Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலையில் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்! பதற்றமான சூழல்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

Image may contain: 1 person, tree, plant and outdoor

ஒரு நாடு இரண்டு சட்டங்கள் வயம்ப மற்றும் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களில் ஜே.வி.பி யினரின் நினைவுத்தூபி வைக்கலாம் ஆனா யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்காக ஒரு நினைவுத்தூபி வைத்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும்

தூ....
 
தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் உள்ள ஜே வி பி நினைவு ஸ்தூபிகளுக்கு இடமுண்டு.

ஆனால்.. யாழில்.. சொந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர்சார்ந்த மக்களின் சாவுக்கும் நினைவு கூற ஒரு தூபி அமைக்க முடியாது. 

இதில.. ஒரே நாடு ஒரே சட்டமாம். இரு நாடு இரு தேசம் இரண்டு இனங்கள் என்ற யதார்த்தத்தை எந்தக் கோசங்களாலும்.. மூடிமறைக்க முடியாது.

Edited by nedukkalapoovan

  • Replies 132
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடிப்பு: ராணுவத்துக்கு தொடர்பா? - தற்காலிகமாக கைவிடப்பட்ட போராட்டம்

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடிப்பு: ராணுவத்துக்கு தொடர்பா? - தொடரும் போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, நேற்றிரவு (ஜனவரி 😎 இடிக்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு தூபி மற்றும் பொங்குத் தமிழ் நினைவு தூபி ஆகியவற்றையும் இடிப்பதற்கான முயற்சிகள் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டன.

எனினும், பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என பலரது எதிர்ப்புக்கு மத்தியில் மாவீரர் நினைவு தூபி மற்றும் பொங்குத் தமிழ் நினைவு தூபி ஆகியன இடிப்பது நிறுத்தப்பட்டது.

இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை வெளியில் கொண்டு செல்வதற்கும் போராட்டக்காரர்கள் இடமளிக்கவில்லை.

இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், இன்று (ஜனவரி 9) மதியம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குறித்த பகுதியில் பொலிஸார், இராணுவம் அதிகளவில் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியை நோக்கி மக்கள் தொடர்ச்சியாக வருகைத் தந்த வண்ணம்இருந்தனர்.

மேலும், இராணுவத்தின் ஆதரவுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் குற்றஞ்சுமத்தினர்.

2018இல் எடுக்கப்பட்ட படம்
 
படக்குறிப்பு, 

இனப் படுகொலையை மூடி மறைக்கும் திட்டம் - எஸ்.கஜேந்திரன்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இனப் படுகொலையை மூடி மறைப்பதற்காகவே இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிபிசிக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

தமிழ் மக்களை நிரந்தர அடிமைகளாக நடத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அநீதிகளை மூடி மறைக்கும் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

தமிழ் போராட்ட நினைவிடங்கள் எதுவும் இருக்கக்கூடாது எனவும், அவற்றை முற்றாக நீக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

தொடரும் அநீதிகள் - சி.வி.விக்னேஷ்வரன்

சி.வி.விக்னேஷ்வரன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சி.வி.விக்னேஷ்வரன்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதை போன்ற அநீதிகள் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெறுவதற்கான ஆரம்பமே இதுவென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஷ்வரன் தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இனப் படுகொலை இடம்பெற்றதாக ஐநாவின் விசாரணைகளை நடத்த எதிர்பார்க்கின்ற தருணத்தில், இவ்வாறான அடையாளங்களை அழித்து, மக்களின் எண்ணங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கை அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பாகவே தான் இதனை பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவிக்கின்றார்.

இராணுவத்திற்கு தொடர்பில்லை - இராணுவ தளபதி

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா

பட மூலாதாரம், ARMY MEDIA

படக்குறிப்பு, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலுள்ள நினைவு தூபி இடிக்கப்பட்டமைக்கும், தமக்கும் அணுஅளவேனும் தொடர்பு கிடையாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டமை குறித்து இராணுவத்தின் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உள்ளக விடயங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் தலையீடு செய்யாது எனவும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என கூறிய அவர், அந்த விடயம் குறித்து தான் அறியவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த விவகாரத்திற்கு இராணுவம் தலையீட தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் இராணுவ தளபதி கூறுகின்றார்.

பல்கலைக்கழகத்திற்குள் ஏதேனும் அமைதியின்மை ஏற்பட்டு, பொலிஸாரினால் கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் மாத்திரம், தம்மால் தலையீடு செய்ய முடியுமே தவிர, வேறு எந்தவொரு விதத்திலும் தம்மால் அந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் கூறியுள்ளார்.

இரவு நேரத்தில் திருட்டு வேலைகளை செய்ய இராணுவம் ஒருபோதும் செல்லாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

நினைவுதூபி எதற்காக அமைக்கப்பட்டது?

நினைவுதூபி

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி நினைவு தூபி சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத் தூபியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.

2001ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரகடனப்படுத்தி சர்வதேச சமூகத்தின் கவனத்தை தமிழர் தேசத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை அமைக்கப்பட்டிருந்தது.

அந்த பிரகடனத்தை தூபியாகப் புனரமைக்கும் பணியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டது.

அவ்வாறு மாணவர் ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்ட தூபியே 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதேபோல அங்கு போரில் உயிரிழந்த தமிழ் போராளிகள், மாணவர்களின் நினைவாக மாவீரர் நினைவு தூபியும் அமைக்கப்பட்டது.

இலங்கை போரின் போது உயிரிழக்க நேர்ந்த மக்களின் அடையாளமாக அந்த நினைவுதூபிகள் விளங்கி வந்த நிலையில், அவற்றை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அந்த நாட்டு அரசால் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

திமுக கட்சியின் தலைவர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், "ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டதற்கு எனது கடும் கண்டனங்கள். பிரதமர் அலுவலகம் இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திட வேண்டும். இது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு" என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், "ஈழப்பேரழிவை சந்தித்து நிற்கும் தமிழர்களை சீண்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களின் தொடர் இனஅழிப்பின் நடவடிக்கையாகத்தான் இதைக் கருதவேண்டியிருக்கிறது" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-55599683

இனவெறியை, உச்சக்கட்டமாக பரப்புரை செய்தே இந்த கோத்தபாய அரசு பதவிக்கு வந்தது. தமிழர்கள், தம்மால் வெற்றி கொள்ளப்பட்ட இனம், என்ற கருதுகோளே  இன்று கோத்த பாய போன்ற இனவெறியர் தெற்கில் உருவாக்கிய/ உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலை. இப்படியானவர்கள் பதவியில்  இருக்கும் வரை ஏற்கனவே உள்ள உரிமைகளைக் கூட பறித்தெடுக்க பறித்தெடுக்கவே முனைவர்.

முன்பு இருந்ததை விட மோசமான இனவாதத்தை  கோத்தா அரசு பரப்பிவருகிறது. யுத்த தோல்விக்கு பிறகு முன்னயதை விட மிக மோசமான கையறு நிலையில் தமிழர்கள் உள்ளார்கள் என்ற உண்மையை தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் உணர்ந்து, தமக்குள் ஈகோ பார்காமல் தோல்வியடைந்து போன பழைய அரசியல் செயற்பாடுகளை விடுத்து புதிய தந்திரோபாயங்களை தமக்குள் ஒரு குறைந்தபட்ச புரிந்துணர்வுடன் மேற்கொள்ள வேண்டும். தமக்குள்ளான சிறிய சிறிய  முரண்பாடுகளை கூட துரோகிப்பட்டங்களை கொடுத்து தீர்ககும் மனநோயில் இருந்து தமிழ் அரசியலை முன்னெடுப்போர் வெளியே வரவேண்டும். 

எம்மால் தடுத்திருக்கக் கூடிய முள்ளிவாய்க்கால்  அழிவை,  எமது முன் யோசனையற்ற அரசியல் தீர்மானங்கள் மூலம் தடுக்கமுடியாமல் போன அவல வரலாறு இன்றும் தொடர்வதாகவே தெரிகிறது. 

 ஆகவே   தற்போது அரசியல்  தலைமையை கொடுப்பவர்கள் மதி நுட்பத்துடன் செயற்பட வேண்டும்.  சர்வதேச ரீதியில் ஶ்ரீலங்கா இனவெறி ஆட்சியாளரின் அநீதிகளை எடுத்து கூறும் அதே வேளை நிதானத்துடன் தென்னிலங்கையில் மக்கள் மனதில்  மாற்றத்தை ஏற்படுத்த தம்மால் ஆன முயற்சிகளை ஆரம்பிப்பதும் அவர்களது நிழ்ச்சிதத்திட்டத்தில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். நிச்சயமாக இதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும் என்பதை மறக்ககூடாது.

இல்லையெனில் மேலும் சறுக்கிக்கொண்டு கீழே போவதை தவிர்கக முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா சட்டத்தை ஆயுதமாக்கி அடக்கினர் போராட்டத்தை; துணிந்து நிற்கும் மாணவர்கள் சிலர்!!!

VideoCapture_20210109-123946.jpg?fit=758

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்று (8) இரவோடிரவாக பல்கலைக் கழக நிர்வாகத்தால் அரசாங்க உத்தரவுக்கு இணங்க இடித்தழிக்கப்பட்டதை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் கொரோனா சட்டத்தை காரணம் காட்டி – பயமுறுத்தி இன்று (9) மதியத்துடன் கைவிடச் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை வேளையில் பெரும் திரளானோர் பல்கலைக்கழகம் முன்பு ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைக்கண்டு அச்சமடைந்த பாதுகாப்பு தரப்பினர் போராட்டம் செய்பவர்களை உடனடியாக கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதோடு, அவ்வாறு செய்யாவிடின் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் எனவும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தங்களிடம் வீடியோ பதிவுகள் இருப்பதாகவும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து பயமுறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பலரும் கலைந்து சென்றதோடு, கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரனமாக யாழ் பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்தது.

ஆயினும் சில மாணவர்கள் உண்ணா நோம்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் மேலும் தெரிவித்தது. அவ்வாறு போராடும் நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுவதற்காக பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

VideoCapture_20210109-123854.jpg
VideoCapture_20210109-123951.jpg
VideoCapture_20210109-123829.jpg
VideoCapture_20210109-123912.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவைச் சாட்டி போராட்டங்களை அடக்கி, நினைத்ததை சாதிக்கத் திட்டம் போட்டுள்ளார்கள் போலுள்ளது. நான் நம்ம பேச்சாளரின் கண்டன அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.

35 minutes ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உள்ளக விடயங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் தலையீடு செய்யாது எனவும் அவர் கூறினார்.

அப்போ பல்கலைக்கழக துணை வேந்தரும், இந்திய இராணுவமும் சேர்ந்து உடைத்திருப்பானுகளோ?

  • கருத்துக்கள உறவுகள்

”தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் போராட்டம் தொடரும்”: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் சில மாணவர்கள் உண்ணா நோன்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் மேலும் அறிவித்துள்ளது.

இது குறித்து யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ப.உஜாந்தன் தெரிவிக்கையில், 

நேற்றையதினம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவு கூர்ந்து தூபியொன்று அமைக்கப்பட்டது. 

spacer.png

அந்த தூபியினை நேற்றையதினம் இரவு வேளையிலேயே எவருக்கும் தெரியாது அதனை இடித்தழித்துள்ளனர். 

இந்த சம்பவத்தை கேள்வியுற்று இங்கு வருகை தந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் சரி , அரசாங்கத்திற்கும் சரி தங்களால் முடிந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.

மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகத்தான் தான் இதனை மேற்கொண்டார் என பல்கலைக்கழக துணைவேந்தர் திட்டவட்டமா குறிப்பிட்டுள்ளார். இங்கிருந்து இராணுவம் மற்றும் பொலிஸாரை வெளியேறுமாறு தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

இந்த இடத்தில் கூடியிருப்பவர்கள் வீடியோ எடுக்கப்பட்டு, அவர்களுடைய முகங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரால் அறிவித்தல் விடப்பட்டுள்ளது.

இதனை நாம் எமது சமூகத்தின் மீதான அக்கறை கொண்டவர்களாகவும் நாம் வன்முறையாளர்கள் அல்ல என்பதனை சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறுவதற்காகவும் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நாங்கள் வன்முறைகளை வெளிக்காட்டாமல் நாம் அமைதியாக இந்த போராட்டத்தை இடைநிறுத்துகின்றோம்.

இந்த போராட்டம் மற்றுமொருநாள் அல்லது கொரோனா தொற்று நீங்கிய பின்னர் திகதியொன்றை குறிப்பிட்டு முன்னெடுப்போம்.

அனைவருக்கும் தெரியும் இங்கு யாருடைய ஆட்சி நடைபெறுகின்றது. அவர்கள் என்ன நினைத்தாலும் செய்வார்கள் என்று.. அந்தவகையில் இங்கிருக்கும் அனைவரின் நலன்கருதியும் எமது சக மாணவர்களின் நலன்கருதியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த முடிவை உத்தியோகபூர்வமாக எடுத்துள்ளோம் என்பதை எமது மக்களுக்கும், புலம்பெயர் மக்களுக்கும் நல்லிணக்கத்தை விரும்பும் சகோதர மொழிபேசும் உறவுகளுக்கும் தெரியப்படுத்துகின்றோம் என தெரிவித்தார்.
 
https://www.virakesari.lk/article/98166

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்கால் பேரவலத்தை விடவும் கொடூரமான ஒரு அவலம் ஈழத்தமிழினத்திற்கு ஏற்படப் போகிறது என்பதை உணர்த்தும் முன்னோடியான செயலாகவே இந்த அழிப்பு கட்டியம் கூறி நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

இராணுவத்திற்கு தொடர்பில்லை - இராணுவ தளபதி

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா

பட மூலாதாரம், ARMY MEDIA

படக்குறிப்பு, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலுள்ள நினைவு தூபி இடிக்கப்பட்டமைக்கும், தமக்கும் அணுஅளவேனும் தொடர்பு கிடையாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டமை குறித்து இராணுவத்தின் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உள்ளக விடயங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் தலையீடு செய்யாது எனவும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என கூறிய அவர், அந்த விடயம் குறித்து தான் அறியவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த விவகாரத்திற்கு இராணுவம் தலையீட தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் இராணுவ தளபதி கூறுகின்றார்.

பல்கலைக்கழகத்திற்குள் ஏதேனும் அமைதியின்மை ஏற்பட்டு, பொலிஸாரினால் கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் மாத்திரம், தம்மால் தலையீடு செய்ய முடியுமே தவிர, வேறு எந்தவொரு விதத்திலும் தம்மால் அந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் கூறியுள்ளார்.

இரவு நேரத்தில் திருட்டு வேலைகளை செய்ய இராணுவம் ஒருபோதும் செல்லாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

11 minutes ago, கிருபன் said:

மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகத்தான் தான் இதனை மேற்கொண்டார் என பல்கலைக்கழக துணைவேந்தர் திட்டவட்டமா குறிப்பிட்டுள்ளார். இங்கிருந்து இராணுவம் மற்றும் பொலிஸாரை வெளியேறுமாறு தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகத் திறமையாக திட்டமிட்டு இந்த வேலையைச் செய்துள்ளனர். 

1) தற்போதைய யாழ் பல்கலைக் கழகத்தின் Mகப் பெரும்பான்மையான நிர்வாக ஆளணி நியமனங்கள் EPDP யினரால் மேற்கொள்ளப்பட்டவை. 

2) புதிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரும் EPDP யால் ணியமனம் செய்யப்பட்டவர்கள்.

3) Maintenance  புதிய பராமரிப்பு உத்தியோகத்தர்களும் அவர்களின் ஆட்களே.

இத்தகைய சூழலில்..

காலை முதல் மாலை வரை தூபிகள் இருந்த இடத்தைச் சுற்றிய பகுதிகளில் பராமரிப்பு வேலைகளை செய்வதாகக் பாசாங்கு செய்திருக்கின்றனர். அதனால் மாணவர்கள் இது வழமையாக மேற்கொள்ளப்படும் பராமரிப்பு வேலை என  நினைத்து அதனை கருத்தில் கொள்ளவில்லை. 

ஆனால் இரவில் நினைவுத் தூபிகள் இருந்த இடத்தைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு, இடிக்கத் தொடங்கியுள்ளனர்.

துணை வேந்தர், பதிவாளர் ஆகியோரின் பணிப்பின் பேரிலும் ஆலோசனையின் கீழும் இது நடைபெற்றுள்ளது. 

இதுதான் உண்மை நிலவரம். 

(1995 இடப் பெயர்வின்போது யாழ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவிருந்த மருத்துவ பீட பேராசிரியர் குணரட்ணத்தை யாருக்கேனும் நினைவிலிருக்கிறதா..?)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பின்னணி இதுவா? பரபரப்பை ஏற்படுத்திய கலாநிதி குருபரன்

Report us Dias 2 hours ago

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றைய தினம் இரவு இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா இதனை தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டனர்.

இதனால், பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை நேற்றைய தினம் இரவு எட்டு மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.

இன் நிலையில் யாழ் பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தனது டுவிட்டர் தளத்தில் அது தொடர்பாக கருத்துவெளியிட்டுள்ளார்.

முன்னைய உபவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் பதவிநீக்கப்பட்டமைக்கு அவர் நினைவிடத்தை நிர்மூலமாக்காமையே காரணம்.

தற்போதைய ஜனாதிபதியால் புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டமைக்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாக நினைவிடத்தை நிர்மூலமாக்கவேண்டும் என்ற விடயம் உள்ளது என்பதை நம்புவதற்கு என்னிடம் உறுதியான காரணங்கள் உள்ளன என டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலை வளாகத்தில் மாணவர்களால் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது.

https://www.tamilwin.com/srilanka/01/265962?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலுள்ள நினைவு தூபி இடிக்கப்பட்டமைக்கும், தமக்கும் அணுஅளவேனும் தொடர்பு கிடையாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

சீன சார்பு அரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, ஜெய்சங்கரின் வருகையுடன் இலங்கை அரசுக்கு தம்மால் என்ன செய்ய முடியும் என்று காட்ட இந்தியா செய்த சதியாகவே இது தெரிகிறது. மாணவர்களை உசுப்பிவிட்டு, அவர்களை மீண்டும் ஆயுததாரிகளாக்கி, மக்களை மீண்டும் அழிக்கும் இந்திய சதிக்கு ஈழத்தமிழர் மீண்டும் பலியாகக்கூடாது.

கோவிட் ஒருபுறம், பொருளாதார அழிவு மறுபுறம் உள்ள நிலையில், ஈஸ்ரர் தாக்குதலின் பின்னணியே இன்னமும் தெளிவாகாத பின்னணியில், ஜெனிவா அமர்வில் ஐரோப்பிய, அமெரிக்க நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள கோத்தபாயா அரசு, இந்த நேரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிக்கும் அளவுக்கு முட்டாள் அரசு அல்ல. உலகையே திரட்டி வெல்லமுடியாத புலிகளை வென்ற அரசு இது. இரவின் இருட்டில் நினைவுத்தூபி உடைக்கும் தேவை இந்த அரசுக்கு இல்லை.   அவர்கள் செய்வதாக இருந்தால் பகலில் உலகம் பார்க்க இராணுவமே உடைத்து அழித்திருக்கும். மீண்டும் தமிழர் ஆயுததாரிகளாகி இலங்கையை அழிப்பதை கோத்தபாயா அரசு விரும்பாத காரணத்தாலேயே அவர்களை இதை செய்யவில்லை.

1 hour ago, Kapithan said:

மிகத் திறமையாக திட்டமிட்டு இந்த வேலையைச் செய்துள்ளனர். 

1) தற்போதைய யாழ் பல்கலைக் கழகத்தின் Mகப் பெரும்பான்மையான நிர்வாக ஆளணி நியமனங்கள் EPDP யினரால் மேற்கொள்ளப்பட்டவை. 

2) புதிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரும் EPDP யால் ணியமனம் செய்யப்பட்டவர்கள்.

3) Maintenance  புதிய பராமரிப்பு உத்தியோகத்தர்களும் அவர்களின் ஆட்களே.

  உபவேந்தராக வசந்தி அரசரட்ணத்தின் நியமனத்துடன் ஆரம்பித்து அனைத்து நியமனங்களும் இந்திய நியமனங்களே. தேசப்பற்றுள்ள கோத்தபாயா அரசு, கூடவிருந்தே குழிபறிக்கும் கூலிகளை அடையாளம் கண்டு, பொருத்தமான நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது. அங்கஜன் கவனம் செலுத்த வேண்டும்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing and outdoor, text that says "2020.12.24 அன்று நினைவு தூபிகளை இராணுவத்தினருக்கு துணைவேந்தர் காட்டிக்கொடுத்த போது"

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

சீன சார்பு அரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, ஜெய்சங்கரின் வருகையுடன் இலங்கை அரசுக்கு தம்மால் என்ன செய்ய முடியும் என்று காட்ட இந்தியா செய்த சதியாகவே இது தெரிகிறது. மாணவர்களை உசுப்பிவிட்டு, அவர்களை மீண்டும் ஆயுததாரிகளாக்கி, மக்களை மீண்டும் அழிக்கும் இந்திய சதிக்கு ஈழத்தமிழர் மீண்டும் பலியாகக்கூடாது.

கோவிட் ஒருபுறம், பொருளாதார அழிவு மறுபுறம் உள்ள நிலையில், ஈஸ்ரர் தாக்குதலின் பின்னணியே இன்னமும் தெளிவாகாத பின்னணியில், ஜெனிவா அமர்வில் ஐரோப்பிய, அமெரிக்க நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள கோத்தபாயா அரசு, இந்த நேரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிக்கும் அளவுக்கு முட்டாள் அரசு அல்ல. உலகையே திரட்டி வெல்லமுடியாத புலிகளை வென்ற அரசு இது. இரவின் இருட்டில் நினைவுத்தூபி உடைக்கும் தேவை இந்த அரசுக்கு இல்லை.   அவர்கள் செய்வதாக இருந்தால் பகலில் உலகம் பார்க்க இராணுவமே உடைத்து அழித்திருக்கும். மீண்டும் தமிழர் ஆயுததாரிகளாகி இலங்கையை அழிப்பதை கோத்தபாயா அரசு விரும்பாத காரணத்தாலேயே அவர்களை இதை செய்யவில்லை.

  உபவேந்தராக வசந்தி அரசரட்ணத்தின் நியமனத்துடன் ஆரம்பித்து அனைத்து நியமனங்களும் இந்திய நியமனங்களே. தேசப்பற்றுள்ள கோத்தபாயா அரசு, கூடவிருந்தே குழிபறிக்கும் கூலிகளை அடையாளம் கண்டு, பொருத்தமான நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது. அங்கஜன் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு மாநில தேர்தல் நடைபெறுவதற்கு Mன்னர் மேலும் பட சம்பவங்கள் இடமெற வாய்புண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

UGC says Jaffna University war memorial “threatened North South unity”

http://www.newswire.lk/wp-content/uploads/2021/01/PSX_20210109_183303.jpg

University Grants Commission Chairman Prof. Sampath Amaratunga says the Jaffna University War Memorial was removed by the University Vice Chancellor as it could hinder the unity of the South and North of the country.

He said that the decision was taken by the Vice Chancellor of the Jaffna University.

The memorial, according to media reports, was erected in 2019, to mark the 10th anniversary of the civil war.

Meanwhile, speaking to the Hindu Newspaper University Vice-Chancellor S. Srisatkunarajah said that the memorial was removed on the instructions of higher authorities.

“Since then (2019), authorities have been asking the university administration to remove the unauthorised structure. I received multiple instructions from higher authorities, and we discussed this at several meetings with the university’s capital works, engineering and maintenance departments,” said University Vice-Chancellor S. Srisatkunarajah, who assumed charge in August 2020.

Asked who the higher authorities were, he said: “Defence, Intelligence, Education Ministry, everyone. I am a civilian carrying out an administrative responsibility. Sometimes, I have to take decisions beyond my personal likes and dislikes,” he told The Hindu.

“So, I delegated the responsibility to the concerned departments about a month ago, giving no particular date. They have executed it, that is all, ” he said. (NewsWire)

UGC Chairman 👇

http://www.newswire.lk/2021/01/09/ugc-says-jaffna-university-war-memorial-threatened-north-south-unity/

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

இவர்களின்(?) உண்மையான தேவை இதுதான்..

University Grants Commission Chairman Prof. Sampath Amaratunga says the Jaffna University War Memorial was removed by the University Vice Chancellor as it could hinder the unity of the South and North of the country.

இப்போதுள்ள சூழலை மேலும் மோசமாக்க வேண்டிய தேவை யாருக்குள்ளது.. ? 

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் மக்களின் பெயரினால் ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நேற்று இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்

https://www.facebook.com/ddevananda/videos/1853399694798587

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, nunavilan said:

UGC says Jaffna University war memorial “threatened North South unity”

http://www.newswire.lk/wp-content/uploads/2021/01/PSX_20210109_183303.jpg

University Grants Commission Chairman Prof. Sampath Amaratunga says the Jaffna University War Memorial was removed by the University Vice Chancellor as it could hinder the unity of the South and North of the country.

He said that the decision was taken by the Vice Chancellor of the Jaffna University.

The memorial, according to media reports, was erected in 2019, to mark the 10th anniversary of the civil war.

Meanwhile, speaking to the Hindu Newspaper University Vice-Chancellor S. Srisatkunarajah said that the memorial was removed on the instructions of higher authorities.

“Since then (2019), authorities have been asking the university administration to remove the unauthorised structure. I received multiple instructions from higher authorities, and we discussed this at several meetings with the university’s capital works, engineering and maintenance departments,” said University Vice-Chancellor S. Srisatkunarajah, who assumed charge in August 2020.

Asked who the higher authorities were, he said: “Defence, Intelligence, Education Ministry, everyone. I am a civilian carrying out an administrative responsibility. Sometimes, I have to take decisions beyond my personal likes and dislikes,” he told The Hindu.

“So, I delegated the responsibility to the concerned departments about a month ago, giving no particular date. They have executed it, that is all, ” he said. (NewsWire)

UGC Chairman 👇

http://www.newswire.lk/2021/01/09/ugc-says-jaffna-university-war-memorial-threatened-north-south-unity/

Image may contain: 1 person, outdoor, text that says "No to UoJ, but Yes to SJU nd WYB. Is The UGC of Sri lanka a political party of MR nd GR gang. ??!! YES No"

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nedukkalapoovan said:

Image may contain: 1 person, outdoor, text that says "No to UoJ, but Yes to SJU nd WYB. Is The UGC of Sri lanka a political party of MR nd GR gang. ??!! YES No"

சிங்களம் எப்போதும் சிங்களமே.

ஆனால் இதனை இடித்தது நமதாட்கள்தானே... ☹️

வேறுபாடு இதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, zuma said:

நீங்கள் என்ன சொல்ல வருகின்றிர்கள்?. ஒரு சிங்களவர் செய்வதை விட ஒரு தமிழர் செய்வது பரவாயில்லை என்கிறீர்களா?. தற்போதைய துணைவேந்தர் அதிகாரவர்க்கத்துக்கு  முண்டு கொடுத்ததை விட ஒரு கூந்தலும் பிடுங்கவில்லை.ரட்ணஜீவன் ஹூல் ஆயிரம் மடங்கு இவரைவிட மேல்.புலியோ,ஈபிடிப்பியோ, கோத்தபாயவோ நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என நேர் பட சொல்ல்லியுள்ளார்.

நான் சொல்ல வந்ததை மேலே இணைக்கப் பட்டிருக்கும் துணைவேந்தரின் அறிக்கைகள் சொல்லியிருக்கின்றன. 

தற்போதைய துணைவேந்தர் அகற்றியிருக்கா விட்டால் ஒரு சிங்களவரை யாழ் பல்கலை து.வே ஆகத் திணிக்கும் வல்லமை கோத்தாவுக்கு இருக்கிறது என்றே சொன்னேன். அது சந்தோசமான நிலையாக இருக்குமா?

 மற்றபடி நானும் ஹூலின் விசிறி தான். அவர் கிறிஸ்தவராக இருந்து கொண்டு அந்தப் பதவிக்கு வர இயலாது என்று தெரிந்தும் மகிந்த மூலம் முயன்றார். ஆனால், எங்கள் ஆட்களுக்கு அவர் துரோகியாகத் தெரிவது ஆச்சரியமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரஞ்சித் said:

எமது மக்களை அழித்தார்கள், எமக்காகப் போராடியவர்களை அழித்தார்கள், அவர்களின் துயிலும் இல்லங்களை இயந்திரம் கொண்டு உழுதார்கள், எம்மினத்தில் அழிக்கப்பட்டவர்களுக்கான நினைவுகளைச் செய்வதைத் தடுத்தார்கள், இன்று நினைவுகளுக்கான வழிபாட்டுத் தலங்களையும், வடிகால்களையும் இடித்து தரைமட்டமாக்குகிறார்கள்.

எமக்கென்று ஒரு நாடு இருந்தது, எமக்கென்று ஒரு பலம் இருந்தது, எதிரி நினைக்கக் கூட முடியாதளவிற்கு எமது மண் காக்கப்பட்டு இருந்தது.

எமது பலத்தை நாமே துரோகத்தாலும், கனவான் தனத்தாலும் எதிரியோடு சேர்ந்து நின்று அழித்தோம்.

இன்று பாதுகாப்பற்ற மந்தையாக ஓநாய்களுக்குள் திறந்து விடப்பட்டிருக்கிறோம்.

என்ன செய்யும் இந்த இனம் இனி?

2009க்கு பிற‌க்கு கூட‌ இருந்தே குழி ப‌றிக்கும் கூட்ட‌ம் அதிக‌ம் ர‌கு அண்ணா , நாம் யார் ப‌க்க‌ம் நிக்க‌னும் என்று தெரியாத‌ த‌டுமாற்ற‌ம் , 

ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் சிங்க‌ள‌வ‌ன் ஓடா ஒன்னா வாழுவ‌தும் புற்றுநோய் எயிட்ஸ் நோயுட‌ன் வாழுவ‌த‌ற்கு ச‌ம‌ம் ,

எம்ம‌வ‌ர்க‌ள் இருந்த‌ போது பெரிய‌ ஆணிய‌ கூட‌ சிர‌ம‌ம் இல்லாம‌ புடுங்கி எறிஞ்ச‌வை , இந்த‌ 12 வ‌ருட‌த்தில் ஒட்டு மொத்த‌ த‌மிழ‌ர்க‌ளால் சிறு ஆணிய‌ கூட‌ புடுங்க‌ முடிய‌ வில்லை ,   

ம‌ன‌சுக்கு சிறு ஆறுத‌ல் எம் க‌ண் முன்னே சிங்க‌ள‌ இன‌வெறிய‌ர்க‌ளுக்கு எம்ம‌வ‌ர்க‌ள் ப‌ல‌ த‌ட‌வை ஆயுத‌ம் மூல‌ம் ப‌தில் கொடுத்தார்க‌ள் , நாம் க‌ண் மூடினாலும் அந்த‌ சாத‌னை வீர‌ர்க‌ள் சாதிச்ச‌த‌ நினைத்து கிட்டே க‌ண் மூட‌னும் 🙏

23 hours ago, ரஞ்சித் said:

எமது மக்களை அழித்தார்கள், எமக்காகப் போராடியவர்களை அழித்தார்கள், அவர்களின் துயிலும் இல்லங்களை இயந்திரம் கொண்டு உழுதார்கள், எம்மினத்தில் அழிக்கப்பட்டவர்களுக்கான நினைவுகளைச் செய்வதைத் தடுத்தார்கள், இன்று நினைவுகளுக்கான வழிபாட்டுத் தலங்களையும், வடிகால்களையும் இடித்து தரைமட்டமாக்குகிறார்கள்.

எமக்கென்று ஒரு நாடு இருந்தது, எமக்கென்று ஒரு பலம் இருந்தது, எதிரி நினைக்கக் கூட முடியாதளவிற்கு எமது மண் காக்கப்பட்டு இருந்தது.

எமது பலத்தை நாமே துரோகத்தாலும், கனவான் தனத்தாலும் எதிரியோடு சேர்ந்து நின்று அழித்தோம்.

இன்று பாதுகாப்பற்ற மந்தையாக ஓநாய்களுக்குள் திறந்து விடப்பட்டிருக்கிறோம்.

என்ன செய்யும் இந்த இனம் இனி?

ஜனாசாக்களை எரிப்பதன் மூலம் முஸ்லிம்களையும் நினைவுகளை அழிப்பதன் மூலம் தமிழ் மக்களையும் சினம் கொள்ளவும், அதன் மூலம் திருப்தி கொள்ளவும் எது அவர்களை இட்டுச் செல்கின்றது

போர் வெற்றி அது ஊட்டுகின்ற வெறி, அதனால் மேலும் மேலும் பிரவாகம் எடுக்கும் இனவாதம், எம்மை இனி எவராலும் தட்டிக் கேட்க முடியாது எனும் ஆணவம்

யுத்த வெற்றி என்பது ஆயிரம் ஆண்டுகள் வடிக்கப்பட்ட மதுவின் போதை. அது பல்லாயிரம் குவளைகளில் பகிரப்பட்டு வெற்றி பெற்றவர்களால் மட்டுமே அருந்தப்பட்டு வெற்றி பெற்றவர்களின் ஆசனவாயில் இருந்து தோற்றவர்களின் தோள்களிலும், தலைகளிலும், உடல்களின் மேலும் இன்று கொட்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

எரியூட்டும் தணல்களின் மேல் தோற்றவர்களின் குரல்களை வீசிக் கருகச் செய்து தன் வல்லமையை பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றது.

ஆணவம் கொண்டு தோற்றவர்களின் நினைவுகளின் மேல் தன் கடைவாயில் கசியும் எச்சில்களை துப்பி செல்கின்றது

ஆனாலும் ஆனாலும் வரலாற்றில் இதை விட அதிகமாக ஆடிய பல ராஜ்ஜியங்கள் அழிந்தும், அரசுகள் காணாமல் போயும், தேசங்களின் எல்லைக் கோடுகள் மீள மாற்றி எழுதப்பட்டும் உள்ளன.

யுத்தம் ஒரு தலைமுறையில் தோற்கடிக்கப்பட்டு, அதன் பாரங்கள் பல தலைமுறைகளால் சுமக்கப்பட்டு ஈற்றில் இன்னொரு தலைமுறையால் விடுவிக்கப்பட்ட வரலாறும் உள்ளது.

தனக்குத் தானே குழி பறித்து தன் சவக்கிடங்கில் தானே தன்னை தள்ளிய நிகழ்வுகள் இங்குள்ளன.

காலம் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்லும்.

சண்முகம் சிவலிங்கம் அவர்களின் கவிதை ஒன்று இப்படி சொல்லியது.

இன்று இல்லெங்கிலும் நாளை

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.

எங்கள் இமைகள் கவிந்துள்ளன.

எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.

எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.

நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.

எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக.

எங்கள் முதுகில் கசையால் அடிக்குக,

எங்கள் முதுகுத்தோல் பிய்ந்துரிந்து போகட்டும்.

தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்.

கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.

இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.

கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.

அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

கோவிட் ஒருபுறம், பொருளாதார அழிவு மறுபுறம் உள்ள நிலையில், ஈஸ்ரர் தாக்குதலின் பின்னணியே இன்னமும் தெளிவாகாத பின்னணியில், ஜெனிவா அமர்வில் ஐரோப்பிய, அமெரிக்க நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள கோத்தபாயா அரசு, இந்த நேரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிக்கும் அளவுக்கு முட்டாள் அரசு அல்ல. உலகையே திரட்டி வெல்லமுடியாத புலிகளை வென்ற அரசு இது. இரவின் இருட்டில் நினைவுத்தூபி உடைக்கும் தேவை இந்த அரசுக்கு இல்லை.   அவர்கள் செய்வதாக இருந்தால் பகலில் உலகம் பார்க்க இராணுவமே உடைத்து அழித்திருக்கும். மீண்டும் தமிழர் ஆயுததாரிகளாகி இலங்கையை அழிப்பதை கோத்தபாயா அரசு விரும்பாத காரணத்தாலேயே அவர்களை இதை செய்யவில்லை.

ஆம். சரியான கருத்து  அப்ப இதைச்செய்தவர்கள் தண்டிக்கப்பாடுவார்களா?😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.