Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா நோயாளியின் உடல் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!

Featured Replies

இலங்கையில் கொரோனா (COVID-19) தொற்றுக் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் எரிக்கப்பட்டமை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளர்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “நீர்கொழும்பு, கொச்சிக்கடை பலகத்துறை பிரதேசத்தில் வசித்து வந்த முஹம்மத் ஜமால் COVID-19 தொற்று காரணமாக உயிரிழந்த பின்னர், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படாமை துரதிர்ஷ்டவசமானதும் வருத்தத்தக்கதுமாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

குறுகிய நேரத்துக்குள் அரசாங்க மற்றும் மருத்துவத் துறையினருடன் தொடர்புகொண்டு ஜனாஸா எரியூட்டப்படுவதைத் தடுப்பதற்கு அவசர அவசரமாக மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பாரியளவில் வியாபித்து பரவிவரும் தொற்றுநோய் என்றாலும், சமய உணர்வுகளுக்கு மதிப்பளித்து மேற்படி ஜனாஸா நல்லடக்கடம் செய்யப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் பதவிவகிக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் டொக்டர் சுஹைல் மற்றும் எமது கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா போன்றோர் நடுநிசிவரை முயற்சித்துள்ளனர்.

நல்லடக்கம் செய்வதுபற்றி எடுத்துக்கூறப்பட்ட போதிலும், நீர்கொழும்பு பிரதேசத்தில் பத்து அடி ஆழத்தில் குழி தோண்ட வேண்டியுள்ளதால் அங்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வாக இருப்பதனால் நீர் கசிவு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து கொழும்பு, மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்துக்கு வெளியில் ஜனாஸாவைக் கொண்டு செல்வதற்கு சட்ட மருத்து அதிகாரியினால் அனுமதி வழங்கப்படவில்லை. மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட்டிருந்த நிலையில் நீதவானின் விசாரணைகூட ஒரு பொருட்டாக இருந்திருக்க மாட்டாது.

குடும்பத்தவர்களின் உணர்வுகளையும், வேண்டுகோளையும் கருத்திற்கொள்ளாது ஜனாஸாவை எரிப்பதில் அவசரம் காட்டப்பட்டுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எமது நிலைப்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அறிகிறோம். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கும், சட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையில் இது சம்பந்தமான கூட்டத்தில் உரிய சுற்றறிக்கையை மீளாய்வு செய்வதுபற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் அறிகிறோம்.

எங்களது சமய ரீதியான உரிமையை நாங்கள் வலியுறுத்தும் அதேவேளையில், தற்போதுள்ள அசாதாரண சுழ்நிலையில் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு நிலைமையை மேலும் சிக்கலாக்காமல், யதார்த்தபூர்வமான நடைமுறைச் சாத்தியமுள்ள தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/கொரோனா-நோயாளியின்-உடல்-எ/

  • தொடங்கியவர்

நீர்கொழும்பில் உயிரிழந்த நபரின் உடல் தகனம்! மத ரீதியில் எழுந்துள்ள பெரும் சர்ச்சை!

நீர்கொழும்பில் கொரோனா தொற்றால் முஹம்மத் ஜமால் என்ற 64 வயதுடைய நபர் நேற்றைய தினம் உயிரிழந்தார். இவரது உடல் தகனம் செய்யப்பட்டமையால் அனைத்து முஸ்லிம் மக்கள் மத்தியிலும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது எனவும், இதனை முஸ்லிம்களாகிய நாம் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்த முஹம்மத் ஜமாலின் உடல் நல்லடக்கம் செய்யாமல் தகனம் செய்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் மத்தியில் பலவேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் ஊடாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் தமது கண்டனத்தை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் அவர் தெரியவருகையில்,

நேற்றைய தினம் நீர்கொழும்பில் உயிரிழந்த சகோதரனை இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டுமென தான் பிரார்த்திப்பதோடு, இவருக்காக அனைத்து உறவுகளும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா தொற்றினால் உலக அளவில் முஸ்லிம்கள் மரணித்துள்ளனர், அவர்கள் உரிய இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார்கள். ஆனால் எமது நாட்டில் ஏன் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என அவர் கேள்வி எழுப்பியுள்ளர்.

இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க இது தொடர்பில் முஸ்லிம் மார்க்க தலைமைகள் அரசாங்கத்தோடு பேசி தக்க முடிவை எடுக்க வேண்டுமென பொது மக்கள் சார்பில் வேண்டிக் கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140244

22 minutes ago, Rajesh said:

இலங்கையில் கொரோனா (COVID-19) தொற்றுக் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் எரிக்கப்பட்டமை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளர்.

தேவையில்லாத அரசியல் நோக்கம் மட்டுமே கொண்ட இந்த வெற்று அறிக்கையால் தூக்க நிலையில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனாவை தட்டி எழுப்பிவிடுவார்கள். 

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

0.jpg

அண்ணை.. ஊரே என்னை பத்தி கதைக்கணும் .. நியூஸ்ல என்ர பேர் வரணும் .. அதுக்கு வழி சொல்லுங்கன்னை..👍(படம்:பூவரசன்)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள மற்றைய மதத்தவர் எல்லாம்......
இந்த நோய் தாக்கத்தின் அச்சம்  கருதி, 
அரசு வெளியிடும் நடைமுறைகளை அமைதியாக பின்பற்றும் போது...

முஸ்லீம் மதத்தவர்களுக்கு... மட்டும், ஏதோ  வானத்தில் இருந்து குதித்தவர்கள் மாதிரி...
எல்லாத்திலும்... நொட்டை  சொல்லிக் கொண்டிருக்கிறதே வேலையாய் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் உடலை அமைச்சரிடமே கையளித்து அவரே நேரில்வந்து உடலைப் பொறுப்பெடுத்து அவருடனே கொண்டுசெல்லும்ப (சில நிபந்தனைகளுடன்) கூறிவிட்டால் போச்சு. 😀

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் அல்லாரும் ஒண்னு சேர்ந்து, ஒண்ணுக்கு இருக்கோணும் எண்ட விஷயத்தில உறுதியா இருக்கிறதால இவர்களது பகுதிகளில் தான் கோரோனோ அதிகமாக உள்ளது. 

மனிசன், கொரோனா வைரசு பயத்தில இருக்கிறான். இந்தாள் உடலை தாக்குறதில கவலை படுது...

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக முசுலீம்கள் பாலைவன வாசிகள், அங்கு மரங்கள் பெரியளவில் இல்லை. அதனால் இறந்தவரின் உடலை மண்ணுக்குள் புதைக்கும் வழக்கம் ஏற்பட்டது. இலங்கைபோன்ற நாடுகளில் மரங்களுக்குப் பஞ்சமில்லை போதிய விறகும் உண்டு அதனால் இறந்தபின் எரிக்கின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்

மதங்கள் மனித  மனங்களை மாசற்று நடக்கவைக்கும் ஒரு ஊடகமாக உள்ளபோதிலும், அரசுகள் முதல் அரசியல்வாதிகள்வரை தமது தேவைக்கேற்பபாவிக்கும் கருவியாகவே இன்று அது பரிணமித்துள்ளது. ஆனால், உலகே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள வேளையில்  ஒரு நடைமுறைச் சூழலைப் பின்பற்றவும் மதம்பிடித்து நிற்கும் இவர்களை என்னவென்று சொல்வது.  ஒருபோதும் இவர்கள் மாறப்போவதில்லை. 

நோய்தொற்றின் பேரிடரை எதிர்கொள்ள வேண்டின் மதங்களைக் கடந்து சில இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுவது தவிர்க்க முடியாதது. 

தேர்தல் வருவதால் ஹக்கீம் இதை மதவெறியைக் கிளப்பும் ஒரு ஆயுதமாக எடுத்திருக்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மனிசன், கொரோனா வைரசு பயத்தில இருக்கிறான். இந்தாள் உடலை தாக்குறதில கவலை படுது...

முஸ்லிம்கள் தமது வழக்கப்படி புதைக்க அனுமதி கொரோனா வந்த எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் இருக்கின்றதுதானே.
 

நாதம்ஸ் தனது அக்கவுண்ட்டனுக்கு கொரோனா வந்ததுடன் பயந்துதான் போட்டார்.

 மூன்று கிழமைக்கு முன்னால் இப்படி எழுதியவரை கொரோனா உண்மையில மாத்திவிட்டது!

நானும் ஒருத்தரையும் அண்டவிடாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கிறன். நடக்கப் போகும்போதும், ஞாயிறு ஷொப்பிங் போகும்போது மட்டும்தான் வெளியாக்களை காண்பது. ஆனால் 2 மீற்றர் இடைவெளியை விட்டு சமூக விலகலை கடைப்பிடிக்கின்றேன். ஆனால் வருவது சொல்லிக்கொண்டா வரும்!

 

14 minutes ago, கிருபன் said:

2 மீற்றர் இடைவெளியை விட்டு சமூக விலகலை கடைப்பிடிக்கின்றேன். ஆனால் வருவது சொல்லிக்கொண்டா வரும்!

காற்றில் வைரஸ்கள் பரவும் விதத்தை பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகள் தரும் எச்சரிக்கை!

 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

முஸ்லிம்கள் தமது வழக்கப்படி புதைக்க அனுமதி கொரோனா வந்த எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் இருக்கின்றதுதானே.

இலங்கை பௌத்த நாடு எண்டு இன்னும் விளப்பமா சொல்லவேண்டும் எண்டு, சோம்பல் முறித்து ஞானசேர தேரர் கிளப்புறார், பொறுங்கோ.

முஸ்லீம் நாடுகளில் அரசே தொற்று நீக்கி கலவை அடித்து புதைக்கினறது, குடும்பத்திடம் கையளிக்கவில்லை.

தொற்று நோயினால் இறந்த நபர்களின் உடல்களை, அந்த உடல்களில் இருக்கக் கூடிய கொலைக் கிருமிகள் ஏனையவர்களுக்கு தொற்றி விடாமல் இருக்க வேண்டும் என்பதால், அரசே பாதுகாப்பாக அழிக்க வேண்டும்  என்பது சட்டவிதி.

முஸ்லிம் மக்கள், தமது இறந்த உடல்களை பெட்டியில் அடக்கம் செய்வதில்லை. திறந்த வகையில் வைத்திருந்து, உடலை கழுவிய புதைப்பார்கள். அது அவர்களது மார்க்கம்.

சாதாரணமா ஒருவர் சொன்னால் பரவாயில்லை. ஒரு சட்டம் உருவாக்குபவர் இதுகுறித்து புரிதல் இல்லாமலா பேசுவது?🤨

uk யில் madcow நோயினால் இறந்தவர்களின் உடலை சீல் பண்ணப்பட்ட பெட்டிகளில் வைத்தே கொடுத்தார்கள். எக்காரணம் கொண்டும் பெட்டி உடைக்க கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டு.

உடைத்து, யாருக்கும் நோய்த் தொற்று உண்டானால், மரண தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.

*****

கணக்காளருக்கு, இன்னும் நிலைமை சரியாகவில்லை. இன்னும் வைத்தியசாலையில் தான்.🙄
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

அனேகமாக முசுலீம்கள் பாலைவன வாசிகள்

இலங்கை முஸ்லிம்கள் இனம்,  பாலைவன முஸ்லிம்களின் இனத்தில் இருந்து முற்றாக வேறுபட்டது.

இலங்கை முஸ்லிம்கள், இன்றைய கேரளம் மற்றும் தமிழ் நாட்டின் அன்றைய ஒடுக்கப்பட்ட சாதிகள் ஆகும்.

பாலைவனத்தை படத்திலேயே 99.9% இலங்க முஸ்லிம்கள் பார்த்து இருக்கமாட்டார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கக்கீமு உப்பிடித்தான்...தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போனநேரம் ஹாலல் சாப்பாடு இல்லை சாப்பிடமாட்டன் என்று அடம்பிடித்தவராம்....அப்ப தலைவர்  ..சாப்பாடு சமைத்தவரை கூப்பிட்டு காட்டினாராம்....அது முன்னாள் முசுலிம் போராளியின் தாயாராம்...அந்த இடத்திலும் அரசியல் விளையாட  வெளிக்கிட்டு மூக்குடைபட்டவராம்.....ஆனால்  சீனாப் பாட்டியென்றால்..ஹலாலை கவனியாராம்..

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, alvayan said:

உந்த கக்கீமு உப்பிடித்தான்...தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போனநேரம் ஹாலல் சாப்பாடு இல்லை சாப்பிடமாட்டன் என்று அடம்பிடித்தவராம்....அப்ப தலைவர்  ..சாப்பாடு சமைத்தவரை கூப்பிட்டு காட்டினாராம்....அது முன்னாள் முசுலிம் போராளியின் தாயாராம்...அந்த இடத்திலும் அரசியல் விளையாட  வெளிக்கிட்டு மூக்குடைபட்டவராம்.....ஆனால்  சீனாப் பாட்டியென்றால்..ஹலாலை கவனியாராம்..

பாட்டியா குமரியா ? 🤔.......😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

பாட்டியா குமரியா ? 🤔.......😂

எந்தவொரு வித்தியாசமும் பார்க்கமாட்டாரு....நல்ல கவனிப்பு..

  • கருத்துக்கள உறவுகள்

 கொரோனா எல்லாம் தற்காலிக உயிர்கொல்லி நோய்தான்,

இஸ்லாமும் இஸ்லாமியர்களும் இந்த உலகில் மனித இனம் வாழும்வரைஅனைத்து இனத்தின்  நிம்மதியையும் கெடுக்க காத்திருக்கும் நிரந்தர  உயிர்கொல்லி நோய்கள்.

அந்த உயிர்கொல்லி கொரோனாவை சமாளிக்கும் மருந்து  சீக்கிரம் கண்டு பிடித்துவிடுவார்கள், 

இந்த உயிர் கொல்லி இனத்தை சமாளிக்கும் மருந்து ஒருகாலமும் கண்டுபிடிக்கபடமாட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

 கொரோனா எல்லாம் தற்காலிக உயிர்கொல்லி நோய்தான்,

இஸ்லாமும் இஸ்லாமியர்களும் இந்த உலகில் மனித இனம் வாழும்வரைஅனைத்து இனத்தின்  நிம்மதியையும் கெடுக்க காத்திருக்கும் நிரந்தர  உயிர்கொல்லி நோய்கள்.

அந்த உயிர்கொல்லி கொரோனாவை சமாளிக்கும் மருந்து  சீக்கிரம் கண்டு பிடித்துவிடுவார்கள், 

இந்த உயிர் கொல்லி இனத்தை சமாளிக்கும் மருந்து ஒருகாலமும் கண்டுபிடிக்கபடமாட்டாது.

எனக்குப் புரிந்த மட்டில் சுனி (வஹாபிசம்)முசிலிம்கள்தான் பிரச்சனையான கொள்கையுடையவர்கள். சியா முசிலிம்கள் கடும்போக்கானவர்களல்ல. 🙂

On 3/31/2020 at 8:11 PM, Kadancha said:

இலங்கை முஸ்லிம்கள் இனம்,  பாலைவன முஸ்லிம்களின் இனத்தில் இருந்து முற்றாக வேறுபட்டது.

இலங்கை முஸ்லிம்கள், இன்றைய கேரளம் மற்றும் தமிழ் நாட்டின் அன்றைய ஒடுக்கப்பட்ட சாதிகள் ஆகும்.

பாலைவனத்தை படத்திலேயே 99.9% இலங்க முஸ்லிம்கள் பார்த்து இருக்கமாட்டார்கள்.

 

இலங்கை முஸ்லீம்கள் மீது பாரசீக மற்றும் அரேபிய வணிகர்களின் தாக்கம் அன்றும் இன்றும் உள்ளது. 
அத்துடன். மக்கா மற்றும் மதீனா செல்பவர்கள், அந்த அரேபிய நாடுகளின் கலாச்சாரம் பற்றிய தகவல்களை பெறுபவர்கள் மத்தியில் தாமும் அவ்வாறான கலாச்சாரத்தை பின்பற்றல் வேண்டும் என்பது ஆழமாக பதிந்து விட்ட ஒன்று. 

உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும்

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரச உயர்மட்டத்தை வலியுறுத்தும் வகையில், இன்று காலை (02) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாம் கூடி ஆராய்ந்தோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடல் முன்னாள் அமைச்சர் பௌசியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், கொரோனாவல் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிக்க வேண்டும் என்ற சுற்றுநிருபம் வெளிவந்திருக்கும் நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், நேற்று கொரோனாவால் மரணமான ஜுனூஸ் இன் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தை சாதகமான முடிவு வராததாலும் பிரதமருடன் சந்திப்பு மேற்கொள்ளவுள்ளோம் என ரிஷார்ட் தெரிவித்தார்.

http://eelamurasu.com.au/?p=26461

 

ஜனாஸாவை வைத்து அரசியல் செய்து மீண்டும் இனவாத ஊடகங்களுக்கு தீனி போட்டு விடாதீர்கள். தயவுசெய்து சமூகத்திற்காக சிந்தியுங்கள். (முகவலை ) 

image_73547142fc.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும்

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரச உயர்மட்டத்தை வலியுறுத்தும் வகையில், இன்று காலை (02) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாம் கூடி ஆராய்ந்தோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடல் முன்னாள் அமைச்சர் பௌசியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், கொரோனாவல் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிக்க வேண்டும் என்ற சுற்றுநிருபம் வெளிவந்திருக்கும் நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், நேற்று கொரோனாவால் மரணமான ஜுனூஸ் இன் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தை சாதகமான முடிவு வராததாலும் பிரதமருடன் சந்திப்பு மேற்கொள்ளவுள்ளோம் என ரிஷார்ட் தெரிவித்தார்.

http://eelamurasu.com.au/?p=26461

 

சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கும், ஒழுங்குகளுக்கும், தேவைக்கும்  மேலாக மதத்தை முன்னிறுத்தும் சமூகம்.  

இவர்களைப் பேசாமல் சவூதிக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடலாம். 😂

(தொடர்ச்சியாக வீட்டிலிருந்த பிறஸ்றேசனால வந்தது 🤥)

 

  • தொடங்கியவர்
7 hours ago, ampanai said:

அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தை சாதகமான முடிவு வராததாலும் பிரதமருடன் சந்திப்பு மேற்கொள்ளவுள்ளோம் என ரிஷார்ட் தெரிவித்தார்.

உங்க பேச்சுவார்த்தைகளை கொஞ்சம் கெதியாவே செய்யுங்கோ அடுத்த சாவு நடக்க முன்னர்.

இல்லை என்டா அதையும் எரிச்சு கொஞ்ச ஆட்களை காப்பாத்தி போடுவாங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.