Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் செப்டெம்பர் 27 இல்

investigation.jpg?189db0&189db0

கருணா அம்மானை கைது செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடுவெலை நகர சபை உறுப்பினரான போசெத் கலகே பத்திரனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பேசிய கருணா அம்மான் யுத்த காலத்தின் போது ஆனையிறவில் வைத்து 02 அயிரம் இலங்கை இராணுவ வீரர்களை கொலை செய்த சம்பவத்திற்கு தாம் தலைமை தாங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்த இந்த கருத்தானது சமூகத்தில் பெரிதும் பேசப்பட்டு வந்ததுடன், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் பலர் குரல் எழுப்பி வந்தனர்.

https://newuthayan.com/அடிப்படை-உரிமை-மனு-மீதான/

  • Replies 225
  • Views 25.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருணா ஆண் மகனாக இருந்தால் நிரூபித்து காட்டட்டும் – செல்வம்

selvam_04032020_SVI_CMY.jpg?189db0&189db0

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணாவால் என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர் ஓர் ஆண் மகனாக இருந்தால் அதை உடனடியாக நிரூபிக்க வேண்டும் என முன்னாள் எம்பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“கருணா மிகவும் மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார். அவருடைய கருத்துக்கு நான் சவால் விடுகிறேன். அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன்.

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாகவும், மதுபானசாலைகள் இருப்பதாகவும் கருணா அம்மான் மிக மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார்.

உண்மையிலேயே அவர் ஓர் ஆண் மகனாக இருந்தால் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும். அப்படி ஆதாரத்தோடு அவர்கள் நிரூபித்தால் இந்த நிமிடமே நான் இந்த தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன். அரசியலில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ள தயாராக இருக்கின்றேன்.” – என்றார்.

https://newuthayan.com/கருணா-ஆண்-மகனாக-இருந்தால/

  • கருத்துக்கள உறவுகள்

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை நிரூபிக்க வேண்டும்.!

fb_img_15938486298321359655374.jpg

புலிகளின் தலைவர் பிரபாகரனை அவன் – இவன் என பேசிய கருணா உண்மை வரலாறு இதுதான்
என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் விடுதலைக்காக வந்தவன். காசு பணத்துக்காக இப்படியான ஒரு செயலை செய்யப் போவதில்லை. கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியை தெரிவு செய்து விட்டோம். ஆகவே வடக்கு கிழக்கிலே எங்களுடைய ஆளுமை தொடரும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச சொல்லியிருக்கிறார். இதிலிருந்து ஒரு செய்தியை நாங்கள் உணர வேண்டும். வடக்கு, கிழக்கிலே மொட்டு சின்னத்திற்கு ஆதரவாக களம் இறக்கப்பட்டிருக்கிற சுயேட்சைக் குழுவில் இருக்கிற தமிழர்களுக்கு ஒரு சவால் விடுகிறேன்.
சிங்கள தேசத்தின் தலைவராக பேசிக் கொண்டிருக்கின்ற மஹிந்த ராஜபக்சவிற்கு தமிழர்களாகிய நீங்கள் வாக்கெடுத்து கொடுக்கப் போகிறீர்களா என்பது எனது கேள்வி.

http://puthusudar.lk/2020/07/04/கருணா-ஒரு-ஆண்-மகனாக-இருந்/

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும்

 அதெப்படி இப்படி ஒரு கேள்வியை நீங்கள் கேட்கலாம்?

ரதி அக்கா கோவிச்சுக்க மாட்டாங்களா?

அவருக்கு அது இருக்கா

அதாவது கொள்கைகள்?

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மனுசன் புட்டியும் குட்டியுமாய் திரிவதைப் பார்த்து இந்த மனுசனுக்கு வயித்தெரிச்சல். அம்புட்டுதே. 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்

 youtube இல் போய் பின்னூட்டங்களை பாருங்கள், தாங்க முடியவில்லை 😂

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, உடையார் said:

 youtube இல் போய் பின்னூட்டங்களை பாருங்கள், தாங்க முடியவில்லை 😂

நானும் பார்த்தேன். வீடியோவையல்ல, பின்னூட்டங்களை, அப்பா ........தாங்கமுடியல. வைச்சுச் செய்கிறார்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரஞ்சித் said:

நானும் பார்த்தேன். வீடியோவையல்ல, பின்னூட்டங்களை, அப்பா ........தாங்கமுடியல. வைச்சுச் செய்கிறார்கள் !!!

😂😂

ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன? கூடு விட்டு ஆவி போனால் கூடவே.......................

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது வாக்கு கருணா அம்மானுக்கு 

காரணம் கூட்டமைப்பின் இழுத்தடிப்பும் வெள்ளையடிப்பும் ,வெறுப்பும் மக்கள் மீது எந்த கரிசனையும் கொள்ளாது தங்களது சுயலாபங்களுக்காக செயபடுகிறார்கள் மக்களும் பலர் அல்ல சிலர் (இளைஞர்கள்) மாறிவிட்டார்கள் பார்ப்போம் தேர்தலில்.

3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எனது வாக்கு கருணா அம்மானுக்கு 

காரணம் கூட்டமைப்பின் இழுத்தடிப்பும் வெள்ளையடிப்பும் ,வெறுப்பும் மக்கள் மீது எந்த கரிசனையும் கொள்ளாது தங்களது சுயலாபங்களுக்காக செயபடுகிறார்கள் மக்களும் பலர் அல்ல சிலர் (இளைஞர்கள்) மாறிவிட்டார்கள் பார்ப்போம் தேர்தலில்.

முழுப் போராட்டத்தினையும் காட்டிக் கொடுத்தது, TRO பெண் பணியாளர்களை வல்லுறவு செய்து கொன்றது இன்று தமிழர் வாக்குகளை பிரித்து பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்ய அம்பாறையில் போட்டி இடுவது எல்லாம் கருணா சுயலாபம் இல்லாமல் தமிழ் மக்களின் நலனுக்காக செய்த விடயங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

உஸ்  கண்ணை கட்டுதே  திரும்பபவும் முதலேயிருந்தா 😫

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

முழுப் போராட்டத்தினையும் காட்டிக் கொடுத்தது, TRO பெண் பணியாளர்களை வல்லுறவு செய்து கொன்றது இன்று தமிழர் வாக்குகளை பிரித்து பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்ய அம்பாறையில் போட்டி இடுவது எல்லாம் கருணா சுயலாபம் இல்லாமல் தமிழ் மக்களின் நலனுக்காக செய்த விடயங்களா?

பழையவற்றை பேசி பலன் ஏதும் கிடைக்குமா என்ன நிழலி இருப்பதை காக்க வேண்டும் இன்று முஸ்லீம்ம்கள் கர்ணா என்றால் பதறுகிரார்கள் திருமலையில் கிண்ணியா, கோணேஸ்வரம் எங்களது மட்டக்களப்பில் எல்லைக்கிராமங்கள் எங்களது அம்பாறையில் எல்லைக்கிராமங்கள் வேலி போட்டு அடைக்கப்படுகின்றன இவை அனைத்தையும் பார்த்து அவர்களது வேலைகளைமட்டும் செய்வனே செய்கிரார்கள் , அம்பாறை எம்பியும் கட்சியின் தளபதி மாவையரும் மாவையருக்கு கிழக்கு நிலை தெரியாது 

கொஞ்ச குரலை உயர்த்தி கொடுக்க ஆள் தேவை அது யாராக இருந்தாலும் சரி இன்று எங்களது ஊரில் பல இளைஞ்சர்கள் கர்ணாவுக்கு வாக்களிக்க உள்ளதாக சொன்னார்கள் காரணம் கேட்டேன் கூட்டமைப்பு இருந்தும் பலன் இல்லை மட்டக்களப்பில் கூட பிள்ளையானுக்கு அமோக ஆதரவு இம்முறை 3 சீட்களை அவர் எடுக்கலாம் அப்போ அந்த மக்களுக்கு என்ன சொல்ல போறீங்கள்  கூட்டமைப்பு விட்ட பிழைகளை ஏன் உங்களால் சுட்டிக்காட்டமுடியவில்லை இன்று அம்மக்கள் அவர்களை ஒதுக்க காரணம் என்ன ஆடாயுங்கள் விடை கிடைக்கும் 

2 minutes ago, ரதி said:

உஸ்  கண்ணை கட்டுதே  திரும்பபவும் முதலேயிருந்தா 😫

உங்க அண்ணை பயங்கரமா திரியுது கன காலத்திற்கு பிறகு கண்டது  ஆனால் கதைக்க முடியல சனக்கூட்டம் (பொடியங்கள் கூட்டம்)

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்க அண்ணை பயங்கரமா திரியுது கன காலத்திற்கு பிறகு கண்டது  ஆனால் கதைக்க முடியல சனக்கூட்டம் (பொடியங்கள் கூட்டம்)

சந்தோசம் ...வருங்காலம் அவர் பின்னால் நிக்குது என்று சொல்கிறீர்கள் 👍

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

சந்தோசம் ...வருங்காலம் அவர் பின்னால் நிக்குது என்று சொல்கிறீர்கள் 👍

ம்ம் வயதுக்கு வந்தவர்கள் சிலர் அதாவது 50 வயதுக்கு மேலானவர்கள் சிலர் பழைய புராணத்தை பாடினாலும் இளையவர்களோ தொழில் இல்லை , இனத்துவேசம் வேலை இடங்களில்  படிச்சிருந்தும் அம்பாறை மாவட்டம் பாரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்வாங்குவதில் பாரிய இனரீதியாக பின்னடைவு  அரசியல் செல்வாக்கால்  போய் முறையிட்டாலும் தீர்வில்லை. 

வீரவசனம் பேசி கதிரையில் அமர்ந்து அரசுக்கு சாமரம் வீசும் போது எதிரிக்கு நிகராக நிற்கவும் வேண்டும் பயந்திருந்தாலும்.

போர்குற்றம் அது இது என பேசினாலும் அரசைக்காப்பாற்றும் கூட்டமைப்பை விட அம்பாறை  மக்கள் நான் உட்பட என்ன துரோகமா பண்ணிட்டம் அப்படி துரோகம் என நீங்கள் நினைத்தாலும் எனக்கு பறவாயில்லை ( இங்குள்ளவர்களுக்கே அதன் வேதனையும் வலியும் புரியும் )   

34 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பழையவற்றை பேசி பலன் ஏதும் கிடைக்குமா என்ன நிழலி இருப்பதை காக்க வேண்டும் இன்று முஸ்லீம்ம்கள் கர்ணா என்றால் பதறுகிரார்கள் திருமலையில் கிண்ணியா, கோணேஸ்வரம் எங்களது மட்டக்களப்பில் எல்லைக்கிராமங்கள் எங்களது அம்பாறையில் எல்லைக்கிராமங்கள் வேலி போட்டு அடைக்கப்படுகின்றன இவை அனைத்தையும் பார்த்து அவர்களது வேலைகளைமட்டும் செய்வனே செய்கிரார்கள் , அம்பாறை எம்பியும் கட்சியின் தளபதி மாவையரும் மாவையருக்கு கிழக்கு நிலை தெரியாது 

கொஞ்ச குரலை உயர்த்தி கொடுக்க ஆள் தேவை அது யாராக இருந்தாலும் சரி இன்று எங்களது ஊரில் பல இளைஞ்சர்கள் கர்ணாவுக்கு வாக்களிக்க உள்ளதாக சொன்னார்கள் காரணம் கேட்டேன் கூட்டமைப்பு இருந்தும் பலன் இல்லை மட்டக்களப்பில் கூட பிள்ளையானுக்கு அமோக ஆதரவு இம்முறை 3 சீட்களை அவர் எடுக்கலாம் அப்போ அந்த மக்களுக்கு என்ன சொல்ல போறீங்கள்  கூட்டமைப்பு விட்ட பிழைகளை ஏன் உங்களால் சுட்டிக்காட்டமுடியவில்லை இன்று அம்மக்கள் அவர்களை ஒதுக்க காரணம் என்ன ஆடாயுங்கள் விடை கிடைக்கும் 

உங்க அண்ணை பயங்கரமா திரியுது கன காலத்திற்கு பிறகு கண்டது  ஆனால் கதைக்க முடியல சனக்கூட்டம் (பொடியங்கள் கூட்டம்)

மகிந்த காலத்தில் தான் முஸ்லிம்களின் காணி பிடிப்பு வடக்கில் ரிசாட்டின் உதவியுடன் தலைவிரித்தாடியது. கிழக்கிலும் அவ்வாறே. ரணிலின் காலத்தில் ஓரளவுக்கேனும் அடாத்தாக காணி பிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.
கருணா வந்தால் கிழக்கில் முஸ்லிம்களை கட்டுப்படுத்தி தமிழர்களுக்கு நல்லது நடக்க கோத்தாவும் மகிந்தவும் விடுவார்கள் என்று நீங்கள் நினைத்தால், கண்டிப்பாக அது நடக்க போவதில்லை. ஒரு வேளை கருணா வந்தாலும், ஒரு அமைச்சுப் பதவி கூட கொடுக்கப்படப் போவதில்லை. மூவாயிரம் இராணுவத்தினரைக் கொன்றேன் என்று சொல்லிய ஒரு தமிழருக்கு பிரதி அமைச்சராக வரும் வாய்ப்பைக் கூட சிங்களம் வழங்கப் போவதில்லை.

சனாதிபதித் தேர்தலின் போது கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் கருணா சொன்னதையோ, பிள்ளையான் சொன்னதையோ கேட்கவில்லை. அத் தேர்தல் நடந்து இன்னும் பல காலம் செல்லவில்லை. கிழக்கு மக்கள் இம்முறையும் தமிழ் தேசியத்தின் பால் தான் நிற்கின்றோம் எனக் காட்டுவார்கள். பார்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

மகிந்த காலத்தில் பிடிக்கப்பட்டது அரச காணிகளையே ஆனால் முஸ்லீம்கள் பிடித்த காணிகள் அனைத்தும் தமிழர்களுடைய காணியே றிசாட்  கைப்பற்றும் போது வடக்கில் சும்மாதானே குந்தியிருந்தார்கள் ஆனால் ஓர் பிக்கும் வில்பத்து பிரச்சனையை  எழுப்பும் போதே கன பேருக்கு தெரியவந்தது  ஆனால் கிழக்கு அப்படியில்லை  வரம்புகளே  நாளுக்கு நாள் எல்லை கடக்கிறது 

ம் பார்க்கலாம் நிழலி ஒன்று இரு கட்சிகளுக்கு ஆசனம் இல்லாமல் போகலாம் ஆனால் அரசின் நிகழ்ச்சி நிரல் தொடரும் இதில் கர்ணா, பிள்ளையான் என்ற பேச்சுக்கு இடமில்லை ஆனால் பிள்ளையானின், கர்ணாவின் பேச்சைக் கேட்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கும் பிள்ளையானுக்கும் , கர்ணாவுக்கும் தொடர்பில்லை ஆனால் கூட்டங்களில் கலந்து கொண்டார் கர்ணா கோட்டபாயவுக்கும் வாக்கு விழுந்தது வடகிழக்கில்  

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருக்கின்ற நாம் ஊரில் போய் இருக்கப் போறதுமில்லை. எமது பிள்ளை ,குட்டிகளை அனுப்ப போறதுமில்லை ...இடைக்கிடை ஊருக்கு காசை அனுப்பி போட்டு தேசியம் ,சுயாச்சி என்று கத்தினால் வேலை முடிஞ்சது...சுபம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மகிந்த காலத்தில் பிடிக்கப்பட்டது அரச காணிகளையே ஆனால் முஸ்லீம்கள் பிடித்த காணிகள் அனைத்தும் தமிழர்களுடைய காணியே றிசாட்  கைப்பற்றும் போது வடக்கில் சும்மாதானே குந்தியிருந்தார்கள் ஆனால் ஓர் பிக்கும் வில்பத்து பிரச்சனையை  எழுப்பும் போதே கன பேருக்கு தெரியவந்தது  ஆனால் கிழக்கு அப்படியில்லை  வரம்புகளே  நாளுக்கு நாள் எல்லை கடக்கிறது 

ம் பார்க்கலாம் நிழலி ஒன்று இரு கட்சிகளுக்கு ஆசனம் இல்லாமல் போகலாம் ஆனால் அரசின் நிகழ்ச்சி நிரல் தொடரும் இதில் கர்ணா, பிள்ளையான் என்ற பேச்சுக்கு இடமில்லை ஆனால் பிள்ளையானின், கர்ணாவின் பேச்சைக் கேட்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கும் பிள்ளையானுக்கும் , கர்ணாவுக்கும் தொடர்பில்லை ஆனால் கூட்டங்களில் கலந்து கொண்டார் கர்ணா கோட்டபாயவுக்கும் வாக்கு விழுந்தது வடகிழக்கில்  

வடக்கில் அங்கஜனுக்கும் டக்கிளசுக்கும் போட்டியிடும் மற்றைய வேட்பாளர்களை விட கூட்டம் அதிகமாய் உள்ளது ஒருவேளை பணம் கொடுக்கிறார்களோ தெரியலை அதே போல் கிழக்கிலும் கருணாவுக்கு கூட்டம் அதிகமாய் உள்ளது அரை  வெறியில் உளறும்  பகிடிக்காகவோ அல்லது அவரால் உண்மையிலே கிழக்கு விடிவு பெறும்  என்று நம்புகிறார்களோ புரியலை ..............

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை கைது செய்ய கோரிய மனு தள்ளுபடி!

karuna-6-720x450-1.jpg?189db0&189db0

கருணா எனும் முரளிதரனை கைது செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புலிகளுடன் இருந்த போது போரில் 2000 – 3000 இராணுவ வீரர்களை கொன்றதாக அண்மையில் கருணா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பிலேயே அவரை கைது செய்ய கோரிய மனுவை கடுவௌ மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்திருந்தார்.

https://newuthayan.com/கருணாவை-கைது-செய்ய-கோரிய/

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் துரோகம் தீர்வு என்டு பிரச்சனைகள் இல்லாவிட்டால் வடக்கில் வியைகலா டக்கி மற்றும் அங்கஜன் ஆகியோருக்கே வாய்ப்ப அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2020 at 19:04, தனிக்காட்டு ராஜா said:

மகிந்த காலத்தில் பிடிக்கப்பட்டது அரச காணிகளையே ஆனால் முஸ்லீம்கள் பிடித்த காணிகள் அனைத்தும் தமிழர்களுடைய காணியே றிசாட்  கைப்பற்றும் போது வடக்கில் சும்மாதானே குந்தியிருந்தார்கள் ஆனால் ஓர் பிக்கும் வில்பத்து பிரச்சனையை  எழுப்பும் போதே கன பேருக்கு தெரியவந்தது  ஆனால் கிழக்கு அப்படியில்லை  வரம்புகளே  நாளுக்கு நாள் எல்லை கடக்கிறது 

ம் பார்க்கலாம் நிழலி ஒன்று இரு கட்சிகளுக்கு ஆசனம் இல்லாமல் போகலாம் ஆனால் அரசின் நிகழ்ச்சி நிரல் தொடரும் இதில் கர்ணா, பிள்ளையான் என்ற பேச்சுக்கு இடமில்லை ஆனால் பிள்ளையானின், கர்ணாவின் பேச்சைக் கேட்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கும் பிள்ளையானுக்கும் , கர்ணாவுக்கும் தொடர்பில்லை ஆனால் கூட்டங்களில் கலந்து கொண்டார் கர்ணா கோட்டபாயவுக்கும் வாக்கு விழுந்தது வடகிழக்கில்  

முஸ்லிம்களின் பிரச்சனை என்பது கிழக்கில் மட்டுமல்ல.. இப்ப வடக்கிலும் வியாபித்துவிட்டது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களிடம் தமிழ் மக்களின் காணிகளை அளிக்கொடுத்தது போல்.. இனப்படுகொலை சிங்களத் தலைமைகளை இராணுவத்தை சர்வதேச அரங்கில் கழுவிச் சுத்தப்படுத்தி தமிழர் உரிமைகளையும் விட்டுக்கொடுத்து.. கோவணத்துடன் நின்ற தமிழனை.. இன்று அம்மணமாக்கி விட்டுள்ளது.. இவற்றில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால்.. சிங்கள அரசுடன் ஒட்டி.. கடந்த 30 வருடங்களாக அரசியல் செய்யும் டக்கிளசும் சரி.. கடந்த 16 ஆண்டுகளாக அரசியல் செய்யும்.. கும்மானும் சரி... ஏன் இந்த முஸ்லிம் ஆக்கிரமிப்பை வடக்கிலும் கிழக்கிலும் தடுக்க முடியவில்லை. சிங்கள பெளத்த மயமாக்கத்தை தடுக்க முடியவில்லை. ஏழ்மை.. வேலையில்லாப் பிரச்சனைகளை தவிர்க்க முடியவில்லை..??!

கும்மான் இன்றா அரசியலுக்கு வந்தவர் இல்லையே. இவர் இன்று இலங்கையின் முதல் 5 பணக்காரர்களில் ஒருவர். இவர் தான் சார்ந்த மக்களுக்கு செய்து கொடுத்த நீண்ட காலத்திட்டங்கள் என்ன..?! குறுகிய காலத்திட்டங்கள் என்ன..?!

ஒரு முஸ்லிம் அரசியல்வாதி.. காசு வாங்கிறானோ இல்லையோ.. அவன் சார்ந்த சமூகத்திற்கு வேலை வாய்ப்பு.. காணி பிடித்துக் கொடுப்பு..  குறைந்த வட்டி... அல்லது வட்டி இல்லாக் கடனளிப்பு என்று அள்ளி வழங்கும் போது டக்கிளசும் சரி.. இவரும் சரி.. எதைச் செய்தார்கள்...???! அரச நிதியில் 75% சூறையாடிவிட்டு.. 25% தானும் பயன்படுத்தினார்களா...?!

இவர்கள் வென்று பாரளுமன்றம் போனாலும்.. தமிழ் மக்களின் பிரச்சனைகள் எதுவும் தீரப் போவதில்லை. இவர்கள் எல்லாம் செத்த பாம்பு என்பது முஸ்லீம்களுக்குத் தெரியும். முஸ்லிமகள் இன்று அஞ்சுவது கோத்தாவின் பெளத்த சிங்கள பேரினவாத அணுகுமுறைக்குத் தானே தவிர.. கும்மானுக்கோ டக்கிளசுக்கோ அல்ல. ஏனெனில்.. இவர்களின் பலவீனங்களை அவர்கள் அறிவார்கள்.

கும்மான்... கிழக்கில் இருந்து.. மகிந்த கோத்தாவுக்கு பின்னாலும்.. டக்கிளஸ் வடக்கில் இருந்து மகிந்த கோத்தாவுக்கு பின்னாலும் தங்களின் சுயலாபங்களுக்காக மாத்திரமே பயணிக்கிறார்கள். இவர்களை நம்பி தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்காது. 

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்களின் வெறுப்பு.. இவர்களுக்கான வாக்காக விழக்கூடும். காரணம்.. கூட்டமைப்பு மாற்றீடாக தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறக் கூடிய இன்னொரு வலுவான கூட்டமைப்பு இல்லாமல் போனதும்.. தமிழ் தலைமைகள் சுயநலத்தால் சிதறிக்கிடப்பதுவுமே. 

ஆனால்.. ஒரு போதும்.. இந்த நாதாரிகள்.. தமிழ் மக்களின் நிம்மதிக்கு.. உரிமைக்கு.. உழைக்குங்கள் என்று நம்பினீர்கள் என்றால்.. நிச்சயம் நீங்கள் மீண்டும் தேர்தல் முடிந்த கையோடு ஏமாறப் போவது உறுதி. இவர்கள் வென்றாலும்.. தோற்றாலும்.. தமிழர்களுக்கு ஒரு விமோசனமும் இல்லை என்பதே யதார்த்தம். இவர்களின் மூலதனமே மக்களை ஏமாற்றி தம்மை திடப்படுத்திக் கொள்வது. இன்றேல்.. கணவனும் மனைவியுமாக கிழக்கில் எதுக்கு களமிறங்க வேண்டும்...??! மக்கள் சேவைக்கா..???! 

கும்மான் பாராளுமன்றம் போகாமலே மக்கள் சேவை செய்யும் அளவுக்கு நிதியும் செல்வாக்கும் கொட்டிக்கிடக்கிறது.. ஏன் அதனை பாவிக்க மறுக்கிறார்..?! வாக்குகளுக்கு வழிகிறார்.. காரணம்.. சிங்களத்திடம்.. இப்போ இவர் பேரம் பேச எதுவும் இல்லை. மக்களின் வாக்கை வாங்கி அதனை மூலதனமாக்கி தனக்கான சுயலாப பேரம் பேசலுக்கே இத்தனை நாடகமும்.. பசப்பும். 

தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இதுகளை நம்பி ஏமாறப் போவது உறுதி. இதுவே தமிழனின் தலைவிதியாகிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

கும்மான் பாராளுமன்றம் போகாமலே மக்கள் சேவை செய்யும் அளவுக்கு நிதியும் செல்வாக்கும் கொட்டிக்கிடக்கிறது.. ஏன் அதனை பாவிக்க மறுக்கிறார்..

செல்வாக்கோ, செல்லாக்காசோ தெரியவில்லை. நிதி எங்கிருந்து வந்தது? வெளிநாட்டு நிறுவனங்கள் ஏதும் அனுப்பியதோ சமூக சேவை செய்ய? தமிழரை கொன்றும், கொள்ளையடித்தும், லஞ்சசம் பெற்றும் சேர்த்ததுதானே...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் எதுவும் எழுதுவதில்லையென்று இருந்தேன். ஏனென்றால், கருணாவுக்கு ஆதரவானவர்கள் வெளிப்படையாகவே அவருக்கான ஆதரவினை இங்கு வழங்கும்பொழுது நாம் செய்வதற்கு எதுவுமேயில்லை என்பதே எனது எண்ணமாக இருந்தது.

ஆனாலும், ஓரிரு கேள்விகள் மனதில் எழுவதையும் தடுக்க முடியவில்லை, அதனால் கேட்டுவிடுகிறேன்.

கருணாவின் சொந்த ஊர் கிரான். தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் ஒரு ஊர். அப்படியிருக்க, அம்பாறையின் திகாமடுல்லை பகுதியில், சிறுபான்மையினராக இருக்கும் தமிழ் வக்காளர்களைப் பிரித்து கிடைக்கக்கூடிய 1 ஆசனத்தையும் தட்டிப்பறிக்கவே மகிந்தவும் கோத்தாபயவும் இவரை அங்கு களமிறக்கியிருப்பது, உண்மையாகவே தமிழருக்கு ஒரு ஆசனத்தைக் கொடுக்கவல்ல, மாறாக எதையுமே கிடைக்காமல்ப் பண்ணுவதற்குத்தான் என்பது எப்படித் தெரியாமல்ப் போனது இந்த ஆதரவாளர்களுக்கு?

சரி, இவர்கள் ஆசைப்படுவதுபோல கருணாவுக்கு ஒரு ஆசனம் கிடைக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதுகூட மகிந்தவின் கட்சியின் ஆசனமாகவேதான் கணிக்கப்படப்போகிறது? அம்பாறையிலும், வெள்ளாவெளியிலும், திகாமடுல்லையிலும் நடக்கும் சிங்களக் குடியேற்றங்களை இந்த ஆசனத்தினைக் கொண்டு தடுத்துவிடமுடியுமா கருணாவினால்? சிங்களவர்களின் கட்சியில் சேர்ந்து, அவர்களின் ஆசீர்வாதத்தினால் தேர்தலில் போட்டியிடும் ஒரு தமிழர் எப்படி சிங்கள குடியேற்றத்தை நிறுத்தப்போகிறார்? ஆக, இவரது வெற்றியினால் தமிழரின் இருப்பு தக்கவைக்கப்படப்போவதில்லை, ஆனால் சலுகைகள் கிடைக்கலாம். ஆகவே ஆதரிக்கலாம் என்கிறார்களா?

சரி, முஸ்லீம்களுக்கெதிராக, அவர்களை அடக்கியாளவே கருணா களமிறங்குவதாக அவரின் ஆதரவாளர்கள் நினைத்தால், புலிகளிடமிருந்து கருணா பிரிந்தபோது அவரைப் பாதுகாப்பாக இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து கொழும்பிற்கு அழைத்துவந்தது அவரது முஸ்லீம் பள்ளித்தோழனான முஸ்லீம் அமைச்சரே என்பது அவர்களுக்கு ஏன் தெரியாமல்ப் போனது? 

தமிழர்கள் தம்மை ஒருபோதுமே ஆதரிக்கப்போவதில்லையென்பதை நன்குணர்ந்துள்ள சிங்களப் பேரினவாதம், கருணாவுக்குக் கொம்புசீவுவதன் மூலம், தமக்கு கிடைக்கவிருக்கும் முஸ்லீம் வாக்குகளை இழப்பதற்கு ஒருபோதுமே  விரும்பாது என்கிற சாதாரண அறிவுகூடவா இல்லாமல்ப் போனது இவர்களுக்கு? 

கருணாவை ஆதரிப்பதற்காக இவர்களிடம் இருக்கும் காரணங்கள் என்னவென்று கேட்டால், நிச்சயம் எதுவுமே இருக்கப்போவதில்லை, ஒன்றைத்தவிர.

Edited by ரஞ்சித்
addition

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

தமிழர்கள் தம்மை ஒருபோதுமே ஆதரிக்கப்போவதில்லையென்பதை நன்குணர்ந்துள்ள சிங்களப் பேரினவாதம், கருணாவுக்குக் கொம்புசீவுவதன் மூலம், தமக்கு கிடைக்கவிருக்கும் முஸ்லீம் வாக்குகளை இழப்பதற்கு ஒருபோதுமே  விரும்பாது என்கிற சாதாரண அறிவுகூடவா இல்லாமல்ப் போனது இவர்களுக்கு? முஸ்லீம்களுக்கெதிரான பாரிய சமர் ஒன்றினை கருணா செய்வார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கொண்டிருக்க, தனது முஸ்லீம்வாக்குக்கள் பாதிக்கப்படுவதறகு சிங்களம் ஒருபோதுமே இடமளியாதென்பது இவர்களுக்குத் தெரியாமல்ப் போனதேன்?

கருணாவை ஆதரிப்பதற்காக இவர்களிடம் இருக்கும் காரணங்கள் என்னவென்று கேட்டால், நிச்சயம் எதுவுமே இருக்கப்போவதில்லை, ஒன்றைத்தவிர.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2020 at 18:02, nedukkalapoovan said:

தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இதுகளை நம்பி ஏமாறப் போவது உறுதி. இதுவே தமிழனின் தலைவிதியாகிவிட்டது. 

இத்தனை ஆண்டுகள் ஏமாந்து விட்டோம் பழகிப்போனது தானே நெடுக்ஸ் மீண்டும் எதிர்த்து நின்று நாடா பிடிக்கமுடியும் 

11 hours ago, ரஞ்சித் said:

இந்தத் திரியில் எதுவும் எழுதுவதில்லையென்று இருந்தேன். ஏனென்றால், கருணாவுக்கு ஆதரவானவர்கள் வெளிப்படையாகவே அவருக்கான ஆதரவினை இங்கு வழங்கும்பொழுது நாம் செய்வதற்கு எதுவுமேயில்லை என்பதே எனது எண்ணமாக இருந்தது.

ஆனாலும், ஓரிரு கேள்விகள் மனதில் எழுவதையும் தடுக்க முடியவில்லை, அதனால் கேட்டுவிடுகிறேன்.

கருணாவின் சொந்த ஊர் கிரான். தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் ஒரு ஊர். அப்படியிருக்க, அம்பாறையின் திகாமடுல்லை பகுதியில், சிறுபான்மையினராக இருக்கும் தமிழ் வக்காளர்களைப் பிரித்து கிடைக்கக்கூடிய 1 ஆசனத்தையும் தட்டிப்பறிக்கவே மகிந்தவும் கோத்தாபயவும் இவரை அங்கு களமிறக்கியிருப்பது, உண்மையாகவே தமிழருக்கு ஒரு ஆசனத்தைக் கொடுக்கவல்ல, மாறாக எதையுமே கிடைக்காமல்ப் பண்ணுவதற்குத்தான் என்பது எப்படித் தெரியாமல்ப் போனது இந்த ஆதரவாளர்களுக்கு?

சரி, இவர்கள் ஆசைப்படுவதுபோல கருணாவுக்கு ஒரு ஆசனம் கிடைக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதுகூட மகிந்தவின் கட்சியின் ஆசனமாகவேதான் கணிக்கப்படப்போகிறது? அம்பாறையிலும், வெள்ளாவெளியிலும், திகாமடுல்லையிலும் நடக்கும் சிங்களக் குடியேற்றங்களை இந்த ஆசனத்தினைக் கொண்டு தடுத்துவிடமுடியுமா கருணாவினால்? சிங்களவர்களின் கட்சியில் சேர்ந்து, அவர்களின் ஆசீர்வாதத்தினால் தேர்தலில் போட்டியிடும் ஒரு தமிழர் எப்படி சிங்கள குடியேற்றத்தை நிறுத்தப்போகிறார்? ஆக, இவரது வெற்றியினால் தமிழரின் இருப்பு தக்கவைக்கப்படப்போவதில்லை, ஆனால் சலுகைகள் கிடைக்கலாம். ஆகவே ஆதரிக்கலாம் என்கிறார்களா?

சரி, முஸ்லீம்களுக்கெதிராக, அவர்களை அடக்கியாளவே கருணா களமிறங்குவதாக அவரின் ஆதரவாளர்கள் நினைத்தால், புலிகளிடமிருந்து கருணா பிரிந்தபோது அவரைப் பாதுகாப்பாக இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து கொழும்பிற்கு அழைத்துவந்தது அவரது முஸ்லீம் பள்ளித்தோழனான முஸ்லீம் அமைச்சரே என்பது அவர்களுக்கு ஏன் தெரியாமல்ப் போனது? 

தமிழர்கள் தம்மை ஒருபோதுமே ஆதரிக்கப்போவதில்லையென்பதை நன்குணர்ந்துள்ள சிங்களப் பேரினவாதம், கருணாவுக்குக் கொம்புசீவுவதன் மூலம், தமக்கு கிடைக்கவிருக்கும் முஸ்லீம் வாக்குகளை இழப்பதற்கு ஒருபோதுமே  விரும்பாது என்கிற சாதாரண அறிவுகூடவா இல்லாமல்ப் போனது இவர்களுக்கு? 

கருணாவை ஆதரிப்பதற்காக இவர்களிடம் இருக்கும் காரணங்கள் என்னவென்று கேட்டால், நிச்சயம் எதுவுமே இருக்கப்போவதில்லை, ஒன்றைத்தவிர.

மட்டக்களப்பில் பிள்ளையானும் கர்ணா அம்மானும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் ஆனால் அது ஒத்துப்போகவில்லை அதனால் கர்ணா மட்டக்களப்பில் தனக்கு வாக்கு வங்கி இல்லை என்றதும் அம்பாறையை தெரிவு செய்துள்ளார் அவருக்கு அமோக ஆதரவு அம்பாறை பக்கமோ முஸ்லீம் அரசியல் வாதிகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது ஆனால் கர்ணா  பேசியாவது மக்களின் மனங்களை வென்றுள்ளார் அவர் வென்றாலும் ஒன்றுதான் தோற்றாலும் ஒன்றுதான் அம்பாறை வாழ் தமிழ் மக்களுக்கு ஏனென்றால் தமிழ் எம் பி இருந்தும் அப்படி ஒன்றையும் செய்துவிடவில்லை. 

பல முஸ்லீம் எம்பிக்கள் அமைச்சர்கள் தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளார்கள் , சிங்கள் எம்பி தயா கமகே உட்பட  .

இப்ப கர்ணா அம்மானை பலருக்கு பிடித்துள்ளது காரணமே இல்லாமல் படங்கள் இருக்கிறது  ஆனால் கூட்டத்தை வைத்து கணக்கிட முடியாது என்பார்கள் இதனால் நான் அவருக்கு கொடி பிடிப்பவனோ அல்ல  கூட்டமைப்பை புறம் தள்ளி வேற கட்சி எதுவென்றாலும் ஆதரிக்க மக்கள் தயார் ஆனால் ஒன்று சிங்கள கட்சி மற்றது முஸ்லிம் கட்சி 

இந்த ரெண்டை ஆதரித்தாலும் சிலரால் துரோகி பட்டங்கள் மட்டுமே கொடுக்க முடியும்  அம்மக்களுக்கு என்னையும் சேர்த்து 

On 16/7/2020 at 04:16, பெருமாள் said:

வடக்கில் அங்கஜனுக்கும் டக்கிளசுக்கும் போட்டியிடும் மற்றைய வேட்பாளர்களை விட கூட்டம் அதிகமாய் உள்ளது ஒருவேளை பணம் கொடுக்கிறார்களோ தெரியலை அதே போல் கிழக்கிலும் கருணாவுக்கு கூட்டம் அதிகமாய் உள்ளது அரை  வெறியில் உளறும்  பகிடிக்காகவோ அல்லது அவரால் உண்மையிலே கிழக்கு விடிவு பெறும்  என்று நம்புகிறார்களோ புரியலை ..............

ஒன்றே ஒன்றுதான் கூட்டமைப்புக்கு வாக்களித்து இதுவரை என்னத்தை கண்டோம் என கேட்கிறார்கள் நானும் பலருடன் உரையாடிவிட்டேன் ஒரே பதில் தான் மட்டக்களப்பிலும் பிள்ளையானுக்கும் அமோக ஆதரவு பெருமாள்

Edited by தனிக்காட்டு ராஜா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.