Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு முனைய விவகாரம்; விசேட அறிக்கை வெளியிட்ட இந்தியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2019ம் ஆண்டு மே மாதம் இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை செயற்படுமென எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் வௌிப்படுத்தப்பட்டதாகவும் நாட்டின் தலைமை அது தொடர்பில் அறிவித்திருந்ததாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையின் அமைச்சரவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தீர்மானித்திருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அனைத்து தரப்பினரும் ஏற்கனவே ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாட்டின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே மேற்கண்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்கு முனைய விவகாரம்; விசேட அறிக்கை வெளியிட்ட இந்தியா! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

எந்தவிதமான அழுத்தங்களை கொடுக்க கூடிய வரிகளோ, ஒரு சொல்லோ, மொழி நடையோ அற்ற ஒரு அறிக்கை கெஞ்சல்.

இந்தியாவிடம் முதுகெழும்பு இல்லை என்பதை எத்தனை தடவை தான் சிங்கள அரசுகள் உலகிற்கு பட்டவர்த்தனமாக காட்ட வேண்டி இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

எந்தவிதமான அழுத்தங்களை கொடுக்க கூடிய வரிகளோ, ஒரு சொல்லோ, மொழி நடையோ அற்ற ஒரு அறிக்கை கெஞ்சல்.

இந்தியாவிடம் முதுகெழும்பு இல்லை என்பதை எத்தனை தடவை தான் சிங்கள அரசுகள் உலகிற்கு பட்டவர்த்தனமாக காட்ட வேண்டி இருக்கின்றது.

இதைத்தான் நான் பலமுறை இங்கு எழுதி இருக்கிறேன் பலரும் எழுந்த மாத்திரத்தில் எதிர்க்கருத்து எழுதுவார்கள் அதுக்கு முக்கிய காரணம் நீண்ட கால அரசியல் கொள்கை இல்லாததுதான் முதல் காரணம் 
சுதந்திரம் அடைந்து இன்றுவரை இந்தியாவை சுற்றி ஒரு நட்பு நாடு கூட இந்தியாவுக்கு இல்லை 
அதுவே முதலாவது தோல்வி 

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலே கொள்கை வகுப்பாளர்களும் விலை  போன தேசம் என்றால் அது இந்தியா ஒன்றாகத்தான் இருக்கும் .

15 hours ago, நிழலி said:

எந்தவிதமான அழுத்தங்களை கொடுக்க கூடிய வரிகளோ, ஒரு சொல்லோ, மொழி நடையோ அற்ற ஒரு அறிக்கை கெஞ்சல்.

இந்தியாவிடம் முதுகெழும்பு இல்லை என்பதை எத்தனை தடவை தான் சிங்கள அரசுகள் உலகிற்கு பட்டவர்த்தனமாக காட்ட வேண்டி இருக்கின்றது.

நீங்கள் கூறிய கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா இப்போது ஒரு வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறது. சீனாகூட இந்தியாவை பார்த்து பயப்படுகின்றது. இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களாகிய மலையாளிகள்தான் இந்தியாவை மோசமான நிலைக்கு தள்ளியவர்கள். இப்போது அப்படி இல்லை.

இலங்கைக்கு இந்தியா பல எச்சரிக்கைகளை மறைமுகமாக ஜெய்சங்கர் மூலம் விடுத்திருக்கிறது. அதனால்தான் இப்போது கிழக்கு முனையத்தை விடுத்தது  மேட்கு முனையத்தை கொடுப்பதட்கு ஆயத்தமாகிறார்கள். இருந்தாலும் இந்திய அதட்கு சம்மதிக்குமா என்பது வேறு விடயம்.

கச்சத்தீவு, இந்திய கப்பல்கள் இலங்கையை புறக்கணிப்பது, சேது சமுத்திர திடடம், தமிழர் பிரச்சினை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் , போர்க்குற்றம் இப்படியாக நிறைய காரியங்கள் இருக்கின்றன. அதட்காக இலங்கை தமிழர்களுக்கு ஈழத்தை பெற்றுக்கொடுக்கப்போவதில்லை.

என்னை பொறுத்த வரைக்கும் இந்திய ராணுவ ரீதியாக முன்னரைவிட முன்னேற்றமடைந்ததுடன் , பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சியடைந்தது என்றே சொல்லலாம்.சில காரியங்களளை ராஜதந்திர ரீதியாகவும் செய்ய வேண்டும்.

6 hours ago, Robinson cruso said:

 சீனாகூட இந்தியாவை பார்த்து பயப்படுகின்றது. இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களாகிய மலையாளிகள்தான் இந்தியாவை மோசமான நிலைக்கு தள்ளியவர்கள். இப்போது அப்படி இல்லை.

இலங்கைக்கு இந்தியா பல எச்சரிக்கைகளை மறைமுகமாக ஜெய்சங்கர் மூலம் விடுத்திருக்கிறது.

கனவு காண்பதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கின்றது. உங்கள் உரிமையை மதிக்கின்றேன்.

14 hours ago, நிழலி said:

கனவு காண்பதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கின்றது. உங்கள் உரிமையை மதிக்கின்றேன்.

இது சிலருக்கு கனவாக இருக்கலாம் . ஆனால் அதுதான் நிஜம்.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210203-150146.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு முனைய விவகாரம் – அதிச்சியில் இந்தியா! ஜனாதிபதி, பிரதமருடன் தூதுவர் அவசர பேச்சு

Indian-HC-696x348.png
 33 Views

கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக அறிவித்த நிலையில் மறுநாளான நேற்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை அவசர அவசரமாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு முனையத்தை அபிவிருத்திசெய்வது தொடர்பாக 2019ம் ஆண்டு மே மாதம் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை இலங்கை கட்டாயமாக மதித்துச்செயற்படவேண்டும் என்பதே இந்தச்சந்திப்புக்களின் போது இந்தியத்தூதுவர் வலியுறுத்திய செய்தியின் சாராம்சமாகும் என தி ஹிந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை 51% சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் அதேவேளை இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக 49 % சதவீதமான பங்குகளைக் கொண்டிருக்கும்.

இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனமும் ஜப்பானிய நிறுவனங்களும் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான முதலீட்டை மேற்கொள்வார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை , கிழக்கு முனையம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இதுவரை இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்திருந்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 100 வீதம் துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் முன்னெடுக்கப்படும் என இலங்கை பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சரவைப் பத்திரமும் இதுதொடர்பில் சமர்பிக்கப்பட்டு கிழக்கு முனையத்தை 100 % இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்வதென தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/?p=41125

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறைமுகம்: இந்தியாவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த இலங்கை - என்ன நடந்தது?

2 பிப்ரவரி 2021
புதுப்பிக்கப்பட்டது 3 பிப்ரவரி 2021
இலங்கை பிரதமர்

பட மூலாதாரம்,SL PM OFFICE

இலங்கையின் பிரதான துறைமுகமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பகுதியை மேம்படுத்த இந்தியாவுடன் எட்டியிருந்த ஒப்பந்தத்தை மீறி அதை தனது துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்ற திடீர் முடிவை இலங்கை எடுத்திருக்கிறது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டிற்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு வழங்கவோ கூடாது என கடந்த சில தினங்களாக எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

இதன்படி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை திங்கட்கிழமை (பிப்ரவரி 1) அனுமதி வழங்கியது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு கோரி, கடந்த காலங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, துறைமுக தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்த முனையத்தின் முழுமையான பொறுப்பை, இலங்கை துறைமுக அதிகார சபைக்கு வழங்க வேண்டும் என்ற எழுத்துமூல கோரிக்கையை வலியுறுத்தியே இவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, துறைமுக சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலொன்றை ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர வெளியிட்டிருந்தார்.

துறைமுக சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் தமது போராட்டத்தை கைவிடவில்லை.

இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளுக்கு விற்கவோ அல்லது குத்தகைக்கோ வழங்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

இவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னணியிலும், போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

இலங்கை பிரதமர்

பட மூலாதாரம்,SL PM OFFICE

இதையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், துறைமுக தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் திங்கட்கிழமை (பிப்ரவரி 1) முற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது, துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க போவதில்லை என பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 2) முதல் போராட்டத்தை கைவிட துறைமுக தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்திருந்தன.

இவ்வாறான நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி மாலை குறித்த விடயம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டு, கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை பிப்ரவரி 1ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை பிரதமர்

பட மூலாதாரம்,SL PM OFFICE

இந்தியா எதிர்ப்பு

இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்ட முத்தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை செயற்படுமென எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையம் பிப்ரவரி 1ஆம் தேதி பிற்பகல் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று, வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து, இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அமைச்சரவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தீர்மானித்திருந்ததை இந்திய உயர்ஸ்தானிகராலயம் நினைவுப்படுத்தியுள்ளது.

உடன்படிக்கை கைச்சாத்திட்ட அனைத்து தரப்பினரும், ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, செயற்பட வேண்டும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையின் ஊடாக கூறியுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து 2019ஆம் ஆண்டு மே மாதம் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருந்தன.

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 49 வீதமும், இலங்கைக்கு 51 வீதமும் கிடைக்கும் வகையில் இந்த உடன்படிக்கை கடந்த ஆட்சி காலத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை, தற்போது நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் முயற்சித்த நிலையிலேயே, போராட்டம் வலுப் பெற்றது.

பொருளியலாளரின் பார்வை

இலங்கை பிரதமர்

பட மூலாதாரம்,SL PM OFFICE

இந்தியாவிற்கு கிழக்கு முனையம் வழங்கப்படும் என உறுதி வழங்கியதன் பின்னர், அதனை மீறப் பெறுவது நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியியல்துறை விரிவுரையாளர் எஸ்.விஜேசந்திரன் தெரிவிக்கின்றார்.

இலங்கை, பெரும்பாலான விடயங்களில் இந்தியாவையே நம்பி உள்ளதாக கூறிய அவர், இந்தியாவை பகைத்துக்கொள்வது தவறான விடயம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தியாவிற்கு கிழக்கு முனையம் வழங்கப்படாத பட்சத்தில், இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவினால் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதேபோன்று, இந்தியாவிலிருந்து மிக அதிகளவிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறிய அவர், அவ்வாறான பொருள் இறக்குமதிகளுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-55910927

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஏராளன் said:

உவர் தமிழர்தானே.. பதில் இப்படித்தான் வரும். சிங்களவரிடம் கேட்டிருந்தால் பதில் வேறு விதமாக வந்திருக்கலாம்.. 😂

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு கொள்கலன் முனையம்: இலங்கையால் இந்தியாவுக்கு ஏற்பட்ட அதிருப்தி - சீனா காரணமா?

  • சரோஜ் சிங்
  • பிபிசி நிருபர், தில்லி
2 மணி நேரங்களுக்கு முன்னர்
ராஜபக்‌ஷ் மற்றும் மோடி

பட மூலாதாரம்,TWITTER/@MEAINDIA

இலங்கையில் துறைமுகங்கள் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்புக் குரல் ஒலித்து வருகிறது. இதில், தொழிற்சங்கங்கள், பொது மக்கள், எதிர்க்கட்சிகள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.

இப்போது இலங்கையின் ராஜபக்ஷ அரசாங்கம் இந்தியாவுடனான ஒரு டிரான்ஸ் ஷிப்மென்ட் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளது.

இந்த டிரான்ஸ் ஷிப்மென்ட் திட்டம் கிழக்கு கொள்கலன் முனையம் (East container terminal) என்று அழைக்கப்படுகிறது. இதை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் 2019 மே மாதம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன - பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் போது செய்யப்பட்டது, இதை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செய்யவிருந்தன. இந்தியத் தரப்பிலிருந்து, அதானி துறைமுகம் இந்தத் திட்டத்தில் பணியாற்றவிருந்தது.

செய்தி

பட மூலாதாரம்,EPAPER.ISLAND.LK

இந்த ஒப்பந்தம் இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான முத்தரப்பு ஒப்பந்தம். இதில் 51 சதவீத பங்குகளை இலங்கையும், 49 சதவீத பங்கை இந்தியாவும் ஜப்பானும் வைத்திருந்தன.

திங்களன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, துறைமுகங்களை தனியார்மயமாக்குவதை எதிர்க்கும் தொழிற்சங்கங்களிடம், கிழக்கு கொள்கலன் முனையத்தின் 100 சதவீதப் பங்கும் இலங்கை துறைமுக ஆணையத்திற்குச் (SLAP) சொந்தமானதாக இருக்கும் என்று கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவரது அறிக்கைக்குப் பிறகு, இந்தியாவுடனான கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்துள்ளதாகச் செய்தி வந்தது.

கிழக்கு கொள்கலன் முனையம்

பட மூலாதாரம்,SLPA

ஈஸ்ட் கன்டெய்னர் டர்மினலின் முக்கியத்துவம் என்ன?

இந்தக் கொள்கலன் முனையம் வியூக ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்தப் பிராந்தியத்தின் மொத்த வணிகத்தில் சுமார் 70% இதன் மூலமே செய்யப்படுகிறது. இது, கொழும்புவுக்கு அருகில் உள்ளது. அண்டை நாடாக இருப்பதால், இந்தியாவும் இதை அதிகம் பயன்படுத்துகிறது.

கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு பதில் இப்போது மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் உதவியுடன் இயக்க இலங்கை அரசு விரும்புகிறது. இதன்படி, இந்தியா மற்றும் ஜப்பானுடன் அரசு- தனியார் கூட்டாண்மை அடிப்படையில் இலங்கை அதை உருவாக்க விரும்புகிறது. இருப்பினும், இதுவரை புதிய திட்டம் குறித்து இந்திய அரசு பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் உள்நாட்டு அரசியல்

சமீபமாக இந்தியா 50 ஆயிரம் கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை இலங்கைக்கு அனுப்பியது. இலங்கைஅரசும் இந்திய அரசின் இந்த முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரும் இலங்கையை, இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடு என்று பாராட்டினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

பின்னர் இலங்கை அரசு ஏன் இந்த முடிவை எடுத்தது?

ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, இதன் பின்னணியில் உள் நாட்டு அரசியலும் தொழிற்சங்கத்தின் தலையீடும் இருப்பதாகக் கருதுகிறார்.

சென்னையில் இருந்து பேசிய அவர், "இலங்கையை ஆளும் எந்த அரசும் தொழிற்சங்கத்துக்கு விரோதமான எந்த நடவடிக்கையையும் எடுக்கத் துணியாது. அந்த அளவுக்குத் தொழிற்சங்கங்களுக்கு அரசியல் தலையீடு உள்ளது. அவர்களின் அதிருப்திக்கு ஆளாகும் எந்தக் கட்சிக்கும் அது பெரிய இழப்பாகவே இருக்கும். சில கட்சிகள் இதை ஒப்புக்கொள்கின்றன, சில ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் இது அனைத்துக் கட்சிக்கும் பொருந்தும். முந்தைய அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், அவர்களது ஆட்சிக்காலத்தில் கூட இதன் பணிகளை தொடங்க முடியவில்லை." என்று கூறுகிறார்.

இத்தகைய சூழ்நிலையில், இந்தத் திட்டத்தில் இந்தியா இதில் ஈடுபடுவதை தொழிற்சங்கம் விரும்பாத நிலையில், ஆளும் கட்சி அதன் கோபத்திற்கு ஆளாக விரும்பாது.

மூத்த பத்திரிகையாளர் டி.ஆர்.ராமச்சந்திரன் இந்தியாவுடனான திட்டத்தை ரத்து செய்வதற்குப் பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாகக் கருதுகிறார். முதல் காரணம், இந்தியாவின் தமிழ்ச் சமூகம் மற்றும் இலங்கையின் சிங்களச் சமூகம் ஆகியவற்றுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் என்கிறார் அவர்.

கிழக்கு கொள்கலன் முனையம்

பட மூலாதாரம்,SLPA

"தமிழ்ச் சமூகத்தினர் அங்கு சிறுபான்மையினராகக் கருதப்படுகின்றனர். இந்தியாவிலிருந்து வரும் எந்த உதவியும் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆதிக்கமாகவே அவர்களால் பார்க்கப்படுகிறது. எனவே அங்குள்ள தொழிற்சங்கத்தினர், இந்தியாவின் உதவியுடன் எந்தத் திட்டமும் வருவதை விரும்பவில்லை. துறைமுகத் தொழிற்சங்கத்தில் தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம் இருந்தாலும், சிங்களர்களின் ஆதிக்கமே நிலவுகிறது," என்று அவர் கூறுகிறார்.

கடந்த ஒன்றரை மாதங்களாக தனியார்மயமாக்கலுக்கு எதிராகக் குரல்கள் எழுப்பப்பட்டு வருவதாகவும், ஆளும் கட்சி பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இதன் காரணமாக ஆட்சிக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று ஆளும் கட்சி அஞ்சுகிறது. துறைமுகத் தொழிற்சங்கம் தனியார்மயமாக்கலை எதிர்ப்பது மட்டுமல்லாமல், இப்போது பொது மக்களும் அவர்களுடன் சேர்ந்துள்ளனர்.

இலங்கையில் சீனாவின் தலையீடு

ஷி ஜின் பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி.ஆர்.ராமச்சந்திரன், சீனாவின் அதிகரித்துவரும் அழுத்தத்தை இலங்கையின் இந்த முடிவின் பின்னணியில் உள்ள இரண்டாவது காரணியாகக் கருதுகிறார்.

"அடுத்த 15-20 ஆண்டுகளில், இலங்கையின் மக்கள் தொகையில் முழு ஆதிக்கத்தைச் சீனா பெற்றுவிடும். அந்த அளவுக்கு இன்று சீனர்களின் தொகை அங்கு அதிகரித்துள்ளது. இலங்கையில் தற்சமயம் சீனாவின் திட்டங்கள் பல நடைமுறையில் உள்ளன. அவற்றிலிருந்து சீனா வெளியேற்றப்படவில்லை. இது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். " என்பது அவர் கருத்து.

"சிறு சிறு நாடுகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கி அவர்களை அடிமைப்படுத்துவதே சீனாவின் உத்தியாக உள்ளது. இலங்கையிலும் இதுவே நிலை. இதனால், சிறிய நாடுகளுக்குத் தங்களின் நன்மை தீமைக்கான முடிவுகளை எடுக்கும் திறன் இல்லாமல் போய் விடுகிறது." என்று விளக்குகிறார் டி.ஆர்.ராமச்சந்திரன் .

இதற்கு உதாரணமாக ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவின் கடனை அடைக்க முடியாததால், இலங்கை, ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவின் மெர்ச்சண்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட்டது. 2017 ஆம் ஆண்டில், இந்த துறைமுகம் 1.12 பில்லியன் டாலருக்கு அந்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனுடன், அருகிலுள்ள சுமார் 15,000 ஏக்கர் நிலமும் தொழில்துறை மண்டலமாக சீனாவுக்கு வழங்கப்பட்டது.

ஒரே நேரத்தில் இந்தியா, சீனா இரு நாடுகளுடனும் சமரச முயற்சி

இந்தியாவின் வெளியுறவு விவகாரங்கள் பிரிவின் மூத்த பத்திரிகையாளரும், டைம்ஸ் ஆப் இந்தியாவின் இராஜரீக பிரிவின் ஆசிரியருமான இந்திராணி பாக்ச்சியும் இந்த முடிவுக்குப் பின்னால் சீனாவும் ஒரு காரணம் என்று கருதுகிறார்.

பிபிசியுடனான உரையாடலில், "கிழக்கு கொள்கலன் முனையத்தில் இலங்கையின் 100% பங்குகளை தொழிற்சங்கம் விரும்பினால், அங்குள்ள அரசாங்கம் ஏன் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு முன்மொழிகிறது? தொழிற்சங்கத்திற்கு அதில் எந்த பிரச்னையும் இல்லையா? சீனாவுடனான எந்தத் திட்டத்திலும் இவ்வாறு தடையில்லையே ஏன்?," என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

அவர் மேலும் கூறுகையில், "சிறிசேன அரசு இந்தியாவுடன் இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்ட போதும், சீனா பெரும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தது. ராஜபக்ஷ சீனாவுக்கு நெருக்கமாக இருப்பவர் என்ற கருத்தும் நிலவுகிறது. புதிய அரசாங்கம் சீனாவுடன் பொருளாதார உடன்படிக்கைகளையும் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் செய்து கொண்டு, இருவருடனும் சமரசம் செய்ய முயற்சிக்கிறது." என்று தெரிவிக்கிறார்.

பொருளாதார ரீதியில் ஒரு நாட்டுடனும் பாதுகாப்பு ரீதியில் இன்னொரு நாட்டுடனும் உடன்பட்டிருப்பது என்பது நடைமுறையில் சிக்கலானது என்று இந்திராணி கூறுகிறார்.

இலங்கை அரசாங்கத்தின் சமீபத்திய முடிவு நிச்சயமாக இந்திய அரசின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கைக்கு விழுந்த ஒரு அடியாகும்.

ஆனால் இந்திராணி இதை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியாகக் கருதவில்லை. ஒரு திட்டம் கை நழுவிப் போனதால் அப்படிச் சொல்லி விட முடியாது என்றாலும், இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் எப்போதும் சிக்கலானவையே என்றும் இது ஒரு புதிய விஷயம் அல்ல என்றும் அவர் கூறுகிறார்.

புதிய அரசுடன் இந்தியாவின் நெருக்கம்

இலங்கை

பட மூலாதாரம்,RAVEENDRAN / GETTY

2019 நவம்பரில் இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து, இதுவரை இந்தியா இதுபோன்ற பல முயற்சிகளை எடுத்துள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகரித்து வரும் இடைவெளியைக் குறைக்கும் முயற்சியாகவே காணப்பட்டது.

இலங்கையில் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டபோது முதலில் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் மறுநாள் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்குச் சென்றார். அவர் கோத்தபய ராஜபக்ஷவைச் சந்தித்தார், மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில், இந்தியாவுக்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்தார்.

இதன் பின்னர் கோதபய ராஜபக்ஷ நவம்பரில் இந்தியாவுக்கு விஜயம் செய்தார், இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான உறவு ஏற்பட்டது.

இந்த விஜயம் தொடர்பாக இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை கண்காணித்த நிபுணர்களுக்கு வியப்பு ஏற்பட்டது. ஏனென்றால் கோத்தபய, சீனாவுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்பட்டது.

இதன் பின்னர், ஜனவரி மாதம் இலங்கை சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியாவின் தரப்பிலிருந்து இலங்கைக்கு 50 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்ற உறுதிமொழியும் அளித்தார்.

அண்மையில், கொரோனா தொற்றுநோய்க்கான தடுப்பு மருந்தும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பியுள்ளார். ஆனால் மோடி அரசு எடுத்த இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையை இந்தியாவின் பக்கம் ஈர்ப்பதற்குப் போதுமானதாக இல்லை என்பது போல் இன்றைய நிலை உள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இலங்கை அரசு தனது முடிவைத் திரும்பப் பெற வைக்க இந்திய அரசின் முயற்சிகள் இன்னும் தொடர்வதாக மூத்த பத்திரிக்கையாளர் டி.ஆர்.ராமச்சந்திரன் கூறுகிறார்.

"இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி இலங்கை செய்தித்தாள்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்த பிரச்னையை இலங்கை அரசாங்கத்தால் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. இந்திய அரசு நம்பிக்கையிழக்கவில்லை. இந்த விவகாரம் சற்று சிக்கலானதும் தீவிரமானதும் கூட என்பதால் தீர்வு காண கால தாமதாம் ஆகலாம்" என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய அளவிலான டிரான்ஸ்ஷிப்மென்ட் துறைமுகத்தை இந்தியா கட்டினால், இலங்கை மீதான சார்புநிலையைக் குறைக்க முடியும் என்று இந்திராணி கூறுகிறார். இது இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டாலும், இலங்கையும் இதனால் அதிகம் பாதிக்கப்படும். ஆனால், இலங்கை சீனாவுடன் இன்னும் நெருக்கமாகச் செல்லவும் நேரலாம்.

https://www.bbc.com/tamil/sri-lanka-55926539

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துறைமுக உடன்படிக்கையில் இலங்கையின் திடீர் மாற்றத்தால் அதிர்ப்தியை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய உயர்ஸ்தானிகர்.

(ஆர்.யசி)

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் திடீரென மாற்றியுள்ளதை அடுத்து ஜனாதிபதி,பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளதுடன், இலங்கையின் திடீர் மாற்றம் குறித்து தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் இலங்கையின் தீர்மானத்தை  இன்னமும் இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை என்பதை அரசாங்கம் கூறியுள்ளதுடன்  எதிர்வரும் நாட்களின் இந்தியாவுடன் இராஜதந்திர ரீதியில் அணுகுவதற்கு முயற்சிகளை எடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா - ஜப்பான் கூட்டு முயற்சியில் முதலீடுகளை கொண்டு அபிவிருத்தி செய்ய இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் தற்போது மாற்றியுள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுடனும், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுடனும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்திப்புகளை நடத்தியுள்ளார். இலங்கையின் அவசர முடிவுகள் குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவே தெரிய வருகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை 51வீத உரிமம் இலங்கைக்கு 49 வீத உரிமத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் முதலீடுகளை செய்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இலங்கையுடன் முத்தரப்பு உடன்படிக்கை ஒன்றினை செய்துள்ள நிலையில் அந்த உடன்படிக்கைக்கு அமையவே இதுவரை காலமாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென நாட்டில் எழுந்த துறைமுக தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை அடுத்து அரசாங்கம் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபைக்கே வழங்குவதாகவும், மேற்கு முனையத்தை இந்திய, ஜப்பான் கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போது அறிவித்துள்ள நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

துறைமுக உடன்படிக்கையில் இலங்கையின் திடீர் மாற்றத்தால் அதிர்ப்தியை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய உயர்ஸ்தானிகர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தின் அடியில் படுத்து தவம் கிடக்க வேண்டியான். அணில் தாவி சீனாவுக்கு  போய்விடும். வாலை தொங்கபோட்டுக்கொண்டு, தன்னையே நொந்துகொண்டு, வந்த வழியே திரும்புவதன்றி வேறு வழியில்லை.

6 hours ago, பெருமாள் said:

Image result for அணில் ஏற  விட்ட நாய்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை

இத்து எப்பிடியிருக்கு...? 😜

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு முனையம்: சர்வதேச வாக்குறுதிகளை இலங்கை பின்பற்ற வேண்டும்- இந்தியா

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக இலங்கை, தனது சர்வதேச வாக்குறுதிகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகுமென இந்தியா மீண்டும் அறிவித்துள்ளது.

கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே இந்திய வெளிவிவகார அமைச்சின்பேச்சாளர் அனுரக் ஸ்ரீவத்சவ இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியா,  இலங்கை மற்றும்  ஜப்பான் அரசாங்கங்கள், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்து இயக்குவதற்காக கடந்த 2019 மே மாதம் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டமை அனைவரும் தெரிந்த விடயமாகும்.

மேலும், துறைமுகம் எரிசக்தி போன்றவற்றில் இலங்கையின் உட்கட்டமைப்புகளை இந்தியா சீனாவின் முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்வது, பரஸ்பர நன்மையளிக்க கூடிய விடயமாக காணப்படும் என நாங்கள் நம்புகின்றோம்.

ஆகவே இவ்விடயம் தொடர்பாக  சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றியமை தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/கிழக்கு-முனையம்-சர்வதேச/

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210205-112958.jpg 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2021 at 06:33, Robinson cruso said:

நீங்கள் கூறிய கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா இப்போது ஒரு வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறது. சீனாகூட இந்தியாவை பார்த்து பயப்படுகின்றது. இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களாகிய மலையாளிகள்தான் இந்தியாவை மோசமான நிலைக்கு தள்ளியவர்கள். இப்போது அப்படி இல்லை.

நீங்கள் சொல்வது ( இந்தியா இப்போது ஒரு வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறது) முற்றாக இல்லாவிட்டாலும், ஹிந்தியா  தனித்து நிற்பதற்கு அதனிடம் நம்பிக்கை இல்லை.

இந்த நம்பிக்கை சீனவிடம் இருக்கிறது.

மலையாளிகள் விட்டது என்பது நிரந்தரமானது என்பதை உலகின் நம்பிக்கையை பெற்ற கிந்தியாவின் கேந்திர மூலோபாய  ஆய்வாளரான பிரம்ம சலெனியின் முடிவு.   

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2021 at 06:33, Robinson cruso said:

இலங்கைக்கு இந்தியா பல எச்சரிக்கைகளை மறைமுகமாக ஜெய்சங்கர் மூலம் விடுத்திருக்கிறது. அதனால்தான் இப்போது கிழக்கு முனையத்தை விடுத்தது  மேட்கு முனையத்தை கொடுப்பதட்கு ஆயத்தமாகிறார்கள்.

இந்த மேற்கு விடயம் மைத்திரியும் செய்து பார்த்து தான் கிழக்கே வேண்டும் என்று ஹிந்தியை அலுங்கு பிடி பிடித்து, சிங்களத்தில் சொல்வதானால் பறையா (இங்கு சாதியை குறிப்பிடவில்லை) டெமுலு dR. ஜெயசங்கர் வந்து எச்சரிக்கை எல்லாம் கொடுத்து, காசும் கொடுத்து, கோவிட மருந்தும் கொடுத்த பின், சிங்களம் கிந்தியாவுக்கு குளிசை கொடுத்து ஆப்படித்து இருக்கிறது.

ஆம், சிங்களம் பாதுகாப்புச்சபைக்கும் தயார் சீன தயாவில். கிந்தியாவே unhrc இல் வைத்து இருக்கிறது, unsc க்கு போனால் கிந்தியா ஓரம் கட்டப்படும் என்று.

மற்றது, சொறி சிங்களம் ஒன்றையும் கிந்தியாவுக்கு கொடுக்காது. மேற்கை கிந்திய ஏற்றுகுமாயின், சிங்களத்துக்கு பலம் நழுவி பாலில் விழுந்த கதையாக இருக்கும். சட்ட இடையூறுகள், இறைமை, சுற்றுசூழல் நலன் என்று சொல்லி சிங்களம் இழுக்க, மேற்கத்தி தோண்ட பல தொல்பொருள் சான்றுகள் வரும்,    
மற்ற பக்கத்தால் வேலையில்லாமல் திண்டு கொழுத்து இருக்கும் மொட்டந்தலைகள் தோல்புருள் ஆய்விடம் என்று சொல்லி வெளிக்கிடுவினம்.     

ஆனால், சிங்களம் செய்ததை நான் வரவேற்றுகிறேன். இரத்த, வரலாற்று தொடர்புள்ள அயலவனாக வரவேட்ப்பு அறைக்கு வந்து கூடி கலந்து உறவாட அழைக்க, கிந்தியா படுக்கை அறையில் வந்து நின்று வெளிச்சம் போடு பார்க்க வேண்டும் என்கிறது. 

தமிழ் தரப்பு விட வீட்டுக் கொண்டு இருக்கும் பிழையும் அது தான். சும்மா எமோஷனல்  ஹிந்தியை / இந்தியா என்று.   

எங்கெளுக்கென்ன கூத்து தானே.  ஹிந்திவாவுடன் ஈழத்தமிழரின் அணுகு முறையும் கண்போனலும் பிரச்னை இல்லை, கிந்தியாவுக்கு தலை போனால் எல்லாம் நன்றே. 

2 hours ago, Kadancha said:

பொறுத்திருந்து பார்ப்போம் ஹிந்தியாக்காரன் என்ன செய்கிறான் என்று. இப்படியே போய் தமிழனுக்கு ஒரு தீர்வாவது கிடைத்தால் நல்லதுதானே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.