Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானுக்கு புதிய பதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தன் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ‍இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இந்த பதவியை பொறுப்பேற்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையான் தற்போது விளக்கமறியில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/90467

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பினை பார்த்து, நானும் ஏதோ, சிறை அதிகாரி ஆகிட்டாரோ எண்டு எட்டிப் பார்த்தேன். 😎

சிறையில இருக்கிறவனுக்கே  வோட்டு போட்டு  வெற்றி பெற செய்த மக்கள் நாங்கள்  டமிழர்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நேசன் said:

சிறையில இருக்கிறவனுக்கே  வோட்டு போட்டு  வெற்றி பெற செய்த மக்கள் நாங்கள்  டமிழர்

ஏன் மக்கள் வாக்களித்தர்கள்  என்ற கேள்வியை கேளுங்கள் உங்களுக்கு நீங்களே

அந்த மக்கள் துரோகிகள் அப்படி தாானே 

வாழ்த்துகள் பிள்ளையான் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நேசன் said:

சிறையில இருக்கிறவனுக்கே  வோட்டு போட்டு  வெற்றி பெற செய்த மக்கள் நாங்கள்  டமிழர்

அந்தளவுக்கு வெளியிலிருந்து தமிழர்களின் அரசியலை முன்னெடுத்த கூத்தாடி  அப்புக்காத்துமார் செயல்பட்டிருக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானின் புதிய நியமனத்துக்கு ஏறாவூர் நகர சபையில் பாராட்டு

meet-11.jpg
சிறையிலிருந்தும் மக்கள் மனதை வென்ற மக்களின் தலைவனுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தமானதே என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஏறாவூர் நகர சபையின் தற்போதைய உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபை மாதாந்த அமர்வின் அடிப்படையில் செப்டெம்பர் மாதத்திற்கான அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நகர சபையின் கேட்போர் கூடத்தில் அந்நகர சபையின் தலைவர் இறம்ழான் அப்துல்வாஸித் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, நகர சபையின் நானாவித நிகழ்ச்சி நிரலுடன் உறுப்பினர்களுக்கான சிறப்புரை இடம்பெற்றபோது, நகர சபைத் தலைவர் உட்பட அச்சபையின் முஸ்லிம் தமிழ் உறுப்பினர்கள் கட்சிபேதமின்றி பிள்ளையான், (சிவனேசதுரை சந்திரகாந்தன்) மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதை வரவேற்று உரையாற்றினர்.

மேலும், இந்நிகழ்வில் உரையாற்றிய சுபைர், கடந்த பொதுத் தேர்தலின்போது பிள்ளையான் எந்தவிதமான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடாமல் அதிகப்படியான வாக்குளால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் தலைவனாக திகழ்கின்றார்.

அத்தகைய ஒருவர், கிழக்கு மாகாண சபையை முதலமைச்சராக அலங்கரித்தபோது, அவர் இந்த மாகாணத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில் இனவாதம் கடந்து செயற்பட்டார்.

முதலமைச்சர் காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மக்கள் உள்ளங்களிலே அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றது.

இனவாதத்தை மதவாதத்தைத் தூண்டி அரசியல் செய்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்திலே, இனவாதமற்ற ஒருவர் அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டமை அனைவராலும் பாராட்டப்பட வேண்டியது.

பிள்ளையான் யுத்தத்தின் கொடூரங்களை நன்கு அறிந்தவர். ஆகையினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற அபிவிருத்திப் பணிகளிலும் இனவாதம் கடந்து அவர் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்குச் சேவையாற்றுவார் என்று நம்புகின்றேன்” என்றார்.
 
http://www.battinews.com/2020/09/blog-post_798.html

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி மீது வெற்றி மீது வந்து என்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் மகிந்தாவை சேரும்...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெளத்த எஜமான ஒட்டுக்குழுத் தமிழர்கள்.. 

புலிகள் காலத்தில் சிங்கள அரசில் முக்கிய அமைச்சுப் பதவிகள் கேட்டார்கள்..

இப்ப எல்லாம்.. அவன் கொடுக்கிற மாவட்ட அபிவிருத்தி சபை.. பிரதித் தலைவர் பதவியோடு அடங்கிவிடக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் மீன்பிடியோடு கட்டுப்பட்டுவிடக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இதே பிரபாகரனிடம்.. கேட்டவை என்னவோ.. தலைவருக்கு நிகரான தலைவன் பதவி... தகுதி...

என்னமா நிறமாறுதுகள்.. இதுகள். இதுகளால மக்களுக்கு ஒரு அபிவிருத்தி என்பது நிகழும்..?! கனவு காண்பது அவரவர் உரிமை. ஆனால்.. அது நிஜமாகாது. 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nedukkalapoovan said:

நாங்கள் லட்சுமனன் வாரிசுகள் ,கம்பரின் இலட்சியவாதிகள் செருப்பையும் வைச்சு மகிழ்ச்சியடைவோமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் மக்கள் வாக்களித்தர்கள்  என்ற கேள்வியை கேளுங்கள் உங்களுக்கு நீங்களே

அந்த மக்கள் துரோகிகள் அப்படி தாானே 

வாழ்த்துகள் பிள்ளையான் 

கோழி குருடாய் இருந்தால் நமக்கென்ன கொழம்புதானே முக்கியம்...
வாழ்த்துக்கள்.💐

நான் வாழ்த்துக்கள் சொன்னது பிள்ளையானுக்கு இல்லை உங்களுக்கு😁

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் மக்கள் வாக்களித்தர்கள்  என்ற கேள்வியை கேளுங்கள் உங்களுக்கு நீங்களே

அந்த மக்கள் துரோகிகள் அப்படி தாானே 

வாழ்த்துகள் பிள்ளையான் 

43 minutes ago, குமாரசாமி said:

கோழி குருடாய் இருந்தால் நமக்கென்ன கொழம்புதானே முக்கியம்...
வாழ்த்துக்கள்.💐

நான் வாழ்த்துக்கள் சொன்னது பிள்ளையானுக்கு இல்லை உங்களுக்கு😁

சம்பந்தர் அய்யா, வந்த முதல்வர் பதவியையும் அவயளுக்கு நல்லெண்ணத்தில, கொடுக்க, சாணீல தோய்த்த பூவை காதில சொருகிப்போட்டு தங்கட அலுவல் பார்த்தது மட்டுமல்ல, வெடியள போட்டு சனத்தையும் கொனறா, கொதி வரும் தானே.

அந்த கொதீல, மகிந்த சார்பு ஆளுக்கு போட்டிருக்கலாம்.

அடுத்த தவணை வழக்கில, அரச தரப்பு புரக்கிராசியார்.... வெள்ளி பார்க்க, பிள்ளையான் கேசே முந்திய அரசாங்கம் சோடித்து போட்டது எண்டு, பிணையில வருவார் அல்லது வழக்கு நிக்காமல் தள்ளுப்படும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்தெழுதுவது மீண்டும் எம்மைப் பிரதேச ரீதியாகப் பிரித்துப் பேசுவதற்குக் காரணமாகிவிடும். ஏனென்றால், பிள்ளையான் பற்றியோ, கருணா பற்றியோ பேசுவதென்பது நூலிழையில் நடப்பது போன்றது. அவர்களின் செயற்பாடு மீதான விமர்சனம் பிரதேசவாத கண்ணோட்டத்தில் பார்க்கபடலாம் என்பதோடு, கிழக்கின் அபிவிருத்திக்குக் குறுக்கே வடக்கு மக்களால் முன்வைக்கப்படும் எதிர்ப்பு அல்லது விமர்சனம் என்றும் பார்க்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஆகவே, இதுபற்றிப் பேசாமல் கடந்துபோவதுதான் உகந்தது.

இன்று பிள்ளையானுக்குக் கிடைத்திருக்கும் ஆதரவென்பது உண்மையிலேயே அவர்மீதான விருப்பினாலன்றி, கூட்டமைப்பின் இன்றுவரையான செயற்பாடுகளுக்கான எதிர்ப்பாக, முஸ்லீம்களின் அத்துமீறல்களுக்கான எதிர்ப்பாக பார்க்கப்படுகிறதென்பதே இங்கு கருத்தெழுதும் அக்னி மற்றும் தனியின் கருத்துக்களிலிருந்து காண முடிகிறது. அவர்களுக்கு பிள்ளையானையும், கருணாவையும் விட்டால் வேறு தெரிவுகள் இருந்திருக்குமா என்றால், இல்லையென்பதே உண்மை. 

ஆனால், இவர்கள் தெந்தமிழீழத் தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இன்றைய நிலையின் விளைவுகளை இனிவரும் காலங்களில்த்தான் பார்க்கமுடியும். தமிழர் நலன் சார்ந்து இவர்கள் செயற்பட விழைந்தாலும்கூட சிங்களப் பேரினவாதம் அவர்களை ஒரு வரையறையின்கீழ்த்தான் வைத்திருக்க முயலும் என்பதுதான் எனது எண்ணம்.

அவர்களைப்பொறுத்தவரையில் இனிமேல் இழப்பதற்கு எதுவுமேயில்லை என்கிற நிலையில், கிடைக்கப்போகும் சலுகைகளான அபிவிருத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையாவது பெற்றுக்கொள்ளலாம் என்கிற நிலையில் இன்று இருக்கிறார்கள். இதைத்தாண்டிச் சிந்திக்கும் நிலையில் அவர்களும் இல்லை, சூழ்நிலையும் இல்லை.

ஆகவே இதுபற்றி மீண்டும் மீண்டும் பேசி எமக்குள் கசப்புணர்வுகளை வளர்ப்பதைக் காட்டிலும் நடப்பதைப் பார்க்கலாம். நடப்பவை நல்லதாக நடந்தால் நண்மையே, அப்படியில்லையென்றால் இதிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடத்திலிருந்து இனிவரும் தேர்தல்களை அவர்கள் எதிர்கொள்வார்கள். அவ்வளவுதான். இதைத்தவிர தென் தமிழீழ மக்களுக்கு சிங்களப் பேரினவாதத்தையோ அல்லது அதன் கருவிகளையோ  ஆதரிக்கவேண்டிய வேறு தேவையிருப்பதாக நான் நம்பவில்லை. 

............................................................................................................................................................

இது அக்னியினால் இன்னொரு பதிவில் கேட்கப்பட்டது, ஆனால் அதற்கும் இக்கருத்திற்கு சிறிது தொடர்பிருப்பதால் இதனை இங்கே பதிகிறேன்.

கேள்வி இதுதான் : கருணாவின் மேல் முன்வைக்கப்படும் விமர்சனத்தின் ஒரு சிறு வீதத்தைத் தன்னும் கே பி யின் மீது தமிழ்த் தேசியவாதிகள் ஏன் முன்வைப்பதில்லை? அவர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் காரணமா? 

சிந்திக்கவேண்டிய கேள்வி. தமிழரின் ஆயுத விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதில் கருணாவின் பங்கிற்கு நிகரானது கே பி யின் பங்கு என்பது நான் கேள்விப்பட்டது. இதனை மறுப்பவர்கள் இருக்கலாம். கருணாவின் பிரிவினால் ஏற்பட்ட கிழக்கு மாகாணப் போராளிகளின் வெளிநடப்பு மற்றும் கிழக்கு மாகாண நில இழப்பு போன்றவையும், ராணுவத்தின் ஆள ஊடுருவும் படையணியில் கருணா குழுவின் உறுப்பினர்களின் செயற்பாடு, புலிகளின் முக்கியஸ்த்தர்கள் மீதான தாக்குதல்கள், போரின் புலிகளுக்கெதிரான ராணுவத்தின் உத்திகள் ஆகியவற்றில் கருணா குழுவின் பங்கும் கணிசமானவை. 

அவ்வாறே, போரின் இறுதிக்கட்டத்தில் கே பி யினால் அனுப்பப்பட்ட வெற்றுக் கப்பல்கள், 2003 முதல் ராணுவ புலநாய்வுத்துறையினருடனான கே பி யின் நெருக்கம், யுத்தத்தின் பின்னரான காலத்தில் மகிந்த - கோத்தா ஆகியோருடன் கே பி யின் நெருக்கம், புலம்பெயர் தமிழர்களின் வியர்வையாலும், உழைப்பினாலும் சேர்க்கப்பட்ட பல மில்லியன் டாலர்கள் கே பி யினால் மகிந்தவுக்கு வாரிக் கொடுக்கப்பட்டது போன்றவை கூட போராட்டத்தின்போதும், பின்னரும் தமிழர்களுக்கு பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியே இருந்தன. 

ஆனால், கருணவின் துரோகம் பற்றிப் பேசுமளவிற்கு நாம் கே பி பற்றிப் பேசுவதில்லை. அதற்காக  கே பி வடமாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே இது அடக்கி வாசிக்கப்படுவதாக நினைக்கவில்லை. மாறாக, அவர் செய்த துரோகம் பற்றி மக்கள் வெளிப்படையாக அறியமுடியாவண்ணமும், அவர் சரணடைந்த காலத்தில் நடந்த நாடகங்கள் பற்றிய செய்திகளை இலங்கை - மலேசிய அரசுகள் மறைத்துவிட்டதாலும், அவர் இறுதிவரை தொடர்பிலிருந்தவர்கள் இன்று உயிருடன் இல்லாமலிருப்பதும் அவரின் துரோகம் முள்ளிவாய்க்காலுடன் மறைக்கப்பட்டு விட்டது. பின்னர் நடந்தவை எல்லாம் கே பி யை இலங்கையரசு மிகவும் லாவகமாகக் கைதுசெய்தது எனும் வீரப்பிரதாப நாடகமும், அந்த நாடகத்தில் கே பி ஆடிய ஆட்டமும்தான்.

கே பி யின் துரோகத்தனத்திற்கும் கருணாவின் துரோகத்தனத்திற்கும் இடையிலான வித்தியாசம் யாதெனில், கருணா செய்த துரோகம் வெளிப்படையானது. எல்லாராலும் பார்க்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டது. கே பி யின் துரோகம் இறுதிவரைக்கும் வெளித்தெரியாவண்ணம் செய்யப்பட்டு, இறுதி யுத்த அவலத்தில் மறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இவ்விரண்டு துரோகங்களாலுமே தமிழர்கள் வீழ்த்தப்பட்டார்கள். இதில் வடக்கென்றும், கிழக்கென்றும் வேறுபாடில்லை. 

Edited by ரஞ்சித்
பந்தி சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கோழி குருடாய் இருந்தால் நமக்கென்ன கொழம்புதானே முக்கியம்...
வாழ்த்துக்கள்.💐

நான் வாழ்த்துக்கள் சொன்னது பிள்ளையானுக்கு இல்லை உங்களுக்கு😁

வாழ்த்துகள் யார் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்  

யாரோ ஒருவர் குற்ற யாருக்கோ அரிசி கிடைக்கும் இதில் கிடைப்பவற்றை பெற்றுகொள்கிறவர்கள் பசியாறட்டுமே

குறிப்பு ,:எனக்கு ஒரு பருக்கை கூட கிடைக்கப்போவதிவில்லை 

5 hours ago, ரஞ்சித் said:

அவர்களைப்பொறுத்தவரையில் இனிமேல் இழப்பதற்கு எதுவுமேயில்லை என்கிற நிலையில், கிடைக்கப்போகும் சலுகைகளான அபிவிருத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையாவது பெற்றுக்கொள்ளலாம் என்கிற நிலையில் இன்று இருக்கிறார்கள். இதைத்தாண்டிச் சிந்திக்கும் நிலையில் அவர்களும் இல்லை, சூழ்நிலையும் இல்லை.

இங்கே இருந்து கூற நினைப்பதும் இதுவே பிரதேச வாதிகள் வாதம் என்று இல்லை கிழக்கு நிலை புரிந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் ரகுநாதன் 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கே இருந்து கூற நினைப்பதும் இதுவே பிரதேச வாதிகள் வாதம் என்று இல்லை கிழக்கு நிலை புரிந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் ரகுநாதன் 

ஒருபுறம் வேடன், மறுபுறம் நாகம் இடையே யுத்த சோர்வில் கிழக்கு தமிழ் மக்கள்.

சாதாரண நிறை மப்பு தூசணப்பிக்கர் சுமணதேரரை அடக்க முடியாது என்ற நிலையில், மகிந்தா ஆதரவு பிரதிநிதித்துவம் நல்லது. காற்றுள்ள போதே தூற்றினால் நல்லதே.

கிழக்கின் அதாவுல்லாவின் திமிர், மனோவுடனான ரிவி நேர்காணலில் தெரிந்தது. அந்த மனநிலையுடனே தமிழரை பார்த்திருக்கிறார்கள். ஈஸ்டர்க்கு பின் நிலைமை மாறியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

குறிப்பு ,:எனக்கு ஒரு பருக்கை கூட கிடைக்கப்போவதிவில்லை 

இங்கே இருந்து கூற நினைப்பதும் இதுவே பிரதேச வாதிகள் வாதம் என்று இல்லை கிழக்கு நிலை புரிந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் ரகுநாதன் 

எவருக்கும் கிடைக்கப்போவதில்லை

சரியான கூற்று. பிள்ளையானும் அமலும் வெண்டது பிரதேசவாதம் என்றால் டக்லசும், அங்கயனும் வென்றது என்ன முடக்குவாதமாமா? 

2004-2020 வரை தமிழ் தேசியட்துக்கே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு போட்ட மக்கள், இப்போ மட்டும் ஏன் பிரதேசவாதம் பாக்கிரார்கள்?

தமிழ் தேசிய அரசியல் மீது நம்பிக்கை இழப்பு, கொஞ்சமேனும் அபிவிருத்தி வராதா என்ற அங்கலாய்பு மட்டுமே காரணங்கள். ஆனால் இங்கேயும் ஏமாறத்தான் போகிரார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஏமாறத் தான் போறார்கள் இல்லை ஏமாற வேண்டும் என்பதே  உங்களது எதிர்பார்ப்பு.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஏமாறத் தான் போறார்கள் இல்லை ஏமாற வேண்டும் என்பதே  உங்களது எதிர்பார்ப்பு.  

அக்காச்சிக்கு ஒரு பதிலப் போட்டன், அத நிர்வாக காக்கா கொண்டு பொயிட்டடு. 

எல்லாம் வரலாறு தந்த பட்டறிவு தான் அக்கா 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

அக்காச்சிக்கு ஒரு பதிலப் போட்டன், அத நிர்வாக காக்கா கொண்டு பொயிட்டடு. 

எல்லாம் வரலாறு தந்த பட்டறிவு தான் அக்கா 

எங்கை திருப்பி ஒருக்கால் போடுங்கோ பாப்பம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

கே பி யின் துரோகத்தனத்திற்கும் கருணாவின் துரோகத்தனத்திற்கும் இடையிலான வித்தியாசம் யாதெனில், கருணா செய்த துரோகம் வெளிப்படையானது. எல்லாராலும் பார்க்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டது. கே பி யின் துரோகம் இறுதிவரைக்கும் வெளித்தெரியாவண்ணம் செய்யப்பட்டு, இறுதி யுத்த அவலத்தில் மறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இவ்விரண்டு துரோகங்களாலுமே தமிழர்கள் வீழ்த்தப்பட்டார்கள். இதில் வடக்கென்றும், கிழக்கென்றும் வேறுபாடில்லை.

கே .பி. அரசியலில் ஈடுபடாமல் நல்ல பிள்ளைக்கு ஒதுங்கி இருப்பதும் அவரை யாரும் விமர்சிக்க முயலாமைக்கு காரணமாக இருக்கலாம்.

10 hours ago, ரஞ்சித் said:

இனிமேல் இழப்பதற்கு எதுவுமேயில்லை என்கிற நிலையில், கிடைக்கப்போகும் சலுகைகளான அபிவிருத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையாவது பெற்றுக்கொள்ளலாம் என்கிற நிலையில் இன்று இருக்கிறார்கள். இதைத்தாண்டிச் சிந்திக்கும் நிலையில் அவர்களும் இல்லை, சூழ்நிலையும் இல்லை.

 எம்மை இந்த நாட்டின் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளாதவன், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு எல்லாம் எமக்கு அளிக்கப்போறான் நம்பறோம். சலுகை ஹா... ஹா... எம்மிடம் உள்ளதை பறித்து அம்மணமாய் ஓட்டுவதற்கு கண்ணில் காட்டும் மிட்டாய்.

கிழக்கின் விடிவெள்ளியே வாழ்த்துகள், இன்னும் நீர் எத்தனை கேடுகள் செய்தாலும், நீர்தான் எம் தலைவன்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

நன்றிகள், சொல்லப்படவேண்டிய செய்தி!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

நன்றிகள், சொல்லப்படவேண்டிய செய்தி!

நீங்கள் வெளிநாட்டிலிருந்து உசுப்பேத்திறியள் என்று சொல்லபோகினம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

நீங்கள் வெளிநாட்டிலிருந்து உசுப்பேத்திறியள் என்று சொல்லபோகினம்

அண்ணை, ஆராச்சும் உந்த பிக்குவைக் கேள்வி கேட்கத்தானே வேணும்? அரச இயந்திரமும், பொலீஸும், ராணுவமும் இருக்கிற தைரியத்தில தானே உந்தப் பிக்கு தமிழனில கை வைக்குது? உதைக் கேட்கிறதே பிழையெண்டு சொன்னால் என்ன செய்யிறது? மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் ஆதரவு கொடுக்கிறதுக்காக, பிக்குவின்ர அடாவடித்தனத்தைச் சகித்துக்கொள்ளவேண்டிய தேவை இல்லையே? 

ஆனால் என்ன, இந்தப் பிக்குவைத் தட்டிக் கேட்கக் கூடாதெண்டு மகிந்தவோ கோத்தாவோ சொன்னால், அதைக் கேட்கவேண்டிய நிலையில இருக்கிறம் எண்டதுதான் வேதனை. உது மட்டக்களப்பில மட்டுமில்லை, முல்லைத்தீவு, மணலாறு, மாதகல், கீரிமலை எண்டு எல்லா இடத்திலையும் நடக்குது. எங்கட தலையெழுத்தண்ணை, என்ன செய்வம். இதை யோசிக்கேகுள்ள எனக்கு இந்தியனில  வாற கடுப்பிற்கு அளவில்லை. அவனில்லையெண்டால் எங்கள சிங்களவன் அழிச்சிருப்பானோ அல்லது எங்கட இடத்திலையே சிங்களவன் எங்களுக்கு அடிப்பானோ? எல்லாத்தையுமே கெடுத்துப்போட்டாங்களே அண்ணை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.