Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

P2P பொலிகண்டியில் இருந்து பொத்துவிலுக்கு வந்திருந்தால் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன்! - பிள்ளையான் தெரிவிப்பு

Featured Replies

6 hours ago, ரஞ்சித் said:

சம்பந்தன் பொன்சேக்காவை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது அடிமுட்டாளத்தனம். எம்மை இறுதிவரை தலைமையேற்று அழித்தவனை ஜனாதிபதியாக ஆதரிக்கிறோம் என்று அவர் எடுத்த மிக மோசமான முடிவு எம்மை மிகமோசமாகப் பாதித்ததோடு, பலவீனப்படுத்தியும் விட்டது. இதில் மாற்றுக்கருத்தில்லை.

ரஞ்சித் இதற்கு முன் 2005 ஜனாதிபதி தேர்தலில் புலிகள் எடுத்த முடிவு தேர்தல் முடிவையே மாற்றி மகிந்தவை ஜனாதிபதியாக்கிதன்  மூலம் தமிழ் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டதை நான் கூறியபோது அதை ஏற்றுக் கொள்ளாத நீங்கள் 2010 ல் சம்பந்தர் எடுத்த முடிவை அடி முட்டாள்தனம் என்று விமர்சித்துள்ளீர்கள்.

சம்பந்தர் எடுத்த அந்த முடிவு சரியானது என்று நான் கூறவில்லை. ஆனால், அந்த தீர்மானம்  தேர்தல் முடிவை கொஞ்சம் கூட பாதிக்கவில்லை. யுத்த வெற்றி வாதம்  கொடுத்த பரிசாக மகிந்தவே இலகுவாக வெற்றி பெற்றார்.  

தேர்தல் முடிவை மாற்றி தமிழ் மக்களை பேரழிவுக்கு உட்படுத்திய ஒரு தீர்மானத்தை சாதாரணமாக கடந்து செல்லவது மட்டுமல்ல அது இங்கு சுட்டிக்காட்ட போதும் அதற்கு வக்காலத்து வாங்கிய நீங்கள், தேர்தல் முடிவை  கொஞ்சம்  கூட பாதிக்காத சம்பந்தரின் தீர்மானத்தை “வடிகட்டிய முட்டாள்தனம்” என்ற கடுமையான வார்ததைகளை பயன்படுத்தி கண்டிப்பது எந்த வகையில் நியாயம்.

  • Replies 73
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அம்பிகா சற்குணநாதன்

காரணம் ...சுமந்திரனின் Female Version இற்கு கச்சிதமாக பொருந்துவார் என்பதாலா 
 
1 hour ago, Kadancha said:

சரி,நீங்கள் சொல்லிய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் மட்டக்கிளப்பில் அவரது கடையை ஆரம்பித்த  வேளை , வேறு மட்டகிளப்பை சேர்ந்தவர் அப்படிப்பட்ட ஓர் கடையை அதே இடத்தில  தொடங்க முற்பட்டு , அந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கடையை தந்திரமாக தனதாக்கி கொண்டாரா?

இதை நீங்கள் எந்த அடிப்படையில் எதனை ஆதாரமாக வைத்துக்கொண்டு கேட்கிறீர்கள் 
ரஞ்சித் அண்ணையின்  தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் அல்லாவிடில்  இதனை உங்களிடம் விதைத்தவரிடம் ஆதாரபூர்வமாக கேட்கவேண்டிய கேள்வி இது, நானறிந்தவரை ஆரம்பத்தில் தொடர் போராட்டம் தந்த இழப்பினால் சோர்ந்து போயிருந்த மக்கள் கருணா,பிள்ளையானின் பிரதேசவாத கூச்சலுக்கு சற்று மயங்கினார்கள்  என்பது உண்மையே ஆனால் நீங்கள் மேற்கூறியவாறு சிந்திக்க வாய்ப்பேயில்லை 
காரணம் கருணாவின் பிரிவின்போதே கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி முஸ்லிம்களால் விழுங்கப்பட்டாயிற்று, ஒப்பீட்டளவில் கிழக்கில்  வியாபாரத்திலோ, ஏனைய பொருளீட்டும் முயற்சியிலோ ஈடுபட்டிருந்த முஸ்லிம்களுக்கும், யாழ்ப்பாணத்தவர்களுக்கும் இடையிலான எண்ணிக்கை  வித்தியாசம்   மலைக்கும் மடுவுக்கும் சமமானது 

கிழக்கில் தமிழர்கள் அரசியல் பற்றி தெளிவாக உள்ளார்கள்.  சிறுதிருத்தம்  கிழக்கு தமிழர்கள் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் எனும் நிலைக்கு வந்துவிட்டார்கள்  

1 hour ago, ரஞ்சித் said:

ஒருவர் இருந்தால் அவரைத் தெரிவு செய்யுங்கள். அப்படி எவரும் இல்லையென்றால், நீங்கள் நில்லுங்கள்

ஆக இவர்தான் என்று சுட்டிக்காட்ட உங்களிடமும் ஆள் இல்லை. எதிர்பார்த்ததுதான் , ஒருவேளை கிழக்கர்கள்  தேர்தலை புறக்கணித்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ, இனித்தான் தெரிவுசெய்து வளர்த்தெடுக்க சொல்கிறீர்கள், ஒருவகையில் புலிகளும் மாற்று தெரிவு ஒன்று உருவாவதற்கு பெரும் தடையாக இருந்தார்கள் என்பது உண்மை போல் தான் படுகிறது, சரி ஒருவேளை கிழக்கு மாகாணம் ஒட்டுமொத்த வாக்குகளையும் கூத்தமைப்பிற்கு அள்ளி கொட்டியிருந்தால்  உங்களது இந்த 6 பொயிண்ட்ஸையும் சொல்லி கிழக்கு மாகாணத்தவர்களுக்கு அப்பவும் அட்வைஸ் தந்திருப்பீர்களா....?....நான் நிற்பதற்க்கெல்லாம் எனக்கு பக்குவம் பத்தாது அண்ணை, எதையும் முகத்திலேயே பேசிப்போடுவன் என்னால் முழு கிழக்கு மாகாணமும் பொதி சுமப்பினம்  

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஒருவகையில் புலிகளும் மாற்று தெரிவு ஒன்று உருவாவதற்கு பெரும் தடையாக இருந்தார்கள் என்பது உண்மை போல் தான் படுகிறது, சரி ஒருவேளை கிழக்கு மாகாணம் ஒட்டுமொத்த வாக்குகளையும் கூத்தமைப்பிற்கு அள்ளி கொட்டியிருந்தால்  உங்களது இந்த 6 பொயிண்ட்ஸையும் சொல்லி கிழக்கு மாகாணத்தவர்களுக்கு அப்பவும் அட்வைஸ் தந்திருப்பீர்களா....?

புலிகள் தமது அரசியல் முகமாக கூட்டமைப்பினரைத்தான் தேர்வு செய்தார்கள். முன்னாள் மாற்றியக்கப் போராளிகள், அரசியல்க் கட்சிகள் என்று எல்லோரையும் இணைத்தே அதை உருவாக்கினார்கள். தமிழருக்குள் அரசுடன் சேர்ந்து இயங்கும் டக்கிளஸின் ஆயுதக்குழுவையும் ஆனந்த சங்கரியையும் தவிர அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வருவதையே அன்று விரும்பினார்கள். ஒன்றாக ஒலிக்கும் குரல் மூலம் எமது கோரிக்கைகளைச் சர்வதேச சமூகத்திலும் உள்நாட்டில் தேர்தல்களிலும் பலமாக சொல்லமுடியும் என்று நம்பினார்கள். அதனால் மாற்றுத் தேர்வாக இன்னொரு அரசியலை அவர்கள் சிந்தித்திருக்கவில்லை என்பதே எனது எண்ணம்.

ஆனால், 2009 இற்குப்பின்னர் கூட்டமைப்பு தான் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதிலிருந்து விலகி நடக்கத் தொடங்கிற்று. 

அடுத்தது, எனது ஆறு அம்சக் கோரிக்கைக்கு வரலாம். கிழக்கு மாகாண மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிதிருந்தால் இந்தக் கோரிக்கைகள் வந்திருக்குமா என்பது. நிச்சயமாக இல்லை. கூட்டமைப்பு வென்றிருந்தால் கருணாவோ பிள்ளையானோ அமலோ அங்கஜனோ டக்கிளசோ திலீபனோ வெற்றிபெற்றிருக்கமுடியாது. அதற்காக எமது பிரச்சினையெல்லாம் தீர்ந்துவிட்டதாக அர்த்தமில்லை. ஆனாலும், அரசின் பினாமிகளாகவும், அரசின் ஏஜெண்ட்டுகளாகவும் அவர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்திருக்காது என்பதையே சொல்லவந்தேன். இன்னொரு வழியில் சொல்லப்போனால் தமிழர்களின் போராட்டத்தினைக் காட்டிக் கொடுத்துத் துரோகமிழைத்தவர்களை தமிழ்மக்கள் ஏறெடுத்தும்பார்க்கவில்லையென்கிற செய்தி தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். இப்போது நடப்பதுபோல , "தமக்கு நடந்ததையே தமிழர்கள் மறந்துவிட்டார்கள், சிங்களப் பேரினவாதத்தின் உதிரிகளை தமிழ்மக்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்" என்கிற செய்தி சொல்லப்பட்டிருக்காது. கிழக்கு மட்டுமல்ல, வடக்கிலும்தான்.

ஆனால் நீங்கள் கூறும் கூட்டமைப்பின் தலைக்கணம், ஒரு தும்புத்தடியை நிறுத்தினால்க் கூட மக்கள் வாக்களிப்பார்கள் எனும் எகத்தாளம் நிச்சயமாக இருந்திருக்கும். அவர்கள் செய்யும் அனைத்துக் கைங்கரியங்களும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாலேயே அவர்களை மக்கள் மீண்டும் தெரிவுசெய்தார்கள் என்று செய்தி சொல்லப்பட்டிருக்கும். இது சுமந்திரனின் , சம்பந்தனின் எதேச்சாதிகாரத்தை இன்னும் வலுவானதாக்கியிருக்கும். 

ஆனால், அதுநடக்கவில்லை. அவர்களுக்கொரு பாடம் புகட்டவேண்டிய தேவையொன்றிருந்தது என்பதை மறுக்கவில்லை. ஆனால், அவர்களுக்குப் பாடம் புகட்டப்போய் தவறானவர்களைத் தெரிவுசெய்துவிட்டோம் என்பதுதான் எனது ஆதங்கம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

இந்த இடத்தில் விக்கி அய்யாவுக்கு ஒரு சந்தர்ப்பம் இருந்தது.ஆனால் அவரும் உணர்ச்சி அரசியல்முலம் வாக்கு அரசியலே செய்ய முனைந்தார்.அவராவது அபிவிருத்தியும் அரசியல் தீர்வும் என்று சமாந்திரமாக பனித்திருந்தால் உந்த துரோக அரசியல் வாதிகளுக்கு வாக்கு விழுந்திருக்காது.மக்களின் உடனடித் தேவையும் முக்கியும்.அதைத்  தவிர்த்து தனியே தேசியம் என்றால் இன்னும் ஆயிரம் டக்கி அங்கஜன் பிளையான் கருனா உருவாவதை தவிர்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

அடுத்தது, எனது ஆறு அம்சக் கோரிக்கைக்கு வரலாம். கிழக்கு மாகாண மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிதிருந்தால் இந்தக் கோரிக்கைகள் வந்திருக்குமா என்பது. நிச்சயமாக இல்லை. கூட்டமைப்பு வென்றிருந்தால் கருணாவோ பிள்ளையானோ அமலோ அங்கஜனோ டக்கிளசோ திலீபனோ வெற்றிபெற்றிருக்கமுடியாது. அதற்காக எமது பிரச்சினையெல்லாம் தீர்ந்துவிட்டதாக அர்த்தமில்லை. ஆனாலும், அரசின் பினாமிகளாகவும், அரசின் ஏஜெண்ட்டுகளாகவும் அவர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்திருக்காது என்பதையே சொல்லவந்தேன். இன்னொரு வழியில் சொல்லப்போனால் தமிழர்களின் போராட்டத்தினைக் காட்டிக் கொடுத்துத் துரோகமிழைத்தவர்களை தமிழ்மக்கள் ஏறெடுத்தும்பார்க்கவில்லையென்கிற செய்தி தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். இப்போது நடப்பதுபோல , "தமக்கு நடந்ததையே தமிழர்கள் மறந்துவிட்டார்கள், சிங்களப் பேரினவாதத்தின் உதிரிகளை தமிழ்மக்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்" என்கிற செய்தி சொல்லப்பட்டிருக்காது. கிழக்கு மட்டுமல்ல, வடக்கிலும்தான்.

இந்த விளக்கத்தை முழுவதுமாக ஏற்க முடியவில்லை 
காரணம் 
பொன்சேகாவிற்கு வாக்குபோடுமாறு தமிழ் மக்கள் கூத்தமைப்பால்  தூண்டப்பட்டு முழு தமிழினமும் (வடக்கு கிழக்கு உட்பட) பொன்சேக்காவிற்கு வாக்குப்போட்டு தெருவில் விடப்பட்டபோது உங்களிடமிருந்து இந்த ஆறு அம்ச கோரிக்கை வரவில்லை, பொன்சேகா கோத்தாவிற்கு எந்த விதத்திலும் சளைத்தவரில்லை என்பது உங்களுக்கு  நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் தேசிய ஆதரவாளர்களும் வலுவாக சாதித்த  மௌனமும் அளித்த வாக்குகளும்  சொல்லிய செய்திகள்  
1. ஒரு இனக்கொலையாளனை எதிர்க்க அவனில் சற்றும் குறையாத இன்னொரு இனக்கொலையாளனை ஆதரிக்க தமிழ் சமூகம் தயார் (சிம்பிளாக வடக்கும் கிழக்கும் இணைந்து வாக்களிப்பது என்றால் எந்த இனவழிப்பின் கதாநாயகனையும் எங்கள் தலைவர்களாக ஏற்க தயார், 
1.உந்த மக்கள் மீது உண்மையாகவே அக்கறை, 
2.சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்காத,
3.சிங்களப் பேரினவாதத்தின் பினாமிகளாக இல்லாத,
4.மக்களின் உரிமைகளும், நிலமும் காக்கப்படவேண்டும் என்று கொள்கையளவிலாவது உறுதிபூண்ட
    எல்லாமே சுத்த ஹம்பக்  )  

2. இப்போது நடப்பதுபோல , "தமக்கு நடந்ததையே தமிழர்கள் மறந்துவிட்டார்கள், சிங்களப் பேரினவாதத்தின் உதிரிகளை தமிழ்மக்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்" என்கிற செய்தி சொல்லப்பட்டிருக்காது. கிழக்கு மட்டுமல்ல, வடக்கிலும்தான்.
   உங்களுக்கே காமெடியாக தெரியவில்லை உதிரிக்கு ஏன் போகிறீர்கள் மக்களை கொத்தி கிளறிய சிங்கள பேரினவாதியையே தமிழ் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் தலைவராக ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று நீங்கள் மேற்கூறிய செய்தியை காட்டிலும் பலமான காரமான செய்தியை கூத்தமைப்பின் புண்ணியத்திலும் தேசிக்காய்களின் கைங்கரியத்திலும் 2010 இலே முள்ளிவாய்க்கால் குருதி மற(ண)க்க மற(ண)க்க சொல்லிவிட்டீர்களே  

சிவாஜிலிங்கம் என்ற ஜனாதிபதி வேட்பாளரும் தமிழர்கள் சார்பாக தேர்தலில் நின்றார் என்பதையும் உங்களுக்கு  ஞாபகப்படுத்துகிறேன், ஒப்பீட்டளவில் பொன்சேகாவை விட பல பத்தாயிரம் மடங்கு சிறந்த ஒருவரை விட்டு (உங்கள் 6 அம்சகோரிக்கைகளில் ஒரு அம்சத்தையாவது குறைந்தபட்சம் அவரிடம் காணலாம்) ஏன் இவரை ஆதரிக்கவில்லை என்பதற்கான வலுவான  காரணத்தை  தமிழ் தேசியத்தில் பெரு விருப்புடையவர் எனும் அடிப்படையில் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, MEERA said:

அட நீங்க வேற, சந்திரகாந்தன் முரளீதரன் போலவே தனிக்கும் அக்னிக்கும் திருகோணமலை கிழக்கில் இல்லை.

திருகோணமலை  கிழக்கில் இருந்தாலும் கொஞ்சம் வலுவான வேற கட்சி இருக்குமாயின் அது கூட கூட்டமைப்புக்கு சவாலாக அமையும். திருகோணமலையில் தற்போது கட்சி தொடங்க இருப்பதாக செய்திகள் படித்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/2/2021 at 08:06, அக்னியஷ்த்ரா said:

கடைஞ்சா ...ரஞ்சித் அண்ணை சொன்னார் என்று சும்மா நீங்களும் சகட்டு மேனிக்கு கடையாதீர்கள் 
என்னுடைய அம்மாவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டதாரி தான் (கலைப்பீடம் புவியியல் விசேடம் 1979 உற்சேர்க்கை), பல்கலையில் "கொச்சிக்கா" அணி என்றுதான் எனது அம்மாவையும் அவரது நண்பிகளையும் 
மற்றைய யாழ் மாணவர்கள் அழைப்பார்களாம், எல்லாவற்றிலும் ஒதுக்கி மட்டக்களப்பு மாணவர்களை ஒரு தனி அணியாகவே திரள வைத்துவிடுவார்களாம், பகிடி வதைகளிலும் விசேட கவனிப்பு இந்த "கொச்சிக்கா" அணிக்கு உண்டு,அவற்றில்  சிலவற்றை இங்கே எழுத முடியாது, பிரதேசவாதத்தை மட்டக்களப்பில் இருந்து யாழ் சென்றவர்களும் அனுபவித்திருக்கிறார்கள். 
இன்னுமொன்று இது எனது அனுபவம், எனது நண்பன் ஒருவன் இருக்கிறான் அவனது அப்பா "பாணி " அம்மா "கொச்சிக்கா" , அப்பா வேளாளர் கோவில் வண்ணக்கர் குடி என்று நண்பன் சொல்வான், அப்பா "கொச்சிக்காயை" மணந்ததால் முழு குடும்பமே அவரை கழட்டி விட்டுபோட்டினம் அவருக்கு ஏகப்பட்ட சகோதரங்கள்  , அவனோட அப்பாவின் மரணத்தில் தான் பிரிந்த குடும்பம் ஒன்றுசேர்ந்து வந்து சகோதரங்களுடைய பிள்ளைகளை கண்ணார கண்டினம், அப்போது அவனோட சித்தியின் மக்கள் என்று இரண்டு பெடியளை கூட்டி வந்தான், நாங்கள் ஊரிலிருக்கும் போது பின்னேரங்களில்  கூட்டமாக போய் மாட்டு பாபத்,இறைச்சி, கிழங்கு பொரியல், கோழி லெக் பீஸ் என்று மொத்தோ மொத்து என்று மொத்துவது வழக்கம், கூட்டி வந்த இரண்டு பெடியளும் எங்களோட இருந்து சாப்பிடாமல் தள்ளிப்போய் வேறு மேசையில் இருக்கினம் ,நண்பனும் அவர்களுக்கு தனியாக எடுத்துப்போய் வைத்துவிட்டு வந்தான், என்னடா மச்சி ஏன் நம்ம மேசையில் இடமிருக்கு தானே ஏன் அங்க போய் இருக்கினம் என்று கேட்டால் கண்ணடித்து விட்டு பிறகு சொல்கிறேன் எண்டு சொன்னான், 
அடுத்த நாள் என்னுடைய வீட்டிற்கு அவர்களில் ஒருத்தனை கூட்டிக்கொண்டு வந்திருந்தான் ஆனால்  அந்த பொடியன் வெளியிலேயே நிக்கிறான் நானும் போய் உள்ள வாங்கோ என்று கூப்பிட்டேன் சிரித்துவிட்டு  உள்ள வரவில்லை, நம்ம நண்பன் போய் உடனே போய் நம்மடை ஆக்கள் தான் உள்ள வா எண்டதும் தான் வீட்டிற்குள் வந்தான்,பிறகு தான் தெரிந்தது ஆஹா இது அது இல்ல என்று 
இப்பிடி ஒவ்வொருத்தருக்கும் ஏகப்பட்ட அனுபவம் உண்டு

இதை விட யாழ்ப்பாணத்தில் நம்மவர்கள் பட்ட அனுபவம் நிறைய இருக்கிறது அதை நாம் இங்கே எழுதினால் பிரதேச வாதிகள் என்று சொல்வார்கள் அதனால் தான் நான் எழுத வில்லை. 

பழைய பல்லவியை கிளறுவதை இட்டு இந்த யாழிலாவது ஒற்றுமையாக பயணிப்போம்.😊😊

  • கருத்துக்கள உறவுகள்
On ‎17‎-‎02‎-‎2021 at 08:01, கிருபன் said:

நான் மற்றையோரைக் குஷிப்படுத்த எழுதவில்லை. புள்ளையானின் அப்பட்டமான பிரதேசவாதத்தால் கிழக்கில் (அவருக்கு திருகோணமலையும் கிழக்கில் இல்லை!) நடந்த படுகொலைகளும், தமிழர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளும் எப்போதும் நினைவில் இருக்கும்.

நான் தன்னிறைவான வடமராட்சிப் பிரதேசத்தவன் என்பதால் யாழ்ப்பாண மாவட்டத்தின் பிறபகுதிகளுக்கே போயிருக்கவில்லை.! யாழ்ப்பாண நகருக்கே எண்ணி மூன்று தடவைதான் போயிருக்கின்றேன். பண்ணைப் பாலத்தை பிளேனில் இருந்துதான் பார்த்திருக்கின்றேன்😬

எனக்கு மானிப்பாயும் ஒன்றுதான் மட்டக்களப்பும் ஒன்றுதான்!

பிள்ளையான் பிரதேசவாதம் கதைப்பவர் தான் ...நான் இல்லையென்று சொல்லவில்லை....ஆனால் படிக்காமல் சின்ன வயசிலேயே இயக்கத்திற்கு ஓடிப் போன அவரது கதைக்கும், வெளிநாட்டுக்கு வந்து நன்றாக படித்து  நல்ல உத்தியோகத்தில்  இருக்கும் உங்களுக்கும் ,உங்களை போன்றவர்களது கருத்திற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...சொல்ல போனால்  நீங்கள் கதைப்பது பிரதேசவாதம் என்பதே உங்களுக்கு தெரியவில்லை.
10 ,15 வருசம் அங்கு நாங்கள் இருந்தோம்...ஒருவர் கூட எங்களோடு பிரதேசவாதம் பார்க்கவில்லை .
எத்தனையோ யாழ்ப்பாணத்தவர் அங்கு கல்யாணம் கட்டி இருக்கினம் ...அப்படி கட்டினவையை அங்குள்ளவர்கள் ஏற்றுக் கொண்டு விடுவார்கள் ...ஆனால் யாழ்ப்பாணத்து பக்கத்துக்காரர் கடைசி வரை ஏற்றுக் கொள்ள மாட்டினம் ...இதில் இருந்து யார் பிரதேசவாதிகள் என்று தெரியுதா?
2004ம் ஆண்டு புலிகளோடான  பிரிவின் ஆரம்பத்தில் கருணா யாழ்ப்பாண வியாபாரிகளை அடித்து விரட்டியது உண்மை தான் .[ அதற்கு உண்மையில் பின்னால் நின்றது சிவராம் ,சத்தியமூர்த்தி போன்றோர் என்பது மறக்க முடியாத உண்மை .]....ஏல்லோரையும் அடித்து விரட்டவில்லை , அப்படி விரட்டியிருந்தால் என் குடும்பம் உட்பட ஒரு யாழ்ப்பாணத்தவரும் அங்கு இருந்திருக்க முடியாது 
பிள்ளையான் பிரதேசவாதம் கதைப்பதில் எந்த பிழையும் இல்லை ...அவர் அப்படி கதைப்பதற்கு காரணமே நீங்கள் தானே.
கருணாவோ ,பிள்ளையானோ ஏதோவொரு காரணத்திற்காய் சிங்கள அரசிற்கெதிராய் போராட போய் , இனி மேல் போரிடுவதில் பயனில்லை எங்களை விடுங்கள் என்றும் கேட்டும் , இல்லை நீங்கள், எங்களுக்கெதிராய் போராட வேண்டும் ,சாகத் தான் வேண்டும் என்பது எல்லாம் மேலாதிக்க சிந்தனை தான்.
இறுதி யுத்தத்தில் எத்தனையோ போராளிகள் போராட தயாராய் இருந்தும் , போதியளவு ஆயுதங்கள் இல்லாமல் கடைசி நேரத்தில் போராளிகள் பலர் சரணடைந்தும் , இன்னும் விவஸ்தையில்லாமல் கருணா பிள்ளையான் மீது குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் .
அவர்கள் ,அவர்களது மக்களுக்கு ஏதாவது செய்யட்டும் ...அப்படி அவர்கள் செய்யாதவிடத்து அந்த மக்கள் அவர்களை  ஏற்கிறதா அல்லது இல்லையா என்று தீர்மானிக்கட்டும் .
உங்கட பகுதியில் யாராவது ஒரு சுத்தமான அரசியல்வாதியை வைத்து இருக்கிறீர்களா அவர்களை நீங்கள் நக்கலடிப்பதற்கு ...டக்கியையும் , அங்கயனையும் தான் காட்ட வேண்டும்.
ஒருவரை விமர்சிப்பது என்பது ஆக்க பூர்வமாய் இருக்க வேண்டும் ...எப்ப பார்த்தாலும் உடைந்த டேப் ரெக்கோட் மாதிரி அவர் போராட்டத்தை காட்டி கொடுத்து விட்டார் [இவர்கள் காட்டிக் கொடுப்பதற்கு என்ன இருக்கு என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை.]...துரோகி ,பிரதேசவாதி என்று விசர் கதை கதைத்தது கொண்டு 😠
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் கதைப்பது பிரதேசவாதம் என்பதே உங்களுக்கு தெரியவில்லை.

பிரதேசப் பற்றுக்கும், பிரதேசவாதத்துக்கும்  உள்ள வேறுபாட்டை புரிந்துகொண்டால் இப்படியெல்லாம் எழுதமாட்டீர்கள். இப்படித்தான் இனப்பற்றுக்கும் இனவாதத்துக்கும் உள்ள  வித்தியாசத்தையும் பிழையாகப் பலர்  விளங்கியுள்ளனர். 

ஒருவர் தனது பிரதேசத்தின்/இனத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடும்போதும், பிரதேசத்தின்/இனத்தின் பெருமையைப் பேசும்போது பற்றை வெளிப்படுத்துகின்றார். அதேவேளை தனது பிரதேசத்தின்/இனத்தின் முன்னேற்றத்திற்காக இன்னோர் பிரதேசத்தை/இனத்தை ஒடுக்கும்போதும் அடக்குமுறையைப் பிரயோகிக்கும்போது பிரதேசவாதி/இனவாதியாகின்றார்.

புள்ளையானும் கருணாவும் செய்த கொடூரமான செயல்களே போதும் அவர்களை இனங்காட்ட!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

இதே தான் சரியாய் சொல்லி விட்டீர்கள்...உங்கட தேவைக்காய் அவர்களை பயன்படுத்த நினைத்தீர்கள் ...முடியவில்லை என்றவுடன் துரோகியாக்கி விட்டீர்கள்  

On 15/2/2021 at 22:17, குமாரசாமி said:

நான் மட்டக்களப்பில் இருந்தவன் என்ற முறையில்.......
குரோதம் உள்ளவர்களுடனும் பழகியிருக்கின்றேன்.குரோதாம் இல்லாதவர்களுடனும் பழகியிருக்கின்றேன். ஒரு நிறு திட்ட அரசியலுடன் தமிழ் என்ற போர்வைக்குள் மட்டுமே ஒன்றிணைக்க முடியும். இல்லையேல் யாழ்ப்பாணத்தாரை விட சிங்களவர் எவ்வளவோ மேல் என்ற சிந்தனைக்குள் வருவார்கள்(வந்துவிட்டார்கள்)

நான் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் உள்ள யாழ்ப்பானத்தவர்களுடன் பழகியதிலிருந்து புரிந்து கொண்டது யாழ்ப்பாணத்தாரில் பெரும் சதவீதத்தினர் மற்ற பிரதேச மக்களை கிடைக்கும்போதெல்லாம் மட்டம்தட்டுவர். அதை சுட்டிக்காட்டும்போது அதனை ஏற்காது விதண்டாவதம் செய்வர். இங்கும் அது நடக்கின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, manimaran said:

நான் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் உள்ள யாழ்ப்பானத்தவர்களுடன் பழகியதிலிருந்து புரிந்து கொண்டது யாழ்ப்பாணத்தாரில் பெரும் சதவீதத்தினர் மற்ற பிரதேச மக்களை கிடைக்கும்போதெல்லாம் மட்டம்தட்டுவர். அதை சுட்டிக்காட்டும்போது அதனை ஏற்காது விதண்டாவதம் செய்வர். இங்கும் அது நடக்கின்றது

ஓம் உண்மையாய் இருக்கலாம். ஆனால் மனிதர்களுக்கிடையில் மட்டம் தட்டுவதென்பது உலகம் முழுவதும் இருக்கின்றது. ரஷ்யனை அமெரிக்கனும் அமெரிக்கனை ரஷ்யனும்....ஜேர்மன்காரனை பிரான்ஸ்காரன் மட்டம் தட்டுவதும் என மாறி மாறி நடக்கின்றது. தென்மராட்சி வடமராட்சி மட்டம் தட்டல் நடக்கின்றது.தீவாருக்கும் யாழ்ப்பாணத்தாருக்கும் இடையிலை ஒரு மட்டம் தட்டல் இருக்குது. ஏன் ஜேர்மனியில் கூட மாகாணத்திற்கு மாகாண மட்டம் தட்டல் இருக்குது. சாப்பாட்டு விடயங்களில் கூட ஒரு வித மட்டம் தட்டல்கள் இருக்குது.மாங்கொட்டை சூப்பி.பனங்காய் சூப்பி இப்பிடியே சொல்லிக்கொண்டு போகலாம்.

ஆனால் ஒரு நாடு ஒரு அரசியல் என வரும்போது இந்த மட்டம் தட்டல்களை புகுத்த மாட்டார்கள். அந்தந்த அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் மிக மிக கவனமாக இருப்பார்கள். கருணாவும் பிள்ளையானும் ஒருகாலத்தில் மட்டம் தட்டலாக இருந்த விடயத்தை அரசியலாக்கி விட்டார்கள்.

இதுவரைக்கும் வடபகுதி தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் ரீதியாக கிழக்குமாகாணத்தை பிரித்து பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் படிக்கிற காலத்தில....ஒரு பாட்டுக் கூட இருந்தது..!

தீவாரைக் காண்பதுவும் தீதே!
தீவார் சொல்  கேட்பதுவும் தீதே!
தீவார் குணங்கள் உரைப்பதுவும் தீதே!
அவரோடு  இணங்கியிருப்பதுவும் தீதே..!

இதுவும் கடந்து போனது...!

இதே போல வடக்கான், கிழக்கான் பிரச்சனையும் கடந்து போகும் என்பதே எனது நம்பிக்கை!

இல்லா விட்டால், தமிழன் மீண்டும் தலை நிமிர்வது என்பது......வெறும் கானல் நீர் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, manimaran said:

யாழ்ப்பாணத்தவர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிற மேற்கு நாட்டவர்களையே மட்டம் தட்டுகிறார்கள் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்ப்பாணத்தவர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிற மேற்கு நாட்டவர்களையே மட்டம் தட்டுகிறார்கள் 😂

உங்களுக்கு ஏனைய நாட்டவர்களுடன் சிங்களவர்கள் உட்பட சினேகபூர்வமான பழக்கங்கள் இல்லையென நினைக்கின்றேன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, manimaran said:

நான் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் உள்ள யாழ்ப்பானத்தவர்களுடன் பழகியதிலிருந்து புரிந்து கொண்டது யாழ்ப்பாணத்தாரில் பெரும் சதவீதத்தினர் மற்ற பிரதேச மக்களை கிடைக்கும்போதெல்லாம் மட்டம்தட்டுவர். அதை சுட்டிக்காட்டும்போது அதனை ஏற்காது விதண்டாவதம் செய்வர். இங்கும் அது நடக்கின்றது

எல்லாம் தெரிந்த யாழ் மையவாதிகள் ஆச்சே! 

  • கருத்துக்கள உறவுகள்
On 16/2/2021 at 21:55, ரதி said:

"யாழ்" என்று இணையத்திற்கு பெயர் வைத்து விட்டு, அதில் எழுதுபவர்களிடம் மேலாதிக்க கருத்தை எதிர்பார்க்காமல் என்னத்தை எதிர் பார்ப்பது.
இங்கே எழுதியிருப்பவர்களது பெரும்பான்மையான  கருத்தை வாசித்தாலே பிரதேசவாதமும் ,மேலாதிக்கமும் தலை தூக்குது ...இதில் அடுத்தவரை குற்றமும் சொல்லி ,நக்கலடித்துக் கொண்டு 
எப்பவும் தூண்டி விடுவதும்,உசுப்பேத்துவதும் நாங்களாய்த் தான் இருப்போம் ...அதை கேட்டு விட்டு மற்றவர்கள் பொத்திக்கிட்டு பொறுமையாய் இருக்க வேண்டும்  என்பது உங்களது குணம் ...எதிராய் யாரும் கதைத்தால் பிரதேசவாசம் 
 
யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டுவிற்கு போகாத ஒருவரால்தான் இப்படியொரு கேவலமான கருத்தை எழுத முடியும் ...நீங்கள் கூட இங்குள்ள பலரை சந்தோசப்படுத்த எழுத  தொடங்கிட்டீர்கள் போல...நடத்துங்கள்  😠

இப்படிப்பட்ட தமிழர்களையெல்லாம் சேர்த்து போராடபுறப்பட்ட புலிகளைத்தான் நோகவேண்டும்.... யாழ் களம் என்று பெயர் வைத்ததை குறை சொல்பவர்கள் விடுதலை புலித்தலைவர் யாழ்ப்பாணி என்ற எப்படி புழுங்கியிருப்பார்கள் ? தமிழன் நன்றாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை இந்த திரி,  இலவ்கையில் பாஜாக எ்ன்ற திரியை வாசித்ததுமே அடியோடு நம்பிக்கை போய்விட்டது. எனக்கு இரு நண்பர்கள் பேராதனையாலிருந்தே தெரியும் ( ஒருவர் குருக்கள்மடம், மற்றவர் துறைநீலாவனை. இருவரும் ஒருநாளும் வடக்கு கிழக்கு என்று பிரித்தது இல்லை. படித்தவரகள் இப்படியெல்லாம் நினைக்கமாட்டார்கள் போலும்

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ragaa said:

தமிழன் நன்றாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை இந்த திரி,  இலவ்கையில் பாஜாக எ்ன்ற திரியை வாசித்ததுமே அடியோடு நம்பிக்கை போய்விட்டது.

bjp இலங்கையில் வருவதற்கு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வழக்கம் போல சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள். நீங்களும் வரவேற்கிறீர்களா -  இல்லையா என்பதை அங்கே சொல்லியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கிருபன் said:

எல்லாம் தெரிந்த யாழ் மையவாதிகள் ஆச்சே! 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragaa said:

இப்படிப்பட்ட தமிழர்களையெல்லாம் சேர்த்து போராடபுறப்பட்ட புலிகளைத்தான் நோகவேண்டும்.... யாழ் களம் என்று பெயர் வைத்ததை குறை சொல்பவர்கள் விடுதலை புலித்தலைவர் யாழ்ப்பாணி என்ற எப்படி புழுங்கியிருப்பார்கள் ? தமிழன் நன்றாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை இந்த திரி,  இலவ்கையில் பாஜாக எ்ன்ற திரியை வாசித்ததுமே அடியோடு நம்பிக்கை போய்விட்டது. எனக்கு இரு நண்பர்கள் பேராதனையாலிருந்தே தெரியும் ( ஒருவர் குருக்கள்மடம், மற்றவர் துறைநீலாவனை. இருவரும் ஒருநாளும் வடக்கு கிழக்கு என்று பிரித்தது இல்லை. படித்தவரகள் இப்படியெல்லாம் நினைக்கமாட்டார்கள் போலும்

கிழக்கில் அரசியல் வாதிகள் தங்களது வங்குரோந்து அரசியலுக்கு பிரதேசவாதத்தை கடைபிடிப்பார்கள் ஆனால் கிழக்கு மக்கள் அப்படி இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2021 at 05:58, ரதி said:

பிள்ளையான் பிரதேசவாதம் கதைப்பவர் தான் ...நான் இல்லையென்று சொல்லவில்லை....ஆனால் படிக்காமல் சின்ன வயசிலேயே இயக்கத்திற்கு ஓடிப் போன அவரது கதைக்கும், வெளிநாட்டுக்கு வந்து நன்றாக படித்து  நல்ல உத்தியோகத்தில்  இருக்கும் உங்களுக்கும் ,உங்களை போன்றவர்களது கருத்திற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ..

On 19/2/2021 at 05:58, ரதி said:

2004ம் ஆண்டு புலிகளோடான  பிரிவின் ஆரம்பத்தில் கருணா யாழ்ப்பாண வியாபாரிகளை அடித்து விரட்டியது உண்மை தான் .[ அதற்கு உண்மையில் பின்னால் நின்றது சிவராம் ,சத்தியமூர்த்தி போன்றோர் என்பது மறக்க முடியாத உண்மை .]....ஏல்லோரையும் அடித்து விரட்டவில்லை , அப்படி விரட்டியிருந்தால் என் குடும்பம் உட்பட ஒரு யாழ்ப்பாணத்தவரும் அங்கு இருந்திருக்க முடியாது

அக்காச்சி தன் கற்பனையோடு  உண்மையையும் உளறிவிட்டா. வி. முரளிதரனுக்கும் அவரது  எஜமானுக்கும் உள்ள ஒற்றுமை: அடித்து விரட்டல் மூலம்,  அண்ணனுக்கு இவர்  வக்காலத்து வாங்குவதன் காரணம் என்பன வெளிப்பட்டுள்ளது. அவ சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2021 at 18:58, ரதி said:

பிள்ளையான் பிரதேசவாதம் கதைப்பவர் தான் ...நான் இல்லையென்று சொல்லவில்லை....ஆனால் படிக்காமல் சின்ன வயசிலேயே இயக்கத்திற்கு ஓடிப் போன அவரது கதைக்கும், வெளிநாட்டுக்கு வந்து நன்றாக படித்து  நல்ல உத்தியோகத்தில்  இருக்கும் உங்களுக்கும் ,உங்களை போன்றவர்களது கருத்திற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...சொல்ல போனால்  நீங்கள் கதைப்பது பிரதேசவாதம் என்பதே உங்களுக்கு தெரியவில்லை.
10 ,15 வருசம் அங்கு நாங்கள் இருந்தோம்...ஒருவர் கூட எங்களோடு பிரதேசவாதம் பார்க்கவில்லை .
எத்தனையோ யாழ்ப்பாணத்தவர் அங்கு கல்யாணம் கட்டி இருக்கினம் ...அப்படி கட்டினவையை அங்குள்ளவர்கள் ஏற்றுக் கொண்டு விடுவார்கள் ...ஆனால் யாழ்ப்பாணத்து பக்கத்துக்காரர் கடைசி வரை ஏற்றுக் கொள்ள மாட்டினம் ...இதில் இருந்து யார் பிரதேசவாதிகள் என்று தெரியுதா?
2004ம் ஆண்டு புலிகளோடான  பிரிவின் ஆரம்பத்தில் கருணா யாழ்ப்பாண வியாபாரிகளை அடித்து விரட்டியது உண்மை தான் .[ அதற்கு உண்மையில் பின்னால் நின்றது சிவராம் ,சத்தியமூர்த்தி போன்றோர் என்பது மறக்க முடியாத உண்மை .]....ஏல்லோரையும் அடித்து விரட்டவில்லை , அப்படி விரட்டியிருந்தால் என் குடும்பம் உட்பட ஒரு யாழ்ப்பாணத்தவரும் அங்கு இருந்திருக்க முடியாது 
பிள்ளையான் பிரதேசவாதம் கதைப்பதில் எந்த பிழையும் இல்லை ...அவர் அப்படி கதைப்பதற்கு காரணமே நீங்கள் தானே.
கருணாவோ ,பிள்ளையானோ ஏதோவொரு காரணத்திற்காய் சிங்கள அரசிற்கெதிராய் போராட போய் , இனி மேல் போரிடுவதில் பயனில்லை எங்களை விடுங்கள் என்றும் கேட்டும் , இல்லை நீங்கள், எங்களுக்கெதிராய் போராட வேண்டும் ,சாகத் தான் வேண்டும் என்பது எல்லாம் மேலாதிக்க சிந்தனை தான்.
இறுதி யுத்தத்தில் எத்தனையோ போராளிகள் போராட தயாராய் இருந்தும் , போதியளவு ஆயுதங்கள் இல்லாமல் கடைசி நேரத்தில் போராளிகள் பலர் சரணடைந்தும் , இன்னும் விவஸ்தையில்லாமல் கருணா பிள்ளையான் மீது குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் .
அவர்கள் ,அவர்களது மக்களுக்கு ஏதாவது செய்யட்டும் ...அப்படி அவர்கள் செய்யாதவிடத்து அந்த மக்கள் அவர்களை  ஏற்கிறதா அல்லது இல்லையா என்று தீர்மானிக்கட்டும் .
உங்கட பகுதியில் யாராவது ஒரு சுத்தமான அரசியல்வாதியை வைத்து இருக்கிறீர்களா அவர்களை நீங்கள் நக்கலடிப்பதற்கு ...டக்கியையும் , அங்கயனையும் தான் காட்ட வேண்டும்.
ஒருவரை விமர்சிப்பது என்பது ஆக்க பூர்வமாய் இருக்க வேண்டும் ...எப்ப பார்த்தாலும் உடைந்த டேப் ரெக்கோட் மாதிரி அவர் போராட்டத்தை காட்டி கொடுத்து விட்டார் [இவர்கள் காட்டிக் கொடுப்பதற்கு என்ன இருக்கு என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை.]...துரோகி ,பிரதேசவாதி என்று விசர் கதை கதைத்தது கொண்டு 😠
 
2004 இல் கும்மான் தெற்கிலிருந்து தமிழீழத்திற்காக போராடப் போகிறேன் என்றது என்னாச்சு?

திருகோணமலையில் 2/3 வயதுச் சிறுமியை கடத்தி கோடிக்கணக்கில் கப்பம் பெற்று, அந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தது யாருடைய பின்னணியில்??

முரளிதரன் & சந்திரகாந்தன் கூட்டால் கொலை, கொள்ளை, கப்பம், பாலியல் வல்லுறவு என பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பாகவே இங்கு குறிப்பிடுகிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2021 at 00:24, manimaran said:

நான் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் உள்ள யாழ்ப்பானத்தவர்களுடன் பழகியதிலிருந்து புரிந்து கொண்டது யாழ்ப்பாணத்தாரில் பெரும் சதவீதத்தினர் மற்ற பிரதேச மக்களை கிடைக்கும்போதெல்லாம் மட்டம்தட்டுவர். அதை சுட்டிக்காட்டும்போது அதனை ஏற்காது விதண்டாவதம் செய்வர். இங்கும் அது நடக்கின்றது

மிகவும் உண்மையான கருத்து. யாழ்ப்பாணத்தவர்கள் மன்னிக்கவும். நான் வடக்கோ, கிழக்கோ அல்ல ஆனால் நான் பழகியவர்களில் கிழக்கு மகாணத்து தமிழர்கள் அன்பான/அருமையான‌ மக்கள்.   மேலும் யாழ்ப்பாணிகள், குழுவாக இயங்குதல்/தம‌க்குல் அடிபடுதல்/ கூட வேலை செய்யும் சிங்களவனை எந்த காரணமும் இன்றி  பகைத்தல்/ ந‌ல்லதொரு டீம் லிடர் தன்மை இல்லாமைமை போன்று நிறைய சொல்லலாம். சக தமிழர்களை தோட்டக்காட்டான் / கள்ளத்தோணி / சோனி என அழைத்தல். இப்படி நிறைய சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, colomban said:

மேலும் யாழ்ப்பாணிகள், குழுவாக இயங்குதல்/தம‌க்குல் அடிபடுதல்

நான் இருக்கும் பாடசாலை வாட்ஸப் குழுமங்கள் எல்லாம் இதுதான் நடக்கின்றது. ஏன் குழுவாக அடிபடுகின்றார்கள் என்றே தெரியவில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.