Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிவேதாவின் சமையல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு.

முதல்ல இனிப்பாத் தொடங்குவம்

                                                                                                                          கொக்கிஸ்

Image may contain: food

தேவையான பொருட்கள் :

பச்சை அரிசி ( long Grein Rice) - 1 Kg
சீனி - 100 - 200 g
தேங்காய்ப் பால் - 1 முழுத்தேங்காய் / 100 g தே .பால் பவுடர்
ஏலக்காய் / கறுவா - அளவானது
உப்பு - அரை மேசைக் கரண்டி
எண்ணெய் - பொரிக்க அளவானது
நிறம் - சிவப்பு /பச்சை/ மஞ்சள்  
அச்சு

செய்முறை :

அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவி நீரை வடியவிடவேண்டும். பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து, அரைத்ததை அரிதட்டால் அரித்து ஒரு பாத்திரத்தில் போடவேண்டும்.

அரிதட்டு இல்லாதவர் மிக நன்றாக குருணல் இன்றி அரைத்து எடுக்கவேண்டும். பின்னர் தேங்காய் துருவிப் பிழிந்து எடுத்த பால், சீனி இரண்டையும் ஒன்றாய்ப் போட்டு சீனி கரைந்தபின் அரிசிமா, ஏலக்காய்த் தூள் அல்லது கறுவாத்தூள் சிறிதளவு போட்டு கட்டிக் கூழ்ப் பதத்துக்குக் கரைக்க வேண்டும்.  

பின்னர் நீங்கள் பொரிப்பதற்குப் பயன்படுத்தும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேவையான எண்ணெய் ஊற்றி அச்சையும் பாத்திரத்தினுள் வைத்துவிடவேண்டும். எண்ணெய் கொதித்ததும் அடுப்பைக் கொஞ்சம் குறைத்துவிட்டு அச்சை எண்ணெயிலிருந்து எடுத்து மாவில் முழுதும் மூழ்காவண்ணம் வைக்க மா அச்சில் ஒட்டும். உடனே அதை எண்ணெயுள் வைக்கப் பெரிய ஆரம்பிக்கும். உடனே அச்சை எண்ணெயில் அசைக்க அச்சிலிருந்து மா களரும். சிறிது நேரத்தில் அதைப்பிரட்டி வெந்ததும் வெளியே எடுக்கவும்.

 பழக்கமற்ற அச்சு முதலில் களர  மறுக்கும் . இரண்டொரு தரம் செய்தபின் தட்டியவுடன் அச்சைவிட்டுக் களரும்.

Image may contain: plant

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • Replies 753
  • Views 89k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா
மிச்சம் மீதியும் தொடரட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளைக்கு ஒன்றுதான் அண்ணா.😀

படம்தான் சிறிதாக மாட்டேன் என்கிறது. தெரிந்தால் யாரும் வழி சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா மினக்கட்டு இருக்கிறீங்கள் ....... கொக்கிஸ் நன்றாக வந்திருக்கு சகோதரி.....அடுத்த பதார்த்தத்துக்காக ஆவலுடன்......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அச்சை ஒருக்காய் கடனாய் தருவியளோ???

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கிஸ் நல்லா வந்திருக்கு. செய்து 20 வருடங்களாகுது. அச்சும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒருமுறை, இதை செய்து சாப்பிட்ட  போது....
எனக்கு... வயித்தாலை, அடிச்சு...
அஞ்சு நாள்... ஆஸ்பத்திரியில் இருந்து, 
தப்பி வந்ததை.... நினைக்க,  பயங்கரமாய்.... இருந்தது 

***

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு கொக்கிஸ், ஊரில் சாப்பிட்டதை விட சிங்கள அன்ரியிடம் சாப்பிட்டது நல்ல சுவை

1 hour ago, MEERA said:

உந்த அச்சை ஒருக்காய் கடனாய் தருவியளோ???

அச்சு வீட்டில் அப்படியே புத்தம் புதிதாக இருக்கு,  USD 100/-  paypal க்கு அனுப்பிவிடுங்கள்,  இரண்டு கிழமையில் வீட்டு வாசலுக்கு அனுப்பிவிடுகின்றேன்😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

கொக்கிஸ் நல்லா வந்திருக்கு. செய்து 20 வருடங்களாகுது. அச்சும் இல்லை 

எது... ஆ...

பார்க்க 20 வருசத்துக்கு முன்னம் செய்த கொக்கிஸ் மாதிரிதான் இருக்குதோ?

அக்கா இப்ப தான் செய்து போட்டிருக்கிறா.... 😉

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

எது... ஆ...

பார்க்க 20 வருசத்துக்கு முன்னம் செய்த கொக்கிஸ் மாதிரிதான் இருக்குதோ?

அக்கா இப்ப தான் செய்து போட்டிருக்கிறா.... 😉

சுமே அக்கா இப்பதான் பொரிச்சிருக்கிறா. நான்தான் கடையசியாக 20 வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் செய்தேன். அச்சை அங்கேயே விட்டுட்டு வந்திட்டேன் .

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nilmini said:

சுமே அக்கா இப்பதான் பொரிச்சிருக்கிறா. நான்தான் கடையசியாக 20 வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் செய்தேன். அச்சை அங்கேயே விட்டுட்டு வந்திட்டேன் .

சரி... ஒரு கந்தர்மட போட்டி...

இன்னும் ஒரு வாரத்துக்குள், நியூஸிலாந்து போய், அந்த அச்சினை எடுத்துக்கொண்டு வந்தீர்கள் எண்டால், போற வாற விமான பயண செலவை, நானும், தமிழ்சிறியர் மற்றும் சுவியர் ஏற்றுக் கொள்கிறோம்...

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

சரி... ஒரு கந்தர்மட போட்டி...

இன்னும் ஒரு வாரத்துக்குள், நியூஸிலாந்து போய், அந்த அச்சினை எடுத்துக்கொண்டு வந்தீர்கள் எண்டால், போற வாற விமான பயண செலவை, நானும், தமிழ்சிறியர் மற்றும் சுவியர் ஏற்றுக் கொள்கிறோம்...

இது என்ன கந்தர்மட போட்டியா? இப்ப USA இருக்குற நிலைமைக்கு ஒரு நாட்டுக்கும் போகமுடியாது . கலைப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு.

முதல்ல இனிப்பாத் தொடங்குவம்

                                                                                                                          கொக்கிஸ்

Image may contain: food

தேவையான பொருட்கள் :

பச்சை அரிசி ( long Grein Rice) - 1 Kg
சீனி - 100 - 200 g
தேங்காய்ப் பால் - 1 முழுத்தேங்காய் / 100 g தே .பால் பவுடர்
ஏலக்காய் / கறுவா - அளவானது
உப்பு - அரை மேசைக் கரண்டி
எண்ணெய் - பொரிக்க அளவானது
நிறம் - சிவப்பு /பச்சை/ மஞ்சள்  
அச்சு

செய்முறை :

அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவி நீரை வடியவிடவேண்டும். பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து, அரைத்ததை அரிதட்டால் அரித்து ஒரு பாத்திரத்தில் போடவேண்டும்.

அரிதட்டு இல்லாதவர் மிக நன்றாக குருணல் இன்றி அரைத்து எடுக்கவேண்டும். பின்னர் தேங்காய் துருவிப் பிழிந்து எடுத்த பால், சீனி இரண்டையும் ஒன்றாய்ப் போட்டு சீனி கரைந்தபின் அரிசிமா, ஏலக்காய்த் தூள் அல்லது கறுவாத்தூள் சிறிதளவு போட்டு கட்டிக் கூழ்ப் பதத்துக்குக் கரைக்க வேண்டும்.  

பின்னர் நீங்கள் பொரிப்பதற்குப் பயன்படுத்தும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேவையான எண்ணெய் ஊற்றி அச்சையும் பாத்திரத்தினுள் வைத்துவிடவேண்டும். எண்ணெய் கொதித்ததும் அடுப்பைக் கொஞ்சம் குறைத்துவிட்டு அச்சை எண்ணெயிலிருந்து எடுத்து மாவில் முழுதும் மூழ்காவண்ணம் வைக்க மா அச்சில் ஒட்டும். உடனே அதை எண்ணெயுள் வைக்கப் பெரிய ஆரம்பிக்கும். உடனே அச்சை எண்ணெயில் அசைக்க அச்சிலிருந்து மா களரும். சிறிது நேரத்தில் அதைப்பிரட்டி வெந்ததும் வெளியே எடுக்கவும்.

 பழக்கமற்ற அச்சு முதலில் களர  மறுக்கும் . இரண்டொரு தரம் செய்தபின் தட்டியவுடன் அச்சைவிட்டுக் களரும்.

அதெல்லாம் சரி.... நிவேதா ஆரக்கா? மகளிண்ட பேரா இருக்குமோ எண்டு யோசிச்சன்...
 
1 minute ago, nilmini said:

இது என்ன கந்தர்மட போட்டியா? இப்ப USA இருக்குற நிலைமைக்கு ஒரு நாட்டுக்கும் போகமுடியாது . கலைப்பார்கள். 

அதுதானே போட்டியின் விசயமே... துணிந்து வெளிக்கிட்டு போய் எடுத்து வந்தால்... பயணச்செலவு தருவோம்.... 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் போட்ட படம் பல அளவுகளில்..!

ஏம்மா, இப்படி அச்சு முறுக்கை செய்து தொட்டியில் உரமா போட்டுவிட்டீர்கள்..? வீட்டில் யாரும் சாப்பிடவில்லையா..? 😋

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒவ்வொரு நாளைக்கு ஒன்றுதான் அண்ணா.😀

ஒரு நாளைக்கு ஒரு முறுக்குதானா..? 🙄

அதுக்கு மேலே சாப்பிட முடியாதா..? அவ்வளவு சுவையாகவா இருக்கு..? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

படம்தான் சிறிதாக மாட்டேன் என்கிறது. தெரிந்தால் யாரும் வழி சொல்லுங்கள்.

நீங்கள் இணக்கும் படத்தின் மீது சுட்டியால்(Mouse) இரண்டுமுறை தொடர்ந்து 'க்ளிக்' செய்தால்(Double click) கீழ்க்கண்ட பெட்டி(Pop up) வரும். அதில் நீங்கள் மாற்ற விரும்பும் அளவை(Pixels) குறிப்பிட்டு முடிவில் அப்டேட்(Update) செய்தால் குறிப்பிட்ட அளவிற்கு படம் மாறி தெரியும்.

சரி.. சரி.. ரொம்பவும் முழிக்காமல், ஆலோசனை சொன்னதற்கு 10 K பவுண்ட்ஸ் அனுப்பவும். ஒங்க லண்டனுக்கு வந்து சுத்தி பார்த்ததில் ரொம்ப செலவாயிடிச்சி..! :(:)

test.jpg

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

நல்லா மினக்கட்டு இருக்கிறீங்கள் ....... கொக்கிஸ் நன்றாக வந்திருக்கு சகோதரி.....அடுத்த பதார்த்தத்துக்காக ஆவலுடன்......!   👍

வீட்டில நின்மதியா இருக்க விடாயள் போல 🤣 

18 hours ago, MEERA said:

உந்த அச்சை ஒருக்காய் கடனாய் தருவியளோ???

கடனாய்த் தர ஏலாது.ஒரு 100 பவுன்ஸ் தந்திட்டு எடுத்துக்கொண்டு போங்கோ. திருப்பித் தந்தால் பணம் திருப்பிக் கிடைக்கும். துலைச்சுப் போட்டன் எண்டு சொன்னால் நான் கோவிக்கமாட்ட்டான்.   😃

18 hours ago, nilmini said:

கொக்கிஸ் நல்லா வந்திருக்கு. செய்து 20 வருடங்களாகுது. அச்சும் இல்லை 

உத்து ருசி என்றாலும் மினைக்கெட்ட வேலை.சும்மாதான் இருக்கிறியள் செய்துதாங்கோ என்று பிள்ளைகள் கேட்டதால செய்தது.😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

அதெல்லாம் சரி.... நிவேதா ஆரக்கா? மகளிண்ட பேரா இருக்குமோ எண்டு யோசிச்சன்...
 
நல்லா யோசிப்பியள் 😎

17 hours ago, Nathamuni said:

எது... ஆ...

பார்க்க 20 வருசத்துக்கு முன்னம் செய்த கொக்கிஸ் மாதிரிதான் இருக்குதோ?

அக்கா இப்ப தான் செய்து போட்டிருக்கிறா.... 😉

நீங்கள் முடிஞ்சு விட ஏலாது 😃

17 hours ago, உடையார் said:

நல்லாயிருக்கு கொக்கிஸ், ஊரில் சாப்பிட்டதை விட சிங்கள அன்ரியிடம் சாப்பிட்டது நல்ல சுவை

அச்சு வீட்டில் அப்படியே புத்தம் புதிதாக இருக்கு,  USD 100/-  paypal க்கு அனுப்பிவிடுங்கள்,  இரண்டு கிழமையில் வீட்டு வாசலுக்கு அனுப்பிவிடுகின்றேன்😃

ஊரில் கனக்க உண்டிருப்பீர்கள். சிங்கள அன்ரி அளவாத் தந்தியிருப்பா. ருசிச்சிருக்கும்.

15 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் போட்ட படம் பல அளவுகளில்..!

ஏம்மா, இப்படி அச்சு முறுக்கை செய்து தொட்டியில் உரமா போட்டுவிட்டீர்கள்..? வீட்டில் யாரும் சாப்பிடவில்லையா..? 😋

ஒரு நாளைக்கு ஒரு முறுக்குதானா..? 🙄

அதுக்கு மேலே சாப்பிட முடியாதா..? அவ்வளவு சுவையாகவா இருக்கு..? 🤣

😂 ஒரு நாளைக்கு ஒரு ரெசிப்பி என்றேன். உங்கள் ஊரிலுமிதை செய்வார்கள் தானே அண்ணா ?

15 hours ago, ராசவன்னியன் said:

சரி.. சரி.. ரொம்பவும் முழிக்காமல், ஆலோசனை சொன்னதற்கு 10 K பவுண்ட்ஸ் அனுப்பவும். ஒங்க லண்டனுக்கு வந்து சுத்தி பார்த்ததில் ரொம்ப செலவாயிடிச்சி..! :(:)

நான் கேட்டது இலவச ஆலோசனை. லண்டன் வந்து சந்திக்காமல் ஓடியதுக்கு நீங்கள் தான் காசு தரணுமாக்கும். 😀நன்றி அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொட்டியில் வைத்தது காக்கா குருவி சாப்பிட

18 hours ago, தமிழ் சிறி said:

முன்பு ஒருமுறை, இதை செய்து சாப்பிட்ட  போது....
எனக்கு... வயித்தாலை, அடிச்சு...
அஞ்சு நாள்... ஆஸ்பத்திரியில் இருந்து, 
தப்பி வந்ததை.... நினைக்க,  பயங்கரமாய்.... இருந்தது 

***

உங்கள் மனைவி மருந்து ஏதும் மாவுடன் கலந்துவிட்டாரோ???? அரிசிமாவு தேங்காய்ப்  பாலும் நோயாளியைக் கூட ஒன்றும் செய்யாதே.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

முன்பு ஒருமுறை, இதை செய்து சாப்பிட்ட  போது....
எனக்கு... வயித்தாலை, அடிச்சு...
அஞ்சு நாள்... ஆஸ்பத்திரியில் இருந்து, 
தப்பி வந்ததை.... நினைக்க,  பயங்கரமாய்.... இருந்தது 

***

அப்ப அண்ணனுக்கு ஒரு பார்சல் அனுப்ப ரெடியாகுங்க அக்கா

நன்றாகத்தான் இருக்கிறது அக்கா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sauce

1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப அண்ணனுக்கு ஒரு பார்சல் அனுப்ப ரெடியாகுங்க அக்கா

நன்றாகத்தான் இருக்கிறது அக்கா

ஆஸ்பத்திரி வரை போனவர் இனிமேல் வாயில வைப்பார் எண்டு நினைக்கிறியளே  🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவி நீரை வடியவிடவேண்டும்

சுமேரியர், இன்னுமா செய்தித்தாள்களை சமையலுக்கு பயன்படுத்துகிறீர்கள். மிக மிக தவறான விடயம்.

என் வயதுக்கு எண்ணைப் பணியாரம் எல்லாம் சரிவராது. வேறு நல்ல சமையல் குறிப்புகளைப் போடும் போது பார்ககலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆஸ்பத்திரி வரை போனவர் இனிமேல் வாயில வைப்பார் எண்டு நினைக்கிறியளே  🤣

அதுவும் சரிதான் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kavi arunasalam said:

சுமேரியர், இன்னுமா செய்தித்தாள்களை சமையலுக்கு பயன்படுத்துகிறீர்கள். மிக மிக தவறான விடயம்.

என் வயதுக்கு எண்ணைப் பணியாரம் எல்லாம் சரிவராது. வேறு நல்ல சமையல் குறிப்புகளைப் போடும் போது பார்ககலாம்.

செய்தித் தாளின் மேல் Kitchen ரிசு விரித்துத்தான் போடுவது. அநேகமாக எல்லோரும் அப்படித்தான் செய்வர் என்று எண்ணிப் போடவில்லை அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிவேதாவின் Sauce சோஸ் செய்முறை

Image may contain: food

ராராஜவன்னியன் அண்ணா நீங்கள் கூறியதுபோலப் படத்தை எடிட் செய்ய எந்த option உம் காட்டுதில்லை

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நிவேதாவின் Sauce சோஸ் செய்முறை

Image may contain: food

ராராஜவன்னியன் அண்ணா நீங்கள் கூறியதுபோலப் படத்தை எடிட் செய்ய எந்த option உம் காட்டுதில்லை

நீங்கள் இப்படி  எல்லாம் செய்து பயமுறுத்தினால், ஒரு ஒப்சனும் வராதே.😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.