Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

சரிங்க dean of yarl மெத்தபடிச்சனியள்... சொல்லுறது சரியாய் இருக்கும்.

பின்ன வரட்டே போட்டு....  😁

அட நில்லுங்க பாஸ். இதெல்லாம் யார் மெத்த படிச்சது என்பதை பற்றியதல்ல பாஸ். 

கருத்துகளம் என்றாலே கருத்து, எதிர்கருத்து இருக்கும்தானே.

நிண்டு விளையாடுங்க.

  • Replies 67
  • Views 6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அட நில்லுங்க பாஸ். இதெல்லாம் யார் மெத்த படிச்சது என்பதை பற்றியதல்ல பாஸ். 

கருத்துகளம் என்றாலே கருத்து, எதிர்கருத்து இருக்கும்தானே.

நிண்டு விளையாடுங்க.

உங்களை மாதிரி பொறுமையா நிண்டு விளையாட நேரமில்லை பாஸ்... வேற எங்காவது இப்படி அலம்பறை பண்ணினால், வருவியல் தானே. 

ஏதோ, தெய்வம் மாதிரி நீங்கள் இருக்கிற நம்பிக்கையில் தான், நானும் ஏதோ, நமக்கு தெரிச்சதை சொல்லி அலம்பறை பண்ணுறன். 

கையை விடமாட்டியள் தானே. 😁
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

சரிங்க dean of yarl மெத்தபடிச்சனியள்... சொல்லுறது சரியாய் இருக்கும்.

பின்ன வரட்டே போட்டு....  😁

கோசான் மெத்தப் படிசவரோ இல்ல படித்து கிழித்தவரோ எனக்குத்  தெரியாது. ஆனால் பதில் எழுதுவதற்கு முன்னர் நன்றாக ஆய்வு -research செய்கிறார் என்பது தெளிவு 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

கோசான் மெத்தப் படிசவரோ இல்ல படித்து கிழித்தவரோ எனக்குத்  தெரியாது. ஆனால் பதில் எழுதுவதற்கு முன்னர் நன்றாக ஆய்வு -research செய்கிறார் என்பது தெளிவு 😀

உங்களை முதல், முதலாக சந்திக்கிறேன்.

உங்கள் பெயர்,  ஸ்ரீலங்கன் விமானங்களில் கேப்டன் என்பதனை சிங்களத்தில் உச்சரிக்கும் வகையில் உள்ளது என்று நினைக்கிறேன் சரியோ?

ஆமாம், கோசன் சரியான தகவலுக்காக சிரத்தை எடுப்பார். ஆனால் அதில் செலவழிக்கும் நேரம் குறித்தே நான் கவலை கொள்வேன். 

அதனை சொன்னாலும், my car, my petrol என்பதாக பேசி பயமுறுத்துவார் ஆகையினால்... இப்ப அவரை அப்படியே அவர் போக்கில் விடுவதே நல்லது என்பது எனது பார்வை.

ஆனால் சிறந்த மனிதர்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

 

அடிக்கிற காத்தில அம்மிக்கல்லே பறக்குது, அரசமரத்திலை எம்மாத்திரம்? அவனவன், முக்கியமாக வந்தபின் காப்பவர்கள், பயத்தில, கிடைத்ததை கொண்டோவடுதால், கடைக்காரர்கள், இதை பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் நீண்டகால பாதகம் தரும் நம்பிக்கையீனத்தினை சம்பாதிக்கின்றனர்.

உண்மையான வார்த்தைகள். ஆனால் எங்கட கடைக்காறருக்கு நம்பிக்கையான வாடிக்கையாளர் (?) loyalty என்பது என்கின்ற சொல்லு ஒன்று இருப்பதே தெரிய வாய்ப்பில்லை. 

அடிப்படையில் என் இனத்திற்கு அறம் என்பதே இல்லை என்பது என் தெளிவு.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

கோசான் மெத்தப் படிசவரோ இல்ல படித்து கிழித்தவரோ எனக்குத்  தெரியாது. ஆனால் பதில் எழுதுவதற்கு முன்னர் நன்றாக ஆய்வு -research செய்கிறார் என்பது தெளிவு 😀

 

6 minutes ago, Nathamuni said:

உங்களை முதல், முதலாக சந்திக்கிறேன்.

உங்கள் பெயர்,  ஸ்ரீலங்கன் விமானங்களில் கேப்டன் என்பதனை சிங்களத்தில் உச்சரிக்கும் வகையில் உள்ளது என்று நினைக்கிறேன் சரியோ?

ஆமாம், கோசன் சரியான தகவலுக்காக சிரத்தை எடுப்பார். ஆனால் அதில் செலவழிக்கும் நேரம் குறித்தே நான் கவலை கொள்வேன். 

அதனை சொன்னாலும், my car, my petrol என்பதாக பேசி பயமுறுத்துவார் ஆகையினால்... இப்ப அவரை அப்படியே அவர் போக்கில் விடுவதே நல்லது என்பது எனது பார்வை.

ஆனால் சிறந்த மனிதர்.

முனி பாஸ்,

1. நானும் உப்பிடிதான் யோசிச்சு எங்கட கற்பிதன் பாஸை கனகாலமா கப்பித்தான் எண்டு எழுதினான். மனுசன் தங்கமெல்லோ, ஒரு வார்த்தை மறுப்புச் சொல்லேல்ல.

2. அட சொன்னா நம்புங்க பாஸ். ஒவ்வொரு கருத்தையும் ஆராய்ந்து எழுத முடியுமா. என்ன சின்ன வயசில இருந்து பாண் சுத்தி வாற பேப்பர் ஈறா ஒண்டையும் விடாம வாசிச்சதால சில விடயம் மனசில் நிக்குது. அதை எழுதும் முன் தேவைப்பட்டால் எப்பவாவது உறுதி செய்து கொள்கிறேன் அவ்வளவுதான். 

ஆனால் என்ர குழப்படியல் எல்லாம், அரசியல்,  வரலாறு, சட்டம், பொது அறிவு, அடிப்படை தமிழ், ஆங்கிலம் இவற்றில்தான் என்பதை நீங்கள் கண்டிருப்பியள்.

மற்றும்படி நில்மினியின் மருத்துவ குறிப்புகள், சோமசுந்தரம் ஐயா, மற்றை முனைவர் போன்றோரின் தமிழ் இலக்கிய பதிவுகளில், வாத்தியாரின்   தமிழ் இலக்கண திரியில், கம்யூட்டர், என்ஜினியரிங், கணிதம்,  நடனம் சம்பந்தமான திரிகளில், இப்படி பலதில், கோசான்சே நன்றி வணக்கம் போட்டு விட்டு, சுவரோடு சுவராய் நிற்பதையும் கண்டிருப்பியள்.

தெரியாத விடயத்தை ஆராய்ந்து எழுத முடியாது. அப்படி எழுதுவதென்றால் யாழில் முழு நேர ஊழியனாக வேண்டும் 🤣 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

இந்த தவிச்ச முயல் அடிப்பது'னா என்ன..?

தூண்டில் போட்டு பிடிக்குறதா..?

ஒன்னும் புரியலை..!

இந்த குறித்த சந்தர்ப்பத்தில், வாடிக்கையாளர்கள் (முயல்கள்) தவிக்கிறார்கள் அத்தியாவசிய உணவுகளை கொள்வனவு செய்தே ஆக வேண்டிய நிலையை எண்ணி, அப்படிப்பட்ட உணவுகளின் தட்டுப்பாட்டை, பற்றாக்குறையை எதிர் நோக்கி.  

அந்த இக்கட்டான  நிலையை தமக்கு சாதகமாக பாவித்து (exploit), சாதாரணமாக விற்பனையாளர்களின் கையிருப்பில் இருக்கும் உணவுகளை  தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறை போன்ற செயற்கையான தோற்றத்தை ஏற்படுத்தி, விலைகளை ஏற்றி விற்றும்,   வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போல பாசாங்கு பண்ணி தராதரம் அற்ற பொருட்களை சந்தைப்படுத்தியும்  வாடிக்கையாளரிடம் இருந்து கொள்ளை இலாபம் விற்பனையாளர்கள் அடிக்கிறார்கள்.


முக்கியமாக, தவிச்ச முயல் அடிப்பது  என்பது வாடிக்கையாளரின் பார்வையில் (perspective of customers).

இவ்வளுவு விளக்கியும், தவிச்ச முயல் அடிப்பது என்பதன் உணர்வை எழுத்தில் வெளிக்கொணர்வதற்கு முடியவில்லை.

ஆனால், bird's eye view இல் (அதாவது இந்த நிகழ்வை முழுமையாக நோக்குமிடத்து), விற்பனையாளர்கள்  come out smelling of roses (அப்படி கொள்ளை இலாபம் அடித்தும் விற்றபனையாளர்கள் நன்மை புரிபவராகவே நோக்கப்படுகிறார், ஏனெனில் அத்தியாவசிய உணவுகளை (செயற்கையாக ஏற்படுத்திய) பற்றாக்குறை, தட்டுப்பாடு வேளையிலும் குறிப்பிட்ட விற்பனையாளரிடமிருந்து பெறக்   கூடியதாக இருப்பதால்) என்பது  மிகவும் பொருந்தி வருவது. 

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

1) உங்களை முதல், முதலாக சந்திக்கிறேன்.

2) உங்கள் பெயர்,  ஸ்ரீலங்கன் விமானங்களில் கேப்டன் என்பதனை சிங்களத்தில் உச்சரிக்கும் வகையில் உள்ளது என்று நினைக்கிறேன் சரியோ?

ஆமாம், கோசன் சரியான தகவலுக்காக சிரத்தை எடுப்பார். ஆனால் அதில் செலவழிக்கும் நேரம் குறித்தே நான் கவலை கொள்வேன். 

3)அதனை சொன்னாலும், my car, my petrol என்பதாக பேசி பயமுறுத்துவார் ஆகையினால்... இப்ப அவரை அப்படியே அவர் போக்கில் விடுவதே நல்லது என்பது எனது பார்வை.

4) ஆனால் சிறந்த மனிதர்.

1) வணக்கம் நாதமுனி(யர்) ஏறக்குறைய பன்னிரெண்டு வருடங்களாக யாழ் .கொம் ஐ வாசித்து வருபவன். அண்மையில்தான் இணைந்தேன். உங்கள் பெயர் எனக்குப் பரிச்சயமானது.

2) உங்கள் யூகம் சரியானது.  Captain என்பதன் Spanish (?) வடிவம்.

3) சரியான தகவலுக்காக மிகவும் சிரத்தை எடுத்து ஆய்வு செய்தல் Research  Methodology ன் மிக முக்கியமான பண்பு / அம்சம்.  ஆய்வு முடிவுகள் எழுமானந்தமானதாக இருக்காது. எனவே அவர் தனது முடிவுகளில் உறுதியாக நிற்பது இயல்பானதே.

4) இன்றைய பொழுதுகளில் பிறரின் நற்பண்புகளை போற்றுவதே குறைந்து போயே போயிற்று. உங்கள் கூற்றுநீங்கள் பெரியவர் (குணத்தில்) என்பதைக் காட்டுகிறது . வாழ்த்துக்கள்.👍

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இந்தத் திரியை வந்து பார்க்காமல் நானும் ஒண்டைத் திறந்துபோட்டன்

  • கருத்துக்கள உறவுகள்

செல்வர‌த்தினம் மாஸ்டரிடம் பெற்ற பொருளியல் அறிவை கொண்டு சொல்வ‌தென்றால் 
இங்கு கேள்வி கூட நிரம்பல் குறைவு எனவே பொருட்களின் விலை கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

‭020 3738 6000‬

இந்த நம்பருக்கு அடித்து market and competition authority யிடம் price gouging  என்று முறையிட முயற்சியுங்கள்.

மற்றைய நாடுகள் (யூ எஸ்) போல பதுக்கல் விலை கூட்டலுக்கு எதிரான சட்டம் யூகேயில் போதுமான காத்திரமாக இல்லை.

அடுத்த முறை வாக்கு கேட்டு வரும் நபரிடம் இனி இப்படி நடக்காமல் இருக்க அவர்கள் என்ன செய்வார்கள், செய்பவருக்கே என் வாக்கு எனச் சொல்லுங்கள்.

2 hours ago, colomban said:

செல்வர‌த்தினம் மாஸ்டரிடம் பெற்ற பொருளியல் அறிவை கொண்டு சொல்வ‌தென்றால் 
இங்கு கேள்வி கூட நிரம்பல் குறைவு எனவே பொருட்களின் விலை கூடும்.

செல்வநாயகம் எல்லோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

நான் இன்றைக்கு பாக்கின்ட  கடைக்கு இறைச்சி வாங்க போனேன் ... சரியான சனம் ...£15 என்னவோ  இறைச்சி , 2 ரின் தக்காளியும் வாங்கினேன் ...£27  எடுத்து இருந்தார்கள் ...முதலில் யோசிக்காமல் காட்டில் டப் பண்ணிப் போட்டு  பில்லை பார்த்தால் £10 கூட எடுத்திருக்கிறான்...போய் கேட்டவுடன்  சொறி என்று போட்டு தூக்கி தந்தான் ...அவசரத்தில் பார்க்காமல் வாங்கிற எத்தனை பேருட்டை ஆட்டையைப் போட்டானோ ?

அட நீஙக தானோ அது.  பாக்கி அசடு வழிந்ததை பார்த்து சிரித்துக்கொண்டேன். நான் £17.30 வாங்கினேன். சரியாக காசை வாங்கி கொண்டார்.

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா இந்தத் திரியை வந்து பார்க்காமல் நானும் ஒண்டைத் திறந்துபோட்டன்

இரண்டையும் இணைத்து (Merge) விடவா? நீங்களும் நாதமும் ஓம் என்றால் Merge செய்து விட முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் 😁

8 hours ago, colomban said:

கொழும்பான், சசி வர்ணம்

இவர், டிக்கா ப்ரோ (முன்னர், மகிழ்சி டா) கொழும்பு தமிழ் பேசும் ஒரு அருமையான நகைச்சுவையாளர். இவரது concept மிகவும் பிரமிக்கவைப்பவை. ஆட்டோமேட்டிக் காமெராவை வைத்துக்கொண்டு, தானே பல பாத்திரங்களில் நடிப்பார். அநேகமாக பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவர் அதேயளவு சிங்கள மொழிப்புலமையும் கொண்டிருப்பதால், இருபக்கமும் ரசிகர்கள் உண்டு.

கலியாணம் பண்ணுற குட்டி, மெஸ்ஸேய மாறி அனுப்பி னது சுட்டி அப்செட் ஆயி..

குட்டிட அப்பாவ வசியம் பண்ணிறை 

வீட்டுக்குள்ள கள்ளன் பாய்ஞச்சி 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அட நீஙக தானோ அது.  பாக்கி அசடு வழிந்ததை பார்த்து சிரித்துக்கொண்டேன். நான் £17.30 வாங்கினேன். சரியாக காசை வாங்கி கொண்டார்.

இதோடா வந்திட்டார் மைனரு 🤑

4 hours ago, நிழலி said:

இரண்டையும் இணைத்து (Merge) விடவா? நீங்களும் நாதமும் ஓம் என்றால் Merge செய்து விட முடியும்.

நீங்கள் வேற அவ தெரிஞ்சே தான் இன்னொரு திரி திறந்தவ 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2020 at 5:17 PM, goshan_che said:

செல்வநாயகம் எல்லோ?

தெரியும் போல‌

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2020 at 7:14 AM, colomban said:

தெரியும் போல‌

ஓம். மீசைக்கார வாத்தி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓம். மீசைக்கார வாத்தி.

குமாரசாமி

  • மப்புறுப்பினர்
  •  
  • குமாரசாமி
  • கருத்துக்கள உறவுகள்
  •  7,339
  • 29,069 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Bild

 

கலோ கியர் குமாரசாமி ஸ்பீக்கிங்..உது  பொலிஸ் ஸ்ரேசன்😎

ஓமடா  உன்ரை இங்கிலிசிலையே தெரியுது நீ குமாரசாமிதான் எண்டு...என்ன விசயம் சொல்லு..

கோயில் திருவிழாவிலை கோசான் எண்டவர் காணாமல் போயிட்டார்.உங்கினேக்கை கண்டால் ஆளை இஞ்சை கொண்டுவந்து விடுறியளே?

எங்கை கொண்டுவந்து விடோணும்

யாழ்கள கொரோனா சென்ரரிலை

🤬🤬🤬


 

" தவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்" 

தமிழ் ஊடகங்களை மட்டுமே செவிமடுத்தால் இந்த முயல்கள் மட்டுமே தெரியும் 

கொஞ்சம் நாடுகளின் பிரதான ஊடகங்களை செவிமடுத்தால் வேறு முதலைகளையும் காணலாம் 

இது நம்மவர்கள் சமாச்சாரம் மட்டுமே அல்ல

வியாபாரிகள் சூத்திரம்  கூடவே !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் சுத்துவது பலசரக்கு கடைகளில் மட்டுமல்ல. 

பெரும் சுத்தல்கள் டிவி, ரேடியோ, பத்திரிகை விளம்பரங்களில் நடக்கின்றன. பெரும்பாலும் தவிச்ச முயல் அடிப்பது இங்கு அதிகம் - மனிதாபிமானமே இல்லாமல்.

ஒரு நண்பர் வியாபார ஸ்தாபனம் தொடங்கினார். வருடம் தோறும் பிரசுரமாகும் ஒரு கையேடு ஒன்றில் சிறு விளம்பரம் செய்தார்.

அதில் இருந்த இலக்கத்துக்கு இந்தியா, இலங்கையில் இருந்து அழைப்புக்கள். விளம்பரம் கேட்டு...

டிவி, ரேடியோ சேவைகளுக்கு விளம்பரம் கேட்டு வந்த அழைப்புக்கள் அவை.

மரண செய்திகளை வெளியிடும் ஒரு தளம். மிக அதிகமான விளம்பர கண்டனம் அறவிடுவார்கள்.

ஆனால் அந்த தளத்தில் அவ்வளவு பணம் செலவழித்து போடுவது பிரயோசனம் இல்லை என்பது பலரது அனுபவ உண்மை.

மேலும் தமது 600, 000 வரையான முகப்புத்தக லைக்குகளில், மாதாந்தம் 150,000 லைக்குகளுக்கு புஷ் பண்ண £50, 300,000 £100, 600,000ம் என்றால் £200 தனிக் கட்டணம் என்று சுத்தி காசு பார்ப்பார்கள். அதேபோல யுடியூப் புஷ் பண்ணுவோம் என்று சுத்தி காசு பார்ப்பார்கள்

குறித்த இந்த நண்பர், கொஞ்சம் விபரமானவர். அதெப்படி பிரித்து புஷ் பண்ண முடியும்? மேலும் முகப்புத்தக ஓனர் மார்கரிடம் $10 கொடுத்தால் அந்தாள் அழகாக 600,000 க்கும் புஷ் பண்ணுமே என்றதும், துண்டைக் காணம், துணையைக் காணம் என்று ஓடி விட்டனர். 

இவர்களுக்கு சில முகவர்கள் உள்ளனர். அவர்களது வேலை, இந்த மீடியாக்களில் விளம்பரம் தரும் விளம்பரத்தாரர்களை அழைப்பது.

அவர்களது குரலை வைத்து, அவர்கள் வானொலி சேவைக்கு அடிக்கடி அழைத்து, அரட்டை அடிப்பவர்கள் என கண்டு பிடித்து விடலாம். உங்கள் விளம்பரம் கேட்டேன். எனது நண்பரும் அல்லது நண்பியும் உங்களது பொருளை, சேவையினை பெற இந்த வார இறுதியில் வருகிறோம் என்று அடித்து விடுவார்கள்.

அடித்தார்களே, வரவில்லையே என திருப்பி அடித்தால், இது வேலை இலக்கம் அல்லது கம்பெனி போன். அடிக்காதீர்கள். வேறு அலுவல் வந்திட்டுது, நான் வரத்தான் இருக்கிறேன், என்று வேறு பீலா விடுவார்கள்.

இவர்களது நோக்கம், விளம்பரத்தார்கள் தமது விளம்பரம் வேலை செய்கிறது என்று நினைக்க வைப்பது.

ஆனால், தமது நிறுவனங்களில் பாரிய நம்பிக்கையீனம் உண்டாகின்றது என்பதனை உரிமையாளர்கள் அறிவதில்லை. ஏனெனில் இந்த சுத்துமாத்து வேலை செய்பவர்கள், குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற அழுத்ததுடன் வேலை செய்பவர்கள். 

விடயம் தெரிந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்வதால், இவர்களை அப்பாவிகளாக தம்மிடம் வரும் ஆட்களிடம், தவிச்ச முயல் அடிக்கிறார்கள்.

வீடு வாசலை அடமானம் வைத்து, வட்டிக்கு காசு வாங்கி, சேமிப்பினை வைத்து ஒரு வியாபாரம் செய்பவர்களுக்கு, நேர்மையான சேவையினை கொடுங்கள்.

அறவிடும் அதிகமான பணத்தினை நியாய படுத்த , ஆட்களை வைத்து, சுத்துமாத்து செய்வதை என்னென்பது?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

குமாரசாமி

  • மப்புறுப்பினர்
  •  
  • குமாரசாமி
  • கருத்துக்கள உறவுகள்
  •  7,339
  • 29,069 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Bild

 

கலோ கியர் குமாரசாமி ஸ்பீக்கிங்..உது  பொலிஸ் ஸ்ரேசன்😎

ஓமடா  உன்ரை இங்கிலிசிலையே தெரியுது நீ குமாரசாமிதான் எண்டு...என்ன விசயம் சொல்லு..

கோயில் திருவிழாவிலை கோசான் எண்டவர் காணாமல் போயிட்டார்.உங்கினேக்கை கண்டால் ஆளை இஞ்சை கொண்டுவந்து விடுறியளே?

எங்கை கொண்டுவந்து விடோணும்

யாழ்கள கொரோனா சென்ரரிலை

🤬🤬🤬

Like

 

அன்பார்ந்த அடியார்களே,

ஒரு நற்செய்தி. காணாமல் போனதாக அறிவிக்கப்பட கோசான் என்ற குழந்தையை குமாரசாமி எனும் அன்பர் கண்டுபிடித்து ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

குழந்தை கோசான் பொரிவிளாங்காய் கடைக்கு முன்னால் வெள்ளி பார்த்து கொண்டிருந்த சமயம் குமராச்சாமி அவரை கண்டு பிடித்தார். 

ஆனால் குமாராசாமிக்கு பொரிவிளாங்காய் கடையில் என்ன வேலை என்பது இன்னும் புரியாதபுதிராகவே இருக்கிறது 🤣

பிகு: நோட்டீசுக்கு நன்றி அண்ணர்.

  • கருத்துக்கள உறவுகள்

கடைகளில் விலைப் பட்டியல் போட்டு இருக்காவிடில்  தேவையை பொறுத்து விலையை கூட்டி விப்பதில் எந்த பிழையும் இல்லையாமே!...சட்டத்திலும் அதற்கு இடம் இருக்காம் ...யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் 
 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரதி said:

கடைகளில் விலைப் பட்டியல் போட்டு இருக்காவிடில்  தேவையை பொறுத்து விலையை கூட்டி விப்பதில் எந்த பிழையும் இல்லையாமே!...சட்டத்திலும் அதற்கு இடம் இருக்காம் ...யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் 
 

தவறு கட்டாயம் விலை போடப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த மட்டில்,

விலையை கூட்டி விற்க முடியாது என்று ஒரு “நிர்ணயவிலை சட்டம்” யூகேயில் இல்லை. 

இலங்கையில் இப்படி ஒரு சட்டம் உண்டு. அத்தியாவசிய பொருட்கள் இந்த சட்டத்தால் கவர் பண்ணுப் படும். (பாணின் விலை).

ஆனால் ஒரு வர்த்தகர் இன்னொரு வர்தகருக்கு நட்டம் விழைவிக்கும் வகையில் லாபம் ஈட்ட முடியாது. இதை போட்டிக்கு எதிரான நடவடிக்கை anti competitive practices என்பார்கள். 

தவிரவும் யூகேயில் சந்தை (market) தான் விலையை நிர்ணயிப்பதால் ( demand and supply), போதுமான supply இருந்தும் பதுக்கி வைத்து விலையை கூட்டுவது manipulation of the market என்பதாயும் பார்க்கப்படும்.

எனவேதான் இதை MCA க்கு அறிவியுங்கள் என மேலே ஒரு நம்பரை போட்டேன்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் MCA க்கு கொம்பளைன் பண்ணி ஆதாரத்தை கொடுப்பது மட்டுமே. 

மிச்சத்தை அவர்கள் பார்த்து கொள்வார்கள்.

1 hour ago, ரதி said:

கடைகளில் விலைப் பட்டியல் போட்டு இருக்காவிடில்  தேவையை பொறுத்து விலையை கூட்டி விப்பதில் எந்த பிழையும் இல்லையாமே!...சட்டத்திலும் அதற்கு இடம் இருக்காம் ...யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் 
 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, goshan_che said:

நான் அறிந்த மட்டில்,

விலையை கூட்டி விற்க முடியாது என்று ஒரு “நிர்ணயவிலை சட்டம்” யூகேயில் இல்லை. 

அது உங்கை யுகேயிலை மட்டுமில்லை கண்டியளோ.....புலம்பெயர்நாடுகளிலை இருக்கிற தமிழ்கடையள் எல்லாத்திலையும் எழுதப்படாத சட்டம் ஒண்டு இருக்கு. அந்த கடையளின்ன்ரை மூனாமாரர்ரை மைண்ட் வாய்ஸ் "சாமான் வேணுமெண்டால் வாங்கு இல்லாட்டி இடத்தை விட்டு மாறு விலை இதுதான்" 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.