Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

 

சரி இதை விட்டிட்டு, ஆனையிறவிற்கு வாங்கோ...

தங்கா எஸ்கேப்  ஆக்கும் .

  • Replies 225
  • Views 25.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

 

சரி இதை விட்டிட்டு, ஆனையிறவிற்கு வாங்கோ...

நான் ஏன் ஆனையிறவுக்கு வர வேண்டும்?...இந்த செய்தியின் தலைப்பிற்கும் ஆனையிறவுக்கும் என்ன சம்மந்தம்?
உங்களுக்கு செய்திகள் தேவை என்றால் தேடிப் பாருங்கள்...எனக்கு வேலை,வெட்டி இருக்கிறது 

15 ,20 வருசத்துக்கு முந்தி நடந்ததை மாத்த நினைக்கிற உங்களை போன்றவர்கள் தான் சிங்களவன் வரலாற்றை மாத்திட்டான் ,இந்தியன் மாத்திட்டான்  என்று புலம்பிறது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் விரும்புகிறீர்களோ ,இல்லையோ ஆனையிறவு சமரில் கருணாவின் பங்கும் இருந்தது .
 

 

23 minutes ago, ரதி said:

நான் ஏன் ஆனையிறவுக்கு வர வேண்டும்?...இந்த செய்தியின் தலைப்பிற்கும் ஆனையிறவுக்கும் என்ன சம்மந்தம்?
உங்களுக்கு செய்திகள் தேவை என்றால் தேடிப் பாருங்கள்...எனக்கு வேலை,வெட்டி இருக்கிறது 

15 ,20 வருசத்துக்கு முந்தி நடந்ததை மாத்த நினைக்கிற உங்களை போன்றவர்கள் தான் சிங்களவன் வரலாற்றை மாத்திட்டான் ,இந்தியன் மாத்திட்டான்  என்று புலம்பிறது 

 

நீங்கள் செய்தியையே ஒழுங்காக படிக்கவில்லை....

அதுக்குள்ள கும்மானுக்கு முண்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

 

 

நீங்கள் செய்தியையே ஒழுங்காக படிக்கவில்லை....

அதுக்குள்ள கும்மானுக்கு முண்டு

அக்கு தாலிச்ச சட்டிக்குள் காலை வைத்தது போல் நிக்கிறா 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் வேணுமெண்டே  உருவாக்கப்படும் திசை திருப்பல்கள் கருணா ஒரு செத்த பாம்பு அவரால் இனி ஒரு மயிரை கூட பிடுங்க முடியாது ஆனால் சிங்களமும் ஹிந்தியனும்  சுமத்திரனை  வெல்ல வைக்கணும் என்பதில் குறியாய் இருக்கினம் என்பது வலு கிளியராய் இருக்கு கருணா விலகி இவ்வளவு வருடங்களுக்கு பின் இப்படி ஒரு வீர வசனம் இரு அரசுகளின் அனுமதி இல்லாமல் வந்திருக்காது அப்படி என்றால் வரும் நாட்களில் தேர்தலுக்கு முன் ஜெயில் களி  தின்னவேணும் இவர் பார்க்கலாம் பேருக்கு ஜெயில் களியோ  அல்லது உண்மையோ என்று .

இந்த கொமடி பீஸின்  கதையை கேட்டு இங்கு மினக்கெடுவது தேவையில்லாத ஒன்று .

அங்காலை  தமிழ் பேஜ் சுமத்திரனின் எதிரியாகி இவ்வளவு நாளும் செய்தி போட்டது சுமத்திரனின் தேர்தல் விளம்பரகாசை கண்டவுடன்   சுமத்திரா புராணம் பாட தொடங்கி விட்டது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

இதெல்லாம் வேணுமெண்டே  உருவாக்கப்படும் திசை திருப்பல்கள் கருணா ஒரு செத்த பாம்பு அவரால் இனி ஒரு மயிரை கூட பிடுங்க முடியாது ஆனால் சிங்களமும் ஹிந்தியனும்  சுமத்திரனை  வெல்ல வைக்கணும் என்பதில் குறியாய் இருக்கினம் என்பது வலு கிளியராய் இருக்கு கருணா விலகி இவ்வளவு வருடங்களுக்கு பின் இப்படி ஒரு வீர வசனம் இரு அரசுகளின் அனுமதி இல்லாமல் வந்திருக்காது அப்படி என்றால் வரும் நாட்களில் தேர்தலுக்கு முன் ஜெயில் களி  தின்னவேணும் இவர் பார்க்கலாம் பேருக்கு ஜெயில் களியோ  அல்லது உண்மையோ என்று .

இந்த கொமடி பீஸின்  கதையை கேட்டு இங்கு மினக்கெடுவது தேவையில்லாத ஒன்று .

அங்காலை  தமிழ் பேஜ் சுமத்திரனின் எதிரியாகி இவ்வளவு நாளும் செய்தி போட்டது சுமத்திரனின் தேர்தல் விளம்பரகாசை கண்டவுடன்   சுமத்திரா புராணம் பாட தொடங்கி விட்டது .

ஏற்கனவே களி திண்டவர் தானே.....

தண்ணி வாளியோட காக்கூசுக்கும் காத்திருந்திருப்பார்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கருணா காட்டிக் கொடுத்து தான் புலிகள் தோத்தார்கள் என்பது புலிகளையும்,தலைவரையும் அவமதிக்கும் செயல் என்று நான் நினைக்கிறேன் .
கருணா காட்டிக் கொடுக்கா விட்டாலும் அந்த யுத்தத்தில் புலிகள் தோத்து இருப்பார்கள்.
கருணாவும் ,அவரது படைகளும் அந்த நேரத்தில் புலிகளோடு நின்றிருந்தாலும் கூட அந்த சண்டையில் தோத்து தான் இருப்பார்கள்...ஆனால் இன்னும் கொஞ்ச நாள் போராட்டம் நீடித்து இருக்கும்...இன்னும் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டு இருக்கும்  

தலைவரையும் புலிகளையும் அவமதிக்கும் செயல்மட்டுமல்ல அவரை போற்றிய தமிழினத்துக்கு , குறிப்பாக தென் தமிழீழ மக்கழுக்குச் செய்த துரோகம் என்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன். ☹️

இப்போது கதைத்து என்ன பிரயோசனம். எல்லாம் முடிந்துவிட்டதே 😭

  • கருத்துக்கள உறவுகள்

 

“சசி கமலன்” சொல்வதைப் படியுங்கள்.
இது என்னுடைய மாவட்டம் என்பதால், வரும் தேர்தலில் முழு கள நிலவரத்தையும் அத்துப்படியாக அறிந்தவன் என்பதால் உங்களுக்குத் தெளிவூட்டல் ஒன்றை செய்ய விரும்புகிறேன்.
மற்றைய மாவட்டங்கள் போலல்லாது, அம்பாறை மாவட்டத்தின் தேர்தல் நிலைமை தமிழர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருக்கிறது. இதனை அம்பாறை மாவட்ட தமிழ் மக்களே தயவுசெய்து மறக்க வேண்டாம்.
அம்பாறை மாவட்டத்தில் 95 ஆயிரம் பதிவுசெய்யப்பட்ட தமிழர்களின் வாக்குகள் உள்ளது. இதில் வெறும் 15,000 வாக்குகளைச் சிதைக்கும் வேலை திட்டம் போட்டுக் கருணாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதற்குக் காரணம், வருகின்ற விகிதாசார தேர்தல் அடிப்படையில், 90,000 வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுமாயின் இரண்டு ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.
இதனால் சிங்களப் பிரதிநிதி ஒருவர் ஆசனத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் அதற்கு தமிழர்களின் வாக்குகளை பிரிப்பதற்குச் சரியான ஆளாக தென்னிலங்கை அரசியல்வாதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் இந்தக் கருணா.
கருணாவின் சொந்த ஊரான கிரான் உள்ளடங்கும் கல்குடா தேர்தல் தொகுதியை விட்டு விட்டு, எந்தவித தொடர்பும் அற்ற திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கருணா போட்டியிடும் காரணமும், சூழ்ச்சியும் உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.
உங்களில் சிலருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்தி இருக்கலாம். ஆனால் அந்த அதிருப்தியால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களே ஒரு ஆசனத்தை இழந்து விடாதீர்கள்.
ஆகஸ்ட் 5 ஆம் திகதி நாம் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்போமாக இருந்தால் 90 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைக் கைப்பற்ற முடியும் என்ற உண்மையை குழந்தைப் பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல அம்பாறை மாவட்ட மக்களுக்குச் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
“சசி கமலன்”, மல்வத்தை,கணபதிபுரம்.
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

நான் கொரோனாவை விட ஆபத்தானவன். நான் விடுதலைப் புலியில் இருந்தபோது, கிளிநொச்சியிலுள்ள ஆனையிறவு முகாமில் 2,000 முதல் 3000 இராணுவத்தை கொன்றேன். இலஙகையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம்“ என்றார்.

தன் வாயால்க் கெட்டார். இன்றைக்கு தெரியாதது போல் சிங்களம் இருந்தாலும், ஒருநாள் பொறியில் மாட்டுவதற்கு ஆதாரம் அவரே கொடுத்து விட்டார். சொந்தச் செலவில் சூனியம் தனக்கே வைச்சிட்டாரய்யா. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

அவர்களது  சேனையும்  கொடுத்த விலையையும் தியாகத்தையும்  மிதித்தபடி.....

காட்டிக்குடுத்தவனுக்கு தியாகத்தைப் பற்றி என்ன தெரியும்?

5 hours ago, MEERA said:

எந்தப் பக்கத்தால எந்த ரீமை கொண்டு போனவர்?

முற்றுகைக்குள் இருந்த பால்ராஜின் அணியை தான் சென்று மீட்டு வந்ததாக கும்மான் பிரிந்து சென்ற காலப்பகுதியில் உளரினவர்..!!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

கருணா காட்டிக் கொடுக்கா விட்டாலும் அந்த யுத்தத்தில் புலிகள் தோத்து இருப்பார்கள்.
கருணாவும் ,அவரது படைகளும் அந்த நேரத்தில் புலிகளோடு நின்றிருந்தாலும் கூட அந்த சண்டையில் தோத்து தான் இருப்பார்கள்.

 ஆகவே விநாயக மூர்த்தி முரளிதரன் செய்தது சரி. ஆனால் நான் காட்டிக்குடுக்கவில்லை, என்பாட்டில் வெளிநாட்டுக்கு போய் விட்டேன், என்று ஒரு பொய் விட்டார் பாருங்கோ! அதுதான் கையோடு சிங்களவன் புட்டு வைச்சிட்டான்.  சொந்தமா...  பந்தமா...  பிறவிக்குணமா.... சுயநலமா? இப்பிடியெல்லாம் கதைக்க வைக்குது சிலபேரை. இன்னும் பொறுத்திருங்கோ, எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியில வந்து ஐயா உள்ள போவார்.  

  • கருத்துக்கள உறவுகள்

எதை முசுலிமுகள்  எதிர் பார்த்தினமோ அதையே தன் வாயால் கக்கிவிட்டர்....இனி நடப்பதை பார்க்கட்டும்

On 20/6/2020 at 08:13, பெருமாள் said:

ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

என்னதான் திறமையானவரா இருந்தாலும் ஒழுக்கக்கேடான நபரால் நன்மைகள் ஏற்படாது என்கிறதுக்கு கருணா தான் நல்ல எடுத்துக்காட்டு. கருணா தனது ஒழுக்கக்கேடுகளின் வழியில் செல்ல முடிவெடுத்தால் கொலைகாரர்களுக்கு தான் வாய்ப்பு.   

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

இதெல்லாம் வேணுமெண்டே  உருவாக்கப்படும் திசை திருப்பல்கள் கருணா ஒரு செத்த பாம்பு அவரால் இனி ஒரு மயிரை கூட பிடுங்க முடியாது ஆனால் சிங்களமும் ஹிந்தியனும்  சுமத்திரனை  வெல்ல வைக்கணும் என்பதில் குறியாய் இருக்கினம் என்பது வலு கிளியராய் இருக்கு கருணா விலகி இவ்வளவு வருடங்களுக்கு பின் இப்படி ஒரு வீர வசனம் இரு அரசுகளின் அனுமதி இல்லாமல் வந்திருக்காது அப்படி என்றால் வரும் நாட்களில் தேர்தலுக்கு முன் ஜெயில் களி  தின்னவேணும் இவர் பார்க்கலாம் பேருக்கு ஜெயில் களியோ  அல்லது உண்மையோ என்று .

இந்த கொமடி பீஸின்  கதையை கேட்டு இங்கு மினக்கெடுவது தேவையில்லாத ஒன்று .

அங்காலை  தமிழ் பேஜ் சுமத்திரனின் எதிரியாகி இவ்வளவு நாளும் செய்தி போட்டது சுமத்திரனின் தேர்தல் விளம்பரகாசை கண்டவுடன்   சுமத்திரா புராணம் பாட தொடங்கி விட்டது .

இதை ஏற்றுக்கொள்ள முடியாது 
அவரால் சில மயிர்களை புடுங்க முடியும் (அந்த வேலையாய்த்தானே கும்மான் குத்துகாரணம் அடிச்சவர்)
யாழ் நாகரீகம் கருதி பச்சையாக எழுத முடியாது.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம். 
உயிரினும் ஓம்பப்படும்.

கருணா ஒழுக்கம் தவறி இனத்துக்கு அழிவை செய்துகொண்டிருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவுச் சமரின் கதாநாயகனே பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாதான். பிரிகேடியர் தீபன் , பாணு போன்றவர்களின்  பங்களிப்பும் கணிசமானது. கருணா ஆனையிறவுச் சமரில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. 

ஆனையிறவுச் சமருக்கு முன்னமே பிரதேசவாத நச்சு விதையினை அவன் கிழக்கு மாகாண போராளிகளிடையே தூவிட்டிருந்தான். இதனாலேயே ஜெயந்தன் படையணி ஆனையிறவுச் சமரில் பங்கேற்கவில்லை என்பதுடன், ஆனையிறவில் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தது பானு என்பதும் குறிப்பிடத் தக்கது.

புலிகளின் ஒப்பற்ற தளபதிகளினதும், போராளிகளினதும் தியாகத்தையும், அளப்பரிய அர்ப்பணிப்புக்களையும், தனது இச்சைகளுக்காக இனத்தைக் காட்டிக்கொடுத்து, எதிரியிடம் வாலாட்டிக் கொண்டுபோய் ஒளிந்துகொண்ட தமிழினம் சரித்திரத்தில் கண்ட மிகக் கேவலமான துரோகி இன்று தனதென்று உரிமை கோருவது பித்தலாட்டத்தின் உச்சகட்டம்.

உனக்கு தேர்தலில் வாக்கு வேண்டுமென்றால், "நான் மகிந்தவின் ஆள்த்தான், என்னாலேயே புலிகளியக்கத்தையும், தமிழரின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தையும் சிங்களவர்களால் அழிக்க முடிந்தது,  முடிந்தால் எனக்கு வாக்குப் போடுங்கள்" என்று கேட்டுப்பார், அதைவிடுத்து புலிகளின் தியாகங்களை வைத்து வாக்குப் பிச்சை கேட்காதே. ஏனென்றால், உனக்குத் தெரியும், உனக்கிருந்த அடையாளம் தமிழினத்திற்கு நீ இழைத்த துரோகத்திற்குப் பின்னர் அழிந்துவிட்டது. நீ எம்மைப்பொறுத்தவரை எப்போதுமே துரோகிதான், அதை மாற்ற நீ செய்யும் திருகுதாலங்கள் எதுவுமே வேலை செய்யப்போவதில்லை.

சிங்களவனுக்காவது உண்மையாய் இரு !

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை உடன் கைது செய்யுங்கள்! தேரர்கள் கடும் அழுத்தம்

karuna-1.jpg

படையினர் 3000 பேரை கொலை செய்த கருணா அம்மானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மகல்கந்த சுதத்த தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் நாவிதன்வெளி பிரதேசத்தில் மக்கள் கூட்டமொன்றில் 3000 படையினரை கொன்றதாக கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே, கருணாவை உடன் கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இதேவேளை, மனித கொலையுடன் தொடர்புபட்ட சட்டத்தின் கீழ் கருணாவை கைது செய்ய முடியும்.

இதற்கான நேரடியாக நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்த சுததிஸ்ஸ தேரர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பு ஒன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“தான் செய்த குற்றத்தை அவரே ஒத்துக் கொண்டுள்ளார். சஹரானைப் போன்றே இவரும் மனிதப் படுகொலையைச் செய்துள்ளார்.

எனவே ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கையை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்” என அரவ் மேலும் கூறியுள்ளார்.

https://www.vanakkamlondon.com/karuna-21-06-2020/

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுக்கத்தான் லாயக்கு. உளறித் திரிஞ்சால் காரியம் நடக்குமா. 

இது ஏமாந்த தமிழர்ற்றை வாக்குகளை அபகரிக்கும் மகிந்த-கருணா கோஷ்டியின் திட்டமிட்ட பிரச்சாரம்.

கயவனாக மாறிய கருணா சொன்னதும் பொய். சோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியா. 

அதன்பின் மகிந்த கருணாவை புகழ்ந்து விட்ட அறிக்கையும் இது திட்டமிட்ட தேர்தல் பிரச்சார தந்திரம் என்டு சொல்லுது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தை கொன்ற கருணா மீது நடவடிக்கை எடுங்கள் – சீறிபாய்ந்தார் மணிவண்ணன்

20200620_140700-960x444.jpg?189db0&189db0

 

கிழக்கில் தமிழ் மக்களை கொன்று குவித்து, விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருணா கொரோனாவை விட ஆபத்தானவர்தான் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

“3000 இராணுவத்தை கொன்றதாக கருணா கூறுவதை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக கொண்டு அவருக்கு எதிரான நடவடிக்கையினை கோத்தாபய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (20) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது. இதன் போது அங்கிருந்த ஊடகவியலாளர்களால் 300 ஆயிரம் இராணுவத்தை கொன்ற தான் கொரோனாவை விட ஆபத்தானவன் என்று கருணா கூறியமை தொடர்பில் எழுப்பப்பட் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்iகியல்,

‘கருணா அம்மான் உண்மையைதான் சொல்லியுள்ளார். அவர் கொரோனாவை விட கொடூரமானவர்தான். 2004ம் ஆண்டிற்கு பிற்பாடு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை கொண்று குவித்தத்தில், தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்ததில் மிக கொடூரமாக செயற்பட்டவர் என்பது உண்மை. அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

மஹிந்த ராஜபக்ச அரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் திராணியில், தான் பெரிய வீரன் போன்று 3000 இராணுவத்தை கொன்றதாக கருத்து வெளியிட்டுள்ளார். உண்மையில் எந்தவி ஆதாரங்களும் இல்லாமல் பல அரசியல் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாக கொண்டு கைதிகள் தண்டை பெற்றிருக்கின்றார்கள்.

பல அரசியல் கைதிகள் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எவ்வாறு பெறப்படுகின்றது என்றால் பொலிஸ் உயர் அதிகாரிகள் அல்லது சாதாரண பொலிஸ் அதிகாரிகள் தாங்கள் விரும்பியவாறு வாக்குமூலத்தை எழுதி, அரசியல் கைதிகளிடம் வற்புறுத்தி கையெழுத்திது வாங்குவார்கள்.

அதில் என்ன எழுதி உள்ளது என்பது கூட தெரியாமல், பயத்தினால் அரசியல் கைதிகள் கையெழுத்திடுவார்கள். அவர்கள் கையெழுத்திட்ட வாக்குமூலத்தை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக மன்றில் சமர்ப்பித்து அவர்களுக்கு எதிரான வழக்கு நடத்தப்படும்.

அரசாங்கத்தின் கைக்கூலியாக செயற்படும் கருணா அம்மான் உண்மையிலேயே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தெரிவித்திருக்கின்றார். அரசியல் கைதிகள் மீதான வழக்குகளிலும், அவர்கள் அங்கு குண்டுவைத்தார்கள், இங்கே இராணுவத்தை கொலை செய்தார்கள், கிளைமோர் வைத்தார்கள் என்றுதான் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமந்த்தப்பட்டு வருகின்றது.

கருணா அம்மான் மிக தெளிவாக சொல்லியுள்ளார், தான் 3000 இராணுவத்தை கொலை செய்ததாக. ஏன் அவர் மீது மஹிந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றது. இதை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக பதிவு செய்து. கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ – என்றார்.

 

https://newuthayan.com/இராணுவத்தை-கொன்ற-கருணா-ம/

மூவாயிரம் இராணுவத்தைக் கொன்றால்தான் 'மொட்டு'வில் தேசியப் பட்டியல் கிடைக்குமா?

ஆனையிறவில் ஒரே இரவில் மூவாயிரம் வரையிலான இராணுவத்தினரைக் கொலை செய்தோம் என்று கருணா வெளியிட்டுள்ள கருத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்கான தகுதி இதுதானா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்தவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா , நாவிதன்வெளி பிரதேசத்தில் மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றும்போது, "நாம் ஆனையிறவில் ஒரே இரவில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரைக் கொலை செய்தோம்" என்று வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதைக் கண்டித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள சஜித் பிரேமதாஸ, "ஆனையிறவில் ஒரே இரவில் 3 ஆயிரம் இராணுவத்தினரைக் கொலை செய்ததாக கருணா உரையாற்றியுள்ளார். அதே உரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனக்குத் தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க முன்வந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

'தாமரை மொட்டு' சின்னத்தில் தேசியப் பட்டியல் கிடைப்பதற்கு இதுவா அவசியமான தகுதி?" - என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/145537

கருணாவின் பகிரங்க அறிவிப்பு! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நெருக்கடி - ஸ்ரீலங்காவில் வெடித்தது சர்ச்சை

மனித குலக்திற்கெதிரான பாரதூரக் கொலைகளைச் செய்த முன்னாள் பிரதியமைச்சரும், பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யும்படி, சிங்கள ராவய அமைப்பு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

வன்னியில் இடம்பெற்ற போரின் போது 2000 தொடக்கம் 3000 வரையிலான ஸ்ரீலங்கா படையினரை ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் படுகொலை செய்ததாக கருணா அம்மான் நேற்றைய தினம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இக்கருத்து தற்போது தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் கருணா அம்மானைக் கைது செய்யும்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக களமிறங்கியுள்ள விநாயகமூர்த்தி என்று சொல்லப்படும் கருணா உடலை உலுக்கும் வகையிலான மிகவும் பாரதூரமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனையிறவு பகுதியில் ஸ்ரீலங்கா படையைச் சேர்ந்த இராணுவத்தினர் 2000 அல்லது 3000 பேரை தான் கொலை செய்ததாக கூறியுள்ளார். இது ஸ்ரீலங்கா சட்டத்தின்படி முரணான அறிவிப்பாகும்.

கொலைக் குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்ய முடியும். அவரைக் குற்றவாளியாக்க முடியும். சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க முடியும்.

ஆகவே உடனடியாக அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் படியும் பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியோருக்கு நினைவுபடுத்துகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் நடத்தியிருந்தன. அதனை விடவும் மனித குலக்திற்கெதிரான பாரதூரக் கொலைகளை கருணா செய்திருப்பது அவராலே சொல்லப்பட்டுள்ளது.

ஆனையிறவு பகுதியில் மட்டுமல்ல, கிழக்கு மாகாணத்தில் அரந்தலாவ பகுதியில் பிக்குமார்களை படுகொலை செய்தமை, சில கிராமங்களுக்குள் நுழைந்து அப்பாவி மக்களை வெட்டிக் கொலை செய்தமை போன்ற செயற்பாடுகளை கருணா செய்திருக்கின்றார்.

இப்போது பகிரங்கமாகவே அவரால் செய்யப்பட்ட பாவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சஹ்ரான் செய்த குற்றச் செயல்களைப் போல கருணாவும் இனப்படுகொலையை செய்துள்ளார்.

உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் வைத்து அவர் செய்துள்ள அறிவிப்பின் ஊடாக நாட்டிற்கு மிகவும் ஒரு பயங்கரமான அறிவிப்பை விடுத்து மீண்டும் ஒருமுறை கருணா ஈழத்தை கேட்கின்றாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளிடம் கருணா அம்மான் மீதான நடவடிக்கையை எடுக்க வேண்டும்படி கோருகிறோம். பல்லாயிரக்கணக்கான கொலையை செய்தவரை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்க முடியுமா? நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு சவால் விடுத்தவரை விட்டுவைக்க முடியுமா?

அதேபோல முன்பு செய்த விளையாட்டுக்களை இப்போது செய்ய முடியாது என்பதை கருணா அம்மானுக்கு நினைவூட்டுகின்றோம்.

தற்போதைய ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பவர். இன்றும் ஈழத்தை கருணா அம்மான் கோரினால் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட அதே நிலையே அவருக்கும் ஏற்படும் என்பதை எச்சரிக்கின்றோமென அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/145516?ref=rightsidebar

 

கருணாவுக்கு கையை விரித்த மஹிந்த!

முன்னாள் பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தமது கட்சியில் போட்டியிடவில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் போர்க்காலத்தில் 3000 படையினரை கொன்றதாக கருணா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே பொதுஜன முன்னணி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.ibctamil.com/srilanka/80/145554?ref=imp-news

625.147.560.350.160.300.053.800.264.160.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Rajesh said:

கருணாவுக்கு கையை விரித்த மஹிந்த!

625.147.560.350.160.300.053.800.264.160.

சும்மா... வாயை வைத்துக் கொண்டிருக்காமல், உளறப் போய்... 
இப்ப முதலுக்கே... மோசம் வந்திட்டுது. :grin:

மினக்கெட்டு.. 40 அடியில்,  வைத்த கட் அவுட்டும்... வீணாய் போச்சு. 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.