Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்

பிரித்தானியா கொவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால்  "இப்போது இரண்டாவது அலைகளைக் காண்கிறது" எனவும் "நாட்டில் இதைப் பார்ப்பது தவிர்க்க முடியாது." எனவும் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக ஜோன்சன் இறுக்கமான சமூக இடைவெளி விதிகள் அவசியமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

spacer.png

பிரித்தானியாவில் புதிய  மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை விதிக்கப்பட்டது. மேலும் பொது நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசு விதித்துள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று 385,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 41,732 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/90248

  • Replies 80
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒக்டோபர் நாலாம் கிழமையில் இருந்து நொவம்பர் 2ம் கிழமைக்குள் கடுமையான பாதிப்பு வரும் என்று சொல்லினம்...ஒரு நாளைக்கு 200 பேர் வரையும் சாவார்களாம் 😟 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2020 at 02:45, கிருபன் said:

பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்

இங்கேயும் பாடசாலைகள் ஆரம்பமாகிவிட்டன.ஆஸ்பத்திரிகளுக்கும் கூடப்பேர் வருகிறார்களாம்.
பாடசாலைகள் பூட்டுப்படுகுதோ தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

ஒக்டோபர் நாலாம் கிழமையில் இருந்து நொவம்பர் 2ம் கிழமைக்குள் கடுமையான பாதிப்பு வரும் என்று சொல்லினம்...ஒரு நாளைக்கு 200 பேர் வரையும் சாவார்களாம் 😟 
 
இந்தமுறை எப்படியும் எனக்குத் தொத்தும் என்றுதான் நினைக்கின்றேன்😟

எடுத்த ரெஸ்ற் இரண்டுதரம் நெகரிவ் ஆகிவிட்டது. பொசிற்றிவ் ஆனாலும் உயிர் பத்திரமாக இருந்தால்போதும்!

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

இந்தமுறை எப்படியும் எனக்குத் தொத்தும் என்றுதான் நினைக்கின்றேன்😟

எடுத்த ரெஸ்ற் இரண்டுதரம் நெகரிவ் ஆகிவிட்டது. பொசிற்றிவ் ஆனாலும் உயிர் பத்திரமாக இருந்தால்போதும்!

பயப்படாதீங்க..

ஏப்ரல் மாதம் இருந்த கொரோனாவின் பலம், ஒவ்வொரு மனித உடலுக்குள்ளயும் போய், பிறப்பொருள் எதிரிகளிடம் அடிவாங்கி.... குறைந்து போய் உள்ளது. 

இப்போது பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள்.... வயதானவர்கள்... மிகவும் பலவீனமானவர்கள்.

தமிழகத்தில், அவசரப்பட்டு லொக்டவுன் செய்து விட்டார்கள் போல் தெரிகிறது. இப்பொது தான் உச்சத்தில் உள்ளது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை நாமும் அகப்படச் சாத்தியம் அதிகம் 

17 hours ago, Nathamuni said:

பயப்படாதீங்க..

ஏப்ரல் மாதம் இருந்த கொரோனாவின் பலம், ஒவ்வொரு மனித உடலுக்குள்ளயும் போய், பிறப்பொருள் எதிரிகளிடம் அடிவாங்கி.... குறைந்து போய் உள்ளது. 

இப்போது பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள்.... வயதானவர்கள்... மிகவும் பலவீனமானவர்கள்.

இங்கு கனடாவில் அப்படி இல்லை. இப்ப பாதிக்கப்படுகின்றவர்களில் 67 வீதமானவர்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள். 

12 minutes ago, வல்வை சகாறா said:

இம்முறை நாமும் அகப்படச் சாத்தியம் அதிகம் 

ஒருக்கால் எனக்கு வந்து தொலைச்சால் (தொலைந்தால்) என்ன என்று இருக்கு இப்ப.... தப்பினால் மீண்டும் தொற்றுவதற்கு சந்தர்ப்பம் மிகக் குறைவாம். தப்பாட்டில், சங்கு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இங்கு கனடாவில் அப்படி இல்லை. இப்ப பாதிக்கப்படுகின்றவர்களில் 67 வீதமானவர்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள். 

ஒருக்கால் எனக்கு வந்து தொலைச்சால் (தொலைந்தால்) என்ன என்று இருக்கு இப்ப.... தப்பினால் மீண்டும் தொற்றுவதற்கு சந்தர்ப்பம் மிகக் குறைவாம். தப்பாட்டில், சங்கு தான்.

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்

நானும் வருத்தம் வந்து போன பெறாமகனிடம்  சொன்னேன்

சித்தப்பா இந்த விபரீத விளையாட்டு வேண்டாம்

அந்தளவுக்கு முறிமுறி  என்று முறித்து போட்டுத்தான்  விடும்  என்றான்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை கொரோனா பரவலுக்கு யாரும் அஞ்சுவதாக தெரியவில்லையே பள்ளி பிள்ளைகள் அவர்கள் பாட்டுக்கு பள்ளிக் போகிறார்கள் வருகிறார்கள் மற்றும் வைத்தியசாலைகளில் கொடுக்கபடும் அப்போயினமன்ற் பெரும் பாலும் இரத்தாகவில்லை..இப்படித் தானே நாட்கள் போகிறது..கொரோனாவா ,சாதரண தடிமல் காச்சலா என்று தெரிந்து கொள்ள முடியாதவாறும் தொற்றுக்கள் வரக் சாத்தியங்கள் இருக்கிறது என்கிறார்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே, மிக அவதானமாக இருங்கள்:

1. வைரசின் வீரியமும் தொற்றும் வீதமும் குறைந்திருப்பதாக ஆதாரங்கள் இல்லை.

2. மரணவீதம் குறைந்திருக்கிறது. இதன் காரணங்கள்: மிக அதிகமாக இளம் வயதினர் தொற்றுக்காளாவதும், மருத்துவர்கள் நோயை மரணம் வரை செல்ல விடாமல் காக்கும் வழிகளை இப்போது அறிந்திருப்பதும்.

3. இதய நோய், நீரிழிவு, அதிக உடற்பருமன், உயர் குருதி அழுத்தம், சிறு நீரகப் பாதிப்பு, இந்த நோய்கள் இருப்போர் இளம் வயதினராக இருந்தாலும் கடும் நோயும் மரணமும் சாத்தியம். 

  இந்த நோய்கள் தமக்கு இருப்பதாக அறியாமலே தொற்றுக்காளாகி தமிழ் இளைஞர்கள் சிலர் ஐரோப்பாவில் இறந்திருக்கின்றனர். எனவே இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நன்றி அண்ணா,

யூன் மாதம் முதலே இத்தாலியில் ஒரு மருத்துவர், இன்னும் அங்கும் இங்குமாக சிலர் உதிரிகளாக இப்படி கொவிட் 19 வீரியம் குறைந்ததாக சொனாலும் அதை அதிக பெரும்படியான மருத்துவர்கள் “இன்னும் இல்லை” என்றே சொல்கிறார்கள்.

வைரஸ் அதிகம் வீரியமாக இருந்தால், பலரை கொன்று, “விருந்தாளிகள்” இல்லாமல் போனால் அதுவும் அழிய நேரிடும். எனவே, வைரசானது விகாரம் அடைந்து, வீரியத்தை குறைத்து, விருந்தாளிகளை கொல்லாமல் நீடித்து வாழ முயலும்.

இது தியரி. ஆனால் கொவிட் 19 இப்படி விகாரம் அடைகிறது என்பது இதுவரை தியரி மட்டுமே.

 யூகேயில் முன்பு ஆஸ்பத்திரி போனோரை மட்டுமே டெஸ்ட் எடுத்தார்கள். ஆகவே 6000 பொசிடிவ் வந்த நாளில் 1000 பேர் இறந்தார்கள். ஆனால் இப்போ பரவலாக டெஸ்ட் நடப்பதால் -4000 பொசிடிவ் வரும் போதும் சாவு அதிகமில்லை. ஆனா நவம்பர் மத்தியில் நாளுக்கு 200 சாவு வரலாம் என பயப்படுகிறார்கள்.

ஆகவே வந்தால் பரவாயில்லை என்ற விளையாட்டு வேண்டாம். போதியளவு பாதுகாப்பை எடுங்கள்.

சமூக இடவெளியை பேணுவதால்- “வைரஸ் லோட்” ஐ குறைக்கு முடியும். 

தொற்றுள்ளவர் தொடர்பு வந்தாலும் - வைரல் லோட் குறைவு என்றால் அதிக பாதிப்பில் இருந்து தப்பலாம்.

நினைவில் கொள்ளுங்கள். ஸ்பானிய காய்ச்சலில்(100 வருடம் முன்பு) 1ம் அலையில் இறந்தவரை விட 2ம் அலையில் இறந்தவர் அதிகம்.

சமூக இடவெளியை பேணுங்கள். 

1ம் அலையில் இருந்த அதே அவதானத்தை எடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை பொய்க்கு அப்பால் இலங்கையில் இப்ப வரைக்கும் இறப்பு வீதம் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

இந்தமுறை எப்படியும் எனக்குத் தொத்தும் என்றுதான் நினைக்கின்றேன்😟

எடுத்த ரெஸ்ற் இரண்டுதரம் நெகரிவ் ஆகிவிட்டது. பொசிற்றிவ் ஆனாலும் உயிர் பத்திரமாக இருந்தால்போதும்!

வீட்ல இருந்து கொண்டு தானே வேலை செய்றியல் பிறகு எதுக்கு 2 தரம் செக் பண்ணீங்கள்? ....நாங்கள் வேலைக்கு போய் ஒரு நாளைக்கு எத்தனை பேரை சந்திக்கிறம்...ஒரு தடவை கூட இன்னும் செக் பண்ணேல்ல🙂 
 
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

வீட்ல இருந்து கொண்டு தானே வேலை செய்றியல் பிறகு எதுக்கு 2 தரம் செக் பண்ணீங்கள்? ....நாங்கள் வேலைக்கு போய் ஒரு நாளைக்கு எத்தனை பேரை சந்திக்கிறம்...ஒரு தடவை கூட இன்னும் செக் பண்ணேல்ல🙂 
 
அக்கு உங்கடை பேரை சொன்னாலே கொரனோ தெறிச்சு  ஓடும் என்பது எங்களுக்கு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

உண்மை பொய்க்கு அப்பால் இலங்கையில் இப்ப வரைக்கும் இறப்பு வீதம் குறைவு.

இலங்கை, நியூசிலாந்து போல நாங்களும் வெளிநாட்டு போக்குவரத்தை மார்ச் முதல்வாரமே அடிச்சு நூத்திருக்க வேணும்.

10% பொருளாதாரம் படுக்கும் என்று பயந்து இப்ப 100% பொருளாதாரமும் அடி வாங்குது.

9 minutes ago, ரதி said:

வீட்ல இருந்து கொண்டு தானே வேலை செய்றியல் பிறகு எதுக்கு 2 தரம் செக் பண்ணீங்கள்? ....நாங்கள் வேலைக்கு போய் ஒரு நாளைக்கு எத்தனை பேரை சந்திக்கிறம்...ஒரு தடவை கூட இன்னும் செக் பண்ணேல்ல🙂 
 
அக்காச்சி,

கருணா வைரஸ் பீடிச்ச ஆக்களுக்கு, கொரோனா வைரஸ் தொத்தாதாம்🤣

நோ டென்சன். ஜஸ்ட் ஜோக்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, சுவைப்பிரியன் said:

உண்மை பொய்க்கு அப்பால் இலங்கையில் இப்ப வரைக்கும் இறப்பு வீதம் குறைவு.

சொறிலங்காவின் கதையை நம்ப முடியாது கொர்னோவில்  இறந்தவரையும் எலிக்காய்ச்சலில் செத்தது போல் காட்டி விடுவார்கள் கோத்தா பதவியேற்ற நேரம் அவருக்கு சனி ஏறினது போல் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

வீட்ல இருந்து கொண்டு தானே வேலை செய்றியல் பிறகு எதுக்கு 2 தரம் செக் பண்ணீங்கள்? ....நாங்கள் வேலைக்கு போய் ஒரு நாளைக்கு எத்தனை பேரை சந்திக்கிறம்...ஒரு தடவை கூட இன்னும் செக் பண்ணேல்ல🙂 
 
மார்ச்-ஜூன் மட்டும் வெளியே நடக்கமட்டும் போனேன். ஜுலை-ஆகஸ்ட் ஒவ்வொரு வார இறுதியும் பல இடங்களுக்கும் போய் வந்ததால் செக் பண்ண சந்தர்ப்பம் வந்தது. இந்தமாதம் சமூக இடைவெளியை அதிகம் கடைப்பிடிக்கவில்லை. ஆனால் இன்னமும் வேலைக்கு போகவில்லை😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

உண்மை பொய்க்கு அப்பால் இலங்கையில் இப்ப வரைக்கும் இறப்பு வீதம் குறைவு.

பலருக்கு கசப்பான தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நன்றி அண்ணா,

யூன் மாதம் முதலே இத்தாலியில் ஒரு மருத்துவர், இன்னும் அங்கும் இங்குமாக சிலர் உதிரிகளாக இப்படி கொவிட் 19 வீரியம் குறைந்ததாக சொனாலும் அதை அதிக பெரும்படியான மருத்துவர்கள் “இன்னும் இல்லை” என்றே சொல்கிறார்கள்.

வைரஸ் அதிகம் வீரியமாக இருந்தால், பலரை கொன்று, “விருந்தாளிகள்” இல்லாமல் போனால் அதுவும் அழிய நேரிடும். எனவே, வைரசானது விகாரம் அடைந்து, வீரியத்தை குறைத்து, விருந்தாளிகளை கொல்லாமல் நீடித்து வாழ முயலும்.

இது தியரி. ஆனால் கொவிட் 19 இப்படி விகாரம் அடைகிறது என்பது இதுவரை தியரி மட்டுமே.

 யூகேயில் முன்பு ஆஸ்பத்திரி போனோரை மட்டுமே டெஸ்ட் எடுத்தார்கள். ஆகவே 6000 பொசிடிவ் வந்த நாளில் 1000 பேர் இறந்தார்கள். ஆனால் இப்போ பரவலாக டெஸ்ட் நடப்பதால் -4000 பொசிடிவ் வரும் போதும் சாவு அதிகமில்லை. ஆனா நவம்பர் மத்தியில் நாளுக்கு 200 சாவு வரலாம் என பயப்படுகிறார்கள்.

ஆகவே வந்தால் பரவாயில்லை என்ற விளையாட்டு வேண்டாம். போதியளவு பாதுகாப்பை எடுங்கள்.

சமூக இடவெளியை பேணுவதால்- “வைரஸ் லோட்” ஐ குறைக்கு முடியும். 

தொற்றுள்ளவர் தொடர்பு வந்தாலும் - வைரல் லோட் குறைவு என்றால் அதிக பாதிப்பில் இருந்து தப்பலாம்.

நினைவில் கொள்ளுங்கள். ஸ்பானிய காய்ச்சலில்(100 வருடம் முன்பு) 1ம் அலையில் இறந்தவரை விட 2ம் அலையில் இறந்தவர் அதிகம்.

சமூக இடவெளியை பேணுங்கள். 

1ம் அலையில் இருந்த அதே அவதானத்தை எடுங்கள்.

எல்லாம் சரி... உந்த பிள்ளைகள் பள்ளிக்கு போய் வருறது தான் சிக்கும். ஆனாலும் வீட்டிலை வைத்திருகவும் ஏலாது.

சம்மர் சோதனை இல்லாமல் பெரிய தலைவலியா போட்டுது....

வெளிநாட்டு மாணவர் வராததால, அந்த இடத்தை குடுத்து பெரிய பிரச்சணை வராம தாலிச்சாச்சு.

என்ன கோதாரியள் வரப்போகுதோ தெரியவில்லை.

இதுக்குள, கடைக்காரர் கொஞ்சப் பேர்.... இன்னும் காசு வரும் போலைகிடக்கு. வாங்கிக்கொண்டு கடையை இழுத்து பூட்டிப் போட்டு போலாம் எண்டு ஜடியா போடுகினம். 😋

  • கருத்துக்கள உறவுகள்
On 21/9/2020 at 22:19, கிருபன் said:

இந்தமுறை எப்படியும் எனக்குத் தொத்தும் என்றுதான் நினைக்கின்றேன்

கபசுரக் குடிநீர் இந்தியாவில் இருந்து எடுப்பித்து குடியுங்கள் 😄

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கபசுரக் குடிநீர் இந்தியாவில் இருந்து எடுப்பித்து குடியுங்கள் 😄

அப்ப  அங்கு கொரனோ  தாண்டவமாடுதே ? எப்படி ?

29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பலருக்கு கசப்பான தகவல்.

முதலில் தமிழனாக இருக்கப்பாருங்கள் எது கசப்பு  இனிப்பு என்பது தெரியும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

உண்மை பொய்க்கு அப்பால் இலங்கையில் இப்ப வரைக்கும் இறப்பு வீதம் குறைவு.

எந்த நாட்டிலை உண்மையான தரவு கொடுக்கப்படுகின்றது?

சும்மா நடந்து போய் தடக்குப்பட்டு விழுந்து செத்தவனும் கொரோனாவாலை செத்தான் எண்ட  கணக்கிலைதான் வருது கண்டியளோ.

ஆனால் சீனாவும் சிலோனும் புகுந்து விளையாடுறது இந்த விசயத்திலைதான் கண்டியளோ..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எந்த நாட்டிலை உண்மையான தரவு கொடுக்கப்படுகின்றது?

சும்மா நடந்து போய் தடக்குப்பட்டு விழுந்து செத்தவனும் கொரோனாவாலை செத்தான் எண்ட  கணக்கிலைதான் வருது கண்டியளோ.

ஆனால் சீனாவும் சிலோனும் புகுந்து விளையாடுறது இந்த விசயத்திலைதான் கண்டியளோ..:grin:

அண்ணை, விவாதத்திற்காகச் சொல்லவில்லை, ஆனால் பிழையான இணையத்தளங்களைப் பார்க்கிறீர்கள் போல தெரியுது! இறக்கும் மிகப் பெரும்பாலானோரில் வைரஸ் சோதனை செய்து தான் மரண அத்தாட்சிப் பத்திரத்தில் போடுகிறார்கள். சோதனை  செய்ய முடியவில்லையென்றால் குணங்குறிகளைப் பார்த்து "கொரனாவுடன் தொடர்பான" என்று போடுகிறார்கள். ஆனால் இந்த கொரனாவுடன் தொடர்பான என்ற எண்ணிக்கை மிக மிகக் குறைவு! பட்டி தொட்டியெல்லாம் கொரனா ரெஸ்ற் கிடைக்கிறது இப்போது.

விளையாட்டில்லை அண்ணை, தயவு செய்து கவனமாக இருங்கள்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Justin said:

உறவுகளே, மிக அவதானமாக இருங்கள்:

1. வைரசின் வீரியமும் தொற்றும் வீதமும் குறைந்திருப்பதாக ஆதாரங்கள் இல்லை.

2. மரணவீதம் குறைந்திருக்கிறது. இதன் காரணங்கள்: மிக அதிகமாக இளம் வயதினர் தொற்றுக்காளாவதும், மருத்துவர்கள் நோயை மரணம் வரை செல்ல விடாமல் காக்கும் வழிகளை இப்போது அறிந்திருப்பதும்.

3. இதய நோய், நீரிழிவு, அதிக உடற்பருமன், உயர் குருதி அழுத்தம், சிறு நீரகப் பாதிப்பு, இந்த நோய்கள் இருப்போர் இளம் வயதினராக இருந்தாலும் கடும் நோயும் மரணமும் சாத்தியம். 

  இந்த நோய்கள் தமக்கு இருப்பதாக அறியாமலே தொற்றுக்காளாகி தமிழ் இளைஞர்கள் சிலர் ஐரோப்பாவில் இறந்திருக்கின்றனர். எனவே இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!

42 minutes ago, Justin said:

அண்ணை, விவாதத்திற்காகச் சொல்லவில்லை, ஆனால் பிழையான இணையத்தளங்களைப் பார்க்கிறீர்கள் போல தெரியுது! இறக்கும் மிகப் பெரும்பாலானோரில் வைரஸ் சோதனை செய்து தான் மரண அத்தாட்சிப் பத்திரத்தில் போடுகிறார்கள். சோதனை  செய்ய முடியவில்லையென்றால் குணங்குறிகளைப் பார்த்து "கொரனாவுடன் தொடர்பான" என்று போடுகிறார்கள். ஆனால் இந்த கொரனாவுடன் தொடர்பான என்ற எண்ணிக்கை மிக மிகக் குறைவு! பட்டி தொட்டியெல்லாம் கொரனா ரெஸ்ற் கிடைக்கிறது இப்போது.

விளையாட்டில்லை அண்ணை, தயவு செய்து கவனமாக இருங்கள்! 

செய்திகள் பொய்யென்று சொல்லவில்லை. ஒரு சில தரவுகள் பொய்யென்று சொல்கிறார்கள். அதனால்தான் பல நாடுகளில் கொரோனா சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றதாகவும் சொல்கின்றார்கள்.

அத்துடன் என் மீதான ஆலோசனைக்கு மிக்க மிக்க நன்றி.:)

ஜஸ்ரின்! உங்களிடம் ஒரு கேள்வி?
கொரோனா என்பது உருவாக்கப்பட்டதா? இல்லையேல் இயற்கையானதா?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

எல்லாம் சரி... உந்த பிள்ளைகள் பள்ளிக்கு போய் வருறது தான் சிக்கும். ஆனாலும் வீட்டிலை வைத்திருகவும் ஏலாது.

சம்மர் சோதனை இல்லாமல் பெரிய தலைவலியா போட்டுது....

வெளிநாட்டு மாணவர் வராததால, அந்த இடத்தை குடுத்து பெரிய பிரச்சணை வராம தாலிச்சாச்சு.

என்ன கோதாரியள் வரப்போகுதோ தெரியவில்லை.

இதுக்குள, கடைக்காரர் கொஞ்சப் பேர்.... இன்னும் காசு வரும் போலைகிடக்கு. வாங்கிக்கொண்டு கடையை இழுத்து பூட்டிப் போட்டு போலாம் எண்டு ஜடியா போடுகினம். 😋

பிரைமறி ஸ்கூல்கள் கொஞ்சம் நெகிழ்வுதன்மை காட்டீனம்.

20 நாளுக்கு பிறகும் போகாட்டி ஸ்கூல் கவுன்சுலுக்கு அறிவிக்க வேணுமாம். ஆனால் கவின்சில் home schooling வேணுமெண்டா செய்யுங்கள் எண்டீனம். 

பாப்பம். நாங்கள் குழப்பாத படிப்பே? பாதி நாள் பங்கறுக்கதானே. பிறகு நாங்களும் எதையோ படிச்சி கிழிச்சி குப்பை கொட்டுறம்தானே🤣

15 hours ago, குமாரசாமி said:

செய்திகள் பொய்யென்று சொல்லவில்லை. ஒரு சில தரவுகள் பொய்யென்று சொல்கிறார்கள். அதனால்தான் பல நாடுகளில் கொரோனா சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றதாகவும் சொல்கின்றார்கள்.

அத்துடன் என் மீதான ஆலோசனைக்கு மிக்க மிக்க நன்றி.:)

ஜஸ்ரின்! உங்களிடம் ஒரு கேள்வி?
கொரோனா என்பது உருவாக்கப்பட்டதா? இல்லையேல் இயற்கையானதா?

இயற்கையாக எமக்கு வரும் பல சின்ன சின்ன உபாதைகளும் ஒரு வகை கொரோனா வைரஸ்தான்.

முந்தி பரவிய மேர்ஸ், சார்சும் கூட.

இப்படி ஒருவகை கொரோனாவை எடுத்து, அல்லது இயற்கையில் தோன்றிய இன்னொருவகையை எடுத்து அதை ஒரு உயிரியல் ஆயுதமாக அல்லது மருந்தாக மாற்றும் முயற்சியில் இருந்த போது, அது லீக்காகி விட்டது என்பதே என் ஊகம்.

ஊகம் மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.