Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்

Featured Replies

8 hours ago, கிருபன் said:

அவலங்களைச் சந்தித்த மக்களுக்கு உதவ ஏதாவது வழிவகைகள் செய்யலாமே என்று பலவருடங்களுக்கு முன்னர் சுமந்திரன் ஐயா இலண்டனில் ஒரு கூட்டத்திற்கு வந்தபோது கேட்கப்பட்டது. அதற்கு அவர் மக்களுக்கு உதவும் கட்டமைப்பு தமிழரசுக் கட்சியிடம் இல்லை என்றும் இன்னும் சில சாட்டுக்களையும் சொல்லி தட்டிக் கழித்துவிட்டார்.

மக்களுக்கு உதவும் கட்டமைப்புகளை உருவாகும் திடடம் வரையப்பட்டு புலம்பெயர் நிபுணர்களும் தமிழர் நலன்விரும்பிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும் விடயங்களை இம்மியளவும் நகர்த்த முடியவில்லை. இந்த முயட்சிகள் 2009 ம் ஆண்டில் இருந்து 2010 வரை நடைபெற்றது. இது பற்றி முன்னர் எழுதிய ஜாபகம். மனித உரிமை, மீள்கட்டுமானம், பொருளாதார, அரசியல் விவகாரங்கள் என வகைப்படுத்தப்பட்டு அதட்கான நிர்வாகமுறைமை முதல் கொண்டு பல விடயங்களை புலம்பெயர் ஆர்வலர்கள் செய்ய முன்வந்திருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரின் நலன் சார்ந்த ஒரு நிழல் அரசு போல இயங்கவேண்டும் என்ற கருத்தியலில் இந்த முயறசிகள் இடம்பெற்றன. 

இந்த சமயத்தில் இன்று வெளியில் நின்று தேசியம் பேசும் சுரேஷும், மாவையும், சம்பந்தனும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் ஒரு அதிகாரம் மிக்கவராக இருந்தார்கள். சுமந்திரன் அவர்களுடன் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக இருந்தார். இதனை சுமந்திரனை ஒரு தேவதையாக காட்ட நான் எழுதவில்லை. மாறாக தமிழர் தேசிய கூட்டமைப்புக்கள் அதிகாரம் செலுத்திய எல்லோரும் தமது செல்வாக்கு மட்டுப்படுத்தப்பட்ட கூடும் என்று நினைத்தால் அவர்கள் என்ன நல்ல முயட்ஸியையும் மறைமுகமாக தடங்கல் போட்டு காலம் கட்டத்தி உதவிசெய்ய  வந்தவர்களை விரகத்திக்கு உட்படுத்தி கலைத்துவிட்டு பின்னர் புலம் பெயர் ஆட்கள் புலி கொடி மட்டும் தான் தூக்குவினம் எங்களுக்கு ஒன்றும் செய்யமாட்டினம் என்று உங்களை நம்பவைப்பார்கள்!

புலம் பெயர் நாட்டில் எல்லோரும் பெயர்சொல்லி வேலைசெய்பவர்கள் இல்லை. என்னுடன் சேர்த்து இன்னோரு  வீட்டு திட்டத்தில் பல  பொறியலாளர்கள் உதவினார்கள். எத்தனை 
தடங்கல்கள், எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு தங்கள் தொழிலையும் பார்த்துக்கொண்டு இரவு பகலாக உதவினாலும் அவர்களின் சேவை வீணானது காரணம் தமிழ் தேசியகூட்டமைப்புக்கும் மாகாணசபையினருக்குமிடையிலான பனிப்போர்/போட்டி . அமைச்சர் சுவாமிநாதனின் தகர வீட்டில் தொடங்கி இல்லை கல் வீடு மட்டும் தான் தேவை என்று சம்பந்தர் அடம்பிடிக்க அதக்கிடையில் நாம் ஒரு சாத்தியமான திட்டத்தை விரைவில் நடைமுறைபடுத்த வெளிக்கிட்டு மூக்குடைபட்டவர்கள். நாங்கள் சுனாமி வந்தவுடன் உடனடி தட்காலிக கொட்டகைகள் பின்னர் நிரந்தர வதிவிடம் திட்டம் போட்டு  பல பணிகளுக்கு நாங்கள் வாழும் நாடுகளில் இருந்து வளம் திரட்டி உதவியவர்கள். முயறசியன் பலனை நேரடியாகவும் படங்கள் வீடியோக்கள், நேர்காணல்கள் என்று கேட்டு மனம் மகிழ்ந்தவர்கள்.

எனவே புலம்பெயர் தமிழர் நேரடியாக உதவ முன்வந்தாலும் முதலில் அங்கு காரியங்களை சாதிக்க கூடியவர்களுடன் தொடர்பை வளர்த்து அதுனூடாக உதவிகளை புரியுங்கள். அரசியவாதிகளை ஒருபுறம் வைத்துவிட்டு.

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2020 at 13:19, vanangaamudi said:

இவரின் சமயத்தவருக்கு மற்றைய சமயத்தவரின் கடவுள் முன் நின்றால் அலர்ஜி என்றுதான் நான் கேள்விப்பட்டேன்.

ஐயா, வணங்காதவரே! அவரே வழக்கு தள்ளுப்பட்டதால் மனமுடைந்த தாயாரைத் தேற்றி, அவரின் மகனின் உருவப்படத்துக்கு விளக்கேற்றி தன் அனுதாபத்தை தெரிவித்திருக்கிறார். நீங்கள் சொல்வது போல் நடப்பதென்றால் யாழ்ப்பாணத்தில் ஓடும் தனியார், அரசு பயணிகள் வண்டியில் எல்லா சமயத்தவரின் படங்களும் இருக்கின்றன. அப்படியென்றால் பலபேர் கால் நடையாகவே பயணம் செய்ய வேண்டியிருக்கும். நினைத்தால் எல்லாக் கடவுளையும் என்கடவுளாக நினைத்து வணங்கிக்கொண்டு பயணிக்கலாம். இங்கே இவர் சாமிப் படத்தில் உயிரிழந்த பாண்டியைப்பார்க்கலாம், பாண்டியின் படத்தில் சாமியையும் பார்க்கலாம். இன, மத பேதம் கடந்து மனிதாபிமானம் காட்டுவதே மதம். மற்றதெல்லாம் சுயநலம். இதற்காக மதத்தை கையிலெடுப்போரும் உண்டு, அதற்காக மதத்தை மறுதலிப்போரும் உண்டு. இருந்தாலும் நீராவியடி ஆலயப்பிரச்சனைக்காக நீதிமன்றம் சென்றவர், பாண்டியனுக்காக நீதிமன்றம் சென்றவர் சுமந்திரன்.  அவருக்கு இந்துக்கடவுள் முன் நின்றால் ஒன்றும் பிரச்சினை இருக்காது.  

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

செய்வன திருந்தச் செய்.....

கட்டிக்கொடுக்கும் வீடுகளை பலமான வீடுகளாக கட்டிக்கொடுக்கும் படிதான் அப்போது சொல்லப்பட்டது.

பல வீடுகள் அந்த வீட்டுத்திட்டத்தில் மலையகத்திலும் இராணுவ , பொலிசாரின் தங்குமிடங்கள் இப்பவரைக்கும் நிரந்தரமாக தரமானதாகவும் இருக்கிறது 
நம்ம சனம் கொட்டிலிலும் ,குடிசையிலும் இப்பவும் இருக்கிறது இவர்களால் மாற்றீடாக ஏதாவது செய்ய முடிந்ததா அம்மக்களுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பல வீடுகள் அந்த வீட்டுத்திட்டத்தில் மலையகத்திலும் இராணுவ , பொலிசாரின் தங்குமிடங்கள் இப்பவரைக்கும் நிரந்தரமாக தரமானதாகவும் இருக்கிறது 
நம்ம சனம் கொட்டிலிலும் ,குடிசையிலும் இப்பவும் இருக்கிறது இவர்களால் மாற்றீடாக ஏதாவது செய்ய முடிந்ததா அம்மக்களுக்கு 

மலையகப் பகுதிகளுக்கு இரும்பு வீடு சரிவரும், வடக்கு கிழக்கிற்கு வெப்பம் காரணமாக உள்ள இருக்க முடியுமா? குளிரூட்டி வசதி இருக்காது தானே?
வீட்டுத் திட்டத்தில் வீடு கட்டிய பலர் அவ்வீடுகளில் வசிப்பதில்லை, அவ்வீடுகளை வீடில்லாதோருக்கு தற்காலிகமாகவாவது அரசு வழங்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

இருக்க வீடே இல்ல இதில் வெப்பம் என்ன அப்படி வட கிழக்கு பாலைவனம் கிடையாது  வெப்பத்திற்கு 

இந்த வீடுகள் கட்டுப்படாமல் திரும்பிசென்றது உங்களுக்கு தெரியுமா வடகிழக்கில் கட்டி இருப்பது பொலிசாரின் தங்குமிடங்கள் மாத்திரம் அதை மக்களுக்கு கொடுக்காது அரசு 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இருக்க வீடே இல்ல இதில் வெப்பம் என்ன அப்படி வட கிழக்கு பாலைவனம் கிடையாது  வெப்பத்திற்கு 

இந்த வீடுகள் கட்டுப்படாமல் திரும்பிசென்றது உங்களுக்கு தெரியுமா வடகிழக்கில் கட்டி இருப்பது பொலிசாரின் தங்குமிடங்கள் மாத்திரம் அதை மக்களுக்கு கொடுக்காது அரசு 

நானும் தாயகத்தில் தான் வசிக்கிறேன், நீங்கள் குறிப்பிடுவது தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

நானும் தாயகத்தில் தான் வசிக்கிறேன், நீங்கள் குறிப்பிடுவது தெரியும்.

நீங்கள் தாயகத்தில் இருந்தும் இது தெரியாமலா இருக்கிறீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

ஐயா, வணங்காதவரே! அவரே வழக்கு தள்ளுப்பட்டதால் மனமுடைந்த தாயாரைத் தேற்றி, அவரின் மகனின் உருவப்படத்துக்கு விளக்கேற்றி தன் அனுதாபத்தை தெரிவித்திருக்கிறார். நீங்கள் சொல்வது போல் நடப்பதென்றால் யாழ்ப்பாணத்தில் ஓடும் தனியார், அரசு பயணிகள் வண்டியில் எல்லா சமயத்தவரின் படங்களும் இருக்கின்றன. அப்படியென்றால் பலபேர் கால் நடையாகவே பயணம் செய்ய வேண்டியிருக்கும். நினைத்தால் எல்லாக் கடவுளையும் என்கடவுளாக நினைத்து வணங்கிக்கொண்டு பயணிக்கலாம். இங்கே இவர் சாமிப் படத்தில் உயிரிழந்த பாண்டியைப்பார்க்கலாம், பாண்டியின் படத்தில் சாமியையும் பார்க்கலாம். இன, மத பேதம் கடந்து மனிதாபிமானம் காட்டுவதே மதம். மற்றதெல்லாம் சுயநலம். இதற்காக மதத்தை கையிலெடுப்போரும் உண்டு, அதற்காக மதத்தை மறுதலிப்போரும் உண்டு. இருந்தாலும் நீராவியடி ஆலயப்பிரச்சனைக்காக நீதிமன்றம் சென்றவர், பாண்டியனுக்காக நீதிமன்றம் சென்றவர் சுமந்திரன்.  அவருக்கு இந்துக்கடவுள் முன் நின்றால் ஒன்றும் பிரச்சினை இருக்காது.  

திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்கர் இந்துக்களின் வளைவை உடைத்ததற்கெதிராக இந்துக்கள் சார்பில் வழக்கு பேசி வென்றவரும் இதே சுமந்திரன் தான். சார்ள்ஸ் நிர்மலநாதன் கடந்த தேர்தலில் சுமந்திரனுக்கு எதிராக கிளம்பியதற்கு இந்த வழக்கில் கத்தோலிக்கர் தோற்றதும் ஒரு காரணம் என்று எங்கோ படிக்க கிடைத்தது. நெற்றியில் திருநீறும் சந்தனப்பொட்டுமாய் காட்சிதரும் சைவத்தமிழ் சட்டவல்லுனரான அரசியல்வாதிகள் நீராவியடி பிள்ளையாரையோ, திருக்கேதீஸ்வரத்தையோ திரும்பியும் பார்க்கவில்லை.

Edited by கற்பகதரு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

அப்புக்காத்து வேலை பார்த்தால் அதோடு போயிருக்கலாமே? பிறகேன்  பிடிக்காதவர்களுக்காக நினைவேந்தல் விளக்கேற்றல்?

சுமந்திரன் அப்புக்காத்து வேலையை செய்து கிடைத்த தீர்ப்பை வழக்காளிக்குச் சொல்லியிருக்கின்றார். அவருக்கு பிடிக்காதவர்கள் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் போராளிகள் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை இல்லை என்று சொன்னவர். ஆனால் போராளிகளையும், மாவீரர்களையும் பிடிக்காது என்று சொல்லியதாக நான் அறியவில்லை.

20 hours ago, குமாரசாமி said:

சுமந்திரன் தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசியல்வாதி இல்லை என ஏற்றுக்கொள்கின்றீர்கள்?

சுமந்திரன் நல்ல அப்புக்காத்து. தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசியல்வாதி இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. அவர் இந்தியாவைச் சுழிச்சுக்கொண்டு ரணிலோடும் மேற்குநாடுகளின் அனுசரணையுடனும் சேர்ந்து ஒரு தீர்வை அடையலாம் என்று நினைத்து வெளிக்கிட்டதே அரசியல் கெட்டித்தனம் இல்லையென்றுதானே காட்டுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் அதாவது போர் முடிந்த பின்னர்.....பெரும்பாலான உலக நாடுகளால் தமிழர் பகுதி அபிவிருத்திக்கென ஏராளமான நிதியுதவிகளும் கடனுதவிகளும் வழங்கப்பட்டன.  அதில் பெரும்பாலான பணம் வடகிழக்கு அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவில்லை என ஒரு கதையும் உண்டு. இது பற்றி சிங்கள அரசிடம் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் கேட்கமாட்டீர்களா?

நாங்களும் என்னைப் போன்றவர்களும் ராஜபக்‌ஷக்களுடன் “ஹொட்லைனின்” கதைக்கும் அளவுக்கு பெரிய ஆட்களாக இருந்தால் யாழ் களத்தில் இருந்து விசமத்துடன் எழுதுபவர்களுடன் ஏன் குத்திமுறியப் போகின்றோம்😜

சிங்கள அரசு உலகநாடுகளுடனும், முக்கியமாக சீனா, இந்தியாவோடு சேர்ந்து ரோடுகளைப் போட்டார்கள். ரெயினை KKS மட்டும் விட்டார்கள். பலாலி விமானநிலையத்தையும் திறந்துவிட்டார்கள். கவனிக்கவில்லையா!

21 hours ago, குமாரசாமி said:

இல்லையேல் சிங்கள அரசு சரியான பாதையில்தான் பயணிக்கிறது .புலிகளின் பணம்தான் நாட்டு அபிவிருத்திக்கு அவசியமாக தேவைப்படுகின்றது என்கிறீர்களா?

சிங்கள அரசு சிங்களவர்களைக் காக்க சரியான பாதையில் பயணிக்கின்றது. 

புலிகளின் போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை அபிவிருத்திக்குப் பயன்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. முன்னாள் போராளிகளுக்கும், மாவீரர் குடும்பங்களுக்கும் உதவ பாவித்திருக்கலாமே. ஆனால் பணம் திரட்டியவர்களில் ஒரு பகுதியினர் சுருட்டி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்தியுள்ளனர். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

புலிகள் இல்லாவிட்டால் நாம் சுமுகமாக எல்லாவற்றையும் முடிப்போம் என்றார்கள்.அதுதான் உங்களிடம் கேட்டேன்

யார் சுமுகமாக முடிப்போம் என்று சொன்னார்கள்? அதை எப்படி “We want Tamil Eelam” “Our Leader Pirabakaran” என்று வெஸ்ட்மினிஸ்ரர் பார்லிமென்றுக்கு முன்னால் 2009 இல் கத்திய எங்களைப் பார்த்துக்கேட்கலாம்? 🤔🤔

41 minutes ago, கிருபன் said:

யார் சுமுகமாக முடிப்போம் என்று சொன்னார்கள்? அதை எப்படி “We want Tamil Eelam” “Our Leader Pirabakaran” என்று வெஸ்ட்மினிஸ்ரர் பார்லிமென்றுக்கு முன்னால் 2009 இல் கத்திய எங்களைப் பார்த்துக்கேட்கலாம்? 🤔🤔

நான் கேட்க நினைத்ததே நீங்களும் கேட்டுள்ளீர கள் கிருபன். இந்த கருத்து இங்கே களத்தில் அடிக்கடி வருகிறது. புலிகள் உயிர்ப்புடன்  உள்ளவரை பெரும்பாலான மக்கள் புலிகளுக்கு பக்கபலமாகத்தன் நின்றார்கள். புலிகளால் தான் சிறந்த தீர்உ கிடைக்கும் என்றே நாம் அனைவரும் நம்புனோம். அப்படித்தான் அனைவரும் நம்ப வைக்கப்பட்டோம்.  

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலமும் தியாகங்களும் என்றும் போற்றக்கூடியது தான்.அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கும் என்று நினைக்க வில்லை.இப்ப முக்கியம் எம் மக்களின் அங்குள்ள இருப்பு.

3 hours ago, சுவைப்பிரியன் said:

கடந்த காலமும் தியாகங்களும் என்றும் போற்றக்கூடியது தான்.அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கும் என்று நினைக்க வில்லை.இப்ப முக்கியம் எம் மக்களின் அங்குள்ள இருப்பு.

சரியாக சொன்னீர்கள். கடந்த காலத்தையே பேசி காலம் கடத்துவதில் நாம் முன்னிலையில் இருக்கிறோம். இங்கு சிங்களவன் தனது காரியங்களை கன கச்சிதமாக கொண்டு போகிறான். இனி இங்குள்ள மக்களின் இருப்பு கேள்விக்குறிதான். நேற்று அமைச்சரவையின் பல பொறுப்பாடுகளை கோத்த எடுத்துக்கொண்டு விடடார். எனவே அவை எல்லாவற்றையும் கன கச்சிதமாக ராணுவம் நிறைவேற்றும். கொஞ்சம் பொறுத்தால் எப்படியான நடவடிக்கைகளாக இருக்கும் என்பதை காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

சரியாக சொன்னீர்கள். கடந்த காலத்தையே பேசி காலம் கடத்துவதில் நாம் முன்னிலையில் இருக்கிறோம்.

வசதியாக குந்தியிருந்து கடந்தகாலத்தை  இரைமீட்பதை போன்ற சுகமான அனுபவம் உண்டா?

GH014IROL.2-1.jpg?imwidth=810&impolicy=w

086e42f0-d5a8-11ea-8f95-6d813022b2d7.jpg

Edited by கற்பகதரு

5 hours ago, Robinson cruso said:

இப்ப முக்கியம் எம் மக்களின் அங்குள்ள இருப்பு.

தமிழரின் இருப்பை உறுதிசெய்ய பின்வருவன முக்கியமானது:

1. சனத்தொகையை கூட்டுதல்/சனத்தொகை பரம்பலை குறைதல் 

a  . இளைய சமூதாயம் வாய்ப்புகள் தேடி வெளியுலகு செல்லாமல் (Brain Drain) அங்கிருக்க பொருளாதார வாய்ப்புகளை ஏட்படுத்தவேண்டும். இளைய சமூதாயம் வருங்கால மூளை வளம் (Human Capital) அதோடு அவர்கள் தான் பிறப்பு விகிதத்தை (Birth Rate) உறுதிசெய்ய தேவையானவர்கள்.

b . பொருளாதார ஊக்குவிப்பு/முதலீடுகள்  வடக்கு/கிழக்கை மையப்படுத்தி நடக்கவேண்டும். அதன் மூலம் சனத்தொகை பரம்பலை (population spread) குறைத்து சனத்தொகை செறிவை (increase population density) நீண்டகால அளவில் கூட்டவேண்டும். இதன் மூலம் தென் பகுதி நோக்கி பொருளாதார நோக்கிக்காக செல்வதை குறைத்து மிகவும் உறுதியான ஒரு பொருளாதார மையத்தை (centre of economic activities) எமது நிலத்தில் கட்டியிழுப்ப வேண்டும். எமது பொருளாதார வலிமை (economic strength) எதிர்காலத்தில் நாம் மேலும் உரிமைகளை பெற வழிசமைக்கும்.

c. மனித பாதுகாப்பு (Human Security) அச்சுறுத்தலான விடயங்களை உடனடியாக சட்ட ரீதியாகவும் அழுத்தங்கள் மூலமும் தடுத்துநிறுத்த மக்கள் கண்காணிப்பு குழுக்கள் (Citizen Groups) சட்டவாளர்களுடன் சேர்ந்து  இயங்கவேண்டும். ஒரு மனித பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத இடத்தில் இருந்து மக்கள் வெளியேறத்தான் செய்வார்கள். அதனால் சனத்தொகை மேலும் குறையும் அல்லது பிறப்புக்களால் ஈடு செய்யமுடியாத அளவில் இருக்கும். இன்றைய நிலவரத்தில் உளூரில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமாகாமல் தடுக்க ஒரு அரணாக சட்டவாளர்களும் அவர்களின் ஒன்றிணைந்த நடவடிக்கைகளும் மனித பாதுகாப்பை ஓரளவாவது உறுதிப்படுத்தும்.

2. நிலங்களை பாதுகாத்தல்/பயன்படுத்தல் 

a. காணி அபகரிப்பு விடயங்களில் உடனடி சட்ட நடவடிக்கை எடுத்து அவற்றை தடுத்து நிறுத்தும் வழிவகைகளை உதவவேண்டும். அன்று யூதர்கள் செய்தது போல சட்ட நடவடிக்கைகளுக்கு நிதி/வள உதவி வழங்கி நீங்கள் உதவவேண்டும். இதனை மேல 1c ல் குறிப்பிட்டுள்ள விடயங்களுக்கும் உதவ பாவிக்கவும். சுமந்திரன் ஒரு சட்ட குழுவையும் மணிவண்ணன் இன்னொரு குழுவையும் அமைக்கிறார்கள். அவர்கள் நல்லது  செய்தால் நீங்கள் உதவுங்கள். உதவினால் அவர்கள் கூடிய சட்ட நடவடிக்கைளை மேட்கொள்ள நிதி வளம் உதவலாம். குமாரவடிவேல் குருபரனும் இந்த விடயங்களில் சிறந்தவர். 

b. இருக்கும் காணிகளை பயன்படுத்த கூடிய திட்டங்களை ஊக்குவிக்க புலம்பெயர் அமைப்புகள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . பழைய மாணவர் சங்கங்கள் இந்த விடயத்திலும் பொருளாதார ஊக்குவிப்பு விடயத்திலும் உதவக்கூடியவர்கள்.

தமிழரின் இருப்பை உறுதி செய்யும் விடயங்களில் எது இப்பொழுது நடைமுறை சாத்தியமானது/ யதார்த்தமானது (current reality/currently practical) எது இப்போதைக்கு சாத்தியமில்லாத உயர்ந்த குறிக்கோள் (impractical idealism) என அடையாளம் கண்டு இயங்கவேண்டும். எம்மில் பலர் நடைமுறை சாத்தியமில்லாத கனவுகளுடன் விடயங்களை அணுகுவதால் காலம் விரையம் ஆகிறது. குறிகோளால் ஒன்று பட்டு இருங்கள். ஆனால் தனித்தோ சிறு குழுக்களாகவோ இயங்குங்கள்.

Edited by puthalvan
மேலதிக விளக்கம்

3 hours ago, கற்பகதரு said:

வசதியாக குந்தியிருந்து கடந்தகாலத்தை  இரைமீட்பதை போன்ற சுகமான அனுபவம் உண்டா?

கடந்தகால அனுபவங்கள் தான் வருங்கால படிக்கட்கள். எந்த அணுகுமுறை பலனை தந்தது. எதனால் பலன் வரவில்லை. ஏன் பலன் வரவில்லை என்பவற்றை நாம் எமக்குள் பகிர்ந்து அதன் மூலம் புதிய அணுகுமுறைகளை கண்டறிந்து பயணிப்பது தான் நாம் விரைவில் எமது இலக்குகளை அடைய வழிகோலும். இங்குள்ள ஒவொருவரும் தமது நேரத்தை செலவழித்து தமது மக்கள்  மீது கரிசனை கொண்டு கருத்துக்களை பகிர்கின்றனர். அதில் ஒரு சில வீதத்தினர் அந்த அனுபவங்களை உள்வாங்கி தங்கள் நடவடிக்கைகளை எடுப்பார்கள். நான் கூட இந்த வருடம் தான் அதிகளவு பதிவிடுகிறேன். ஆனால வடக்கு/கிழக்கு  விடயங்களில் மும்மரமாக இருந்த காலத்தில் இந்த களத்தில்  இருந்து செய்திகள், கருத்துக்களை வாசித்து அதில் சொல்லப்படட விடயங்களை கவனத்தில் எடுத்திருக்கிறேன். எனவே எமது உரையாடைகள், கருத்துக்களின் தாக்கம் வெறும் உள/வள இன்பத்தை தாண்டி என்னவகையான நன்மையான விளைவுகளை உருவாகும் என்பது மதிப்பிடமுடியாதது அன்பரே.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கற்பகதரு said:

வசதியாக குந்தியிருந்து கடந்தகாலத்தை  இரைமீட்பதை போன்ற சுகமான அனுபவம் உண்டா?

GH014IROL.2-1.jpg?imwidth=810&impolicy=w

086e42f0-d5a8-11ea-8f95-6d813022b2d7.jpg

ஒரு  மனிதன் தன்பாட்டில் இரை  மீட்பதையே பொறுக்காத வைக்கற்பட்டறைக்கூட்டத்தை  விடவா???

7 hours ago, puthalvan said:

கடந்தகால அனுபவங்கள் தான் வருங்கால படிக்கட்கள். எந்த அணுகுமுறை பலனை தந்தது. எதனால் பலன் வரவில்லை. ஏன் பலன் வரவில்லை என்பவற்றை நாம் எமக்குள் பகிர்ந்து அதன் மூலம் புதிய அணுகுமுறைகளை கண்டறிந்து பயணிப்பது தான் நாம் விரைவில் எமது இலக்குகளை அடைய வழிகோலும். இங்குள்ள ஒவொருவரும் தமது நேரத்தை செலவழித்து தமது மக்கள்  மீது கரிசனை கொண்டு கருத்துக்களை பகிர்கின்றனர். அதில் ஒரு சில வீதத்தினர் அந்த அனுபவங்களை உள்வாங்கி தங்கள் நடவடிக்கைகளை எடுப்பார்கள். நான் கூட இந்த வருடம் தான் அதிகளவு பதிவிடுகிறேன். ஆனால வடக்கு/கிழக்கு  விடயங்களில் மும்மரமாக இருந்த காலத்தில் இந்த களத்தில்  இருந்து செய்திகள், கருத்துக்களை வாசித்து அதில் சொல்லப்படட விடயங்களை கவனத்தில் எடுத்திருக்கிறேன். எனவே எமது உரையாடைகள், கருத்துக்களின் தாக்கம் வெறும் உள/வள இன்பத்தை தாண்டி என்னவகையான நன்மையான விளைவுகளை உருவாகும் என்பது மதிப்பிடமுடியாதது அன்பரே.

காத்திரமான கருத்துகள் புதல்வன். நன்றி

இங்கு இருக்கும் (புலம்பெயர் நாடுகளில்) இருக்கும் இளைய சமுதாயத்திற்கும் அங்கிருக்கும் இளைய சமுதாயத்துக்கும் இடையில் பரஸ்பர தொடர்புகளை பேணுவதற்குரிய வழி வகைகள் என்னவென நினைக்கின்றீர்கள்? உதாரணத்துக்கு வளர்ந்து வரும் என் பிள்ளைகளுக்கு தாயகத்தில் இருக்கின்ற இளைய சமூகத்திற்கும் இடையில் சரியான விகிதத்தில் தொர்புகள் உருவாகாது விடின், இன்னும் சில வருடங்களின் பின் தாயக மக்கள் மீதான அக்கறை கொண்ட புலம்பெயர் சமூகத்தின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து விடும். இதை தடுப்பது எப்படி? வெறுமனே பிள்ளைகளின் கையால் சில நன்கொடைகளை செய்வதுடனோ அல்லது விடுமுறை கால உல்லாசப் பயணமாக அவர்களை அழைத்துச் செல்வதுடன் மட்டுமோ இதை செய்துவிட முடியாது என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, Robinson cruso said:

சரியாக சொன்னீர்கள். கடந்த காலத்தையே பேசி காலம் கடத்துவதில் நாம் முன்னிலையில் இருக்கிறோம். இங்கு சிங்களவன் தனது காரியங்களை கன கச்சிதமாக கொண்டு போகிறான். இனி இங்குள்ள மக்களின் இருப்பு கேள்விக்குறிதான். நேற்று அமைச்சரவையின் பல பொறுப்பாடுகளை கோத்த எடுத்துக்கொண்டு விடடார். எனவே அவை எல்லாவற்றையும் கன கச்சிதமாக ராணுவம் நிறைவேற்றும். கொஞ்சம் பொறுத்தால் எப்படியான நடவடிக்கைகளாக இருக்கும் என்பதை காணலாம்.

சிங்களம் தனது பூர்வீகத்தை முன்னிறுத்தி அதை  மனதில் வைத்து வரலாறுகளை அசைபோட்டு அசைபோட்டு  தனது இருப்பை மேம்படுத்துகின்றது.

எம்மவர்களோ நாளைக்கு கிடைக்கும் பிலாப்பழத்தை விட இன்று கிடைக்கும் கிலாக்காய் உத்தமம் என சொல்கின்றார்கள்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

காத்திரமான கருத்துகள் புதல்வன். நன்றி

இங்கு இருக்கும் (புலம்பெயர் நாடுகளில்) இருக்கும் இளைய சமுதாயத்திற்கும் அங்கிருக்கும் இளைய சமுதாயத்துக்கும் இடையில் பரஸ்பர தொடர்புகளை பேணுவதற்குரிய வழி வகைகள் என்னவென நினைக்கின்றீர்கள்? உதாரணத்துக்கு வளர்ந்து வரும் என் பிள்ளைகளுக்கு தாயகத்தில் இருக்கின்ற இளைய சமூகத்திற்கும் இடையில் சரியான விகிதத்தில் தொர்புகள் உருவாகாது விடின், இன்னும் சில வருடங்களின் பின் தாயக மக்கள் மீதான அக்கறை கொண்ட புலம்பெயர் சமூகத்தின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து விடும். இதை தடுப்பது எப்படி? வெறுமனே பிள்ளைகளின் கையால் சில நன்கொடைகளை செய்வதுடனோ அல்லது விடுமுறை கால உல்லாசப் பயணமாக அவர்களை அழைத்துச் செல்வதுடன் மட்டுமோ இதை செய்துவிட முடியாது என நம்புகின்றேன்.

உண்மை  நிழலி

அநேகமான வேதனை  தரும்  கருத்தாடல்களின் கேலிகள் மற்றும் வசை பாடல்களின் பின் ஒதுங்க  நினைப்பதுண்டு

ஆனால்  எனது  தோல்வி அல்லது  எனது பின் வாங்குதல்  தான் எனது குடும்பத்தின் இறுதியாக  இருந்துவிடப்போகிறது என்ற  பயம் வாட்டி  வதைக்கிறது

10 hours ago, குமாரசாமி said:

சிங்களம் தனது பூர்வீகத்தை முன்னிறுத்தி அதை  மனதில் வைத்து வரலாறுகளை அசைபோட்டு அசைபோட்டு  தனது இருப்பை மேம்படுத்துகின்றது.

எம்மவர்களோ நாளைக்கு கிடைக்கும் பிலாப்பழத்தை விட இன்று கிடைக்கும் கிலாக்காய் உத்தமம் என சொல்கின்றார்கள்.

பிலா பழம் இல்லை, பிலா காயாவது கிடைத்தால் நல்லது.

18 hours ago, puthalvan said:

தமிழரின் இருப்பை உறுதிசெய்ய பின்வருவன முக்கியமானது:

1. சனத்தொகையை கூட்டுதல்/சனத்தொகை பரம்பலை குறைதல் 

a  . இளைய சமூதாயம் வாய்ப்புகள் தேடி வெளியுலகு செல்லாமல் (Brain Drain) அங்கிருக்க பொருளாதார வாய்ப்புகளை ஏட்படுத்தவேண்டும். இளைய சமூதாயம் வருங்கால மூளை வளம் (Human Capital) அதோடு அவர்கள் தான் பிறப்பு விகிதத்தை (Birth Rate) உறுதிசெய்ய தேவையானவர்கள்.

b . பொருளாதார ஊக்குவிப்பு/முதலீடுகள்  வடக்கு/கிழக்கை மையப்படுத்தி நடக்கவேண்டும். அதன் மூலம் சனத்தொகை பரம்பலை (population spread) குறைத்து சனத்தொகை செறிவை (increase population density) நீண்டகால அளவில் கூட்டவேண்டும். இதன் மூலம் தென் பகுதி நோக்கி பொருளாதார நோக்கிக்காக செல்வதை குறைத்து மிகவும் உறுதியான ஒரு பொருளாதார மையத்தை (centre of economic activities) எமது நிலத்தில் கட்டியிழுப்ப வேண்டும். எமது பொருளாதார வலிமை (economic strength) எதிர்காலத்தில் நாம் மேலும் உரிமைகளை பெற வழிசமைக்கும்.

c. மனித பாதுகாப்பு (Human Security) அச்சுறுத்தலான விடயங்களை உடனடியாக சட்ட ரீதியாகவும் அழுத்தங்கள் மூலமும் தடுத்துநிறுத்த மக்கள் கண்காணிப்பு குழுக்கள் (Citizen Groups) சட்டவாளர்களுடன் சேர்ந்து  இயங்கவேண்டும். ஒரு மனித பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத இடத்தில் இருந்து மக்கள் வெளியேறத்தான் செய்வார்கள். அதனால் சனத்தொகை மேலும் குறையும் அல்லது பிறப்புக்களால் ஈடு செய்யமுடியாத அளவில் இருக்கும். இன்றைய நிலவரத்தில் உளூரில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமாகாமல் தடுக்க ஒரு அரணாக சட்டவாளர்களும் அவர்களின் ஒன்றிணைந்த நடவடிக்கைகளும் மனித பாதுகாப்பை ஓரளவாவது உறுதிப்படுத்தும்.

2. நிலங்களை பாதுகாத்தல்/பயன்படுத்தல் 

a. காணி அபகரிப்பு விடயங்களில் உடனடி சட்ட நடவடிக்கை எடுத்து அவற்றை தடுத்து நிறுத்தும் வழிவகைகளை உதவவேண்டும். அன்று யூதர்கள் செய்தது போல சட்ட நடவடிக்கைகளுக்கு நிதி/வள உதவி வழங்கி நீங்கள் உதவவேண்டும். இதனை மேல 1c ல் குறிப்பிட்டுள்ள விடயங்களுக்கும் உதவ பாவிக்கவும். சுமந்திரன் ஒரு சட்ட குழுவையும் மணிவண்ணன் இன்னொரு குழுவையும் அமைக்கிறார்கள். அவர்கள் நல்லது  செய்தால் நீங்கள் உதவுங்கள். உதவினால் அவர்கள் கூடிய சட்ட நடவடிக்கைளை மேட்கொள்ள நிதி வளம் உதவலாம். குமாரவடிவேல் குருபரனும் இந்த விடயங்களில் சிறந்தவர். 

b. இருக்கும் காணிகளை பயன்படுத்த கூடிய திட்டங்களை ஊக்குவிக்க புலம்பெயர் அமைப்புகள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . பழைய மாணவர் சங்கங்கள் இந்த விடயத்திலும் பொருளாதார ஊக்குவிப்பு விடயத்திலும் உதவக்கூடியவர்கள்.

தமிழரின் இருப்பை உறுதி செய்யும் விடயங்களில் எது இப்பொழுது நடைமுறை சாத்தியமானது/ யதார்த்தமானது (current reality/currently practical) எது இப்போதைக்கு சாத்தியமில்லாத உயர்ந்த குறிக்கோள் (impractical idealism) என அடையாளம் கண்டு இயங்கவேண்டும். எம்மில் பலர் நடைமுறை சாத்தியமில்லாத கனவுகளுடன் விடயங்களை அணுகுவதால் காலம் விரையம் ஆகிறது. குறிகோளால் ஒன்று பட்டு இருங்கள். ஆனால் தனித்தோ சிறு குழுக்களாகவோ இயங்குங்கள்.

நீங்கள் குறிப்பிடட காரியங்கள் நன்றாகத்தான் இருக்கிறது. அதட்கு காலம் இருக்காது. நடக்கும் போலவும் தெரியவில்லை. அரசாங்கம் கன கட்சிதமாக எல்லாவற்றையும் திடடமிட்டு செயட்பட தொடங்கிவிடடார்கள். கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மட்டும்தான் இன்னும் முழு வீச்சில் தொடங்கவில்லை.

முடியுமெண்டால் வெளி நாட்டில் உள்ளவர்கள் இங்கு வந்து முதலீடு செய்து நிலங்களை இடங்களை கொஞ்சம் காப்பாத்தலாம். இந்தியாவில் உள்ள அகதிகளை கொண்டு வந்து குடியமர்த்தலாம். அவர்கள் வருவார்களோ தெரியவில்லை. அநேகர் அங்கு இருக்கவே விரும்புகிறார்கள்.

ஜூதர்களைப்போல எம்மால் அப்படி செய்யமுடியுமென்றால் எப்போதோ நாம் முன்னேறி இருப்போம்.

குருபரன் அவர்கள் இப்போது லண்டனில் குடும்பத்துடன் குடியேறி விடடார்.

அது சரி, நீங்கள் எந்த நாட்டிலிருந்து இதை எழுதுகிறீர்கள், இதில் உங்கள் பங்களிப்பு என்ன என்பதையும் எழுதினால் தொடர்பு கொள்ள இலகுவாக இருக்கும்.

21 hours ago, கற்பகதரு said:

வசதியாக குந்தியிருந்து கடந்தகாலத்தை  இரைமீட்பதை போன்ற சுகமான அனுபவம் உண்டா?

086e42f0-d5a8-11ea-8f95-6d813022b2d7.jpg

இங்குள்ள எமக்கு அது சுகமான அனுபவமாக இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.