Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/9/2020 at 03:53, சண்டமாருதன் said:

உங்கள் கேள்விகளுக்கு நேரடியாக வரையறுக்கப்பட்ட விடைகள் காண்பது எளிதல்ல. என்னுமொருவிதத்தில் அவ்வாறான வரையறுப்புகளை நோக்கி பயணித்தால் அது பாதகமாகவும் முடியலாம். 

ஒரு பெரும்பான்மை மக்கள் கூட்டம் தங்களை சிங்கள தேசிய இனமாக உருவகப்படுத்தி சிறுபான்மை மக்கள் கூட்டத்தை  தமிழ் தேசீய இனமாக கருதி  அவர்கள் மீது ஒடுக்குமுறையை  செய்கின்றது. இவ் ஒடுககுமுறைக்கு உட்படுகின்றவர்கள் தம்மை தமிழ்த்தெசீய இனமாக உணர்ந்து ஒடுக்கு முறையில் இருந்து விடுபட போராடுகின்றனர். இவ்வாறான ஒரு கோணத்தில் தமிழ்த்தேசீயம குறித்த அணுகுமுறைகள் அமையலாம். இதற்கு உள்ளே இறங்கி அலசினால் தமிழ்த்தேசீயத்துக்கான வரையறை வரவாய்ப்பில்லை வேறு நிறைய வரும். .

பத்து வருடங்களுககு முதல் இது சம்மந்தமாக பதியப்பட்ட கருத்து.  கிருபன் இணைத்த தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள் என்ற கட்டுரையும் இவ்விடத்தில் பொருத்தமானது என்றே எண்ணுகின்றேன். 

On 16/9/2020 at 16:44, Eppothum Thamizhan said:

கோஷான், யார் தமிழர், நாம் தமிழர் என்ற கதைகளையெல்லாம் வேறு திரிகளில்  வைத்து வாதாடி களைத்துவிட்டோம் . தயவுசெய்து இந்தத்திரியையாவது சரியான போக்கில் பயணிக்க விடலாமே??

On 16/9/2020 at 07:25, கிருபன் said:

நன்றி சண்டமாருதன்.

ஜான் மாஸ்ரரின் கட்டுரையை pdf இல் இருந்து கொப்பி பண்ணி சுரதா converter மூலம் பாமினியில் இருந்து ஒருங்குறிக்கு மாற்றி செம்மைப்படுத்தி இணைத்திருந்தேன். அண்மையில் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை!

தோழர் ரகுமான் ஜானின் மூன்று தடிமனான புத்தகங்கள் கடந்த ஆண்டு வெளிவந்தன. அவற்றில் இருந்து சில பகுதிகளை தட்டச்சு செய்து இணைக்கும் நோக்கம் இருக்கின்றது. 

மூவரின் கருத்துக்கும் நன்றி.

விரைவில் எனது கேள்விகளின் அவசியம் பற்றியும் அவற்றிற்கான விடைகளிம் அத்தியாவசியம் பற்றியும் விரிவாக எழுதுகிறேன்.

  • Replies 147
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

முதல்வன்

நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான்.  அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒ

சண்டமாருதன்

சிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம்

goshan_che

தரப்படுத்தல் - என் பார்வை தரப்படுத்தல் ஒரு சிக்கலான விடயம். ஆனால் இதை தமிழர் தரப்பு கையாண்ட முறையில் பல பாடங்களை படிக்க முடியும். தரப்படுத்தல் மட்டும் அல்ல, நிர்வாக சேவையில், இராணுவத்தில், ப

  • கருத்துக்கள உறவுகள்
Posted

M.K.சிவாஜிலிங்கம் தமிழ்மக்கள் தேசிய கூட்டணி & க.சுகாஷ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த பத்தாண்டுகளாக தமிழர் பகுதிகளில் கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறதே... அது பற்றி தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க. அருந்தவபாலன்...
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதற்கு முன்  தாயகத்திலுள்ள வடக்கு  கிழக்கு  தமிழர்கள் எதை  எதிர்பார்க்கிறார்கள்??

அவர்களுடைய  சமீப கால தெரிவுகள்  என்ன??

உதாரணத்துக்கு: 

ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் மாமனிதராக போற்றப்படுபவர்.

அவரை யார்  எதற்காக பலியெடுத்தார்  என்று எல்லோருக்கும்  தெரியும்.

அதே  கொலைகாரர் அதே பகுதி மக்களால்  அதிகப்பெரும்பான்மை வாக்குகளால் சிறையிலிருந்தபடியே தெரிவு  செய்யப்படுகிறார்?

இதை எந்த வகைக்குள்  அடக்குவது????

அடுத்த கட்டத்தை

எங்கிருந்து?

எவர்  தலைமையில் நகர்த்துவது??????

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விசுகு said:

நீங்கள் பின்னால் உள்ள சூட்சுமத்தினை மறக்க வேண்டாம்.

இலங்கையின் அரசியலமைப்பின் படியான விகிதாசார தேர்தலில் படி ஒரு கட்சி 2/3  கடினம். எவ்வாறு மகிந்தா  கட்சி பெற்றுக்  கொண்டது ஏறி யோசித்தீர்களானால், பிள்ளையான், அங்கயன் வென்றது எப்படி என்ற விடையும் கிடைக்கும். 

தாளும் கப்பலில் இருந்து கப்டன் மைத்திரியே பாய்ந்த நிலையில், அந்த கட்சியின் அங்கயன் 20 கோடி வரை என்ன நம்பிக்கையில் செலவழித்தார் என்று யோசித்து பாருங்கள். எந்த ஒரு வியாபாரியும், போட்ட பணத்தினை எடுக்க வழியில்லை என்றால் முதல் இடார்.

ஆகவே, சீனாக்காரன் பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது. அதுவே 2/3க்கு காரணம்.

அதேவேளை, கருணா அம்மானை மக்கள் மன்னிக்க தயாரில்லை என்பதனை, அவரது தோல்வி உணர்த்துகிறது.

அதேவேளை, முஸ்லீம் அரசியலால் வெறுத்துப்போன மக்கள், மகிந்தா  ஆதரவு, வியாழேந்திரனுக்கும், பிள்ளையானுக்கும் போட்டுள்ளார்கள்.

மறுபுறம், சவூதி வஹாபிசத்தினை, அதனூடு பயங்கரவாதத்தினையும், பணத்திற்க்காக கொண்டு வந்து சேர்த்த, ஹிஸ்புல்லாவும் நிராகரிக்கப்படுள்ளார். 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, Nathamuni said:

நீங்களுமா இப்படி.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலக அமைதி தினம்: நினைவேந்தலைக் கூட அனுஸ்டிக்க முடியாது தவிக்கும் தமிழர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தமிழருக்கு முன்னால் இன்றிருக்கும் அரசியல்த் தெரிவுகள் என்னவென்று கேட்டிருந்தீர்களென்றால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும், பெரிய வேறுபாடில்லை.

ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்று பார்த்தால் பின்வருபவை எனக்குத் தெரிகின்றன.

1. தமிழருக்கான சரியான தலைமைத்துவம் இன்மை.
2. தமிழ் அரசியல் தலைமைகளின்  பிளவும், மொத்த இனத்தினையும் பிரதிநித்துவம் செய்வதில் ஏற்பட்டிருக்கும் தோல்வியும்.
3. தாயகத்தில் சிங்களப் பேரினவாதத்திற்கு ஆதரவான சக்திகளின் எழுச்சி.
4. நடத்தப்பட்ட திட்டமிட்ட இனக்கொலைக்கான நீதியின்மை.
5. தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு வரும் எமது தாயகம்.
6. எமது தாயகத்தில் தொடர்ச்சியாக ஆக்கிரமித்து நிற்கு சிங்கள இனக்கொலை ராணுவம்.
7. விடுவிக்கப்படாமலிருக்கும் தமிழ் அரசியல்க் கைதிகள்.
8. நிரந்தரமாக தமது வாழிடங்களிலிருந்து துரத்தப்பட்டிருக்கும் தமிழர்கள்.
9. தமிழ்த் தேசிய அரசியல் செல்வாக்கின் வீழ்ச்சியும், சிங்களப் பேரினவாத அரசியலின் ஊடுருவலும்.
10. தமிழரின் விடுதலைக்கெதிரான தொடர்ச்சியான எதிர்ப்பு அரசியலையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவரும் இந்தியா. 
11. வேண்டுமென்றே புறக்கணிக்கப்படும் தமிழர் தாயகம்.
12. தமிழர்களை பிரதேச ரீதியப் பிரித்தாள்வதில் பேரினவாதம் காட்டும் மும்முரமும், அது இன்று அடைந்திருக்கும் வெற்றியும். 
13. திட்டமிட்ட முறையில் சீரழிக்கப்பட்டுவரும் இளைய தமிழ்ச் சமுதாயம்.

இவற்றினை விடவும் இன்னும் பல காரணிகள் இருக்கலாம். மற்றையவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். 

இவற்றினை எதிர்த்து அரசியல் செய்வதற்கு என்ன செய்யலாம் என்பதை இனி யோசிக்கலாம். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நன்றாக எழுதி இருக்கிறீங்கள் ரஞ்சித் அண்ணே.

நான் இதில் மேலதிகமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

ஒரு  எழுச்சிமிகு போராட்டத்தின் தோல்வியும் மக்களை விரக்தியுற அல்லது சோம்பல் நிலைக்கு தள்ளியுள்ளது.

போராட்டத்தின் முறைதான் மாறியுள்ளது போரிடும் குணம் இன்னும் விரியமாகவேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்படவேண்டும்.

உதாரணமாக திலீபனின் நினைவுநாளை கொண்டாட முடியவில்லை என்றால் சிறையை நிரப்பவேண்டும். 

20 000 மக்களை ஒன்றாக திரட்டினால் பொலீசால் சட்டத்தால் ஒன்றுமே செய்யமுடியாது. துணிந்து செய்ய நல்ல தலைமை வேணும், அவரை நம்பும் மக்கள் பலம் வேண்டும்.

Edited by முதல்வன்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ரஞ்சித் said:

ஈழத்தமிழருக்கு முன்னால் இன்றிருக்கும் அரசியல்த் தெரிவுகள் என்னவென்று கேட்டிருந்தீர்களென்றால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும், பெரிய வேறுபாடில்லை.

ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்று பார்த்தால் பின்வருபவை எனக்குத் தெரிகின்றன.

1. தமிழருக்கான சரியான தலைமைத்துவம் இன்மை.
2. தமிழ் அரசியல் தலைமைகளின்  பிளவும், மொத்த இனத்தினையும் பிரதிநித்துவம் செய்வதில் ஏற்பட்டிருக்கும் தோல்வியும்.
3. தாயகத்தில் சிங்களப் பேரினவாதத்திற்கு ஆதரவான சக்திகளின் எழுச்சி.
4. நடத்தப்பட்ட திட்டமிட்ட இனக்கொலைக்கான நீதியின்மை.
5. தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு வரும் எமது தாயகம்.
6. எமது தாயகத்தில் தொடர்ச்சியாக ஆக்கிரமித்து நிற்கு சிங்கள இனக்கொலை ராணுவம்.
7. விடுவிக்கப்படாமலிருக்கும் தமிழ் அரசியல்க் கைதிகள்.
8. நிரந்தரமாக தமது வாழிடங்களிலிருந்து துரத்தப்பட்டிருக்கும் தமிழர்கள்.
9. தமிழ்த் தேசிய அரசியல் செல்வாக்கின் வீழ்ச்சியும், சிங்களப் பேரினவாத அரசியலின் ஊடுருவலும்.
10. தமிழரின் விடுதலைக்கெதிரான தொடர்ச்சியான எதிர்ப்பு அரசியலையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவரும் இந்தியா. 
11. வேண்டுமென்றே புறக்கணிக்கப்படும் தமிழர் தாயகம்.
12. தமிழர்களை பிரதேச ரீதியப் பிரித்தாள்வதில் பேரினவாதம் காட்டும் மும்முரமும், அது இன்று அடைந்திருக்கும் வெற்றியும். 
13. திட்டமிட்ட முறையில் சீரழிக்கப்பட்டுவரும் இளைய தமிழ்ச் சமுதாயம்.

இவற்றினை விடவும் இன்னும் பல காரணிகள் இருக்கலாம். மற்றையவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். 

இவற்றினை எதிர்த்து அரசியல் செய்வதற்கு என்ன செய்யலாம் என்பதை இனி யோசிக்கலாம். 

இத்துடன் 

14 - இவற்றையெல்லாம் மறுத்து மறந்து சிங்களவனுடன் வாழலாம்  வாழ்வோம் என அரைவாசித்தமிழர் தயாரான நிலையில்??????

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, விசுகு said:

இத்துடன் 

14 - இவற்றையெல்லாம் மறுத்து மறந்து சிங்களவனுடன் வாழலாம்  வாழ்வோம் என அரைவாசித்தமிழர் தயாரான நிலையில்??????

உண்மைதான் அண்ணோய். ஆனால், அது சிங்களவர்களுடன் வாழலாம் என்பதைவிட, சலுகைகளுக்காகவென்று இருக்கலாம் என்பதுதான் எனது எண்ணம். சலுகைகள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்று பார்க்கப்படலாம்.

ஆனால் என்ன, இதை எழுதும்போது ஸ்டான்லி அண்மையில் எழுதிய ஒரு பதிவு ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. அதில், தந்தை செல்வா கிழக்கிற்கான தனது விஜயம் ஒன்றின்போது தமிழ்த்தேசியத்துடன் சேர்ந்து , பேரினவாதத்திற்கு எதிராக பயணிக்கலாம் என்று கேட்டபோது கிழக்கின் தலைவர்களில் ஒருவரான நல்லையா "வடக்கின் நிலைமையும் கிழக்கின் நிலைமையும் வேறுவேறானவை, எங்களை எங்கள் பாட்டில் விட்டுவிடுங்கள், நாங்கள் சிங்களவருடன் எமது சோலியைப் பார்த்துக்கொள்கிறோம்" என்று கேட்டுக்கொண்டதாக எழுதியிருந்தார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்களின் கவலை நியாயமானது. ஆனால், இது பிள்ளையானின் செயலாளர் ராஜபக்ஷேக்களுக்குத் தாம் வழங்கும் ஆதரவினை நியாயப்படுத்த எழுதிய ஒரு கருத்தாகவே எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். ஒட்டுமொத்த தென் தமிழீழ மக்களினது கருத்தாக இது இருக்காதென்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயக மக்களின் தேர்தல் தெரிவுகளுக்கு காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டால் யாரை அவர்கள் தேர்ந்திருக்கிறார்கள் என்றும் புரிந்து விடும்!

ஈழத்தில் தமிழ் தேசியம் என்பது, நிலம், மொழி, அபிவிருத்தி என்ற மூன்று முனைகளில் முன்னேற வேண்டும். இந்த மூன்று முனைகளிலும் வேலை செய்யக் கூடிய தமிழர்கள்  எந்த அணியில் இருந்தாலும் ஆதரவு மறைமுகமாவது கொடுக்கப் பட வேண்டும்! ஒரு அமைப்பின் legacy குறித்துக் கவலைப் பட வேண்டிய காலம் தாயகத்தில் மலையேறி விட்டது எனவே நினைக்கிறேன்!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, ரஞ்சித் said:

ஒட்டுமொத்த தென் தமிழீழ மக்களினது கருத்தாக இது இருக்காதென்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. 

அண்ணே இது இன்னொரு பரிமாணத்தை என் மனதில் தோற்றுவிக்கிறது.

உண்மையில் தாயக மக்கள் என்னதான் நினைக்கிறார்கள் என்பதை அறிய சுயாதீன தேசியம்சார் ஊடக அமைப்பு ஒன்றை அமைக்கவேண்டும். 

பலவேறு தரப்பிடம், பிரதேசம், பொருளாதாரம், கல்வியறிவு, முன்னாள் போராளிகள், போராளி குடும்பங்கள், புலி எதிர்ப்பாளர்கள், மதம், நகரம், கிராமம், புலம்பெயர்ந்தோர், பல்வேறு தொழில் சார்ந்தோர், சிங்கள பகுதியில் வாழ்வோர்,  என பல்வேறு samples இடம் ஒரு கேள்விக்கொத்தாக தகவல் திரப்படவேண்டும். இதற்கு கலந்துரையாடல், workshops போன்றவற்றையும் பயன்படுத்தலாம். Freelancer ஊடகவியலாளர்கள், தேசிய பற்றாளர்களை கொண்டு திரட்டப்பட்டும் தகவலை அடிப்படையாக வைத்து பயணிக்கவேண்டிய திசை ஆற்றப்படவேண்டிய களப்பணி என்பவற்றை தீர்மானிக்கலாம். 

இது ஒரு மக்கள் சக்தியூடாக நடாத்தப்படவேண்டும். ஊகங்களை விட தரவுகள் முடிவுகளை ஆணித்தரமாக்கும்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, முதல்வன் said:

இது ஒரு மக்கள் சக்தியூடாக நடாத்தப்படவேண்டும். ஊகங்களை விட தரவுகள் முடிவுகளை ஆணித்தரமாக்கும்.

நல்ல யோசனை.

முதலில் மாதிரி வினாக் கொத்தொன்றினை யாழ்க்களத்தில் உருவாக்கி, இங்கிருப்போரின் கருத்தினை அறிந்தால் என்ன? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/9/2020 at 23:18, goshan_che said:

என்னடாப்பா யாழில் ஆமான திரி இது ஒன்றுதான் ஆனால் இது காத்து வாங்குது.

தேசிய இனம் என்றால் என்ன?

இனத் தேசியம் என்றால் என்ன?

அதன் ஏற்று கொள்ளபட்ட வரையறைகள் என்ன?

இந்த வரையறைகளின் படி தமிழ் தேசியம் என்றால் என்ன?

இவற்றை பற்றியும் இந்த திரியில் ஆராய்ந்தால் நல்லம்.

பிகு: யாழின் ஒரு பண்பட்ட கருத்தாளருக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடலின் விளைவாக,  இந்த கேள்விகளுக்கான விடையை ஒரு சீரான வகையில், விஞ்ஞான பூர்வமாக அணுக விரும்புகிறேன்.

உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.

யார் தமிழர்? தமிழ் தேசியம் என்பதன் வரையறை யாது? என்ற தெளிவு எமக்கு இருந்தால் மட்டுமே அதை நாம் அடுத்த தலைமுறைக்கும் கடத்த முடியும், என்பது என் தாழ்வான கருத்து.

I

இந்த கேள்விகளை நான் இங்கே முன் வைத்தமைக்கு ஒரு காரணம் இருக்கிறது.

நாம் ஒரு பெரும் போராட்டத்தை தேசியத்தின் பால் நடத்தி இருப்பினும் உண்மையில் 1977 வரை தமிழ் தேசிய சிந்த்தனை தமிழர் மத்தியில் எழுச்சி பெறவில்லை என்பதே உண்மை.

இத்தாலிய, பிரெஞ்சு, அரபிக், சிங்கள, தேசியங்கள் எல்லாம் வீறு கொண்டு எழுந்த்து பல காலத்தின் பின்பே தமிழ் தேசியம் தமிழர் மத்தியில் அதுவும் இலங்கையில் மட்டும் தளிர் விட்டது.

ஆகவேதான் ஜின்ன்னாவுடன் பொன் ராமநாதனை ஒப்பிடலில் எனக்கு பெரிதும் உடன் பாடில்லை. 
ஆயுத போராட்டம் கூட முதலில், வன்முறைக்கு எதிரான எதிர்வினை, வர்க்க புரட்சி என்ற பல படிகளை தாண்டியே, திம்புவில் தமிழ் தேசியத்தில் மையம் கொள்கிறது.

இதனாலேயோ என்னமோ -பிரபாகரன், பாலசிங்கம், போன்ற மிக சிலரைத்தவிர எம் அரசியல் தலைவர்கள் பலருக்கும் தமிழ் தேசியம் என்றால் மேடை ஏறி இனப்பெருமை பேசுவது, உரிமைக்காக குரல் கொடுப்பது என்பதுக்கு அப்பால் நகர முடியாமல் இருக்கிறது.

யாழ் களத்தில் கூட இப்படி எழுதினால்- "பாரேன் இவர் எமக்கே வகுப்பெடுக்கிறார், நாம் போராட்டட்துக்கு எவ்வளவு செய்தோம்" என்பதாக எழுதுவார்கள்.

ஆனால் உண்மையில் நம்மில் எத்தனை பேர் இந்த கேள்விகளை நம்மை நாமே கேட்டு தெளிவாகியுள்ளோம்?

இது இப்படி இருக்க "கிழக்கு தேசியம்" "அபிவிருத்தி சேர் தேசியம்" என்ற பதங்களுக்குள் எம்மக்கள் சிக்குண்டு போவதை நொந்து பலனேதும் இல்லை.

மக்கள் ஒவ்வொரு மட்டத்திலும் தேசிய அரசியலுக்குள் ஈர்க்கபடவேண்டும், மாணவர்களை ஈர்க்க வேன்டும் என்பததெல்லாம் சரியே, ஆனால் முதலில் அத்திவாரம் ஒழுங்காக இருக்க வேண்டும். இந்த அத்திவாரம்தான் தமிழ் தேசியம் பற்றிய தெளிவான புரிதலும், வராலாற்று பற்றிய விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையும்.

இவையின்றி நாம் ஒரு அரசியல் சித்தாந்ததை கட்டி எழுப்பினால் அது மூன்று வகையான மக்களையே பிரசவிக்கும்.
1. வெற்று இனப் பெருமை பேசும் மூடர்கள்
2. சந்தர்பவாதிகள்
3. ஒரு கட்டட்டுக்கு மேல் இது "முழுதும் பொய்" என முடிவு கட்டி பாதை மாறுபவர்கள்

ஆகவேதான் இந்த அடிப்படை சித்தாந்த கேள்விகளுக்கு விடை சொல்லாமல்- ஒரு ஜனரஞ்சக (populist) அரசியலாக தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க முடியாது.

ஆயுத போராட்டம் இருந்த காலத்தில் தமிழ் தேசியத்தை ஜனரஞ்ச வழியில் எவ்வளோ தூரம் கடத்தி வந்த போதும், அடுத்த 10 வருடட்தில், அங்கயனும், வியாழேந்திரனும் வெல்லும் நிலை வந்து, தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலமே கேள்வி குறியாகி நிற்கிறதென்றால் அதன் காரணம் யாது?

சித்தாந்த தெளிவின்மையே.

ஆகவே இந்த திரியில் சில கேள்விகளை கேட்டு, நானும் வாசிப்பவர்களும் விளக்கம் அடைய முடியுமா என பரீட்சிக்க விழைகிறேன்.

இனம் என்றால் என்ன?

ஆங்கில ரேஸ் (race), எத்தினிசிட்டி (ethnicity),  நேசன் (nation) என்ற மூன்று பதங்களும் தமிழில் இனம் என்றே அழைக்கப்படுகிறன. 

ஆங்கிலத்திலும் கூட இவற்றுக்கு பல அர்தங்கள் உண்டு.

இப்போதைக்கு நேசன்,எத்னிசிட்டி என்ற பதங்களை விடுவோம். ரேசை (race) மட்டும் பார்ப்போம்.

பொதுவாக ஒரு ஐரொப்பியரை அல்லது அமெரிக்கரை கேட்டால் தாம் காக்கேசியன் (Caucasian) ரேஸ், ஆங்கில/ஜேர்மன்/பிரென்சு எத்னிசிட்டி என்பார்கள்.

நாம் எப்படி? 

உலகளாவிய தமிழர்களின் ரேஸ் என்ன? 

ரேஸ் என்ற பகுப்பு ஒரு உயிரியல் பகுப்பு அல்ல. அது ஒரு சமூக படைப்பு (social construct). மனித மரபணுவில் வேறுபட்ட இனங்களை பகுத்தரிய முடியாது என்கிறது இக்கட்டுரை.

https://www.nationalgeographic.co.uk/history/2019/02/race-and-ethnicity-explained 

சரி இந்த ரேஸ் எனும் பகுப்பு ஒரு சமூக கட்டமைவாகவே இருக்கட்டும். அப்படியானாலும்
 
காக்கசோயிட், நீக்ரோயிட், மொங்கலோயிட், ஒஸ்ரலோயிட் இதில் நாம் யார்?

அல்லது நாம் இன்னொரு தனி ரேஸ்சா?

பிகு: என்னடா இதுக்கும் தமிழ் தேசியத்துக்கும் என்ன தொடர்பு? என மண்டையை பிய்க வேண்டாம். நாம் ஒரு கட்டிடத்தின் அத்திவார செங்கல்லை பற்றி கதைக்கிறோம். மேலே உள்ள விதானத்தை பற்றி அல்ல என்பதை மறக்க வேண்டாம்.

  • Like 2
Posted
12 hours ago, விசுகு said:

இத்துடன் 

14 - இவற்றையெல்லாம் மறுத்து மறந்து சிங்களவனுடன் வாழலாம்  வாழ்வோம் என அரைவாசித்தமிழர் தயாரான நிலையில்??????

சிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம் என்று கூறினால் அதுவும் பொருந்தாது. 

தமிழர்கள் எந்த வகையில் ஒடுக்குமுறைக்கு உட்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்துதான் அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எமது வீரியமும் வெளிப்படும். முன்பு சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தப்பி ஓடவேண்டியிருந்தது. திருப்பி அடிக்கவேண்டியிருந்தது. வேறு நாடுகளில் குடியேறுதல் என்ற புதிய ஒரு வளியும் பிறந்தது. (நாங்கள்)

இப்போது "நீ தமிழன் " என்று பொதுமைப் படுத்தி கொல்வதில்லை. அவ்வாறு பொதுமைப் படுத்தி ஒடுக்கினால் அதற்கு ஏற்ப தமிழரும் அதை எதிர்கொள்ள முற்படுவர்கள் என்பதை அறிந்து பகுதி பகுதியாக பிரித்து நுட்பமாக ஒடுக்குமுறையை செய்கின்றார்கள். 

வாழ்வது, தப்பி பிழைப்பது என்ற நிலையில், சிங்களவனை அனுசரித்து வாழ்வது தாயக மக்கள். நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறி வாழ்வது நாங்கள். இந்த இரு தரப்பையும் கடந்து எமக்கென்று ஒரு நாட்டில் சுதந்திரமாக வாழ்வது என்ற மூன்றாவது நிலையில் தான் தமிழ்த்தேசீயம் வருகின்றது. இந்த மூன்றாவது தரப்பில் தற்போது ஒருவரும் இல்லை. இருக்கிற இரு தரப்பும் தான் இந்த மூன்றாவது தரப்புக்கு நகரவேண்டும். 

ஏன் நகரவேண்டும் ? ஆசை விருப்பங்களை கடந்து மூன்றாம் நிலைக்கு நகரவேண்டிய தேவை என்ன ? எனக்கு புலம்பெயர் நாட்டில் எல்லாம் ஒகே யா போகுது. தாயகத்தில இருக்கிற என்னுடைய உறவுகள் போராட்ட காலத்தில் கமம் செய்ய படு சிரமம் பட்டது போலன்றி இப்போது இலகுவாக கமம் செய்து வருமானம் ஈட்டக் கூடியவாறு உள்ளது. உரம் மருந்து மின்சாரம் பிரச்சனையில்லை. மூன்றாம் நிலைக்கு போகவேண்டிய தேவையின் அழுத்தம் இல்லை. 

தேவை தான் பிரதான உந்து சக்தி. கஸ்டம் வந்தால் கடவுளை அதிகம் நாடுவதுபோல தேவை ஏற்படில்தான் தேசீயமும். தேசீயம், இனம், சுதந்திரம் என்ற பொது உணர்வுத் தன்மைகளுக்கு உள்ளே இருப்பது " யாரும் எம்மை கொன்று விடக் கூடாது, நாம் இருந்த இடத்தை வீட்டை காணி நிலங்களை பறித்துவிடக் கூடாது. பட்டிணியால் சாகக் கூடாது".இப்படியான பிரச்சனைகள் தான் உள்ளே இருப்பது. வாழ்க்கைப் போரட்டம் தான் முதலில் பின்னரே எமது அடயாளங்கள் " இப்போது இந்த பொதுத் தன்மைகளுக்கு உள்ளே உள்ள பிரச்சனைகளுக்குள் சிங்கள ஒடுக்கு முறை றால் போட்டு சுறா பிடிக்கும் பொறிமுறையோடு வந்துவிட்டது. இந்த சிக்கலான நிலையை நாம் வெளியில் இருந்து பார்க்கும் போது சிங்களவருடன் சேர்ந்து வாழ விரும்புவது போல தோற்றமளிக்கலாம். கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் இதுவே வாழ்வாகிவிடும் என்பதும் உண்மையே. 

தேவை என்ற அடிப்படையில் காணாமல்போகடிக்கப்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க போராட வேண்டிய தேவை இருக்கின்றது. அநியாயமாக கொல்லப்பட்டவர்கள் அவர்களுக்கான நீதியை கேட்கும் தேவை இருக்கின்றது. சொந்த நிலங்களுக்கு திரும்வேண்டிய தேவை இருக்கின்றது. சிறையில் இருக்கும் கைதிகள் விடுபடவேண்டிய தேவை இருக்கின்றது. இப்டி ஏராளமான தேவைகள் இருக்கின்றது. ஊரில் இழவு விழுந்தால் எட்டு செலவு வரைக்கும்  அருகில் உள்ளவர்கள் சாப்பாடு கொடுப்பார்கள், இழவு விழுந்த வீட்டை மீட்பது எமது குணத்தோடு சேர்ந்து இருக்கின்றது. அறம சார்ந்த அந்த பண்பு போல் தேவைகள் உள்ளவர்களோடு இந்த இரு தரப்பும் இணைந்துகொள்ளவேணும். அதுவே அறம். அறம் சார்ந்த ஒரு வாழ்வுக்கு நாம் மாறும்போது தேசீயம் புத்துயிர் பெறும். 40 ஆயிரத்துக்கும் மேலாக மடிந்த போராளிகள் முரண்பாடுகளால் நிறைந்த இந்த இனத்தில் அவற்றை எல்லாம் கடந்த அறத்தின் அடயாளம் தான். 

12 hours ago, Justin said:

ஈழத்தில் தமிழ் தேசியம் என்பது, நிலம், மொழி, அபிவிருத்தி என்ற மூன்று முனைகளில் முன்னேற வேண்டும். இந்த மூன்று முனைகளிலும் வேலை செய்யக் கூடிய தமிழர்கள்  எந்த அணியில் இருந்தாலும் ஆதரவு மறைமுகமாவது கொடுக்கப் பட வேண்டும்!

சிறந்த ஒரு அணுகுமுறையாக இது இருக்கும். இவ்வாறான முனைகளை இனம்கண்டு ஆதரவளிப்பது, தொடர்புளை பரந்து பட்டு ஏற்படுத்துவதுதான் இப்போது முட்டு சந்தில் நிற்பதுபோல் நிற்கும் நிலைக்கு புதிய வளிகள் ஏற்படுதும். சரியான தலமை இல்லை என்று புலம்புவதோ எதோ ஒரு காலத்தில் தலமை உருவாகும் என்று காத்திருப்பதோ அர்த்தமற்றது. இவ்வாறான முனைகளுக்கான ஆதரவுதான் வளிநடத்தும் தலமைகள் உருவாகும் சூழலை ஏற்படுத்தும். 

  • Like 6
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மையில் ஒரு திரியில் நிர்மலனுக்கு பதிலளிக்கும் போது தான் உணர்ந்தேன்.

தாயக அரசியலை தக்கவைக்க புலம்பெயர் அறிவுஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், பொருளாதார வளம் கொண்ட தேசியவாதிகள், இராஜதந்திரிகள் கொண்ட அரசியல் சார்பற்ற ஒரு தமிழர் அமைப்பு உருவாக்கப்பட்டு, மேற்குலகம், இந்தியா, சீனா, ரஷ்யா, இன்னும் தமிழர் பிரச்சனை தெளிவுறாத நாடுகளில் கிளைகள் திறக்கப்பட்டு, சட்ட பூர்வமாக எங்கள் நிலைப்பாடு, இழைக்கப்பட்ட அநீதி, வரலாறு, தேசியம் அந்த நாட்டு ராஜதந்திரிகளுக்கு கடத்தப்படவேண்டும்.

விலைபோகாத ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, தாயக அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளவேண்டும்.

நீண்ட கால நோக்கில் திட்டமிடப்பட்டு நகர்வேண்டும். இதுவே புலம்பெயர் மக்களால் தாயகத்துக்கு பொருளாதர உதவி தவிர்த்து செய்யக்கூடிய அரசியல் உதவி. 

சுருங்ககூறின் 1000 அன்ரன் பாலசிங்கள் 100 நாட்டில் தேவை. 🤭

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவை அந்த நாடுகளில் தமிழர் தூதரகங்களாக இருக்க வேண்டியதில்லை.

தமிழர் கலாச்சார மையங்களாக

தமிழர் கலை பண்பாட்டுக்கழகங்களாக

தமிழர் அறிவியல் கழகங்களாக

தமிழர் உணவங்களாக கூட இருக்கலாம், ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகள் தொட்டு நாட்டின் உயர் அரசியல்வாதிகள் வரை தொடர்புகளை ஏற்படுத்தி ஒரு வலையமைப்பை அந்த நாட்டு சட்டங்களுக்கு அமைவாக நடாத்தவேண்டும்.

கண்காட்சிகள், கலையரங்குகள், ஆய்வரங்குகள் மூலம் எம் தேசியத்தை எடுத்துகூறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது விடுதலைக்கான அகிம்சை வழியிலான போரட்டங்களும், அரசியல் ரீதியிலான முன்னெடுப்புக்களும், கட்டாயப்படுத்தி முடித்துவைக்கப்பட்ட ஆயுத ரீதியிலான போராட்டமும் இதுவரையில் எமக்கு காத்திரமான விடுதலையினைப் பெற்றுத்தரவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் உருண்டோடிய 72 வருடங்களில் நாம் இதுவரை எதனையும் அடையவில்லை, மாறாக இருந்தவற்றையும் இழந்துவருகிறோம். 1977 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட தமிழ்த்தேசியத்தின் கோரிக்கைகளைப் போலவோ அல்லது அதனைக் காட்டிலும் வீரியமான கோரிக்கைகளை முன்வைக்கக் கூடிய மனோநிலையில் தமிழர்களோ அல்லது அதற்கான சூழ்நிலையோ இருப்பதாகத் தெரிகிறதா? 77 ஆம் ஆண்டிற்குப்பின்னரான சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தாயக விடுதலைப் போராட்ட எழுச்சியினைப் போன்று இன்னொரு எழுச்சியினை உருவாக்குதல் இப்போதைக்குச் சாத்தியமா? 

கடந்த 72 ஆண்டுகளில் சிறுகச் சிறுக முடுக்கிவிடப்பட்ட எமது விடுதலைக்கான அரசியலை, மீண்டும் செய்வதென்பது இன்னும் எத்தனை தசாப்த்தங்களை தனக்குள் இழுத்துவிடப்போகிறது? நியாயமான தீர்வொன்றிற்காக தமிழினம் இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்கப்போகின்றது? தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அரசியல்மயப்படுத்தல்களும், தேசிய ரீதியிலான முன்னெடுப்புக்களும் நிச்சயமாக ஒரு தீர்வினை கொண்டுவரும் என்றதற்கும் என்ன நம்பிக்கை இருக்கிறது? 

எமது இனத்தையும், மொழியினையும், கலாசாரத் தொன்மையினையும், தாயகத்தினையும் முற்றாகக் கபளீகரம்செய்யக் காத்திருக்கும் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து காப்பதற்கு எமக்கான பலம் ஒன்று அவசியம். அது இன்றிருக்கும் அரசியல் செயற்பாடுகளாலோ அல்லது சமரசம் செய்யும் முயற்சிகளாலோ நிச்சயம் செய்ய முடியாதது. அப்படிப்பட்ட பலம் ஒன்றினை எப்படி உருவாக்கலாம் என்பதுபற்றியும் தமிழினம் சிந்திப்பது காலத்தின் கட்டாயம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 hours ago, goshan_che said:

காக்கசோயிட், நீக்ரோயிட், மொங்கலோயிட், ஒஸ்ரலோயிட் இதில் நாம் யார்?

அல்லது நாம் இன்னொரு தனி ரேஸ்சா?

இந்த வகையிலான தேடல்கள் எமக்கு எந்தவிதத்தில் உதவப் போகின்றது கோஷான்? நாம் எந்த மனித அமைப்பிலிருந்து வந்திருந்தாலும்கூட, இன்று தமிழர்கள் எனும் இப்போதிருக்கும் நிலையினை அடைந்திருக்கிறோம். ஆகவே, இங்கிருந்துதான் எமது விடுதலைக்கான பயணமே ஆரம்பிக்கப்படவேண்டும். இதை விடுத்து, எமது தோலினதோ அல்லது முக எலும்புகளின் உருவ அமைப்பினதோ தோற்றப்பட்டை வைத்து எமது அடிகளைக் கண்டுபிடிப்பதென்பதோ அல்லது, தமிழினம் இதற்கு முன்னர் எவ்வாறான இன மரத்திலிருந்து வந்ததென்று ஆராய்ச்சியில் ஈடுபடுவதோ இன்றிருக்கும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தமிழினத்தை விடுவிக்க எப்படி உதவப்போகிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

Edited by ரஞ்சித்
spelling
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கு சிலருக்கு நான் கூறப்போகும் கருத்து ஆத்திரத்தினையும், வெறுப்பினையும் உருவாக்கலாம். அதற்காக நான் அதுபற்றிப் பேசாமல் இருக்கவும் முடியாது. தமிழர் முன்னாலிருக்கும் தெரிவுகள் என்னவென்று ஆராயத் தொடங்கியபின்னர், எல்லாத்தெரிவுகளும் மேசைக்குக் கொண்டுவரப்படவேண்டும். தனியான நாடொன்றினை சண்டைபிடித்தாவது உருவாக்குவது முதல், முழு இன அடையாளத்தையும் இழந்து சிங்கள பெளத்த இனத்தினுள் சங்கமமாகிப்போவது வரையிலான அனைத்து வழிகளையும் பார்த்துவிடலாம்.

அந்தவகையில் நான் கூற விரும்புவதும், முன்வைக்க விரும்புவதும் இதனைத்தான்.

1. தமிழகத்தில் சீமானின் எழுச்சிக்கு உறுதுணையாக இருப்பதன் மூலம், அவரது வெற்றியினை உறுதிப்படுத்துவது. எமது தாயகத்தில் சேடையிழுக்கும் தமிழ்த் தேசிய அரசியலினை மீண்டும் மீள எழுப்பி, எழுச்சியுறவைத்து, சிங்களப் பேய்களின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் முழுத்தமிழினத்தையும் ஒன்றிணைப்பதெனும் இமாலய சிக்கலுடன் ஒப்பிடும்பொழுது, தமிழகத்தில் தமிழ்த் தேசிய சக்திகளின் எழுச்சியும் பலம்பெறுதலும் சாத்தியமானதும், நடைமுறையில் நிகழ்ந்துவருவதுமாகும்.

2. தமிழகத்தில் பலமடையும் தமிழ்த் தேசிய சக்திகளின் உதவியோடு மத்தியில் உள்ள அரசினை தமிழர் விடயத்தில் சாதகமான போக்கினைக் கடைப்பிடிக்க அழுத்துவது. இவ்வழுத்தம் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பினைத் தடுத்து நிறுத்துவதுமுதல், வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தினை அதிகாரம் மிக்க பிராந்தியமாக உருவாக்குவதை வரை அமைவது.

3. அரசியல் ராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களுக்கு இலங்கை மசியாதவிடத்து, தமிழகத்தினைத் தளமாக வைத்து ஆயுதப் போராட்டம் ஒன்றினை இயக்குவது. உடனே எல்லோரும் வந்து எனது பிள்ளைகளைப் போராட அனுப்பு என்று கேட்கமுதல், இவ்வாறானதொரு முடிவுநோக்கித் தமிழினம் எதிர்காலத்தில் தள்ளப்படுமா இல்லையா என்பதைச் சிந்தியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ரஞ்சித் said:

இந்த வகையிலான தேடல்கள் எமக்கு எந்தவிதத்தில் உதவப் போகின்றது கோஷான்? நாம் எந்த மனித அமைப்பிலிருந்து வந்திருந்தாலும்கூட, இன்று தமிழர்கள் எனும் இப்போதிருக்கும் நிலையினை அடைந்திருக்கிறோம். ஆகவே, இங்கிருந்துதான் எமது விடுதலைக்கான பயணமே ஆரம்பிக்கப்படவேண்டும். இதை விடுத்து, எமது தோலினதோ அல்லது முக எலும்புகளின் உருவ அமைப்பினதோ தோற்றப்பட்டை வைத்து எமது அடிகளைக் கண்டுபிடிப்பதென்பதோ அல்லது, தமிழினம் இதற்கு முன்னர் எவ்வாறான இன மரத்திலிருந்து வந்ததென்று ஆராய்ச்சியில் ஈடுபடுவதோ இன்றிருக்கும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தமிழினத்தை விடுவிக்க எப்படி உதவப்போகிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

ரகு,

நாம் எல்லோரும் செய்யும் அரசியல் தமிழ் தேசிய அதாவது  "அடையாள அரசியல்" identity politics. இந்த "அடையாளத்தின்" அடிப்படையை பற்றி நாம் அனைவரும் இல்லாவிடிலும், அறுதி பெரும்பான்மையனோராவது ஒரு ஒருமை பட்ட நிலைப்பாட்டுக்கு வராது, நாம் எடுக்கும் எந்த முயற்சியும் ஒரு கட்டத்துக்கு மேல் பலந்தராது.

எப்படி பெரிய மாடியை கட்டினாலும் அத்திவாரம் சரியில்லாவிடடால் கவிழ்ந்து கொட்டிவிடும்.
எமது ஒற்றுமையினம், சகோதர சண்டைகள், பிரதேசவாதம் இவை எல்லாமுமே தமிழ் தேசியம் பற்றிய, தமிழர் அடையாளம் பற்றிய சரியான புரிதல் இல்லாமையாலேயே விளைகின்றன.

50,000 பேர் அதி உச்ச தியாகம் புரிந்த, திலீபன்  போன்றவர்களை கொண்டிருந்த ஒரு போராட்டம் ஏன்கடைசியில்  ஆட்களை வலு கட்டாயமாக பிடிக்கும் நிலைக்குப் போனது?

தியாகம், நேர்மை, அற்புதமான  தலைமை சகலதும் இருந்தும் நோக்கை அடைய முடியாமல்  போனமைக்கு ஒரு சிலரை தவிர ஏனையோருக்கு  சித்தாந்த தெளிவின்மையும் ஒரு பெரிய காரணி.

ரஸ்யா, சைனா, வியடனாம் எங்கினும், சித்தாந்த வாதங்களுக்கு நேரம் ஒதுக்கிய, அதே சமயம் தனியே சித்தாந்தம் மட்டும் பேசாமல் செயலிலும் காட்டிய போராட்டங்களே வென்றுள்ளன.  

  • Like 2
Posted
15 hours ago, ரஞ்சித் said:

இங்கு சிலருக்கு நான் கூறப்போகும் கருத்து ஆத்திரத்தினையும், வெறுப்பினையும் உருவாக்கலாம். அதற்காக நான் அதுபற்றிப் பேசாமல் இருக்கவும் முடியாது. தமிழர் முன்னாலிருக்கும் தெரிவுகள் என்னவென்று ஆராயத் தொடங்கியபின்னர், எல்லாத்தெரிவுகளும் மேசைக்குக் கொண்டுவரப்படவேண்டும். தனியான நாடொன்றினை சண்டைபிடித்தாவது உருவாக்குவது முதல், முழு இன அடையாளத்தையும் இழந்து சிங்கள பெளத்த இனத்தினுள் சங்கமமாகிப்போவது வரையிலான அனைத்து வழிகளையும் பார்த்துவிடலாம்.

அந்தவகையில் நான் கூற விரும்புவதும், முன்வைக்க விரும்புவதும் இதனைத்தான்.

1. தமிழகத்தில் சீமானின் எழுச்சிக்கு உறுதுணையாக இருப்பதன் மூலம், அவரது வெற்றியினை உறுதிப்படுத்துவது. எமது தாயகத்தில் சேடையிழுக்கும் தமிழ்த் தேசிய அரசியலினை மீண்டும் மீள எழுப்பி, எழுச்சியுறவைத்து, சிங்களப் பேய்களின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் முழுத்தமிழினத்தையும் ஒன்றிணைப்பதெனும் இமாலய சிக்கலுடன் ஒப்பிடும்பொழுது, தமிழகத்தில் தமிழ்த் தேசிய சக்திகளின் எழுச்சியும் பலம்பெறுதலும் சாத்தியமானதும், நடைமுறையில் நிகழ்ந்துவருவதுமாகும்.

2. தமிழகத்தில் பலமடையும் தமிழ்த் தேசிய சக்திகளின் உதவியோடு மத்தியில் உள்ள அரசினை தமிழர் விடயத்தில் சாதகமான போக்கினைக் கடைப்பிடிக்க அழுத்துவது. இவ்வழுத்தம் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பினைத் தடுத்து நிறுத்துவதுமுதல், வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தினை அதிகாரம் மிக்க பிராந்தியமாக உருவாக்குவதை வரை அமைவது.

3. அரசியல் ராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களுக்கு இலங்கை மசியாதவிடத்து, தமிழகத்தினைத் தளமாக வைத்து ஆயுதப் போராட்டம் ஒன்றினை இயக்குவது. உடனே எல்லோரும் வந்து எனது பிள்ளைகளைப் போராட அனுப்பு என்று கேட்கமுதல், இவ்வாறானதொரு முடிவுநோக்கித் தமிழினம் எதிர்காலத்தில் தள்ளப்படுமா இல்லையா என்பதைச் சிந்தியுங்கள்.

தனியே தமிழகத்தின் தேசீய எழுச்சியோடு மட்டுமில்லாமல் , உலகமெங்கும் இருக்கும் தமிழர்களுக்குள் இனரீதியாக ஒரு தொடர்பு ஏற்படவேணும். உலகமயமாதலில் சிறுபான்மை இனங்களும் அவர்களின் தேசீயமும் சிதைந்து அழிந்துபோகின்றது. புலம்பெயர் தேசத்தில் தமிழர்களின்  தலைமுறைக்கும் தாயகத்தில் போராட்டம் நடந்த காலத்தின் தலமுறைக்கும் இடையில் தேசீயத்தின் கூறுகள் அடயாளங்கள் உணர்வுகள் அனைத்தும் எந்த நிலையில் இருக்கின்றது என்பதை நோக்கினால் உலகமயமாக்கலின் தாக்கம் புரியும்.  உதராணத்திற்கு அன்று இராணுவம் வாழ்ந்த இடத்தையும் விவசாய நிலங்களையும் ஆக்கிரமித்தால் வாழ்வு இல்லை. இன்று எதோ ஒரு நாட்டில் வாழலாம் என்ற நிலையில் பலர், விவசாய நிலத்திற்கு பதிலாக ஒரு கணனிக்கு முன்னால் இருந்து வேலை செய்து பிழைக்கலாம் என்ற நிலை. இவ்வாறான உலகின் போக்கிலும் தலைகீழான மாற்றங்களிலும் இன உணர்வையும் உறவையும் எப்படி தக்கவைப்பது மேம்படுத்துவது என்பதும் பிரதானமானது. இன்றய உலகின் போக்கில் ஈழவிடுதலை என்பது உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்குமிடையில் ஏற்படும் ஐக்கியப்பாட்டோடு சம்மந்தப்பட்டே சாத்தியமானது. ஈழத்தமிழர் தமிழக தமிழர் மலேசியா மொறிசியஸ் லண்டன் கனடா தமிழர் என்ற நிலையை கடந்து தமிழர் என்ற பெரு வட்டத்தை நோக்கி நகரதல் அவசியமானது. ஒரு இடத்தில் தமிழர் ஒடுக்கப்பட்டால் உலகெங்கும் இருந்து எதிர்ப்பு எழவேணும். இன்றய உலகின் போக்கில் சிறுபான்மை இனங்களின் ஆயுதப்போராட்டங்கள் தற்கொலைக்கு சமனானது. சிறுபான்மை இனம் என்ற நிலையையோ ஒரு குறுகிய நிலப்பரப்பில் இருக்கின்றோம் என்ற நிலையையோ நாம் கடக்க வேணும். தமிழர்கள் தங்களுக்கு என்று ஒரு நாடின்றி சிதறி உலகம் முழுக்க வாழ்கின்றனர் என்பதை பலவீனமாக பார்க்காமல் பலமாக பார்க்க முற்பட வேணும். 

  • Like 2
Posted (edited)
On 25/9/2020 at 08:28, சண்டமாருதன் said:

சண்ட மாருதன் நீங்கள் கூறிய தேசங்கள் கடந்து தமிழர்களை ஒன்றிணைத்தல் என்ற கருத்து மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் அதை செய்ய நாம் எம்மை தயார்ப்படுத்த வேண்டும். அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும். எமக்குள்  இருக்கும் குறுகிய மனப்பாங்குகளை களையவேண்டும். ஒரு ஊருக்குள்ளையே சாதி  வேறுபாடுகளால் மற்றவரை மதிக்காத ஒரு சமுதாயம் உலகளாவிய இனமாக பரிணமிப்பது சாத்தியமே இல்லை. மொழி என்ற தொடர்பாடல் ஒன்றாக இருந்தால் போதாது மனத்தளவில் பரந்த மனப்பாங்கு உள்ளவர்களாக மாற வேண்டும். உணர்சசி வசப்பட்ட பேச்சுககள் பாடல்கள் குறுகிய காலத்திற்கு இணைக்குமே தவிர concert முடிந்தபின்னர் கலைந்து போகும் பாரவையாளர் போல் போய்விடும். 

Edited by tulpen
  • Like 2

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.