Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிய கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் இரணைதீவில் - அங்குரார்ப்பணம் செய்தார் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடலுணவு உற்பத்திக்கான கேந்திர மையமாக இரணைதீவு உருவாக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

iranai_1.jpg

இரணைதீவில் இன்று(14.02.2021) கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர்,

இரணைதீவு மக்களின் வாழ்கை செழிப்படைய வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்ததுடன், கடலட்டை பண்ணையின் இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்துள்ள மேலும் பல பேருக்கும் பொருத்தமான பிரதேசங்களை அடையாளப்படுத்தி வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் கொடுவா மீன் உற்பத்திப் பண்ணைகளையும் உருவாக்கி எண்ணெய் வளத்தின் கேந்திர நிலையமாக மத்திய கிழக்கு நாடுகள் விளங்குவது போன்று, இலங்கையின் கடலுணவுகளுக்கான   கேந்திர நிலையமாக இரணைதீவு பிரதேசம் மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சரின் முயற்சியினால்  சுமார் 70 மில்லியன் ரூபாய் ஆரம்ப முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இரணைதீவு கடலட்டைக் கிராமத்தின் முதலாவது கட்டத்தில் இரணைதீவை சேர்ந்த 83 இரணைதீவைச் சேர்ந்த பயனாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

iranai_6.jpg

சர்வதேச சந்தையில் தாராளமான சந்தை வாய்ப்பைக் கொண்டுள்ள கடலட்டைகளை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக பதனிட்டு ஏற்றமதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த பண்ணையின் ஊடாக, சுமார் 300 பேருக்கு நேரடியான தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 400 பேர் மறைமுகமாக தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் கூட்டு செயற்பாட்டுப் பொறிமுறை ஊடாக உருவாக்கப்பட்டுள்ள குறித்த பண்ணைக்கான திட்டமிடலின் போது, கணிசமான பலனை இரணைதீவு மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்வில் உரையாற்றிய தனியார் முதலீட்டாளர்களான சுகத் இன்ரனாஷனல் பிறைவேற் லிமிட்டெட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அரவிந்தன், குறித்த பண்ணையின் வருமானத்தில் 75 வீதமானவை இரணைதீவு மக்களையே சென்றடையும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாரிய கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் இரணைதீவில் - அங்குரார்ப்பணம் செய்தார் டக்ளஸ் | Virakesari.lk

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, சுவைப்பிரியன் said:

நல்ல விடையம்.

துரோகிகள் செய்வது நல்ல விடயமாக ஏற்றுக்கொள்ள மாட்டம் என்று சொல்லுவார்களே இங்கே!!!!!!

மக்கள் பயன் பெறட்டும் கத்துறவன் தட்டச்சு தட்டுறவன் தட்டிட்டு போகட்டும் மக்கள் வாழ்க்கை மேலும் தேர்ச்சி  பெற வாழ்த்துக்கள் 

வாழ்த்துக்கள் டக்ளஸ் ஐயாவுக்கு இல்லை . வாழ்த்துக்கள் சொன்னாலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நல்லது செய்கிறார் என எண்ணினேன்.

காப்பரேட் நிறுவனங்கள் உள்நுழைகின்றன.

கடலட்டை வியாபாரம் அங்குள்ளவர்களை மலைநாட்டு அட்டை மாதிரி உறிஞ்சாவிட்டால் சரி.
மக்களுக்கு யார் செய்தாலும் சந்தோசமே.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மக்கள் பயன் பெறட்டும் கத்துறவன் தட்டச்சு தட்டுறவன் தட்டிட்டு போகட்டும் மக்கள் வாழ்க்கை மேலும் தேர்ச்சி  பெற வாழ்த்துக்கள் 

👍

வாழ்த்துக்கள் டக்ளஸ் ஐயாவுக்கு இல்லை . வாழ்த்துக்கள் சொன்னாலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள் 

😂 

மக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டீர்களே

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள் தேர்தலின்போது தமது தேவைக்காக எம்மை பாவிக்கிறார்கள்.

அதேபோல எமது தேவைக்காக மட்டும் அவர்களை நாம் பாவிப்பதில் தவறேயில்லை.

கணிப்பு சரியாக இருந்தால் , ஜெசி எனும் யூடியூப் தளத்தில் ஒரு பக்கம் வைத்திருக்கும் இந்த தம்பி குறிப்பிடும் மாட்டுவண்டிகூட போகமுடியாத ஊரில் காண்பிக்கபடும்  பின் தங்கிய இரணைதீவு பிரதேசம் இதுவாகதானிருக்கும் என்று நினைக்கிறேன்.

19 நிமிடத்தில் வருகிறது பதிவு 

தவறாககூடவும் இருக்கலாம், ஆனால் எம் தேவைக்காக இந்த பிறப்பால் தமிழனாகவும், வளர்வால் சிங்களவனாகவும் இருக்கும் இவர்களை எமது தேவைக்காக மட்டும்  பாவிப்பது தவறேயில்லை என்றே தோன்றுகிறது..

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

துரோகிகள் செய்வது நல்ல விடயமாக ஏற்றுக்கொள்ள மாட்டம் என்று சொல்லுவார்களே இங்கே!!!!!!

மக்கள் பயன் பெறட்டும் கத்துறவன் தட்டச்சு தட்டுறவன் தட்டிட்டு போகட்டும் மக்கள் வாழ்க்கை மேலும் தேர்ச்சி  பெற வாழ்த்துக்கள் 

வாழ்த்துக்கள் டக்ளஸ் ஐயாவுக்கு இல்லை . வாழ்த்துக்கள் சொன்னாலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள் 

இதே டக்லஸ் கடந்த முறை அதிகாரத்தில் இருந்தபோது தொடங்கிய திட்டங்கள் முழுமை அடையவில்லை  பணம் எடுக்கப்பட்டுள்ளது அங்கஜனும் தற்போது திட்டங்களை மேளதாளத்துடன் மாலையுடனும் திரை நீக்கம் செய்கிறார் இவர்களின் திட்டங்கள் நிறைவேறினால் சந்தோசம் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

😂 

மக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டீர்களே

அந்த மக்கள் தானே அவரை தேர்தலில் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் அப்படிப்பார்த்தால் தீவக மக்களும் துரோகிகள் லிஸ்டில் 😉😉

2 hours ago, பெருமாள் said:

இதே டக்லஸ் கடந்த முறை அதிகாரத்தில் இருந்தபோது தொடங்கிய திட்டங்கள் முழுமை அடையவில்லை  பணம் எடுக்கப்பட்டுள்ளது அங்கஜனும் தற்போது திட்டங்களை மேளதாளத்துடன் மாலையுடனும் திரை நீக்கம் செய்கிறார் இவர்களின் திட்டங்கள் நிறைவேறினால் சந்தோசம் .

ஏன் அவதி கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் இல்லாவிட்டால் மக்கள் விலத்தி விடுவார்கள். மகேஸ்வரன் மனுசிய விலத்தின மாதிரி😊

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்  இது ஒரு நல்லவிடயம்

ஆனால்  உந்தாள் சாப:பிட்ட  கையால காக்காவைக்கூட  விரட்டாது???

  • கருத்துக்கள உறவுகள்

இதுவோ சீனாவின் ஓர் நிறுவனம் தான் பின்னிருந்து செயற்படும் என்று சொல்லப்படுகிறது.

உண்மையாகலாம், ஏனெனில், கடலட்டை சீனரால் விரும்பபப்படும் உணவு. எமக்கு கடலட்டை என்றால் ஒவ்வாது. 

இங்கு தேவை இல்லாதது, சீனாவில் பெரு மதிப்பு, காசு மரத்தில் காய்ப்பதை விட வேகமாக வளரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இதுவோ சீனாவின் ஓர் நிறுவனம் தான் பின்னிருந்து செயற்படும் என்று சொல்லப்படுகிறது.

உண்மையாகலாம், ஏனெனில், கடலட்டை சீனரால் விரும்பபப்படும் உணவு. எமக்கு கடலட்டை என்றால் ஒவ்வாது. 

இங்கு தேவை இல்லாதது, சீனாவில் பெரு மதிப்பு, காசு மரத்தில் காய்ப்பதை விட வேகமாக வளரும்.

கடலட்டைப் பண்ணையொன்று ஆரம்பிப்போம்.வாறீங்களா.. 😂

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

துரோகிகள் செய்வது நல்ல விடயமாக ஏற்றுக்கொள்ள மாட்டம் என்று சொல்லுவார்களே இங்கே!!!!!!

மக்கள் பயன் பெறட்டும் கத்துறவன் தட்டச்சு தட்டுறவன் தட்டிட்டு போகட்டும் மக்கள் வாழ்க்கை மேலும் தேர்ச்சி  பெற வாழ்த்துக்கள் 

வாழ்த்துக்கள் டக்ளஸ் ஐயாவுக்கு இல்லை . வாழ்த்துக்கள் சொன்னாலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள் 

தனி  திரிக்கு திரி வீணைப்பெட்டியை கொண்டுவந்து ஒரே ராகத்தை வைத்து இழுப்பதால் 
யாருக்கு பிரயோசனம்? நீங்கள் எதையாவது செய்ய நினைக்கிறீர்களா? அல்லது பேசி பேசி வாழ்வை முடிக்க போகிறீர்களா என்பதை பற்றியே நீங்கள் தெளிவான முடிவு கொள்ளவேண்டும். நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் மட்டக்கிளப்பில் ஒரு 15 ஏழை குடும்பத்தை தூக்கிவிடுவதே எனது இலக்கு என்று நீங்கள் வரிந்துகொண்டால் அதற்கான வலிகள் எல்லாம் தானாகவே அமையும்.

மனைவியை நாளும் நாளும் அடித்து துன்புறுத்துகிற ஒருவன் சாப்பாடு கொடுக்கிறான் என்பதுக்காக 
வாழ்த்து தெரிவித்துக்கொண்டு இருந்தால். அரைவாசி சைக்கோ ஆண்கள் அதைத்தான் செய்துகொண்டு இருப்பார்கள். சட்டம் கோர்ட்டு சமூகம் என்பது விழிப்புணர்வுடன் இருப்பதாலேயே கொஞ்சம் அடங்கி இருக்கிறார்கள். டக்கிளஸ் என்ன தனது சொத்தையா பிரித்து கொடுக்கிறார்? மக்களை கொலை செய்து கொள்ளையடித்ததை இப்போதும் பதுக்கித்தான் வைத்திருக்கிறார். இலங்கையை ஆட்டையை போட வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒரு துரும்பாக கிடக்கிறார் அவளவுதான். 

மக்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும் என்பதால் என்னவும் செய்யலாம் என்பது மனிதத்துக்கு முரணானது 
வேலைவாய்ப்பு உருவாக்குகிறோம் என்ற பெயரில் கபிரெட்டுக்கள் உள்ளூர் கனிம வளங்களை அள்ளுவதால்தான்  சகல இயற்கை கனிம வளங்களையும் பூமியில் கொண்டிருக்கும் ஆப்ரிக்க கண்டம் இப்போதும்  இருந்து கிடக்கிறது. 

மற்றவர்கள் தட்டச்சு செய்கிறார்கள் என்றால் நீங்கள் என்ன வீதி புனரமைப்பா செய்கிறீர்கள் நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள். யாரோ உங்களை எதோ என்றோ சொன்னார்கள் என்பதால் திரிக்கு திரி வீணைப்பெட்டியுடன்  வருகிறீர்கள் என்றால். தங்களது இளமை உயிர் உடல் எல்லாவற்றையும் இனத்துக்காக கொடுத்தவர்களை  பற்றி அநாகரீக மனிதர்கள் அலட்டும்போது எப்படி இருக்கும்? 

நானும் நீங்களும் ஒருவரை ஒருவர் பகைத்து என்ன ஆகப்போகிறது தனி? மாறாக நாம் நட்பாக்கினால் 
சில ஏழைகளுக்கு அது உதவும் என்பதே எனது ஆதங்கம். வீணான அலட்டல்கள் தனிமனித தாக்குதல் முதற்கொண்டு  திரிக்கு திரி கருத்து வைத்து வந்தவன் நான். விடுதலை போரை பற்றி ஒரு தமிழனுடன் தமிழில் பேச இனி என்ன இருக்கிறது? இதுவரைக்கும் விளங்காத ஒரு ஜென்மம் இருக்கிறது என்றால் அது அவ்வாறே  இறப்பதே நன்று என்றே எண்ணுகிறேன். 

நான் கடவுளை நம்புவதில்லை ... நீங்கள் கால்நடையாக கூட தலங்களுக்கு செல்பவர். கடவுள் பூமிக்கு இறங்கிவந்து  யாருக்கும் எதுவும் செய்வதில்லை. ஒன்றை செய்ய நினைத்தால் இன்னொரு மனிதர் ஊடாகவே  செய்கிறார் உங்களால் கடவுளுக்கு ஆகவேண்டிய பல காரியம் இருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன் 
அடுத்தவன் எம்மை பற்றி என்ன எண்ணுகிறான் என்ன சொல்கிறான் என்பதில் என்ன இருக்கிறது. நாம் என்ன செய்தோம்  என்பதே வாழ்வின் முடிவில் ஒரு நிறைவையும் மகிழ்வையும் தர கூடியது. 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

உங்கள் கருத்துக்கு உடன் படுகிறேன் மருதர்

யார் குற்றினாலும் அரிசியாக ஆக வேண்டும் என நினைக்கிறவன் நான் நாள் தோறும் தமிழ் ஆண்கள் பெண்கள் மாற்றான் கடைக்கும் ம் நெல் ஆலைக்கும் , மூட்டை தூக்கவும் , கழிவுகள் அள்ளவும் வீதியில் காத்துக்கிடப்பதை பார்க்கும் போது ஏன் எம்மினத்திற்கு மட்டும் சோதனை என கேள்வி எழும் ஆனால் எங்கோ ஓர் மூலையில் இருந்து இங்கே நடப்பது தெரிந்தும் எள்ளிநகையாடுபவர்களை என்ன செய்வது ??

தற்போது கொரோனா காலம் யாரும் அவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை சந்தியில் நிற்கிறார்கள் ஆனால் கண்டுகொள்ள  யாரும் இல்லை போன கிழமை ஒரு அம்மாவும் இரு பிள்ளைகளை கூட்டிக்கொண்டு பிச்சை எடுத்து திரியுறா இலங்கை என்பது நாம அறியாதது இல்லை போர் நடந்து தோற்றுப்போன இனம் எப்படி முகம் கொடுக்கிறது நம்ம்மை எப்படி அரசு பார்க்கும் அப்படி இருக்கும் போது நமக்கு ஏது கிடைத்தாலும் லாபமே

நான் காவுவதில்லை ஆனால் சிலர் காவித்தான் திரிகிறார்கள்  அவர்கள் சொல்லி என் தசைக்குள் ஒன்று புக போவதில்லை  நாம் எப்பதை நாங்கள் சேர்ந்து சில ஐடிகளை உருவாக்கினோம் மக்களுக்கு உதவ தற்போது மக்களுக்கு பலர் உதவுகிரார்கள் நாங்கள் விலகி விட்டோம் அது யாழ்கள முன்னாள் கள உறுப்பினர் ஒருவருக்கும் தெரியும் .(முகநூலில்)  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இனத்தை பற்றி இனத்தின் எதிர்கால இருப்பு பற்றி அக்கறை உள்ள ஒவ்வொருவரின் 
ஆதங்கமும் இப்போது இதுதான். நீங்கள் யாழை விட்டு போகிறேன் என்று கோவித்த போதும் 
உங்கள் நான் போகாதீர்கள் என்று தடுக்க காரணம். நாம் எல்லோரும் இனியாவது இணைய வேண்டும் 
அதனால் ஒரு சிறிய பயன் உள்ள செயல் ஆவது ஈடேற வேண்டும் என்பதாலேயே. இனஅழிப்பு போரால் 
கிழக்கு மக்களே அதிகம் பாதிக்கபட்வர்கள் இப்போதும் சிங்கள குடியேற்றம் போன்றவற்றால் பாதிப்பை 
நேரடியாக சந்திக்க போகிறவர்களும் அவர்களே. பாழாய்ப்போன தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் முதுகில் சவாரி செய்கிறார்களே தவிர எந்த எதிர்கால சிந்தனையும் இன்றி கிடக்கிறார்கள். உங்கள் ஆதங்கங்கள்  ஏமாற்றங்கள் எல்லாம் எங்களால் புரிய கூடியதே ........... கசப்பானவற்றை மறந்துவிட்டு நல்ல எண்ணங்களுடன் 
தொடர்வோம்.  

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

நன்றி 
நான் ஓர் பாலத்தில்  பயணம் செய்ய நினைக்கிறேன் ஆனால் பாலம் யார் போட்டது என அந்த பாலதிற்ப்புக்கல்லை நான் பார்க்க விரும்பல என் பின்னால் வருபவர்களை பாலத்தை கடந்து பாதையை காட்ட நினைக்கிறேன் பாலத்தில் பின் புறம் நின்று அந்த பாலத்தால் நான் போகமாட்டேன் அது என் எதிரி போட்ட பாலம் என்று சொல்பவர் அங்கே நின்று கூவிக்கொண்டு திரிய வேண்டியதுதான் 

உதாரணம் இலங்கை அரசை எதிர்பார்கள் நம்ம அரசியல் வாதிகள் ஆனால் அரசு கொடுக்கும் வாகனம் , வீடுகள் தங்குமிடங்கள் , சம்பளம் அனைத்தையும் அனுபவிப்பார்கள் ஆனால் மக்களுக்கு அரசு எதாவது செய்ய வரும் போது தடுப்பார்கள் . பல கம்பெனிகள் வரட்டும் நாங்கள் கூட ஆடைதொழிற்சாலை மட்டக்களப்புக்கு வருவது நல்லதா கெட்டதா என யோசித்தோம் ஆனால் அங்கே 3000 ற்கு மேற்பட்ட பெண்கள் மட்டும் வேலைசெய்கிறார்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் அங்கே அந்த வருமானத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் கைநனைக்கிறது என்று சொல்லலாம்  இலங்கையையே பல நாடுகள் கூறு போடும் போது நமது நிலங்களில் மாத்திரம் கம்பெனிகள் வரக்கூடாது என எதிர்பார்ப்பது ?? 

சைனா உள்ள வர இந்தியா தீவு பக்கம் நிற்கிறது அது வேற பூ கோள அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

பாழாய்ப்போன தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் முதுகில் சவாரி செய்கிறார்களே தவிர எந்த எதிர்கால சிந்தனையும் இன்றி கிடக்கிறார்கள். உங்கள் ஆதங்கங்கள்  ஏமாற்றங்கள் எல்லாம் எங்களால் புரிய கூடியதே ........... கசப்பானவற்றை மறந்துவிட்டு நல்ல எண்ணங்களுடன் 
தொடர்வோம்.  

இது தான் இப்ப தேவை.👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Maruthankerny said:

தனி  திரிக்கு திரி வீணைப்பெட்டியை கொண்டுவந்து ஒரே ராகத்தை வைத்து இழுப்பதால் 
யாருக்கு பிரயோசனம்? நீங்கள் எதையாவது செய்ய நினைக்கிறீர்களா? அல்லது பேசி பேசி வாழ்வை முடிக்க போகிறீர்களா என்பதை பற்றியே நீங்கள் தெளிவான முடிவு கொள்ளவேண்டும். நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் மட்டக்கிளப்பில் ஒரு 15 ஏழை குடும்பத்தை தூக்கிவிடுவதே எனது இலக்கு என்று நீங்கள் வரிந்துகொண்டால் அதற்கான வலிகள் எல்லாம் தானாகவே அமையும்.

மனைவியை நாளும் நாளும் அடித்து துன்புறுத்துகிற ஒருவன் சாப்பாடு கொடுக்கிறான் என்பதுக்காக 
வாழ்த்து தெரிவித்துக்கொண்டு இருந்தால். அரைவாசி சைக்கோ ஆண்கள் அதைத்தான் செய்துகொண்டு இருப்பார்கள். சட்டம் கோர்ட்டு சமூகம் என்பது விழிப்புணர்வுடன் இருப்பதாலேயே கொஞ்சம் அடங்கி இருக்கிறார்கள். டக்கிளஸ் என்ன தனது சொத்தையா பிரித்து கொடுக்கிறார்? மக்களை கொலை செய்து கொள்ளையடித்ததை இப்போதும் பதுக்கித்தான் வைத்திருக்கிறார். இலங்கையை ஆட்டையை போட வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒரு துரும்பாக கிடக்கிறார் அவளவுதான். 

மக்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும் என்பதால் என்னவும் செய்யலாம் என்பது மனிதத்துக்கு முரணானது 
வேலைவாய்ப்பு உருவாக்குகிறோம் என்ற பெயரில் கபிரெட்டுக்கள் உள்ளூர் கனிம வளங்களை அள்ளுவதால்தான்  சகல இயற்கை கனிம வளங்களையும் பூமியில் கொண்டிருக்கும் ஆப்ரிக்க கண்டம் இப்போதும்  இருந்து கிடக்கிறது. 

மற்றவர்கள் தட்டச்சு செய்கிறார்கள் என்றால் நீங்கள் என்ன வீதி புனரமைப்பா செய்கிறீர்கள் நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள். யாரோ உங்களை எதோ என்றோ சொன்னார்கள் என்பதால் திரிக்கு திரி வீணைப்பெட்டியுடன்  வருகிறீர்கள் என்றால். தங்களது இளமை உயிர் உடல் எல்லாவற்றையும் இனத்துக்காக கொடுத்தவர்களை  பற்றி அநாகரீக மனிதர்கள் அலட்டும்போது எப்படி இருக்கும்? 

நானும் நீங்களும் ஒருவரை ஒருவர் பகைத்து என்ன ஆகப்போகிறது தனி? மாறாக நாம் நட்பாக்கினால் 
சில ஏழைகளுக்கு அது உதவும் என்பதே எனது ஆதங்கம். வீணான அலட்டல்கள் தனிமனித தாக்குதல் முதற்கொண்டு  திரிக்கு திரி கருத்து வைத்து வந்தவன் நான். விடுதலை போரை பற்றி ஒரு தமிழனுடன் தமிழில் பேச இனி என்ன இருக்கிறது? இதுவரைக்கும் விளங்காத ஒரு ஜென்மம் இருக்கிறது என்றால் அது அவ்வாறே  இறப்பதே நன்று என்றே எண்ணுகிறேன். 

நான் கடவுளை நம்புவதில்லை ... நீங்கள் கால்நடையாக கூட தலங்களுக்கு செல்பவர். கடவுள் பூமிக்கு இறங்கிவந்து  யாருக்கும் எதுவும் செய்வதில்லை. ஒன்றை செய்ய நினைத்தால் இன்னொரு மனிதர் ஊடாகவே  செய்கிறார் உங்களால் கடவுளுக்கு ஆகவேண்டிய பல காரியம் இருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன் 
அடுத்தவன் எம்மை பற்றி என்ன எண்ணுகிறான் என்ன சொல்கிறான் என்பதில் என்ன இருக்கிறது. நாம் என்ன செய்தோம்  என்பதே வாழ்வின் முடிவில் ஒரு நிறைவையும் மகிழ்வையும் தர கூடியது. 
 
நல்ல கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.