Jump to content

அற்புதமான சுவையில் திரும்ப திரும்ப சாப்பிட சொல்லும் ஈழத்து மீன் குழம்பு

nige

Recommended Posts

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிச்ச கறி இருக்கா?
 
Posted
1 hour ago, Maruthankerny said:

மிச்ச கறி இருக்கா?
 
Ha ha 😀😀

சட்டியும் பிரட்டி சாப்பிட்டாச்சு . 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊர்க்கு குழம்பு போல வந்திருக்கிறது. செய்முறைக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, nige said:

Ha ha 😀😀

சட்டியும் பிரட்டி சாப்பிட்டாச்சு . 

ம் நன்றாகத் தான் இருக்கு.
மீன்கறி வைத்தால் உடனேயே பிரட்டி தின்னக் கூடாது.
குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அடுத்த அடுத்த நாட்களில் பிரட்டி(புட்டு நல்லது)தின்று பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

ம் நன்றாகத் தான் இருக்கு.
மீன்கறி வைத்தால் உடனேயே பிரட்டி தின்னக் கூடாது.
குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அடுத்த அடுத்த நாட்களில் பிரட்டி(புட்டு நல்லது)தின்று பாருங்கள்.

சொல்லி வேலையில்லை... ஊரில் அம்மாவின் கையால் சாப்பிட்டது, மண் சட்டியில்லை வைத்து அடுத்தநாள் சாப்பிட ஆகா ஆகா.. 👍

நன்றி பகிர்வுக்கு. 

இந்த மீன் நல்லசுவை, முள்ளுகூட மென்மையானது. 

நான்தான் மீன் குழம்பு வைப்பது, இன்னும் பிடிபடவில்லை பக்குவம்

உங்கள் முறையில் செய்து பார்க்கனும் 

சுவை நல்லாயிருக்கு என்று சொன்னா நம்பமாட்டேன், மருதர் அல்லது ஈழப்பிரியனை கூப்பிட்டு சாப்பாடு கூடுங்கள், அவர்கள் சொன்னாதான் இனிமேல் நம்புவோம்😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த மீன் கறியில் உள்ள பிரதன குறைபாடு ........இந்த மீன் இலங்கைக் கடற்பர்ப்பிற்குரியது அல்ல.

ஆனால் இந்த மீன் சுவையானது என்பது 100%மும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்விற்கு நன்றி..💐

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் வீடியோ இல் பாவிக்கும் மீன், பாரை (travelly) இனம்  அல்ல.

அது, மஞ்சள் வௌவால் (golden pomfret) மீனாகும். சமைப்பதற்கு இலகுவானது.  

கரு  வௌவால் பார்வைக்கு சிலருக்கு உவப்பில்லா விட்டாலும், வௌவால் மீனினத்தில் தனித்தன்மையானது. 

 பாரை மீனில், கண்ணாடிப் பாரை, சிலவேளைகளில் வெள்ளிப் பாரை என்றும் அழைக்கப்படும் சுவையானது. 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீன் குழம்புக்கு நல்ல வாசனையையும் சுவையையும் தருவது நீங்கள் கடைசியில் இடித்துபோட்ட  நற்சீரகத் தூள்தான் .....! பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!  🐠

Posted
13 hours ago, நிலாமதி said:

ஊர்க்கு குழம்பு போல வந்திருக்கிறது. செய்முறைக்கு நன்றி

நன்றி அக்கா

13 hours ago, ஈழப்பிரியன் said:

ம் நன்றாகத் தான் இருக்கு.
மீன்கறி வைத்தால் உடனேயே பிரட்டி தின்னக் கூடாது.
குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அடுத்த அடுத்த நாட்களில் பிரட்டி(புட்டு நல்லது)தின்று பாருங்கள்.

அது என்னவோ உண்மைதான். நானும் சாப்பிட்டுருக்கிறேன்.அந்த அழகான நினைவுகள் மறக்க முடியாதவை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Kapithan said:

இந்த மீன் இலங்கைக் கடற்பர்ப்பிற்குரியது அல்ல.

வௌவால்  மீன், உலர் வலய பெருங்கடலில் உள்ளது. பசிபிக் மற்றும் அதலாந்திக் சமுத்திரத்தில் உள்ள   வௌவால் இனத்தை விட என்னை தன்மை குறைவானது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, nige said:

அது என்னவோ உண்மைதான். நானும் சாப்பிட்டுருக்கிறேன்.அந்த அழகான நினைவுகள் மறக்க முடியாதவை

ஆனபடியால் அடுத்தவன் வந்திடுவானே என்று அவசரப்பட்டு முள்ளு குத்த குத்த வழித்து திண்டு கழுவி கவுக்காதீங்க பிளீஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப நான் நல்ல உசார்.உங்கள் பதிவுக்கு பச்சையும் குத்தி பதிலும் போட்டால் நீங்கள் மற்ற பிரியனுக்கு நன்றி சொல்வீர்கள்.எனக்கு என்ன விசரே.😀

Posted
19 hours ago, ஈழப்பிரியன் said:

ம் நன்றாகத் தான் இருக்கு.
மீன்கறி வைத்தால் உடனேயே பிரட்டி தின்னக் கூடாது.
குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அடுத்த அடுத்த நாட்களில் பிரட்டி(புட்டு நல்லது)தின்று பாருங்கள்.

மண் சட்டியில் வைத்து, வெப்ப நாட்களில் ஓர் இலங்கை மாதிரி நாட்டில் வைத்து, அடுத்த நாள் கொஞ்சம் புளிச்ச மாதிரியும் இருக்க வேணும்.

Posted
17 hours ago, உடையார் said:

சொல்லி வேலையில்லை... ஊரில் அம்மாவின் கையால் சாப்பிட்டது, மண் சட்டியில்லை வைத்து அடுத்தநாள் சாப்பிட ஆகா ஆகா.. 👍

நன்றி பகிர்வுக்கு. 

இந்த மீன் நல்லசுவை, முள்ளுகூட மென்மையானது. 

நான்தான் மீன் குழம்பு வைப்பது, இன்னும் பிடிபடவில்லை பக்குவம்

உங்கள் முறையில் செய்து பார்க்கனும் 

சுவை நல்லாயிருக்கு என்று சொன்னா நம்பமாட்டேன், மருதர் அல்லது ஈழப்பிரியனை கூப்பிட்டு சாப்பாடு கூடுங்கள், அவர்கள் சொன்னாதான் இனிமேல் நம்புவோம்😁

கொறோனாவை நினைத்தால்தான் பயமாய் இருக்கு. parcel ல வேணுமெண்டால் அனுப்பி விடலாம். ஆண்பிள்ளைகளிற்கு எப்பவும் அம்மா சமையல்தான் பிடிக்கும்..பகிர்வுக்கு நன்றி உடையார்..

Posted
2 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப நான் நல்ல உசார்.உங்கள் பதிவுக்கு பச்சையும் குத்தி பதிலும் போட்டால் நீங்கள் மற்ற பிரியனுக்கு நன்றி சொல்வீர்கள்.எனக்கு என்ன விசரே.😀

என்ன சொல்லுறீங்கள் என்று விளங்கேல்ல சுவைப்பிரியன். நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப நான் நல்ல உசார்.உங்கள் பதிவுக்கு பச்சையும் குத்தி பதிலும் போட்டால் நீங்கள் மற்ற பிரியனுக்கு நன்றி சொல்வீர்கள்.எனக்கு என்ன விசரே.😀

அடபாவி அண்ணனுக்கு தந்தால் என்ன தம்பிக்கு தந்தால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்த கறிய பாக்க வாயூறுது. ஆனால் இந்த பக்கெட் மீன் என்னதான் வடிவா சமைச்சாலும் டேஸ்ட் வராது. இங்க பிரஸ் இந்தியன் ஓசன் மீனும் விக்கினம். ஆனால் எப்படியும் இந்தியன் ஓசனில் இருந்து வர ஒரு நாளாவது போகும்தானே.

ஊரில மாரி கடக்கரையில போய் துள்ள துடிக்க வாங்கிற மீனின் சுவையில் 70% கூட வராது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, goshan_che said:

ஊரில மாரி கடக்கரையில போய் துள்ள துடிக்க வாங்கிற மீனின் சுவையில் 70% கூட வராது.

தல! ஊரிலை எந்த கடற்கரையிலை மீன் துள்ள துடிக்க வாங்கினது? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, குமாரசாமி said:

தல! ஊரிலை எந்த கடற்கரையிலை மீன் துள்ள துடிக்க வாங்கினது? :cool:

பொன்னாலை பாலம், நாவாந்துறை, மாதகல், கல்லடி கடற்கரை வாடி, காத்தான்குடி பீச் ரோட் தொங்கல்,  முல்லைதீவு பீட்டர்ஸ் சேர்ச்சுக்கு முன்னால, சிலாவத்துறை - இப்படி வள்ளம் ஏறுற எந்த கடற்கரையிலும் 5-6 போனால் வாங்கலாமே?

உந்த நாசமறுந்த கொழும்பிலதான் ஒவ்வொரு நாளும் கடல்ல குளிச்சிட்டு, மார்கெட்டில போய் மீன் வாங்கினது 🤣

Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

அடபாவி அண்ணனுக்கு தந்தால் என்ன தம்பிக்கு தந்தால் என்ன?

அதுதானே 

4 hours ago, goshan_che said:

உந்த கறிய பாக்க வாயூறுது. ஆனால் இந்த பக்கெட் மீன் என்னதான் வடிவா சமைச்சாலும் டேஸ்ட் வராது. இங்க பிரஸ் இந்தியன் ஓசன் மீனும் விக்கினம். ஆனால் எப்படியும் இந்தியன் ஓசனில் இருந்து வர ஒரு நாளாவது போகும்தானே.

ஊரில மாரி கடக்கரையில போய் துள்ள துடிக்க வாங்கிற மீனின் சுவையில் 70% கூட வராது.

என்ன செய்வது...ஆலையில்லா ஊரில் இலுப்பம் பூ சக்கரையாம்...என்ற கதைதான் இது ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/10/2020 at 06:34, goshan_che said:

உந்த கறிய பாக்க வாயூறுது. ஆனால் இந்த பக்கெட் மீன் என்னதான் வடிவா சமைச்சாலும் டேஸ்ட் வராது. இங்க பிரஸ் இந்தியன் ஓசன் மீனும் விக்கினம். ஆனால் எப்படியும் இந்தியன் ஓசனில் இருந்து வர ஒரு நாளாவது போகும்தானே.

ஊரில மாரி கடக்கரையில போய் துள்ள துடிக்க வாங்கிற மீனின் சுவையில் 70% கூட வராது.

இந்த பாறை மீன் சமைத்து சாப்பிடனீர்களா? அடுத்த முறை சந்தைக்கு போகும் போது தேடிப்பார்க்கனும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, உடையார் said:

இந்த பாறை மீன் சமைத்து சாப்பிடனீர்களா? அடுத்த முறை சந்தைக்கு போகும் போது தேடிப்பார்க்கனும் 

உடையார் உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன, எனக்கு gold fish ஐ தவிர வேறு மீனை இனம் பிரிக்கத் தெரியாது🤣.

முந்தி அப்பருடன் போய் பிராக்கு பார்ப்பேன். இப்போ மீன் வாங்க போகும் போது சமைக்க போற உறவினரையும் கையோட கூட்டி போய்விடுவேன்🤣.

றால், நண்டு சைசை பார்த்து ஓரளவுக்கு நானே வாங்கி விடுவேன். இங்கே லண்டனில் என்றால் “வழமையான பக்கற்”🤣. அது கடையில் இல்லை என்றால், கடையில் நின்று ஒரு FaceTime call😂.

சமைத்த பிறகு, கீரி மீன், நெத்தலி, “பெரிய மீன்” என்ற வகையில்தான் பாகுபாடு😂.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, goshan_che said:

உடையார் உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன, எனக்கு gold fish ஐ தவிர வேறு மீனை இனம் பிரிக்கத் தெரியாது🤣.

முந்தி அப்பருடன் போய் பிராக்கு பார்ப்பேன். இப்போ மீன் வாங்க போகும் போது சமைக்க போற உறவினரையும் கையோட கூட்டி போய்விடுவேன்🤣.

றால், நண்டு சைசை பார்த்து ஓரளவுக்கு நானே வாங்கி விடுவேன். இங்கே லண்டனில் என்றால் “வழமையான பக்கற்”🤣. அது கடையில் இல்லை என்றால், கடையில் நின்று ஒரு FaceTime call😂.

சமைத்த பிறகு, கீரி மீன், நெத்தலி, “பெரிய மீன்” என்ற வகையில்தான் பாகுபாடு😂.

அவங்கள் பக்குவமாய் செய்துதரும் கறியை ரசித்து ருசித்து சாப்பிடத் தெரிந்தால் போதும். அதுக்காக மீன் இனமெல்லாம் தெரிய வேணும் என்று அவசியமில்லை கோஷான்....... கார் ஓடுறதுக்கு காருக்குள் இருக்கும் பார்ட்ஸ் எல்லாம் தெரியவேணும் என்ற அவசியமா என்ன......!  😁

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.