Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்து மூன்று தினங்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்!

Featured Replies

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இன்றிலிருந்து 23ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு அமுலாகும் ஊரடங்குசட்டமானது எதிர்வரும் 23ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று சில பகுதிகளில் அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டமானது காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை நீக்கப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.350.390.830.053.800.670.160.91

https://www.ibctamil.com/srilanka/80/139390?ref=imp-news

 

Edited by Gowin

  • Replies 89
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

curfew-1.jpg

நாடு முழுவதும் இன்று ஊரடங்கு சட்டம்

இலங்கை முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 6 மணி முதல் எதிர்வரும் திங்கட் கிழமை வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்  தொற்று நாட்டில் தற்போது அதிகரித்து வருகின்றமையினால் அதனை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும்பொருட்டே இந்த நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை வத்தளை மற்றும் ஜா-எல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவில்லை.

நேற்றிரவு 10 மணி முதல் மீள் அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்கொழும்பின் கொச்சிகடை பொலிஸ் துறை பிரிவுக்கு விடுக்கப்பட்ட ஊரடங்கு சட்டமும் அமுலில் இருக்கின்றது.

இந்நிலையிலேயே இலங்கை முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாடு-முழுவதும்-இன்று-ஊரட/

  • தொடங்கியவர்

அவசரகால நிலையை பிரகடனப்படுத்துங்கள்! அரசாங்கத்திடம் கோரிக்கை

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடைமுறையிலுள்ள சட்டங்கள் போதுமாக இல்லாவிட்டால் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அநாவசியமாக மக்கள் நடமாட்டங்கள் தடைசெய்யப்பட வேண்டும். அவ்வாறு மீறி செயற்படுவோர் கொரோனா வைரஸை நாட்டுக்குள் பரப்ப முயற்சித்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டுக்குள் இருக்கும் எஞ்சிய நோயாளிகளை இனம் கண்டு அவர்களின் நடமாட்டத்தை அப்பிரதேசத்தில் தடை செய்ய வேண்டும்.

இல்லையேல் இந்த நோய் நாடு முழுவதும் பரவி விடும்.

அத்துடன் தொற்றுக்குள்ளானவர்களை மட்டுமன்றி அவர்களது தொடர்புகளையும் முறையாக இனங் கண்டு தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் பதிவாகும் சம்பவங்களை பார்க்கும் போது எதிர்வரும் இரண்டு வார காலமும் நாட்டில் மோசமான இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/139388

கடினமான அணுகுமுறைகளை எடுத்துள்ளது அரசு. பாராட்டுக்கள்.

இதன் மூலம் பரவலை வெற்றிகரமாக தடுக்க முடிந்ததா இல்லையா என வரும் நாட்கள் கூறும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்


கோரோனோ வைரஸ், அடுத்த மாதம் ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து, உலகத்தில் இருந்து விடை பெறும்

3 minutes ago, மாங்குயில் said:


கோரோனோ வைரஸ், அடுத்த மாதம் ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து, உலகத்தில் இருந்து விடை பெறும்

இதை எப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் ஊரடங்கு நாட்களில் நேரத்தை போக்குவதென்பது மிகவும் கடினம். கார்ட்ஸ் விளையாடுதல், கேரம் விளையடுதல் போன்றவைகளால் நேரத்தை போக்குவோம். செய்திகளுக்கு இலங்கை வானோலி. இப்பொழுது இணையம் / சமூக வலைத்தளங்கள் உள்ளன. நேரம் போவது தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, இணையவன் said:

இதை எப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள் ?


 

இது எனது  அனுமானம். 

இறைவன், அவனது படைப்பினங்களின்மீது எல்லையில்லாத கருணையுள்ளவன். 

அப்படிப்பட்ட இறைவன், மனித குலத்தை மென் மேலும் சோதிக்கமாட்டான் என்பது,  எனது உறுதியான நம்பிக்கை. 
 

1 hour ago, இணையவன் said:

இதை எப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள் ?

கடவுள், பஞ்சாங்கம் , ஜோதிடம் என்று மூடத்தனங்களை மக்களிடையே  விதைப்பவர்களுக்கு தாம் பரப்பும் மூடத்தனங்களை விட அறிவியல் மருத்துவத்தில் அதிக நம்பிக்கை உண்டு. மருத்துவ அறிவியல் இதற்கு எப்படியும் தீர்வு கண்டுவிடும் அப்போது நான்அப்பவே சொன்னேன் தானே என்று மக்களை ஏமாற்றலாம்  என்பது அவர்களின் அனுமானம். ஏனென்றால. அதைத் தான் காலாகாலமாக செய்து வருகின்றார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

மருத்துவ அறிவியல் இதற்கு எப்படியும் தீர்வு கண்டுவிடும் அப்போது நான்அப்பவே சொன்னேன் தானே என்று மக்களை ஏமாற்றலாம்  என்பது அவர்களின் அனுமானம். ஏனென்றால. அதைத் தான் காலாகாலமாக செய்து வருகின்றார்கள். 


 

புற்றுநோய், எயிட்ஸ் இன்னும் பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாமல் தீர்வின்றியே இருக்கிறது. 

கோரோனோ வைரஸ் போன்று, பல வைரஸ் நோய்கள் உலகில் தோன்றி மறைந்துள்ளன. அவைகளுக்கு இன்றும் முறையான தீர்வில்லை.

கோரோனோ வைரஸ் என்ற நோயை, மருத்துவ அறிவியல் ஓரளவு கட்டுப் படுத்த உதவும். முழுமையான தீர்வொன்றைத் தராது. 

இறைவன் மனிதனுக்கு ஒரு நோயைத் தந்தால், அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் ஒரு காலக்கெடு வைத்திருக்கிறான்.

ஒரு சிறு தடிமல் வந்தாலும், அதிலிருந்து முழு நிவாரணம் பெறுவதற்கு ஆக குறைந்தது 1  வாரத்திற்கு மேல் செல்லும்.  இது இறை நியதி.

மனிதன் எந்தவகையான மருந்துகளைக் கொடுத்தாலும், இறைவன் நாடிய நேரத்தில்தான் நோய் நிவாரணம்  ஆகும். 
 

1 hour ago, tulpen said:

கடவுள், பஞ்சாங்கம் , ஜோதிடம் என்று மூடத்தனங்களை மக்களிடையே  விதைப்பவர்களுக்கு தாம் பரப்பும் மூடத்தனங்களை விட அறிவியல் மருத்துவத்தில் அதிக நம்பிக்கை உண்டு. மருத்துவ அறிவியல் இதற்கு எப்படியும் தீர்வு கண்டுவிடும் அப்போது நான்அப்பவே சொன்னேன் தானே என்று மக்களை ஏமாற்றலாம்  என்பது அவர்களின் அனுமானம். ஏனென்றால. அதைத் தான் காலாகாலமாக செய்து வருகின்றார்கள். 


கடவுளை நம்புபவர்கள், அறிவியல் மருத்துவத்திற்கு எதிரானவர்கள் அல்ல.

கடவுளை நம்புபவர்கள் தான், அறிவியல் மருத்துவத்தை கண்டுபிடிக்கின்றனர்.

கடவுள் அறிவியலுக்கு எதிரானவர் அல்ல.

அறிவியலும் கடவுள் கோட்பாட்டுக்கு எதிரானதல்ல.

2 hours ago, மாங்குயில் said:


 

இது எனது  அனுமானம். 

இறைவன், அவனது படைப்பினங்களின்மீது எல்லையில்லாத கருணையுள்ளவன். 

அப்படிப்பட்ட இறைவன், மனித குலத்தை மென் மேலும் சோதிக்கமாட்டான் என்பது,  எனது உறுதியான நம்பிக்கை. 
 

அனுமானம் என்பது தரவுகளின் அடிப்படையிலிருந்து தோன்றும் நிச்சயமற்ற கருத்து.

கடவுளின் எல்லையில்லாக் கருணையை நாங்களும் பார்த்துள்ளோம். இவ்வாறான முற்றிலும் அறிவீனமற்ற கருத்துக்களைப் பரப்பாமல் இருந்தாலே உதவியாக இருக்கும்.

3 hours ago, மாங்குயில் said:


கோரோனோ வைரஸ், அடுத்த மாதம் ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து, உலகத்தில் இருந்து விடை பெறும்

கொறோனா வைரைஸ் கோடை காலம் முழுவதும் இருக்கும். ஆகக் குறைந்தது ஜூலையின் பின்னரே படிப்படியாக மிகவும் குறைந்து போகும்; அதுவும் விஞ்ஞானம் தடுப்பூசி கண்டு பிடித்தால் மட்டுமே. இல்லாவிடின் மீண்டும் மீண்டும் வலம் வரும்.

விஞ்ஞானம் கண்டு பிடித்த தடுப்பூசியால் பெரிய அம்மை, போலியோ, ஸ்பானிஸ் காச்சல் போன்றவை எப்படி உலகில் இருந்து 99.9 வீதம் அழிந்து போனதோ அதே போன்று இதுவும் மருந்து கண்டு பிடிக்கப்பட்டால் இல்லாமல் போகலாம். அல்லது மருந்தால் கொறோன வைரஸ் இனால் பலியாகின்றவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்து போகலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, இணையவன் said:

அனுமானம் என்பது தரவுகளின் அடிப்படையிலிருந்து தோன்றும் நிச்சயமற்ற கருத்து.

கடவுளின் எல்லையில்லாக் கருணையை நாங்களும் பார்த்துள்ளோம். இவ்வாறான முற்றிலும் அறிவீனமற்ற கருத்துக்களைப் பரப்பாமல் இருந்தாலே உதவியாக இருக்கும்.


 

ஒருவரது நம்பிக்கையின் அனுமானம், தரவுகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.

கடவுளின் எல்லையில்லாக் கருணையை அறியாமல் இருப்பதுதான், அறிவீனம்.

 

 

4 minutes ago, மாங்குயில் said:


 

ஒருவரது நம்பிக்கையின் அனுமானம், தரவுகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.

கடவுளின் எல்லையில்லாக் கருணையை அறியாமல் இருப்பதுதான், அறிவீனம்.

 

 

 

பல்லாயிரக்கணகானோரை கொன்று குவித்த பின் வருகின்ற கருணையை அறிந்து புல்லரித்து புளுகிக் கொள்வதை விட அதற்கு விஞ்ஞான ரீதியில் எவ்வளவு விரைவில் தீர்வைப் பெறலாம் என்பதை இட்டு சிந்திப்பதே அறிவார்ந்த ஒரு சமூகத்தின் போக்கு என்பதை அறியுங்கள்

உங்களின் பல கருத்துகள் யாழின் போக்குக்கு எதிராக கடும் பழமைவாத மூட நம்பிக்கைகளின் பால் இருப்பதையும் அவற்றை பரப்புகின்ற களமாக யாழை பயன்படுத்துவதையும் அவதானித்து வருகின்றோம்.

நன்றி.

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலானது- மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!

In இலங்கை     March 20, 2020 12:50 pm GMT     0 Comments     1189     by : Litharsan

நாடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் வீடுகளை விட்டு வௌியேறக் கூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், நோய் நிவாரணக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில் அத்தியாவசியத் தேவை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

மேலும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் தங்களின் விமானப் பயணச் சீட்டை, ஊரடங்குச் சட்டத்தின் போது அனுமதிச் சீட்டாக பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

http://athavannews.com/நாடளாவிய-ரீதியில்-ஊரடங்-2/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

கடினமான அணுகுமுறைகளை எடுத்துள்ளது அரசு. பாராட்டுக்கள்.

இதன் மூலம் பரவலை வெற்றிகரமாக தடுக்க முடிந்ததா இல்லையா என வரும் நாட்கள் கூறும். 

உண்மைதான் அரசு தன்னாலான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.கிராமங்கள் தோறும்.

7 minutes ago, சுவைப்பிரியன் said:

உண்மைதான் அரசு தன்னாலான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.கிராமங்கள் தோறும்.

கொஞ்சம் தாமதம் என்றாலும், இப்பவாவது தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

என் அம்மா கொழும்பில் தனிய வசிக்கின்றவர். சற்று முன்னர் தொலைபேசும் போதும், தேவையான பல உணவுப் பொருட்களுக்கு பல நாட்களாக தட்டுப்பாடாக உள்ளது என்றும் ரின் மீனை தவிர வேறு அசைவ உணவுகளுக்கு கடும் தட்டுப்பாடு என்றும் சொன்னார். Frozen உணவு வகைகளை வெளியில் வைத்து Frozen போனபின்னர் உண்ணும் வழக்கத்தை கொண்டிராதவர் என்பதால் கொஞ்சம் திண்டாடுகின்றார்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகல வசதியும் படைத்த வல்லமையுள்ள நாடுகளே கொரோனாவால் தட்டுதடுமாறி செய்வதறியாது திகைத்து நிற்கின்றன.
 இதில் பூகோள வல்லமையையும்/வாய் வல்லமையையும் வைத்து வாழும் சிறிலங்கா என்ன செய்யப்போகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சகல வசதியும் படைத்த வல்லமையுள்ள நாடுகளே கொரோனாவால் தட்டுதடுமாறி செய்வதறியாது திகைத்து நிற்கின்றன.
 இதில் பூகோள வல்லமையையும்/வாய் வல்லமையையும் வைத்து வாழும் சிறிலங்கா என்ன செய்யப்போகின்றது?

அதுதான் தொற்றை தடுப்பதில் முனைப்பு காட்டுது.கன்டபடி பரவினால் சமாளிக்க முடியாது என்டு அரசுக்கு நனறாகத் தெரியும'.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நிழலி said:

பல்லாயிரக்கணகானோரை கொன்று குவித்த பின் வருகின்ற கருணையை அறிந்து புல்லரித்து புளுகிக் கொள்வதை விட அதற்கு விஞ்ஞான ரீதியில் எவ்வளவு விரைவில் தீர்வைப் பெறலாம் என்பதை இட்டு சிந்திப்பதே அறிவார்ந்த ஒரு சமூகத்தின் போக்கு என்பதை அறியுங்கள்

 


 


 

 

மனிதன் ஒன்றைக் கண்டுபிடிக்கப்போய், வந்த விளைவுதான் -  Corono Virus.

இதற்கு, கடவுளை குறை சொல்லி என்ன பயன்?

மனிதனின் கண்டுபிடிப்புகளில், வெற்றியும் தோல்வியும் சகஜம்தானே!

தோல்வி அடைந்ததின் பக்க விளைவுதான் -  Corono Virus.

இறைவன் மனிதனுக்கு தீங்கிழைப்பதில்லை.

மனிதன், தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்கிறான்.

மனிதன் தனக்குத்தானே  தீங்கிழைத்து,  அழிவின் விளிம்பில்  இருக்கும்போது,  எல்லையில்லாக் கருணையுள்ள இறைவன் எங்களைக் காப்பாற்றத்தானே துணிவான்?

அதிகம் மிஞ்சினால் இன்னும் ஒரு மாதம்தான்.

அதற்கிடையில்,  Corono Virus மனிதனை விட்டு காணாமல் போகும். 

மக்கள் மறந்து விடுவார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மாங்குயில் said:

கடவுளின் எல்லையில்லாக் கருணையை அறியாமல் இருப்பதுதான், அறிவீனம்.

இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்தே அவருடைய எல்லையில்லாக் கருணைகள் எத்தனை எத்தனை 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

பல்லாயிரக்கணகானோரை கொன்று குவித்த பின் வருகின்ற கருணையை அறிந்து புல்லரித்து புளுகிக் கொள்வதை விட அதற்கு விஞ்ஞான ரீதியில் எவ்வளவு விரைவில் தீர்வைப் பெறலாம் என்பதை இட்டு சிந்திப்பதே அறிவார்ந்த ஒரு சமூகத்தின் போக்கு என்பதை அறியுங்கள்

உங்களின் பல கருத்துகள் யாழின் போக்குக்கு எதிராக கடும் பழமைவாத மூட நம்பிக்கைகளின் பால் இருப்பதையும் அவற்றை பரப்புகின்ற களமாக யாழை பயன்படுத்துவதையும் அவதானித்து வருகின்றோம்.

நன்றி.

நிழலி, கருத்து வைக்கும் இடத்தில் கருத்தை வைக்கவும், நிர்வாகம் சார்ந்த கருத்தை அதற்கு பொருத்தமான இடத்திலும் வையுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, MEERA said:

நிழலி, கருத்து வைக்கும் இடத்தில் கருத்தை வைக்கவும், நிர்வாகம் சார்ந்த கருத்தை அதற்கு பொருத்தமான இடத்திலும் வையுங்கள்.


 

நிழலியின் கருத்துக்கு பதில் எழுதினேன்.

அதை நீக்கி விட்டார்.

ஊரடங்குச் சட்டத்தினையும் மீறி களியாட்ட நிகழ்வு – 8 பேர் கைது!

களியாட்ட-விடுதி.jpg

பண்டாரவளையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் களியாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹப்புத்தளையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் விற்பனை நிலையத்தை திறந்து வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் மிக வேகமாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஊரடங்குச்-சட்டத்தினையும/

Edited by போல்

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

Curfew-2.jpg

கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அதேபோல், ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு, பின்னர் திங்கள் மாலை 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி எதிர்வரும் 24ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டம் நேற்று மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஊரடங்குச் சட்டம் நீடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

http://athavannews.com/ஊரடங்குச்-சட்டம்-நீடிப்ப/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.