Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

முன்னொரு காலத்தில்  ஈழ தமிழினத்திற்காக உரிமை கோரிக்கை  முன் வைக்கப்பட்டது. அது நிறைவேற்றப்படவில்லை.பிறிதொரு காலத்திலும் ஈழத்தமிழினத்தின் அடிப்படை உரிமைக்காக போராடப்பட்டது. அப்போதும் கொடுக்கப்படவில்லை.பயங்கரவாத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் என்றார்கள். பேச்சுவார்த்தைக்கு  போனார்கள் அப்போது இழுத்தடிக்கப்பட்டார்கள்.போராட்டதை அழித்து மூடினார்கள்.

இன்றுவரை ஈழத்தமிழினத்திற்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை.

உவங்களோடை பேசிப்பயனில்லை என்று சொன்னது சரியாகத்தானே இருக்கின்றது.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது அனுபவத்தால் வந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பவர்கள் அதை உணரமுடியுமா அண்ணா!

  • Replies 133
  • Views 13.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Robinson cruso said:

சிங்களவனை , சிங்கள அரசை திட்டிக்கொண்டிருப்பதில் ஏதும் நடக்கப்போவதில்லை. எப்போது போராட்டம் ஆரம்பித்ததோ அந்த எழுபது வருடங்களாக நாம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். சிங்களவன் அக்கரமித்து முன்னேறிக்கொண்டு செல்லுகிறான்

 சிங்கிளவன் ஆக்கிரமிக்கின்றான் என்றால் கருணா அம்மானும், டக்ளஸ் அண்ணரும், அங்கஜன் தம்பியும் என்ன செய்கிறார்கள்?

அவர்கள் சிங்கள அரசியல்வாதிகளை திட்டுகின்றார்களா இல்லையே?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, விசுகு said:

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது அனுபவத்தால் வந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பவர்கள் அதை உணரமுடியுமா அண்ணா!

கண்ணுக்கு முன்னால் நடப்பதையே ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை.இவர்களிடம் போய் எதை எதிர்பார்க்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

அப்ப உங்களிடம் ஆதரமில்லை, சகட்டு மேனிக்கு, செய்திகளை தேடிப்பாருங்கள் என கூறுகின்றீர்கள், இதே செய்தி ஊடகங்களின் நம்பிக்கைதன்மையை கேள்வியெழுப்பியவர் நீங்கள்,

சிங்களவன் தன் வெற்றியை கொண்டாட புலிகளில் எப்படி தீவிரவாதிகள் சமாதானத்தில் நாட்டமில்லாதவர்கள் என பரப்ப முனைகின்றார்களோ, அதையே கை கூலி பெறாமல் நன்றாக நீங்களும் செய்கின்றீர்கள், அதற்குள் தமிழரின் விடிவுக்க தீர்வு என்னவென்று வேஷம்வேறு,

இங்கு உங்களுக்கு கோப கனலை கக்கவில்லை, உங்கள் வேடங்களை நினைக்க சிரிப்பாக இருக்கு.

நீங்கள் அந்த நாட்களில் ஊரில் இல்லாமல் இந்த செய்தி ஊடகங்களை நம்பி கருத்துகளை எழுவதைப்போல் மற்றவர்களையும் நினைக்க வேண்டாம்.

விளங்கநினைப்பவரே உங்கட சிங்கள அரசை திட்டவுமில்லை ஆதரிக்கவுமில்லை, அவர்கள் செய்கின்ற அடக்குமுறையைதான் பதிகின்றோம். உங்கள் சிங்கள அரசுடன் சேர்ந்து இந்த அடக்குமுறைக்கு என்ன வழியென்று கூறுங்களேன், அல்லது என்ன நல்ல தீர்வுவென்றாலும் கூறுங்களேன. அல்லது எப்படி இனி போராட்டகளை முன்னேடுக்க வேண்டெமென்றாலும் உங்கள் திருவாய் மலர்ந்து கூறுங்களேன் விளங்கநினைப்பவரே

விளங்கநினைப்பவரே எப்படி சிங்களவன் ஆக்கிரமித்து முன்னேறுவதை தடுப்பது, பின்னோக்கி செல்லும் நாம் எப்படி முன்னோக்கி செல்வது? நல்ல விளக்கமாக பதியுங்களேன். உங்கள் சிங்களவனை யாரும் திட்டமாட்டார்கள், வசைபாட மாட்டார்கள் இது சத்தியம், நல்ல வழிகளை கூறினால்😂

உடையார், எதையும் நினையுங்கள், சொல்லுங்கள்! ஆனால் செய்தி ஊடகங்களை தேடி வாசித்தறியப் பழகுங்கள். வீரகேசரி, தினக்குரல் இப்படியானவற்றை! ஈழநாதம், உதயனில் எல்லாம் தேடினால் "சுடப் பட்டார்" என்றிருக்கும், யார் சுட்டார் என்று இருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் வன்முறை குறித்தும், புலிகளின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்தார். புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதுடன், தனிநாடு கோரிக்கையையும் கைவிட வேண்டும் என்றார்.

பேச்சுவார்த்தையில் நடுநிலை வகிப்பவர் தீர்வே வராமல் ஆயுதங்களை கீழே வைக்கும் படி கூறுகிறார்.

இதற்கு பதிலளித்த தேசத்தின் குரல் ,

"ஜனநாயக வழிமுறைகளில் போராடிய எங்கள் தலைவர்களைப் பேரினவாதிகள் தங்களது சட்டங்களின் மூலம் ஒடுக்கியதும், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதும், அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டதும், மொழி குறித்த சட்டங்களாலும், அரச வன்முறைகளாலும் நடைபெற்றன. வடக்கு-கிழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக போர்ச் சூழல் நிலவுகிறது. இதற்கெல்லாம் வழிவகை காண அரசியல் விவகாரக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அக்குழு பேசி நல்ல முடிவெடுத்தால், யாரும் ஆயுதமேந்தமாட்டார்கள்.

எங்கள் மீது திணிக்கப்பட்ட போரினால், உடைமைகளையும் உயிர்களையும் இழந்தது தமிழர்கள்தான். 60 ஆயிரம் பேர் இறந்தனர். ஒரு லட்சம் பேர் படுகாயமுற்று ஊனமுற்றவர்களாகவும் ஆனார்கள். லட்சக்கணக்கான மக்கள் உங்களது நாடுகளில் மட்டுமல்ல, இதர நாடுகளிலும் அகதிகளாக வாழ்கிறார்கள். எங்களது பகுதிகளில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. ராணுவத்தினருக்கு சகல அதிகாரங்களும் சட்டங்கள் மூலம் வழங்கப்பட்டுவிட்டன.

அவர்கள் விரும்பினால் எந்தத் தமிழனையும் பிடித்துச் செல்லலாம்; விசாரிக்கலாம்; கொல்லலாம். அவர்களது உடலைப் பெற்றோரிடம் உறவினரிடம் தரவேண்டியதில்லை. எரிக்கவும், புதைக்கவும் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது. இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் மறைந்து போயிருக்கிறார்கள். இவையெல்லாவற்றுக்கும் ஒரு முடிவு ஏற்பட்டது. அதுதான் தமிழர்களின் ஆயுதப் போராட்டம். நாங்கள் இதனை விரும்பவில்லை. எங்களது உரிமைகள் மீண்டும் எங்களுக்கு வழங்கப்பட்டால் இந்த ஆயுதமே எங்களுக்குத் தேவையில்லை.

ஏ-9 என்பது தேசிய நெடுஞ்சாலை. யாழ்ப்பாணம்-கண்டி செல்லும் சாலை. வவுனியா வழியாகச் செல்கிறது. இந்தச் சாலையில் நீங்கள் பயணம் செய்து பாருங்கள். இரண்டாம் உலகப் போரின் அழிவுகள், பேய்கள் வாழும் ஊரை நினைவுபடுத்தியதாக வரலாறுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதேவகையான காட்சிகளை நீங்கள் இந்த ஏ-9 சாலையில் காணமுடியும்.

வறுமையும் இயலாமையும் எங்களுக்கு விதிக்கப்பட்டுவிட்டன. இதிலிருந்து விடுபட எங்கள் மக்கள் விரும்புகிறார்கள்; நாங்கள் விரும்புகிறோம்' என்று பாலசிங்கம் குறிப்பிட்டதும் அங்கு நிசப்தம் பேசியது. சற்று நேரம் அமைதி நிலவியது. கூடியிருந்தவர்களின் உள்ளங்களில் கண்ணீர் துளிர்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Robinson cruso said:

இலங்கை இந்தித்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு முன்னேறியிருக்க வேண்டியதுதான் இருந்த ஒரே சந்தர்ப்பம்.

இந்தியாவுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றச்சொல்லி இந்தியா கெஞ்சிப்பாக்குது, வெருட்டிப்பாக்குது, அள்ளிக்குடுத்து செய்யச் சொல்லுது. ஒன்றுக்கும் மாட்டேன் என்று அடம்பிடிக்கிறான் சிங்களவன். சர்வதேசம் காலக்கெடு கொடுத்து காத்திருக்குது. கிழித்தெறிந்த ஒப்பந்தங்கள் எத்தனையெத்தனை? தமிழ்த் தலைமைகளை ஏமாற்றி சாதித்தவை எத்தனையெத்தனை? இப்போ தமிழரின் பொருளாதாரத்தை முடக்கி, கல்வியறிவை தடுத்து, வளங்களை சுரண்டி, நிலங்களை பறித்து, ஏதிலிகளாக்கி, ஏமாளிகளாய் அவர்கள் இட்டதை செய்ய தன்மானமில்லாததுகளை தலைவர்களாக்கி காரியம் சாதித்த திமிரில் இருக்கிறவன் தந்துவிடவா போகிறான்? இருந்தாலும் நாம் இழந்த இனம். அடித்து, பறித்த இனமல்ல. எங்களுக்கு எங்களிடம் இருந்து பறித்ததை திருப்பிக் கேட்க்கும் உரிமை இருக்கிறது. அதை திரும்பப் பெறும் வரை எம்மால் இயன்றவரை, எமது சக்திக்கேற்ப எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டே இருப்போம். ஒருநாள் அந்தக்கதவு திறக்க வைக்கப்படும்.  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

உடையார், எதையும் நினையுங்கள், சொல்லுங்கள்! ஆனால் செய்தி ஊடகங்களை தேடி வாசித்தறியப் பழகுங்கள். வீரகேசரி, தினக்குரல் இப்படியானவற்றை! ஈழநாதம், உதயனில் எல்லாம் தேடினால் "சுடப் பட்டார்" என்றிருக்கும், யார் சுட்டார் என்று இருக்காது!

Justin உங்களுக்கு இதே வேலையாக போய்விட்டது எப்பும், காற்றில் கம்பு சுத்துவதுமாதிரி பதில்களை வதந்திகளாக பதிவது ஆதரமின்றி, ஆதாரம் கேட்டால் தேடிபடியுங்கள் என்று கூறுவது.

எங்களுக்கும் படிக்க தெரியும்😎, நீங்கள் உங்கள் அறிவை வதந்தி இன்றி பதிய தேடிபடியுங்கள், சும்மா அடிக்கடி காற்றில் கம்பு சுத்துவதைவிட்டுவிட்டு.

சிங்களம் என்ன செய்ய நினைக்கிறதோ, அதையே யாழ்களத்தனூடாக புலிகளின் போராட்டத்தை சேற்றை வாரி இறைக்கின்றீர்கள், புலிகள் சமாதானத்தில் & மக்களின் விடுதலைக்காக என்றுமே அர்பணிப்புடன் செயல் பாட்டார்கள். 

மேட்டுக்குடிகள்தான் சிங்களத்துடன் சேர்ந்து இன்னும் தங்கள் தன் மானத்தை அடகு & வைத்து சுய அறிவை சுருட்டி வைத்து எமது போராட்டத்தை வேறு திசையில் திருப்பிக்கொண்டிருக்கு,

அதற்கு நீங்களும் ஒரு வகையில் தொடர்ச்சியாக துணை போக போகின்றீர்களா???

எப்படி இனி எமது விடுதலைக்கு வழியென்று சிந்தியுங்கள் கருத்தை பதியுங்கள்

புலிகள் தங்களால் இயன்றளவு எமக்காக போராடிவிட்டார்கள், நிம்மதியாக இருக்க விடுங்கள்🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, உடையார் said:

நல்ல கருத்து உடையார்...👍🏽

9 hours ago, குமாரசாமி said:

 சிங்கிளவன் ஆக்கிரமிக்கின்றான் என்றால் கருணா அம்மானும், டக்ளஸ் அண்ணரும், அங்கஜன் தம்பியும் என்ன செய்கிறார்கள்?

அவர்கள் சிங்கள அரசியல்வாதிகளை திட்டுகின்றார்களா இல்லையே?????

அவர்களுக்கு திட்டியோ, கொத்தியோ வேலை இல்லை எண்டு இவர்களுக்கு நன்றாகவே தெரியும். சிங்களத்தின் திடடம் என்ன என்பதும் தெரியும். எனவே அதனை பேசுவதால் எந்தப்பயனும் வரப்போவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் இந்த அரசில் அப்படியான பேச்சை எடுக்கவே முடியாது. சுயாதீன குழுக்களுக்கு நியமிக்கப்படடவர்களை பார்த்தாலே என்ன நடக்கபோகுதென்று இங்குள்ளவர்களுக்கு விளங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎11‎-‎2020 at 22:35, குமாரசாமி said:

இரு பகுதிக்கும் அக்கறையில்லை என்பது  பற்றி ஆணித்தரமாக எதுவுமே கூறமுடியாது.இந்தியா என்கிற பின் (ப)புலத்தையும் கவனிக்க வேண்டும் அல்லவா.

சரி. 

இரு பகுதிக்கும் சமாதான பேச்சுவார்த்தையில் அக்கறை இருந்திருக்கவில்லை என்பது உண்மையானால்......
ஏன் இன்று பல மாற்றுக்கருத்தாளர்கள் புலிகள் தான் பேச்சுவார்த்தையை குழப்பினார்கள் என பல இடங்களில் கூறிவருகின்றார்கள். இது யாழ்களத்திலும் நடக்கின்றது. புலிகளை மட்டும் குறை கூறுகின்றார்கள்.

மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிங்களத்தை குறை கூறியதை நான் எந்த இடத்திலும் பார்க்கைவில்லை.

சிங்களவனுக்கு பேச்சு வார்த்தைகளில் அக்கறை இருக்க வேண்டிய தேவை இல்லை ...எமக்குத் தான் தீர்வு வேண்டும் ...நாம் தான் மும்பரமாய் இருந்திருக்க வேண்டும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, உடையார் said:

Justin உங்களுக்கு இதே வேலையாக போய்விட்டது எப்பும், காற்றில் கம்பு சுத்துவதுமாதிரி பதில்களை வதந்திகளாக பதிவது ஆதரமின்றி, ஆதாரம் கேட்டால் தேடிபடியுங்கள் என்று கூறுவது.

எங்களுக்கும் படிக்க தெரியும்😎, நீங்கள் உங்கள் அறிவை வதந்தி இன்றி பதிய தேடிபடியுங்கள், சும்மா அடிக்கடி காற்றில் கம்பு சுத்துவதைவிட்டுவிட்டு.

சிங்களம் என்ன செய்ய நினைக்கிறதோ, அதையே யாழ்களத்தனூடாக புலிகளின் போராட்டத்தை சேற்றை வாரி இறைக்கின்றீர்கள், புலிகள் சமாதானத்தில் & மக்களின் விடுதலைக்காக என்றுமே அர்பணிப்புடன் செயல் பாட்டார்கள். 

மேட்டுக்குடிகள்தான் சிங்களத்துடன் சேர்ந்து இன்னும் தங்கள் தன் மானத்தை அடகு & வைத்து சுய அறிவை சுருட்டி வைத்து எமது போராட்டத்தை வேறு திசையில் திருப்பிக்கொண்டிருக்கு,

அதற்கு நீங்களும் ஒரு வகையில் தொடர்ச்சியாக துணை போக போகின்றீர்களா???

எப்படி இனி எமது விடுதலைக்கு வழியென்று சிந்தியுங்கள் கருத்தை பதியுங்கள்

புலிகள் தங்களால் இயன்றளவு எமக்காக போராடிவிட்டார்கள், நிம்மதியாக இருக்க விடுங்கள்🙏

உடையார், காற்றில் கம்பு சுத்துவது நீங்கள் தான். இந்த சோம்பேறித் தனத்தை விட்டு விட்டு நூலகம் செல்லுங்கள், பெப்ரவரி 2002 முதல் டிசம்பர் 2007 வரை, புலிகளும், சிறிலங்காப் படைகளும் கொன்ற கடத்திய செய்திகளை வாசித்தறியுங்கள். 

ஒவ்வொரு பேப்பராக வாசிக்கப் பஞ்சியா? மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு  (HRW) வாராந்த அறிக்கையில் யார் என்ன செய்தார்கள் என்ற தகவலை தங்கள் இணையத்திலேயே பட்டியகிட்டிருக்கிறார்கள். 

எங்கே தகவல் இருக்கிறது என்று சொன்னால் கூட போய் எடுத்துக் கொள்ள இயலாமல் ஏன் இவ்வளவு சோம்பேறித்தனம்? தவறான வதந்திகளை யூடியூப் வடிவில் தந்தால் உடனே நம்பி விடும் பழக்கத்தை தேடி வாசிப்பதால் மாற்றீடு செய்யுங்கள்! 
அதன் பிறகு "மேட்டுக் குடி" என்பது உங்கள் தலைக்குள் மட்டும் இருக்கும் கற்பனை என்பது தெரிய வரும்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

ஒவ்வொரு பேப்பராக வாசிக்கப் பஞ்சியா? மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு  (HRW) வாராந்த அறிக்கையில் யார் என்ன செய்தார்கள் என்ற தகவலை தங்கள் இணையத்திலேயே பட்டியகிட்டிருக்கிறார்கள். 

உந்த மனித உரிமை சங்கங்கள் சங்காரங்கள் எப்ப உள்ளதை உள்ளபடி சொல்லியுருக்குதுகள். உதுகள் ஒழுங்காய் இருந்தால் கன நாடுகளிலை பிரச்சனையே இருக்காதெல்லோ? கண்ணுக்கு முன்னாலை நடந்த அழிவுகளுக்கே மனித உரிமை கண்காணி குழு வாயை மூடிக்கொண்டிருக்கு....இதுக்குள்ளை அதுகள் சொல்லுறதெல்லாம் சரியாம்.

மனித உரிமைக்குழுவும் ஆதிக்க வாதிகளின் காலடியில் தான்....

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

 தமிழ்நெற் ஆமி செய்ததை மட்டும் சொல்லும், ஐலண்ட் வகையறாக்கள் புலிகள் செய்ததை மட்டும் சொல்லும். இரு தரப்பும் செய்ததை HRW, AI போன்றவை சமநிலையாக வெளியிடும். எங்களில் பலருக்கு இந்த அமைப்புகளின் நடுநிலை மீது தான் கடுப்பேயொழிய  அவர்கள் அறிக்கையிடாமல் இருப்பதில் அல்ல!

நாம் ஐ.நா அறிக்கையின் ஒரு பகுதியை இனப்படுகொலைக்கு ஆதாரமாகக் காட்டிக் கொண்டே, அதில் இருக்கும் தமிழ் தரப்பு மீதான குற்றச்சாட்டுகளை ஆதிக்க வாதிகளின் சதி வேலை என்று குமுறுவது போலத் தான் உங்கள் கருத்தும்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

உடையார், காற்றில் கம்பு சுத்துவது நீங்கள் தான். இந்த சோம்பேறித் தனத்தை விட்டு விட்டு நூலகம் செல்லுங்கள், பெப்ரவரி 2002 முதல் டிசம்பர் 2007 வரை, புலிகளும், சிறிலங்காப் படைகளும் கொன்ற கடத்திய செய்திகளை வாசித்தறியுங்கள். 

ஒவ்வொரு பேப்பராக வாசிக்கப் பஞ்சியா? மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு  (HRW) வாராந்த அறிக்கையில் யார் என்ன செய்தார்கள் என்ற தகவலை தங்கள் இணையத்திலேயே பட்டியகிட்டிருக்கிறார்கள். 

எங்கே தகவல் இருக்கிறது என்று சொன்னால் கூட போய் எடுத்துக் கொள்ள இயலாமல் ஏன் இவ்வளவு சோம்பேறித்தனம்? தவறான வதந்திகளை யூடியூப் வடிவில் தந்தால் உடனே நம்பி விடும் பழக்கத்தை தேடி வாசிப்பதால் மாற்றீடு செய்யுங்கள்! 
அதன் பிறகு "மேட்டுக் குடி" என்பது உங்கள் தலைக்குள் மட்டும் இருக்கும் கற்பனை என்பது தெரிய வரும்! 

நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு தெரியும், உங்கள் அறிவுரையை உங்களுடன் வைத்திருக்கவும், மேட்டுகுடியின் எண்ணங்கள் உங்களிடம் தான் குவித்திருக்கு, மற்றவர்களுக்கு அறிவுரை செல்வதிலிருந்து, மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியா ஏதோ உங்களுக்குமட்டும் தெரிந்த மாதிரி, இந்த மாயையில் இருந்து வெளியில் வாருங்கள்,

நீங்கள் அறிவுரை சொல்லுமளவில் நீங்கள் ஒன்றும் பெரிய ஆளிலில்லை, அடக்கி வாசியுங்கள் உங்கள் அறிவுரைகளை. 

கேட்ட கேள்விகளுக்கு சும்மா காற்றில் கம்பு சுத்தவது, எந்த வித ஆதரங்களுமின்றி பதிவது கேட்டால் அங்கை பார் இங்கை பார் என சப்பை கட்டு கட்டுவது, முதலில் வதந்திகளை பரப்பாமல், நேர்மையாக எழுத பழுங்குங்கள், மற்றவனின் முதுகில் ஊத்தையை சொறிய முதல், உங்கள் முதுகில் சொறியப்பாருங்கள்,

நீங்கள் முழு சோம்பேறியாக இருந்தால் மற்றவர்களையும் சோம்பேறியென்று நினைக்கதேவையில்லை. உங்களின் சோம்பேறிதனத்திற்கு செய்திகளை திரித்து வதந்தியாக்க வேண்டாம். உங்களின் நிலையென்னவென்று உங்களுக்கு தெரியாதவரை நீங்கள் இந்த சோம்பேறிதனத்திலிருந்து விடுதலை கிடைக்காது

எங்கே ஒரு செய்தி காட்டுங்கள் புலிகளுக்கும் தலைவருக்கும் சமாதானத்தில் நாட்டமில்லையென்று. 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, உடையார் said:

உடையார், அலட்டாதீர்கள்! Restrictive ஆக உரையாடினால் மோகனுக்கு சேர்வர் காசு மிச்சம்!

1. போர் நிறுத்த மீறல்கள் இரு தரப்பாலும் நடந்ததா? என் பதில் ஆம், உங்கள் பதில் இல்லை

2. உங்கள் ஆதாரம்: ஒன்றுமில்லை! என் ஆதாரம்: அந்த நேரம் நான் இலங்கையில் இருந்தவாறு பார்த்த செய்தித்தாள்கள். (இப்போதும் நூலக தளத்தில் போய்ப்பார்க்கக் கூடிய நிலையில் இருப்பவை!) 

3. வேறெங்கே ஆதாரம்?: மனித உரிமை கண்காணிப்பக செய்தியறிக்கைகள். அவர்களது தளத்திலேயே உண்டு!

 இவ்வளவு தான் மேட்டர் உடையார், மிச்சமெல்லாம் gibberish!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

Justin அலட்டாதீர்கள் 😂, கேட்ட கேள்விக்கு ஆதாரத்துடன் கருத்து பதியவும்.

மோகண்ணா உங்களிடம் சொன்னவரா கருத்து பதிந்தால் தனக்கு செலவென்று ஆதாரமெங்கே அவரின் பதிவிற்கு😎 ,

முதலில் அலட்டாமல் நான் கேட்ட கேள்விக்கு பதிலை தரவும்

சரியான இணைப்பை ஆதாரத்துடன்  இணையுங்கள் மீண்டும் மீண்டும் சப்பை கட்டு கட்டுவதைவிட்டுவிட்டு

எங்கே ஒரு செய்தி காட்டுங்கள் புலிகளுக்கும் தலைவருக்கும் சமாதானத்தில் நாட்டமில்லையென்று. 

10 minutes ago, Justin said:

உடையார், அலட்டாதீர்கள்! Restrictive ஆக உரையாடினால் மோகனுக்கு சேர்வர் காசு மிச்சம்!

இந்த திரியில் அலட்டிக்கெண்டு ஆதரமின்றி திரிவது நீங்கள், இனிமேல் அலட்டாமல், சுருக்கமாக ஆதாரத்துடன் பதியவும், மற்றவனுக்கு சொல்லமுதல் நீங்கள் உங்களை சரி செய்ய பாருங்கள்,

இனிமேல் கருத்து எழுத முதல் 4-5 முறை வாசித்து சரியான தகவல்தான என சரி பார்த்து பதியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

 Restrictive / gibberish!

மற்றவனை தேடி படியென சொல்ல முதல் தமிழை / தாய் மொழியை படித்து கருத்து பதிய பழகுங்கள்😎, உங்களின் மேதாவிதனத்தை  காட்ட இது தளமல்ல, நாங்களும் பதிய வெளிக்கிட்டால்  இது தமிழ் களமாக இருக்காது 😎

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, உடையார் said:

மற்றவனை தேடி படியென சொல்ல முதல் தமிழை / தாய் மொழியை படித்து கருத்து பதிய பழகுங்கள்😎, உங்களின் மேதாவிதனத்தை  காட்ட இது தளமல்ல, நாங்களும் பதிய வெளிக்கிட்டால்  இது தமிழ் களமாக இருக்காது 😎

அகராதி இல்லையோ கைவசம்?

18 hours ago, Justin said:

உடையார், அலட்டாதீர்கள்! Restrictive ஆக உரையாடினால் மோகனுக்கு சேர்வர் காசு மிச்சம்!

1. போர் நிறுத்த மீறல்கள் இரு தரப்பாலும் நடந்ததா? என் பதில் ஆம், உங்கள் பதில் இல்லை

2. உங்கள் ஆதாரம்: ஒன்றுமில்லை! என் ஆதாரம்: அந்த நேரம் நான் இலங்கையில் இருந்தவாறு பார்த்த செய்தித்தாள்கள். (இப்போதும் நூலக தளத்தில் போய்ப்பார்க்கக் கூடிய நிலையில் இருப்பவை!) 

3. வேறெங்கே ஆதாரம்?: மனித உரிமை கண்காணிப்பக செய்தியறிக்கைகள். அவர்களது தளத்திலேயே உண்டு!

 இவ்வளவு தான் மேட்டர் உடையார், மிச்சமெல்லாம் gibberish!

https://www.tamilnet.com/art.html?artid=20455&catid=13

https://www.theguardian.com/world/2006/jun/26/srilanka

https://www.aljazeera.com/news/2005/8/5/a-curfew-on-tamils-following-officer-killing

போர் நிறுத்த உடன்படிக்கை இரு பகுதியினராலும் மீறப்பட்டன. இரு பகுதியும் தம்மை இராணுவரீதியில் பலப்படுத்தவே  பேச்சுவார்த்தையை பயன்படுத்தின. உண்மையான விருப்பத்தோடு பங்கு பற்றவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நன்றி ருல்பன். இணைப்புக் கிடைக்காததால் அல்ல நான் இணைக்கவில்லை! உலகம் முழுக்கத் தெரிந்த செய்திகளை தேடி அறிந்து அவற்றிலிருந்து ஒரு அபிப்பிராயத்தை உருவாக்க அவருக்கு முடிகிறதா என்று பார்த்தேன்!  

பதில் கிடைத்திருக்கிறது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

https://www.tamilnet.com/art.html?artid=20455&catid=13

https://www.theguardian.com/world/2006/jun/26/srilanka

https://www.aljazeera.com/news/2005/8/5/a-curfew-on-tamils-following-officer-killing

போர் நிறுத்த உடன்படிக்கை இரு பகுதியினராலும் மீறப்பட்டன. இரு பகுதியும் தம்மை இராணுவரீதியில் பலப்படுத்தவே  பேச்சுவார்த்தையை பயன்படுத்தின. உண்மையான விருப்பத்தோடு பங்கு பற்றவில்லை. 

துல்பன், உங்களுக்கு இந்த விடயம் 2009 முன்னரே தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

உலகம் முழுக்கத் தெரிந்த செய்திகளை தேடி அறிந்து அவற்றிலிருந்து ஒரு அபிப்பிராயத்தை உருவாக்க அவருக்கு முடிகிறதா என்று பார்த்தேன்!  

அவரா போர் நிறுத்த உடன்படிக்கை கிழித்து எறிந்துவிட்டு போரை உடனே தொடங்குங்கள் என்று புலிகளுக்கு கடிதம் எழுதி இருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை காலமும் புலிகள் குழப்பினர்,புலிகள் குழப்பினர் என்றார்கள். இப்ப இரு பகுதியும் குழப்பினர் எண்ட முடிவுக்கு வந்திட்டினம்......இனி ??
சிங்களவன்லை பிழை இல்லையெண்டு கொண்டுவந்து முடிப்பனம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இதுவரை காலமும் புலிகள் குழப்பினர்,புலிகள் குழப்பினர் என்றார்கள். இப்ப இரு பகுதியும் குழப்பினர் எண்ட முடிவுக்கு வந்திட்டினம்......இனி ??
சிங்களவன்லை பிழை இல்லையெண்டு கொண்டுவந்து முடிப்பனம்.

 இது போன்ற உங்களை உறுத்தும் விடயங்களை ஏன் பேசவும், இணைக்கவும் வேண்டி வருகிறது என்று இந்தத் திரியின் போக்கைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்:

1. போர் நிறுத்தம் பற்றி நான் ஒரு அபிப்பிராயம் சொல்கிறேன், அதற்கு ஆதாரம் சம்பவங்கள் நடந்த சமகாலத்தில் நான் பார்த்த செய்திகள் தான் என்கிறேன்.

2. உடையார் "ஆதாரத்தைத் தா, நான் போய் அந்த செய்திகளைப் பார்க்கப் போவதில்லை" என்கிறார். 

3. நான் தவிர்த்தாலும், அவர் சிவப்பு மை வார்னிங் கொடுக்கிறார்.😎

4. செய்தி இணைக்கப் படுகிறது.

இனி இது புலிகளை அவமானம் செய்யும் வலிந்த முயற்சி என்று மூக்குச் சிந்தல் நடக்கும். 

முன்யோசனையில்லாதவனுக்கு காலில் அசுத்தம் அப்பினால் மூன்று இடங்களில் அப்புமாம் என்று ஒரு பழ மொழி ஊரில் சொல்வார்கள் அண்ணை!

அது போலத் தான் இதுவும்!
 
  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 17:06, tulpen said:

யார் நிமலன் செளந்தரநாயகம்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?  இதுவரை அறியாததால் கேட்கிறேன் ரதி. 

https://ta.wikipedia.org/wiki/நிமலன்_சௌந்தரநாயகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.