Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Popular Post

நீண்ட நாட்களின் பின்பு முருகனிட்ட விசிட் பண்ணினேன்.கொரானாவை சாட்டாக வைத்து அவரிட்ட போகாமால் காலம் கடத்திக்கொண்டுவந்தேன்.மனைவி முருகன் கோவிலுக்கு போக கேட்டாலும் முருகன் ஒன்லைனில் என்னிட்ட வாரார் ஏன் நான் போக வேண்டும் என்று கேட்டு கடத்தி வந்தேன் .இனிமேலும் காலம் கடத்தினால் எம்பெருமான் ஆத்திரமடைந்து என்னை மறந்து விடுவார் பயம் காரணமாக 2021 இங்கிலிஸ் வருடப்பிறப்புக்கு சென்றேன் .முருகன் தமிழ் கடவுள் ,நான் சைவதமிழன் ஏன் போக வேண்டும் என்று மனசு கேள்வி எழுப்ப "டேய் அவங்கன்ட லீவுகளை வீட்டிலிருந்து உற்சாக பாணம் அடிக்க பாவிக்க முடியும், என்னிடம் வாரது என்றால் மட்டும் நீ சைவம் /தமிழ் என்று எஸ்கியுஸ்களை தெடுகின்றாய் என்ன ?"அதே மனசு மல்டிபல்பெசனல்டிக்கு மாறி கேள்வி  கேட்க நான் பயந்து வருடப்பிறப்புக்கு விசிட் பண்ண முடிவெடுத்தேன்.

"மாஸ்க் எடுத்தாச்சே"

அர்ச்சனைக்கு சாமாங்களை எடுத்தாச்சே என்ற காலம் போய் மாஸ்க் எடுத்தாச்சோ என்று வந்திட்டு என புறுபுறுத்தபடி

"போட்டாச்சு"  என்றேன்

"வெள்ளை வேஸ்டி நீல சேர்ட் போட்டுவிட்டு ஏன் கறுப்பு மாஸ்க் போட்டிருக்கிறீங்கள் ,நீல மாஸ்க் புதுசு வாங்கி காரில் வைத்திருக்கிறேன் போய் போடுங்கோ"

ரொம்ப முக்கியம் என்ற படி

"சரி கோவிலுக்கு கிட்ட போய் போடுவோம்"

"என்ன புறுபுறுக்கிறீயள் ,காரில் கான்ட் சனிட்டைசர் இருக்குத்தானே"

"முடியப் போகின்றது நாளைக்கு புதுசு வாங்குவோம்"

"என்னை மட்ச் பண்ணுகிற மாஸ்க் போட சொல்லி போட்டு ,நீர்  மல்டி கலர் மாஸ்க் போட்டிருக்கிறீர்"

"பிளவுஸின்ட கலர் இந்த மாஸ்கில் இருக்கு ,உங்களுக்கு இந்த லெடஸ்ட் வசயன்கள் ஒன்றும்  தெரியாது"

"வழமையா பிரசாதம். எதாவது கொண்டு போவீர் இன்றைக்கு எங்க ஒன்றையும் காணவில்லை"

"கொரானாவால் பிரசாதம் கோவிலில் கொடுக்க கூடாதாம் அரசாங்க சட்டமாம்"

"அரசாங்க சட்டங்களை சுழிச்சு ஒடுறதில் நாங்கள் கில்லாடிகள் ஆச்சே"

"உண்மைதான் ஆனால் உந்த கொரானா எங்களுக்கு நல்ல பாடம் கற்று தந்துவிட்டது"

கோவிலுக்கு முன்னாலயே வாகன தரிப்பதற்க்கு இடமிருந்தது, வழமையாக இப்படி இலகுவாக கார் பார்க் பண்ணகூடியதாக இருப்பதில்லை கொரணா காரணமாக முருகனிட்ட வருகின்ற விசிட்டர்கள் குறைந்து விட்டார்கள் .

கார்கள் குறைவாக இருந்தது ஆனால் முருகனின்  வாசல்படியில் வரிசையாகமக்கள் நின்று கொண்டிருந்தார்கள்.நானும் போய் வரிசையில் நின்றேன் .முருகனை கொள்ளையடிக்க வந்தமாதிரி எல்லோரும் முக கவசம் அணிந்திருந்தார்கள் யார் முன்னுக்கு நிற்கிறார்கள் ,மனைவிக்கு பின்னால் யார் நிற்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.தொண்டர் ஒருவர் நெற்றிக்கு அருகாண்மையில் துப்பாக்கி மாதிரி ஒன்றை கொண்டுவந்தார் நான் திடுக்கிட்டு போனேன் பிறகு சுதாகரித்து கொண்டு

"முபத்தாறோ,முப்பதேழே என்றேன் "

"35 நல்ல கூலா இருக்கிறீயள் போல "

"முருகனிட்ட வந்தா கூல் தானே அவனே கூலானவ‌ன் தானே"

மனிசி பின்னுக்கு நின்று கிள்ளி  முழிசி பார்த்த படியே ,மாஸ்க் போட்டபடி முழிசினால் எப்படியிருக்கும் 

"கோவிலுக்குள்ள வந்தாலும், உந்த லொள்ளு நக்கல் கதையை விடாமாட்டியள் என்ன‌ ?"

"டேய் உங்கன்ட தொல்லை தாங்க முடியாமல் தான் இதை செய்தன் ஆனால் நீங்கள் என்னடா என்றால் மாஸ்க்,சனிட்டைசர்  எல்லாம் போட்டு  கொண்டு வந்து என்னை தொல்லை படுத்துறீங்களேயடா?"

"எல்லாம் உன் மீது கொண்ட அன்பு "

" அன்போ? வார கோபத்துக்கு தும்மி விட்டன் என்றால் தெரியும்"

" முருகா முருகா முருகா ஏன் இந்த ஆவேசம்"

" பின்ன ? கொரனா என்று கொஞ்சம் நிம்மதியா இருப்பம் என்றால் நீங்கள் உங்கன்ட வழமையான பிரச்சனை கொண்டு வந்து மூட்டை மூட்டையாக கொட்டுறீயள்"

முந்தி மாஸ்க் போடாமல் நீங்கள் சொல்லுறதையே கேட்கிறதே  கஸ்டம்,மாஸ்க் போட்டுகொண்டு நீங்கள் கேட்கிற இந்த கேள்விகள் எனக்கு புறியப்போகுதே?

எப்ப பிளைட் ஓடும்

எப்ப கொமிட்டி கூடும்

எப்ப தேர் கட்டலாம்

எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா?

oh my dad  lord Siva முருகன் புலம்ப தொடங்க நான் நடுங்கிபோனேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, putthan said:

எப்ப பிளைட் ஓடும்

எப்ப கொமிட்டி கூடும்

எப்ப தேர் கட்டலாம்

எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா?

oh my dad  lord Siva முருகன் புலம்ப தொடங்க நான் நடுங்கிபோனேன்

சிட்னி முருகா ஒரு வழியை காட்டு முருகா.......அரோகரா 🌼

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கும் சிட்னி முருகனுக்கும் என்ன பிரச்சனை😎, முருகனை வைத்தே பல கதைகளை எழுதிவிட்டீர்கள். சொன்னால் தீர்த்து வைக்கலாம்😄,

காலத்திற்கேற்ற கதை, உங்கள் பாணியில் எழுதியுள்ளீர்கள், பாராட்டுக்கள்👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா?

யோவ் புத்து இதை யாழ் அகவை 23 இல் பதிந்திருக்கலாமே?
இப்ப கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை.
ஒரு சொல்லு சொன்னால் மாற்றிவிடுவார்கள்.

2 hours ago, putthan said:

வழமையா பிரசாதம். எதாவது கொண்டு போவீர் இன்றைக்கு எங்க ஒன்றையும் காணவில்லை"

பிரசாதத்துக்காகவே போனமாதிரி இருக்கு.

கோவில் பிரசாதம் ஒரு தனிசுவை.

வெட்கமில்லாமல் அடிபட்டு திரும்பதிரும்ப சாப்பிடுவதில் ஒரு சந்தோசம்.
எத்தனை தடவை வாங்கினோம் என்பதில் தனிப் பெருமை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா கிடைக்கிற காப்பில இந்த சிட்னி முருகனை கலாய்க்கிறதில புத்தனுக்கு தனி இன்பம். இந்தக்கதையை வாசித்த பிறகு நாங்கள் பாவம் பார்க்கவேண்டியது புத்தனுக்கா? முருகனுக்கா? கிட்டத்;தட்ட இரண்டு கெரக்டரும் ரிலாக்ஸாக இருக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் பக்தை / துணைவி யின் முயற்சி இருவரையும் ஒரு நேர் கோட்டில் நிறுத்தி இப்படி இருவரையும் புலம்ப வைக்கிறதே. புத்தனிள் புலம்பலுக்கும் முருகனின் அங்கலாய்ப்பிற்கும் பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கோவில் பிரசாதம் ஒரு தனிசுவை.

வெட்கமில்லாமல் அடிபட்டு திரும்பதிரும்ப சாப்பிடுவதில் ஒரு சந்தோசம்.
எத்தனை தடவை வாங்கினோம் என்பதில் தனிப் பெருமை.

ம்ம் அந்த தீர்த்தம் வாங்கி சாப்பிடுவதில் முண்டி அடிப்பதும் ஒரு சுகம் புத்தன் கதிர்காம கந்தனுக்கு கடிதம் போட்டு விசிட் அடிக்க வேண்டியதுதானே  வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

முருகனும் மாஸ்க் போட்டிருந்தவரோ........சரியான நேரத்தில் வந்த நல்ல கதை புத்ஸ்......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கு அரோகரா, இல்லை இல்லை முருகனுக்கு அரோகரா.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் தனக்கே உரிய பாணியில் நக்கலும் நளினமுமாகச் சொன்னாலும் காலத்துக்கு ஏற்றபடி பல விடயங்களைத் தொட்டுச் செல்லுகிறது கதை. சிட்னி முருகனோட நெடுகலும் புத்தனுக்கு ஒரு இது. நல்ல படைப்பு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகனை விட்டு வேறு எங்காவது மூவ் பண்ணி இருந்து பாருங்கள். வேறு கருப் பொருள் எழுதக் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்.....என்று தணியும் இந்த முருகனின் தாகம்?😄

சிட்னி முருகன் ....எல்லோரையும் கவர்ந்து கொள்வதன் மர்மம் என்ன என்று பல தடவைகள் சிந்தித்தது  உண்டு..!

அடையாளங்களைத் தொலைத்த எமது இனத்துக்கு, அவன் ஒரு அடையாளமாக இருக்கிறான் என்று நினைக்கிறேன்...!

கதையின் கருப்பொருள், காலத்தின் தேவை...!

விண்ணை  வென்று விட்டதாகப் புலம்பும் மனிதனை.....ஒரு கண்ணுக்குக் கூடத் தெரியாத கொறோனா வைரஸ் எப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது?

கதை....அருமை....!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

கோவில் பிரசாதம் ஒரு தனிசுவை.

வெட்கமில்லாமல் அடிபட்டு திரும்பதிரும்ப சாப்பிடுவதில் ஒரு சந்தோசம்.
எத்தனை தடவை வாங்கினோம் என்பதில் தனிப் பெருமை.

சிங்கம்! எங்கை வந்து நிக்குது பாருங்கோ...?😀
கதையிலை கூட மாஸ்கை கவனிக்கேல்லை. புக்கை மோதகத்திலை வந்து நிக்குது.:grin:
நான் கோயிலுக்கு போகேக்கை கடவுளே இண்டைக்கு சனம் கனக்க வரக்கூடாது எண்டு வேண்டிக்கொண்டு போறது. ஏனெண்டால் சனம் கனக்க வந்தால் ஒரு மோதகம் ஒரு வாழைப்பழத்துக்கு பதிலாய் ஆளுக்கு  பாதி வாழைப்பழம் பாதி மோதகம் எண்ட கணக்கு வந்திடுமெல்லோ😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அட உங்களுக்கு அந்தளவுதானும்  வருகிது  சந்தோசப்படுங்கோ . நமக்கும் ஐய்யர்வாளுக்கும் கீரியும் பாம்பும் தோஷம் .

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனைக்    கண்டால் நல்ல நகைச்சுவையைக் காணலாம். 
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சிங்கம்! எங்கை வந்து நிக்குது பாருங்கோ...?😀
கதையிலை கூட மாஸ்கை கவனிக்கேல்லை. புக்கை மோதகத்திலை வந்து நிக்குது.:grin:
நான் கோயிலுக்கு போகேக்கை கடவுளே இண்டைக்கு சனம் கனக்க வரக்கூடாது எண்டு வேண்டிக்கொண்டு போறது. ஏனெண்டால் சனம் கனக்க வந்தால் ஒரு மோதகம் ஒரு வாழைப்பழத்துக்கு பதிலாய் ஆளுக்கு  பாதி வாழைப்பழம் பாதி மோதகம் எண்ட கணக்கு வந்திடுமெல்லோ😎

கோவிலுக்குப் போனால் முதல் அலையவிடுவது எந்த எந்த சாமிக்கு முன்னால் தாம்பாளங்களில் இருப்பதை எண்ணாமலே கணக்கிட்டுவிடுவேன்.
இதுகளை பார்ப்பதெங்கே மாஸ்கை பார்ப்பதெங்கே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

சிட்னி முருகா ஒரு வழியை காட்டு முருகா.......அரோகரா 🌼

நன்றி கு.சா 

16 hours ago, உடையார் said:

புத்தனுக்கும் சிட்னி முருகனுக்கும் என்ன பிரச்சனை😎, முருகனை வைத்தே பல கதைகளை எழுதிவிட்டீர்கள். சொன்னால் தீர்த்து வைக்கலாம்😄,

காலத்திற்கேற்ற கதை, உங்கள் பாணியில் எழுதியுள்ளீர்கள், பாராட்டுக்கள்👍

நன்றி உடையார் ....முருகனுடன் அளவு கடந்து லவ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

யோவ் புத்து இதை யாழ் அகவை 23 இல் பதிந்திருக்கலாமே?
இப்ப கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை.
ஒரு சொல்லு சொன்னால் மாற்றிவிடுவார்கள்.

பிரசாதத்துக்காகவே போனமாதிரி இருக்கு.

கோவில் பிரசாதம் ஒரு தனிசுவை.

வெட்கமில்லாமல் அடிபட்டு திரும்பதிரும்ப சாப்பிடுவதில் ஒரு சந்தோசம்.
எத்தனை தடவை வாங்கினோம் என்பதில் தனிப் பெருமை.

நன்றி ஈழப்பிரியன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் ,கோவில் பிரசாதம் மட்டுமா ?கோவில் கண்டினில் காசு கொடுத்தும் தோசை வடை வாங்க முடியாத நிலையில் இருக்கிறோம் இந்த கொரனாவால்

14 hours ago, வல்வை சகாறா said:

ஆகா கிடைக்கிற காப்பில இந்த சிட்னி முருகனை கலாய்க்கிறதில புத்தனுக்கு தனி இன்பம். இந்தக்கதையை வாசித்த பிறகு நாங்கள் பாவம் பார்க்கவேண்டியது புத்தனுக்கா? முருகனுக்கா? கிட்டத்;தட்ட இரண்டு கெரக்டரும் ரிலாக்ஸாக இருக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் பக்தை / துணைவி யின் முயற்சி இருவரையும் ஒரு நேர் கோட்டில் நிறுத்தி இப்படி இருவரையும் புலம்ப வைக்கிறதே. புத்தனிள் புலம்பலுக்கும் முருகனின் அங்கலாய்ப்பிற்கும் பாராட்டுகள்.

நன்றி சகாரா கருத்து பகிர்வுக்கும் ....எல்லாம் அவன் செயல் முருகன் சொல்லுறான் நான் எழுதுகிறேன்

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் அந்த தீர்த்தம் வாங்கி சாப்பிடுவதில் முண்டி அடிப்பதும் ஒரு சுகம் புத்தன் கதிர்காம கந்தனுக்கு கடிதம் போட்டு விசிட் அடிக்க வேண்டியதுதானே  வாழ்த்துக்கள் 

நன்றி தனிகாட்டு ராஜா....ஏற்கனவே கடிதம் போட்டிருக்கிறேன் "நலம் நலமறிய ஆவல் " என்று பார்ப்போம் நல்ல பதில் வரும் என்று எதிர் பார்க்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

முருகனும் மாஸ்க் போட்டிருந்தவரோ........சரியான நேரத்தில் வந்த நல்ல கதை புத்ஸ்......!   👍

நன்றி சுவி ..முருகனின் மாஸ்க் பற்றி எழுதுவோம் என்று நினைத்தனான் ஆனால் கொஞ்சம் பயமாக இருந்தது அதுதான் எழுதவில்லை...

13 hours ago, ஏராளன் said:

புத்தனுக்கு அரோகரா, இல்லை இல்லை முருகனுக்கு அரோகரா.

நன்றி எராளன் .முருகனுக்கு அரோகரா சிட்னி முருகனுக்கு அரோகரா

10 hours ago, Kavallur Kanmani said:

புத்தன் தனக்கே உரிய பாணியில் நக்கலும் நளினமுமாகச் சொன்னாலும் காலத்துக்கு ஏற்றபடி பல விடயங்களைத் தொட்டுச் செல்லுகிறது கதை. சிட்னி முருகனோட நெடுகலும் புத்தனுக்கு ஒரு இது. நல்ல படைப்பு பாராட்டுக்கள்.

நன்றி காவலூர் கண்மணி ...அவனை விட்டால் எனக்கு யார் துணை அதுதான் அவனுடன் செல்லமாக விளையாடுவதுண்டு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, யாயினி said:

சிட்னி முருகனை விட்டு வேறு எங்காவது மூவ் பண்ணி இருந்து பாருங்கள். வேறு கருப் பொருள் எழுதக் கிடைக்கும்.

நன்றி யாயினி ...உந்த கொரணா விடுதில்லையே மூவ் பண்ண ....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நன்றி யாயினி ...உந்த கொரணா விடுதில்லையே மூவ் பண்ண ....

WA வருங்கள் நிம்மதியாக இருக்கலாம்😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, பெருமாள் said:

அட உங்களுக்கு அந்தளவுதானும்  வருகிது  சந்தோசப்படுங்கோ . நமக்கும் ஐய்யர்வாளுக்கும் கீரியும் பாம்பும் தோஷம் .

 நீங்கள் கோயிலுக்கு போனால் பக்திபரவசமாய் நின்று மணி அடிப்பவர் இல்லையென்று தெரிகின்றது...😁

8 hours ago, ஈழப்பிரியன் said:

கோவிலுக்குப் போனால் முதல் அலையவிடுவது எந்த எந்த சாமிக்கு முன்னால் தாம்பாளங்களில் இருப்பதை எண்ணாமலே கணக்கிட்டுவிடுவேன்.
இதுகளை பார்ப்பதெங்கே மாஸ்கை பார்ப்பதெங்கே?

தெய்வமே ...தெய்ய்ய்ய்ய்வமே..:grin:

Bildergebnis für தெய்வமே வடிவேலு

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவிதமான நிலமை வந்தாலும் அதையெ கதையின் கரு ஆக்குவதில் புத்தன் புத்தன் தான்.நன்றி பகிர்வுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2021 at 12:02, putthan said:

எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா?

வக்சீன் போட்டால்தானே முருகனின் கொமிட்டிக்கு தலைவனாகி அவரின் இடையாடையை உருவலாம்😂

புத்தனின் கிறுக்கல் கன காலம் வரவில்லை. கொரோனா லொக்டவுன் கிரியேற்றிவிற்யையும் லொக்டவுன் பண்ணிவிட்டது என்று நினைத்தேன்!

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2021 at 10:57, putthan said:

நன்றி தனிகாட்டு ராஜா....ஏற்கனவே கடிதம் போட்டிருக்கிறேன் "நலம் நலமறிய ஆவல் " என்று பார்ப்போம் நல்ல பதில் வரும் என்று எதிர் பார்க்கிறேன்

உங்கள் கடிதம் ஆமத்துறு கையில் கிடைக்காத வரைக்கும் சந்தோசமா கிடைத்தால் பதில் வேற மாதிரி முருகன் அட்டிறசில வரும் உங்களுக்கு 

On 19/2/2021 at 23:02, putthan said:

முந்தி மாஸ்க் போடாமல் நீங்கள் சொல்லுறதையே கேட்கிறதே  கஸ்டம்,மாஸ்க் போட்டுகொண்டு நீங்கள் கேட்கிற இந்த கேள்விகள் எனக்கு புறியப்போகுதே?

எப்ப பிளைட் ஓடும்

எப்ப கொமிட்டி கூடும்

எப்ப தேர் கட்டலாம்

எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா?

ஆக மொத்தத்தில மனுஷாள் யாரும் எப்ப கொறோனா  ஒழியும் எண்டு கேட்கேல!

வழமையான உங்கள் பாணியில் ஒரு நகைச்சுவைக் கதையைத் தந்தமைக்கு நன்றி புத்தன். மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.