Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பகுதியில் கடற்படையின் வெறியாட்டம்! மூவரை பற்களால் கடித்து குதறிய கொடூரம்

Featured Replies

கடற்பகுதியில், சிறிலங்கா கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (07/04/2020) கிராஞ்சியில் உள்ள கடற்படை காவலரணில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, கடற்தொழிலுக்காக சென்றிருந்த வேளை, இரவு 07:00 மணியளவில் அவ்விடத்திற்கு சென்று கடற்படையினர், அம்மீனவர்களை கைதுசெய்து, நீருக்குள் மூழ்கடித்து, ஆயுதங்களால் தாக்கியதுடன், பற்களினாலும் கடித்துக் குதறியுள்ளனர்.

இவ் வெறியாட்டத்தில் ஈடுபட்ட கடற்படையினரில் சிலர் சீருடை அணியாமல் நிர்வாணமாக நின்றதாகவும், அதிகளவு மதுபோதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடுகள் எதனையும் செய்யக்கூடாது எனவும், மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லக்கூடாது எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனால் அச்சமுற்று வீடுகளில் இருந்த மீனவர்கள், தற்போது தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட வேதனை தாங்க முடியாமல் தகவலை வெளியிட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140960?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே மிருக குணமுடையவர்கள் தான் இராணுவ , கடற்படையில் உள்ளனர் என பல தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

54 minutes ago, Rajesh said:

கடந்த செவ்வாய்க்கிழமை (07/04/2020) கிராஞ்சியில் உள்ள கடற்படை காவலரணில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, கடற்தொழிலுக்காக சென்றிருந்த வேளை, இரவு 07:00 மணியளவில் அவ்விடத்திற்கு சென்று கடற்படையினர், அம்மீனவர்களை கைதுசெய்து, நீருக்குள் மூழ்கடித்து, ஆயுதங்களால் தாக்கியதுடன், பற்களினாலும் கடித்துக் குதறியுள்ளனர்.

இவ் வெறியாட்டத்தில் ஈடுபட்ட கடற்படையினரில் சிலர் சீருடை அணியாமல் நிர்வாணமாக நின்றதாகவும், அதிகளவு மதுபோதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடுகள் எதனையும் செய்யக்கூடாது எனவும், மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லக்கூடாது எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

அடுத்த கட்ட ஐ.நா. அமைதிப்படை 'வீரர்கள்' தயார் 😡

அக்கா அம்பிகாவும் அண்ணன் சுமந்திரனும் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள், மனித உரிமை காவலர்கள் சும்மாவாக இருப்பார்கள்😲

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

அடுத்த கட்ட ஐ.நா. அமைதிப்படை 'வீரர்கள்' தயார் 😡

அக்கா அம்பிகாவும் அண்ணன் சுமந்திரனும் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள், மனித உரிமை காவலர்கள் சும்மாவாக இருப்பார்கள்😲

நம்ம அமைச்சர் டக்கிளஸ் தகுந்த நடவடிக்கை  எடுப்பார் ....மீன்பிடி அமைச்சர் நம்ம் ஆளு அவரிடம் போய் முறைபாடு செய்யுங்கள்....அவர் உடனடியாக தமிழ் கடற்படை (ஊர்காவல்) அனுப்பி மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்......

இதை சிறிலங்கா கடற்படை செய்யவில்லை  அயல்நாட்டு கடற்படை அல்லது மீனவ்ர்கள் செய்திருக்கலாம் என்று அறிக்கை விடுவார்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, nunavilan said:

ஏற்கனவே மிருக குணமுடையவர்கள் தான் இராணுவ , கடற்படையில் உள்ளனர் என பல தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

நரபலி சுவை கண்ட பற்கள் மனிச ரத்தம் காணாமல் சும்மா இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களுக்கிடேள்ள கொரோன ஆவி பூந்திரிச்சு....

லண்டனில் என்னுடன் படித்த ஒரு ராணுவ அதிகாரி, எனது நண்பர், யாழில் இருப்பவர் உடன் பேசிக்கொண்டிருந்தேன்.

லீவில் போகவேண்டியவர்கள், ஊரடங்கு காரணமாக கான்சல் ஆகி, கடமையில் தொடர்கிறார்கள். குடும்ப பொருளாதார நிலை, உணவு இருப்பு நிலை,  தெரியாத நிலையில், நினைத்தவுடன் கிளம்பி போக முடியாமை, போன்ற காரணங்களால் ஒவொருவரும் ஒருவித பதட்ட மனநிலையில் உள்ளார்களாம். 

எப்போது தமக்கு சாத்துவார்களோ தெரியவில்லை (mutiny) என்று சொன்னார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

துட்டகாமினியின் வம்சமல்லவா. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். இப்போது கடிக்கிறார்கள். தேவையென்றால் கறிவைத்துவிடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பாதிச் சிங்கத்துக்கு பிறந்ததுகளிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள்? இப்போ கொரோனா பீதியில் விசர் வேற பிடிச்சு நிக்குதுகள். எப்ப ஜனாதிபதி அடக்கி வைச்சிருக்கிறதை உடைச்சுக்கொண்டு வெளிக்கிடுகிறாரோ தெரியலை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

நம்ம அமைச்சர் டக்கிளஸ் தகுந்த நடவடிக்கை  எடுப்பார் ....மீன்பிடி அமைச்சர் நம்ம் ஆளு அவரிடம் போய் முறைபாடு செய்யுங்கள்....அவர் உடனடியாக தமிழ் கடற்படை (ஊர்காவல்) அனுப்பி மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்......

இதை சிறிலங்கா கடற்படை செய்யவில்லை  அயல்நாட்டு கடற்படை அல்லது மீனவ்ர்கள் செய்திருக்கலாம் என்று அறிக்கை விடுவார்....

அவற்றை பெயரைக் கேட்டவுடன் கடற்படை பயத்தில், அடுத்த நாட்டு கடல் எல்லைக்கு தப்பிப் போய்விடும்.  அதுசரி. சும்மா நாய் கடிச்சாலே பொக்கிளை சுத்தி 24   ஊசி போடவேணுமாம், இதுல இதுவேற கொரோனா   பிடிச்சதாய் இருந்தால்: ஆள் குளோஸ்தானோ?  

  • கருத்துக்கள உறவுகள்

காட்டு மிரண்டிகள், இவன் சீரழிந்துதான் கடைசி காலங்களில் நிம்மதியில்லாமல் சாவான்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

காட்டு மிரண்டிகள், இவன் சீரழிந்துதான் கடைசி காலங்களில் நிம்மதியில்லாமல் சாவான்கள்

காட்டுமிராண்டிகள் சீரழிந்தது அந்தக்காலம். காட்டுமிராண்டிகளும் சனாதிபதியாக வருவது இந்தக்காலம். 

  • கருத்துக்கள உறவுகள்

சாகிறவனும் அள்ளி வேற கொட்டுறான்.  

21 hours ago, Rajesh said:

கடந்த செவ்வாய்க்கிழமை (07/04/2020) கிராஞ்சியில் உள்ள கடற்படை காவலரணில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, கடற்தொழிலுக்காக சென்றிருந்த வேளை, இரவு 07:00 மணியளவில் அவ்விடத்திற்கு சென்று கடற்படையினர், அம்மீனவர்களை கைதுசெய்து, நீருக்குள் மூழ்கடித்து, ஆயுதங்களால் தாக்கியதுடன், பற்களினாலும் கடித்துக் குதறியுள்ளனர்.

அனைத்து "வீரர்களுக்கும்" விசர்க்கடிநாய் ஊசி போடல் வேண்டும் !

அத்துடன், சமூக இடைவெளியை பேணாததால் இந்த கடற்படை வீர்ர்களை பதவி உயர்த்தலாம் !! 

21 hours ago, ampanai said:

அக்கா அம்பிகாவும் அண்ணன் சுமந்திரனும் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள், மனித உரிமை காவலர்கள் சும்மாவாக இருப்பார்கள்😲

இவர்கள் போர்க்குற்றவாளிகளின் இனப் படுகொலைக்காரர்களின் காவலர்கள்.

அழுத்தம் கூடினால் ஒரு அறிக்கைவிட்டு ஏமாற்ற முனைவார்கள்.

கடிநாய்களாக மாறிய ஸ்ரீலங்கா கடற்படையினர் - இளஞ்செழியன் கடும் கண்டனம்

பூநகரி - கிராஞ்சி கடற்பகுதியில், சிறிலங்கா கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலில் மீனவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் பொருளாளரும் சமூக ஆர்வலருமாகிய அன்ரனி ஜெயநாதன் பீட்டர் இளஞ்செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கடந்த 07.04.2020 அன்று செவ்வாய்க் கிழமை, மாலை 4 மணிக்கு கிராஞ்சி,சிவபுரம்,பூநகரியை சேர்ந்த பக்கியநாதன் இன்பராஜ் வயது 28 அவரது சகோதரன் பாக்கியநாதன் ஜூலியன் வயது 25 ஆகியோர் கிராஞ்சியில் உள்ள கடற்படை காவலரணில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, கடற்தொழிலுக்காக சென்றிருந்த வேளையில் இரவு 07 மணியளவில் கடற் கரையில் இருந்து 200 மீட்டரில் மீன் பிடித்து கொண்டு இருக்கையில் கடலில் கடற்படையினர், இம்மீனவர்களை கைதுசெய்து, நீருக்குள் மூழ்கடித்து, ஆயுதங்களால் தாக்கியதுடன் வாய்களால் கடித்துக் குதறியுள்ளனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இவ் வெறியாட்டத்தில் ஈடுபட்ட கடற்படையினரில் சிலர் சீருடை அணியாமல் நிர்வாணமாக நின்றதாகவும், அதிகளவு மதுபோதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை ஆயுதங்களாலும் அடித்து வாய்களால் கடித்து குதறி உள்ளனர். பின்னர் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று பயமுறுத்தி "வெளியில் தெரிந்தால் என்ன செய்வோம் தெரியும் தானே"

"வைத்தியசாலைக்கு போகக்கூடாது போனால் பிறகு தெரியும் தானே" என்றும் மேலும், "இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடுகள் எதனையும் செய்யக்கூடாது" எனவும், "மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லக்கூடாது" எனவும் இவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் அச்சமுற்று வீடுகளில் இருந்த இவர்கள், தற்போது தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட வேதனை தாங்க முடியாமல் தகவலை வெளியிட்டுள்ளனர்.

மருத்துவ சேவையை பெற்றுக் கொள்ள மருத்துவமனைக்கு கூட செல்ல மீனவர்கள் பயந்து வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கிறார்கள்.

இப்படியான செயற்பாடுகள் இராணுவ ஆட்சியை நிலை நாட்ட அத்திவாரமா என பீட்டர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ் விடயத்தை உடன் மனித உரிமை ஆணைக்குழுவும், நீதித்துறையும் உடன் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தலை பாதுகாக்க வேண்டும் அத்துடன் சம்பந்தப்பட்ட கடற்படையினரை உடன் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் ஊரடங்கு பிறப்பித்துள்ள வேளையில் அவர்களை உடன் வைத்தியசாலையில் மருத்துவ சேவையினை பெற்றுக் கொள்ள உரிய தரப்புகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140989?ref=ibctamil-recommendation

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் முப்படையினரும் இன, மத, பிரதேச வேறுபாடின்றி நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் சேவை செய்யவே உள்ளார்கள். 

யாராவது அக்கறை உள்ளவர்கள் அல்லது தொண்டு அமைப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாட்டை பொலிஸ் பதிவு செய்து இதுபோன்ற சம்பவம் மீண்டும் இடம்பெறாதவண்ணம் செய்யலாம்.

இடம், திகதி, நேரம் தொடக்கம் கிடைக்கக்கூடிய முழுவிபரங்களையும் பெற்று பொலிஸ் முறைப்பாடு செய்யவேண்டியது முதல்விடயம்.

அராஜகம் செய்பவர்கள் சம்பவம் பற்றி வெளியில் ஒருவரும் சொல்லக்கூடாது என மிரட்டுவது வழமையே. புதுமுக மாணவிகளிடம் குளியல் அறையில் நிர்வாணமாக நின்று வீடியோகோல் எடுக்குமாறுகூறிய யாழ் பல்கலைக்கழகத்து மாணவர்களில் சிலரும் இப்படித்தான் சொன்னார்கள். 

முறைப்பாட்டின் முடிவில் நீதி/பரிகாரம் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். முறைப்பாடு செய்யாவிட்டால் அராஜகம் நிச்சயம் தொடரவே செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கையின் முப்படையினரும் இன, மத, பிரதேச வேறுபாடின்றி நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் சேவை செய்யவே உள்ளார்கள். 

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கையின் முப்படையினரும் இன, மத, பிரதேச வேறுபாடின்றி நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் சேவை செய்யவே உள்ளார்கள். 

அந்த லட்ஷணம்தான் தெரியுதே. இதுக்கு மேலும் ஆதாரம் தேவையா? இருக்க, சம்பந்தப்பட்ட கடற்படை வீரரை உடனடியாக அங்கொடைக்கு அனுப்பினால்:  அவர்களை கட்டிப்போட்டு சிகிச்சை அளிக்க வேண்டுமோ, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க  வேண்டுமோவென கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிக்க ஆவன செய்யப்பட வேண்டும்.

8 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இடம், திகதி, நேரம் தொடக்கம் கிடைக்கக்கூடிய முழுவிபரங்களையும் பெற்று பொலிஸ் முறைப்பாடு செய்யவேண்டியது முதல்விடயம்.

உண்மை தான்.

நீதி, நியாயம் கிடைக்கிறதா இல்லையா என்பதற்கு அப்பால் எழுத்துரீதியான முறைப்பாடு அவசியம்.

ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் தனியே சென்று முறைப்பாடு செய்யவேண்டும் என எதிர்பார்ப்பது கூடாது. அரசியலில் உள்ளவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து முறைப்பாடுகளை மேற்கொள்ள உதவுவதுடன் சில மாதங்கள் நிலைமைகளை கண்காணிக்க வேண்டும். இவர்கள் பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் விடுவதோடு நின்றுவிட்டால் அது தேவையான பலனைத் தராது.

  • கருத்துக்கள உறவுகள்

முறைப்பாடு செய்பவர்களின் பாதுகாப்பு அவசியம். தலைமையில் இருப்பது அதே குணமுள்ளது. எதற்கும் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தேவை.

2 minutes ago, satan said:

முறைப்பாடு செய்பவர்களின் பாதுகாப்பு அவசியம். தலைமையில் இருப்பது அதே குணமுள்ளது. எதற்கும் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தேவை.

நூற்றுக்கு நூறு உண்மை!

பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் ஊடகங்களும் தொடர்ச்சியாக இருப்பதுடன் இவை தொடர்பான தமிழர் நலனில் ஆர்வமுள்ள சர்வதேச நிறுவனங்களுக்கும் தகவல்களை தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.

வெறுமனே பாராளுமன்றில், கூட்டங்களில் கதைத்து, அறிக்கைகளை மட்டும் விட்டதுடன் தங்கள் கடமை முடிந்தது என நினைப்பவர்கள் இம்மியளவும் பயனற்றவர்கள்.

ஈழத் தமிழர்களுக்கு அப்படியான ஒரு பாதுகாப்புக் கவசத்தை வழங்கவல்ல அரசியல் கட்சிகளே, அரசியல்வாதிகளே காலத்தின் தேவை.

இந்த விடயத்தில், விக்கினேஸ்வரன் குழுவினர், கஜேந்திரகுமார் குழுவினர், சம்மந்தன்-சுமந்திரன் குழுவினர் என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்போம்.

இது போன்ற செய்திகளை வீரகேசரி, வித்தியாதரனின் காலைக்கதிர் போன்ற பத்திரிகைகள் பிரசுரிப்பதில்லை அல்லது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இவர்களுக்கு நாய்ப் பயிற்சி கொடுக்கிறார்களென நினைக்கிறன். 

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் ஆக்க பூர்வமாக சிந்திக்குக.. இவயளை மதுபான சாலை & உணவகத்தில் பணியமர்த்துக 👍.. எலும்பை கடித்து கிடக்கட்டும் & போற வர வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யட்டும்..,👌

2832437C00000578-0-image-m-30_1430472190

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்லைனில் ஆக்ரோசமாக அறிக்கைகள் விடுவது இலகு. பக்குவமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நலன்களை சரியான முறையில் வழிப்படுத்தி செய்துகொடுப்பது கடினமானது.

அடிப்படை பொறிமுறைகள் பயன்படுத்தப்படாமல் விசிலடி வாங்குவதற்காக உசுப்பேத்தல் செய்வது எதுவித பயனையும் கொடுக்காது.

சட்டவல்லுனர்கள் பலர் அரசியலில் உள்ளார்கள். பிரதேச சபை, உள்ளூர் ஆட்சி சபை, மாகாணசபை, பாராளுமன்றம் என பல மட்டங்களில் சேவைகள் பெறப்படவேண்டியவர்கள் பதவியில் உள்ளார்கள். இவர்கள் ஆறாம் சட்டம் பத்தாம் சட்டம் சுயநிர்ணயம் என்று சூடேற்றி உணர்ச்சி அரசியல் செய்யாமல் மேற்கண்ட செய்திகளில் சம்மந்தப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் முன்னேற்றம் அடைவதற்கு கடை நிலையில் களத்தில் இறங்கி பணி செய்தால் போற வழிக்கு புண்ணியம் கிடைக்கும்.

முறைகேடுகள் பதிவில் முறைப்பாடுகளாக பேணப்படவேண்டியது அவசியம். 

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் கடற்படையினால் அடித்தும், கடித்தும் துன்புறுத்தப்பட்ட மீனவர்கள்..! சந்தித்து பேசினார் சி.சிறீதரன்.

Navy-Kaddi.jpg

கிளிநொச்சி- பூநகரி கிராஞ்சி பகுதியில் மதுபோதையில் கடற்படையினர் நடாத்திய தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நோில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

கடந்த 7ம் திகதி இரவு கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடாத்தியதுடன், மதுபோதையில் கடித்தும் துன்புறுத்தியிருந்தனர். மேலும் முறைப்பாடு எதுவும் கொடுக்ககூடாது என கடற்படையினர் அச்சுறுத்தலும் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நோில் சந்தித்து பேசி ஆறுதல் கூறியதுடன், இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்களுடன் பேசுவதாகவும் உறுதியளித்துள்ளார்.

https://jaffnazone.com/news/17113

டிஸ்கி

என்னது..பொழுது விடுஞ்சுதா..!

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.