Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிந்தால் அப்பாவி முஸ்லிம்களுக்காகவும், சுமந்திரன் போராட வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
- பாறுக் ஷிஹான் -
 
ரஞ்சன் ராமநாயக்க  போல் எத்தனையோ தமிழ் மக்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை வெளியில் கொண்டுவர போராடலாம் .ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ப்பதற்காக   உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு   அந்தப் பிரச்சினைகளை   பெரும்பாலும் பேசுவதை காண முடியவில்லை என என‌ உல‌மா க‌ட்சி தலைவர்  முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.
 
அம்பாறை மாவட்டம்  கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி காரியாலயத்தில்  பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு சனிக்கிழமை(25) இரவு இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
இது ப‌ற்றி  மேலும் குறிப்பிட்ட‌தாவ‌து
 
அண்மனை காலங்களாக  இந்த அரசாங்கத்தை ஒரு பாரிய பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் பல விமர்சனங்களை முன்னாள் பா.உ  சுமந்திரன்  செய்து கொண்டு வருகிறார் எனபதை  நாங்கள் பார்க்கின்றோம். அது தேர்தல் முறையாகட்டும் அல்லது கொரோணா தொற்று காரணமாக நடைமுறை படுத்தியுள்ள ஊரடங்கு சட்டமுறையாகட்டும் இவை  அனைத்து விடயத்திலும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  பாரிய பல குற்றச்சாட்டுக்களையும் பாரிய பல விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டிருப்பது உண்மையிலேயே. இந்த அரசாங்கத்தை ஆதரித்த  ஒரு ஆதரவுக் கட்சி என்ற வகையில் நாங்கள் மன வருத்தப் படுகிறோம். ஏனெனில்  ஒரு விமர்சன தெரிகின்ற போதும் அதற்கான காலசூழலும் இருக்கிறது என பார்க்கின்றோம். இந்தக் கொரோனா தொற்றால் வல்லாதிக்க  அமெரிக்கா கூட என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் நமது நாட்டின் ஜனாதிபதி மிகவும் கடுமையான சட்டங்களையும் நிருவாகங்களையும்  ஏற்படுத்தி எவ்வளவு தூரம் இந்த வைரஸை  கட்டுப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
 
 இந்நிலையில்  அரசாங்கத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு  உள்ளாகும் நிலைமையில்  சுமந்திரன் அவர்கள் கருத்து தெரிவித்து தெரிவித்திருப்பது ஒரு மனிதாபிமான ஒரு செயலாக நாங்கள் காணவில்லை. இவ்வாறான விடயங்களை  அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ப்பதற்காக வேண்டி தான்.ஆனால்  அந்தப் பிரச்சினைகளை சுமந்திரன் பெரும்பாலும் பேசுவதை காண முடியவில்லை.  ஆனால் இவர் சில தீய சக்திகளுக்கு விலை போனவர் போன்று தீய சக்திகளுக்கு ஆதரவாக வேண்டுமென்றே அரசாங்கத்தை  குழப்ப வேண்டும் என்பது போன்று பேசிக் கொண்டு இருக்கின்றார்.  இவர் அடிக்கடி சஜித் பிரேமதாசவின் கட்சி உறுப்பினர்களுக்கு அவர் மிகவும் ஆதரவாக இருப்பது போன்று தெரிகிறது. ரன்ஜன்  ராமநாயக்கவிற்கு தன்னுடைய  அனைத்தை தியாகங்களையும் செய்து கொண்டிருக்கின்றார் ரஞ்சன் ராமநாயக்க  போல் எத்தனையோ தமிழ் மக்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை வெளியில் கொண்டுவர போராடலாம் .
 
அடிக்கடி சஜித் பிரேமதாசவின் கட்சி உறுப்பினர்களுக்கு அவர் மிகவும் ஆதரவாக இருப்பதாக காண்கின்றோம். ரஞ்சன் ராமநாயக்காவிற்காக வேண்டி தன்னுடைய அனைத்து தியாகத்தையும் செய்ய கூடியவராக இருக்கின்றார் .அதே போல் எத்தனையோ தமிழ் மக்கள் சிறைச்சாலையிலிருந்து வெளியில் வர முடியாமல் இருக்கிறார்கள் அவர்களை வெளி கொண்டுவர முயற்சி செய்யலாம்.ரஞ்சன் ராமநாயக்காவிற்கு முண்டியடித்து செயற்படுவதை நிறுத்தி தமிழ் மக்களுக்காக செயற்பட வேண்டும் முடிந்தால் அப்பாவி முஸ்லிம் மக்களுக்காக போராடலாம் அதை விடுத்து ஏகாதிபத்திய கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட கூடாது என குறிப்பிட்டார்.
  • Replies 54
  • Views 4.9k
  • Created
  • Last Reply
2 hours ago, colomban said:

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ப்பதற்காக வேண்டி தான்.ஆனால்  அந்தப் பிரச்சினைகளை சுமந்திரன் பெரும்பாலும் பேசுவதை காண முடியவில்லை.  ஆனால் இவர் சில தீய சக்திகளுக்கு விலை போனவர் போன்று தீய சக்திகளுக்கு ஆதரவாக வேண்டுமென்றே அரசாங்கத்தை  குழப்ப வேண்டும் என்பது போன்று பேசிக் கொண்டு இருக்கின்றார்.  இவர் அடிக்கடி சஜித் பிரேமதாசவின் கட்சி உறுப்பினர்களுக்கு அவர் மிகவும் ஆதரவாக இருப்பது போன்று தெரிகிறது.

பெரும்பாலான தாயக மக்களின் கேள்வியும் இதுவாகத்தான் இருக்கும். 

அதற்கான காரணத்தை ஐயா சுமந்திரன் தான் தெளிவுபடுத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு இருந்ததும் நாசம் ஆக்கி நடு தெரிவிலை விட்டது முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு போனவர்கள் என்பது தான் உலகறிந்தது. சுமேந்திரன் தமிழ்மக்களின் அரசியலுக்கு அன்று வரவும் இல்லை, அவரை மக்கள் வாக்களித்து தெரிந்துவிடவும் இல்லை. இப்படி இட்டுகதைகளை எழுதலாமா? இப்படியே போனால் நீங்கள்தான் தமிழனுக்கு இருந்ததும் நாசம் ஆக்கி நடு தெரிவிலை விட்டவர் என்று யாராவது உங்களைப்போல கட்டுக்கதைகளை பரப்ப ஆரம்பித்துவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

சுமந்திரன் தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன?

11 hours ago, ampanai said:

பெரும்பாலான தாயக மக்களின் கேள்வியும் இதுவாகத்தான் இருக்கும். 

அதற்கான காரணத்தை ஐயா சுமந்திரன் தான் தெளிவுபடுத்த வேண்டும். 

இங்கு இந்த கருத்தை தெரிவித்திருப்பவர் முஸ்லீம் மக்களால் நிராகரிக்கப்படட உலமா கட்சியை சேர்ந்த சிவப்பு தொப்பிக்காரன் முபாரக் என்பவர்தான்। இவர் ஒரு நாளும் தமிழனுக்கு சார்பாக எதையும் செய்தது இல்லை। இவர் அநேகமாக தமிழர் விரோத கருத்துக்களை எழுதும் ஒருவர்தான்।

சில முஸ்லீம் பெயரை வைத்துள்ளவர்களை தன்னுடன் வைத்திருக்க வேண்டுமென்று ராஜபக்சே தன்னுடன் வைத்திருக்கிறார்। முஸ்லீம் இணையத்தளத்தில் பார்த்தால் இவருக்கு விரோதமான கருத்துக்களையும் நிறையவே பார்க்கலாம்। இவர் ஒருவர்தான் அவரது கட்சியில் இருப்பதாகவும் எழுதுவார்கள்।

அது சரி இவருடைய நோக்கம் தமிழ் , முஸ்லீம் மக்களை பாத்து காக்க  வேண்டுமென்றோ , உதவி செய்வதோ என்பதல்ல। இது ஆடு நனையுதென்று ஓநாய் கவலைப்படட கதைதான்। இவருக்கு அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும் , தான் நன்மைகளை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்।

இவரது செய்தியை சரியாக விளங்கிக்கொண்டாள் இது புரியும்। நான் சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்குவதாக சிலர் எழுதலாம்। இங்கு சுமந்திரனை தாக்கி எழுதுபவர்கள் அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதட்காகவேயன்றி வேறொன்றுமில்லை। மற்றப்படி சுமந்திரன் இன்னும் பாதிக்கப்படட மக்களுக்காக போராடலாம்। 

3 minutes ago, Vankalayan said:

அது சரி இவருடைய நோக்கம் தமிழ் , முஸ்லீம் மக்களை பாத்து காக்க  வேண்டுமென்றோ , உதவி செய்வதோ என்பதல்ல। இது ஆடு நனையுதென்று ஓநாய் கவலைப்படட கதைதான்। இவருக்கு அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும் , தான் நன்மைகளை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்।

தமிழ் மக்கள் கேட்க்கும் கேள்வி உல‌மா க‌ட்சிக்கு அப்பால் பட்டது. 

ஒரு இனத்தை பிரதிநிதித்துவம் செய்து சுமந்திரனும் மற்றைய தலைவர்களும் என்ன செய்கிறார்கள் என்பதே. 

குறிப்பாக சுமந்திரன் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு வாதாடுவது அவரின் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்துகின்றது. ஆனால், ஒரு தமிழ் மக்கள் பிரதிநிதியாக இருந்தவண்ணம் இவ்வாறு செய்வது தவறு.  

19 minutes ago, ampanai said:

தமிழ் மக்கள் தங்களுக்கு உதவி கேட்டு அவர் செய்யாமல் விட்ட்து என்ன என்பதை எழுதினால் நல்லது। இந்து ஆலயங்களுக்காக அவர் நீதிமன்றம் ஏறவில்லையா? எற மறுத்தாரா? தமிழ் மக்களுக்காக நீதிமன்றம் எற மறுத்தாரா? அவரும் ஒரு சாதாரண அரசியல்வாதிதான்। அனல் என்ன வாதாடும் திறமை உண்டு। மற்ற அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்। என் அவர்களைப்பற்றி யாரும் எழுதுவதில்லை? காய்க்கிற மரத்துக்குத்தான் கல்லடி கிடைக்கும்। 

சிங்கள அரசியல்வாதிகள் எல்லோரையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது। இங்கும் அவர் தமிழ் மக்களுக்கு எதிராக நீதிமன்றம் ஏறவில்லை। எனவே இதை பிழை என்று கூற முடியாது। இந்த அரசுக்கு எதிராகத்தான் கோர்ட் படி ஏறினார்। இதனால் இப்போது அரசுக்குத்தான் பிரச்சினை। நிலைமையை புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்।

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ampanai said:

அவர் சிங்கள அரசியல் வியாதிகளுக்கு ஆதரவாக வாதாடுவதில் எனக்கும்  மாற்றுக்கருத்தில்லை ,
ஆனால் யாரெல்லாம் சும்மை பார்த்து கேள்விகேப்பது என்று வரை முறை உண்டெல்லவா,
அமீர் கக்கா போய் அமெரிக்காவை கண்டுபிடித்த இந்த நட்டுக்களண்ட அரை லூசெல்லாம் சுமந்திரனுக்கு என்ன செய்யவேண்டும் என்று பாடமெடுப்பது பரிதாபம், ஒரு வகையில் சும்முக்கு கரடியே காறித்துப்பிய மாதிரிதான்   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, kalyani said:

சுமந்திரன் தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன?

1. சுமேந்திரன் இந்து தமிழ் மக்கள் சார்பாக இரண்டு பிரபலமான வழக்குகளில் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார் - அவை எவை என்று இணைய செய்திகளில் படித்து அறிந்து கொள்ளுங்கள். 

2. சட்டசபை உறுப்பினராக, சட்டவாக்கத்தில் தமிழ் மக்கள் சார்பான அவரது பணிகளை இலங்கை பாராளுமன்ற ஹன்சார்ட் அறிக்கைகளில் படித்து அறிந்து கொள்ளுங்கள் - இவையும் இணைய மூலம் கிடைக்கும்.

இவற்றை கண்டுபிடிக்கும் ஆற்றல் இல்லாவிட்டால், அல்லது படித்தும் புரியாவிட்டால், பாராளுமன்ற உறுப்பினரின் சேவைகள் பற்றியும் சட்டத்தரணிகளின் சேவைகள் பற்றியும் நீங்ள் அறிந்து கொள்ளும் சாத்தியம் இல்லை. இவையே சுமேந்திரனின் சேவைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சுத்து  மாத்து  தமிழருக்கு செய்த நாலு நல்ல வேலை என்ன ?

சுருக்கமா உங்களால் சொல்லமுட்டியவிட்டால் நான் சொல்லவா அவரால் தமிழ் மக்கள் பட்ட வேதனையை ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

இங்கு சுமந்திரனை தாக்கி எழுதுபவர்கள் அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதட்காகவேயன்றி வேறொன்றுமில்லை।

லண்டனில் உள்ள தமிழ் கிறிஸ்த்தவர்கள் அவரை கூப்பிடுகிறார்கள் பாடிகாட் இல்லாமல் அவர்களின் கேள்விக்கு பதில் தருமாறு கேட்க்கிறார்கள்  ஆள் வருவரா ?

அதன் பின் அரசியலுக்கு நிரந்தர ஓய்வுதான் ஐயாவுக்கு 

சும்மா கருத்தாட முடியாட்டி சமயத்தை கோத்து  விடுறது யாழில் கூடிப்போச்சுது .

5 hours ago, Vankalayan said:

இவரது செய்தியை சரியாக விளங்கிக்கொண்டாள் இது புரியும்। நான் சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்குவதாக சிலர் எழுதலாம்। இங்கு சுமந்திரனை தாக்கி எழுதுபவர்கள் அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதட்காகவேயன்றி வேறொன்றுமில்லை। மற்றப்படி சுமந்திரன் இன்னும் பாதிக்கப்படட மக்களுக்காக போராடலாம்। 

அப்படியானால் சம்பந்தன்,மாவை,டக்ளஸ்,கருணா,பிள்ளையான் எல்லம் என்ன மதம், இவர்களை எவ்வள்ளவு கேவலமாக விமர்சிக்கப்படுகின்றனர்... அப்பொழுது மதம் எங்கே போனது.

அதே போல் S J V செல்வநாயகம், அன்டன் பாலசிங்கம், ஜோசேப் பரராஜசிங்கம், தற்போதைய சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்றோர் ஏன் விமர்சிக்கப்படுவதில்லை..?  ஆர்னோல்ட் எப்படி யாழ் நகர முதல்வரானார் ? என்பதனியும் விளக்கினால் உபயோகமாக இருக்கும்.

அதெப்படி சைவ அரசியல்வாதியை விமர்சிக்கும் போதும் கிறிஸ்த்தவ அரசியல் வாதியை கொண்டாடும் போதும் வராத மதம் எப்படி கிறிஸ்த்தவ அரசியல்வாதியை விமர்சிக்கும் போது மட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

தடித்த வார்த்தைகள் ; சண்டை வேண்டா.. 👍

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Vankalayan said:

தமிழ் மக்கள் தங்களுக்கு உதவி கேட்டு அவர் செய்யாமல் விட்ட்து என்ன என்பதை எழுதினால் நல்லது। இந்து ஆலயங்களுக்காக அவர் நீதிமன்றம் ஏறவில்லையா? எற மறுத்தாரா? தமிழ் மக்களுக்காக நீதிமன்றம் எற மறுத்தாரா? அவரும் ஒரு சாதாரண அரசியல்வாதிதான்। அனல் என்ன வாதாடும் திறமை உண்டு। மற்ற அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்। என் அவர்களைப்பற்றி யாரும் எழுதுவதில்லை? காய்க்கிற மரத்துக்குத்தான் கல்லடி கிடைக்கும்। 

சிங்கள அரசியல்வாதிகள் எல்லோரையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது। இங்கும் அவர் தமிழ் மக்களுக்கு எதிராக நீதிமன்றம் ஏறவில்லை। எனவே இதை பிழை என்று கூற முடியாது। இந்த அரசுக்கு எதிராகத்தான் கோர்ட் படி ஏறினார்। இதனால் இப்போது அரசுக்குத்தான் பிரச்சினை। நிலைமையை புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்।

அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் தோல்வியடைந்தால், அதற்குப் பொறுப்பேற்று அரசியலில் இருந்து விலகும் எண்ணத்துடன் தாம் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

2018 சுமந்திரன் கூறியது

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

இங்கு இந்த கருத்தை தெரிவித்திருப்பவர் முஸ்லீம் மக்களால் நிராகரிக்கப்படட உலமா கட்சியை சேர்ந்த சிவப்பு தொப்பிக்காரன் முபாரக் என்பவர்தான்। இவர் ஒரு நாளும் தமிழனுக்கு சார்பாக எதையும் செய்தது இல்லை। இவர் அநேகமாக தமிழர் விரோத கருத்துக்களை எழுதும் ஒருவர்தான்।

சில முஸ்லீம் பெயரை வைத்துள்ளவர்களை தன்னுடன் வைத்திருக்க வேண்டுமென்று ராஜபக்சே தன்னுடன் வைத்திருக்கிறார்। முஸ்லீம் இணையத்தளத்தில் பார்த்தால் இவருக்கு விரோதமான கருத்துக்களையும் நிறையவே பார்க்கலாம்। இவர் ஒருவர்தான் அவரது கட்சியில் இருப்பதாகவும் எழுதுவார்கள்।

அது சரி இவருடைய நோக்கம் தமிழ் , முஸ்லீம் மக்களை பாத்து காக்க  வேண்டுமென்றோ , உதவி செய்வதோ என்பதல்ல। இது ஆடு நனையுதென்று ஓநாய் கவலைப்படட கதைதான்। இவருக்கு அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும் , தான் நன்மைகளை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்।

இவரது செய்தியை சரியாக விளங்கிக்கொண்டாள் இது புரியும்। நான் சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்குவதாக சிலர் எழுதலாம்। இங்கு சுமந்திரனை தாக்கி எழுதுபவர்கள் அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதட்காகவேயன்றி வேறொன்றுமில்லை। மற்றப்படி சுமந்திரன் இன்னும் பாதிக்கப்படட மக்களுக்காக போராடலாம்। 

ஒட்டு மொத்த தமிழ் கட்சிகளையும் ஆட்களையும் தான் இங்கே விமர்சிக்கிறார்கள் அதற்குள் சுமந்திரனை ஏன் நீங்க தூக்கி பிடிக்கிறீங்க நீங்க அவன் சைவமாக இருந்தாலும் கிறிஸ்த்தவனாக இருந்தாலும் விமர்சிப்போம் . ஒருவேளை அந்தாள் கிறிஸ்த்தவம் எனும் போதும் விமர்சிக்கும் போது  கொஞ்சம் உங்களுக்கு எரிகிறது போல 

பதிலுக்கு மாவை ,சம்மந்தர் , சிறி ,இவர்களை எவ்வளவேனும் நீங்கள் விமர்சிக்கலாம்  எங்களுக்கு ஒன்றுமே ஆவப்போவதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்பிடி சொல்லு மனே எண்ட ராசா ...சிங்கக்குட்டி ....😂😝

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒட்டு மொத்த தமிழ் கட்சிகளையும் ஆட்களையும் தான் இங்கே விமர்சிக்கிறார்கள்

சுமேந்திரனின் பெயர் மட்டும் தானே இங்கே எழுதுப்படுகிறது?  ... ஒட்டு மொத்த தமிழ் கட்சிகளும் ஆட்களும் சுமேந்திரன் மட்டும் தானா?

18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அதற்குள் சுமந்திரனை ஏன் நீங்க தூக்கி பிடிக்கிறீங்க

சுமந்திரனை ஏன் நீங்க தூக்கி பிடிக்கிறீங்க?

23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பதிலுக்கு மாவை ,சம்மந்தர் , சிறி ,இவர்களை எவ்வளவேனும் நீங்கள் விமர்சிக்கலாம் 

நீங்கள் அவர்களை விமரிசிக்க மாட்டீர்கள், சமயம் தானே காரணம்?

1 minute ago, கற்பகதரு said:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

சுமேந்திரனின் பெயர் மட்டும் தானே இங்கே எழுதுப்படுகிறது?  ... ஒட்டு மொத்த தமிழ் கட்சிகளும் ஆட்களும் சுமேந்திரன் மட்டும் தானா?

2 minutes ago, கற்பகதரு said:

சுமேந்திரனின் பெயர் மட்டும் தானே இங்கே எழுதுப்படுகிறது?  ... ஒட்டு மொத்த தமிழ் கட்சிகளும் ஆட்களும் சுமேந்திரன் மட்டும் தானா?

சுமந்திரனை ஏன் நீங்க தூக்கி பிடிக்கிறீங்க?

நீங்கள் அவர்களை விமரிசிக்க மாட்டீர்கள், சமயம் தானே காரணம்?

நான் விமர்சித்து கன இடங்களில் எழுதி இருக்கிறேன் நீங்கள் பார்க்கல போல அவன் எந்த சமயமாக இருந்தாலும் சரி விமர்சிப்பேன் 

கூட்டமைப்பில் உள்ள எந்த அரசியல் வாதியை எனக்கு பிடியாது பிடிக்காது அதில் சுத்துமாத்து சுமந்த்ரன் என்ன வெடி  மாவை என்ன பொய் சம்பந்தர் என்ன சிறிதரன் என்ன எல்லோரும் சந்தர்ப்ப பிழைப்பு வாதிகளே 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரை சுமந்திரன் பலருக்கு உதவி செய்து கொண்டுதான் இருக்கின்றார். 
சிங்கள நாட்டில் வாழ்ந்து கொண்டு தனிஒரு மனிதனாக சிங்களவனை எதிர்த்து தமிழிழம் பெற்று தர அவரால் முடியாது. உண்மையில் ஒரு ஆணியை கூட கழற்றமுடியாது. இதுதான் யதார்த்தம்

விசிலடிச்சான் குஞ்சுககுக்கு இது புரியாது 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கூட்டமைப்பில் உள்ள எந்த அரசியல் வாதியை எனக்கு பிடியாது பிடிக்காது அதில் சுத்துமாத்து சுமந்த்ரன் என்ன வெடி  மாவை என்ன பொய் சம்பந்தர் என்ன சிறிதரன் என்ன

இப்போ Mr .கற்பகம் அடுத்த கேள்வியுடன் குதிப்பார் பாருங்கோ ...எல்லோருக்கும் அடை மொழி பெயர் வைத்த நீங்கள் ஏன் சிறிக்கு பெயர் வைக்கவில்லை அவர் இந்துவென்பதாலா என்று ...

  • கருத்துக்கள உறவுகள்
Just now, அக்னியஷ்த்ரா said:

இப்போ Mr .கற்பகம் அடுத்த கேள்வியுடன் குதிப்பார் பாருங்கோ ...எல்லோருக்கும் அடை மொழி பெயர் வைத்த நீங்கள் ஏன் சிறிக்கு பெயர் வைக்கவில்லை அவர் இந்துவென்பதாலா என்று ...

யெப்பா பச்சை இல்ல குத்த சிறி  அடுத்த தலைவர் 

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அதில் சுத்துமாத்து சுமந்த்ரன் என்ன வெடி  மாவை என்ன பொய் சம்பந்தர் என்ன சிறிதரன் என்ன எல்லோரும் சந்தர்ப்ப பிழைப்பு வாதிகளே 

பொருத்தமான அடைமொழிகள்
தனி எப்பவும் தனித்துவமானவர்  

8 hours ago, அக்னியஷ்த்ரா said:

அவர் சிங்கள அரசியல் வியாதிகளுக்கு ஆதரவாக வாதாடுவதில் எனக்கும்  மாற்றுக்கருத்தில்லை ,

அவ்வாறு சிங்கள அரசியல் தலைமைகளுடன் இணைந்து செயல்படுவதில் நன்மைகள் இருக்கும் என நம்புவதில் எமது தலமைகள் வல்லவர்கள்.

எமது மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் - தந்தை செல்வா ! 

இந்த வழக்கு அரசியலா அல்லது அவரது தொழிலா என்பதை வைத்தே நாம் கருத்து கூறவேண்டும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

நான் அறிந்தவரை சுமந்திரன் பலருக்கு உதவி செய்து கொண்டுதான் இருக்கின்றார். 
சிங்கள நாட்டில் வாழ்ந்து கொண்டு தனிஒரு மனிதனாக சிங்களவனை எதிர்த்து தமிழிழம் பெற்று தர அவரால் முடியாது. உண்மையில் ஒரு ஆணியை கூட கழற்றமுடியாது. இதுதான் யதார்த்தம்

விசிலடிச்சான் குஞ்சுககுக்கு இது புரியாது 

மொன்றாகலை சிறைச்சலையில் பயங்கரவாதியென பொய் சொல்லப்பட்டு ஓர் தமிழர் ஒருவர் இருக்கிறார் என நினைக்கிறன் இவரைப்போல பல அப்பாவிகள் இருக்கிறார்கள் முடிந்தால் இதே சுமந்து வழக்கு பேசி பிணையிலோ அல்லது நிரந்தரமாக விடுவிக்க முடியுமா தமிழ் மக்களுக்கு எது தேவையோ அதை முதல் செய்ய சொல்லுங்கோ 

பிறகு புரியுதா புரியலை என்று பார்ப்போம்  ஆக புடுங்கிற ஆணியெல்லாம் சுவரில் இல்லாத ஆணிகள் 😀

4 hours ago, Kali said:

பொருத்தமான அடைமொழிகள்
தனி எப்பவும் தனித்துவமானவர்  

சும்மா சம்பிள்தானே  இது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.