Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

இவ்வளவு பேர் இறந்ததுக்கு முக்கியமான காரணமும் இருக்கு நாறல் வெண்ணெயில் செய்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு அவர்கள் எங்கு சென்றாலும் கூடவே அந்த மனம் அவர்களை காட்டி குடுத்து கொண்டு இருந்தது .திரும்ப திரும்ப வடிவேலு கொண்டையை மறைக்காமல் அடிவாங்குவதை போல் வாங்கி கட்டினவர்கள் .

இந்தியன் ஆமி, கும்மிருட்டில்... பதுங்கிப் பதுங்கி வந்தாலும், அந்த மணத்தை கட்டாக்காலி நாய்கள் இரண்டு கிலோ மீற்றருக்கு முன்பே மோப்பம் பிடித்து குலைக்கத் தொடங்கி விடுமாம்.

இதனால்... பெடியள் உசாராகி, சணல் அடி வாங்கிக் கொண்டு போவார்களாம். 😂

  • Replies 76
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

இது புர‌ளி மாதிரி தெரியுது சிறி அண்ணா , அப்போது நான் சிறுவ‌ன் எதுக்கும் ச‌கோத‌ர‌ர் நெடுங்ஸ் விள‌ங்க‌  ப‌டுத்தினா ந‌ல்ல‌ம் இருக்கும் சிறி அண்ணா / 

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி , இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இப்ப‌ தான் கேள்வி ப‌டுறேன் ச‌கோத‌ரா ☺/ 

http://pulikalinkuralradio.com/uploads/idhalgal/V_P_17.pdf

இந்த லிங்கில் முழு வரலாறும் உள்ளது. பக்கம் 10 ஐ வாசியுங்கள்.

 மேலும்.. இந்த இராட்சத விமானம்.. சீனத்தயாரிப்பு வை-12 என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அது வை-8 தான்.

 In 1987 the air force acquired Shaanxi Y-8s and would later use them for bombing, until 1992 when one Y-8 crashed during a bombing mission, when all bombing using transport aircraft were stopped.

https://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Air_Force

ஏனெனில்.. நாங்க இந்த விமானத்தை குண்டு போடும் போது அவதானித்தது உண்டு. அதுக்கு 4 இயந்திரங்கள் இருக்கும். நாலு வால் வரும் பின்னால். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

நன்றி ச‌கோத‌ரா , கோட்டை தாக்குத‌ல் ப‌ற்றிய‌ முழு விப‌ர‌மும் இதில் இருக்கு 🙏 /

20200528-132840.png

கண் க‌ண்ட‌ தெய்வ‌ங்க‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தியன் ஆமி, கும்மிருட்டில்... பதுங்கிப் பதுங்கி வந்தாலும், அந்த மணத்தை கட்டாக்காலி நாய்கள் இரண்டு கிலோ மீற்றருக்கு முன்பே மோப்பம் பிடித்து குலைக்கத் தொடங்கி விடுமாம்.

இதனால்... பெடியள் உசாராகி, சணல் அடி வாங்கிக் கொண்டு போவார்களாம். 😂

அவர்களின் வியர்வை நாத்தம் மூக்கினுள் ஒருவிதமான அரிப்பு மனத்தை  கொண்டு வரும் அதிகாலையில் அம்புஸ் எடுத்து இருப்பினம் பாடத்துக்கு போகிற பொடியள் கண்டு பிடித்து விடுவான்கள்  செய்தி கொண்டு போகும் கிழடு க்கு வந்து இருக்கும் அதிகாரியின் பெயர் கூட துல்லியமாய் தகவல் போகும் பிறகென்ன பிரவுன் lmg ரோட்டில் இழுபட ஓடுவினம் நாய் கட்டும்  சங்கிலியால் ஆயுதங்களை தங்கள் இடுப்பில் கொழுவி இருப்பினம் விழுற அடியில் பலதடவை வீதிகளில் இழுபட ஓடுவது வாடிக்கை அப்படி ஓடி துலைந்து  புலிகளிடம் மாட்டுப்படுவினம் ஒரு நாள் யுத்த நிறுத்தம் வலிகாமம் பக்கத்தில் சின்ன பிள்ள விளையாட்டு போல் கைதி  பரிமாற்றமும் நடக்கும் அப்படி நடக்கையில் பிரம்படியில்  ஜேம்ஸ் ர் எந்த ஆயுதம் மூலம் டாங்கியை அடித்தவர் என்று பலமுறை கேட்பினம் காரணம் ரஷ்யகாரன் rpg  போன்றவைகளால் அதை உடைக்க முடியாது என்று ஏமாத்தி வித்து  போட்டான் .😄

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா துல்பனை காணம்.

சமாதானம் செய்ய வந்த விருந்தாளிகளுக்கு, இந்த சாத்து சாத்தி அனுப்பினதை சரி எண்டுறீங்களோ எண்டு நிற்பார்...:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிந்திய ஆமியின்ரை நாத்தம் தாங்கேலாது எண்டு கனபேர் சொல்ல கேள்விப்பட்டுருக்கிறன். :grin:

4 hours ago, Nathamuni said:

எங்கப்பா துல்பனை காணம்.

சமாதானம் செய்ய வந்த விருந்தாளிகளுக்கு, இந்த சாத்து சாத்தி அனுப்பினதை சரி எண்டுறீங்களோ எண்டு நிற்பார்...:grin:

இல்லை நாதமுனி நான் அப்படி எண்டைக்குமே சொல்லவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும் யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளின் உயர்மட்ட தளபதிகள் யாரும் இப்போது உயிருடன்  இருந்திருந்தால் தமது விடுதலை இலக்கை அடையாத நிலையில் இத்தனை பேரைக் கொன்றோம், இத்தனை பேரை அங்கவீனர் ஆக்கினோம் என்பதை பெருமையுடன்  கூறியும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு கூறப்படுவதை ரசித்தும்   இருக்க மாட்டார்கள். ஏனென்றால் பொதுவாக யுத்தங்களில் வென்ற தரப்புக்களே இத்தனை பேரை அங்கவீனர் ஆக்கினோம் என்பதை பெருமையாக சொல்வதில்லை. 

ஆனால் கலரியில் இருந்து ஸ்கோர்  பார்தது, கேட்டு விசிலசிச்ச நாங்கள்  பெருமையா அதைச் சொல்லலாம் நடத்துங்கோ நீங்க. நானும் உங்களோட சேர்ந்து பெருமை பேசுறன். அப்ப பிறகு சொல்லுங்கோ....என்ன நடந்தது........

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் எமது வெற்றிகளை.. தோல்விகளை நாம் பதியாமல்.. தோற்றுவிட்டோம் என்பதற்காக வரலாறே வேண்டாம் எனும் நிலை என்பது எமக்காகப் போராடியவர்களையும் தியாகங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமன். அத்தோடு எமது போராட்ட நியாயங்களையும் புதைக்கிறோம்.

இது போராடியவர்களுக்கு மட்டுமல்ல.. இந்தப் போராட்டத்திற்காக... அதன் விளைவாக உயிர்கொடுத்தோர் அனைவருக்கும்.. செய்யப்படும் வரலாற்று மறைப்பே தவிர வேறில்லை.

எமது இனம்.. எந்த சர்வதேசத் தயவும் இன்றி ஆயுதம் ஏந்திப் போராடித் தோற்றது. அதன் போராட்டத்தில் நியாயம் உண்டு. அவற்றை எல்லாம் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும்.. நாம் தோற்று விட்டோம் என்பதற்காக.. எல்லாம் மறக்கப்படனும் என்றும் இல்லை. எமது வெற்றிகளை பேசுவது பெருமை அல்ல. தோல்விகளை பேசுவது கீழ்மையும் அல்ல. பேசாமல் விடுவது தான் வரலாற்றுத் துரோகம். எமது போராட்ட நிகழ்வுகள்.. நியாயங்கள் பதிவு செய்யப்படுதல் அவசியம். 

ஹிந்தியப் படைகள் வந்த நோக்கத்தில் தோற்றன என்பதற்காக அவர்கள்   எதையும் முழுமையாக மறைக்கவில்லை. தமது படைகளின் தியாகத்தை வரலாறாக்கித் தான் வைக்கின்றனர்.  சிங்களப் படைகள் அப்படி. சிங்களப் படைகள் தோற்ற களங்களும் உண்டு. அவையும் எழுதப்பட்டுத்தான் இருக்கின்றன. 

மகாபாரதத்தை எடுத்தால்.. பாண்டவர்கள் வென்ற களத்தை விட தோற்ற களம் தான் அதிகம். அதற்காக அது எழுதப்படாது விடப்படவில்லை. அது ஒரு இதிகாச போரியல் வாழ்வியல் தத்துவக் கதையாக இருப்பினும்.. அதில் கூட சொல்லப்பட வேண்டிய நியாயங்கள் சொல்லப்பட்டுத்தான் உள்ளது.  ஆனால்.. நிஜமான எமது போராட்டத்தில் தோற்றோம் என்பதற்காக... எமது ஆயுதப் போராட்ட தர்மத்தை மறைக்கனும் என்றில்லை.  அதன் நிகழ்வுகளை பதியக் கூடாது என்பது அபந்தம். ஏனெனில் உண்மையில்.. தமிழ் மக்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டிருந்தாலும். எனவே வரலாறு உள்ளபடிக்கு எழுதப்பட வேண்டும். மறைக்கவோ.. மறக்கவோ பட வேண்டியதில்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

K. Nat­war Singh, in his mem­oirs, has said that In­dia lost 15,000 sol­diers for an un­wanted and un­nec­es­sary in­ter­ven­tion by Ra­jiv Gandhi. Sadly, most of them were Sikhs. It will not be wrong to say that Sikhs were used as can­non fod­der by In­dia, per­haps to pit one mar­tial race against an­other and to also score his per­sonal vendetta against the Sikhs, as most of the IPKF com­prised Sikh bat­tal­ions.

https://www.theworldsikhnews.com/skeletons-in-rajiv-gandhis-cupboard-sri-lanka-ipkf-sikhs/

தங்கடை  இன  ஆட்க்கள்  இந்த தேவையற்ற யுத்தத்தில் இறந்ததை பற்றி இப்பத்தன்னும் வாய் துறந்தார் .

அப்ப  பிறகென்ன விக்கி கூகிள் எல்லாம் 1200 ipkf  மட்டுமே இறந்ததாக பொய் கணக்கு காட்டினம் இனி  இந்த ஆதாரத்தை வைத்து மாற்றி விடவேண்டியதான் .

இது சரியாக  ஒரு வருடத்திற்கு முன்னர் வந்த செய்தி. ஏன் அப்போது பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை?🤒

நட்வர் சிங் போகிற போக்கில் மதுவந்தி நம்பர்களைச் சொல்வதுபோல சொல்லியுள்ளார். பேட்டி கண்டவரும் அதை உறுதிப்படுத்த மீண்டும் கேட்கவில்லை.

எனக்கென்னவோ ஒரு சைபரை அதிகம் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகின்றது.

1982 தொடக்கம் 1989 இறுதிவரை (இந்திய இராணுவத்துடன் போர் முடிந்து அவர்கள் மார்ச் 1990 இல் விலகும்வரை யுத்த நிறுத்தம் இருந்தது) புலிகளின் மாவீரர்களாக வீரச்சாவடைந்தவர்கள் 1500க்கு சற்றுக் குறைவு என்பதையும் இந்த நம்பர் கணக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நட்வர் சிங் சொன்னதன் பெறுமதி புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

வரலாற்றில் எமது வெற்றிகளை.. தோல்விகளை நாம் பதியாமல்.. தோற்றுவிட்டோம் என்பதற்காக வரலாறே வேண்டாம் எனும் நிலை என்பது எமக்காகப் போராடியவர்களையும் தியாகங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமன். அத்தோடு எமது போராட்ட நியாயங்களையும் புதைக்கிறோம்.

இது போராடியவர்களுக்கு மட்டுமல்ல.. இந்தப் போராட்டத்திற்காக... அதன் விளைவாக உயிர்கொடுத்தோர் அனைவருக்கும்.. செய்யப்படும் வரலாற்று மறைப்பே தவிர வேறில்லை.

எமது இனம்.. எந்த சர்வதேசத் தயவும் இன்றி ஆயுதம் ஏந்திப் போராடித் தோற்றது. அதன் போராட்டத்தில் நியாயம் உண்டு. அவற்றை எல்லாம் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும்.. நாம் தோற்று விட்டோம் என்பதற்காக.. எல்லாம் மறக்கப்படனும் என்றும் இல்லை. எமது வெற்றிகளை பேசுவது பெருமை அல்ல. தோல்விகளை பேசுவது கீழ்மையும் அல்ல. பேசாமல் விடுவது தான் வரலாற்றுத் துரோகம். எமது போராட்ட நிகழ்வுகள்.. நியாயங்கள் பதிவு செய்யப்படுதல் அவசியம். 

ஹிந்தியப் படைகள் வந்த நோக்கத்தில் தோற்றன என்பதற்காக அவர் எதையும் மறைக்கவில்லை. தமது படைகளின் தியாகத்தை வரலாறாக்கித் தான் வைக்கின்றனர்.  சிங்களப் படைகள் அப்படி. சிங்களப் படைகள் தோற்ற களங்களும் உண்டு. அவையும் எழுதப்பட்டுத்தான் இருக்கின்றன. 

மகாபாரதத்தை எடுத்தால்.. பாண்டவர்கள் வென்ற களத்தை விட தோற்ற களம் தான் அதிகம். அதற்காக அது எழுதப்படாது விடப்படவில்லை. அது ஒரு இதிகாச போரியல் வாழ்வியல் தத்துவக் கதையாக இருப்பினும்.. அதில் கூட சொல்லப்பட வேண்டிய நியாயங்கள் சொல்லப்பட்டுத்தான் உள்ளது.  ஆனால்.. நிஜமான எமது போராட்டத்தில் தோற்றோம் என்பதற்காக... எமது ஆயுதப் போராட்ட தர்மத்தை மறைக்கனும் என்றில்லை. ஏனெனில் உண்மையில்.. தமிழ் மக்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டிருந்தாலும். 

துல்ப‌ன் எதை வைச்சு சொல்லுகிறார் எம‌க்காக‌ போராடின‌வ‌ர்க‌ள் இப்போது உயிருட‌ன் இல்லை என்று ,

முன்ன‌னி த‌ள‌ப‌திக‌ள் இல்லை , ஆனால் த‌ள‌ப‌திக‌ளுட‌ன் ஒன்னா ப‌ய‌ணித்த‌ போராளிக‌ள் ப‌ல‌ர் புல‌ம்பெய‌ர் நாட்டிலும் தாய‌க‌த்திலும் இப்போதும் வ‌சிக்கின‌ம் /

ஆயுத‌ம் மெள‌வுனிச்ச‌ ப‌டிய‌ இருப்ப‌து தான் இப்போது உள்ள‌ சூழ் நிலையில் ந‌ல்ல‌ம் , 

யாழ்பாண‌த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் கிளைமோர் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌ போராளிக‌ள் சாதார‌ன‌ வாழ்க்கை வாழுகின‌ம் ஊரில் ச‌கோத‌ரா ,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

The Tamil Tigers and their Supremo Prab­hakaran were no less brave than the Sikhs. It is widely be­lieved that till the geopo­lit­i­cal sit­u­a­tion turned the tide against the Tamil Tigers, Mossad -the se­cret ser­vice of Is­rael was as­sist­ing Ee­lam Tamils and that is why they were able to con­sol­i­date their hold and wage a re­lent­less war against the Sri Lankan army for more than a decade.https://www.theworldsikhnews.com/skeletons-in-rajiv-gandhis-cupboard-sri-lanka-ipkf-sikhs/ 

2 hours ago, கிருபன் said:

நட்வர் சிங் போகிற போக்கில் மதுவந்தி நம்பர்களைச் சொல்வதுபோல சொல்லியுள்ளார். பேட்டி கண்டவரும் அதை உறுதிப்படுத்த மீண்டும் கேட்கவில்லை.

எனக்கென்னவோ ஒரு சைபரை அதிகம் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகின்றது.

ஒரு சைபரை  கூட்டி குறைத்து  சொல்ல இந்திய அரசு இராணுவம் எல்லாம் சும்மா விட்டிருக்குமா என்பது சந்தேகமே .

காங்கிரஸ் சோனியா ,ராஜீவ் க்கு மிக நம்பிக்கையான ஒருத்தரா இருந்தவர் 2006 இரான் ஊழலில் காங்கிரசை காப்பாற்ற இவரை பலிக்கடா ஆக்கினார்கள் அன்று முதல் மாற்றப்பக்கம் வந்தவர் வந்தவர்தான் .

ஒருவருடம் முன்வந்த செய்திதான் யாரோ ஒரு பொழுது போகாத லொக் டவுனால் பாதிக்கப்பட்ட  மீம்ஸ் கிரியேட்டர் கண்ணில் பட்டு மறுபடியும் ரவுண்டுக்கு விட்டுருக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

கிந்திய ஆமியின்ரை நாத்தம் தாங்கேலாது எண்டு கனபேர் சொல்ல கேள்விப்பட்டுருக்கிறன். :grin:

அது ஒருவித கொழுப்பின் மணம். ரெண்டு கிலோ மீற்றறுக்கு அங்கால வரேக்கேயே இங்க நாய்கள் குரைக்கத் தொடங்கும். நாய்க்கே தாங்க ஏலாத மணத்தை எப்படி மனுசர் தாங்குறதாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

இல்லை நாதமுனி நான் அப்படி எண்டைக்குமே சொல்லவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும் யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளின் உயர்மட்ட தளபதிகள் யாரும் இப்போது உயிருடன்  இருந்திருந்தால் தமது விடுதலை இலக்கை அடையாத நிலையில் இத்தனை பேரைக் கொன்றோம், இத்தனை பேரை அங்கவீனர் ஆக்கினோம் என்பதை பெருமையுடன்  கூறியும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு கூறப்படுவதை ரசித்தும்   இருக்க மாட்டார்கள். ஏனென்றால் பொதுவாக யுத்தங்களில் வென்ற தரப்புக்களே இத்தனை பேரை அங்கவீனர் ஆக்கினோம் என்பதை பெருமையாக சொல்வதில்லை. 

ஆனால் கலரியில் இருந்து ஸ்கோர்  பார்தது, கேட்டு விசிலசிச்ச நாங்கள்  பெருமையா அதைச் சொல்லலாம் நடத்துங்கோ நீங்க. நானும் உங்களோட சேர்ந்து பெருமை பேசுறன். அப்ப பிறகு சொல்லுங்கோ....என்ன நடந்தது........

நீங்கள் கூறுவது உண்மைதான் துல்பன். 

ஆனால், எமது சகோதரர்களை பயங்கரவாதி என்றும் இழிவானவர்கள் என்றும் கூறும்போது கை கட்டி வேடிக்கை பார்க்கச் சொல்கிறீர்களா ? 🤥

நயவஞ்சகமாக வென்றவர்கள் சொல்வதையெல்லாம் சத்தமின்றி வேடிக்கை பார்க்க முடியாதுதானே. அதனால் எமது சகோதரர்களது வீரத்தைச் சொல்வது பிழையன்று. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

அவர்களின் வியர்வை நாத்தம் மூக்கினுள் ஒருவிதமான அரிப்பு மனத்தை  கொண்டு வரும் அதிகாலையில் அம்புஸ் எடுத்து இருப்பினம் பாடத்துக்கு போகிற பொடியள் கண்டு பிடித்து விடுவான்கள்  செய்தி கொண்டு போகும் கிழடு க்கு வந்து இருக்கும் அதிகாரியின் பெயர் கூட துல்லியமாய் தகவல் போகும் பிறகென்ன பிரவுன் lmg ரோட்டில் இழுபட ஓடுவினம் நாய் கட்டும்  சங்கிலியால் ஆயுதங்களை தங்கள் இடுப்பில் கொழுவி இருப்பினம் விழுற அடியில் பலதடவை வீதிகளில் இழுபட ஓடுவது வாடிக்கை அப்படி ஓடி துலைந்து  புலிகளிடம் மாட்டுப்படுவினம் ஒரு நாள் யுத்த நிறுத்தம் வலிகாமம் பக்கத்தில் சின்ன பிள்ள விளையாட்டு போல் கைதி  பரிமாற்றமும் நடக்கும் அப்படி நடக்கையில் பிரம்படியில்  ஜேம்ஸ் ர் எந்த ஆயுதம் மூலம் டாங்கியை அடித்தவர் என்று பலமுறை கேட்பினம் காரணம் ரஷ்யகாரன் rpg  போன்றவைகளால் அதை உடைக்க முடியாது என்று ஏமாத்தி வித்து  போட்டான் .😄

பெருமாள்....  "அம்புஸ்" என்றால் என்ன?  :rolleyes: :grin:

  • கருத்துக்கள உறவுகள்
am·bush
/ˈambo͝oSH/
 
  1. noun
    a surprise attack by people lying in wait in a concealed position.
    "seven members of a patrol were killed in an ambush"
     
    verb
    make a surprise attack on (someone) from a concealed position.
    "they were ambushed and taken prisoner by the enemy"
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

கிந்திய ஆமியின்ரை நாத்தம் தாங்கேலாது எண்டு கனபேர் சொல்ல கேள்விப்பட்டுருக்கிறன். :grin:

Par.jpg

பெங்களூரில் வாரம் ஒரு முறை இன்னும் குளிர் பிரதேசங்களில் என்டா மாதம் ஒரு முறை குளிப்பினம் என்டு அவயளே பெருமையா கதைப்பினம் தோழர்..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

நட்வர் சிங் போகிற போக்கில் மதுவந்தி நம்பர்களைச் சொல்வதுபோல சொல்லியுள்ளார். பேட்டி கண்டவரும் அதை உறுதிப்படுத்த மீண்டும் கேட்கவில்லை.

எனக்கென்னவோ ஒரு சைபரை அதிகம் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகின்றது.

காயமடைந்து சேவையில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டோரும் சேர்த்த தொகையாக இருக்கலாம்.

ஹிந்தியை மற்றும் மலையாள நம்பூதிரி கயவர்களால்  ஏவி விடப்பட்ட படையினரின் தனிப்பட்ட இழப்புக்கள் மதிக்கப்பட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா said:
am·bush
/ˈambo͝oSH/
 
  1. noun
    a surprise attack by people lying in wait in a concealed position.
    "seven members of a patrol were killed in an ambush"
     
    verb
    make a surprise attack on (someone) from a concealed position.
    "they were ambushed and taken prisoner by the enemy"

நன்றி  பிரபா.🤝

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

இது சரியாக  ஒரு வருடத்திற்கு முன்னர் வந்த செய்தி. ஏன் அப்போது பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை?🤒

நட்வர் சிங் போகிற போக்கில் மதுவந்தி நம்பர்களைச் சொல்வதுபோல சொல்லியுள்ளார். பேட்டி கண்டவரும் அதை உறுதிப்படுத்த மீண்டும் கேட்கவில்லை.

எனக்கென்னவோ ஒரு சைபரை அதிகம் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகின்றது.

1982 தொடக்கம் 1989 இறுதிவரை (இந்திய இராணுவத்துடன் போர் முடிந்து அவர்கள் மார்ச் 1990 இல் விலகும்வரை யுத்த நிறுத்தம் இருந்தது) புலிகளின் மாவீரர்களாக வீரச்சாவடைந்தவர்கள் 1500க்கு சற்றுக் குறைவு என்பதையும் இந்த நம்பர் கணக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நட்வர் சிங் சொன்னதன் பெறுமதி புரியும்.

அவரே உண்மையை சொல்லும்போது உங்களுக்கு ஏன் குத்துது குடையுது.  நீங்க என்ன கிந்தியாவிற்கு வக்காலத்து வாங்குகின்றீர்களா? 

இதுகுள்ள ஏன் மதுவந்தியை இழுக்கின்றீர்கள். அப்படியென்ன பெண்களின் மேல் காழ்புணர்வு? தெட்டுக்கா சட்னியா?

சீமானின் ஆமைக்கறியும் இரண்டு வருடத்துக்கு முன் வந்தது. பின் என்ன இதுக்கு வந்து இணைந்தீர்கள் இப்ப?????

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

அவரே உண்மையை சொல்லும்போது உங்களுக்கு ஏன் குத்துது குடையுது.  நீங்க என்ன கிந்தியாவிற்கு வக்காலத்து வாங்குகின்றீர்களா? 

உடையார் கூல் டவுன்😎

இந்திய ஆக்கிரமிப்புப் படைக் காலத்தில் தாயகத்தில்தான் இருந்தேன். அவர்களுடன் கிளித்தட்டு விளையாடித்தான் பாடசாலைக்கும் ரியூசனுக்கும் போய்வந்துகொண்டிருந்தோம். எனவே யதார்த்தம் தெரியும்😀 நீங்களும் தாயகத்தில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும்.😂 

நட்வர்சிங் 15, 000 படைகளை இழந்தோம் என்று சொல்லியது நம்பும்படியாக புலிகள் ஆயிரமாயிரம் இராணுவத்தினரை பெரிய ஒபேரசன் எதிலும் கொல்லவில்லை. நட்வர்சிங் சோனியாவுடன் முரண்பட்டு தனது அரசியலுக்காக சொல்லுவைதையெல்லாம் உண்மையாக்க time tunnel இல் போய் ஒரு பத்தாயிரம் இந்திய இராணுவத்தை முடிச்சால்தான் உண்டு!🤪

கடஞ்சா சொல்வதுமாதிரி, கொல்லப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள் எல்லோரையும் கூட்டினாலும் 1987 ஒக்டோபரில் இருந்து 1989 நவம்பர்/டிசம்பர் வரை 15,000 பேரை இழந்திருக்கமாட்டார்கள்.

நான் கிந்தியாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஒரு தகவலை உறுதிப்படுத்தாமல் நம்பி கிளுகிளுப்பு அடைவது, அதுவும் இந்தப் பேட்டி வந்து ஒரு வருடத்திற்கு மேலாக இருந்தும், நல்லதுக்கில்லை. முடிந்தால் கேணல் ஹரிகரனையோ அல்லது  வேறு இந்திய ஆய்வாளர்களையோ அல்லது புலிகளின் குறிப்புக்களையோ ஆதாரமாகக் காட்டுங்கள்.

34 minutes ago, உடையார் said:

இதுகுள்ள ஏன் மதுவந்தியை இழுக்கின்றீர்கள். அப்படியென்ன பெண்களின் மேல் காழ்புணர்வு? தெட்டுக்கா சட்னியா?

மதுவந்தியின் நம்பர்களை அவர் திடமாக நம்புவதுபோல நட்வர்சிங் நம்புகின்றார் என்பதற்காக சொன்னேன். 😄 அதற்காக நான் நெடுக்ஸ் மாதிரி பெண் வெறுப்பாளராகவும், நீங்கள் பெண்ணியவாதியாகவும் ஆகிவிடமுடியாது!😆

நான் சும்மாவே இரக்கமானவன். பொண்ணுங்கள் என்றால் அழுதிடுவேன். ஆமா..

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, உடையார் said:

சீமானின் ஆமைக்கறியும் இரண்டு வருடத்துக்கு முன் வந்தது. பின் என்ன இதுக்கு வந்து இணைந்தீர்கள் இப்ப?????

அந்தத் தலைப்பில் நான் இணைத்த வீடியோ நாலு நாட்களுக்கு முன்னர்தான் விகடனால் யூரியூப்பில் வெளியிடப்பட்டது. அதில் முன்னர் சொன்ன ஆமைக்கறி, உடும்புக்கறியோடு புதிதாக கறி இட்லியையும் அண்ணன் சீமான் உண்டு களித்ததைச் செப்பியிருந்தார்.😄 அதைக்கூடச் சரியாகச் பார்க்காமல் இந்தத் தலைப்புக்குள் இழுத்து வந்தது சரியா? தகுமா? நியாயமா? சொல்லுங்கள் உடையவரே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, உடையார் said:

அவரே உண்மையை சொல்லும்போது உங்களுக்கு ஏன் குத்துது குடையுது.  நீங்க என்ன கிந்தியாவிற்கு வக்காலத்து வாங்குகின்றீர்களா? 

இதுகுள்ள ஏன் மதுவந்தியை இழுக்கின்றீர்கள். அப்படியென்ன பெண்களின் மேல் காழ்புணர்வு? தெட்டுக்கா சட்னியா?

சீமானின் ஆமைக்கறியும் இரண்டு வருடத்துக்கு முன் வந்தது. பின் என்ன இதுக்கு வந்து இணைந்தீர்கள் இப்ப?????

விடுங்க உடையார்! விடுதலைப்போராட்டங்கள் நடந்த காலங்களிலும் வியாக்கியானங்கள் கதைத்து காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு இப்போது சும்மாதானே இருக்கின்றார்கள்.அது போல் தான் இதுவும்....

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Par.jpg

பெங்களூரில் வாரம் ஒரு முறை இன்னும் குளிர் பிரதேசங்களில் என்டா மாதம் ஒரு முறை குளிப்பினம் என்டு அவயளே பெருமையா கதைப்பினம் தோழர்..☺️..😊

உண்மையாகத்தான் கூறுகின்றீர்களா 🤔

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

உண்மையாகத்தான் கூறுகின்றீர்களா 🤔

BSF_Border_Patrol_Winter_PTI_650.jpg

ஓம் இதிலென்ன சந்தேகம் தோழர் , காஸ்மீரில் ரூற்றி போட்டால் இன்னும் சுத்தம் .. துப்பாக்கியை உதறினா பனி கொட்டுமாம்.. வந்து நம்மிடம் கதையளப்பவை ..☺️..😊

33 minutes ago, குமாரசாமி said:

விடுங்க உடையார்! விடுதலைப்போராட்டங்கள் நடந்த காலங்களிலும் வியாக்கியானங்கள் கதைத்து காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு இப்போது சும்மாதானே இருக்கின்றார்கள்.அது போல் தான் இதுவும்....

உலகில் நடந்த எல்லா விடுதலைப்போராட்டங்களிலும் யுத்தங்களிலும்  எதிரிக்கு உளவு பார்ப்பவர்களும் காட்டிக் கொடுப்போரும் இருந்தே வந்துள்ளனர். அது இயற்கையானது. அவர்களை மீறியே வல்லமையுடன் பல விடுதலைப் போராட்டங்கள் தமது இலக்கை அடைந்திருக்கின்றன. 

அதே போல் எமது விடுதலைப் போராட்டமும்  ஆரம்ப காலங்களில் கெரில்லா தாக்குதல் இயக்கங்களாக இருந்த போது இவ்வாறான காட்டிக் கொடுப்போரால் பாதிக்கப்பட்டு பல பின்னடைவுகளை சந்தித்தது. பின்னர் விடுதலைப்புலிகள் முப்படைகளையும் கொண்ட பாரிய வளர்ச்சி  அடைந்த பின்னர் இவ்வாறான எதிரிக்கு உளவு பார்போரால் அச்சுறுத்தல்களை எதிர் நோக்கிய போதும் அவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவை எல்லாம்  விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக  முறியடிக்கப்பட்டன. காரணம் விடுதலைப்புலிகள் மிக சிறந்த உளவுப்படைகளை கட்டியமைத்ததே. எவராலும் நெருங்க முடியாத வலுவான உளவு வலையமைப்பை அவர்கள் கொண்டிருந்தாதால் தான் ஶ்ரீலங்கா அரசின் பாரிய தாக்குதல்களை முறியடிக்க முடிந்ததுடன் ஆனையிறவு போன்ற போரியல் சாதனைகளையும் அவர்களால் செய்ய முடிந்தது. 

ஆகவே இறுதித்தோல்விக்கு    முழுக்க முழுக்க புலிகளின் அரசியல் துறையின் தவறுகளும்  புலிகளின் உளவுத் தகவல் தோல்விகளும் அதனால் முன்னெடுக்கப்பட்ட  யுத்த தந்திரோபாய பலவீனங்களும்  தான் மிகப் பெரிய பங்கை வகித்தது. ஆகவே காட்டிக் கொடுப்போர் போராட்டத்தை அழித்ததாக கூறுவது தவறானது. ஏனென்றால் காட்டிக்கொடுக்கும் கயவர்களல்  நெருங்க முடியாத உயரத்தில் புலிகள் இருந்தார்கள். 

மற்றப்படி இங்கு யாழ்களத்தில் ஜதார்ததத்தை விளங்கி விமர்சன பார்வையிலான கருத்துக்களை வைக்கும் சாதாரண மக்களை நோக்கி அவர்கள் தான் காட்டிக் கொடுத்து போராட்டத்தை அழித்தார்கள் என்று நீங்கள் வைக்கும் கருத்து உங்களது வழமையான காழ்புணர்வின் வெளிப்பாடே அன்றி வெறில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.