Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரில் ஒரு வீடு வேணும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

பிள்ளைகளின் திருமணத்துக்கு முன்னர் நாங்களும் இளந்தாரியாக இருக்கும் போது (அந்த நேரம் 62 இளைப்பாறும் வயது இப்போ 65.4 வயது.இன்னும் ஒன்றரை வருடம்)இருந்த எண்ணங்கள் வேறு.இப்போ நியூயோர்க்கில் இருக்கும் பேரன் அப்பப்பா பிளீஸ் அப்பப்பா வாங்கோ எனும் போது மனதைப் பிழிகிறது.இந்த நிலையில் எப்படி சாத்தியமாக போகிறது?

போர‌ன் உங்க‌ட‌ ம‌ன‌சை இப்ப‌வே கொள்ளை அடித்து விட்டார் / 

இப்ப‌ தானே கைக்குள் உல‌க‌ம் , ஒருக்கா வைப்ப‌ர‌ வாஸ்சாப்பை த‌ட்டினா ஊரில் இருந்த‌ ப‌டியே நீயூயோக்கில் என்ன‌ ந‌ட‌க்குது என்று பார்க்க‌லாம் 😁/

என‌க்கும் ஒரு ஆசை தான் ஊரில் வீடு க‌ட்ட‌னும் என்று / சிங்க‌ள‌ ஓனாய்க‌ளுக்கு கீழ‌ அடிமை வாழ்க்கை வாழ‌ என‌க்கு பிடிக்காது 😡/
 த‌லைவ‌ரின் பாதுகாப்பில் வாழ்ந்த‌ கால‌ம் எப்ப‌வும் இன்ப‌ம் 😍🙏😘

  • Replies 277
  • Views 41.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக புலம்பெயர்ந்து வாழும் பலருக்குள் இருக்கும் அவா. எங்களுடைய சந்ததியைத் தொடராத வேர்மடிக்கு ஏங்கும் வாழ்வு. எங்களில் பலருக்கு அவர்கள் விருப்புகள் பூர்த்தியடையாமலே விடுபடப்போகும் விதியாக அமைந்துவிட்டது தாய்நாட்டுவாழ்வு.     விடாப்பிடியாக சிலருக்கு கடின வாழ்வில் அமைதியைத் தேடுவதும் கிடைக்கத்தான் செய்கிறது. நீண்ட காலமாக யாழ் இணையத்தில் இதுபற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். நேற்றைய காலத்தில் நாங்கள் தீர்மானித்த எதிர்காலத்திற்கு எதிர்ப்பக்கமாகவே காலம் உருண்டோடிக்கொண்டிருக்கிறது. சென்றடைய வேண்டிய இடத்தை அடையாமல் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்குள்ளேயே தேங்கவேண்டிய கட்டாயத்தால் பல புலம்பெயர்ந்தவர்கள் பின்வாங்கி தாயகம் சென்று வாழ்தல் பற்றியே பேசும் சக்தியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையை எதிர் கொண்டும் ஊரில் வீடுகட்ட எத்தனிக்கும் சுமேயை பாராட்டாமல் நகர முடியவில்லை. வீடுகட்டுதல் என்பது அங்கு வாழாதபோது இலகுவானதல்ல. புலம்பெர்ந்த நாடுகளில் ஒவ்வொருவரும் வாழ்வைத் தொலைத்துத்தான் வளத்தை எடுக்கிறார்கள். முதுமை கோடிட்டபின்னர் இழந்த வாழ்வை எண்ணி ஏங்குவது அனைவருக்கும் பொருந்தும். இங்குதான் நமக்கான என்ற தேடல் தொடங்குகிறோம். இருக்கும் சொற்ப வளத்தைக் கொண்டு முதுமையை செதுக்க எத்தனிக்கிறோம். பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றமே பலருக்கும் மிஞ்சிவிடுகிறது. துணிந்து பெருங்காரியங்களில் இறங்க முடியாமை. மற்றவர்களில் தங்கியிருக்கும் நிலமை என நிலை மாறிவிடுகிறது. ஒரு விடயம் செய்ய எண்ணினாலும் சூழல் சாதகமாக அமைவதில்லை. இன்னும் சிறிது காலத்தில் சுமேயும் அந்நிலைக்குள் அகப்பட்டுவிடுவார். அதற்குப்பின்னர் சுமேயால் தன் சுய எண்ணங்களை ஈடேற்றுவது கடினம். இப்போது சுமேயால் முடியும். மேலே பல நண்பர்கள் நன்றையும் தீதையும் தத்தம் அநுபவங்களையும் எழுதி உள்ளார்கள். உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்வழி செல்லுங்கள். மனம் கொண்டதே மாளிகை.

கடினவாழ்வு கண்டு அமைதி கிடைப்பது வரம்.

நாளை என்னுடைய பேரப்பிள்ளைகள் வேர்மடி தேடும்போது வெறுமையாகிவிடக்கூடாது என்பதற்காக

spacer.pngspacer.png

நிலவேறிய கிழக்கு வான் என்வீட்டு மொடடைமாடியில் இருந்து

spacer.png

அந்திசாயும் தெற்கு முகம்

spacer.png

சூரியன் விடைபெறும் மேற்கு எல்லை

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

 2017
A9-DBFBE3-7-FE3-4-A14-9027-28621-AE76776

2018

5-FD171-E6-394-C-4338-BDDD-2-B8392076699

EE01-C8-AF-852-A-4343-A9-B5-9-C35-AFCE57

7165-A5-A4-A447-467-A-88-A2-B9-A43-D70-B
 
திருகோணமலையில்....

120960-FD-D1-AB-4757-90-AE-5545-C3000-F7
75-CD7797-4-C3-D-4469-A785-109-A754-A9-B
 
54-D7-EDE4-06-DD-4-A11-B27-D-FDA6583-B22

Kitchen 

EA9-C38-CC-527-F-46-D4-89-E3-3-E8-B95-BC

3D

DE4-F0733-7-F3-B-4-EA9-94-F6-64-AC1-BCFA
 
A4-EBEF8-C-7162-4-E22-8636-3-A1-F9-C3-CD

F3531719-5752-4-BD7-A303-7-CB1003-CFA41.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

66750210_10156286190656551_1407589928270வாவ் சகாரா வீடு அந்த மாதிரி இருக்கு.மனமார்ந்த வாழ்த்துக்கள்.

5FD171E6-394C-4338-BDDD-2B8392076699
மீரா அடுக்கு மாடி இரண்டு வீடு ஒன்றான மாதிரி இருக்கு.
சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா.. மீரா உங்கள் வீடுகள் சூப்பர்.

யாரால் இவை அமைக்கப்பட்டன.. மொத்த செலவினத்தின் மட்டத் தொகை..  என்ற விபரம் பகிர்ந்து கொண்டால்.. நவீன மனைகளை அமைக்க விரும்பும் யாழ் உறவுகளுக்கும் உதவும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இரு வீட்டினும் வெளிப்புற வடிவமைப்புகள் நன்றாக உள்ளன. 

Floor Plan ஐ பகிர்ந்தால் அனைவரும் பயன்பெறுவர் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியான திட்டமிடலில் அழகான வீடுகள்......வாழ்த்துக்கள்.....!   💐

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா & மீரா உங்கள் வீடுகள் வடிவாக அமைந்துள்ளீர்கள், மனமார்ந்த வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இரு வீட்டினும் வெளிப்புற வடிவமைப்புகள் நன்றாக உள்ளன. 

Floor Plan ஐ பகிர்ந்தால் அனைவரும் பயன்பெறுவர் என எண்ணுகிறேன்.

இணைத்துள்ளேன் அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MEERA said:

இணைத்துள்ளேன் அண்ணா..

மீரா  நல்ல திட்டமிட்டு நன்றாக வடிவமைத்துள்ளீர்கள், பிள்ளைகள் நிம்மதியாக ஓடி விளையாட நல்ல கற்றோட்டமுள்ள வீடு, தப்பித்தவறி வாடகைக்கு விட்டுவிடதீர்கள் பழுதாக்கிவிடுவார்கள், சிலர் airbnb மூலம் வாடகைக்கு விடுகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

மீரா  நல்ல திட்டமிட்டு நன்றாக வடிவமைத்துள்ளீர்கள், பிள்ளைகள் நிம்மதியாக ஓடி விளையாட நல்ல கற்றோட்டமுள்ள வீடு, தப்பித்தவறி வாடகைக்கு விட்டுவிடதீர்கள் பழுதாக்கிவிடுவார்கள், சிலர் airbnb மூலம் வாடகைக்கு விடுகின்றார்கள்

நன்றி அண்ணா.. இந்த வீட்டில் மனைவியின் சகோதரி இருக்கின்றார். வீட்டை வடிவமைத்ததே இரு குடும்பமும் ஒன்றாக இருப்பதற்கு..

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, MEERA said:

நன்றி அண்ணா.. இந்த வீட்டில் மனைவியின் சகோதரி இருக்கின்றார். வீட்டை வடிவமைத்ததே இரு குடும்பமும் ஒன்றாக இருப்பதற்கு..

ஓ, மிகவும் நல்ல விடயம், பாதுகாப்பும் கூட, வீட்டை சோலையாக மற்றினால் சொர்க்கம் தான்.

அண்ணன் தம்பி ஒரே வீட்டிலிருப்பது மிகி மிகி கஷ்டம், ஆனா சகோதரிகள் ஒற்றுமையாக இருப்பார்கள், ஏனென்றால் ஆண்கள் நாங்கள் ரெம்ப ரெம்ப நல்லவர்கள் அனுசரித்து போவதில் 😎

  • கருத்துக்கள உறவுகள்

21 minutes ago, உடையார் said:

ஓ, மிகவும் நல்ல விடயம், பாதுகாப்பும் கூட, வீட்டை சோலையாக மற்றினால் சொர்க்கம் தான்.

அண்ணன் தம்பி ஒரே வீட்டிலிருப்பது மிகி மிகி கஷ்டம், ஆனா சகோதரிகள் ஒற்றுமையாக இருப்பார்கள், ஏனென்றால் ஆண்கள் நாங்கள் ரெம்ப ரெம்ப நல்லவர்கள் அனுசரித்து போவதில் 😎

தற்போது இதுதான் பிரச்சனையாக உள்ளது. “காணி முழுக்க பிடித்து வீட்டை கட்டினால் நான் எப்படி மரங்கள் வைப்பது “ என்று மனைவியின் சகோதரி ஒரே தொண தொணப்பு...

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

தற்போது இதுதான் பிரச்சனையாக உள்ளது. “காணி முழுக்க பிடித்து வீட்டை கட்டினால் நான் எப்படி மரங்கள் வைப்பது “ என்று மனைவியின் சகோதரி ஒரே தொண தொணப்பு...

third floor garden வைக்கலாம் தானே. தகுந்த பொறியியல் ஆலோசனையின் பின். 

Second Floor Planting_3 - Colin Cooney Designs

33 Pool Houses with Contemporary Patio | Outdoor gardens, Deck ...

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

third floor garden வைக்கலாம் தானே. தகுந்த பொறியியல் ஆலோசனையின் பின். 

Second Floor Planting_3 - Colin Cooney Designs

33 Pool Houses with Contemporary Patio | Outdoor gardens, Deck ...

உண்மை தான்... தற்போது மகன் தான் ஓடி விளையாட இடம் வேண்டுமாம், 

தீயாகங்களை பற்றியும் கதைப்போம் காற்று வராத பெட்டிகளையும் கட்டுவோம் என்ன ஞாயமிது, வீடில்லாதோர் ஒருபுறம் வீட்டுக்குமேல் வீடுகட்டுவோர் மறுபுறம், ஏற்றதாழ்வுகளை நல்லா கூட்டுங்கோ, தமிழ் தேசியம் நல்லா விளங்கும்! என்ன கொடுமையிது

உடையது விளம்பேல்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Knowthyself said:

தீயாகங்களை பற்றியும் கதைப்போம் காற்று வராத பெட்டிகளையும் கட்டுவோம் என்ன ஞாயமிது, வீடில்லாதோர் ஒருபுறம் வீட்டுக்குமேல் வீடுகட்டுவோர் மறுபுறம், ஏற்றதாழ்வுகளை நல்லா கூட்டுங்கோ, தமிழ் தேசியம் நல்லா விளங்கும்! என்ன கொடுமையிது

உடையது விளம்பேல்

ஏற்றத்தாழ்வு வசிக்கும் இடத்தில் இல்லை நம் மனதில் தான்...

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Knowthyself said:

தீயாகங்களை பற்றியும் கதைப்போம் காற்று வராத பெட்டிகளையும் கட்டுவோம் என்ன ஞாயமிது, வீடில்லாதோர் ஒருபுறம் வீட்டுக்குமேல் வீடுகட்டுவோர் மறுபுறம், ஏற்றதாழ்வுகளை நல்லா கூட்டுங்கோ, தமிழ் தேசியம் நல்லா விளங்கும்! என்ன கொடுமையிது

உடையது விளம்பேல்

எல்லாருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதில்  மாற்றுக்கருத்தில்லை.

மேலும் அவரவர் நீதியான தர்மமான முயற்சிக்கு ஏற்ப அடிப்படைக்கு அப்பால் அவரவர் தமக்கென அமைத்துக் கொள்ளும் வசதிகளுக்கும் வழிவிட வேண்டும். பொறாமை கொள்ளக் கூடாது. 

தமிழ் தேசியம் மாடி வீடு கட்டக்கூடாது என்றும் சொல்லவில்லை.. அதேவேளை குடிசைக்குள் பசி இருப்பதை சும்மா பார்த்துக் கொண்டிருப்பதையும்.. ஏற்றுக் கொள்ளவில்லை.

Edited by nedukkalapoovan

what?

ஏழைகளாக்கபட்டவர்கள் வாய்மூடி கண்மூடி போகவேண்டுமென்று ஆசைப்படுகிறார்களா இந்த கூ..டிகள், இலங்கைக்கு தேவையில்லாத, குளிரூட்டி போட்டு வீடுகட்ட யார் அனுமதி தந்தார்களோ

9 minutes ago, nedukkalapoovan said:

எல்லாருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதில்  மாற்றுக்கருத்தில்லை.

மேலும் அவரவர் நீதியான தர்மமான முயற்சிக்கு ஏற்ப அடிப்படைக்கு அப்பால் அவரவர் தமக்கென அமைத்துக் கொள்ளும் வசதிகளுக்கும் வழிவிட வேண்டும். பொறாமை கொள்ளக் கூடாது. 

தமிழ் தேசியம் மாடி வீடு கட்டக்கூடாது என்றும் சொல்லவில்லை.. அதேவேளை குடிசைக்குள் பசி இருப்பதை சும்மா பார்த்துக் கொண்டிருப்பதையும்.. ஏற்றுக் கொள்ளவில்லை.

நாங்கள் பொறாமை கொள்கிறோமா? இவர்களை பார்த்து கோவப்படுகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Knowthyself said:

what?

ஏழைகளாக்கபட்டவர்கள் வாய்மூடி கண்மூடி போகவேண்டுமென்று ஆசைப்படுகிறார்களா இந்த கூ..டிகள், இலங்கைக்கு தேவையில்லாத, குளிரூட்டி போட்டு வீடுகட்ட யார் அனுமதி தந்தார்களோ

நாங்கள் பொறாமை கொள்கிறோமா? இவர்களை பார்த்து கோவப்படுகிறோம்

நீங்கள் கொக்குவில் பக்கப் போனதில்லையா, இதென்ன வீடு, இதைவிட எத்தனையோ வசதிகளுடன் வீடு கட்டியுள்ளார்கள்.  KKS road இல் எத்தனை கல்யாண மண்டபங்கள் இங்குள்ள வசதியைவிட நன்றாக கட்டியுள்ளார்கள், பார்க்கவே சந்தோஷமாக இருக்கு.

ஒரு வீடு முன்னேறினால், ஊர் முன்னேறும், ஊர் முன்னேற நம் சமுதாயம் இன்னும் முன்னேறும், புதிய வீடுகள் கட்டுவதால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள், இப்படியே பல நன்மைகள் ஊருக்கும் அதனை அண்டியுள்ள பலருக்கும், பாராட்ட வேண்டும் மனதார, இவர்கள் அங்கு போயிருந்தால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புக்கள்....

என்னால் ஊருக்கு போக முடியவில்லை, இவர்களைப்பார்த்து பொறமையாக இருக்கு.... வெளிநாட்டில் உள்ளவர்கள் உதவி மட்டும்தான் செய்யனுமென்று ஏதிர்பாக்கின்றார்களா நம்மூர் மக்கள், இல்லவே இல்லை, இது உங்கள் மன குமுறல் மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Knowthyself said:

தீயாகங்களை பற்றியும் கதைப்போம் காற்று வராத பெட்டிகளையும் கட்டுவோம் என்ன ஞாயமிது, வீடில்லாதோர் ஒருபுறம் வீட்டுக்குமேல் வீடுகட்டுவோர் மறுபுறம், ஏற்றதாழ்வுகளை நல்லா கூட்டுங்கோ, தமிழ் தேசியம் நல்லா விளங்கும்! என்ன கொடுமையிது

உடையது விளம்பேல்

ஹலோ வ‌ண‌க்க‌ம் /

அமெரிக்கா நாட்டில் இருப்ப‌வ‌ர் ஊரில் 75ஜ‌ந்து ல‌ச்ச‌த்துக்கு வீட்டை க‌ட்டி போட்டு , 75ல‌ச்ச‌த்துக்கு க‌ட்டின‌ வீட்டை குறுகிய‌ கால‌த்தில் இடித்து போட்டு அந்த‌ இட‌த்தில் ஒரு கோடி 50ல‌ச்ச‌த்துக்கு வீடு க‌ட்டி இருக்கிறார் / உங்க‌ட‌ இந்த‌ ப‌திவு அப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு பொருந்தும் , யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் ஊரில் வீடு க‌ட்டினாலும் அத‌ ந‌ல்ல‌ நோக்க‌த்துட‌ன் க‌ட்டி இருக்கின‌ம் 👏🙏

த‌மிழ் தேசிய‌த்துக்கும் வீடு க‌ட்டுவ‌துக்கும் என்ன‌ஜ‌யா ச‌ம்ம‌ந்த‌ம் 😉

இந்த‌ திரியில் இருப்ப‌வ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ன் ஓட‌ கை குலுக்கி ஜ‌ல்ரா அடிச்சா உங்க‌ளின் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌டுகிறேன் 😉

உற‌வுக‌ள் க‌ஸ்ர‌ப் ப‌ட்டு உழைத்த‌ காசில் அவ‌ர்க‌ளின் ஊர்க‌ளில் அவ‌ர்க‌ளுக்கு பிடித்த‌ மாதிரி வீடு க‌ட்டுவ‌து அவ‌ர்க‌ளுடைய‌ விருப்ப‌ம் அதில் ஒருத‌ரும் த‌லையிட‌ ஏலாது 😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

சகாரா அக்கா.. மீரா உங்கள் வீடுகள் சூப்பர்.

யாரால் இவை அமைக்கப்பட்டன.. மொத்த செலவினத்தின் மட்டத் தொகை..  என்ற விபரம் பகிர்ந்து கொண்டால்.. நவீன மனைகளை அமைக்க விரும்பும் யாழ் உறவுகளுக்கும் உதவும். 

நெடுக்கு என்னுடைய வீடு எந்த நிறுவனத்தைக் கொண்டும் கட்டமைக்கப்படவில்லை. குத்து மதிப்பாக என்னுடைய எண்ணங்களை படமாக வரைந்து சதுர அடிகளையும் தீர்மானித்து அங்கு அனுப்பி அறிந்த ராஸ்மன் இருவரிடம் வரைந்து எடுத்து கட்டிடக்கலை அறிந்த உறவினர் ஒருவர் ஊடாக தொடர்புகளை சிறு சிறு குழுக்களாக உருவாக்கி அங்கு வாழும் எனது சகோதர் ஊடாக கட்டியது. தளம் தூண்கள் அத்திவார கனதி என்பனவற்றிற்கு தனிப்பட்ட முறையில் இஞ்சினியரிங்கோடு சம்பந்தப்பட்ட ஒருவர் கட்டடக்கலை நிபுணருக்கு ஊதியத்தோடான உதவி செய்தார். தனிப்பட்ட வேலை வாய்ப்பாக பலருக்கு அமைந்தது.

1984 ஆம் ஆண்டு சிங்கள இராணுத்தால் எரிக்கப்பட்ட வீடு

பின்னர் திருத்தி அமைக்கப்பட்டது மீளவும் 87 ஆம் ஆண்டு ஒபரேசன் லிபரேசன் காலத்தில் இலங்கை இராணுவத்தால் சேதப்படுத்தப்பட்டது. மீளவும் அவ்வாண்டே பல வெடிப்புகளூடாக சீரமைக்கப்பட்டு வாழ்விடமானது அதற்குப் பின்னர் மீளவும்1992 இல் இலங்கை வான்படையின் பொம்மர் அடியில் சீரிழந்தது. அந்தக்கால வீடு பிறந்து வளர்ந்த வீடு அம்மாவின் இறப்பிற்கு பின்னர் பாட்டன் வழிச்சொத்தாக என் அண்ணன்களால் எனக்கு கையளிக்கப்பட்டது. அலங்கோலமாக ஒருவாயாக இருந்த என் பிறந்தகத்தை மீள மீள புனரமைக்கப்பட்டதால் வீடே நேர்த்தியின்றி சிதறிக்கிடந்தது. எனக்கு வீட்டைத்தந்ததால் என் சகோதரர்களாலும் அதனை மேம்படுத்தமுடியவில்லை. அதனை பெற்றுக் கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. நான் அங்கு வரவேண்டும் வாழவேண்டும் என்பதே இன்று வரைக்கும் அவர்களுடைய எதிர்பார்ப்பாகவும் என் சந்ததியின் உறவுக்கொடியை ஊரோடு வலிமையாக வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவும் என்னுடையவற்றை மிகவும் வாஞ்சையோடு வைத்திருக்கிறார்கள். என் முப்பாட்டன் தேடியவற்றை காக்கவேண்டிய கடப்பாடு எனக்கும் இருக்கிறது என் சந்ததிக்கும் தொடர்வதற்கான வழியை வைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Knowthyself said:

 இலங்கைக்கு தேவையில்லாத, குளிரூட்டி போட்டு வீடுகட்ட யார் அனுமதி தந்தார்களோ

பெரும் காணிகளில் தனித்த வீடுகள், விசாலமான வீடுகள் , சாளரங்கள் இடைவெளிகள் என்பனவற்றிற்கு நகரசபைகள் குளிரூட்டிகள் அற்ற நிலையில் வீடுகட்டுவதற்கான அநுமதியை வழங்குகின்றன. குறுகிய காணி, நெருக்கமான எல்லைச்சுவர்கள் ,விசாலமில்லாத அறைகள், காற்றோட்டத்தை இலகு ஆக்க முடியாத சாளர வடிவங்கள் என்பனவற்றுக்கு நகரசபைகள் அநுமதியை மறுக்கின்றன. அவ்விடத்தில் வீடு கட்டுவதாக இருந்தால் குளிரூட்டிகள் படங்களில் காட்டப்பட்டால் மாத்திரமே வீடு கட்டுவதற்கான அநுமதி கிடைக்கிறது.

ஒரு வீடு கட்டுவதற்கு முறையே வீதியின் நடுவிலிருந்து 36 அடிகள் பின் தள்ளியே வீட்டின் முகப்பு அமைய வேண்டும். மற்றைய சுற்று எல்லைச் சுவர்களில் இருந்து குறைந்தபட்சம்   6அடிகள் உள் ஒதுங்கியே வீடு இருக்கவேண்டும் என்பது கட்டாய விதி.

Edited by வல்வை சகாறா

On 14/5/2020 at 19:23, nilmini said:

எனக்கு Airbnb  க்கு  கொடுக்கும் ஐடியா இருக்கு. அதுக்கு மேற்பார்வை பார்க்க ஆக்கள் இருந்தால் மட்டுமே சரிவரும்.

அதற்கு வீடு மிக நல்ல நிலையிலும் நல்ல வசதிகளோடையும் இருக்க வேணும்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kali said:

அதற்கு வீடு மிக நல்ல நிலையிலும் நல்ல வசதிகளோடையும் இருக்க வேணும்

Airbnb இன் வெற்றியே பலவிதமான தரங்களில், சூழலில் வீடுகள் இருப்பதுதான். வீட்டை பற்றி உண்மையான தகவல்களை மட்டுமே போடவேணும்.  வீட்டின் வசதிக்கேற்ப  வாடை, மக்களின் தேவைக்கேற்ப அல்லது வசதிக்கேற்ப வீடு. அவ்வவுதான்.  பொதுவாகவே எல்லோரும் சுத்தத்தை விரும்புவார்கள். எனவே சுத்தமான இடமாக  இருக்கவேணும். அத்துடன் rules and regulations எல்லாம்   website யிலேயே போட்டுவிடவேணும். வாடகைக்கு இருப்பவர்கள் அதை கடைப்பிடிக்காவிட்டால் அவர்களின் ரேட்டிங் குறையும். யாரும் பிறகு வீடு கொடுக்க மாட்டார்கள்.  Airbnb இன்  முக்கிய பிரச்னை  ஆக்கள் மாறுவதுக்கு இடையில் சுத்தம் செய்தல் மற்றும் வீடு பராமரிப்பு. 

Edited by nilmini

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.