Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும் – பேராயர் மல்கம் ரஞ்சித்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும் – பேராயர் மல்கம் ரஞ்சித்

இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

அத்தோடு, ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான பிரதான சூத்திரதாரிகளை அரசாங்கம் தண்டிக்காவிட்டால், அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அன்று பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், துன்பங்களுக்கு உள்ளான எம்மக்களை அதிலிருந்து மீட்க, அனைத்து மக்களும் இனம் கடந்து, மொழி கடந்து ஒன்றிணைந்து போராடினார்கள்.

ஆனால், இன்று நாம் எந்த நிலைமையில் உள்ளோம்? யாருடைய மொழி உலகிலேயே பழைய மொழி என விவாதித்துக்கொண்டு, காலத்தையும் நேரத்தையும் வீணாக்கிக்கொண்டு வருகிறோம்.

நான் அரசாங்கத்திடம் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்.

இவர்களால், நாடு பிளவடைவதைவிடுத்து வேறு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. நாம் இன்னும் கண்ணைத் திறந்து, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இதுவரை ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்ற உண்மை தெரியவில்லை. இன்று ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இன்று நடக்கும் விசாரணைகளின் ஊடாக தமது கடமையை நிறைவேற்றத் தவறிய அரசியல்வாதி மற்றும் அதிகாரி யார் என்பதை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இருந்தாலும் இந்த குண்டுத் தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள், இதற்கு பணம் வழங்கியவர்கள், கட்டளையிட்டவர்கள் யார் என்பதை இன்னமும் இவர்கள் கண்டறியவில்லை.

ஜனாதிபதி ஆணைக்குழு இவர்கள் தொடர்பாக விரைவில் கண்டறிய வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். அரசாங்கம், எமக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

இந்த சூத்திரதாரிகளை கண்டறிந்து அவர்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்தோடு, இந்த தாக்குதல்களின் பிரதான சூத்ததாரிகளை மறைக்கும் முயற்சியில் எந்தவொரு அரசாங்கமேனும் ஈடுபட்டால், அந்த அரசாங்கத்திற்கு நாம் எமது எதிர்ப்பினை நிச்சயமாக வெளிப்படுத்துவோம்.

கடந்த அரசாங்கம் இந்த விடயத்தில் சரியான நகர்வுகளையும் விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. சரியான தகவல்களை வைத்திருந்தும், அவர்கள் எதனையும் அன்று செய்யவில்லை. இன்றும் தங்களை காப்பாற்றிக் கொள்ளத்தான் முயற்சித்து வருகிறார்கள்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களை தெரிந்தும், அதனை தடுக்க முடியாதவர்கள் இன்று ஆணைக்குழு முன்னிலையில் கண்ணீர் வடிக்கிறார்கள். இது முதலைக் கண்ணீராகும். இந்த அதிகாரிகளின் சீருடைகளை அரசாங்கம் கழற்ற வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/இனம்-மற்றும்-மொழியை-பிரத/

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே மத... மதக் குழுமங்களின்.. மதங்களின் அடிப்படையில்.. மத அடையாளங்களோடு இருக்கும் அமைப்புக்களையும் தடை செய்யவும். அப்போதுதான்.. மதச் சார்பற்ற.. மொழிச்சார்பற்ற.. இனச்சார்பற்ற ஒரு பொது மனித இனத்தை உருவாக்கலாம். ஈஸ்டர் குண்டு வெடிப்பு போன்றவை நிகழாமல் இருக்க வகை செய்யும். ஒரு மதம் இலக்காக.. இன்னொரு மதம் இலக்கு வைக்க.. மதம் என்ற ஒன்று இருப்பதே காரணம்.

சாதாரண மனிதனான.. மல்கம் ரஞ்சித்.. மத அடையாளம் போட்டதன் விளைவே.. பேராயர் மல்கம் ரஞ்சித்... இதுவே அவரை இலக்கு வைக்கவும் காரணமாகிறது... இவ்வாறான நிலை ஒழிக்கப்படுதல் வேண்டும்.

அதேபோல்.. பெளத்த மதப் பீடங்கள்.. காவி உடைகள்.. மொட்டை போடுதல்.. எதுவுமே இருக்கக் கூடாது.  

மதக் கட்சிகள்.. மத அமைப்புக்கள்.. அல்லேலுயா.. பேர்வழிகள் உட்பட எவையுமே இருக்கக் கூடாது.

இலங்கைத் தீவை மதச் சார்பற்ற.. மொழிச்சார்பற்ற.. இனச்சார்பற்ற தேசமாக்குங்கள்.. ஒட்டுமொத்தமாக.. நிச்சயம் அதனை வரவேற்கலாம்.

அதைவிடுத்து.. சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை நிறுவ துணை போய்க்கொண்டு சிறுபான்மை மக்களின்.. மத.. இன.. மொழி அடையாளங்களை அழிக்கச் சொல்வதில் எந்த நியாயமும் கிடையாது.. மிஸ்டர் மல்கம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனம் மற்றைய இனத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்கி, அதன் அடையாளத்தையே அழித்துவிடக் கங்கணம் கட்டியிருக்கும் ஒரு நாட்டில், பாதிக்கப்படும் இனம் தன்னை அழிக்க முட்படுபவர்களின் அரசியலைப் புறக்கணிக்கவே தனக்கான ஒரு அரசியலை தனது இன அடையாளத்தின்படி அமைத்துக்கொள்ளவேண்டிய தேவை இருக்கும்போது அதன் தனித்துவ அடையாளத்தினை அழித்திவுடும்படி கேட்பது நிச்சயமாக இனவாதத்தின் அடிப்படையில்த்தான் இருக்கமுடியும்.

தமிழர்கள் தமக்கான அரசியலுக்கென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ, தமிழரசுக் கட்சியையோ, தமிழ்க் காங்கிரஸையோ, தமிழ்த்தேசிய முன்னணியையோ அமைப்பது தம்மால் ஒருபோதுமே சிங்களத் தேசியக் கட்சிகளுடன் இணையமுடியாதென்பதனாலேயே என்பதை சிங்களவர்கள் ஒருபோதுமே புரிந்துகொள்ளப்போவதில்லை. இன்று பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் சோரம்போன சில தமிழ் அரசியல் வியாபாரிகளைத் தவிர பெரும்பாலான தமிழர்கள் இன்னும் தமிழ்த் தேசிய அரசியலினை ஏதோ ஒருவழியிலேனும் முன்னெடுக்கும் கட்சிகளையே ஆதரிக்கின்றனர்.

இன்று தமது தனித்துவமும் அடையாளங்களும் காக்கப்பட வேண்டும் என்கிற நோக்கில் அரசியலில் ஈடுபட்டு வருபவர்கள் தமிழர்களும் முஸ்லீம்களும் மட்டுமே. ஐக்கிய தேசியக் கட்சியோ, சுதந்திரக் கட்சியோ, பெரமுனவோ அல்லது மக்கள் விடுதலை முன்னணியோ பொதுவான ஒரு பெயரை வைத்துக்கொண்டாலும் 99.99% மான இக்கட்சி ஆதரவாளர்கள் சிங்கள பெளத்தர்கள் அல்லது சிங்கள கத்தோலிக்கர்களே. ஆகவே, இன அடிப்படையிலான கட்சிகளை தடைசெய்யுமாறு கோருவது முற்றுமுழுதான இனவாதத்தித்தின் அடிப்படையில் விடுக்கப்படும் கோரிக்கை மட்டுமன்றி, சிறுபான்மையினர்களின் அரசியல் அடையாளத்தினையும் அழித்துவிடும் எண்ணத்திலும் ஆகும்.

சிங்கள பெளத்தர்கள் மட்டுமன்றி, சிங்கள கத்தோலிக்கர்களும் இன்று இனவாதம் கக்குவது கூறும் விடயம் என்னவெனில் சிறுபான்மையினரை அழித்தல் என்று வரும்போது சிங்களவர்கள் ஒன்றாகவே எப்போதும் நிற்பார்கள் என்பதைத்தான். மல்கம் ரஞ்சித் கத்தோலிக்கன் ஆகுமுன்னர் ஒரு பெளத்தன். இவன் பேசுவதற்கும் ஞானசார பேசுவதற்கும் இடையில் அதிக வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. பண்டாரநாயக்க, ஜே ஆர் போன்றவர்களும் பெளத்தத்திற்கு மாறிய கிறீஸ்த்தவர்கள் செய்த தமிழினத்திற்கெதிரான அட்டூழியங்களை நாம் மறந்துவிடமுடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரஞ்சித் said:

இன்று பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் சோரம்போன சில தமிழ் அரசியல் வியாபாரிகளைத் தவிர பெரும்பாலான தமிழர்கள் இன்னும் தமிழ்த் தேசிய அரசியலினை ஏதோ ஒருவழியிலேனும் முன்னெடுக்கும் கட்சிகளையே ஆதரிக்கின்றனர்.

யாழ். மாவட்டத்தில்  கடந்த தேர்தலில்  பெரும்பாலான தமிழர்களின் வாக்குகளை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் எந்த கட்சியை சேர்ந்தவர்?
 

23 minutes ago, ரஞ்சித் said:

ஐக்கிய தேசியக் கட்சியோ, சுதந்திரக் கட்சியோ, பெரமுனவோ அல்லது மக்கள் விடுதலை முன்னணியோ பொதுவான ஒரு பெயரை வைத்துக்கொண்டாலும் 99.99% மான இக்கட்சி ஆதரவாளர்கள் சிங்கள பெளத்தர்கள் அல்லது சிங்கள கத்தோலிக்கர்களே.

  1. 99.99% மான சிங்கள மக்களை ஆதரவாளர்களாக  கொண்ட இந்த கட்சிகள் சிங்களத்தை தமது பெயரில் வைக்காத போதிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தமது பெயரில் தமிழ் அல்லது முஸ்லிம் என்று வைத்திருப்பது ஏன்?
  2. தமிழ் அல்லது முஸ்லிம் என்ற வார்த்தையை பெயரில் இருந்து எடுப்பதால் இந்த கட்சிகளுக்கு பாதகமா அல்லது நன்மையா?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

99.99% மான சிங்கள மக்களை ஆதரவாளர்களாக  கொண்ட இந்த கட்சிகள் சிங்களத்தை தமது பெயரில் வைக்காத போதிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தமது பெயரில் தமிழ் அல்லது முஸ்லிம் என்று வைத்திருப்பது ஏன்?

தம்மை அழிப்பவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்ய விரும்பாமைதான் என்று நினைக்கிறேன்.

 

2 minutes ago, கற்பகதரு said:

யாழ். மாவட்டத்தில்  கடந்த தேர்தலில்  பெரும்பாலான தமிழர்களின் வாக்குகளை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் எந்த கட்சியை சேர்ந்தவர்?

தமிழ்த்தேசிய அரசியலின் பிளவால் இடம்பிடித்த சோரம்போனவராக இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அன்று பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், துன்பங்களுக்கு உள்ளான எம்மக்களை அதிலிருந்து மீட்க, அனைத்து மக்களும் இனம் கடந்து, மொழி கடந்து ஒன்றிணைந்து போராடினார்கள்.

ஆனால், இன்று நாம் எந்த நிலைமையில் உள்ளோம்? யாருடைய மொழி உலகிலேயே பழைய மொழி என விவாதித்துக்கொண்டு, காலத்தையும் நேரத்தையும் வீணாக்கிக்கொண்டு வருகிறோம்.

நான் அரசாங்கத்திடம் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்.

ஓய் லூசாயர் அவர்களே ...பிரிட்டிஷ் மிஷனரிமார்களுக்கெதிராக வத்திக்கானில் ஒரு வழக்கு போடலாமே
ஓவரா சீன் போடாதையும் என்ன , கொல்லப்பட்டவர்களில் முக்கால்வாசி பற தெமலு தானே உள்ளுக்க ஹாப்பி என்றாலும் போட்டிருக்கும் உடைக்கு கூவுறார் கொய்யா, உம்மை பற்றி இன்னும் போப்பாண்டவருக்கு முழுசா தெரியவில்லை போல     

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வாழ் மக்களை பொறுத்தவரை சிறீலங்கா என தொடங்கும் கட்சிகள் அமைப்புக்கள் ஏன் சிறீலங்கா என்ற பெயரே இனவெறி தான். அங்கிருந்து ஆரம்பிக்கணும் மாற்றத்தையும் தடைகளையும். 

  • கருத்துக்கள உறவுகள்

இவனெல்லாம் ஒரு ஆண்டகை. வத்திக்கான் என்ன நித்திரையோ.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்

ஐயா வெள்ளை உடுத்தி மொட்டை போடாத தேரரே! மொழி, மத பேதம் பேசும், காட்டும் அரசாங்கத்தை என்ன செய்யலாம் என்றும் சொல்லி விடுமேன். தமிழ் கத்தோலிக்கருக்கு என்னவோ கைகுடுக்கப்போறார் என்று யாரோ இங்கினை பறைஞ்சினம். இவர் வேறை என்னவோ பறையிறார்.  

  • கருத்துக்கள உறவுகள்

பேராயர் மல்கம் ரஞ்சித்தின் கல்விச் சான்றிதழ்களை  ஒருமுறைக்கு இருமுறை உண்மையானவைதானா என்று உறுதிப்படுத்துதல் நன்று. 😂

இவர் இப்படி கூறுவதில் எந்த தவறும் இல்லை; இவரது கருதுத்தை ஒரு கத்தோலிக்கரினதாய் பார்க்காமல் ஒரு சிங்களவரது  கருத்தாய் பாருங்கள்.

அதே போல இங்க களத்த்தில ஒருத்தர் சைவத்தமிழனுக்கும் கிறிஸ்த்தவ தமிழனுக்கும் ஏதோ சச்சரவுகள் இருப்பது போல காட்டுவதற்கு முற்பட்டு இனிமேல் கத்தோலிக்க தமிழர்கள் மல்கொம் ரஞ்சித்தின் பேச்சை தான் கேட்பார்கள் என்ற மாய தோற்றத்தை ஏற்டுத்த முயன்றவர். அவர் இப்ப எங்கே போனார்; ஒரு வேளை password தொலைந்து விட்டதோ....!!!

 

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Dash said:

இவர் இப்படி கூறுவதில் எந்த தவறும் இல்லை; இவரது கருதுத்தை ஒரு கத்தோலிக்கரினதாய் பார்க்காமல் ஒரு சிங்களவரது  கருத்தாய் பாருங்கள்.

அதே போல இங்க களத்த்தில ஒருத்தர் சைவத்தமிழனுக்கும் கிறிஸ்த்தவ தமிழனுக்கும் ஏதோ சச்சரவுகள் இருப்பது போல காட்டுவதற்கு முற்பட்டு இனிமேல் கத்தோலிக்க தமிழர்கள் மல்கொம் ரஞ்சித்தின் பேச்சை தான் கேட்பார்கள் என்ற மாய தோற்றத்தை ஏற்டுத்த முயன்றவர். அவர் இப்ப எங்கே போனார்; ஒரு வேளை password தொலைந்து விட்டதோ....!!!

 

அவ்வாறு பார்த்தால் உங்கள் கூற்று சரியானதுதான். ஆனால் துரதிட்டவசமாக தமிழர்களிலும் கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்களே. என்ன செய்வது ☹️

12 minutes ago, Kapithan said:

அவ்வாறு பார்த்தால் உங்கள் கூற்று சரியானதுதான். ஆனால் துரதிட்டவசமாக தமிழர்களிலும் கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்களே. என்ன செய்வது ☹️

ஆனால் தமிழ் கத்தோலிக்கர்கள் என்றுமே தமிழ் தேசியத்தின் தூண்களாக தான் இருந்திருக்கிறார்கள்; தமிழர் ரீதியில் மதம் சம்பந்தமான பிளவுகள் என்றும் இருந்ததில்லை, ஆனால் அதை ஊக்குவிக்க தான் பல IDக்கள் இங்கு. முயல்கின்றன.


மங்கள சமரவீர ஒரு மாத்தறை சேர்ந்த பெளத்தர். அவரே பேராண்டகை மல்கம் ரஞ்சித்தை சிங்கள பேரினவாததுக்கு துணை போவதாக குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

மல்கம் ரஞ்சித் ஆண்டகை அல்ல.

ஆள்பவர்களின் கை.

அனைத்து நு நிறுவனக்களின் பொறுப்பிலும் இனவாதிகளை வைக்கும் திட்டதின் ஓரங்கமாக ஆண்டகை ஆக்கப்பட்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Dash said:

அவர் இப்ப எங்கே போனார்; ஒரு வேளை password தொலைந்து விட்டதோ....!!!

தேர்தலுக்காக களம் இறங்கியவர், முடிந்ததும் நாமம் மறைந்து விட்டது. இருந்தாலும் வேறொரு நாமத்தில் உலாவுவார். சந்தர்ப்பம் நேரும்போது இன்னொரு நாமம் தரிப்பார். சற்று பொறுத்திருங்கள்! சட்டை அளவென்றால் மாட்டிக்கொண்டு வருவார்.

இந்த ஆயன் காயப்பட்ட ஆடுகளுக்கு கட்டுபோடுவதற்கே  அடையாளம் தேடுபவர். ஈஸ்ரர் குண்டுவெடிப்பிலேயே பாகுபாடு பார்த்து தரிசித்தவர். போலி ஆயரின் கருத்துக்கு  நாம் முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை வீணாக்கத் தேவையில்லை.  

ஆண்டகை அவர்கள் கூறினால் அது சரியாகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Robinson cruso said:

ஆண்டகை அவர்கள் கூறினால் அது சரியாகத்தான் இருக்கும்.

ஆமாம் சாமி..

ஆண்டகை கூறினால் சரியாகத்தான் இருக்கும்... 😜😜

  • கருத்துக்கள உறவுகள்

Free Market என்று கூறி உலகம்பூரா கொக்க கோலா வித்த அமேரிக்கா 
இப்ப சீனாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கு வரிவிதிக்கிறது 

அடுத்தவனை ஏய்த்துப்பிழைக்கும்போது எல்லாம் சரியாகத்தான் தெரியும் 
இலங்கை அரசியல் யாப்பே தலதாமாளிகைக்கு உப்பட்டு கிடக்கிறது 

இந்த உலகில் ஏமாளியாகவும் சோம்பேறியாகவும் இருப்பதுக்கும் வெகுமானம் உண்டு 
ஏன் கொடுக்கிறார்கள்? யார் கொடுக்கிறார்கள்?
என்பதுதான் "அபிவிருத்தி"  என்ற அடைச்சொல்லை புரியவைக்க கூடியது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

Free Market என்று கூறி உலகம்பூரா கொக்க கோலா வித்த அமேரிக்கா 
இப்ப சீனாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கு வரிவிதிக்கிறது 

அடுத்தவனை ஏய்த்துப்பிழைக்கும்போது எல்லாம் சரியாகத்தான் தெரியும் 
இலங்கை அரசியல் யாப்பே தலதாமாளிகைக்கு உப்பட்டு கிடக்கிறது 

இந்த உலகில் ஏமாளியாகவும் சோம்பேறியாகவும் இருப்பதுக்கும் வெகுமானம் உண்டு 
ஏன் கொடுக்கிறார்கள்? யார் கொடுக்கிறார்கள்?
என்பதுதான் "அபிவிருத்தி"  என்ற அடைச்சொல்லை புரியவைக்க கூடியது. 

அபிவிருத்தி என்கிற பெயரோடு உள்நுழைந்து, இருக்கிற வளங்களை அள்ளிக்கொண்டு தரைமேடாகவும், சுடுகாடாகவும் ஆக்கி விடுவார்கள் தாங்கள் வெளியேறும்போது. நாங்கள் அவர்கள் கைகளை நம்பி அவர்களில் தங்கி வாழ வேண்டியதுதான். விவசாயம் செய்து வாழ்ந்தவனுக்கு விவசாயம் படிப்பிக்கப்போகுது ராணுவம் பாருங்களேன், கண்ணிவெடி புதைக்கிற பழக்கத்தில வயலுக்கை என்னத்தை புதைக்கப்போறானோ? விவசாய பூமியில காப்பரண் அமைத்து மக்களை பிச்சக்காரனாக்கி விரட்டியவன். இப்போ வேறொரு வேஷம் போட்டு வாறான். டும்.... டும்.....  

On 1/9/2020 at 17:01, Kapithan said:

ஆமாம் சாமி..

ஆண்டகை கூறினால் சரியாகத்தான் இருக்கும்... 😜😜

அரசியல் செய்யாத, கடவுள் பணி செய்யும் ஒரே மனிதன். அவரை இங்கு ரோமாபுரியின் பிரதிநிதியாக பார்க்கிறோம். எனவே அவர் உண்மையயைத்தானே பேசுவார். பாவம் மனுஷன், என்ன செய்வது அவரின் நிலைமை அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Robinson cruso said:

அரசியல் செய்யாத, கடவுள் பணி செய்யும் ஒரே மனிதன். அவரை இங்கு ரோமாபுரியின் பிரதிநிதியாக பார்க்கிறோம். எனவே அவர் உண்மையயைத்தானே பேசுவார். பாவம் மனுஷன், என்ன செய்வது அவரின் நிலைமை அப்படி.

நன்றி நீங்கள் தந்த  Lollipops க்கு.

விரலுக்குப் பதிலாக lollipops ஐ வைத்து சுவைக்கிறோம் 😂😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 31/8/2020 at 07:01, தமிழ் சிறி said:

இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும் – பேராயர் மல்கம் ரஞ்சித்

 

ஆண்டகைக்கு இந்த தூசன பிக்குவை தெரியுமா?

தமிழர்கள் அனைவரையும் புலி என்று திட்டிய மட்டு.மங்களராமய விகாராதிபதி - ஊர்ப்  புதினம் - கருத்துக்களம்

  • கருத்துக்கள உறவுகள்

இனம், மதம், மொழியை பின்பற்றியே இவர் அறிக்கைகளும், தரிசனங்களும், கரிசனைகளும் விடுகிறார், காட்டுகிறார். இதில் உபதேசம் வேற. " உபதேசம் உனக்கில்லையடி." கிறிஸ்தவ பாதிரியாரை அடித்தபோது தட்டிகேட்க்காத இவர், பவுத்தத்துக்கு, சிங்களத்துக்கு முன்னுரிமை என்ற போது பெரியண்ணன் சொன்னால் தம்பி கேட்க வேண்டும் என்று விளக்கம் சொன்னவர்,  பொதுமை பேசுவதில் வியப்பொன்றும் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.