Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸாரின் உத்தரவினையும் மீறி யாழில் வழிபாடுகளில் ஈடுபடும் இந்து மக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

என்னுடைய கேள்விக்கு எதிர்க் கேள்வியைத்தான் வைக்க முடிகிறத்தே தவிர பிழையைக் கண்டுபிடிக்க முடியவில்லையல்லவா ?

இதைத்தான் நீங்கள் எல்லா திரியிலும் செய்கிறீர்கள். இப்போது புரிகிறதா அதன் தாக்கம்??

கேள்வியில் எந்த பிழையும் இல்லை. இணைப்பும், கருத்தும் அநாவசியமானது என்பதுதான் பதில்.

51 minutes ago, Kapithan said:

😂😂😂😂😂😂😂😂 எனக்கு சிரிப்புச் சிரிப்பா வருகிது. 

உங்களை நினைக்கவும் எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது. என்ன செய்ய?

  • Replies 149
  • Views 11.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

இதைத்தான் நீங்கள் எல்லா திரியிலும் செய்கிறீர்கள். இப்போது புரிகிறதா அதன் தாக்கம்??

கேள்வியில் எந்த பிழையும் இல்லை. இணைப்பும், கருத்தும் அநாவசியமானது என்பதுதான் பதில்.

உங்களை நினைக்கவும் எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது. என்ன செய்ய?

எப்போதும் தமிழனாக எழுத்தில் மட்டும் இருக்கக் கூடாது. 

நிஜத்திலும் இருக்க வேண்டும். 

இணைத்தது நானல்ல. 😜 (அதெப்படி உங்களுக்குப் பிடித்ததை மட்டும்தான்  இங்கே இணைக்க வேண்டுமா ? இதென்ன ஞாயம். இதென்ன நீதி 😂😂😂😂)

அனாவசியமான கருத்தா ?😂😂😂 எப்படி...எப்படி.... எனது கருத்து உங்களுக்கெப்படி அனாவசியமானது ?😂😂😂😂

உங்களுக்கு விருப்பமெண்டா ரத்தம் இல்லாட்டி தக்காளிச் சட்னியா ? 😂😂😂😂😂(தாங்ஸ் மிஸ்ரர் வடிவேலு😀) (என்னது எனது அனாவசியமான கருத்துக்கு  இத்தனை பதில்களா ?. ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு பதிலிறுத்தவர்கள் அத்தனைபேரும் வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருந்து பதிலிறுக்கின்றனரா ? . 😂😂)

எனது கருத்துக்களில்  பிழை காண முடியவில்லை. எனது வாதங்களை எதிர் வாதத்தால் முறியடிக்கவும் முடியவில்லை(?). ஆனாலும் என்னைத் தூற்றுகிறீர்கள். 😀😀

பெருமாள் சொன்னதுபோல் நான் நல்ல கிறீத்துவனில்லைத்தான். ஏனென்றால் நான் பிறப்பால் மட்டுமே கிறீத்துவன். ஆராதனைகளுக்குப் போய் வருடக் கணக்காச்சு. சைவக் கோவில்களுக்கும் செல்பவன். எனது மனைவி பிள்ளைகளை சைவ கோவில்களுக்கு கூட்டிச் சென்று பிற சமயங்களை சமனாக மதிக்கக் கற்றுக் கொடுப்பவன். ஆதலால் பெருமாள் பார்வையில் நான் நல்ல கிறீத்துவனல்ல. 😀

இப்போதும் நீங்கள் தாராளமாகச் சிரிக்கலாம்.  சிரிப்பு மட்டும்தான் மனிதனை பிற விலங்குகளிடமிருந்து பிரித்து சிறப்பூட்டுகிறது. 👍

5 hours ago, ampanai said:

இவர்களே பணத்தை வேண்டி வழிபட விட்டும் இருக்கலாம் 😜

D01999F0-8475-4595-A9EF-F696B2972A39-102

யாரைக் குறிப்பிடுகிறீர்கள் ? குழப்பமாக இருக்கிறது. 🤥

பணத்தை வேண்டி (இலஞ்சம்) பக்தர்களை வழிபடவிட்டால்  அவர்கள் போலிசார்.

பணத்தை வேண்டி (முருகனிடம்) வழிபட்டால் அவர்கள் பக்தாள்(ஸ்) 

😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி ஒரு உப்பு புளி இல்லாத ஒன்று. நல்ல கதை நீளமில்லை. படங்கள் தான் கூடிப்போச்சு. ஆட்களை காணேல 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, Kapithan said:

எப்போதும் தமிழனாக எழுத்தில் மட்டும் இருக்கக் கூடாது. 

நிஜத்திலும் இருக்க வேண்டும். 

இணைத்தது நானல்ல. 😜 (அதெப்படி உங்களுக்குப் பிடித்ததை மட்டும்தான்  இங்கே இணைக்க வேண்டுமா ? இதென்ன ஞாயம். இதென்ன நீதி 😂😂😂😂)

அனாவசியமான கருத்தா ?😂😂😂 எப்படி...எப்படி.... எனது கருத்து உங்களுக்கெப்படி அனாவசியமானது ?😂😂😂😂

உங்களுக்கு விருப்பமெண்டா ரத்தம் இல்லாட்டி தக்காளிச் சட்னியா ? 😂😂😂😂😂(தாங்ஸ் மிஸ்ரர் வடிவேலு😀) (என்னது எனது அனாவசியமான கருத்துக்கு  இத்தனை பதில்களா ?. ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு பதிலிறுத்தவர்கள் அத்தனைபேரும் வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருந்து பதிலிறுக்கின்றனரா ? . 😂😂)

எனது கருத்துக்களில்  பிழை காண முடியவில்லை. எனது வாதங்களை எதிர் வாதத்தால் முறியடிக்கவும் முடியவில்லை(?). ஆனாலும் என்னைத் தூற்றுகிறீர்கள். 😀😀

பெருமாள் சொன்னதுபோல் நான் நல்ல கிறீத்துவனில்லைத்தான். ஏனென்றால் நான் பிறப்பால் மட்டுமே கிறீத்துவன். ஆராதனைகளுக்குப் போய் வருடக் கணக்காச்சு. சைவக் கோவில்களுக்கும் செல்பவன். எனது மனைவி பிள்ளைகளை சைவ கோவில்களுக்கு கூட்டிச் சென்று பிற சமயங்களை சமனாக மதிக்கக் கற்றுக் கொடுப்பவன். ஆதலால் பெருமாள் பார்வையில் நான் நல்ல கிறீத்துவனல்ல. 😀

இப்போதும் நீங்கள் தாராளமாகச் சிரிக்கலாம்.  சிரிப்பு மட்டும்தான் மனிதனை பிற விலங்குகளிடமிருந்து பிரித்து சிறப்பூட்டுகிறது. 👍

🤣

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இதில் பஞ்சாயத்துத் தல யாரு ?

 எப்போதும் தமிழன் ? பெருமாள் ? குசா ? 

இல்ல மூன்று பேருமா ?

(திரும்பவும் கேள்வியா 😫 என்று தலயப் பிச்சா நான் அதற்குப் பொறுப்பல்ல 😂😂😂)

  • கருத்துக்கள உறவுகள்

image_9af56e3b84.jpg

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nilmini said:

இந்த செய்தி ஒரு உப்பு புளி இல்லாத ஒன்று. நல்ல கதை நீளமில்லை. படங்கள் தான் கூடிப்போச்சு. ஆட்களை காணேல 

அடி வேண்ட கபித்தான் மட்டும் காணும் என்று நினைத்திருப்பார்கள் போலும் 😂😂

2 minutes ago, putthan said:

image_9af56e3b84.jpg

நடுவில் நிற்கும் ஒருவர் பொத்தியது வாயை மட்டும் அல்ல 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

அடி வேண்ட கபித்தான் மட்டும் காணும் என்று நினைத்திருப்பார்கள் போலும் 😂😂

நடுவில் நிற்கும் ஒருவர் பொத்தியது வாயை மட்டும் அல்ல 😂😂

கையுறை இல்லாமல் பொத்துகின்றார்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, putthan said:

image_9af56e3b84.jpg

Bild

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

Bild

சமுக வாய் பொத்தல்😀

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, putthan said:

சமுக வாய் பொத்தல்😀

கையில் வைத்திருப்பது Toilet paper மாதிரி இருக்கு 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா ஸ்ரீ காயத்திரி கோயிலில் ஒன்றுகூடிய 13 பேர் உப்புவெளி பொலிஸாராலும், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்திரகாளி அம்மன் கோயிலில் ஒன்றுகூடிய 11 பேர் தலைமையகப் பொலிஸாராலும் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளில் 21 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள் ஒன்றுகூடிய கோயில்களில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

http://athavannews.com/திருகோணமலையில்-கோயில்கள/

7 hours ago, வாதவூரான் said:

 ஆண்கள் எண்டால் அடி விழுந்திருக்கும். 

7 hours ago, ampanai said:

"முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுட்டிருந்த 15 பேர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது."

மொத்தத்தில்  அடி, உதை, அடைத்துவைப்பு ஆகியவற்றாலேயே  கட்டுப்படும்  மிருகங்களாக மாறிவிட்டோம்.

9 hours ago, ampanai said:

அப்படி ஒன்றும் பெரிய கூடம் மாதிரி இல்லையே. 

2 hours ago, Kapithan said:

ஏனென்றால் நான் ஒரு கிறீத்தவன்.

ஒரு கிறீத்துவன் சைவர்களை விமர்சிப்பதா ? 

அதுவும் நல்லூர் முருகன் கோவில் முன் நின்று வணங்குவோரையே குறை சொல்வதா ? 

இதுதானே உங்கள் எல்லோரினதும் பிரச்சனை ? 

😂😂😂😂😂😂😂😂 எனக்கு சிரிப்புச் சிரிப்பா வருகிது. 

போதகர்  செய்தால், நாங்கள் எல்லோரும் நீதிபதிகளாக மாறி அவருக்கெதிராக  தீர்ப்பிடுகிறோம். அதுவே சைவர்களாக இருந்தால் வக்கீல்களாக மாறி  அவர்கள் சார்பாக  வாதாடுகிறோம்.  பொதுவாக சொன்னேன்.

"சமன்செய்து சீர்தூக்கும்கோல் போல் அமைந்தொருபால் 

கோடாமை சாண்றோர்க்  அணி".

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

எனது முதலாவது கருத்தில் என்ன பிழை கண்டீர்கள் ? (மாட்டினீர்களா 😜)

இதய சுத்தியோடு பதிலளியுங்கள் பார்ப்போம் ? 👍

தப்பியோடவோ சொதப்பவோ கூடாது.  பதில் கேள்வியெல்லாம் கேட்கக்  கூடாது. 

நான்முதலில்  எழுதியதில் என்ன பிழை கண்டீர்கள் ? 

அவர்களின் எதிர்பார்ப்பு இதே கடுமையை சுவிஸ்  பாதிரியிடம்  காட்டவில்லை என்பதே மற்றபடி உண்மையான முஸ்லீமுக்கும்  உண்மையான கிருத்தவத்துக்கும்  உண்மையான சைவத்துக்கும் தமிழர்கள் பிரச்சனை  பண்ணுவதில்லை உண்மையான கிருத்துவத்தை சாத்தான் கூட்டம் என்று சொல்வதை கூட ஒரு உண்மையான சைவதமிழர்களால்  ஏற்று  கொள்ள முடிவதில்லை தமக்கு விசா கிடைக்கணும் அல்லது வீட்டில  நல்லது நடக்கணும்  என்று நேர்த்தி வைக்கும் போது  லூர்து மாதாவுக்கு வொசிங்கம் சேர்ச் மாதாவுக்கும்  சேர்த்தே நேர்த்தி வைக்கும் வடகிழக்கு சைவதமிழர்கள் உண்டு இது பற்றி நிறைய தடவை இங்குள்ள ஆங்கிலேயர் கூட வியந்து எழுதியது உண்டு .இப்படியான இடத்தில் அசுத்தமான அல்லு லோயா கூட்டங்களுக்கு இடமில்லை ஆனால் நீங்கள்  அவர்களுக்கு  சேர்ந்து வக்காலத்து வாங்குவது இடறலாய்  உள்ளது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சிரிப்பு மட்டும்தான் மனிதனை பிற விலங்குகளிடமிருந்து பிரித்து சிறப்பூட்டுகிறது. 

எப்படி இப்படியான தவறான முடிவுக்கு எந்த ஆதாரமும் இன்றி நீங்கள் வரமுடியும்?

1. நீங்கள் வளர்க்கும் நாய் உங்களை கண்டவுடன் சிரிப்பதை கண்டதில்லையா?

2. சிரிப்பு அப்படி என்ன சிறப்பை தருகிறது? எக்காளச்சிரிப்பு, ஆணவச்சிரிப்பு எல்லாம் சிறப்பானதென்றா சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

அவர்களின் எதிர்பார்ப்பு இதே கடுமையை சுவிஸ்  பாதிரியிடம்  காட்டவில்லை என்பதே மற்றபடி உண்மையான முஸ்லீமுக்கும்  உண்மையான கிருத்தவத்துக்கும்  உண்மையான சைவத்துக்கும் தமிழர்கள் பிரச்சனை  பண்ணுவதில்லை உண்மையான கிருத்துவத்தை சாத்தான் கூட்டம் என்று சொல்வதை கூட ஒரு உண்மையான சைவதமிழர்களால்  ஏற்று  கொள்ள முடிவதில்லை தமக்கு விசா கிடைக்கணும் அல்லது வீட்டில  நல்லது நடக்கணும்  என்று நேர்த்தி வைக்கும் போது  லூர்து மாதாவுக்கு வொசிங்கம் சேர்ச் மாதாவுக்கும்  சேர்த்தே நேர்த்தி வைக்கும் வடகிழக்கு சைவதமிழர்கள் உண்டு இது பற்றி நிறைய தடவை இங்குள்ள ஆங்கிலேயர் கூட வியந்து எழுதியது உண்டு .இப்படியான இடத்தில் அசுத்தமான அல்லு லோயா கூட்டங்களுக்கு இடமில்லை ஆனால் நீங்கள்  அவர்களுக்கு  சேர்ந்து வக்காலத்து வாங்குவது இடறலாய்  உள்ளது .

சரியாக சொன்னீர்கள் பெருமாள். தென் கொரியாவில் கொரோனாவை பரப்பியதும் இந்த அல்லுலோயா கூட்டம்தான். வருத்தம் வந்து ஒழித்து திரிந்தவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பெருமாள் said:

அவர்களின் எதிர்பார்ப்பு இதே கடுமையை சுவிஸ்  பாதிரியிடம்  காட்டவில்லை என்பதே மற்றபடி உண்மையான முஸ்லீமுக்கும்  உண்மையான கிருத்தவத்துக்கும்  உண்மையான சைவத்துக்கும் தமிழர்கள் பிரச்சனை  பண்ணுவதில்லை உண்மையான கிருத்துவத்தை சாத்தான் கூட்டம் என்று சொல்வதை கூட ஒரு உண்மையான சைவதமிழர்களால்  ஏற்று  கொள்ள முடிவதில்லை தமக்கு விசா கிடைக்கணும் அல்லது வீட்டில  நல்லது நடக்கணும்  என்று நேர்த்தி வைக்கும் போது  லூர்து மாதாவுக்கு வொசிங்கம் சேர்ச் மாதாவுக்கும்  சேர்த்தே நேர்த்தி வைக்கும் வடகிழக்கு சைவதமிழர்கள் உண்டு இது பற்றி நிறைய தடவை இங்குள்ள ஆங்கிலேயர் கூட வியந்து எழுதியது உண்டு .இப்படியான இடத்தில் அசுத்தமான அல்லு லோயா கூட்டங்களுக்கு இடமில்லை ஆனால் நீங்கள்  அவர்களுக்கு  சேர்ந்து வக்காலத்து வாங்குவது இடறலாய்  உள்ளது .

யோவ் பெருமாள்,

இந்தத் திரிக்கும் சமயத்திற்கும் என்னய்யா (பம்மல்  K) சம்பந்தம் ?🤔  (மிஸ்ரர் கமலகாஸன் என்னை மன்னிக்கவும்). 

என்னைத்தான் கிறீத்துவன் என்ன எங்களுக்கு கதைக்கிறது  எண்டு அவனவன் பேசுறானெண்டால் நீர் வேற அல்லேலூயா அல்லேலூயா எண்டு வந்து  கடுப்பக் கிளப்புறீர். 😡😡😡😡😡(😂😂)

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

யோவ் பெருமாள்,

இந்தத் திரிக்கும் சமயத்திற்கும் என்னய்யா (பம்மல்  K) சம்பந்தம் ?🤔  (மிஸ்ரர் கமலகாஸன் என்னை மன்னிக்கவும்). 

என்னைத்தான் கிறீத்துவன் என்ன எங்களுக்கு கதைக்கிறது  எண்டு அவனவன் பேசுறானெண்டால் நீர் வேற அல்லேலூயா அல்லேலூயா எண்டு வந்து  கடுப்பக் கிளப்புறீர். 😡😡😡😡😡(😂😂)

உங்களுக்கு எதோ நடந்துவிட்டது  காலையிலே  கதைப்பம் இனிய இரவு உங்களுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கற்பகதரு said:

எப்படி இப்படியான தவறான முடிவுக்கு எந்த ஆதாரமும் இன்றி நீங்கள் வரமுடியும்?

1. நீங்கள் வளர்க்கும் நாய் உங்களை கண்டவுடன் சிரிப்பதை கண்டதில்லையா?

2. சிரிப்பு அப்படி என்ன சிறப்பை தருகிறது? எக்காளச்சிரிப்பு, ஆணவச்சிரிப்பு எல்லாம் சிறப்பானதென்றா சொல்கிறீர்கள்?

யோவ் பனைமரத்தானே 

நான் இஞ்ச தனிய கிடந்து அல்லாடுறன் இதில நக்கல் வேறயா ? 😡

Just now, பெருமாள் said:

உங்களுக்கு எதோ நடந்துவிட்டது  காலையிலே  கதைப்பம் இனிய இரவு உங்களுக்கு .

மிஸ்ரர் பெருமாள் ஓட வேண்டாம்.😂😂

நீங்கள் தாராளமாக என்னைக் கிண்டல் செய்யலாம். நான் கோவிக்க மாட்டேன்.😂

2 hours ago, satan said:

மொத்தத்தில்  அடி, உதை, அடைத்துவைப்பு ஆகியவற்றாலேயே  கட்டுப்படும்  மிருகங்களாக மாறிவிட்டோம்.

போதகர்  செய்தால், நாங்கள் எல்லோரும் நீதிபதிகளாக மாறி அவருக்கெதிராக  தீர்ப்பிடுகிறோம். அதுவே சைவர்களாக இருந்தால் வக்கீல்களாக மாறி  அவர்கள் சார்பாக  வாதாடுகிறோம்.  பொதுவாக சொன்னேன்.

"சமன்செய்து சீர்தூக்கும்கோல் போல் அமைந்தொருபால் 

கோடாமை சாண்றோர்க்  அணி".

இவர்கள் கிறிஸ்தவ இந்துக்கள் என்று இணையதள போராளிகள் எழுதினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை।

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அவர்களின் எதிர்பார்ப்பு இதே கடுமையை சுவிஸ்  பாதிரியிடம்  காட்டவில்லை என்பதே மற்றபடி உண்மையான முஸ்லீமுக்கும்  உண்மையான கிருத்தவத்துக்கும்  உண்மையான சைவத்துக்கும் தமிழர்கள் பிரச்சனை  பண்ணுவதில்லை உண்மையான கிருத்துவத்தை சாத்தான் கூட்டம் என்று சொல்வதை கூட ஒரு உண்மையான சைவதமிழர்களால்  ஏற்று  கொள்ள முடிவதில்லை தமக்கு விசா கிடைக்கணும் அல்லது வீட்டில  நல்லது நடக்கணும்  என்று நேர்த்தி வைக்கும் போது  லூர்து மாதாவுக்கு வொசிங்கம் சேர்ச் மாதாவுக்கும்  சேர்த்தே நேர்த்தி வைக்கும் வடகிழக்கு சைவதமிழர்கள் உண்டு இது பற்றி நிறைய தடவை இங்குள்ள ஆங்கிலேயர் கூட வியந்து எழுதியது உண்டு .இப்படியான இடத்தில் அசுத்தமான அல்லு லோயா கூட்டங்களுக்கு இடமில்லை ஆனால் நீங்கள்  அவர்களுக்கு  சேர்ந்து வக்காலத்து வாங்குவது இடறலாய்  உள்ளது .

ஒரு கிறீஸ்தவ கத்தோலிக்கனாக, மற்றும் உங்களது பிடுங்குப்பாடுகளை தொடர்ந்து வாசிப்பவனாகவும் எனது கருத்தை பதிவு செய்கிறேன், சிறுவயதிலிருந்தே நாள் பூசைக்கு (நன்கு கவனிக்கவும் வீட்டில் திருப்பலிக்கு பூசை என்று தான் சொல்லுவினம்--பூசை எனும் வசனம் சைவ மத  சகோதர்கள் பாவிப்பது) செல்லும் குடும்பத்தில் வளர்க்கப்பட்டவன். கோவிலில் அப்படியொரு ஈடுபாடு சிறுவயதில்  (நன்கு கவனிக்கவும் வீட்டில் தேவாலயத்திற்கு செல்லவில்லையா என்று கேட்பதில்லை கோவிலுக்கு செல்லவில்லையா என்றுதான் கேட்பார்கள்), அடைப்புக்குள் உள்ளவற்றை ஏன் அழுத்திக்கூறுகிறேன் என்றால் இன்னும் பாரம்பரிய மதங்களான (கத்தோலிக்கம் ,மெதடிஸ்ட்) போன்றவை சைவ சமயத்துடனான தொடர்பை கொண்டிருக்கின்றன, அனைத்து கத்தோலிக்க சமயத்தவரும் சைவ மதத்திலிருந்து மதம் மாறியவர்களே, மெதடிஸ்ட் மதத்தினர் ஒன்று கத்தோலிக்கத்திலிருந்தோ அல்லது சைவத்திலிருந்தோ மாறியிருப்பார்கள். 
இந்த மதங்கள் பெரும்பான்மை கிறீஸ்தவ மதங்களாக தமிழர் மத்தியில் இருந்த காலங்களில் இந்துக்களுக்கும் 
கிறீஸ்தவர்களுக்கும் எந்த பிடுங்குப்பாடும் வரவில்லை,ஆரம்ப காலத்தில் இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த கத்தோலிக்க பாதிரியார்களின் (மிஷனரிகள் ) தன்னலமற்ற செயற்பாடுகள் கத்தோலிக்க பாதிரிகளுக்கு ஒரு நாடாளாவிய ரீதியில் மரியாதையையும் கௌரவத்தையும் ஏற்படுத்தியது, அவர்களை பின்பற்றிய சுதேச குருக்கள் (உள்நாட்டில் பாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள்) அந்த கௌரவத்தை 
பேணினார்கள். ஒன்றிரண்டு விதி விலக்குகள் நாற்றிய கதையும் உண்டு, அதே நேரத்தில் மக்களுக்காக உயிரை கொடுத்த கதைகளும் உண்டு.

இப்படி ஒழுங்காக இருந்த உறவில் குத்தி வெட்டி விளையாட தொடங்கியது இந்த புதுவரவு சபைகள்,
ஜெபிக்கிறோம் என்ற பெயரில் காட்டுக்கத்து கத்தி கூச்சல் போடுவது , வாயில் நுழையாத கேட்டறியாத கிலிக்கி மொழி பேசுவது (பரிசுத்த ஆவி உள்ள இறங்கிட்டாராமாம்) --நெருப்பால் சூடு வைத்தால் தெரியும் பரிசுத்த ஆவி எந்த மொழியில் கத்துவார் என்று , கையையும் காலையும் வலிப்பு வந்தவன் போல விலுக் விலுக் என்று இழுப்பது, இப்போது புதிதாக பப்பில் ஆடுவது போல் கலர் கலராக டிஸ்கோ விளக்குகள் எரிய நடுவில் ஆடுவது , டிவிடி வைத்து கிட்னி நோயை குணப்படுத்துவது, யேசுவுடன் ஸ்கைப்பில் கான்பிரன்ஸ் கால் பேசுவது, என்று இந்த அல்லோல கல்லோயாக்கள் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமில்லை. மற்ற மதத்தவரை சாத்தான்கள் என்பதும் ,வாதை உன் கூடாரத்தை அணுகாது என்று சொல்லி வாதையையே சப்பளை செய்வதுமாக இவர்களது அழிச்சாட்டியம் குறைந்தபாடில்லை, பாஸ்ட்டர் என்றால் கடைக்கண்ணால் கூட பார்க்கிறார்கள் இல்லை,குறைந்த பட்ச மரியாதை கூட இல்லை  என்று இப்போது  தெரிந்துவிட்டதால் ,கத்தோலிக்க பாதிரிகள் அணியும் வெள்ளை உடையை இப்போது அணியத்தொடங்கியிருக்கிறார்கள், பாதிரிகள் சண்டைக்கு வராமல் இருக்க ஒன்று இடுப்புப்பட்டியை மற்றைய பக்கத்தில் தொங்கவிட்டும் ,கண்ணுக்கு தெரியாத சிலுவை அடையாளத்தை அதில் வரைந்தும் 
தங்கள் வேறு என்று காட்ட முற்பட்டாலும் தூரத்திலிருந்து இருந்து பார்த்தால் இரண்டும் ஒன்று போல் தான் தெரியும்.

இவர்களது செயற்பாடுகளால் கத்தோலிக்க பாதிரிகளும் முழி பிதுங்கிப்போய் தான் உள்ளனர், கத்தோலிக்கர்களும் கூட்டம் கூட்டமாக இவர்களது சபைகளுக்கு  செல்வதால் பாதிரிகளும் இப்போது தேவாலயத்திற்குள் டான்ஸ் ஆடவேண்டிய கட்டாயத்தில்உள்ளனர்  ..

இங்கு கருத்து கூறும் சைவ மத சகோதர்களுக்கு நான் கூற விளைவது கிறீஸ்தவம்,கிறீஸ்தவர்கள்  என்று பொதுமைப்படுத்தி உங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்காதீர்கள் அது அனைத்து கிறீஸ்தவ மதத்தையும் சுட்டுவதால் உங்களுடன் புரிந்துணர்வின் இருக்கும் கத்தோலிக்க மற்றைய மதத்தினரும் காயப்படுத்தப்படுகின்றனர், இப்படியான சபைகளின் செயற்பாடுகளை குறிப்பிட்ட சபையின் பெயரை சொல்லி கருத்திடுங்கள்..நன்றி   

32 minutes ago, அக்னியஷ்த்ரா said:

மிகவும் நியாயமான கருத்துப் பதிவு அக்கினியஷ்த்ரா!

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நன்றி அக்னி,

தங்களுடய கருத்தை முற்று முழுதாக ஆதரிக்கிறேன். 👍

எனது கருத்தென்னவென்றால்..

சமயங்களிலுள்ல மூட நம்பிக்கைகள், சுரண்டல்கள், பித்தலாட்டங்கள் போன்றவற்றை தாராளமாக யாரும் விமர்சிக்கலாம் அல்லது கேள்விக்குட்படுத்தலாம். அதில் ஒரு பிழையும் இல்லை.

ஆனால் இன்னொரு சமயத்தவனை அவனது நம்பிக்கை காரணமாக இழிவுபடுதுவதனை முற்றாகத் தவிர்க்க வேண்டுகிறேன். ஏனென்றால் அவனும் சக தமிழனே. எங்களைப்போலவே அவனும் துன்பங்களை அனுபவித்திருப்பான் அல்லது அதிக இழப்பைச் சந்தித்திருப்பான். அவனது நம்பிக்கையின் காரணமாக அவனை இழிவுபடுத்தாதீர்கள். 

இது சகல சமயத்தவர்களுக்கும் பொருந்தும். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

இப்படி ஒழுங்காக இருந்த உறவில் குத்தி வெட்டி விளையாட தொடங்கியது இந்த புதுவரவு சபைகள்,
ஜெபிக்கிறோம் என்ற பெயரில் காட்டுக்கத்து கத்தி கூச்சல் போடுவது , வாயில் நுழையாத கேட்டறியாத கிலிக்கி மொழி பேசுவது (பரிசுத்த ஆவி உள்ள இறங்கிட்டாராமாம்) --நெருப்பால் சூடு வைத்தால் தெரியும் பரிசுத்த ஆவி எந்த மொழியில் கத்துவார் என்று , கையையும் காலையும் வலிப்பு வந்தவன் போல விலுக் விலுக் என்று இழுப்பது, இப்போது புதிதாக பப்பில் ஆடுவது போல் கலர் கலராக டிஸ்கோ விளக்குகள் எரிய நடுவில் ஆடுவது , டிவிடி வைத்து கிட்னி நோயை குணப்படுத்துவது, யேசுவுடன் ஸ்கைப்பில் கான்பிரன்ஸ் கால் பேசுவது, என்று இந்த அல்லோல கல்லோயாக்கள் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமில்லை. மற்ற மதத்தவரை சாத்தான்கள் என்பதும் ,வாதை உன் கூடாரத்தை அணுகாது என்று சொல்லி வாதையையே சப்பளை செய்வதுமாக இவர்களது அழிச்சாட்டியம் குறைந்தபாடில்லை, பாஸ்ட்டர் என்றால் கடைக்கண்ணால் கூட பார்க்கிறார்கள் இல்லை,குறைந்த பட்ச மரியாதை கூட இல்லை  என்று இப்போது  தெரிந்துவிட்டதால் ,கத்தோலிக்க பாதிரிகள் அணியும் வெள்ளை உடையை இப்போது அணியத்தொடங்கியிருக்கிறார்கள், பாதிரிகள் சண்டைக்கு வராமல் இருக்க ஒன்று இடுப்புப்பட்டியை மற்றைய பக்கத்தில் தொங்கவிட்டும் ,கண்ணுக்கு தெரியாத சிலுவை அடையாளத்தை அதில் வரைந்தும் 
தங்கள் வேறு என்று காட்ட முற்பட்டாலும் தூரத்திலிருந்து இருந்து பார்த்தால் இரண்டும் ஒன்று போல் தான் தெரியும்.

இவர்களது செயற்பாடுகளால் கத்தோலிக்க பாதிரிகளும் முழி பிதுங்கிப்போய் தான் உள்ளனர், கத்தோலிக்கர்களும் கூட்டம் கூட்டமாக இவர்களது சபைகளுக்கு  செல்வதால் பாதிரிகளும் இப்போது தேவாலயத்திற்குள் டான்ஸ் ஆடவேண்டிய கட்டாயத்தில்உள்ளனர்  ..

இங்கு கருத்து கூறும் சைவ மத சகோதர்களுக்கு நான் கூற விளைவது கிறீஸ்தவம்,கிறீஸ்தவர்கள்  என்று பொதுமைப்படுத்தி உங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்காதீர்கள் அது அனைத்து கிறீஸ்தவ மதத்தையும் சுட்டுவதால் உங்களுடன் புரிந்துணர்வின் இருக்கும் கத்தோலிக்க மற்றைய மதத்தினரும் காயப்படுத்தப்படுகின்றனர், இப்படியான சபைகளின் செயற்பாடுகளை குறிப்பிட்ட சபையின் பெயரை சொல்லி கருத்திடுங்கள்..நன்றி   

நன்றி அக்னியஷ்த்ரா உங்கள் ஆழமான கருத்திற்கு. நான் பள்ளிவாசலுக்கு மட்டுதான் போகவில்லை வழிபட.  மற்ற மதங்களை மதித்து நண்பர்களாக இன்னுமிருக்கிறோம். நீங்கள் சொன்னமாதிரி இடையில் வந்த இந்த சில கூட்டங்களினால்தான் இப்ப பிரச்சனைகள் கூட

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

நன்றி அக்னியஷ்த்ரா உங்கள் ஆழமான கருத்திற்கு. நான் பள்ளிவாசலுக்கு மட்டுதான் போகவில்லை வழிபட.  மற்ற மதங்களை மதித்து நண்பர்களாக இன்னுமிருக்கிறோம். நீங்கள் சொன்னமாதிரி இடையில் வந்த இந்த சில கூட்டங்களினால்தான் இப்ப பிரச்சனைகள் கூட

இல்லையா பின்ன உடையார் 
பாடசாலையில் காற்ச்சட்டை போடும் காலத்தில் வாணி விழா (பேச்சுவழக்கில் சரஸ்வதி பூசை என்றுதான் கூறுவோம் ) சிறப்பிக்க ,வேட்டி மற்றும் குறுத்தா அணிந்து ,மேடையில் உட்கார்ந்து மஹா கணபதிம் பாட்டு பாடி அந்த குழுவே முதற் பரிசு பெற்ற அனுபவத்தை சொல்லவா ...? 
மத பேதம் பார்க்காமல் எல்லோரும் காசு போட்டு கடலை ,அவல் மற்றும் பொங்கல் படைத்து அவலுக்கு சீனி காணாமல் போனதும்வீட்டிலிருந்து  வீட்டிலிருந்த சீனி டப்பாவை அபேஸ் பண்ணிவந்து அவலுக்குள் கொட்டி பகிர்ந்துண்டதை சொல்லவா...? 
அதே பாடசாலையில் ரவுசர் போடும் வயதில் மாணவத்தலைவனாக வாண்டுகளை கையில் குச்சியை வைத்துக்கொண்டு லைனில் ஒழுங்காக நின்று கடலை மற்றும் அவலை வாங்குமாறு மிரட்டிய அனுபவத்தை சொல்லவா...?
நண்பர்களுடன் ஒவ்வொருவருடமும் சென்று மகிழ்ந்த கோவில் திருவிழாக்களை சொல்லவா(அதிலும் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய திருவிழா மிகவும் பிரசித்தம் ) ...
நண்பன் அவனோட டாவை சைட் அடிக்க மட்டுநகர்  மாமாங்க கணபதியார் கடுப்பாகாமல் காவலுக்கு நிண்டதை சொல்லவா...? 
இப்படி எவ்வளவோ அனுபவங்களை தந்த எனது நண்பர்களையும் அவர்களது நம்பிக்கையையும்  யாரோ ஒருவன் சாத்தான்கள் என்றோ காட்டுமிராண்டி மூடநம்பிக்கை  என்றோ சொன்னால் அந்த மதத்தையும் அவனையும்  தூக்கியெறிவேனே யொழிய எனது நண்பர்களையும் அவர்களது நம்பிக்கையையும் காயப்படுத்தமாட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அக்னியஷ்த்ரா  அத்தனையும் உண்மை, பழைய நினைவுகளை மீட்டிவிட்டீர்கள், மானிப்பாய் அந்தோனியர் கோவில் திருவிழா, மருதடி பிள்ளையார் கோவில்....என்ன ஒற்றுமையாக இருந்தோம்.... அந்தக்காலம் ஒரு பொற்காலம். போன வருடம் ஊர் போயிருந்த போது பார்த்தேன்  இப்பவும் அங்கு ஒற்றுமையாக தான் இருக்கின்றார்கள் இந்த குழப்பும் புதிய கூட்டங்களை தவிர 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.