசலில வைக்கவேண்டம் எண்டனான் கண்ட கண்ட நாய்ங்க எல்லாம் வந்து நக்கப்போகுது

அந்த பொங்கல் பனையையே ஒரு நாய் தூக்கிட்டு ஓடிப்போயிட்டுது। அது அதுகளோட சின்னமாம்।

4 hours ago, Rajesh said:

பிரதேசவாதம் என்ட கண்ணாடியை நீங்க போட்டுகொண்டு எல்லாத்தையும் பார்ப்பது உங்களுக்கு வழமையான வேலை போல. 

நான் பிரதேசவாதம் பேசவில்லை।இருந்தாலும் நீங்கள் சுயநலவாதிகளாக இருக்கும்போது நாங்கள் பிரதேசவாதம் பேசுவதில் தவறில்லை।  

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தவறான செய்தியை வெளியிட்டபின்  அது தவறென்று வெளியிட்டவர் மனதுக்கும் தோன்றும்போது அவர் தனது மனதைத் திருப்திப்படுத்தப் பலவேறு சிந்தனைகளை... அவை தப்பாக இருந்தாலும்.... மேற்கொள்வது மனித இயல்பு. 

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, அந்தப் பொய்யைச் சொன்னவருக்கே அது மெய்போலத் தோன்றும். 

20 hours ago, Paanch said:

மன்னிக்கவும்। இது ஒன்றும் தவறான செய்தி இல்லை। அதட்குத்தான்  பெயர் ஊர்களுடன் வெளியிடடேன்। பொய் எழுதுபவர்கள் அப்படி எழுத மாடடார்கள்। இன்னும் எழுத நிறைய இருக்கு । இருந்தாலும் உண்மை சுடும் என்பதால் எழுதவில்லை। நான் ஒன்றும் கோயபல்ஸின் சீடன் இல்லை।

  • கருத்துக்கள உறவுகள்

வங்காலையான்,

உண்மையும் யதார்தமும் உங்கள் பக்கமே.

ஆனால் இங்கே எழுதுபவர்களில் மிக மோசமான 3 கருத்தாளர்களுக்கு நீங்கள் உண்மையை புரிய வைக்க முடியும் என நான் நம்பவில்லை.

போல், கோவின், ராஜேஸ் - எமது சமூகத்தில் தவறுகள்/பிற்போக்குத்தனங்கள் என 20 விடயங்களை பட்டியல் இட்டால், அந்த 20 விடயங்களையும் ஆதரித்து எழுதும் பேர்வழிகளாக இந்த மூவரும் இருப்பர்.

யாழில் பலர் பல கருத்துகளில் ஒட்டியும், எதிர்த்தும் எழுதுவர். ஆனால் எப்போதும் நாகரீகத்துக்கு எதிர் வழியில் எழுதுபவர்கள் இந்த மூவர்.

எப்படி மூன்று பேர் இப்படி ஒரே மாதிரி பத்தாம்பசலித்தனமாக எழுத முடியும் என நான் வியப்பது கூட உண்டு.

மூவரில் ஒருவர் ஒரு திரியில் எழுதினால், கட்டாயம் மற்றையவர்கள் அந்த திரியில் வந்து அவருக்கு ஆதரவாக எழுதியே தீர்வார்கள். ஒருவர் எழுதாவிட்டால் அந்த திரி கொழுந்து விட்டு எரிந்தாலும் மூன்று பேரையும் காணக் கிடைக்காது.

அநேகமா இந்த 3 ஐடியும் ஒரே ஆளாக இருக்கவே வாய்புகள் அதிகம். இவர்களின் உண்மையான ஐடி யார் என்பது கூட எனக்கு ஊகம் உளது.

எனவே இந்த troll களிடம் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

இப்போ மூவரும் என்னை போட்டு பிராண்டுவார்கள், அல்லது தனியே ஒரு ஐடியின் மூலம் மட்டும் பதில் எழுதுவார்கள்- இருந்து வேடிக்கை மட்டும் பாருங்கள் 😂 

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிகளுக்கு சின்னங்களுக்கும் தமிழர் நிலத்தில் குறைச்சலே இல்லை.

ஆனால்.. அந்த நிலம் வேண்டி நிற்பது ஒற்றுமை மட்டுமே. 

தமிழர் நிலம் எங்கும் ஆக்கிரமிப்புச் சின்னங்கள் பெருகுவதை தடுப்பதே இன்றைய தேவையாக உள்ளது. அபிவிருத்தி என்ற பெயரிலும்.. இராணுவ நெருக்குவாரங்களை அதிகரிப்பதன் மூலமும்.. மக்களை அச்சுறுத்தி வாக்கு வாங்கலாம் என்று நினைக்கின்றனர்.. தென்னிலங்கை மற்றும் அவர்களின் அடிவருடி அரசியல்வியாதிகள். 

ஆனால்.. மக்கள்.. ஒரு தெளிவில் இருப்பதாகவே தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/23/2020 at 4:07 AM, Vankalayan said:

நான் பிரதேச வாதம் கதைக்கவில்லை। Tulpen எழுதியதுபோல யதார்த்தத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிடடால் நான் ஒன்றும் செய்யமுடியாது।

நான் பிரதேசவாதம் பேசவில்லை।இருந்தாலும் நீங்கள் சுயநலவாதிகளாக இருக்கும்போது நாங்கள் பிரதேசவாதம் பேசுவதில் தவறில்லை।  

  •  

22 hours ago, goshan_che said:

வங்காலையான்,

உண்மையும் யதார்தமும் உங்கள் பக்கமே.

ஆனால் இங்கே எழுதுபவர்களில் மிக மோசமான 3 கருத்தாளர்களுக்கு நீங்கள் உண்மையை புரிய வைக்க முடியும் என நான் நம்பவில்லை.

போல், கோவின், ராஜேஸ் - எமது சமூகத்தில் தவறுகள்/பிற்போக்குத்தனங்கள் என 20 விடயங்களை பட்டியல் இட்டால், அந்த 20 விடயங்களையும் ஆதரித்து எழுதும் பேர்வழிகளாக இந்த மூவரும் இருப்பர்.

யாழில் பலர் பல கருத்துகளில் ஒட்டியும், எதிர்த்தும் எழுதுவர். ஆனால் எப்போதும் நாகரீகத்துக்கு எதிர் வழியில் எழுதுபவர்கள் இந்த மூவர்.

எப்படி மூன்று பேர் இப்படி ஒரே மாதிரி பத்தாம்பசலித்தனமாக எழுத முடியும் என நான் வியப்பது கூட உண்டு.

மூவரில் ஒருவர் ஒரு திரியில் எழுதினால், கட்டாயம் மற்றையவர்கள் அந்த திரியில் வந்து அவருக்கு ஆதரவாக எழுதியே தீர்வார்கள். ஒருவர் எழுதாவிட்டால் அந்த திரி கொழுந்து விட்டு எரிந்தாலும் மூன்று பேரையும் காணக் கிடைக்காது.

அநேகமா இந்த 3 ஐடியும் ஒரே ஆளாக இருக்கவே வாய்புகள் அதிகம். இவர்களின் உண்மையான ஐடி யார் என்பது கூட எனக்கு ஊகம் உளது.

எனவே இந்த troll களிடம் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

இப்போ மூவரும் என்னை போட்டு பிராண்டுவார்கள், அல்லது தனியே ஒரு ஐடியின் மூலம் மட்டும் பதில் எழுதுவார்கள்- இருந்து வேடிக்கை மட்டும் பாருங்கள் 😂 

ஊகம் - உறுதியாகிறது. #so predictable 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.