Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு

கொரோனா வைரசினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துள்ளனர்.
பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளனர்.

தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் எனினும் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு – Thinakkural

  • கருத்துக்கள உறவுகள்

மத நம்பிக்கையை கூறி, குழந்தையின் சடலத்தை... ஏற்க மறுத்ததும், ஒரு வகை “பிளாக் மெயில்” தான்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை எரிப்பதில், என்ன இன்பம் கண்டார்கள் இவர்கள்...?

Untitled.png

தாயே, என் சின்னக் கைகள்

மெல்லப் பொசுங்கிற்று.

உன் மார்பில் புதைந்து

பருகிய இறுதி மிடருப் பாலும்

கரியாகிக் காவியாகிக் 

கரைந்து போயிற்று.

தூக்கமில்லாமல் அழும்போது

என் தலை முடியைத் தடவுவாயே.

அதுவும் எல்லையில்லா நெருப்பில்

எரிந்து சாம்பலாகிற்று.

என் பிஞ்சுக் கையில்

நீ விரலை வைப்பாய்.

அதைத் தூக்கத்திலும் நான் இறுக்கிப்  

பிடிப்பேனே.அதுவும் சேர்ந்து

எரிந்து விழுந்திற்று.

புன் சிரிப்பு உதடும்

பால் வெள்ளைப் பல்லும்

கண் சிமிட்டும் இமையும்

களவில்லா நெஞ்சும்

பிஞ்சுதிரும் பாதமும்

கருகிக் கருகிக் கட்டையாய்ப்

போயிற்று.

வெயிலுக்கே வலிக்குமே  

எனக்கு.

வெந்தணலில் போட்டு

வேக வைத்தார்கள் தாயே,

என்ன செய்வேன் நான்.

.புரியவை தாயே.

எனக்குப் புரியவை.

20 நாட்கள்தான் 

இந்த உலகத்தைக் கண்டேன்.

என்னை எரிப்பதில்

என்ன இன்பம் 

கண்டார்கள் இவர்கள்.

வலித்தது தாயே

வலித்தது.

உடெம்பெல்லாம் 

நெருப்புச் சூழ்ந்து 

நெஞ்சை எரித்தது.

யாரை வெட்டின என் விரல்கள்?

யாரைக் கொன்றன என் கைகள்?

பசியென்று கூடப் பேசத் தெரியாத

பிஞ்சு நான்.

யாருக்கு நஞ்சூட்டினேன் என்று 

என்னை எரித்தார்கள்? 

நான் வாழவும் இல்லை.

வளரவும் இல்லை.

சாம்பலாகி இன்று

சட்டிக்குள்

இருக்கிறேன்.

எரிந்த என் எலும்புகள் 

முறிந்த சத்தம் கேட்டதா தாயே.

நான் தவழ்ந்து வரும் முழங்கால்கள்

உடைந்து விழுந்தன.கண்டாயா?

தொட்டிலில் தாலாட்டில்

விரல் சூப்பி உறங்கிய எனக்கு

செந்தணல் படுக்கையில் 

நெருப்புக் காற்று

தாலாட்டினால்

என்ன செய்வேன்.

சொல்வேன் தாயே சொல்வேன்.

நீ அனுப்பிய வேகத்திலே 

வந்து விட்டேன் ஆண்டவா,

என்னை எரித்தவர்கள்,

அவர்களுக்கு ஏதுவாய் இருந்த 

எம்மவர்கள் எவரெவர் என்று

சொல்வேன் தாயே.

என்னை வாழத்தான் விடவில்லை.

சாகவும் விடாதவர்களுக்கு 

நான் சாட்சியம் சொல்லுவேன்.

முடமாகிப் போன

அவர்கள் நாவுகளின்

மீது எரித்த என் சாம்பலைத்

தூவுவேன்.

உறங்குபவர்கள் உங்களில்

ஒருவர் இல்லையா தாயே,

எரிந்தவர்கள் எங்களுக்காய்

எழும்புவதற்கு?

எரித்தது நெருப்பல்ல தாயே.

உங்கள் மௌனம்தான்.

எரிந்தது நான் அல்ல தாயே 

நீங்கள்தான்.

- ராஸி முஹம்மது -

http://www.jaffnamuslim.com/2020/12/blog-post_369.html

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் தம்பதியினரின் 20 நாள்; குழந்தையின் உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த அப்பாவி 20 நாள் குழந்தை தனது உடல் தகனம் செய்யப்படுமளவிற்கு செய்த பாவம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் மனமுடைந்துள்ளேன் வெறுப்புணர்வின் எல்லைiயை கடந்துவிட்டேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாம் இன்னும் எவ்வளவு கொடுமையையும் காட்டுமிராண்டித்தனத்தையும் சகித்துக்கொள்ளவேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்ஃ

ali-zahir-1-300x300.jpg
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது
நேற்று வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் தந்தையான பாஹிமுடன் நான் உரையாடினேன்.
லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு திங்கட்கிழமை பத்துமணிக்கு குழந்தையை எடுத்துச்சென்றவேளை மருத்துவர்கள் குழந்தையை அன்டிஜென் துரிதசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அந்த சோதனையின் போது குழந்தை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
எனினும் பாஹிமும் அவரது மனைவியும் பாதிக்கப்படவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.
தனது குழந்தை கொரோhனவினால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து கலக்கமடைந்த பாஹிம் அன்டிஜென் சோதனை முடிவுகள் பிழையாக காணப்படுவதும் குறி;த்தும் அறிந்திருந்தார். இதன் காரணமாக அவர் தனது குழந்தையை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துமாறு மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
எனினும் அதனை ஏற்க மறுத்த மருத்துவர்கள் தனியார் வைத்தியசாலையில் பிசிஆர் சோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.
பாஹிம் முடக்கப்பட்ட பகுதியில் வாழும் முச்சக்கர வண்டி சாரதி, அவரிடம் அதற்கான வசதியில்லை,எனினும் அவர் சிலரை தொடர்புகொண்டு இதனை தெரிவித்தவேளை அவர்கள் பிசிஆர் சோதனைக்கு உதவ முன்வந்துள்ளனர்.

lady-ridgway.jpg
அன்டிஜென் சோதனை அறிக்கைக்காக அவர் காத்திருந்தவேளை – மற்றுமொரு மருத்துவமனையில் அவர் பிசிஆர் சோதனைக்காக காத்திருந்தவேளை அவரை மருத்துவமனையிலிருந்து செல்லுமாறும் அதிகாலை வருமாறும் மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ளவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன்காரணமாக குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு பாஹிம் தனது மனைவியுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பிசிஆர் சோதனைக்கான பணவசதி இல்லாதநிலையில் தடுமாற்றமடைந்த பாஹிம் மருத்துவமனையை தொடர்புகொண்டவேளை அவர்கள் அவரது குழந்தையை தீவிரகிசிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 5.30 மணிக்கு மருத்துமனையை அவர் தொடர்புகொண்டவேளை குழந்தை இறந்த செய்தியை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஹிம் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றவேளை மருத்துவர் அவர் சில ஆவணங்களில் கைச்சாத்திடவேண்டுமென கேட்டுள்ளார்.
பாஹிம் அதற்கு மறுத்தவேளை அந்த மருத்துவர் ஆவணத்தில் கையெழுத்திடுவதை தவிர வேறு வழியில்லை என்ற அர்த்தப்படமிரட்டியுள்ளார்.
மனமுடைந்த துயரத்தில் சிக்குண்ட தந்தை தனது 20 நாள் குழந்தையின் உடலை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு செல்ல தீர்மானித்துள்ளார்.
அன்று மதியம் அவருக்கு மருத்துவமனையிலிருந்து பல அழைப்புகள் வந்துள்ளன அவர் ஆவணத்தில் கைச்சாத்திடவேண்டுமென அவர்கள் கேட்டுள்ளனர்.

Corona-1st-death-in-Sri-Lanka--300x181.j
துயரம் அதிகரித்த நிலையில் பாஹிம் தனது சகோதரர் ரிவ்கானை அதிகாரிகளுடன் பேசுவதற்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.ஆனால் மருத்துவமனை அதிகாரிகள் தொடர்ந்தும் பிடிவாதமாக காணப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக ரிவ்கான் தன்னால் கைச்சாத்திடமுடியாது என தெரிவித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.
அவ்வேளை மருத்துவமனையில் பல ஊடகவியலாளர்கள் நடமாடியதை பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் மருத்துவமனையிலிருந்து பாஹிமை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டவர்கள் அவரின் குழந்தையின் உடலை பொரரள மயானத்திற்கு தகனத்திற்கு கொண்டுசெல்வதாக தெரிவித்துள்ளனர். தந்தை விரும்பினால் அங்கு வரலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஹிம் தனது நண்பர்கள் சிலருடன் மயானத்திற்கு சென்றுள்ளார் ஆனால் தனது மகனின் உடல் தகனம் செய்யப்படுவதை பார்க்க விரும்பாததால் அவர் உள்ளே செல்லவில்லை.
அங்கும் அவர் ஊடகங்களின் அதீதமான செயற்பாடுகளை அவதானித்துள்ளார்.

தனது உடல் தகனம் செய்யப்படுமளவிற்கு 20 நாள் குழந்தைசெய்த பாவம் என்ன? நாம் இன்னும் எவ்வளவு கொடுமையையும் காட்டுமிராண்டித்தனத்தையும் சகித்துக்கொள்ளவேண்டும்? டுவிட்டரில் அலிஷாஹிர் மௌலானா கேள்வி? – Thinakkural

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் எந்த அவசியமும் அற்ற நடவடிக்கைகள். குழந்தையை இழந்தவர்களை மேலும் துன்பப்படுத்தும் செயல்களைச் செய்திருக்கிறார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எரிப்பதால் கொரோனா பரவும் என அரசு நினைக்கிறதா அல்லது முஸ்லிம்கள் கேட்டதை கொடுக்க கூடாது என்ற மமதையில் செய்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

எரிப்பதால் கொரோனா பரவும் என அரசு நினைக்கிறதா அல்லது முஸ்லிம்கள் கேட்டதை கொடுக்க கூடாது என்ற மமதையில் செய்கிறதா?

இல்லையே நுணா .. குழந்தையை தகனம் (எரித்து) தானே இருக்கிறார்கள். அரசாங்கம் புதைப்பதை தான் (நல்லடக்கத்தை) எதிர்க்கிறார்கள் போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பதில் எழுதுவதில் விருப்பம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எல்லோரையும் திருப்திப்படுத்தவும் வேண்டுமென்றால் எப்படி.. ? 

நிர்வாகிகளுக்க முதிர்ச்சியில்லை என்று கொள்வதா அல்லது நிர்வாகிகள் த்ங்களுக்கு எல்லாமே தெரியும் என நினைக்கிறார்கள் என எடுப்பதா.. ☹️

உண்மையாகவே மனமில்லை... 

இதே வேகத்தில் போனால் மிக விரைவில் இதிலிருந்து வெளியேற வேண்டியதுதான். 

வேறு தெரிவில்லை.. ☹️☹️☹️☹️☹️

(இதைப்பார்க்கும்பலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

இல்லையே நுணா .. குழந்தையை தகனம் (எரித்து) தானே இருக்கிறார்கள். அரசாங்கம் புதைப்பதை தான் (நல்லடக்கத்தை) எதிர்க்கிறார்கள் போல உள்ளது.

மாறி எழுதி விட்டேன். மேற்கு நாடுகளில் புதைக்கிறார்கள், எரிக்கிறார்கள். சுற்றத்தார் ஒரு சிலரை தவிர யாரும் பங்கேற்க முடியாது. சிறிலங்காவில் எந்த ஆய்வின் படி புதைக்க கூடாது என்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

மாறி எழுதி விட்டேன். மேற்கு நாடுகளில் புதைக்கிறார்கள், எரிக்கிறார்கள். சுற்றத்தார் ஒரு சிலரை தவிர யாரும் பங்கேற்க முடியாது. சிறிலங்காவில் எந்த ஆய்வின் படி புதைக்க கூடாது என்கிறார்கள்?

ஒரு ஆய்வும் கிடையாது, இது முஸ்லிம்களை பழி வாங்க வீம்பாகச் செய்கின்றனர்.

WHO அறிவுரைப் படி 6 அடியில் புதைக்கலாம், ஆனால் உள்ளூர் விதிமுறை override செய்யலாம் என்ற ஏற்பாட்டை துஷ்பிரயோகம் செய்கின்றனர். இறந்த உடலில் இருந்து வைரசு பரவியதாக பெரிய செய்திகள் எவையும் இல்லை!

20 minutes ago, Kapithan said:

எனக்கு பதில் எழுதுவதில் விருப்பம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எல்லோரையும் திருப்திப்படுத்தவும் வேண்டுமென்றால் எப்படி.. ? 

நிர்வாகிகளுக்க முதிர்ச்சியில்லை என்று கொள்வதா அல்லது நிர்வாகிகள் த்ங்களுக்கு எல்லாமே தெரியும் என நினைக்கிறார்கள் என எடுப்பதா.. ☹️

உண்மையாகவே மனமில்லை... 

இதே வேகத்தில் போனால் மிக விரைவில் இதிலிருந்து வெளியேற வேண்டியதுதான். 

வேறு தெரிவில்லை.. ☹️☹️☹️☹️☹️

(இதைப்பார்க்கும்பலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன்.)

கப்ரன், 

சும்மா ஒரு நாள் ஒய்வெடுத்து விட்டு வாருங்கள். விதிமுறைகளுக்குட்பட்டு இருக்கப் பாருங்கள். அங்க இங்க பிசகினால் பதிவை நீக்குவார்கள், என்ன பெரிய இழப்பு? இதுக்கெல்லாம் சோர்வதா ஐயா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ஒரு ஆய்வும் கிடையாது, இது முஸ்லிம்களை பழி வாங்க வீம்பாகச் செய்கின்றனர்.

WHO அறிவுரைப் படி 6 அடியில் புதைக்கலாம், ஆனால் உள்ளூர் விதிமுறை override செய்யலாம் என்ற ஏற்பாட்டை துஷ்பிரயோகம் செய்கின்றனர். இறந்த உடலில் இருந்து வைரசு பரவியதாக பெரிய செய்திகள் எவையும் இல்லை!

திட்டமிட்டு பழி வாங்குகிறார்கள். அரசுடன், எதிர்கட்சியில் இருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் பேசாமல் இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தனது உடல் தகனம் செய்யப்படுமளவிற்கு 20 நாள் குழந்தைசெய்த பாவம் என்ன? நாம் இன்னும் எவ்வளவு கொடுமையையும் காட்டுமிராண்டித்தனத்தையும் சகித்துக்கொள்ளவேண்டும்? டுவிட்டரில் அலிஷாஹிர் மௌலானா கேள்வி?

முஸ்லீம் தம்பதியினரின் 20 நாள்; குழந்தையின் உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த அப்பாவி 20 நாள் குழந்தை தனது உடல் தகனம் செய்யப்படுமளவிற்கு செய்த பாவம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் மனமுடைந்துள்ளேன் வெறுப்புணர்வின் எல்லைiயை கடந்துவிட்டேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாம் இன்னும் எவ்வளவு கொடுமையையும் காட்டுமிராண்டித்தனத்தையும் சகித்துக்கொள்ளவேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்ஃ

ali-zahir-1-300x300.jpg
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது
நேற்று வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் தந்தையான பாஹிமுடன் நான் உரையாடினேன்.
லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு திங்கட்கிழமை பத்துமணிக்கு குழந்தையை எடுத்துச்சென்றவேளை மருத்துவர்கள் குழந்தையை அன்டிஜென் துரிதசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அந்த சோதனையின் போது குழந்தை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
எனினும் பாஹிமும் அவரது மனைவியும் பாதிக்கப்படவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.
தனது குழந்தை கொரோhனவினால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து கலக்கமடைந்த பாஹிம் அன்டிஜென் சோதனை முடிவுகள் பிழையாக காணப்படுவதும் குறி;த்தும் அறிந்திருந்தார். இதன் காரணமாக அவர் தனது குழந்தையை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துமாறு மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
எனினும் அதனை ஏற்க மறுத்த மருத்துவர்கள் தனியார் வைத்தியசாலையில் பிசிஆர் சோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.
பாஹிம் முடக்கப்பட்ட பகுதியில் வாழும் முச்சக்கர வண்டி சாரதி, அவரிடம் அதற்கான வசதியில்லை,எனினும் அவர் சிலரை தொடர்புகொண்டு இதனை தெரிவித்தவேளை அவர்கள் பிசிஆர் சோதனைக்கு உதவ முன்வந்துள்ளனர்.

lady-ridgway.jpg
அன்டிஜென் சோதனை அறிக்கைக்காக அவர் காத்திருந்தவேளை – மற்றுமொரு மருத்துவமனையில் அவர் பிசிஆர் சோதனைக்காக காத்திருந்தவேளை அவரை மருத்துவமனையிலிருந்து செல்லுமாறும் அதிகாலை வருமாறும் மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ளவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன்காரணமாக குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு பாஹிம் தனது மனைவியுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பிசிஆர் சோதனைக்கான பணவசதி இல்லாதநிலையில் தடுமாற்றமடைந்த பாஹிம் மருத்துவமனையை தொடர்புகொண்டவேளை அவர்கள் அவரது குழந்தையை தீவிரகிசிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 5.30 மணிக்கு மருத்துமனையை அவர் தொடர்புகொண்டவேளை குழந்தை இறந்த செய்தியை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஹிம் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றவேளை மருத்துவர் அவர் சில ஆவணங்களில் கைச்சாத்திடவேண்டுமென கேட்டுள்ளார்.
பாஹிம் அதற்கு மறுத்தவேளை அந்த மருத்துவர் ஆவணத்தில் கையெழுத்திடுவதை தவிர வேறு வழியில்லை என்ற அர்த்தப்படமிரட்டியுள்ளார்.
மனமுடைந்த துயரத்தில் சிக்குண்ட தந்தை தனது 20 நாள் குழந்தையின் உடலை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு செல்ல தீர்மானித்துள்ளார்.
அன்று மதியம் அவருக்கு மருத்துவமனையிலிருந்து பல அழைப்புகள் வந்துள்ளன அவர் ஆவணத்தில் கைச்சாத்திடவேண்டுமென அவர்கள் கேட்டுள்ளனர்.

Corona-1st-death-in-Sri-Lanka--300x181.j
துயரம் அதிகரித்த நிலையில் பாஹிம் தனது சகோதரர் ரிவ்கானை அதிகாரிகளுடன் பேசுவதற்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.ஆனால் மருத்துவமனை அதிகாரிகள் தொடர்ந்தும் பிடிவாதமாக காணப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக ரிவ்கான் தன்னால் கைச்சாத்திடமுடியாது என தெரிவித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.
அவ்வேளை மருத்துவமனையில் பல ஊடகவியலாளர்கள் நடமாடியதை பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் மருத்துவமனையிலிருந்து பாஹிமை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டவர்கள் அவரின் குழந்தையின் உடலை பொரரள மயானத்திற்கு தகனத்திற்கு கொண்டுசெல்வதாக தெரிவித்துள்ளனர். தந்தை விரும்பினால் அங்கு வரலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஹிம் தனது நண்பர்கள் சிலருடன் மயானத்திற்கு சென்றுள்ளார் ஆனால் தனது மகனின் உடல் தகனம் செய்யப்படுவதை பார்க்க விரும்பாததால் அவர் உள்ளே செல்லவில்லை.
அங்கும் அவர் ஊடகங்களின் அதீதமான செயற்பாடுகளை அவதானித்துள்ளார்.

https://thinakkural.lk/article/96934

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு

முஸ்லிம் மதசட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்பதினால் தங்கள் சொந்த குழந்தையின் உடலை கூட பொறுப்பேற்க மறுக்கிறார்கள் இவர்கள்.  கிறிஸ்தவர்கள் மிக அதிகமாக வாழும் அவுஸ்ரேலியா நியுசிலாந்து மற்றும் கிறிஸ்தவ நாடுகளிலேயே அவர்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில்  இல்லாமல் சாதாரணமாகவே இறந்த உடல்களை எரிக்கும் முறை அதிகரித்து வருகிறது. முஸ்லிம்கள் கொரோனாவினால் இறந்த உடல்களை மட்டுமே எரிக்க வேண்டும் என்பதிற்கே மதத்திற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

எனக்கு பதில் எழுதுவதில் விருப்பம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எல்லோரையும் திருப்திப்படுத்தவும் வேண்டுமென்றால் எப்படி.. ? 

நிர்வாகிகளுக்க முதிர்ச்சியில்லை என்று கொள்வதா அல்லது நிர்வாகிகள் த்ங்களுக்கு எல்லாமே தெரியும் என நினைக்கிறார்கள் என எடுப்பதா.. ☹️

உண்மையாகவே மனமில்லை... 

இதே வேகத்தில் போனால் மிக விரைவில் இதிலிருந்து வெளியேற வேண்டியதுதான். 

வேறு தெரிவில்லை.. ☹️☹️☹️☹️☹️

(இதைப்பார்க்கும்பலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன்.)

கூல் டவுன் கப்ஸ். நானெல்லாம் பக்கம் பக்கமா எழுதியதை எல்லாம் கத்திரிக்கு காவு கொடுத்து விட்டு கலங்காமல் நிற்கவில்லையா?

அழுத காதலி அண்ணான்னு சொன்னா....🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இல்லை சே,

ஆகக் குறைந்த அதிருப்தியையேனும் வெளிக்காட்ட அனுமதிக்கிறார்கள் இல்லை. பிறகேன் யாழ் களம்.. 🤔

""அலிசாகிர் மெளலானாவிற்கு"" கருத்தெழுதினாலும் வெட்டுத்தான். 

சகிக்க முடியவில்லை... 😡

வெட்டுறுத்தினர்கள் என்ன நினைப்பில் இருக்கினமோ தெரியாது... ☹️

ஆனால் எனது கருத்துக்களை எந்தவித விளக்கமோ அறிவுறுத்தல்களோ இன்றி வெட்டுறுத்தினார்களாயின் வெளியேறுவது நிச்சயம்.... 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்ன நடக்குது என்று பாப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

இல்லை சே,

ஆகக் குறைந்த அதிருப்தியையேனும் வெளிக்காட்ட அனுமதிக்கிறார்கள் இல்லை. பிறகேன் யாழ் களம்.. 🤔

""அலிசாகிர் மெளலானாவிற்கு"" கருத்தெழுதினாலும் வெட்டுத்தான். 

சகிக்க முடியவில்லை... 😡

வெட்டுறுத்தினர்கள் என்ன நினைப்பில் இருக்கினமோ தெரியாது... ☹️

ஆனால் எனது கருத்துக்களை எந்தவித விளக்கமோ அறிவுறுத்தல்களோ இன்றி வெட்டுறுத்தினார்களாயின் வெளியேறுவது நிச்சயம்.... 😎

தனி மடலில் அல்லது நாற்சந்தியில் விளக்கம் கேட்டுப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

முஸ்லீம் தம்பதியினரின் 20 நாள்; குழந்தையின் உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த அப்பாவி 20 நாள் குழந்தை தனது உடல் தகனம் செய்யப்படுமளவிற்கு செய்த பாவம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் மனமுடைந்துள்ளேன் வெறுப்புணர்வின் எல்லைiயை கடந்துவிட்டேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாம் இன்னும் எவ்வளவு கொடுமையையும் காட்டுமிராண்டித்தனத்தையும் சகித்துக்கொள்ளவேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்ஃ

என்ன மௌலி செய்வது 
எசமான் பாசத்தில் உழைத்த உழைப்பெல்லாம் வீணா போச்சே,நசுக்கல் ரணிலின்  கத்தியை கொண்டு போகும் போது இந்த கத்தி ஒருநாள் நமக்கெதிராக திரும்பினால் என்ன நடக்கும் என்று யோசிக்கவில்லையே,
இப்போ புர்க்காவிற்குள்ளும் மூஞ்சை விடுறானுவ ,ஹலாலிற்குள்ளும் மூஞ்சை விடுறானுவ, பள்ளிவாசலிற்குள் நெருப்பை விடுறானுக, செத்து போய் புதைக்கபோகும்  பிணத்தைசோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு புலம்பும் அளவிற்கு அலற விடுறானுவ. அந்த உழைப்பை தமிழர் பக்கம் போட்டிருந்தால் காலரை தூக்கி விட்டு ராஜாவாக இருந்திருக்கலாம்   

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஆனாலும் விடிவெள்ளிக்கு உயிர் பிச்சை கொடுத்த அவரின் சகலையை இப்படி நக்கல் அடிப்பது அழகல்ல.

🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனாலும் விடிவெள்ளிக்கு உயிர் பிச்சை கொடுத்த அவரின் சகலையை இப்படி நக்கல் அடிப்பது அழகல்ல.

என்ன அண்ணை செய்வது 
விடிவெள்ளிக்கு அரசியல் களத்திற்கு ரீஎண்ட்ரி கொடுத்து அவரை எல்லாம் பெரியாளாக்கி விட்ட 
கூத்தமைப்பு தேசிக்காய்களையே நாங்கள் விட்டு வைப்பதில்லை , மௌலியெல்லாம் எங்களுக்கு  ஒரு மேட்டரா டம்மிபீஸு, அதுதான் தெறிக்க விடுறோம்  

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் பரவும் போது நாட்டை முடக்கி வைத்து பாதுகாப்பாக வைத்தார்கள் இன்று நாடு ஊர் முழுவதும் பரவி உள்ளது இன்று அம்பாறை மாவட்டம் அக்கறைப்பற்று , கல்முனை அட்டாளைசேனை, ஆலயடி வேம்பு போன்ற பகுதிகளும் இன்று சாய்ந்தமருதும் பரவியுள்ளது இனி கேள்விக்குறிதான் இருந்தாலும் குழந்தை எரிப்பு என்பதை கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

எனக்கு பதில் எழுதுவதில் விருப்பம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எல்லோரையும் திருப்திப்படுத்தவும் வேண்டுமென்றால் எப்படி.. ? 

நிர்வாகிகளுக்க முதிர்ச்சியில்லை என்று கொள்வதா அல்லது நிர்வாகிகள் த்ங்களுக்கு எல்லாமே தெரியும் என நினைக்கிறார்கள் என எடுப்பதா.. ☹️

உண்மையாகவே மனமில்லை... 

இதே வேகத்தில் போனால் மிக விரைவில் இதிலிருந்து வெளியேற வேண்டியதுதான். 

வேறு தெரிவில்லை.. ☹️☹️☹️☹️☹️

(இதைப்பார்க்கும்பலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன்.)

கபிதன்.... நான் விரும்பி வாசிக்கும், கருத்தாளர்களில் நீங்களும் ஒருவர்.
மற்றைய உறவுகள் குறிப்பிட்ட மாதிரி... இதனை பெரிதாக எடுக்காமல்,
தொடர்ந்து.. எம்முடன், இணைந்து இருங்கள்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் விடுத்த வேண்டுகோள்

ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது- மஹிந்த

ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், பிரதமர் நேற்று (வியாழக்கிழமை) கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் நேற்று  இடம்பெற்றது.

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாகக் காணப்படும் வறண்ட நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலில் வைரஸ் சுமார் 36 நாட்களுக்கு தொடர்ந்து காணப்படும் என சுகாதார அதிகாரிகள் இதன்போது பிரதமரிடம் அறிவித்தனர்.

ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என சுட்டிக்காட்டிய பிரதமர், சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,அதற்கான ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு அங்கு வருகைத் தந்திருந்த முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான அலி சப்ரி, பவித்ரா வன்னிஆராச்சி, ரோஹித அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.முணசிங்க உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://athavannews.com/கொவிட்-19-தொற்றினால்-உயிரி-4/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

குழந்தை எரிப்பு என்பதை கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியாது

விடுங்கோ ..விடுங்கோ ...13 வயது சிறுவனை Point Blank ரேஞ்சில் வைத்து சுட்டுவிட்டு 
புலிகளின் சிறுவர் படையணி பொறுப்பாளர் என்று சொன்ன மிருகங்கள் , என்ன முஸ்லீம் குழந்தை என்பதால் உயிருடன் கொண்டுபோய் எரிக்காமல் விட்டார்களே என்று சந்தோஷப்படவேண்டியதுதான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.