Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

P2P பொலிகண்டியில் இருந்து பொத்துவிலுக்கு வந்திருந்தால் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன்! - பிள்ளையான் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

P2P பொலிகண்டியில் இருந்து பொத்துவிலுக்கு வந்திருந்தால் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன்! - பிள்ளையான் தெரிவிப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளர் சாமித்தம்பி ரவீந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் உடனான நேர்காணலில்....

 

 

 

  • Replies 73
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

😂😂

பொலிகண்டியில் தொடங்கியிருந்தால் தலைப்பை மாற்றிப் போட்டிருப்பீர்களாக்கும். 😂😂

இப்போதென்ன நீங்கள் ஒரு p2pஐயை பொலிகண்டியில் இருந்து ஆரம்பியுங்கள். விடயம் முடிந்தது... 🙏

 

  • கருத்துக்கள உறவுகள்

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் என்று போயிருந்தால் புள்ளையான் கோஷ்டி வெருகலைத்தாண்டியவுடன் எல்லா யாழ்ப்பாணியளையும் (முக்கியமாக ஜீப்பில் போகும்  மேட்டுக்குடிகளை) படுவான்கரைக் பக்கம் சாய்ச்சுக்கொண்டு போயிருப்பார்கள்! போடவேண்டியவர்களைப் போட்டு, கப்பம் வேண்டக்கூடியவர்களிடம் கப்பம் வாங்க லைசன்ஸ் இருக்குத்தானே இப்பவும்!

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான், பக்ஸக்ளின் பணிப்பில் ஆடுவது தெரியும்.

கிழக்கு, தமிழ் வன்னிமை மைந்தர்களின் குறு நில ஆட்சியில் இருந்தாலும், அவ்வப்போது சிங்கள ஆட்சியின் செலவாக்கும் கிழக்கின் சில பகுதிகள் வீசியது உண்மை.

பக்ஸகளின் பிச்சைக்கு மா மா அபிவிருத்தி எனும் பெயர் துரோகத்திற்கு கொடுத்து , கிழக்கை வடக்கில் இருந்து பிரித்தது போல தோற்றத்தை உருவாக்கியது கருண-பிள்ளை-துரோ. 

பொதுவில் தொடக்கி போலிகண்ண்டி என்பது ஒரு குறியீடு  (symbolism) கிழக்கு,   வடக்குடன்  உள்ளது என்பதை காட்டுவதற்கு.

மாறாக வடக்கு, கிழக்கை ஒருபோதுமே வரலாற்றிலும், தட்றபோதையா நிலையிலும் விட்டதில்லை. 

தற்போதையா நிலையில், முஸ்லிம்களும் அதே ஒடுக்குமுறைக்கும் ஆளாகின்றனர் என்பது இன்னொமொரு  குறியீடு.

இப்படி இன்னும் பல குறியீடுகள் உள்ளது.          

இதில் காட்டப்படும் அரசியல், வரலாற்று, புவியியல்  குறியீடு தெரிந்து தான்  பக்ஸக்ளின் கூட்டம் தமது கருத்துக்கு தலை ஆட்டும் படி அவர்களின் அடியாட்களாக இருக்கும் உம்மையும் சேர்த்து தூண்டி விட்டு இருக்கிறது என்பதும் தெரியும்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் என்று போயிருந்தால் புள்ளையான் கோஷ்டி வெருகலைத்தாண்டியவுடன் எல்லா யாழ்ப்பாணியளையும் (முக்கியமாக ஜீப்பில் போகும்  மேட்டுக்குடிகளை) படுவான்கரைக் பக்கம் சாய்ச்சுக்கொண்டு போயிருப்பார்கள்! போடவேண்டியவர்களைப் போட்டு, கப்பம் வேண்டக்கூடியவர்களிடம் கப்பம் வாங்க லைசன்ஸ் இருக்குத்தானே இப்பவும்!

ரதியக்கா இங்க ஒருவர் சும்மா சத்தம் போட்டுகொண்டு இருக்கிறார் 
வந்து ஒருக்கா என்ன என்று கேட்டுவிட்டு போங்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெயின் பிரச்சனை பிள்ளையானுக்கு யாழ்ப்பாணத்தாரையும் சுமந்திரனையும் கண்ணிலையும் காட்டக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

மெயின் பிரச்சனை பிள்ளையானுக்கு யாழ்ப்பாணத்தாரையும் சுமந்திரனையும் கண்ணிலையும் காட்டக்கூடாது.

உண்மை ,

அண்மையில் வெளிவந்த பிள்ளையானின் அரசியல் ஆலோசகர் ஸ்ரான்லி ஞானத்தின் பதிவொன்றில் இது அப்பட்டமாகத் தெரிந்தது.

அதுமட்டுமல்லாமல் அவரதும், கருணாவினதும் 2004 இன் பின்னரான நடவடிக்கைகள் கிழக்கிலிருந்து வடக்குத் தமிழனை ஓரங்கட்டுவதும், வடக்குத் தமிழரின் போராட்டத்தை பலவீனப்படுத்துவதுமாகத்தான் இருந்துவருகிறது என்பது வெளிப்படை, யார் இதற்கு எவ்வகையான நியாயத்தினைக் கற்பித்தாலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, ரஞ்சித் said:

உண்மை ,

அண்மையில் வெளிவந்த பிள்ளையானின் அரசியல் ஆலோசகர் ஸ்ரான்லி ஞானத்தின் பதிவொன்றில் இது அப்பட்டமாகத் தெரிந்தது.

அதுமட்டுமல்லாமல் அவரதும், கருணாவினதும் 2004 இன் பின்னரான நடவடிக்கைகள் கிழக்கிலிருந்து வடக்குத் தமிழனை ஓரங்கட்டுவதும், வடக்குத் தமிழரின் போராட்டத்தை பலவீனப்படுத்துவதுமாகத்தான் இருந்துவருகிறது என்பது வெளிப்படை, யார் இதற்கு எவ்வகையான நியாயத்தினைக் கற்பித்தாலும்.

நான் மட்டக்களப்பில் இருந்தவன் என்ற முறையில்.......
குரோதம் உள்ளவர்களுடனும் பழகியிருக்கின்றேன்.குரோதாம் இல்லாதவர்களுடனும் பழகியிருக்கின்றேன். ஒரு நிறு திட்ட அரசியலுடன் தமிழ் என்ற போர்வைக்குள் மட்டுமே ஒன்றிணைக்க முடியும். இல்லையேல் யாழ்ப்பாணத்தாரை விட சிங்களவர் எவ்வளவோ மேல் என்ற சிந்தனைக்குள் வருவார்கள்(வந்துவிட்டார்கள்)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ரதியக்கா இங்க ஒருவர் சும்மா சத்தம் போட்டுகொண்டு இருக்கிறார் 
வந்து ஒருக்கா என்ன என்று கேட்டுவிட்டு போங்கள் 

அவவின்  டைம்  லண்டன் நேரம் 7 PM டு 9.30PM தான் கிழக்கை பற்றி கணக்க  கதைத்தால் பகலில் இடைக்கிடை வருவா சீறும்  புலி போல் ஆனாலும் வாலை நிமித்த முடியாது நேர விரயம் பாஸ் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் மீட்பர்களான கருணாவும் பிள்ளையானும் யாழ்ப்பாணத்தாரின் ஆதிக்கத்திலிருந்து கிழக்கை  மீட்டு முஸ்லீம்களின் கையில் ஒப்படைத்துவிட்டார்கள்.

யாழ்ப்பாணத்தானிடமிருந்து கிழக்கை மீட்டதாக நீங்கள் நினைத்துக்கொள்ளலாம்,ஆனால் முஸ்லீம்களிடமிருந்து கிழக்கை மீட்பது ஒருபோதும் நடக்காத ஒரு விஷயம்.

மீன்பாடும் தேனாட்டு வாவிகளில் மீன்கள் இனி பாடினால் அல்லாஹு அக்பர் என்றுதான் சவுண்டு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

கிழக்கின் மீட்பர்களான கருணாவும் பிள்ளையானும் யாழ்ப்பாணத்தாரின் ஆதிக்கத்திலிருந்து கிழக்கை  மீட்டு முஸ்லீம்களின் கையில் ஒப்படைத்துவிட்டார்கள்.

யாழ்ப்பாணத்தானிடமிருந்து கிழக்கை மீட்டதாக நீங்கள் நினைத்துக்கொள்ளலாம்,ஆனால் முஸ்லீம்களிடமிருந்து கிழக்கை மீட்பது ஒருபோதும் நடக்காத ஒரு விஷயம்.

மீன்பாடும் தேனாட்டு வாவிகளில் மீன்கள் இனி பாடினால் அல்லாஹு அக்பர் என்றுதான் சவுண்டு வரும்.

இது விளங்குபவர்களுக்கு விளங்கனும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, பெருமாள் said:

இது விளங்குபவர்களுக்கு விளங்கனும் .

இது அவர்களுக்கு விளங்கினாலும் சுய கௌரவம் என்று வெளியில் கதைக்க மாட்டார்கள்.😁

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, valavan said:

யாழ்ப்பாணத்தாரின் ஆதிக்கத்திலிருந்து கிழக்கை

எப்போது, எப்படி இருந்தது.

வன்னிமை ஆட்சி கூட இப்போதைய கிழக்கில் அந்தந்த பகுதிக்கென்று, அந்த பகுதியில் இருந்தவர்களே ஆட்சி செய்தனர்.

அவர்களின் ஆட்சி வம்ச பெயர் வன்னிமை என்பதால், அவர்கள் வன்னியுடன் தொடர்பு உள்ளவர்கள் என்பதல்ல.

அனால் வன்னிமை ஆட்சியாளர்கள், ஒரே மொழி அரச வம்சம் என்பதாலும், வர்த்தகம்,மற்றும் கரையோர பாதுகாப்பு என்பதில் ஓரே நலன்கள் இருந்ததாலும், சிறந்த, ஒன்றை ஒன்று நம்பிக்கையும், ஆதரவாக இருக்க கூடிய ஆட்சியையும், உறவையும்  எல்லா  பகுதியும் (யாழ் இராச்சியம், வடக்கு  வன்னி  குறு நில ஆட்சியாளர்கள் , வன்னிமை ஆட்சியாளர் )  கொண்டு இருந்தது.

1948 க்கு பின் , கிழக்கில் இருந்து அரசியல் தலைமைகள் உருவாகியது. 

புலிகள் கூட அவர்களின் கிழக்கு தலைமை பீடம் கிழக்கில் இருந்து முறையாக  உருவாகும் வரையும், வடக்கை பூர்வுக்கமாக கொண்டவர்கள்  தலைமை யார் என்று தெரியாமல்  இல்லை மறை காயாகவே வைத்து இருந்தனர்.  அப்படி தலைமை பொறுப்பை வகித்தவர்கள், ஓர் வழிகாட்டியாகவே இருந்தனர்.
 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொமொன்றையும் குறிப்பிட வேண்டும். வன்னிமை ஆட்சியாள, சிங்கள இராச்சியங்களின் செல்வாக்கை வெட்டி.  சுதந்திரமாக ஆள்வதற்கு, யாழ் இராச்சியம் பாதுகாப்பு பங்காளராகவும், உத்தரவாதியாகவும் இருந்தது.      

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

கிழக்கின் மீட்பர்களான கருணாவும் பிள்ளையானும் யாழ்ப்பாணத்தாரின் ஆதிக்கத்திலிருந்து கிழக்கை  மீட்டு முஸ்லீம்களின் கையில் ஒப்படைத்துவிட்டார்கள்.

யாழ்ப்பாணத்தானிடமிருந்து கிழக்கை மீட்டதாக நீங்கள் நினைத்துக்கொள்ளலாம்,ஆனால் முஸ்லீம்களிடமிருந்து கிழக்கை மீட்பது ஒருபோதும் நடக்காத ஒரு விஷயம்.

மீன்பாடும் தேனாட்டு வாவிகளில் மீன்கள் இனி பாடினால் அல்லாஹு அக்பர் என்றுதான் சவுண்டு வரும்.

இல்லையா பின்ன கருணா,பிள்ளையானின் அடியை பின்பற்றியெல்லோ கிழக்கு மாகாணசபையை 
முஸ்லிம்களுக்கு தாரை வார்த்தவங்கள் எங்கட கூத்தமைப்பினர், நீங்க யாழ்ப்பாண மேட்டுக்குடி ஜீப்வண்டிகாரர்கள்  கிழக்கு மாகாணத்தவர்களை விட பேய்காய்கள் வெட்டி ஓடுவீங்கள் என்று பார்த்தால் நீங்களும் கிழக்கு முஸ்லிம்களிடம் அவிஞ்சது தான் மிச்சம், மாறி மாறி அவிஞ்சு போட்டு வந்து  யாரோட அவியல் பெஸ்ட்டு என்று புளித்த ஏப்பம் விட்டுக்கொண்டு நிக்கிறியள்      

  • கருத்துக்கள உறவுகள்

2010 அல்லது 2011 என்று நினைக்கிறேன். இனவழிப்புப் போர் முடிந்த ஒருவருடம் அல்லது அதற்குச் சற்று அதிகமாகக் கூட  இருக்கலாம். மட்டக்களப்பில் உயர்நீதிமன்றக் கட்டிடம் ஒன்றைத் திறந்துவைத்த அப்போதிருந்த சட்டமாதிபர் சரத் என் சில்வா  உரையாற்றியிருந்தார். அவர் குறிப்பிட்ட விடயங்கள் மிக முக்கியமானவை என்பதால் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

வடக்கு மாகாண மக்களும் மட்டக்களப்பு வாழ் மக்களும் கலாசார ரீதியிலும், சரித்திர ரீதியிலும் வேறுவேறானவர்கள். ஆகவே வடக்குத் தமிழர்களோடு மட்டக்களப்புத் தமிழர்கள் சேர்ந்துவாழத் தேவையில்லை என்றும், அதனாலேயே வடக்கும் கிழக்கும் பிரிந்து இயங்கவேண்டும் என்று தாம் கருதியதாலேயே இணைந்திருந்த இரண்டையும் பிரித்துவிட்டதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல், கிழக்கு பிரிந்திருப்பது அப்பகுதி மக்களுக்கே பிரயோசனமானதென்றும்,  கிழக்கினைக் கிழக்குத் தமிழர்களே ஆளவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஏறக்குறைய மட்டக்களப்பின் பிரசித்திபெற்ற தமிழரான நல்லையா கூட வடக்குத் தமிழரிடம் மிகத் தெளிவாக, நாம் சேர்ந்து வாழமுடியாது, கிழக்கிற்கும் வடக்கிற்கும் இருக்கும் பிரச்சினைகள் வேறு வேறானவை. உங்களுக்காக நாங்கள் போராடவியலாது. உங்களின் பிரச்சினையினை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள், எங்களுடைய பிரச்சினைகளை நாம் சிங்களவருடன் சேர்ந்து தீர்த்துக்கொள்வோம் என்று கூறியதாக படித்த நினைவு.

நான் மட்டக்களப்பில் குறைந்தது 3 வருடங்கள் தொடர்ச்சியாக வாழ்ந்திருக்கிறேன். அதற்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று தடவைகள் சென்று வந்திருக்கிறேன். அங்கிருந்த காலத்தில் எனது பட்டப்பெயர் "பாணி" (யாழ்ப்பாணி என்பது சுருக்கப்பட்டது). ஆனால், நான் இதுபற்றிக் கவலைப்பட்டது கிடையாது. நகைச்சுவைக்காகவே என்னை அழைக்கிறார்கள் என்று இருந்துவிட்டேன். இடையிடையே "எச்சில் கையால் காகம் கூடத் துரத்த மாட்டிங்கடா நீங்கள்" என்றும் கூறிச் சிரிப்பார்கள். 

ஓரிரு வருடங்களின் எனது இயற்பெயரைப் பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள், அவ்வப்போது செல்லமாக அடேய் பாணியென்று அழைப்பார்கள், நானும் மகிழ்வாக ஏற்றுக்கொள்வேன். இது விடுதியில் நடந்தது.

ஆனால் பாடசாலையில் (மிக்கேல் கல்லூரி) வேறுபாடு இருப்பதை உணர்ந்தேன். சிலர் வேண்டுமென்றே என்னை ஒதுக்குவதாக எனக்குத் தெரிந்தது, என்னுடன் பேசுவதை ஒரு சிலர் வேண்டுமென்றே தவிர்த்தார்கள், அவர்களின் பார்வையிலிருந்த ஏளனமே என்னைக் கூணிக்குறுக வைத்தது. நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன் என்பதைத்தவிர எனக்கும் அவர்களுக்கு பிணக்கெதுவும் இருந்ததில்லை. வீதியால் போகும்போது மறித்து பகிடிவதை செய்வது, ஊரைக் கிண்டலடிப்பது, தடக்கி விழுத்துவது, முகத்தில் அறைவதென்று ஒரு குழுவாக இதைச் செய்தார்கள். எனது சித்தியிடம் படித்த இன்னொரு மாணவன் அதில் தலையிட்டு, "அவனை ஒண்டும் செய்யவேண்டாம், எனக்குத் தெரிந்தவன் தான்" என்று கூறியபின் என்மீது பகிடிவதை செய்வதை விட்டார்கள். இதில் வேதனை என்னவென்றால் என்னைப் பகிடிவதைக்கு உட்படுத்தியவர்கள் என்னோடு ஒரே வகுப்பில் படித்தவர்கள்தான். நான் மட்டக்களப்பிலிருந்து வெளியேறும்வரை அவர்கள் என்னை வெறுத்ததன் காரணம் தெரியவில்லை, நான் விளங்கிக்கொண்ட ஒற்றைக் காரணத்தைத் தவிர.

ஆனால், இவையெல்லாவற்றையும்விட ஏதோவொன்று இருக்கிறது. யாழ்ப்பாணத்தவர்களை வெறுக்கவும், அவர்களுடன் சேர்ந்து வாழ்வதை வெறுக்கவும், சிங்களவர்களுடன் வாழ்வது யாழ்ப்பாணத்தவருடன் வாழ்வதைக் காட்டிலும் இலகுவானது என்று சொல்லவும் ஒரு காரணம் இருக்கிறது. வெறுமனே மட்டக்களப்பிற்கு வந்து எமது வேலைகளைப் புடுங்கிக் கொண்டார்கள் என்பதையோ அல்லது வியாபாரம் என்றுவந்து எமது சொத்துக்களை அபகரித்தார்கள் என்பதையோ ஏற்றுக்கொள்ளக் கஷ்ட்டமாக இருக்கிறது. ஆனால் இவைதான் யாழ்ப்பாணத்தான் கிழக்கில் வெறுக்கப்படக் காரணம் என்றால், சிங்களவர்கள் கிழக்குத் தமிழர்களுக்குச் செய்த, இன்றும் செய்துவருகிற அக்கிரமங்களும் அநியாயங்களும் இதைவிடப் பலமடங்கு அதிகமானவை. ஆகவே , காரணம் நிச்சயமாக இவையல்ல. 

யாழ்ப்பாணத்தான் மீதான வெறுப்பும், அவனது அரசியலுக்கெதிரான எதிர்ப்பும் இருந்தபோதும் எதற்காக அவனுடன் ஆயுதப்போராட்டம் ஒன்றில் கருணாவோ அல்லது ஏனையவர்களோ இணைந்திருந்தார்கள் என்பது ஒரு புதிராகவே இருக்கிறது. தமது பிரதேசமும் சிங்களத்தால் காவுகொள்ளப்படுகிறதென்பதும், சிங்களவனைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தானுக்கும் மட்டக்களப்பானுக்கும் வேறு வேறானவர்கள் இல்லை, இருவருமே தமிழர்கள் என்றுதான் அவன் அழித்தான் என்பதும் அவர்களால் புரிந்துகொள்ளப்பட்டதால்தான் அவர்கள் சேர்ந்து போராடினார்களோ என்று எண்ணுகிறேன். அப்படியானால், யாழ்ப்பாணத்தனை விட சிங்களவன் நல்லவன் என்னும் நியாயப்படுத்தல் அடிபட்டுப் போய்விடுகிறது. 

இது ஒரு புரியாத புதிர்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

சிங்களவனைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தானுக்கும் மட்டக்களப்பானுக்கும் வேறு வேறானவர்கள் இல்லை, இருவருமே தமிழர்கள் என்றுதான் அவன் அழித்தான் என்பதும் அவர்களால் புரிந்துகொள்ளப்பட்டதால்தான் அவர்கள் சேர்ந்து போராடினார்களோ என்று எண்ணுகிறேன்

இப்படியான புரிதலை உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் போன்றோர் உருவாக்கினார்கள்.

இதைத்தான் புள்ளையான் கோஷ அரசியல் ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரே வந்தது என்று சொல்லியிருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

"யாழ்" என்று இணையத்திற்கு பெயர் வைத்து விட்டு, அதில் எழுதுபவர்களிடம் மேலாதிக்க கருத்தை எதிர்பார்க்காமல் என்னத்தை எதிர் பார்ப்பது.
இங்கே எழுதியிருப்பவர்களது பெரும்பான்மையான  கருத்தை வாசித்தாலே பிரதேசவாதமும் ,மேலாதிக்கமும் தலை தூக்குது ...இதில் அடுத்தவரை குற்றமும் சொல்லி ,நக்கலடித்துக் கொண்டு 
எப்பவும் தூண்டி விடுவதும்,உசுப்பேத்துவதும் நாங்களாய்த் தான் இருப்போம் ...அதை கேட்டு விட்டு மற்றவர்கள் பொத்திக்கிட்டு பொறுமையாய் இருக்க வேண்டும்  என்பது உங்களது குணம் ...எதிராய் யாரும் கதைத்தால் பிரதேசவாசம் 
 

15 hours ago, கிருபன் said:

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் என்று போயிருந்தால் புள்ளையான் கோஷ்டி வெருகலைத்தாண்டியவுடன் எல்லா யாழ்ப்பாணியளையும் (முக்கியமாக ஜீப்பில் போகும்  மேட்டுக்குடிகளை) படுவான்கரைக் பக்கம் சாய்ச்சுக்கொண்டு போயிருப்பார்கள்! போடவேண்டியவர்களைப் போட்டு, கப்பம் வேண்டக்கூடியவர்களிடம் கப்பம் வாங்க லைசன்ஸ் இருக்குத்தானே இப்பவும்!

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டுவிற்கு போகாத ஒருவரால்தான் இப்படியொரு கேவலமான கருத்தை எழுத முடியும் ...நீங்கள் கூட இங்குள்ள பலரை சந்தோசப்படுத்த எழுத  தொடங்கிட்டீர்கள் போல...நடத்துங்கள்  😠

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டுவிற்கு போகாத ஒருவரால்தான் இப்படியொரு கேவலமான கருத்தை எழுத முடியும்

அதை பிள்ளையான் என்றே குறித்துள்ளார்.

நடந்த அனுபவங்களை கொண்டே சொல்லி உள்ளார். பிள்ளையான்  யாழ்ப்பணிகளை வெறுக்கிறார் என்பது உட்பட பிள்ளையான் சொன்னது, பெரும்பாலும் யாழ்ப்பாணிகளே பிள்ளையானின் இப்போதைய நிலைக்கு தளம் அமைத்தும் கூட (புலிகளில் இல்லாவிட்டால் பிஇளையனுக்கு  முகவரி இருந்து இருக்குமா?)

எனவே, அவர்  சொன்ன சாத்திய கூறு நிச்சயமாக உள்ளது. அதற்கு ஏதுவான, ஆட்சியம் முக்கியமாக ஆட்சியாளர்களும் இருக்கிறார்கள்.   

பிள்ளையான் செய்ததை கண்ணால் கண்டீர்களா, காதால் கேட்டீர்களா என்ற விதண்டாவாதம் தேவை இல்லை.        

பிள்ளையான் தனது இடத்தவரின் சொத்தை அபகரித்தவர் என்று சொல்வதை  கூட பிரதேசவாதம் என்று சொல்வீர்களா?  

எல்லாவற்றிற்கும், பிரதேசவாதம் எனும் சாயம் பூசி நியாயப்படுத்ததீர்கள்.  

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

வெறுமனே மட்டக்களப்பிற்கு வந்து எமது வேலைகளைப் புடுங்கிக் கொண்டார்கள் என்பதையோ அல்லது வியாபாரம் என்றுவந்து எமது சொத்துக்களை அபகரித்தார்கள் என்பதையோ

இது எவ்வளவு தூரம்  உண்மை?

அப்படி நடந்தது என்றால், யுத்தம் பெரிதாவதத்திற்கு முதல் (1990) நடந்து இருக்க வேண்டும்.

ஏனெனில், 1980 களின் முடியும் தறு வாயில் இருந்து, வெளிநாடு செல்வதே பெரிய அளவில் இடம்பெற்றது.

மற்றது, 1990 க்கு முதல் சுயமாக தொழில் தொடங்காலம் என்ற பொருளாதார நிலை இல்லை.

எனவே, வேலைகளை பிடுங்கி எடுத்தது என்பது, அப்படி நடந்து இருந்தால், சொறி லங்கா அரசாங்கம் தானே அதை கொடுத்து இருக்க வேண்டும்.   

குறிப்பிட்ட பிரதேசத்தில் வேலை எண்ணிக்கை அளவு  விண்ணப்பதாரிகள் இருந்திருந்தால்,  மற்ற இடத்தில இருந்து தமிழரை கூட சொறி சிங்களம் வேலைக்கு  நியமித்து இருக்குமா? 

சிங்களவராய் நியமித்து இருக்கும், ஆனால் பெரும்பாலும் அவர்கள் அதை வெறுத்து இருப்பார்கள், யுத்த நிலை காரணமாக 

இதில் எனது தனிப்பட்ட அனுபவமும் உள்ளது. எனது அண்ணர் வலையிறவு பாலம் அமைப்பில் முக்கிய பொறியியல் பொறுப்பில் இருந்தார் (1981 - 1984 என்று நினைவு). அவருக்கும் வெளிநாடு விருப்பு வர, சவூதி அரேபியாவில் அவரின் அனுபவ தரத்திற்கு பொறியியல் வேலையும் ஏற்பாடு   செய்த நிலையில்  வேலையை விட எத்தனிக்க,  அங்குள்ளவர்கள்  அந்த இடம் அல்லது கிழக்கை  சேர்ந்த தமிழர் ஒருவரை  நியமிப்பதற்கு எடுத்த முயற்சிகள் பலன் இல்லாமல் போக,  அங்குள்ளவர்கள் அவருக்கு நிலையை சொல்லி 1-2 வருடங்கள் வரை பிற்போடுமாறு இணங்க செய்தனர்.  இது, ஓர், தனிப்பட்ட அனுபவம். இதை வைத்து அப்போதைய முழுநிலையையும் அனுமானிக்க முடியாது . 

மற்றது, எவ்வாறு சொத்துக்களை அபகரித்து இருக்க முடியும்?

இப்போதும் கூட சொத்துக்கள் ஊரவர்க்கு தெரியாமல் கைமாறுவது நடைபெறுவது அரிது.

இந்த நிலையில் எவ்வாறு அபகரித்து இருக்க முடியும்? அதுவும் பெருவாரியாக. பணம் கொடுத்து வாங்கி இருக்கலாம். 

கருணை பிள்ளையான் குழுவும், அவற்றை சேர்ந்த ஓர் சிறு குழாமின் (நீங்கள் சொன்ன நல்லையா போன்றவர்களின்) மிகைப்படுத்தப்பட்ட அல்லது முற்றிலும் பொய்யான  பிரசாரத்தின் யதார்த்தமான தரவுகளை வெளிக்கொணர்வவேண்டும்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

"யாழ்" என்று இணையத்திற்கு பெயர் வைத்து விட்டு, அதில் எழுதுபவர்களிடம் மேலாதிக்க கருத்தை எதிர்பார்க்காமல் என்னத்தை எதிர் பார்ப்பது.

ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு கடைசியிலை யாழ்களத்திலை வந்து நிக்கிறியள் தங்கச்சி...😁
அவ்வளவு நல்லாயில்லை...:)

  • கருத்துக்கள உறவுகள்

 

3 minutes ago, குமாரசாமி said:

ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு கடைசியிலை யாழ்களத்திலை வந்து நிக்கிறியள் தங்கச்சி...😁
அவ்வளவு நல்லாயில்லை...:)

சொந்த நிலைப்பாடு  கொள்கையற்று

சும்மா மற்றவர்களிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்தணும்  என்று  மட்டும் எழுதினால்  இப்படித்தான்.

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

இங்கே எழுதியிருப்பவர்களது பெரும்பான்மையான  கருத்தை வாசித்தாலே பிரதேசவாதமும் ,மேலாதிக்கமும் தலை தூக்குது ...இதில் அடுத்தவரை குற்றமும் சொல்லி ,நக்கலடித்துக் கொண்டு 
எப்பவும் தூண்டி விடுவதும்,உசுப்பேத்துவதும் நாங்களாய்த் தான் இருப்போம் ...அதை கேட்டு விட்டு மற்றவர்கள் பொத்திக்கிட்டு பொறுமையாய் இருக்க வேண்டும்  என்பது உங்களது குணம் ...எதிராய் யாரும் கதைத்தால் பிரதேசவாசம் 

The Clash Of The Tamil Warlords 

k-p-300x199.jpg

http://globaltamilnews.net/wp-content/uploads/2019/05/karuna_balasingam-praba.jpg

ஓம் தங்கச்சி!
தலைவர் பிரதேசவாதம் பார்த்திருந்தால் தனது அருகிலேயே கூட்டிக்கொண்டு திரிந்திருக்கமாட்டார். உலக நாடுகளுக்கு பேச்சுவார்த்தைக்கு அனுப்பியிருக்க மாட்டார். புலம்பெயர்தமிழர்களும் அம்மான் அம்மான் என செல்லமாக அழைத்திருக்க மாட்டார்கள். நன்றியோடு விருந்துகள் வைத்திருக்க மாட்டார்கள். வீரன் என தலையில் வைத்து கொண்டாடியிருக்க மாட்டார்கள்.

கருணாவும் பிள்ளையானும்  இயக்கத்தை விட்டு விலகியவுடன் என்ன வார்த்தையை பிரயோகித்தார்கள் என்பது உலகமே அறிந்தவிடயம்.

 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

வேலைகளை  பிடுங்கி எடுத்தது என்பதின் தொனி, அங்குள்ள தகுதியானவர்களை முன்னுரிமை கொடுக்காமல் தவிர்த்து, வேறு பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு (எந்த இனமாயினும்) வேலை கொடுக்கப்பட்டது.

இது போலவே வியாபாரமும், சொத்துக்களை வாங்குதல்.    

இது பெருவாரியாக நடந்ததா?

1) பெருவாரியாக நடந்து இருந்தால், ஒரு பிரதேச மக்களின் இயற்கை செல்வதை, வளத்தை இன்னொமொரு பிரதேச மக்கள் அனுபவித்து உள்ளார்கள் என்பது உண்மை.

2) அப்படி இல்லை என்றால், அதாவது ஓர் பிரதேச மக்களில் அங்குள்ள வேலைகளுக்கு, வியாபாரத்துக்கு, சொத்துக்களை வாங்குவதத்திற்கு  தகுதியானர்வர்கள் இல்லை என்றால், ஏனைய பிரதேசத்தில் இருந்து குறிப்பிட்ட பிரதேசத்திற்கு வேளைக்கு சென்றவர்கள், வியாபாரத்தாய் ஆரம்பித்தவர்கள் , சொத்துக்களை வாங்கியவர்கள்  அந்தப்பிரதேச அபிவிருத்திக்கும், செல்வதை, வளத்தை பெருக்குவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். 

இதில்,1 ஆ அல்லது 2 ஆ   பெரும் பகுதியாக உள்ளது என்பதே கேள்வி?      

கிழக்கில்,குறிப்பாக மட்டக்கிளப்பு, அம்பைறையில் ஆதரவு அற்ற, அங்கெ கவனிப்பாரற்று இருந்த சிறுவயதினருக்கு  இல்லங்கள் பல நடத்தியர்களை அறிந்துளேன்.

அதற்காக, கிழக்கு மக்கள் குறிப்பிட்ட பிரதேசத்தவரை (வடக்கு மக்களை, பொதுவாக யாழ்ப்பணிகளை) நன்றியோடு இருக்க  வேண்டும் என்பதல்ல.

இல்லங்கள் நடத்துபர்வர்களுக்கு, அவர்களின் திருப்தியும் இருக்கும்  அதே போலவே வேலை, வியாபாரம், சொத்து வாங்குதல் என்பதில் தனிப்பட்ட இலாபமும் இருக்கும்.

அனால், கிழக்கு மக்களின் வேலைகளை, வியாபாரத்தை, சொத்துக்களை அபகரித்தது, அதன் மூலம் கிழக்கு மக்களின் விருத்தியை விலை கொடுத்து வடக்கு பிரதேச மக்கள் முன்னேறினார்கள்  என்பதும் , மற்றவர்கள் மீது (வடக்கு பிரதேச மக்கள், பொதுவாக யாழ்ப்பணிகள்) , பிரதேச அடிப்படையில், அபாண்டமாக பழிசுமத்துதல் ஆகும்.  

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

ஓம் தங்கச்சி!
தலைவர் பிரதேசவாதம் பார்த்திருந்தால் தனது அருகிலேயே கூட்டிக்கொண்டு திரிந்திருக்கமாட்டார். உலக நாடுகளுக்கு பேச்சுவார்த்தைக்கு அனுப்பியிருக்க மாட்டார். புலம்பெயர்தமிழர்களும் அம்மான் அம்மான் என செல்லமாக அழைத்திருக்க மாட்டார்கள். நன்றியோடு விருந்துகள் வைத்திருக்க மாட்டார்கள். வீரன் என தலையில் வைத்து கொண்டாடியிருக்க மாட்டார்கள்.

கருணாவும் பிள்ளையானும்  இயக்கத்தை விட்டு விலகியவுடன் என்ன வார்த்தையை பிரயோகித்தார்கள் என்பது உலகமே அறிந்தவிடயம்.

கருணா, பிள்ளையான் மற்றும் அவர்களின் குழாம் சொல்வதை விடுங்கள், அவர்களுக்கு வேறு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது.

ஆனால், கிழக்கில் உள்ள சமூக அங்கீகார நிலையில் உள்ளவர்கள் சொல்வது என்பது, ஏறத்தாழ முழு கிழக்கு தமிழ் சமூகம் சொல்வதாகும்.

ஏனெனில் இன்று நல்லையாவை பற்றி கேள்விப்படுகிறேன், பல கிழக்கு  பல்கலைக்கழக  சமூக உறுப்பினர்கள், வியாபாரத்தில் உள்ளவர்கள் என்று  கிழக்கு பல சமூக மட்டத்திலும்  இது போன்றதொரு கருத்து மற்றும் பார்வை இருக்கிறது.

அதாவது, வடக்கு மக்கள், குறிப்பாக யஸ்ஹ்பாணிகள், கிழக்கு மக்கள் பொருளாதார விருத்தியை சூறையாடி, வளர்ந்து விட்டார்கள் என்று.

அனால், கிழக்கில் இருந்து ஏ ன் தொல்பொருள் ஆய்வுக்கு பெயரளவிலாவது தம்மை இணைக்கும் படி கோரிக்கை விடுக்கவில்லை என்று தெரியவில்லை. இதுவும் பொருளாதார விருத்தியின் அடிப்படை என்று அவர்களுக்கு (கிழக்கு  பல்கலைக்கழக  சமூகம்) தெரியவில்லையா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.