Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன? தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன? தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு

1-87-696x522.jpg
 32 Views

தங்களது மாடுகளை தேடிச் சென்ற தமிழ் பண்ணையாளர்கள் மீது சிங்களவர்கள் மிக மோசமாக தாக்கியதுடன் அவர்களை பிடித்து பொலீசில் ஒப்படைத்து வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

Video Player
 
00:00
 
01:30

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணைப் மேச்சத் தரைப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான ஆறு பண்ணையாளர்களை சிங்களவர் சிலர் பிடித்துச் சென்று மகா ஓயா பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு சிங்களவர்களினால் பிடித்துச் சென்ற பண்ணையாளர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தி சித்திரவதை செய்ததாக தாக்குதலுக்கு உள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Video Player
 
00:00
 
01:54

சிங்கள விவசாயிகளின் பின்னணியில் இருந்து செயற்படும் கிழக்கு மாகாண ஆளுநரே மேற்படி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பதற்கு காரணமாக உள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Video Player
 
00:00
 
01:39

கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ் மக்களுக்கு விரோதமாக பிற மாவட்டங்களில் இருந்த சிங்களவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம் செய்ய அனுமதித்ததன் விளைவாகவே தமிழ் பண்ணையாளர்கள் மீதும் அவர்களது மாடுகள் மீதும் தொடர்ச்சியாக சிங்களவர்கள் தாக்குதல் நடத்த காரணம் எனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒற்றுமையாக இருந்த தமிழ் சிங்கள மக்களின் உறவில் கிழக்கு மாகாண ஆளுநர் விரிசலை ஏற்படுத்தி உள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.ilakku.org/

  • Replies 58
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

'பேய் அரசுசெய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள்' பேய்க்கும் பல குட்டிகள் உண்டாம், அதில் கிழக்கு மாகாண ஆளுநரும் ஒன்றாக இருக்கலாம். 😲

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் நித்திரையோ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/1/2021 at 23:41, விசுகு said:

அண்ணன் நித்திரையோ???

புது வியாக்கியான கருத்துக்களுடன் வருவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்சிகளில் சேர்க்கப்பட்ட மாடுகள்? காப்பாற்றுவது யார்- மட்டக்களப்பு அரசியல் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்?

IMG_8676-696x392.jpg
 23 Views

மூன்று தசாப்தங்களாக மாடுகளை மேய்த்து எமக்காக பால்,தயிர், நெய் என வாய்க்கு ருசியாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தரும் மட்டக்களப்பின் பாரம்பரிய தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் பாராமுகமாக இருப்பது ஏன்?

இவர்களின் வாக்குகளைப் பெற்று வங்குரோத்து அரசியல் செய்யும் அரசியல் வாதிகள் எங்கே?

நீறு பூத்த நெருப்பாக உருவாக்கப்படும் இனவாத வன்முறைகளுக்காக காத்திருக்கிறார்களா இந்த அரசியல்வாதிகள்?

கண்டபடி தமிழ் பண்ணையாளர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள், கடத்திச் சென்று சித்திரவதை செய்கிறார்கள். ஆனால் கண்டும் காணாமலும் செல்கிறார்கள் எமது அரசியல் வாதிகள்.

இனவாதத்திற்கு தூபம் காட்டும் அரசியல் தலைவர்களே தமிழ் பண்ணையாளர்களின் உயிர்கள் பறிக்கப்படும்வரை வேடிக்கை பார்ப்பதுதான் உங்கள் அரசியல் நாகரிகமா?

1-87.jpg

இன்னும் எத்தனை காலத்திற்கு போராடுவது அந்த பண்ணையாளர்கள்.

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்ட போது எல்லோரும் தமிழர்களாய் துள்ளி எழுந்தோம் வெற்றியும் கண்டோம்.

கிழக்கில் தமிழர்களை கடத்துகிறார்கள், சித்திரவதை செய்கிறார்கள், தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறார்கள். அதற்கு எதிராகவும் நாம் அணிதிரளவேண்டும்.

இந்த பண்ணையாளர்களுக்காக மட்டக்களப்பில் உள்ள ஒரு சிலரைத் தவிர ஏனைய தமிழர்கள் ஏன் குரல் கொடுக்க வில்லை. இவர்களின் பிரச்சினை அப்படி என்ன தீர்க்க முடியாத பிரச்சினைகளா?

Video Player
 
00:00
 
01:30

பாவம் எங்கள் மாடுகள், அதுகளுக்கு வாக்குகள் இல்லை.  அதுகளை பராமரிக்கும் பண்ணையாளர்களிடமும் பெரும் தொகை வாக்குகள் இல்லை. அதனால் தான் அவர்கள் நாதியற்றவர்களாக அடிவாங்குகின்றனர்.

பாவம் மட்டக்களப்பு சமூகம், அவர்கள் தேர்ந்தெடுத்த அரசியல் வாதிகள் மாடுகளையும் கட்சிகளில் சேர்த்து விட்டனர். அதனால் தான் மாடுகள் கறக்கும் பாலில் கூட கட்சிபேதம் பார்க்கின்றனர். சில அரசியல் தலைவர்கள் அது சாணக்கியனின் மாடுகள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து விட்டதாக கூறி ஒதுங்கி கொண்டார்களாம்.

இதுதான் தொடர்ந்து பண்ணையாளர்கள் தாக்கப்படுகிறார்களாம் .

மாடுகளுக்குள் மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்ட அரசியல் வாதிகள் மக்கள் பிரச்சினைகள் அனைத்திலும் அரசியல் பாகுபாடு பார்க்கின்றனர்.

மிக கேவலம் நிறைந்த அரசியல் கலாசாரம் கட்டி எழுப்பப்படுகிறது. இதனால் மட்டக்களப்பு சமூகம் இன்னும் இன்னும் பின்நோக்கியே செல்லப்போகிறது.

கடத்தப்பட்டு பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக கூறி நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஆறு பண்ணையாளர்களும் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்கள் குறித்து தமிழர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

WhatsApp-Image-2021-01-11-at-3.43.43-AM.

இவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது இவர்களை பலி கொடுக்க தயாராகி வருகிறார்களா மட்டக்களப்பு அரசியல் வாதிகள்? ஏன் இந்த பண்ணையாளர்களுக்காக போட்டி போட்டுக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசியல் வாதிகளால் செயற்பட முடியவில்லை?

அனைத்து தமிழர்களும் இவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் இவர்களுக்காக போராட வேண்டும் தீர்வு வரும் வரை போராட வேண்டும் ஆயிரம் பேர் இறங்கினால்தான் அரசியல் வாதிகள் நான் முந்தி நீ முந்தி என்று வருவார்கள். அந்த சூழ்நிலை உருவாகும் வரை பண்ணையாளர்களுக்காக தமிழர்கள் அனைவரும் குரல் கொடுப்போம்.

https://www.ilakku.org/?p=39456

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, உடையார் said:

ஏன் இந்த பண்ணையாளர்களுக்காக போட்டி போட்டுக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசியல் வாதிகளால் செயற்பட முடியவில்லை?

ஒருவர் வடக்கிற்கு வியூகம் அமைக்கபோய்விட்டார்கள்..

இப்பொழுதுதான் இன்னொருவர் வெளியே வந்துள்ளார்கள்.. அவராவது பார்த்து உதவ வேண்டும்.. 

23 hours ago, உடையார் said:

இந்த பண்ணையாளர்களுக்காக மட்டக்களப்பில் உள்ள ஒரு சிலரைத் தவிர ஏனைய தமிழர்கள் ஏன் குரல் கொடுக்க வில்லை. இவர்களின் பிரச்சினை அப்படி என்ன தீர்க்க முடியாத பிரச்சினைகளா?

ஆதரவற்ற நிலையில் இருக்கும் இவர்களுக்காக ஏன் மற்றையவர்கள் குரல் கொடுக்கவில்லை.. மாறாத வடு இருப்பதாலா? 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பலமாக இருந்தால் மட்டுமே எமது தாயகம் பறிபோவதைத் தடுக்க முடியும். எமது பலம் அழிக்கப்பட்ட பின்னர் அது ஏதோ ஒருவகையில் முற்றான ஆக்கிரமிப்பிற்குள் போகத்தான் போகிறது.

ஒரே வித்தியாசம் அரசுக்கெதிராக இருந்து அரசியல் செய்தால் குறைந்தது ஆக்கிரமிக்கப்படும் எமது தாயகம்பற்றி வெளியுலகிற்காவது கூறமுடியும். ஆனால் அரசுடன் சேர்ந்து அவர்களின் பிணாமிகளாகிவிட்டால் அவர்கள் செய்வதை அமைதியாக ஆமோதிக்கவேண்டும் அல்லது அரசின் திட்டத்தினை அவர்களே முன்னின்று நடத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

நாம் பலமாக இருந்தால் மட்டுமே எமது தாயகம் பறிபோவதைத் தடுக்க முடியும். எமது பலம் அழிக்கப்பட்ட பின்னர் அது ஏதோ ஒருவகையில் முற்றான ஆக்கிரமிப்பிற்குள் போகத்தான் போகிறது.

ஒரே வித்தியாசம் அரசுக்கெதிராக இருந்து அரசியல் செய்தால் குறைந்தது ஆக்கிரமிக்கப்படும் எமது தாயகம்பற்றி வெளியுலகிற்காவது கூறமுடியும். ஆனால் அரசுடன் சேர்ந்து அவர்களின் பிணாமிகளாகிவிட்டால் அவர்கள் செய்வதை அமைதியாக ஆமோதிக்கவேண்டும் அல்லது அரசின் திட்டத்தினை அவர்களே முன்னின்று நடத்த வேண்டும்

உண்மைதான்..

ஒற்றுமையாகிவிடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக உள்ளதைதான் சில செய்திகள் காட்டுகின்றன.. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மைதான்..

ஒற்றுமையாகிவிடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக உள்ளதைதான் சில செய்திகள் காட்டுகின்றன.. 

வர்த்தமானியில் அறிவிக்கப்படாதவரைக்கும் இப்பிரச்சினை தீரப்போவதில்லையாம் , ஒன்று (முதலமைச்சராக வருபவர் தேர்தல் நடந்தால்)  அறிவிக்கலாம் மேய்ச்சல் தரையென, மற்றது கிழக்கு மாகாண ஆளுநர் அறிவிக்க வேண்டும், நம்மை விட சிங்களம் நன்றாக காய் நகர்த்துகிறது நாமதான் பழைய புண்ணை சொறிந்து கொண்டு இருக்கிறம் 

10 hours ago, ரஞ்சித் said:

நாம் பலமாக இருந்தால் மட்டுமே எமது தாயகம் பறிபோவதைத் தடுக்க முடியும். எமது பலம் அழிக்கப்பட்ட பின்னர் அது ஏதோ ஒருவகையில் முற்றான ஆக்கிரமிப்பிற்குள் போகத்தான் போகிறது.

மிகச் சரியான கருத்து.

நாம் பலமாக இருப்பது என்பது எல்லோரும் ஒற்றுமையாக ஒரு குடைக்குள் நிற்பது என்பதல்ல. அது வீண்முயற்சி

நாம் பலமாவது என்பது நாம் ஒவ்வொருவரும் எமது இனத்தை பலமானதாக்க என்ன செய்யலாம் என்பதிலிருந்து தொடங்குவது.

அது அறிவியல்,அரசியல்,பொருளாதாரம் தொழில்நுட்பம் என்று பலதிசைகளில் அமையலாம்.

அந்தப் பலத்தை நாம் அடைய முயலாது எமக்கு எந்தவாெரு மீட்சியும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவொரு சிக்கலான விடயம் ...இரு தரப்பிலும் நியாயம் இருக்கின்றது ...அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காய் இந்த பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகின்றனர் 

  • கருத்துக்கள உறவுகள்

கையறு நிலையில் இருக்கின்றோம். ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு வழி இல்லை. ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

இதுவொரு சிக்கலான விடயம் ...இரு தரப்பிலும் நியாயம் இருக்கின்றது ...அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காய் இந்த பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகின்றனர் 

அண்ணனும் பிள்ளையானும் ஆட்சிக்கு வந்தால் நடக்கிறதே வேறை எண்டவையள்.....
இப்ப இரு பக்கமும் நியாயமாம்......போகப்போக அந்தப்பக்கம்  மட்டும் நியாயமாய் மாறும்.....
இதிலை இருந்து என்ன தெரியுது.....???? கொழுத்த காசு கட்டுக்கட்டாய் மாறுது...

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க்ள் மனித சுதந்திரத்துக்காக உயிரை கொடுத்து போராடியவர்கள்.

சிங்கள இனத்துடன் வாழ முடியாது என்ற காரணத்தால் தமிழர் தாயகத்துக்கு புலம் பெயர்ந்து வந்தவர்களை கிளிநொச்சி உட்பட்ட வன்னி நில பரப்பில்    வருசம் முழுவதும் கூலி வேலை செய்ய வைச்சு  தோட்ட காட்டான் என்று பெயரும் வைச்சு   தீபாவளி/ பொங்கலுக்கு வேட்டியும் சேலையும் இனாமா  50- ரூபாய்  மட்டுமே கொடுத்த இனம்...

நாங்கள் தொழிலாளர்களுக்காக போராடும் இனம் 

48 minutes ago, valavan said:

கசப்பான உண்மை. 

எங்களிடையே இது தொடர்பான விழிப்புனர்வின்மையே இதற்கான அடிப்படைக் காரணம்.

விழிப்பு விடுதலையின் முதற்படி

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

இதுவொரு சிக்கலான விடயம் ...இரு தரப்பிலும் நியாயம் இருக்கின்றது ...அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காய் இந்த பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகின்றனர் 

ஐயரும் (யோகேஸ்வரர்), அரியண்டமும் ( அரியேந்திரரும் ) சந்தில சிந்து பாடுது  .  இது பற்றி பிள்ளையான் அவர்களிடம் கேட்ட போது  நண்பன் ஊடாக

நான் மேல் கூறிய விடயங்களை   அவரே சொன்னார் . ஆனால் இந்த மேச்சல் தரையை வர்த்தாமானியில் சேர்க்க அவர் எப்போதே எடுத்த முடிவை கூட்டமைப்பைப்பினர் செவி சாய்க்க வில்லை இப்ப அரசியல் நாடகம் இந்த தரையை வைத்து நடக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஐயரும் (யோகேஸ்வரர்), அரியண்டமும் ( அரியேந்திரரும் ) சந்தில சிந்து பாடுது  .  இது பற்றி பிள்ளையான் அவர்களிடம் கேட்ட போது  நண்பன் ஊடாக

நான் மேல் கூறிய விடயங்களை   அவரே சொன்னார் . ஆனால் இந்த மேச்சல் தரையை வர்த்தாமானியில் சேர்க்க அவர் எப்போதே எடுத்த முடிவை கூட்டமைப்பைப்பினர் செவி சாய்க்க வில்லை இப்ப அரசியல் நாடகம் இந்த தரையை வைத்து நடக்கிறது .

இப்ப அவையின்ரை எஜமானர்கள் தானேஆட்சியில் சட்டுப் புட்டென்று வர்த்தமானி அறிவித்தலை வெளியிடச்சொல்லுங்கோநெடுக அடுத்தவனைக் குறை சொல்லிக்கொண்டிராமல். அது சரி ஆளுநரும் அவேன்ரை ஆள்தானே. தங்களாலை முடியாட்டில் எலாது எண்டு சொல்ல வேணும் சும்மா அடுத்தாக்களை குறை சொல்லிக்கொண்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஐயரும் (யோகேஸ்வரர்), அரியண்டமும் ( அரியேந்திரரும் ) சந்தில சிந்து பாடுது  .  இது பற்றி பிள்ளையான் அவர்களிடம் கேட்ட போது  நண்பன் ஊடாக

நான் மேல் கூறிய விடயங்களை   அவரே சொன்னார் . ஆனால் இந்த மேச்சல் தரையை வர்த்தாமானியில் சேர்க்க அவர் எப்போதே எடுத்த முடிவை கூட்டமைப்பைப்பினர் செவி சாய்க்க வில்லை இப்ப அரசியல் நாடகம் இந்த தரையை வைத்து நடக்கிறது .

கூட்டமைப்பு வேண்டாம் எண்டுதானே இரண்டு பெரிய ஜாம்பவான்களை தூக்கி வைச்சிருக்கிறியள்? அவையள் என்ன அடைகாக்கினமே?

அண்டு தொடக்கம் வடக்கை பாத்து திட்டிக்கொண்டே இருக்கிறியள். ஆனால் சனம் முன்னேறினதாயும் காணேல்லை. சிங்களவனிட்டை அடி வாங்கிறதையும் நிப்பாட்டேல்லை.😁

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாதவூரான் said:

இப்ப அவையின்ரை எஜமானர்கள் தானேஆட்சியில் சட்டுப் புட்டென்று வர்த்தமானி அறிவித்தலை வெளியிடச்சொல்லுங்கோநெடுக அடுத்தவனைக் குறை சொல்லிக்கொண்டிராமல். அது சரி ஆளுநரும் அவேன்ரை ஆள்தானே. தங்களாலை முடியாட்டில் எலாது எண்டு சொல்ல வேணும் சும்மா அடுத்தாக்களை குறை சொல்லிக்கொண்டு

தற்போது ஆசிரியர் பற்றாக்குறை நீக்கப்பட்டுள்ளது பட்டதாரிகளாக சேர்ந்தவர்களை ஆசிரியர்களாக உள்ளீர்ப்பு செய்துள்ளார் , 1300 பேர் வரை , மட்டக்களப்பு நூலக மீள் நிர்மாணம் , மட்டக்களப்பு போதானா வைத்திய சாலைக்கு இதய சத்திர சிகிச்சைக்கு தேவையான மெசின் , திகிலிவெட்டை சந்திவெளி பாலம் நிர்மாணம்  இன்னும்பல செயல் திட்டங்கள் வர இருக்கின்றது . அதில் விவசாயம்  இருக்கிறது அதன் போது இப்பிரச்சினைக்கு  தீர்வு வரலாம் 

5 hours ago, குமாரசாமி said:

கூட்டமைப்பு வேண்டாம் எண்டுதானே இரண்டு பெரிய ஜாம்பவான்களை தூக்கி வைச்சிருக்கிறியள்? அவையள் என்ன அடைகாக்கினமே?

அண்டு தொடக்கம் வடக்கை பாத்து திட்டிக்கொண்டே இருக்கிறியள். ஆனால் சனம் முன்னேறினதாயும் காணேல்லை. சிங்களவனிட்டை அடி வாங்கிறதையும் நிப்பாட்டேல்லை.😁

எப்போதே தீர்ந்திருக்க வேண்டிய தமிழர் பிரச்சினை 30 கால போர் முடிந்த பிறகு உடனே தீருங்கள் என்றால் எப்படி சாமியார் திருடனை கட்டி வைத்து அடித்து கண்ணை முளித்து பார் என்பது போல இருக்கு உங்கள் கதை 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

நாங்க்ள் மனித சுதந்திரத்துக்காக உயிரை கொடுத்து போராடியவர்கள்.

சிங்கள இனத்துடன் வாழ முடியாது என்ற காரணத்தால் தமிழர் தாயகத்துக்கு புலம் பெயர்ந்து வந்தவர்களை கிளிநொச்சி உட்பட்ட வன்னி நில பரப்பில்    வருசம் முழுவதும் கூலி வேலை செய்ய வைச்சு  தோட்ட காட்டான் என்று பெயரும் வைச்சு   தீபாவளி/ பொங்கலுக்கு வேட்டியும் சேலையும் இனாமா  50- ரூபாய்  மட்டுமே கொடுத்த இனம்...

நாங்கள் தொழிலாளர்களுக்காக போராடும் இனம் 

இப்ப நீங்க என்ன சொல்ல வாறியள்.. 🤥

20 hours ago, ரதி said:

இதுவொரு சிக்கலான விடயம் ...இரு தரப்பிலும் நியாயம் இருக்கின்றது ...அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காய் இந்த பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகின்றனர் 

இரு தரப்பு.. 1) மாடுகள் 2) பண்ணையாளர்

அரசியல்வாதிகள்..?

கொண்ணரும் அரசியல்வாதிதானே.. பிரச்சனைய முடிக்கிறது... ?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

கிளிநொச்சி உட்பட்ட வன்னி நில பரப்பில்    வருசம் முழுவதும் கூலி வேலை செய்ய வைச்சு  தோட்ட காட்டான் என்று பெயரும் வைச்சு   தீபாவளி/ பொங்கலுக்கு வேட்டியும் சேலையும் இனாமா  50- ரூபாய்  மட்டுமே கொடுத்த இனம்.

கிளிநொச்சியில் கொரோனா பிரச்சனையால் தமிழர்கள் தங்கள் மாடுகளுக்கு உணவளிக் முடியாமையினால் மாடுகள் பட்டினி கிடந்து உருகி சாகின்றனவாம் நண்பர் சொன்னார்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

அண்ணனும் பிள்ளையானும் ஆட்சிக்கு வந்தால் நடக்கிறதே வேறை எண்டவையள்.....
இப்ப இரு பக்கமும் நியாயமாம்......போகப்போக அந்தப்பக்கம்  மட்டும் நியாயமாய் மாறும்.....
இதிலை இருந்து என்ன தெரியுது.....???? கொழுத்த காசு கட்டுக்கட்டாய் மாறுது...

அண்ணா , பிள்ளையான் கொஞ்சம் கொஞ்சமாய்  செய்து கொண்டு தான் இருக்கிறார் ...கருணா இப்ப பதவியில் இல்லை ... நான் அறிந்த வரைக்கும் அந்த காணிகளில் சிங்கள மக்கள் கடந்த 10 வருடத்திற்கு மேலாய்  சீசனுக்கு வந்து சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு அறுவடை முடிந்ததும் போய் விடுவார்கள். அதே நேரத்தில் கால் நடை பண்ணையாளர்களும் இருந்தார்கள் ...அப்போது இல்லாத பிரச்சனை இப்போது உருவாகிறதிற்கு என்ன காரணம்?...சிங்களவன் காணி பிடிக்க முயற்சிப்பதால் தான் பிரச்சனை என்றால் அவர்களை தூண்டி விடுவது யார் ?...இந்த பக்கத்தால் தமிழ் அரசியல்வாதிகளும் வேண்டுமென்றே எரிகின்ற திரியில் எண்ணெய் ஊற்ற பார்க்கின்றனர் ...பிரச்சனையை சுமுகமாய் தீர்க்க ஒருத்தருக்கும் விருப்பம்  இல்லை 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2021 at 09:41, விசுகு said:

அண்ணன் நித்திரையோ???

அவர் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் வகுப்பதில் பிஸி. அவரை குழப்பாதீர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, satan said:

அவர் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் வகுப்பதில் பிஸி. அவரை குழப்பாதீர்கள்.  

கிழக்கின் விடுதலைஅபிவிருத்தி என்றுதானே கோடரிக்கொம்பானவர்? அப்போ கிழக்கு சிங்கப்பூர் ஆகிட்டுதோ?? எதிரி நாட்டை அபிவிருத்தி செய்ய வெளிக்கிட்டு விட்டார்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.