Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.குடா நாட்டில் மூன்று தீவுகள் சீன நிறுவனத்திற்கு - கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்க சீன நிறுவனம் ஒன்றுக்கு யாழ்.குடா நாட்டில் உள்ள மூன்று தீவுகளை வழங்க கடந்த ஜனவரி 18 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியமை தொடர்பில் இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.

நெடுந்தீவு, நாயினாதீவு மற்றும் அனல்தீவு ஆகியவற்றில் மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்க சீன நிறுவனத்திற்கு இடமளித்தமை குறித்தே இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தொலைவில் இருக்கும் தீவுகளை சீனாவுக்கு வழங்குவது தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்தியா கூறியுள்ளது.

எனினும் உரிய விலை மனு கோரலின் அடிப்படையிலேயே சீன நிறுவனம் இந்த திட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

வெளிநாடுகளில் முதலீடுகளை செய்யும் சீன நிறுவனங்கள் அனைத்து அந்நாட்டின் அரச நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/politics/01/268233?ref=home-imp-parsely

  • Replies 127
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பண்ணியில் பண்ணிப்பாருங்கோவன்.

நாயாய், பேயாய் ஈழத்தமிழன் இவ்வளவு காலமாய் புலம்பியது போல இந்தியாவும் புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

சீனாவோட சேட்டை விட ஏலாது. அவன் நீண்ட கால  ஐடியா போட்டு வந்திட்டான். இனி கிளப்புவது கஷ்டம். அனைத்துக்கும் மேலே, தமிழர்களுக்கு இந்தியா மேல நம்பிக்கை வைக்க காரணம்  எதுவுமே இல்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்

திருவிளையாடல் ஆரம்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

பண்ணியில் பண்ணிப்பாருங்கோவன்.

நாயாய், பேயாய் ஈழத்தமிழன் இவ்வளவு காலமாய் புலம்பியது போல இந்தியாவும் புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

சீனாவோட சேட்டை விட ஏலாது. அவன் நீண்ட கால  ஐடியா போட்டு வந்திட்டான். இனி கிளப்புவது கஷ்டம். அனைத்துக்கும் மேலே, தமிழர்களுக்கு இந்தியா மேல நம்பிக்கை வைக்க காரணம்  எதுவுமே இல்லையே. 

அறுவான்கள், கடைசியாய்... எங்கடை காணிக்குள்ளை நிண்டுதான், சண்டை பிடிக்கப் போறாங்களோ எண்டு பயமாய் இருக்கு. 🥺

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

அறுவான்கள், கடைசியாய்... எங்கடை காணிக்குள்ளை நிண்டுதான், சண்டை பிடிக்கப் போறாங்களோ எண்டு பயமாய் இருக்கு. 🥺

பயப்பிட வேண்டாம். ஒருகையில் ஓசை வராது. சும்மா காத்தில விசுக்கிட்டு கம்மென்று இருப்பினம்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான், பங்களாதேஷ்,மியன்மார்,இலங்கை,சீனா,நேபாளம் என்று சுற்றியுள்ள எந்த நாடுமே நண்பனாக இல்லாத நாடு இந்தியா.

அனைத்து நாடுகளிலுமே சீனாவின் ஆதிக்கம். இனி எந்த நாடுகளையும் இந்தியாவால் மிரட்ட  முடியாது சீனா அந்தநாடுகளுக்கு ஆதரவாக முன்புபோல் மறைமுகமாக அன்றி நேரடியாகவே களத்தில் இறங்கும் நிலையில்தான் அந்தந்த நாடுகளில் முதலீடு செய்து  காலூன்றியிருக்கிறது.

இலங்கைகூட இந்தியாவிடம்பெற்ற பல ஆயிரம் கோடியை சீன உதவியுடனேயே திரும்ப செலுத்தியிருக்கிறது என்கிறார்கள். இனி கடன்களை காட்டி மிரட்டுவதும் கஷ்டம்.

இலங்கை விஷயத்தில் எல்லாம் போனால் இந்தியாவுக்கு இருக்கும் ஒரேவழி ஈழதமிழர்கள்.

மீண்டும் அவர்கள் பிரச்சனையில் திடீர் அக்கறை வந்து, மீண்டும் ஒரு ஆயுதபோரை தூண்டிவிட இந்தியா தயங்காது. 

அப்படி ஏதும் முயற்சியில் இந்தியாஇறங்கினால் ஆமா வர்றோம் என்று சொல்லிவிட்டு ஆதாரத்துடன் ஐநா வரை சென்று இன்னொரு நாட்டின் மீதான இந்திய சதியை ஈழதமிழர் காட்டி கொடுத்துவிட்டு  இதுதான் நமக்கு விதித்த வழியென்று வடகிழக்கில் சீனர்களுடன்  சேர்ந்து வாழ பழகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் *** எச்சரித்தும் எல்லாவற்றையும் கோட்டை விட்டு இனி அழுதென்ன???

Edited by மோகன்
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, valavan said:

பாகிஸ்தான், பங்களாதேஷ்,மியன்மார்,இலங்கை,சீனா,நேபாளம் என்று சுற்றியுள்ள எந்த நாடுமே நண்பனாக இல்லாத நாடு இந்தியா.

மாலைத்தீவு ??

14 minutes ago, valavan said:

இலங்கை விஷயத்தில் எல்லாம் போனால் இந்தியாவுக்கு இருக்கும் ஒரேவழி ஈழதமிழர்கள்.

அய்ய.... இவர்களை நம்பி இனியும் மனிசன் ஆயுதம் தூக்குவானே...

வரதராசருக்கும், பரந்தன் ராஜனுக்கும் வயசு போட்டுது. இனி கஸ்டம். 

பிரிட்டிஷ்காரன் காலத்தில், நாம சிறப்பா இங்கிலிஷ் படிச்சதால, அவனும் எங்களை நல்லா வைச்சு இருந்தான், சிங்களவன் வயிரு எரிய நாமும் மலேசியா, சிங்கப்பூர், பர்மா என்று அரச வேலைகளை பார்த்தம். 

அதாலை நான் மாண்டரின் படிக்க தொடங்கி விட்டேன்.

போன முறை, இந்திய அமைதிப்படை வந்தபோது, பிரபாகரன் என்னும் தைரியமும், வீரமும் மிக்க, இலங்கையன் சண்டை போட்டு, எமது சுதந்திரத்தினை காத்து தந்தான் என்றார் இலங்கையின் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச.

இந்த முறை, உள்ள வந்திருக்கிற சீனனை, சிங்களவன் எப்படி அனுப்ப முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

தலைவர் *** எச்சரித்தும் எல்லாவற்றையும் கோட்டை விட்டு இனி அழுதென்ன???

இந்திய விசுவாசம் இன்னும் போகவில்லையா விசுகு?

  • கருத்துக்கள உறவுகள்

தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் என்ற நிலையில் இந்தியா.இன்னும் கை மீற விi;லை. இந்தியா உள சத்தியோடு தமிழர் தாயகத்தை அங்கீகரித்து  உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும். அனால் கெடுகுடி சொற் கோளாது. தமிழர்தாயகத்தில் சீனாவைக் காலூன்ற விடுவது இந்தியா தன்தலைக்க தானே மண் அள்ளிப் போடுவதற்கு சமம்.

  • கருத்துக்கள உறவுகள்

BRISL (@BRI_SL) Tweeted:

Subscribe to @BRI_SL YouTube channel for full videos ; https://t.co/CzaD6uMJtf https://t.co/oXb7XIKpu9    இதுஅமெரிக்க ஜனாதிபதி அல்ல, இது திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்க,  சீன பிரதமர் சூ என் என் லாய் விமான நிலையத்தில் 1964 இல் பெய்ஜிங்கில் அளித்த  பெரும் வரவேற்பு.

1 hour ago, தமிழ் சிறி said:

அறுவான்கள், கடைசியாய்... எங்கடை காணிக்குள்ளை நிண்டுதான், சண்டை பிடிக்கப் போறாங்களோ எண்டு பயமாய் இருக்கு. 🥺

இந்த 50 வருஷமாக இவங்கள் நடத்தின சண்டையும் அழிவும் வேற ஆற்றையும் காணிக்குள்ளேயோ நடந்தது? 

சிங்களவருக்கு 50 வருஷத்துக்கு முதலே விளங்கினது தமிழருக்கு இன்னமும் தலைக்குள்ள இறங்குதில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, valavan said:

சீனர்களுடன்  சேர்ந்து வாழ பழகவேண்டும்.

சீனர்களுடன்  நாங்கள் சேர்ந்து வாழப்போவது எங்கள் திண்ணைக்கு எப்படி மணத்தது? இப்ப சில நாட்களாகத் திண்ணையில் ஒரே பூனை, நாய், புழு, பூச்சிகள் பற்றித்தான் புடுங்குப்பாடு.😅 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, புலவர் said:

தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் என்ற நிலையில் இந்தியா.இன்னும் கை மீற விi;லை. இந்தியா உள சத்தியோடு தமிழர் தாயகத்தை அங்கீகரித்து  உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும். அனால் கெடுகுடி சொற் கோளாது. தமிழர்தாயகத்தில் சீனாவைக் காலூன்ற விடுவது இந்தியா தன்தலைக்க தானே மண் அள்ளிப் போடுவதற்கு சமம்.

இந்தியாவா ... 😱 

வேண்டவே வேண்டாம்..😡

நான் யாழ்ப்பாணத்தில Chinese Restaurant  திறக்கப்போறன் முதலீடு தேவை... Anyone ?

(ஐம் சோ சீரியஸ்)

😂😂

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கற்பகதரு said:

இந்த 50 வருஷமாக இவங்கள் நடத்தின சண்டையும் அழிவும் வேற ஆற்றையும் காணிக்குள்ளேயோ நடந்தது? .

யூட்டர்,

அது, நாம, சிங்களவனோடயும், இந்தியாவோடயும் போட்ட சண்டை.

இது, சீனாவும், இந்தியாவும் போடப்போற சண்டை.

இரண்டுக்கும் வித்தியாசம் விளங்குதேயும்?

சிங்களவன், மூளையா, தென் பகுதில இருந்து நகர்த்திப் போட்டான்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, valavan said:

பாகிஸ்தான், பங்களாதேஷ்,மியன்மார்,இலங்கை,சீனா,நேபாளம் என்று சுற்றியுள்ள எந்த நாடுமே நண்பனாக இல்லாத நாடு இந்தியா.

அனைத்து நாடுகளிலுமே சீனாவின் ஆதிக்கம். இனி எந்த நாடுகளையும் இந்தியாவால் மிரட்ட  முடியாது சீனா அந்தநாடுகளுக்கு ஆதரவாக முன்புபோல் மறைமுகமாக அன்றி நேரடியாகவே களத்தில் இறங்கும் நிலையில்தான் அந்தந்த நாடுகளில் முதலீடு செய்து  காலூன்றியிருக்கிறது.

இலங்கைகூட இந்தியாவிடம்பெற்ற பல ஆயிரம் கோடியை சீன உதவியுடனேயே திரும்ப செலுத்தியிருக்கிறது என்கிறார்கள். இனி கடன்களை காட்டி மிரட்டுவதும் கஷ்டம்.

இலங்கை விஷயத்தில் எல்லாம் போனால் இந்தியாவுக்கு இருக்கும் ஒரேவழி ஈழதமிழர்கள்.

மீண்டும் அவர்கள் பிரச்சனையில் திடீர் அக்கறை வந்து, மீண்டும் ஒரு ஆயுதபோரை தூண்டிவிட இந்தியா தயங்காது. 

அப்படி ஏதும் முயற்சியில் இந்தியாஇறங்கினால் ஆமா வர்றோம் என்று சொல்லிவிட்டு ஆதாரத்துடன் ஐநா வரை சென்று இன்னொரு நாட்டின் மீதான இந்திய சதியை ஈழதமிழர் காட்டி கொடுத்துவிட்டு  இதுதான் நமக்கு விதித்த வழியென்று வடகிழக்கில் சீனர்களுடன்  சேர்ந்து வாழ பழகவேண்டும்.

இப்ப டில்லிக்கும் எரிக்குக்கும்  ஈழத்தமிழரின் இரத்தபலி  தேவைப்படுது அப்படியே கோத்தாவுக்கும் தமிழரின் இறைச்சி தேவைப்படும் சூழல் மீண்டும் தமிழரை டெல்லியின் அறிவுரைப்படி தமிழரை பப்பா  மரத்தில் ஏத்தும்  முயற்சியில் தமிழ் கட்சிகள் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

இந்தியாவா ... 😱 

வேண்டவே வேண்டாம்..😡

நான் யாழ்ப்பாணத்தில Chinese Restaurant  திறக்கப்போறன் முதலீடு தேவை... Anyone ?

(ஐம் சோ சீரியஸ்)

😂😂

இதுக்கென்ன முதலீடு.... கட்டாகாலி நாயல், திரியுது.... தாராளமா சாரை பாம்புகளும் இருக்கு. பிறகென்ன, யாபாரம் அள்ளும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இந்தியாவா ... 😱 

வேண்டவே வேண்டாம்..😡

நான் யாழ்ப்பாணத்தில Chinese Restaurant  திறக்கப்போறன் முதலீடு தேவை... Anyone ?

(ஐம் சோ சீரியஸ்)

😂😂

கபிதன்! கப்சிப்பாக இருக்கவேணும். எங்கள் குமாரசாமியண்ணை எங்களையும் சேர்த்து Chinese Restaurant  திறக்க எப்பவோ ஐடியா போட்டிட்டார்.🤨 

1 hour ago, தமிழ் சிறி said:

1அறுவான்கள், கடைசியாய்... எங்கடை காணிக்குள்ளை நிண்டுதான், சண்டை பிடிக்கப் போறாங்களோ எண்டு பயமாய் இருக்கு. 🥺

தமிழ் சிறி  இந்த உரையாடல்  1984 க்கு பின்னர யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் அப்பாவி கிராமவாசிகளால்   உரையாடப்பட்ட உரையாடல் போல் உள்ளது.😂  ஞாபகம் இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

தமிழ் சிறி  இந்த உரையாடல்  1984 க்கு பின்னர யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் அப்பாவி கிராமவாசிகளால்   உரையாடப்பட்ட உரையாடல் போல் உள்ளது.😂  ஞாபகம் இருக்கிறதா?

ருல்பன்... 1984’ல் நான் ஊரில் இல்லாததால் இதனை கேள்விப் படவில்லை. 😁

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

இதுக்கென்ன முதலீடு.... கட்டாகாலி நாயால், திரியுது.... தாராளமா சாரை பாம்புகளும் இருக்கு. பிறகென்ன, யாபாரம் அள்ளும்.

இது பகிடி அல்ல.

சீனர்களின் ஓர் பகுதி அல்லது பிரதேச மக்கள் தான் நாயை உணவாக எடுப்பது. 

பாம்பு சீனர்களால் அல்ல, வியட்நாயரே முக்கியதுவம் கொடுப்பது.

சீனர்களின் சனத்தொகை பெரிது என்பதால், வெளியாருக்கு அருவருப்பான உணவு வகைகளை சீனர்கள் எல்லோரும் விரும்புவதாக எடுத்து கொள்வது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இந்திய விசுவாசம் இன்னும் போகவில்லையா விசுகு?

நான் எழுதியதில் நீங்கள் புரிந்து கொண்டது என்ன என்பதை எழுதினால் தொடரலாம் சகோ. 

எங்கழுக்கு வெள்ளை கடற்கரைக்கு அண்மையில் 100 பரப்பு காணி உள்ளது. இந்தியா விரும்பினால் அதை அவர்கழுக்கு குத்தகைக்கு விட விருப்பமாய் உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ்செல்வன் said:

எங்கழுக்கு வெள்ளை கடற்கரைக்கு அண்மையில் 100 பரப்பு காணி உள்ளது. இந்தியா விரும்பினால் அதை அவர்கழுக்கு குத்தகைக்கு விட விருப்பமாய் உள்ளோம்.

சீனாக்காரன் பெர்மிஷன் தரவேண்டுமே....

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ்செல்வன் said:

எங்கழுக்கு வெள்ளை கடற்கரைக்கு அண்மையில் 100 பரப்பு காணி உள்ளது. இந்தியா விரும்பினால் அதை அவர்கழுக்கு குத்தகைக்கு விட விருப்பமாய் உள்ளோம்.

இவர், உந்த பெயரில் வருவதற்கு யாழ் எப்படி அனுமதி கொடுத்தது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ்செல்வன் said:

எங்கழுக்கு வெள்ளை கடற்கரைக்கு அண்மையில் 100 பரப்பு காணி உள்ளது. இந்தியா விரும்பினால் அதை அவர்கழுக்கு குத்தகைக்கு விட விருப்பமாய் உள்ளோம்.

யாருப்பா இது வரும்போதே பெட்ரோல் பவுசருடன்  வருகினம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.