Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரனா தடுப்பூசிகள்: அடுத்த ஆறு மாதங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரனா தடுப்பூசிகள்: அடுத்த ஆறு மாதங்கள்

நவீன கொரனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தடுப்பூசி பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடு வாரங்கள் மாதங்கள் கழிந்திருக்கின்றன. தற்போது 2 கொரனா தடுப்பூசிகள் இறுதி நிலையை அடைந்திருக்கின்றன. அவை பற்றிய சுருக்கமான விளக்கமும், எதிர்பார்ப்புகளும் இவை.

நூறில் நான்கு

நூறுக்கு மேற்பட்ட கொரனா தடுப்பூசி மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு பரிசோதனை நிலைகளிலும் இருக்கின்றன. இவற்றுள் மேற்கு நாட்டுத் தரக்கட்டுப்பாடுகளுக்கேற்ப மூன்றாம் மட்ட பரிசோதனைகளில் 4 தடுப்பூசிகள் தற்போது இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்கா (ஒக்ஸ்போர்ட்) தடுப்பூசி, மொடெர்னா தடுப்பூசி, fபைசர் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி என்பனவே அந்த நான்கும். 

இந்த நான்கு தடுப்பூசிகளும் பல ஆயிரம் பேர்களில் 2020 ஜூலை மாதத்தில் இருந்து பரிசோதிக்கப் பட்டு வருகின்றன. இவற்றுள் அஸ்ட்ரா செனெக்காவின் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சனின் தடுப்பூசி இரண்டும் பரிசோதிக்கப் பட்ட குழுக்களில், serious adverse reactions (SAR) எனப்படும் பாரதூரமான பக்க விளைவுகள் தலா ஒவ்வொரு நபரில் ஏற்பட்டதால், அவை இரண்டு வாரங்கள் வரை இடை நிறுத்தப் பட்டு இப்போது மீள பரிசோதனைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாரதூரமான பக்க விளைவு தொடர்பாக திருப்திகரமான தகவல்களை வெளியிடத் தவறியதால் , அஸ்ட்ரா செனக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிகள் தொடர்பாக கொஞ்சம் நிச்சயமின்மை நிலவுகிறது.

இன்னொரு பக்கம் பார்த்தால், 40,000 மனிதர்களை ஒரு தடுப்பூசிப் பரிசோதனையில் சேர்த்துக் கொள்ளும் போது அவர்களுள் சில அரிதான உடல்வாசி , மரபணு மாற்றங்கள் கொண்டவர்கள் உள்வாங்கப் பட்டு   அதனால் அவர்களுக்கு பாரதூரமான பக்க விளைவுகள் உருவாவது சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இதனால் தான் எந்த தடுப்பூசியும் பாரதூரமான பக்க விளைவுகளை உருவாக்கும் சாத்தியக் கூறு மிகச்சிறிதளவு  இருப்பதாக அறிவித்து, அனுமதி பெற்றுத் தான் பயனரின் உடலில் செலுத்தப் படுகிறது. 

வெற்றியாளர்கள்: மொடெர்னா, fபைசர்

இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஒரே தொழில் நுட்ப அடிப்படையைக் கொண்ட, நவீன தடுப்பூசிகள். இது ஏன் முக்கியம்? இனி எதிர்காலத்தில் உருவாகும் எந்த புதிய வைரசுத் தொற்று நோய்க்கும் எதிராக , இந்த ஆர்.என்.ஏ (RNA) தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியுமென்ற தகவல் இதில் உறுதியாகிறது. இந்த ஆர்.என்.ஏ தொழில் நுட்பம் பழைய நுட்பங்களை விட இலகுவானதும் விரைவானதுமான ஒரு முறை. 

தகவல்களின் நம்பகத் தன்மை என்ன?
இந்த இரண்டு தடுப்பூசிகளும் 90 - 95% வீதமான பாதுகாப்பை (efficacy) வழங்குவதாக அந்தக் கம்பனிகளின்  செய்திக் குறிப்பு மூலம் தகவல் வெளியிடப் பட்டிருக்கிறது. இதன் நம்பகத் தன்மை இதனால் பாதிக்கப் படுமா? இல்லை என்பதே பதில். இந்த தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் தயாரித்தாலும் 30,000 - 40,000 பேர் வரை பரிசோதிக்கப் பட்டது அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளால். இந்த மருத்துவ நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் randomized double-blind என்ற முறையில் பரிசோதிக்கப் பட்டன என்பது நம்பகத் தன்மை குறித்த முக்கியமான ஒரு தகவல். Double-blind என்பது தடுப்பூசியை எடுத்துக் கொள்பவருக்கும் , தடுப்பூசியை வழங்கும் மருத்துவ சேவையாளருக்கும் கொடுக்கப் படுவது தடுப்பூசியா அல்லது கட்டுப்பாட்டு (placebo) ஊசியா என்பது தெரியாத நிலைமை. இந்த தகவல்களை பரிசோதனையில் பங்கு கொள்ளாத ஒரு மூன்றாவது குழு மட்டும் தான் பரிசோதனை முடிவில் unmask செய்து கண்டறியும். அந்தக் குழு வெளியிடும் தகவல்களே இந்த 90 - 95% வினைத்திறனை உறுதி செய்திருக்கின்றன.

குறைபாடுகள் என்ன?   

இந்த இரண்டு தடுப்பூசிகளின் வினைத்திறன் (efficacy) , மற்றும் பாதுகாப்பு  (safety) ஆயிரக் கணக்கான மனிதர்களில் உறுதி செய்யப் பட்டாலும், இந்த முடிவுகள் தடுப்பூசி போடப் பட்டு சில வாரங்களுக்குள் அளக்கப் பட்ட அளவீடுகள் என்பது கவனத்திற்குரிய விடயம். இதன் அர்த்தம், குறுகிய காலத்திற்கு இந்த இரு தடுப்பூசிகளும் கோவிட் தொற்றில் இருந்து பாதுக்காக்கின்றன என்பதாகும். இந்தப் பாதுகாப்பு எத்தனை வாரங்கள், அல்லது மாதங்கள் நீடித்திருக்கும் என்பதை அறிய நாம் 2021 ஜூலை வரை பொறுத்திருக்க வேண்டும். 

கோவிட்டினால் பாதிக்கப் பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வைரஸ் எதிர்ப்பு  மூன்று மாதங்களின் பின்னர் 25% ஆகக் குறைந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த 25% வைரஸ் எதிர்ப்பு கோவிட்டில் இருந்து பாதுகாப்பு வழங்கப் போதுமானதா என்பதை அந்த ஆய்வு கண்டறியவில்லை! எனவே, இந்த இரு தடுப்பூசிகளின் பூரணமான முடிவுகள் வெளி வரும் போது தான் இந்த நீண்டகால கோவிட் தடுப்பு இயலுமை பற்றிய தெளிவு பிறக்கும்.

நீடித்த பாதுகாப்பு இல்லாவிட்டால்..?

இது பாரதூரமான பிரச்சினை அல்ல! நீடித்த பாதுகாப்பை வழங்க ஒரு ஊக்க (booster) டோஸ் வழங்கும் முறை கொண்டு வரப்படலாம். இதன் அர்த்தம், இரண்டாம் தடவையும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதாகும். அல்லது, இன்புழுவன்சாவுக்கு எதிராக வருடாவருடம் போட்டுக் கொள்ளும்  தடுப்பூசி போல கோவிட் தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். இவையெல்லாம் தெளிவாக இப்போது எங்களுக்கு அவசியமானது பொறுமை மட்டுமே: குறைந்தது அடுத்த 6 மாதங்கள் வரையான பொறுமை.

கவச குண்டலங்கள் அப்படியே தொடரட்டும்..

உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லியிருப்பது போல, இந்தத் தடுப்பூசிகள் மட்டுமே முழுமையாக கோவிட்டை ஒழிக்கப் போதுமானவையல்ல! குறைந்த பட்சம் அடுத்த 6 மாதங்களுக்கு போதுமானதல்ல என்பது பொருத்தம். தடுப்பூசியின் பாதுகாப்பு முழுவதும் உறுதி செய்யப் படும் வரை , முகக் கவசம், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன பின் தொடரப் பட வேண்டியது முக்கியம். ஆறு மாதங்களின் பின், சமூகத்தில் 95% ஆனோர் இந்த தடுப்பூசிகளுள் ஒன்றை எடுத்துக் கொண்டால், கோவிட் பரவுவது குறையலாம். அதன் பின்னர் , முகக் கவசம் அகற்றப் படக்கூடிய நிலை வரலாம். ஆறடித் தூரம் அவசியமற்றதாகலாம்.

கைகளை அடிக்கடி கழுவுதல் என்பதைக் கைவிட வேண்டிய தேவை இல்லை, எனவே அதை நாம் "கோவிட் தந்த நினைவுப் பரிசாக" வாழ் நாள் பூராகவும் தொடர வேண்டும். 

இன்னொரு முக்கிய விடயம்: தடுப்பூசிகள் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் நம்பிக்கையான ஊடகங்கள், அமைப்புகளிடம் இருந்து மட்டுமே பெறவும் பரப்பவும் வேண்டும். வீணான வதந்திகள், சதிக் கோட்பாட்டுக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டாலும் அவற்றைப் பரப்பாமல் இருந்தாலே கோவிட் ஒழிப்பிற்கு பங்களிப்புச் செய்தவர்கள் என்ற பெருமை உங்களுக்குக் கிடைக்கும்!

- ஜஸ்ரின்

பிரதான மூலங்கள்/மேலதிக தகவல்கள்:  

https://www.nih.gov/news-events/news-releases/promising-interim-results-clinical-trial-nih-moderna-covid-19-vaccine

https://www.nature.com/articles/s41577-020-00434-6 

தகவல்களுக்கு நன்றி ஜஸ்ரின்.

இந்தத் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதிலும் பிரச்சனகள் உள்ளதாகத் தெரிகிறது. இரண்டு படிகளாகத் தடுப்பூசி போட வேண்டியுள்ளதாகக் கூறுகிறார்கள். முதலாவது ஊசி போட்டு மூன்று வாரங்களில் இன்னொரு ஊசி போட்டுக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் தடுப்பு மருந்தினைப் பாதுகாக்க -80 °C வரையிலான வெப்பநிலையில் வைத்திருக்கவும் வேண்டுமாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, இணையவன் said:

இணையவன், கருத்துப் பகிர்வுக்கு நன்றி!

இரண்டு பகுதிகளாக தடுப்பூசி போட்டுக் கொள்வது பல தடுப்பூசிகளைப் பொறுத்தவரை சாதாரணமான ஒரு விடயம். எங்களுடைய நிர்ப்பீடனக் கலங்களுக்கு ஞாபக சக்தி (memory) என்றொரு இயல்பிருக்கிறது. இந்த ஞாபக சக்தியை அதிகரிக்க இரண்டு தடவைகள் அனேகமாக சில வாரங்கள் இடைவெளியில் போட்டுக் கொள்வது சாதாரணமான முறை. இதில் ஆரோக்கியப் பாதிப்புகள் மேலதிகமாக ஏற்படாது.

இந்த இரு தடுப்பூசிகளில், fபைசர் தடுப்பூசி - 80 பாகை செல்சியசில் பேணப்பட வேண்டும். மொடெர்னா தடுப்பூசி சாதாரண குளிர்சாதனப் பெட்டியில் (2 - 8 பாகை செல்சியஸ்) பேணப்படக் கூடியது. இதனால், fபைசர் தடுப்பூசியை விநியோகிப்பதில் ஒரு மேலதிக சவால் இருக்கிறது. மொடெர்னா தடுப்பூசிக்கு பிரச்சினையில்ல. 

இவை இரண்டுமே அறை வெப்ப நிலையில் இலகுவாக அழியக் கூடிய ஆர்.என்.ஏ (RNA) மூலக் கூறுகளால்  ஆன தடுப்பூசிகளாக இருப்பினும், மொடெர்னா சில இரசாயன நுட்பங்களால் ஆர்.என்.ஏ யின் அழிவைத் தடுத்திருக்கிறது. இந்த எளிமையான நுட்பத்தை fபைசரும் எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும். ஆனால், அந்த தயாரிப்பை முதலில் இருந்து பரிசோதிக்க வேண்டியிருக்கும். 

Edited by Justin
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கொரனா தடுப்பூசிகள்: அடுத்த ஆறு மாதங்கள்

நவீன கொரனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தடுப்பூசி பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடு வாரங்கள் மாதங்கள் கழிந்திருக்கின்றன. தற்போது 2 கொரனா தடுப்பூசிகள் இறுதி நிலையை அடைந்திருக்கின்றன. அவை பற்றிய சுருக்கமான விளக்கமும், எதிர்பார்ப்புகளும் இவை.

நூறில் நான்கு

நூறுக்கு மேற்பட்ட கொரனா தடுப்பூசி மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு பரிசோதனை நிலைகளிலும் இருக்கின்றன. இவற்றுள் மேற்கு நாட்டுத் தரக்கட்டுப்பாடுகளுக்கேற்ப மூன்றாம் மட்ட பரிசோதனைகளில் 4 தடுப்பூசிகள் தற்போது இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்கா (ஒக்ஸ்போர்ட்) தடுப்பூசி, மொடெர்னா தடுப்பூசி, fபைசர் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி என்பனவே அந்த நான்கும். 

இந்த நான்கு தடுப்பூசிகளும் பல ஆயிரம் பேர்களில் 2020 ஜூலை மாதத்தில் இருந்து பரிசோதிக்கப் பட்டு வருகின்றன. இவற்றுள் அஸ்ட்ரா செனெக்காவின் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சனின் தடுப்பூசி இரண்டும் பரிசோதிக்கப் பட்ட குழுக்களில், serious adverse reactions (SAR) எனப்படும் பாரதூரமான பக்க விளைவுகள் தலா ஒவ்வொரு நபரில் ஏற்பட்டதால், அவை இரண்டு வாரங்கள் வரை இடை நிறுத்தப் பட்டு இப்போது மீள பரிசோதனைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாரதூரமான பக்க விளைவு தொடர்பாக திருப்திகரமான தகவல்களை வெளியிடத் தவறியதால் , அஸ்ட்ரா செனக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிகள் தொடர்பாக கொஞ்சம் நிச்சயமின்மை நிலவுகிறது.

இன்னொரு பக்கம் பார்த்தால், 40,000 மனிதர்களை ஒரு தடுப்பூசிப் பரிசோதனையில் சேர்த்துக் கொள்ளும் போது அவர்களுள் சில அரிதான உடல்வாசி , மரபணு மாற்றங்கள் கொண்டவர்கள் உள்வாங்கப் பட்டு   அதனால் அவர்களுக்கு பாரதூரமான பக்க விளைவுகள் உருவாவது சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இதனால் தான் எந்த தடுப்பூசியும் பாரதூரமான பக்க விளைவுகளை உருவாக்கும் சாத்தியக் கூறு மிகச்சிறிதளவு  இருப்பதாக அறிவித்து, அனுமதி பெற்றுத் தான் பயனரின் உடலில் செலுத்தப் படுகிறது. 

வெற்றியாளர்கள்: மொடெர்னா, fபைசர்

இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஒரே தொழில் நுட்ப அடிப்படையைக் கொண்ட, நவீன தடுப்பூசிகள். இது ஏன் முக்கியம்? இனி எதிர்காலத்தில் உருவாகும் எந்த புதிய வைரசுத் தொற்று நோய்க்கும் எதிராக , இந்த ஆர்.என்.ஏ (RNA) தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியுமென்ற தகவல் இதில் உறுதியாகிறது. இந்த ஆர்.என்.ஏ தொழில் நுட்பம் பழைய நுட்பங்களை விட இலகுவானதும் விரைவானதுமான ஒரு முறை. 

தகவல்களின் நம்பகத் தன்மை என்ன?
இந்த இரண்டு தடுப்பூசிகளும் 90 - 95% வீதமான பாதுகாப்பை (efficacy) வழங்குவதாக அந்தக் கம்பனிகளின்  செய்திக் குறிப்பு மூலம் தகவல் வெளியிடப் பட்டிருக்கிறது. இதன் நம்பகத் தன்மை இதனால் பாதிக்கப் படுமா? இல்லை என்பதே பதில். இந்த தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் தயாரித்தாலும் 30,000 - 40,000 பேர் வரை பரிசோதிக்கப் பட்டது அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளால். இந்த மருத்துவ நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் randomized double-blind என்ற முறையில் பரிசோதிக்கப் பட்டன என்பது நம்பகத் தன்மை குறித்த முக்கியமான ஒரு தகவல். Double-blind என்பது தடுப்பூசியை எடுத்துக் கொள்பவருக்கும் , தடுப்பூசியை வழங்கும் மருத்துவ சேவையாளருக்கும் கொடுக்கப் படுவது தடுப்பூசியா அல்லது கட்டுப்பாட்டு (placebo) ஊசியா என்பது தெரியாத நிலைமை. இந்த தகவல்களை பரிசோதனையில் பங்கு கொள்ளாத ஒரு மூன்றாவது குழு மட்டும் தான் பரிசோதனை முடிவில் unmask செய்து கண்டறியும். அந்தக் குழு வெளியிடும் தகவல்களே இந்த 90 - 95% வினைத்திறனை உறுதி செய்திருக்கின்றன.

குறைபாடுகள் என்ன?   

இந்த இரண்டு தடுப்பூசிகளின் வினைத்திறன் (efficacy) , மற்றும் பாதுகாப்பு  (safety) ஆயிரக் கணக்கான மனிதர்களில் உறுதி செய்யப் பட்டாலும், இந்த முடிவுகள் தடுப்பூசி போடப் பட்டு சில வாரங்களுக்குள் அளக்கப் பட்ட அளவீடுகள் என்பது கவனத்திற்குரிய விடயம். இதன் அர்த்தம், குறுகிய காலத்திற்கு இந்த இரு தடுப்பூசிகளும் கோவிட் தொற்றில் இருந்து பாதுக்காக்கின்றன என்பதாகும். இந்தப் பாதுகாப்பு எத்தனை வாரங்கள், அல்லது மாதங்கள் நீடித்திருக்கும் என்பதை அறிய நாம் 2021 ஜூலை வரை பொறுத்திருக்க வேண்டும். 

கோவிட்டினால் பாதிக்கப் பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வைரஸ் எதிர்ப்பு  மூன்று மாதங்களின் பின்னர் 25% ஆகக் குறைந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த 25% வைரஸ் எதிர்ப்பு கோவிட்டில் இருந்து பாதுகாப்பு வழங்கப் போதுமானதா என்பதை அந்த ஆய்வு கண்டறியவில்லை! எனவே, இந்த இரு தடுப்பூசிகளின் பூரணமான முடிவுகள் வெளி வரும் போது தான் இந்த நீண்டகால கோவிட் தடுப்பு இயலுமை பற்றிய தெளிவு பிறக்கும்.

நீடித்த பாதுகாப்பு இல்லாவிட்டால்..?

இது பாரதூரமான பிரச்சினை அல்ல! நீடித்த பாதுகாப்பை வழங்க ஒரு ஊக்க (booster) டோஸ் வழங்கும் முறை கொண்டு வரப்படலாம். இதன் அர்த்தம், இரண்டாம் தடவையும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதாகும். அல்லது, இன்புழுவன்சாவுக்கு எதிராக வருடாவருடம் போட்டுக் கொள்ளும்  தடுப்பூசி போல கோவிட் தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். இவையெல்லாம் தெளிவாக இப்போது எங்களுக்கு அவசியமானது பொறுமை மட்டுமே: குறைந்தது அடுத்த 6 மாதங்கள் வரையான பொறுமை.

கவச குண்டலங்கள் அப்படியே தொடரட்டும்..

உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லியிருப்பது போல, இந்தத் தடுப்பூசிகள் மட்டுமே முழுமையாக கோவிட்டை ஒழிக்கப் போதுமானவையல்ல! குறைந்த பட்சம் அடுத்த 6 மாதங்களுக்கு போதுமானதல்ல என்பது பொருத்தம். தடுப்பூசியின் பாதுகாப்பு முழுவதும் உறுதி செய்யப் படும் வரை , முகக் கவசம், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன பின் தொடரப் பட வேண்டியது முக்கியம். ஆறு மாதங்களின் பின், சமூகத்தில் 95% ஆனோர் இந்த தடுப்பூசிகளுள் ஒன்றை எடுத்துக் கொண்டால், கோவிட் பரவுவது குறையலாம். அதன் பின்னர் , முகக் கவசம் அகற்றப் படக்கூடிய நிலை வரலாம். ஆறடித் தூரம் அவசியமற்றதாகலாம்.

கைகளை அடிக்கடி கழுவுதல் என்பதைக் கைவிட வேண்டிய தேவை இல்லை, எனவே அதை நாம் "கோவிட் தந்த நினைவுப் பரிசாக" வாழ் நாள் பூராகவும் தொடர வேண்டும். 

இன்னொரு முக்கிய விடயம்: தடுப்பூசிகள் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் நம்பிக்கையான ஊடகங்கள், அமைப்புகளிடம் இருந்து மட்டுமே பெறவும் பரப்பவும் வேண்டும். வீணான வதந்திகள், சதிக் கோட்பாட்டுக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டாலும் அவற்றைப் பரப்பாமல் இருந்தாலே கோவிட் ஒழிப்பிற்கு பங்களிப்புச் செய்தவர்கள் என்ற பெருமை உங்களுக்குக் கிடைக்கும்!

- ஜஸ்ரின்

பிரதான மூலங்கள்/மேலதிக தகவல்கள்:  

https://www.nih.gov/news-events/news-releases/promising-interim-results-clinical-trial-nih-moderna-covid-19-vaccine

https://www.nature.com/articles/s41577-020-00434-6 

இணைப்பிற்கு நன்றி ஜஸ்டின்...இப்போது ஒரு செய்தி உலாவுகின்றது மவுத் வோஸ்சுக்கு[Mouth Wash] வைரசை  கொல்லும் சக்தியுள்ளதென்று :unsure:இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
 
👍

நான் கொரோனாவுக்காக மருத்துவ அறிவுரைபடி அடிக்கடி கைகளை கழுவுவதால் முன்பு அடிக்கடி வரும் தடிமன் கூட 8 மாதமாக வரவில்லை.

25 minutes ago, Justin said:

மொடெர்னா தடுப்பூசி சாதாரண குளிர்சாதனப் பெட்டியில் (2 - 8 பாகை செல்சியஸ்) பேணப்படக் கூடியது.

நல்லதே.

செய்தி ஒன்றில் சொன்னார்கள் மொடெர்னா தடுப்பூசி 20 பாகை செல்சியஸ்சில் வைக்க வேண்டும்  என்று அது கூட பிரச்சனை இல்லை freezer  வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

மூன்றாம் மட்ட பரிசோதனைகளில் 4 தடுப்பூசிகள் தற்போது இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்கா (ஒக்ஸ்போர்ட்) தடுப்பூசி, மொடெர்னா தடுப்பூசி, fபைசர் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி என்பனவே அந்த நான்கும். 

 SARS-CoV-2: Impfstoff von Biontech/Pfizer verhindert in Phase-3-Studie...

ஜஸ்ரின், மூன்றாம் கட்ட, பரிசோதனைக்கு எடுக்கப் பட்ட...
அந்த, நான்கு நிறுவனங்களும்...  
எந்த நாட்டுக்கு சொந்தமானவை என அறிய ஆவலாக உள்ளது. 

ஏனென்றால்...  இன்று  ஜேர்மனியில் இருக்கும்   Biontech  நிறுவனமும்,
இப்போது... அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும்...
Pfizer நிறுவனமும், ஜேர்மனியில்  ஆரம்பிக்கப் பட்டவை.

கூடுதல் தகவல்...  Biontech  நிறுவனம்,  ஒரு துருக்கி தம்பதியினரின், 
கூட்டு முயற்சியால் ஆரம்பிக்கப் பட்டது, என்பது... 
இங்கு  பலரையும், வியந்து பார்க்க வைக்கின்றது.  

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி ஜஸ்டின்...இப்போது ஒரு செய்தி உலாவுகின்றது மவுத் வோஸ்சுக்கு[Mouth Wash] வைரசை  கொல்லும் சக்தியுள்ளதென்று :unsure:இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
 
ரதி, இது பற்றிய சிறு ஆய்வுகள் நடந்திருக்கின்றன, செய்திகளிலும் பேசப்படுகிறது. ஆனால், கோவிட் தொற்றை வாய் கழுவும் திரவங்கள் தடுக்காது என்பதே சுருக்கமான பதில். பல வாய் கழுவும் திரவங்களில் ஆகக் கூடியது 20% அல்கஹோல் இருக்கும் , சில வாய் கழுவும் திரவங்களில் அல்கஹோல் இருக்காது. கொரனாவைரசைக் கொல்ல குறைந்தது 60% அல்கஹோல் தேவை. 

வாய் துர்வாசனை தரும் பக்ரீரியாக்களை கொல்லும் இயலுமை மட்டுமே வாய் கழுவும் திரவங்களுக்கு உண்டு. 

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

👍

நான் கொரோனாவுக்காக மருத்துவ அறிவுரைபடி அடிக்கடி கைகளை கழுவுவதால் முன்பு அடிக்கடி வரும் தடிமன் கூட 8 மாதமாக வரவில்லை.

நல்லதே.

செய்தி ஒன்றில் சொன்னார்கள் மொடெர்னா தடுப்பூசி 20 பாகை செல்சியஸ்சில் வைக்க வேண்டும்  என்று அது கூட பிரச்சனை இல்லை freezer  வைக்கலாம்.

வி.நி, ஆம். மொடெர்னா தடுப்பூசி - 20 பாகை செல்சியசில் ஆறு மாதங்களும், சாதாரண குளிரூட்டியில்  30 நாட்களும், அறை வெப்ப நிலையில் 12 மணிநேரங்களும் அழிந்து போகாமல் இருக்கும் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.
 
1 hour ago, தமிழ் சிறி said:

 SARS-CoV-2: Impfstoff von Biontech/Pfizer verhindert in Phase-3-Studie...

ஜஸ்ரின், மூன்றாம் கட்ட, பரிசோதனைக்கு எடுக்கப் பட்ட...
அந்த, நான்கு நிறுவனங்களும்...  
எந்த நாட்டுக்கு சொந்தமானவை என அறிய ஆவலாக உள்ளது. 

ஏனென்றால்...  இன்று  ஜேர்மனியில் இருக்கும்   Biontech  நிறுவனமும்,
இப்போது... அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும்...
Pfizer நிறுவனமும், ஜேர்மனியில்  ஆரம்பிக்கப் பட்டவை.

கூடுதல் தகவல்...  Biontech  நிறுவனம்,  ஒரு துருக்கி தம்பதியினரின், 
கூட்டு முயற்சியால் ஆரம்பிக்கப் பட்டது, என்பது... 
இங்கு  பலரையும், வியந்து பார்க்க வைக்கின்றது.  

த.சி: 

அஸ்ட்ரா செனக்கா - பிரிட்டன். இவர்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலையோடு சேர்ந்து தடுப்பூசியைத் தயாரித்தனர்.

மொடெர்னா - அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் இருக்கும் மிக இளைய கம்பனி. இதன் தலைமை நிர்வாகி ஒரு பிரெஞ்சுக் காரர்.

ஜோன்சன் அன்ட் ஜோன்சன்: அமெரிக்கா, நியூ ஜேர்சி மாநிலம். 

fபைசர் இப்போது அமெரிக்காவில் தலைமையகம். 
 
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

ஜ--ன்... தகவலுக்கு, நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎20‎-‎11‎-‎2020 at 17:04, Justin said:

கொரனா தடுப்பூசிகள்: அடுத்த ஆறு மாதங்கள்

நவீன கொரனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தடுப்பூசி பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடு வாரங்கள் மாதங்கள் கழிந்திருக்கின்றன. தற்போது 2 கொரனா தடுப்பூசிகள் இறுதி நிலையை அடைந்திருக்கின்றன. அவை பற்றிய சுருக்கமான விளக்கமும், எதிர்பார்ப்புகளும் இவை.

நூறில் நான்கு

நூறுக்கு மேற்பட்ட கொரனா தடுப்பூசி மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு பரிசோதனை நிலைகளிலும் இருக்கின்றன. இவற்றுள் மேற்கு நாட்டுத் தரக்கட்டுப்பாடுகளுக்கேற்ப மூன்றாம் மட்ட பரிசோதனைகளில் 4 தடுப்பூசிகள் தற்போது இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்கா (ஒக்ஸ்போர்ட்) தடுப்பூசி, மொடெர்னா தடுப்பூசி, fபைசர் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி என்பனவே அந்த நான்கும். 

இந்த நான்கு தடுப்பூசிகளும் பல ஆயிரம் பேர்களில் 2020 ஜூலை மாதத்தில் இருந்து பரிசோதிக்கப் பட்டு வருகின்றன. இவற்றுள் அஸ்ட்ரா செனெக்காவின் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சனின் தடுப்பூசி இரண்டும் பரிசோதிக்கப் பட்ட குழுக்களில், serious adverse reactions (SAR) எனப்படும் பாரதூரமான பக்க விளைவுகள் தலா ஒவ்வொரு நபரில் ஏற்பட்டதால், அவை இரண்டு வாரங்கள் வரை இடை நிறுத்தப் பட்டு இப்போது மீள பரிசோதனைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாரதூரமான பக்க விளைவு தொடர்பாக திருப்திகரமான தகவல்களை வெளியிடத் தவறியதால் , அஸ்ட்ரா செனக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிகள் தொடர்பாக கொஞ்சம் நிச்சயமின்மை நிலவுகிறது.

இன்னொரு பக்கம் பார்த்தால், 40,000 மனிதர்களை ஒரு தடுப்பூசிப் பரிசோதனையில் சேர்த்துக் கொள்ளும் போது அவர்களுள் சில அரிதான உடல்வாசி , மரபணு மாற்றங்கள் கொண்டவர்கள் உள்வாங்கப் பட்டு   அதனால் அவர்களுக்கு பாரதூரமான பக்க விளைவுகள் உருவாவது சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இதனால் தான் எந்த தடுப்பூசியும் பாரதூரமான பக்க விளைவுகளை உருவாக்கும் சாத்தியக் கூறு மிகச்சிறிதளவு  இருப்பதாக அறிவித்து, அனுமதி பெற்றுத் தான் பயனரின் உடலில் செலுத்தப் படுகிறது. 

வெற்றியாளர்கள்: மொடெர்னா, fபைசர்

இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஒரே தொழில் நுட்ப அடிப்படையைக் கொண்ட, நவீன தடுப்பூசிகள். இது ஏன் முக்கியம்? இனி எதிர்காலத்தில் உருவாகும் எந்த புதிய வைரசுத் தொற்று நோய்க்கும் எதிராக , இந்த ஆர்.என்.ஏ (RNA) தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியுமென்ற தகவல் இதில் உறுதியாகிறது. இந்த ஆர்.என்.ஏ தொழில் நுட்பம் பழைய நுட்பங்களை விட இலகுவானதும் விரைவானதுமான ஒரு முறை. 

தகவல்களின் நம்பகத் தன்மை என்ன?
இந்த இரண்டு தடுப்பூசிகளும் 90 - 95% வீதமான பாதுகாப்பை (efficacy) வழங்குவதாக அந்தக் கம்பனிகளின்  செய்திக் குறிப்பு மூலம் தகவல் வெளியிடப் பட்டிருக்கிறது. இதன் நம்பகத் தன்மை இதனால் பாதிக்கப் படுமா? இல்லை என்பதே பதில். இந்த தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் தயாரித்தாலும் 30,000 - 40,000 பேர் வரை பரிசோதிக்கப் பட்டது அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளால். இந்த மருத்துவ நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் randomized double-blind என்ற முறையில் பரிசோதிக்கப் பட்டன என்பது நம்பகத் தன்மை குறித்த முக்கியமான ஒரு தகவல். Double-blind என்பது தடுப்பூசியை எடுத்துக் கொள்பவருக்கும் , தடுப்பூசியை வழங்கும் மருத்துவ சேவையாளருக்கும் கொடுக்கப் படுவது தடுப்பூசியா அல்லது கட்டுப்பாட்டு (placebo) ஊசியா என்பது தெரியாத நிலைமை. இந்த தகவல்களை பரிசோதனையில் பங்கு கொள்ளாத ஒரு மூன்றாவது குழு மட்டும் தான் பரிசோதனை முடிவில் unmask செய்து கண்டறியும். அந்தக் குழு வெளியிடும் தகவல்களே இந்த 90 - 95% வினைத்திறனை உறுதி செய்திருக்கின்றன.

குறைபாடுகள் என்ன?   

இந்த இரண்டு தடுப்பூசிகளின் வினைத்திறன் (efficacy) , மற்றும் பாதுகாப்பு  (safety) ஆயிரக் கணக்கான மனிதர்களில் உறுதி செய்யப் பட்டாலும், இந்த முடிவுகள் தடுப்பூசி போடப் பட்டு சில வாரங்களுக்குள் அளக்கப் பட்ட அளவீடுகள் என்பது கவனத்திற்குரிய விடயம். இதன் அர்த்தம், குறுகிய காலத்திற்கு இந்த இரு தடுப்பூசிகளும் கோவிட் தொற்றில் இருந்து பாதுக்காக்கின்றன என்பதாகும். இந்தப் பாதுகாப்பு எத்தனை வாரங்கள், அல்லது மாதங்கள் நீடித்திருக்கும் என்பதை அறிய நாம் 2021 ஜூலை வரை பொறுத்திருக்க வேண்டும். 

கோவிட்டினால் பாதிக்கப் பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வைரஸ் எதிர்ப்பு  மூன்று மாதங்களின் பின்னர் 25% ஆகக் குறைந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த 25% வைரஸ் எதிர்ப்பு கோவிட்டில் இருந்து பாதுகாப்பு வழங்கப் போதுமானதா என்பதை அந்த ஆய்வு கண்டறியவில்லை! எனவே, இந்த இரு தடுப்பூசிகளின் பூரணமான முடிவுகள் வெளி வரும் போது தான் இந்த நீண்டகால கோவிட் தடுப்பு இயலுமை பற்றிய தெளிவு பிறக்கும்.

நீடித்த பாதுகாப்பு இல்லாவிட்டால்..?

இது பாரதூரமான பிரச்சினை அல்ல! நீடித்த பாதுகாப்பை வழங்க ஒரு ஊக்க (booster) டோஸ் வழங்கும் முறை கொண்டு வரப்படலாம். இதன் அர்த்தம், இரண்டாம் தடவையும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதாகும். அல்லது, இன்புழுவன்சாவுக்கு எதிராக வருடாவருடம் போட்டுக் கொள்ளும்  தடுப்பூசி போல கோவிட் தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். இவையெல்லாம் தெளிவாக இப்போது எங்களுக்கு அவசியமானது பொறுமை மட்டுமே: குறைந்தது அடுத்த 6 மாதங்கள் வரையான பொறுமை.

கவச குண்டலங்கள் அப்படியே தொடரட்டும்..

உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லியிருப்பது போல, இந்தத் தடுப்பூசிகள் மட்டுமே முழுமையாக கோவிட்டை ஒழிக்கப் போதுமானவையல்ல! குறைந்த பட்சம் அடுத்த 6 மாதங்களுக்கு போதுமானதல்ல என்பது பொருத்தம். தடுப்பூசியின் பாதுகாப்பு முழுவதும் உறுதி செய்யப் படும் வரை , முகக் கவசம், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன பின் தொடரப் பட வேண்டியது முக்கியம். ஆறு மாதங்களின் பின், சமூகத்தில் 95% ஆனோர் இந்த தடுப்பூசிகளுள் ஒன்றை எடுத்துக் கொண்டால், கோவிட் பரவுவது குறையலாம். அதன் பின்னர் , முகக் கவசம் அகற்றப் படக்கூடிய நிலை வரலாம். ஆறடித் தூரம் அவசியமற்றதாகலாம்.

கைகளை அடிக்கடி கழுவுதல் என்பதைக் கைவிட வேண்டிய தேவை இல்லை, எனவே அதை நாம் "கோவிட் தந்த நினைவுப் பரிசாக" வாழ் நாள் பூராகவும் தொடர வேண்டும். 

இன்னொரு முக்கிய விடயம்: தடுப்பூசிகள் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் நம்பிக்கையான ஊடகங்கள், அமைப்புகளிடம் இருந்து மட்டுமே பெறவும் பரப்பவும் வேண்டும். வீணான வதந்திகள், சதிக் கோட்பாட்டுக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டாலும் அவற்றைப் பரப்பாமல் இருந்தாலே கோவிட் ஒழிப்பிற்கு பங்களிப்புச் செய்தவர்கள் என்ற பெருமை உங்களுக்குக் கிடைக்கும்!

- ஜஸ்ரின்

பிரதான மூலங்கள்/மேலதிக தகவல்கள்:  

https://www.nih.gov/news-events/news-releases/promising-interim-results-clinical-trial-nih-moderna-covid-19-vaccine

https://www.nature.com/articles/s41577-020-00434-6 

இந்த தடுப்பூசியினை போடுவதால் கொரோனா கட்டுப்பட்டாலும், ஏதும் பக்க விளைவுகள் பிற் காலத்தில் ஏற்படாதா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2020 at 14:09, ரதி said:

இந்த தடுப்பூசியினை போடுவதால் கொரோனா கட்டுப்பட்டாலும், ஏதும் பக்க விளைவுகள் பிற் காலத்தில் ஏற்படாதா ?

ரதி, இந்த இரு தடுப்பூசிகளும் புதிய தொழில் நுட்பமாக ஆர்.என்.ஏ (RNA) என்ற மூலக்கூறை முதன் முதலாகப் பயன்படுத்துகின்றன. 

ஆர்.என்.ஏ என்பது எங்கள் உடலின் ஒவ்வொரு செல்லினாலும் மில்லியன் கணக்கில் உற்பத்தியாகும் ஒரு மூலக் கூறு வகை தான். இந்த மில்லியன் கணக்கான எங்கள் உடலின் ஆர்.என்.ஏ சமுத்திரத்தினுள் ஒரு துளியாக தடுப்பூசிகளின் ஆர்.என்.ஏயும் சேர்ந்து கொள்ளும் போது குறுகிய கால நீண்ட கால விளைவுகள் வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

தியரிப்படி , இந்த ஒரு துளி தடுப்பூசி ஆர்.என்.ஏ எங்கள் மரபணுக்களோடு இணைந்து (integrate) கொண்டால் அது இணைந்து கொள்ளும் இடத்தைப் பொறுத்து பாதிப்பு ஏற்படலாம். ஆனால், இப்படியான இணைவு நடக்க அவசியமான நொதியம் எங்கள் உடலின் கலங்களில் இல்லை! இதனால் இப்படியான இணைவு நடக்காது. 

எனவே இந்த theoretical ஆன பாதிப்பும் இந்த வகை தடுப்பூசிகளால் ஏற்படாது!
 
  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 23:56, Justin said:

இந்த இரு தடுப்பூசிகளில், fபைசர் தடுப்பூசி - 80 பாகை செல்சியசில் பேணப்பட வேண்டும். மொடெர்னா தடுப்பூசி சாதாரண குளிர்சாதனப் பெட்டியில் (2 - 8 பாகை செல்சியஸ்) பேணப்படக் கூடியது. இதனால், fபைசர் தடுப்பூசியை விநியோகிப்பதில் ஒரு மேலதிக சவால் இருக்கிறது. மொடெர்னா தடுப்பூசிக்கு பிரச்சினையில்ல. 

இவை இரண்டுமே அறை வெப்ப நிலையில் இலகுவாக அழியக் கூடிய ஆர்.என்.ஏ (RNA) மூலக் கூறுகளால்  ஆன தடுப்பூசிகளாக இருப்பினும், மொடெர்னா சில இரசாயன நுட்பங்களால் ஆர்.என்.ஏ யின் அழிவைத் தடுத்திருக்கிறது. இந்த எளிமையான நுட்பத்தை fபைசரும் எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும். ஆனால், அந்த தயாரிப்பை முதலில் இருந்து பரிசோதிக்க வேண்டியிருக்கும். 

ஜஸ்ரின் அண்ணா ஒரு சின்ன சந்தேகம். 
மருந்தை பாதுகாக்க மைனஸ் டிகிரி குளிரில் வைக்கப்படுகிறது, ஆனால் மனித உடல் வெப்பம் 37 டிகிரி எனில் மருந்து மனித உடலில் அழியாது எப்படி வேலை செய்யும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

ஜஸ்ரின் அண்ணா ஒரு சின்ன சந்தேகம். 
மருந்தை பாதுகாக்க மைனஸ் டிகிரி குளிரில் வைக்கப்படுகிறது, ஆனால் மனித உடல் வெப்பம் 37 டிகிரி எனில் மருந்து மனித உடலில் அழியாது எப்படி வேலை செய்யும்?

நல்ல கேள்வி ஏராளன். 

மருந்தை உடலினுள் செலுத்தும் வரை அழியாமல் வைத்திருக்கவே குளிர்மை தேவை. உடலினுள் செலுத்தப் பட்டவுடன், தடுப்பூசியில் இருக்கும் மூலக் கூறுகளை  உடற்கலங்கள் உள்வாங்கிக் கொள்ளும். இப்படி உள்வாங்கப் பட்ட தடுப்பு மருந்து அழியாமல் பாதுகாக்கப் படுவதற்கு குளிரூட்டல் தேவையில்லை! இந்தக் கலங்களினுள் இருக்கும் பொறிமுறைகள் மூலம், மூலக் கூறுகள் பாதுகாக்கப் பட்டு, ஆர்.என்.ஏயில் இருந்து கோவிட் வைரசை ஒத்த புரதங்களை உருவாக்கும். உண்மையில் இந்தப் பொறிமுறை நடப்பதற்கு உடல் வெப்ப நிலை தான் மிகவும் உகந்தது (optimal)! 

அனேக மருந்துகள் (உ+ம்: இன்சுலின்) குளிரூட்டியில் வைக்கப் படுவது அவை வெப்பத்தினால் அழியாமல் இருப்பதற்கு மட்டுமே. உடலினுள் செலுத்தப் பட்டதும் அவை செயல்பட வேண்டுமானால் உடல் வெப்பநிலை அவசியம்!  

37 minutes ago, ஏராளன் said:

ஜஸ்ரின் அண்ணா ஒரு சின்ன சந்தேகம். 
மருந்தை பாதுகாக்க மைனஸ் டிகிரி குளிரில் வைக்கப்படுகிறது, ஆனால் மனித உடல் வெப்பம் 37 டிகிரி எனில் மருந்து மனித உடலில் அழியாது எப்படி வேலை செய்யும்?

அருமையான ஒரு கேள்வி. இப்படி கேள்வி எல்லாம் ஏன் என் மண்டைக்குள் ஒரு போதுமே வருவதில்லை என யோசிச்சுப் பார்க்கின்றேன். ஐஸ்கிரீமை குளிருக்குள் வைத்திருக்கின்ற மாதிரி தான் இதுவும் கெட்டு விடாமல் வைத்திருக்கின்றனர் என்று தான் நினைத்து இருந்தேன்.😃

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி ஜஸ்ரின்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அருமையான ஒரு கேள்வி. இப்படி கேள்வி எல்லாம் ஏன் என் மண்டைக்குள் ஒரு போதுமே வருவதில்லை என யோசிச்சுப் பார்க்கின்றேன். ஐஸ்கிரீமை குளிருக்குள் வைத்திருக்கின்ற மாதிரி தான் இதுவும் கெட்டு விடாமல் வைத்திருக்கின்றனர் என்று தான் நினைத்து இருந்தேன்.😃

உடலில் சமிபாட்டை அதிகரிக்கும் enzymes போன்றனவும் 37 பாகை செல்ஸியஸில்தான் optimum ஆக வேலை செய்யும். அவையும் புரதங்கள்தான். ஆனால் 41 பாகை தாண்டினால் புரதங்கள் வேலை செய்யாமல் இறப்பைக்கொண்டுவரும். இதெல்லாம் 13/14 வயதில் படிக்கின்றார்கள் என்பதை மகனுக்கு படிப்பிக்க ஆரம்பித்து அறிந்துகொண்டேன்☺️

மில்லியன் ஆண்டுகளாக கூர்ப்படைந்த மனித உடல் மிகவும் optimum ஆக இயங்க பல தொழிற்பாடுகளைக்கொண்டுள்ளது. ஆனால் அதையும் கிரியேற்றரின் டிசைன் என்றும் சொல்லுபவர்கள் உண்டு.😁

கொரோனாவுக்கு தடுப்பூசி மேற்கு நாடுகளில் மூன்றுக்கு மேல் வந்துவிட்டது. ரஷ்யா, சீனாவிலும் கண்டுபிடித்துள்ளனர். இவை எல்லாம் தொடர்பாடலின் வேகத்தால் மனிதர்கள் அறிவை தமக்குள் பகிர்ந்துகொள்வதாலும், கணணி பல்வேறு கடினமான modelling குகளை செய்ய உதவுவதாலுமே சாத்தியமானது.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 17:04, Justin said:

கொரனா தடுப்பூசிகள்: அடுத்த ஆறு மாதங்கள்

நவீன கொரனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தடுப்பூசி பற்றிய எதிர்ப்பார்ப்புகளோடு வாரங்கள் மாதங்கள் கழிந்திருக்கின்றன. தற்போது 2 கொரனா தடுப்பூசிகள் இறுதி நிலையை அடைந்திருக்கின்றன. அவை பற்றிய சுருக்கமான விளக்கமும், எதிர்பார்ப்புகளும் இவை.

நூறில் நான்கு

நூறுக்கு மேற்பட்ட கொரனா தடுப்பூசி மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு பரிசோதனை நிலைகளிலும் இருக்கின்றன. இவற்றுள் மேற்கு நாட்டுத் தரக்கட்டுப்பாடுகளுக்கேற்ப மூன்றாம் மட்ட பரிசோதனைகளில் 4 தடுப்பூசிகள் தற்போது இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்கா (ஒக்ஸ்போர்ட்) தடுப்பூசி, மொடெர்னா தடுப்பூசி, fபைசர் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி என்பனவே அந்த நான்கும். 

இந்த நான்கு தடுப்பூசிகளும் பல ஆயிரம் பேர்களில் 2020 ஜூலை மாதத்தில் இருந்து பரிசோதிக்கப் பட்டு வருகின்றன. இவற்றுள் அஸ்ட்ரா செனெக்காவின் தடுப்பூசி, ஜோன்சன் அன்ட் ஜோன்சனின் தடுப்பூசி இரண்டும் பரிசோதிக்கப் பட்ட குழுக்களில், serious adverse reactions (SAR) எனப்படும் பாரதூரமான பக்க விளைவுகள் தலா ஒவ்வொரு நபரில் ஏற்பட்டதால், அவை இரண்டு வாரங்கள் வரை இடை நிறுத்தப் பட்டு இப்போது மீள பரிசோதனைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பாரதூரமான பக்க விளைவு தொடர்பாக திருப்திகரமான தகவல்களை வெளியிடத் தவறியதால் , அஸ்ட்ரா செனக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசிகள் தொடர்பாக கொஞ்சம் நிச்சயமின்மை நிலவுகிறது.

இன்னொரு பக்கம் பார்த்தால், 40,000 மனிதர்களை ஒரு தடுப்பூசிப் பரிசோதனையில் சேர்த்துக் கொள்ளும் போது அவர்களுள் சில அரிதான உடல்வாசி , மரபணு மாற்றங்கள் கொண்டவர்கள் உள்வாங்கப் பட்டு   அதனால் அவர்களுக்கு பாரதூரமான பக்க விளைவுகள் உருவாவது சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இதனால் தான் எந்த தடுப்பூசியும் பாரதூரமான பக்க விளைவுகளை உருவாக்கும் சாத்தியக் கூறு மிகச்சிறிதளவு  இருப்பதாக அறிவித்து, அனுமதி பெற்றுத் தான் பயனரின் உடலில் செலுத்தப் படுகிறது. 

வெற்றியாளர்கள்: மொடெர்னா, fபைசர்

இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஒரே தொழில் நுட்ப அடிப்படையைக் கொண்ட, நவீன தடுப்பூசிகள். இது ஏன் முக்கியம்? இனி எதிர்காலத்தில் உருவாகும் எந்த புதிய வைரசுத் தொற்று நோய்க்கும் எதிராக , இந்த ஆர்.என்.ஏ (RNA) தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியுமென்ற தகவல் இதில் உறுதியாகிறது. இந்த ஆர்.என்.ஏ தொழில் நுட்பம் பழைய நுட்பங்களை விட இலகுவானதும் விரைவானதுமான ஒரு முறை. 

தகவல்களின் நம்பகத் தன்மை என்ன?
இந்த இரண்டு தடுப்பூசிகளும் 90 - 95% வீதமான பாதுகாப்பை (efficacy) வழங்குவதாக அந்தக் கம்பனிகளின்  செய்திக் குறிப்பு மூலம் தகவல் வெளியிடப் பட்டிருக்கிறது. இதன் நம்பகத் தன்மை இதனால் பாதிக்கப் படுமா? இல்லை என்பதே பதில். இந்த தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் தயாரித்தாலும் 30,000 - 40,000 பேர் வரை பரிசோதிக்கப் பட்டது அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளால். இந்த மருத்துவ நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் randomized double-blind என்ற முறையில் பரிசோதிக்கப் பட்டன என்பது நம்பகத் தன்மை குறித்த முக்கியமான ஒரு தகவல். Double-blind என்பது தடுப்பூசியை எடுத்துக் கொள்பவருக்கும் , தடுப்பூசியை வழங்கும் மருத்துவ சேவையாளருக்கும் கொடுக்கப் படுவது தடுப்பூசியா அல்லது கட்டுப்பாட்டு (placebo) ஊசியா என்பது தெரியாத நிலைமை. இந்த தகவல்களை பரிசோதனையில் பங்கு கொள்ளாத ஒரு மூன்றாவது குழு மட்டும் தான் பரிசோதனை முடிவில் unmask செய்து கண்டறியும். அந்தக் குழு வெளியிடும் தகவல்களே இந்த 90 - 95% வினைத்திறனை உறுதி செய்திருக்கின்றன.

குறைபாடுகள் என்ன?   

இந்த இரண்டு தடுப்பூசிகளின் வினைத்திறன் (efficacy) , மற்றும் பாதுகாப்பு  (safety) ஆயிரக் கணக்கான மனிதர்களில் உறுதி செய்யப் பட்டாலும், இந்த முடிவுகள் தடுப்பூசி போடப் பட்டு சில வாரங்களுக்குள் அளக்கப் பட்ட அளவீடுகள் என்பது கவனத்திற்குரிய விடயம். இதன் அர்த்தம், குறுகிய காலத்திற்கு இந்த இரு தடுப்பூசிகளும் கோவிட் தொற்றில் இருந்து பாதுக்காக்கின்றன என்பதாகும். இந்தப் பாதுகாப்பு எத்தனை வாரங்கள், அல்லது மாதங்கள் நீடித்திருக்கும் என்பதை அறிய நாம் 2021 ஜூலை வரை பொறுத்திருக்க வேண்டும். 

கோவிட்டினால் பாதிக்கப் பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வைரஸ் எதிர்ப்பு  மூன்று மாதங்களின் பின்னர் 25% ஆகக் குறைந்ததாக ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த 25% வைரஸ் எதிர்ப்பு கோவிட்டில் இருந்து பாதுகாப்பு வழங்கப் போதுமானதா என்பதை அந்த ஆய்வு கண்டறியவில்லை! எனவே, இந்த இரு தடுப்பூசிகளின் பூரணமான முடிவுகள் வெளி வரும் போது தான் இந்த நீண்டகால கோவிட் தடுப்பு இயலுமை பற்றிய தெளிவு பிறக்கும்.

நீடித்த பாதுகாப்பு இல்லாவிட்டால்..?

இது பாரதூரமான பிரச்சினை அல்ல! நீடித்த பாதுகாப்பை வழங்க ஒரு ஊக்க (booster) டோஸ் வழங்கும் முறை கொண்டு வரப்படலாம். இதன் அர்த்தம், இரண்டாம் தடவையும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதாகும். அல்லது, இன்புழுவன்சாவுக்கு எதிராக வருடாவருடம் போட்டுக் கொள்ளும்  தடுப்பூசி போல கோவிட் தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். இவையெல்லாம் தெளிவாக இப்போது எங்களுக்கு அவசியமானது பொறுமை மட்டுமே: குறைந்தது அடுத்த 6 மாதங்கள் வரையான பொறுமை.

கவச குண்டலங்கள் அப்படியே தொடரட்டும்..

உலக சுகாதார ஸ்தாபனம் சொல்லியிருப்பது போல, இந்தத் தடுப்பூசிகள் மட்டுமே முழுமையாக கோவிட்டை ஒழிக்கப் போதுமானவையல்ல! குறைந்த பட்சம் அடுத்த 6 மாதங்களுக்கு போதுமானதல்ல என்பது பொருத்தம். தடுப்பூசியின் பாதுகாப்பு முழுவதும் உறுதி செய்யப் படும் வரை , முகக் கவசம், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பன பின் தொடரப் பட வேண்டியது முக்கியம். ஆறு மாதங்களின் பின், சமூகத்தில் 95% ஆனோர் இந்த தடுப்பூசிகளுள் ஒன்றை எடுத்துக் கொண்டால், கோவிட் பரவுவது குறையலாம். அதன் பின்னர் , முகக் கவசம் அகற்றப் படக்கூடிய நிலை வரலாம். ஆறடித் தூரம் அவசியமற்றதாகலாம்.

கைகளை அடிக்கடி கழுவுதல் என்பதைக் கைவிட வேண்டிய தேவை இல்லை, எனவே அதை நாம் "கோவிட் தந்த நினைவுப் பரிசாக" வாழ் நாள் பூராகவும் தொடர வேண்டும். 

இன்னொரு முக்கிய விடயம்: தடுப்பூசிகள் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் நம்பிக்கையான ஊடகங்கள், அமைப்புகளிடம் இருந்து மட்டுமே பெறவும் பரப்பவும் வேண்டும். வீணான வதந்திகள், சதிக் கோட்பாட்டுக் கதைகளை சமூக ஊடகங்களில் கண்டாலும் அவற்றைப் பரப்பாமல் இருந்தாலே கோவிட் ஒழிப்பிற்கு பங்களிப்புச் செய்தவர்கள் என்ற பெருமை உங்களுக்குக் கிடைக்கும்!

- ஜஸ்ரின்

பிரதான மூலங்கள்/மேலதிக தகவல்கள்:  

https://www.nih.gov/news-events/news-releases/promising-interim-results-clinical-trial-nih-moderna-covid-19-vaccine

https://www.nature.com/articles/s41577-020-00434-6 

அருமையான கட்டுரை அண்ணா,

நீங்கள் எடுத்துசொன்ன விதம் அதி சிறப்பு.

வந்த கேள்விகளும் கூடத்தான்.

உண்மையிலேயே இது போன்ற உரையாடல்களை வாசிக்கும் போது யாழ்களம் பற்றி நம்பிக்கையாகவும், ஏன் பெருமையாகவும் கூட உள்ளது.

இந்த மொடோர்னா ஊசியை FDA எப்ப அங்கீகரிக்க கூடும்?

பைசருடன் சேர்த்து அறிவிப்பார்கள் போல தெரியவில்லை. பைசரின் ஒப்படைப்பு நடந்து, மதிப்பிடலும் தொடங்கிவிட்டது.

மொடேர்னா வர தைமாதம் ஆகுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

ஆனால் அதையும் கிரியேற்றரின் டிசைன் என்றும் சொல்லுபவர்கள் உண்டு.😁

அப்படி சொன்னால்தானே அவர்கள் டிசைன், டிசைனாக அனுபவிக்கலாம்🤣.

கொரோனா காலம் முழுவதும் பதுங்கி இருந்து விட்டு, தடுப்பூசி வேலை செய்ய தொடங்கியது வருவார்கள்,

”பார்த்தாயா எங்கள் கடவுளின் டிசனை” என்றபடி 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

”பார்த்தாயா எங்கள் கடவுளின் டிசனை” என்றபடி 🤣.

அடுத்த சம்மருக்கு பிறகு யாழில் ஒரு திரி ஓடவிடுவம்😂😂🤣🤣🤣

அதுக்குள்ள என்னைக் கொரோனா கொண்டுபோகாமல் இருக்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

அடுத்த சம்மருக்கு பிறகு யாழில் ஒரு திரி ஓடவிடுவம்😂😂🤣🤣🤣

அதுக்குள்ள என்னைக் கொரோனா கொண்டுபோகாமல் இருக்கவேண்டும்!

கொரொனா வந்தால் ரெண்டு புத்தகத்தை வாசிக்க கொடுங்கோ...பறந்திடும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

மில்லியன் ஆண்டுகளாக கூர்ப்படைந்த மனித உடல் மிகவும் optimum ஆக இயங்க பல தொழிற்பாடுகளைக்கொண்டுள்ளது. ஆனால் அதையும் கிரியேற்றரின் டிசைன் என்றும் சொல்லுபவர்கள் உண்டு.😁

😂

இயற்கையான அழகான மலைகள் ஆறுகளை படம் பிடித்து அனுப்பியே கிரியேற்றரின் படைப்பை பார் என்கிறார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

அருமையான கட்டுரை அண்ணா,

நீங்கள் எடுத்துசொன்ன விதம் அதி சிறப்பு.

வந்த கேள்விகளும் கூடத்தான்.

உண்மையிலேயே இது போன்ற உரையாடல்களை வாசிக்கும் போது யாழ்களம் பற்றி நம்பிக்கையாகவும், ஏன் பெருமையாகவும் கூட உள்ளது.

இந்த மொடோர்னா ஊசியை FDA எப்ப அங்கீகரிக்க கூடும்?

பைசருடன் சேர்த்து அறிவிப்பார்கள் போல தெரியவில்லை. பைசரின் ஒப்படைப்பு நடந்து, மதிப்பிடலும் தொடங்கிவிட்டது.

மொடேர்னா வர தைமாதம் ஆகுமோ?

மொடெர்னாவின் பத்திரிகை அறிக்கையின் படி அவர்களது தடுப்பூசி பற்றிய மூன்றாம் நிலை ஆய்வுகள் fபைசர் தடுப்பூசி போலவே முடிந்து விட்டது. இன்னும் அவர்கள் FDA இற்கு எதையும் சமர்ப்பிக்கவில்லை. சமர்ப்பிக்கும் நாளில் இருந்து இரண்டு வாரங்களில் பதில் கிடைக்கலாம். 

எப்படி பார்த்தாலும் ஜனவரி தான் விநியோகம் ஆரம்பிக்கும் போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸரின் ஒருவருக்கு கொரனா வந்தால் மீன்டும் வருமா அல்லது வராதா.மற்றது வீட்டில் ஒருவருக்கு கொரனா வந்து குணமடைந்த பின் அந்த வீட்டில் உள்ளவர்கள் இன்னும் எவளவு காலம் தனிமையில் இருக்க வேணும் அல்லது கவனமாக இருக்க வேணும்.அதாவது ஆபத்து கட்டம் எவளவு காலம்.இது பற்றி அறியத் தாருங்கள்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

நன்றி.

பைசர் சொல்லி, ஒருவாரத்தில் மொடோனாவும் பூர்வாங்க முடிவை சொல்கியது. ஆனால் பைசர் சமர்பித்து ஒரு வாரம் ஆகியும் இவர்கள் இன்னும் சமர்பிக்கவில்லை.

நாளைக்கு சமர்பிக்க கூடும்.

ஆக்போர்ட்-அஸ்ராசெனிக்கா, அரைடோஸ் கொடுத்தது தவறுதலாய், அந்த குழுவில் இருந்தவர் எல்லாரும் இளவயதினர் என்பதால் 90% மீதான நம்பகதன்மை கேள்விகுறியாகியுள்ளது. 

அக்ஸ்போர்ட்டில் நடந்த குளறுபடியை பார்க்க, மொடோர்னா காலம் தாழ்துவதிலும் சந்தேகம் வருகிறது.

2 hours ago, சுவைப்பிரியன் said:

ஜஸரின் ஒருவருக்கு கொரனா வந்தால் மீன்டும் வருமா அல்லது வராதா.மற்றது வீட்டில் ஒருவருக்கு கொரனா வந்து குணமடைந்த பின் அந்த வீட்டில் உள்ளவர்கள் இன்னும் எவளவு காலம் தனிமையில் இருக்க வேணும் அல்லது கவனமாக இருக்க வேணும்.அதாவது ஆபத்து கட்டம் எவளவு காலம்.இது பற்றி அறியத் தாருங்கள்.நன்றி.

சுவை,

வரும். மிக அரிதாக சிலருக்கு 2 தரம் வந்துள்ளது. 

2ம் பாதிப்பு கடுமையானதாயும் தெரிகிறது.

அண்மையில் UCL செய்த ஆய்வு, கொரோனா இயற்கையாக வந்த பின் ஏற்படும் antibodies (நோயெதிர்ப்பில் முக்கிய பங்கு வகிப்பன) 6 மாதங்களில் பலருக்கு குறைய தொடங்குவதாய் காட்டுகிறது.

ஆனால் இன்னொரு வகையாக T Cells மூலம் வரும் நோயெதிர்ப்பு அதிக காலம் தாக்கு பிடிக்க முடியும் என்றும் வாசித்தேன். 

பாப்போம் ஜஸ்டின் அண்ணா பூரண விளக்கத்தை தருவார்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புக்கு போனில் கதைத்த போது 107 பேர் கொரோனாவால் இறந்துவிட்டார்கள் என்று பதட்டத்துடன் இருக்கிறார்கள்.அமெரிக்கா யுகே ஒருநாள் கொரோனா இறப்பு தொகையை நினைத்து பார்த்தேன்.

கொரனா வந்த ஒருவர் தன்னை 10 அல்லது 7 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என்று தொலைகாட்சி ஒன்றில் சொன்னார்கள்.ஜஸ்டின் அண்ணா தான் சரியா என்பதை சொல்ல வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2020 at 15:38, சுவைப்பிரியன் said:

ஜஸரின் ஒருவருக்கு கொரனா வந்தால் மீன்டும் வருமா அல்லது வராதா.மற்றது வீட்டில் ஒருவருக்கு கொரனா வந்து குணமடைந்த பின் அந்த வீட்டில் உள்ளவர்கள் இன்னும் எவளவு காலம் தனிமையில் இருக்க வேணும் அல்லது கவனமாக இருக்க வேணும்.அதாவது ஆபத்து கட்டம் எவளவு காலம்.இது பற்றி அறியத் தாருங்கள்.நன்றி.

சுவை, 

1. கோசான் சொன்னது போல, கொரனா இரண்டாம் தடவையும் வெகு சிலருக்கு வந்துள்ளது, ஆனால் இது பொதுவான ஒரு நிலைமையாகக் கொள்ளப் படவில்லை. நவீன கொரனா வைரஸ் உட்பட, எந்த வைரசும் தொற்றும் போது, எங்கள் உடல் உடனடியாக ஒரு நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ளும். சில வைரசுகளில், இந்த நோயெதிர்ப்பு சக்தி சில மாதங்களில் மறைந்து விடுவதால், மீளவும் தொற்று ஏற்படும். நவீன கொரனா வைரசுக்கான உடலின் எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்களில் குறைந்ததாக ஆய்வுகள் சில சொல்கின்றன. ஆனால், அன்ரி பொடி எனப்படும் வைரஸ் எதிர்ப்பு பிறபொருளெதிரிகள் இவ்வாறு குறைந்தாலும், இரண்டாம் தொற்று ஏற்படாமல் இருக்க வேறு பொறிமுறைகள் எங்கள் உடலில் தொழிற்படுகின்றன. 

சுருக்கமாகச் சொன்னால், இரண்டாம் தொற்று பரவலாக இல்லை. ஆனால், தடுப்பூசி போன்ற   நிரந்தர தீர்வு வரும் வரையில் கொரனா தொற்று வந்தோர் தொடர்ந்தும் தடுப்பு முறைகளை ஏனையோர் போலக் கடைப்பிடிக்க வேண்டும். 

2. வீட்டில் கொரனா தொற்று வந்த ஒருவரோடு தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருப்போருக்கு இரண்டு கட்டங்களாக தனிமைப் படுத்தல் செய்யப் படுகிறது: 1) இவர்கள் நோயாளி தனிமையில் இருக்கும் நாள் வரை வெளியாருடன் தொடர்பின்றி இருக்க வேண்டும். 2) பின்னர், நோயுற்றவரின் தனிமைப் படுத்தல் காலம் முடிந்த நாளில் இருந்து அடுத்த 14 நாட்களுக்கு  தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். 

 நோயாளியின் தனிமைப் படுத்தல் முடிவு நாள் , அவரது தீவிர நோய்க்குணங்குறிகளும் மறைந்து, கொரனா பரிசோதனை முடிவு நெகரிவாக வரும் நாளாக இருக்கும்.    

Edited by Justin
பிழை திருத்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.