Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை.

சித்ரா கன்னத்தில் இருந்த இரத்த காயம்! ஹொட்டலில் கணவருடன் நடந்தது என்ன? கசிந்த முக்கிய தகவல் -

நடிகை சித்ரா மரணமடைந்துள்ள நிலையில் அவருடன் இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த குமரன் இரங்கல் தெரிவித்துள்ளார். சித்ராவின் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவர் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தான் சித்ரா மிகவும் பிரபலமானார். அந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். அவருக்கு ஜோடியாக குமரன் என்பவர் கதிர் கதாபாத்திரத்தில் நடித்தார். சித்ராவின் மரணம் குமரனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக அவரின் பதிவில், உன்னுடைய துணிச்சலான குணத்திற்கு தான் நீ பெயர் பெற்றவள். பல பெண்களுக்கு நீ ஒரு உத்வேகமாக இருந்தாய். நீ திரும்ப போராடியிருக்க வேண்டும். இது பதில் அல்ல. இது எப்போதுமே அதற்கு பதில் அல்ல என்று வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.

தகவல் லங்காசிறி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....எந்நேரமும் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கும் சிறப்பான நடிகை......!  

  • கருத்துக்கள உறவுகள்

கொலை என மக்கள் சந்தேகம் கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் .. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ சினிமா நடிகர்கள், நடிகைகள் மரணம் அடைந்துள்ளார்கள், தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள், கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களது மரணங்கள் அத்தனை பெரிதாக மனதை வருத்தியதில்லை. ஆனால் சின்னத்திரை ஒன்றில் முல்லையாக நடித்த சித்திராவின் மரணமானது அதிகளவு பாசம்கொண்ட இரத்த உறவொன்றை இழந்ததுபோல் மனம் வாடி வதைகிறதே காரணம் என்ன? புரியவில்லையே! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

12 மில்லியன்  தொடர்பாளர்களை சமூக வலைத்தளத்தில் கொண்டிருக்கிறாராம். மிகவும் பிரபலமானவர் என தெரிகிறது. இவரை நடன நிகழ்ச்சி ஒன்றில் பார்த்திருக்கிறேன். நன்றாக நடனமும் ஆடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people

  • கருத்துக்கள உறவுகள்

நடிகைகள் தற்கொலையென கொல்லப்பட்டதே வரலாறு ஆகி விடுகிறது நான் தொலைக்காட்சி விளையாட்டு, டிஸ்கவரி சனலை தவிர எதுவும் பார்ப்பதில்லை அதனால் பிரச்சினை இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளங்கா நாடகங்கள் பிக் பொஸ் ஒரு கோதாரியும் வாழ் நாளில் பார்த்து அழுவது கிடையாது என்னை பொறுத்தவரை நாடக தொடர்கள் தமிழரின் சிந்தனையை மழுங்கடிக்கும் போதை .

சினிமா மூன்று மணிநேரத்துடன் ஆட்டம் குளோஸ் அதுவே அதில் நடிக்கும் பல்லி போன்ற கதாநாயகன் இரண்டு வெற்றி படம் கொடுத்தால் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று ஒன்று சொல்ல அதுவும் அலி(திருநங்கைகள்  மன்னிக்க ) போல் இழுவை இழுத்து கையை விசுக்குவதை பார்க்க கொடுமை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/12/2020 at 20:19, Paanch said:

எத்தனையோ சினிமா நடிகர்கள், நடிகைகள் மரணம் அடைந்துள்ளார்கள், தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள், கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களது மரணங்கள் அத்தனை பெரிதாக மனதை வருத்தியதில்லை. ஆனால் சின்னத்திரை ஒன்றில் முல்லையாக நடித்த சித்திராவின் மரணமானது அதிகளவு பாசம்கொண்ட இரத்த உறவொன்றை இழந்ததுபோல் மனம் வாடி வதைகிறதே காரணம் என்ன? புரியவில்லையே! 

ஐயா! பாண்டியன் ஸ்டோர்ஸ் எண்டால் சோறு தண்ணி இல்லாமல் சோபாவிலை ஓட்டியிடுவார் எண்டு நினக்கிறன்......அதாலதான் இந்த கவலை....

இந்தியாவிலை  சினிமா தொலக்காட்சி என்றாலே ஒரு கனவுத்தொழிற்சாலைதான். காசுக்கும் பஞ்சமில்லை.களியாட்டத்துக்கும் பஞ்சமில்லை. ரசிகர்களுக்கும் பஞ்சமில்லை. அதி அதி உச்சத்துக்கே ஏன் சூரியனையே தொட்டு விடுவார்கள். மூளைசாலிகள் தப்பிவிடுவார்கள். ஏமாளிகள் நடுக்கடலில் நிற்கதி போல் ஆகிவிடுவார்கள்.

அதிலும் இந்த சித்ராவின் வளர்ச்சி வேகம் அதிகமாம். அத்திவாரம் சரியில்லையாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

ஐயா! பாண்டியன் ஸ்டோர்ஸ் எண்டால் சோறு தண்ணி இல்லாமல் சோபாவிலை ஓட்டியிடுவார் எண்டு நினக்கிறன்......அதாலதான் இந்த கவலை....

சாமி...! சிலர் சொல்வதுபோலச் சோபாவோடை ஒட்டவைப்பதற்கு, பாண்டியன் இசுடோர் என்ன மலையாள மற்றும் மட்டக்களப்பு மாந்திரீகம் படித்ததா...?? ஏதோ பார்க்ககூடியதாக ஒரு கூட்டுக் குடும்பக்கதை ஓடுகிறதே என்று பார்த்தால்... லொள்ளுத்தான் கூடிப்போச்சு.🤔

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

ஐயா! பாண்டியன் ஸ்டோர்ஸ் எண்டால் சோறு தண்ணி இல்லாமல் சோபாவிலை ஓட்டியிடுவார் எண்டு நினக்கிறன்......அதாலதான் இந்த கவலை....

அவர் எப்படி சோபாவில ஒட்டுவார். சோபா பாண்டியன் ஸ்டோரில நடிக்க முன்பே இந்த முல்லை போலவே அகால மரணம் அடைந்தவர். விரும்பினால் தனத்தோடு ஒட்டியிடுவார் என்று சொல்லுங்கோ....அது அவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறன்.....!  🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

இந்த விளங்கா நாடகங்கள் பிக் பொஸ் ஒரு கோதாரியும் வாழ் நாளில் பார்த்து அழுவது கிடையாது என்னை பொறுத்தவரை நாடக தொடர்கள் தமிழரின் சிந்தனையை மழுங்கடிக்கும் போதை .

சினிமா மூன்று மணிநேரத்துடன் ஆட்டம் குளோஸ் அதுவே அதில் நடிக்கும் பல்லி போன்ற கதாநாயகன் இரண்டு வெற்றி படம் கொடுத்தால் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று ஒன்று சொல்ல அதுவும் அலி(திருநங்கைகள்  மன்னிக்க ) போல் இழுவை இழுத்து கையை விசுக்குவதை பார்க்க கொடுமை .

தம்பி பெருமாள்... கழிவுகளும், கோதாரிகளும் இல்லாது எந்த ஒரு  சின்னத்திரையோ, பெரியதிரையோ இல்லை. இரண்டிலுமே சிந்தனையை மழுங்கடிக்கும் போதைகளும் உள்ளன. இருந்தாலும் மனித வாழ்வுக்குத் தேவையான பல நல்ல விடயங்களையும்  அந்தத்  திரைகளிலிருந்து  மனிதர்கள்  கற்றுக் கொள்வதை மறுக்கமுடியாது. அன்னம் நீரைத் தவிர்த்துவிட்டு பாலைமட்டும் அருந்துவதுபோல். திரைகள் தரும் தப்பானவைகளை நீக்கிவிட்டு நல்லவற்றை மட்டும் உள்வாங்குவதற்கு மனதைப் பக்குவப்படுத்தி விட்டால்... தமிழர் மட்டுமல்ல வேறு எவரின் சிந்தனைகளையும் மழுங்கடிக்க முடியாது.

ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன், கழிவறைக்குப் போய்வந்தபின் எங்கள் நாட்டில் மற்றும் இந்தியாவில் கைகழுவும் பழக்கம் அரிதென்றே கூறலாம். ஒரு திரையில் கழிவறையிலிருந்து வெளிவந்து கைகழுவாமல் சென்ற தன் நண்பனைக் கதாநாயகன் திரும்பக் கூப்பிட்டுக் கைகழுவவைக்கும் காட்சி வருகிறது. அந்தக் காட்சி பல ஆயிரக்கணக்கான மக்களுக்குமேல், கழிவறையிலிருந்து வரும்போதெல்லாம் கைகழுவவேண்டும் என்ற உணர்வை ஊட்டிவிட்டதான செய்திகளும், பல மீடியாக்களில் வெளிவந்தன.   

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

எங்கள் நாட்டில் டொயிலட் போனால் கை கழுவும் பழக்கம் இருக்கவில்லையா? ஆச்சரியமாய் இருக்கு 
 
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரதி said:

எங்கள் நாட்டில் டொயிலட் போனால் கை கழுவும் பழக்கம் இருக்கவில்லையா? ஆச்சரியமாய் இருக்கு 
 
எனக்கும் அதிர்ச்சியாகத் தான் இருக்கு. இந்தியாவில் இருக்கும் பழக்கத்தை இலங்கைப் பக்கமும் இருப்பதாக நினத்து விட்டார் போல. 
சவர்க்காரம் தட்டுப் பாடாக இருந்த பொருளாதாரத்தடை காலத்தில் கூட நிவாரணம், சங்கக் கடை என்று தேடித் தேடி மக்கள் சவர்க்காரம் சேகரித்தது இதற்குத் தான் என்று, அங்கேயே இருந்தோருக்குத் தெரிந்திருக்கும்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எங்கள் நாட்டில் டொயிலட் போனால் கை கழுவும் பழக்கம் இருக்கவில்லையா? ஆச்சரியமாய் இருக்கு 
 
1 hour ago, Justin said:

சிப்பைக் கீழிழுத்து சிறியவர் சீறியபின் மேலிழுத்துவிட்டு, அப்படியே கதவுதிறந்து வெளியேறுபவர்களை இலங்கையிலும், இந்தியாவிலும் இன்றும் காணலாம் என்று எண்ணுகிறேன்.

மன்னிக்க வேண்டும் ரதி அவர்களே..! இதனை மங்கையர்கள் பார்த்து அறிய அனுமதி இல்லை.!! 

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2020 at 17:13, பெருமாள் said:

இந்த விளங்கா நாடகங்கள் பிக் பொஸ் ஒரு கோதாரியும் வாழ் நாளில் பார்த்து அழுவது கிடையாது என்னை பொறுத்தவரை நாடக தொடர்கள் தமிழரின் சிந்தனையை மழுங்கடிக்கும் போதை .

சினிமா மூன்று மணிநேரத்துடன் ஆட்டம் குளோஸ் அதுவே அதில் நடிக்கும் பல்லி போன்ற கதாநாயகன் இரண்டு வெற்றி படம் கொடுத்தால் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று ஒன்று சொல்ல அதுவும் அலி(திருநங்கைகள்  மன்னிக்க ) போல் இழுவை இழுத்து கையை விசுக்குவதை பார்க்க கொடுமை .

பெருமாள்,

உங்களை, காஸ்ரோ, சேகுவாரோ, மாவோ,  போல மிகச்சிலர்தான் சதா சமூக விடுதலை, இன விடுதலை என்று கருமமாற்றும் உத்தம மனிதர்கள்.

மிகுதியான நம்மை போன்ற சாதாரணர்களுக்கு வாழ்க்கையில் இப்படியான கேளிக்கைகளும் தேவை.

எனக்கும் படத்தில் நாடகத்தில் பிடிப்பில்லை. பிக்பாசில் சாதி முதல் பல சமூக விடயங்கள் அலசபடுவதால், கமல் நல்ல புத்தகங்களை பற்றி கதைப்பதால் அதை இடைக்கிடை பார்ப்பேன். இந்த முறை அதுவும் இல்லை.

பிகு: ஆகச்சிறந்த உழைப்பாளிகளில் ஒருவரான பிரபாகரன் ஒரு நல்ல திரைபட ரசிகர். இறுதிவரை. டைக்ரக்டர் மகேந்திரனின் பேட்டியை பார்த்தால் விளங்கும். அவரை விடவா நமக்கு தலைக்கு மேல் விடுதலை சம்பந்தபட்ட வேலை?

2 hours ago, ரதி said:

எங்கள் நாட்டில் டொயிலட் போனால் கை கழுவும் பழக்கம் இருக்கவில்லையா? ஆச்சரியமாய் இருக்கு 
 
1 hour ago, Justin said:

எனக்கும் அதிர்ச்சியாகத் தான் இருக்கு. இந்தியாவில் இருக்கும் பழக்கத்தை இலங்கைப் பக்கமும் இருப்பதாக நினத்து விட்டார் போல. 
சவர்க்காரம் தட்டுப் பாடாக இருந்த பொருளாதாரத்தடை காலத்தில் கூட நிவாரணம், சங்கக் கடை என்று தேடித் தேடி மக்கள் சவர்க்காரம் சேகரித்தது இதற்குத் தான் என்று, அங்கேயே இருந்தோருக்குத் தெரிந்திருக்கும்! 

நம்பர் 2 இல்லை.

நம்பவர் 1 போனால் அப்படியே எழுந்து போகும் பழக்கம் பரவலாக ஊரில் உண்டு. இப்போது போகும் போதும் அவதானிப்பேன்.

பலர் போகும் வழியில் மரத்தடியில் மேட்டரை முடித்து விட்டு போவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் வெள்ளி இரவுகளில் யூகேயின் நகர வீதிகளில் ஓடுவதை போல் ஊரில் பெருக்கெடுத்து ஓடுவதும் இல்லை🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

ஆனால் வெள்ளி இரவுகளில் யூகேயின் நகர வீதிகளில் ஓடுவதை போல் ஊரில் பெருக்கெடுத்து ஓடுவதும் இல்லை🤣

அப்படியா? கோசான் சே அவர்களே! எப்படித்தான் எங்கள் அம்மணி தேம்சு நதிக்கரையோரம் வெள்ளி இரவுகளில் படுத்து உறங்குகின்றாரோ...!! 🤧

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது பெரியம்மாவிடம் ஒருவரிடம் போன் பண்ணி  நலம் விசாரிக்க தொடங்கியதும்   சித்ரா இறந்தது பற்றியே விளக்க உரை சொல்லி கொண்டிருந்தார் எனக்கு யாழ்களத்தில் சித்ரா தற்கொலை என்ற செய்தி பார்த்து தான் இப்படி ஒருவர் இருந்ததே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நான் எனது பெரியம்மாவிடம் ஒருவரிடம் போன் பண்ணி  நலம் விசாரிக்க தொடங்கியதும்   சித்ரா இறந்தது பற்றியே விளக்க உரை சொல்லி கொண்டிருந்தார் எனக்கு யாழ்களத்தில் சித்ரா தற்கொலை என்ற செய்தி பார்த்து தான் இப்படி ஒருவர் இருந்ததே தெரியும்.

நல்ல வேளையாக அடுத்த மாதம் பெரியம்மாவுடன் கதைக்கும் போது சித்திராவின் அந்தியட்டிக்கு போகேல்லயோ என்று கேட்டிருப்பியள்🤣

  • கருத்துக்கள உறவுகள்

முதல் படமே கடைசி படமான சோகம்.... சித்ரா ஹீரோயினாக நடித்த படம் விரைவில் ரிலீஸ்

முதல் படமே கடைசி படமான சோகம்.... சித்ரா ஹீரோயினாக நடித்த படம் விரைவில் ரிலீஸ்

இன்பைனைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த "கால்ஸ்" என்ற திரைப்படம் கடந்த 2019 ஜூலை மாதம் நடிகர் டெல்லி கணேஷ் அவர்களால் பூஜையுடன் துவங்கி தஞ்சாவூர், திருச்சி , சென்னை, வாரணாசி என பல இடங்களில்  படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த படத்தில் விஜே சித்ரா கதாநாயகியாகவும், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இயக்குனர் ஜெ.சபரிஸ் இயக்கி, தமீம் அன்சாரி இசையமைத்த இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு (2020) ஜனவரி மாத இறுதியில் நிறைவடைந்தது. 

இதையடுத்து படத்தின் பின்னணி பணிகள் முழுவீச்சில் நடந்த நிலையில், ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட  திட்டமிடப்பட்டது. கொரோனா காரணமாக மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட இறுதிக்கட்ட பணிகள், செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் வேகமாக தொடங்கி டிசம்பர் 13, பர்ஸ்ட் லுக் ரிலீஸ், ஜனவரி 1 (2021)  டிரெய்லர் ரிலீஸ் மற்றும் ஜனவரி இறுதியில்  திரைப்படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டது. 

கால்ஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஆனால் அதற்குள் எதிர்பாராத விதமாக படத்தின் கதாநாயகி விஜே சித்ரா காலமானார். அவரின் கனவு வெள்ளித்திரையில் தன்னை காண வேண்டும் என்பது, அதற்குள் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இருப்பினும் அவருடைய விருப்பத்தின் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிட்டபடி  இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/13140441/2158558/Tamil-cinema-chitra-debut-movie-calls.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

நான் எனது பெரியம்மாவிடம் ஒருவரிடம் போன் பண்ணி  நலம் விசாரிக்க தொடங்கியதும்   சித்ரா இறந்தது பற்றியே விளக்க உரை சொல்லி கொண்டிருந்தார் எனக்கு யாழ்களத்தில் சித்ரா தற்கொலை என்ற செய்தி பார்த்து தான் இப்படி ஒருவர் இருந்ததே தெரியும்.

நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கும்.... அதனால்தான் உங்களுக்கு மற்றவர்களை, அதுவும் பிரபலங்களைக்கூடத் தெரிய வரவில்லை. பெயரை மாற்றிக்கொள்ளுங்கள், அனைவரையும் நொடியில் விளங்கிக் கொள்ளலாம்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கும்.... அதனால்தான் உங்களுக்கு மற்றவர்களை, அதுவும் பிரபலங்களைக்கூடத் தெரிய வரவில்லை. பெயரை மாற்றிக்கொள்ளுங்கள், அனைவரையும் நொடியில் விளங்கிக் கொள்ளலாம்.

உங்களுக்கு பிடித்தமான சித்ராவை தெரியவில்லை பெயரை மாற்றிக்கொண்டால் நொடியில் விளங்கிக் கொள்ளலாம் உங்கள் பொக்கிசமான அறிவுரை.   நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கும் என்று நீங்கள் சொன்னதால் உங்களுக்கு பிடித்தமான சித்ராவை எனக்கு தெரியாத காரணத்தால் வேலையால் நிறுத்தி வெளியேற்றி விடுவார்களோ என்று பயந்து போய் இருக்கிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.