Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

பிலோமினாவின் தந்தையாருடன் அளவளாவிக் கொண்டிருந்த சந்திரன் ஒரு சிறுவன் வீட்டை நோக்கி ஓடி வருவதை அவதானித்தான்! அதே சுருண்ட முடியும், நீல நிறக் கண்களும்...!

அந்தக் குழந்தை யாருடையது என்பதற்குப் பெரிய அறிமுகம் எதுவும் அவனுக்குத் தேவைப்படவில்லை! சந்திரனைக் கண்ட குழந்தையின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது!

அப்பன் பயப்பிடாதை...இவர் உனக்கு மாமா! வெளி நாட்டில இருந்து வந்திருக்கிறார்! 

குழந்தை தாத்தாவைக் கட்டிப் பிடித்த பிடித்த படி....அவனைக் கூர்ந்து கவனித்தபடியே இருந்தது!

இருவரில் ஒருவருமே...பிலோமினாவைப் பற்றிய கதையை ஆரம்பிக்கவில்லை!

நான் அப்ப போயிற்று...நாளைக்குக் காலமை வாறன்! பிலோமினா நிப்பா தானே எனச் சந்திரன் கேட்கவும், தந்தையார் ஓமோம்...நான் அவவிட்டைச் சொல்லி விடுகிறன் மகன் என்று கூறினார்!

அவரது கண்களில் ஏதாவது செய்தி இருக்கின்றதா என்று உற்றுப் பார்த்த போதும் ஒரு வெறுமை மட்டுமே....அதில் தெரிந்தது!

பின்னர் சைக்கிளை உழக்கும் போது கொஞ்சம் எதிர்க் காத்து வீசவே, சைக்கிளைத் தூக்கித் தோள்களில் வைத்த படி நடக்கலாமா என்று யோசித்தவன்...தான் இன்னும் சிறு பிள்ளையில்லை என்று நினைத்துச் சைக்கிளை உருட்டிய படியே நடக்கத் தொடங்கினான்!

செல்லும் வழியில் சில வீட்டுத் தோட்டங்கள் தெரிந்தன! பொதுவாகச் சின்ன வெங்காயமும், மிளகாய், கத்தரி, வெண்டி போன்ற சில மரக்கறி வகைகளும் நடப்பட்டிருந்தன! அதன் பின்னால் உள்ள உழைப்பின் அளவை அவன் ஓரளவுக்குத் தெரிந்திருந்தான்! வெறும் கல் படர்ந்த நிலத்தின் மீது கொஞ்சம் மண்ணை உயர்த்தி..அதன் மீது தான் நாற்றுக்களை நட்டிருப்பார்கள்! தரவை நிலங்களில் நிறையக் காய்ந்த எருக்கள் கிடைக்கும்! அதையும் மழையையும் மட்டும் நம்பியே அந்தத் தோட்டங்கள் இருந்தன! 

வீட்டுக்கு வந்த பின்னரும் பிலோமினாவைப் பற்றிய சிந்தனை அவனை விட்ட பாடில்லை!

இன்னும் நல்ல வெளிச்சம் இருந்ததால்...கால் போன திசையில் கொஞ்ச நேரம் நடக்கத் தொடங்கினான்! வீதிக்குக் கொஞ்சம் தார் காட்டியிருந்தார்கள்!

இப்போதெல்லாம் வீட்டு நாய்களைக் காணும் போது...உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது! அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்!

ஓரு இடத்தில் நிறைய ஆவரம் மரங்கள் சிறு..சிறு பற்றைகளாக இருந்தன! இவற்றின் காய்கள் சீயாக்காய் போல நீளமாக இருக்கும்! இவற்றைத் தலையில் வைத்துக் கழிகளில் குளித்ததும் நினைவுக்கு வந்தது! இப்போதும் அவ்வாறு குளிக்க வேண்டும் போல இருந்தது!

இப்போது அவனுக்கு ஒரு உண்மை...ஓடி  வெளித்தது!  எவ்வளவு நாட்கள் பிற தேசங்களில் வசித்தாலும்...இளமைக் கால நினைவுகள் ஒரு போதும் அழிந்து போவதில்லை! அதே சூழலுக்குள் திரும்பப் போகின்ற போது...அந்த நினைவுகள் அப்படியே திரும்பவும் வரும்! இப்போது பிற் காலத்தில் இங்கு வந்து வசிக்க வேண்டும் என்ற அடி மனத்து ஆசை மேலும் வீறு கொண்டெழுந்தது!

மறு நாள் காலையில் விடிந்தும் விடியாத வேளையிலேயே கண் விழித்தவன் இன்றைய நாளைப் பெரும் எதிர்பார்ப்புகளோடு வரவேற்றான்!

அவனுக்கே பிடித்தமான பிட்டும், கப்பல் வாழைப்பழமும், சம்பலும் பெரியவர் அவனுக்காகச் செய்து வைத்திருந்தார்! பின்னர் காலையின் வாசனையை முகர்ந்த படியே சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் புறப்படவும்....வெளியே யாரோ வருவது போல அரவம் கேட்கவே, பிலோமினாவும் அவளது குழந்தையைக் கையில் பிடித்த படியே நடந்து வந்து கொண்டிருந்தாள்!  அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் பெரியவரின் நினைவு திடீரென வந்ததும், அவளை வரவேற்பதற்காக வெளியே ஒடினான்!

அதற்குள் பெரியவர் முந்திக்கொண்டார்!  என்ன பிள்ளை இந்தப் பக்கம்?

பேச்சு நடை விபரீதமாகப் போய் விடக் கூடாது என்பதற்காக, இவ எனது நண்பனின் உறவினர்...என்னிடம் தான் வந்திருக்கிறா என்று கூறியவன் பிலோமினாவை அழைத்துக் கொண்டு விறாந்தையில் கிடந்த கதிரையில் உட்காரச் சொன்னான்!

அவனது கைகளில் தோன்றிய நடுக்கம்...வெளியே தெரிந்து விடுமோ என்று அவன் அஞ்சிய மாதிரித் தெரிந்தது! தான் எவ்வளவு கோழையாகிப் போனேன் என்று அவனுக்கே வெட்கமாக இருந்தது!

பெரியவரிடம் இவள் என்னோடு ஒரே பாடசாலையில் படித்தவள் என்றோ....எனக்கு மிகவும் நெருக்கமானவள் என்றோ அறிமுகப் படுத்தியிருக்கலாமே என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டான்!

ஒரு ராஜதந்திரப் பார்வை ஒன்றை அவள் மீது வீசிய படியே பெரியவர் அப்பால் நகர்ந்து போனார்!

பெரியவர் போன பின் அவளது கரங்களை இறுகப் பற்றிய படியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தவனை....எப்படி இருக்கின்றீர்கள் என்ற அவளது குரல் இவ்வுலகத்துக்கு அவனை திரும்பவும் கொண்டு வந்தது! ஓம்...ஓம்...சுகத்துக்கு ஒரு பிரச்சனையும் இல்லை!

நான் உங்களை மறந்து போகேல்லை! ஆனாலும் வெளி நாடு சென்றதும் எதிர்பாராத எவ்வளவோ பிரச்சனைகள், படிப்பு...வேலை என்று சிந்திக்கவே நேரம் கிடைக்கேல்ல! தமிழனுக்கே உரித்தான தனித்துவமான பொறுப்புக்கள், எதையுமே நனைச்சுச் சுமக்க வைக்கும் எமது சமுதாய அமைப்பு எல்லாமே சேர்ந்து எனது வாழ்வைத் தின்று விட்டன! எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பார்த்த போது....காதோரத்தில் நரை முடி அரும்பிப் போயிருந்தது! அவன் சொல்லி முடிக்க, அவளும் சிரித்த படியே தனது புத்தம் புதிய நரை முடிகளைத் தடவிக் கொண்ட்டிருந்தாள்!

இதையெல்லாம் பற்றி நீங்கள் கவலைப் படவே வேண்டாம்! எழுதிச் செல்லும் விதியின் கை, யாருக்காகவும் எழுதுவதை நிறுத்துவதில்லை! எப்படி உங்கள் குடும்பம் என்று அவள் விசாரித்த போது...அவனது மௌனமே அவளுக்கான பதிலாக அமைந்தது! அதன் பின்னர் அவளும் அந்தக் கேள்வியை மீண்டும் கேட்கவேயில்லை!

வானத்துச் சந்திரனைப் போலவே.....நீங்கள் என்னிடமிருந்து வெகு தூரம் போய் விட்டீர்கள்! நீங்கள் அண்மையில் இருந்திருந்தாலும் இந்த உலகம் எம்மிருவரையும் சேர்ந்து வாழ ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டாது! ஏன், இன்றும் கூட அது பெரிதாக மாறி விடவில்லை! நான் இந்த வீட்டின் படலையத் தாண்டி வந்த போது...அந்தப் பெரியவரின் முகத்தில் தோன்றிய கோடுகளை, நீங்களும் பார்த்தனீங்கள் தானே?  நீங்கள் வெளி நாடு போய், ஐந்து வருடங்கள் ஆனதும், எங்களுடன் படித்த பீற்றர் என்னைக் கட்டித் தரும்படி அப்பாவிடம் கேட்க, நானும் கழுத்தை நீட்டினேன்! பீற்றரும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு வள்ளம் வாங்கி வைத்திருந்தார்கள்!

பிடிக்கும் மீன்களை எல்லோருமே பங்கிட்டுக் கொள்வார்கள்! ஒரு  வருடத்துக்கு முன்பு வரை எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது!

ஒரு நாள் இந்திய இழுவைப்படகுகள் இவர்கள் போட்டிருந்த வலைகளை அப்படியே சேதப் படுத்தி விட்டுப் போய் விட்டன! இவர்களது வலைகள் மட்டுமல்ல, இன்னும் பலரது வலைகளுக்கும் அதே கதி தான்! இப்போதெல்லாம் இந்தியப் படகுகள் கரைக்கு அருகேயே வருகின்றன! நீங்கள் வந்து பார்த்தால் அவற்றின் எஞ்சின் சத்தத்தைக் கூடக் கரையிலிருந்தே நீங்கள் கேட்கலாம்!

சந்திரன் நீண்ட நேரம் யோசித்து விட்டு....என்னால் ஓரளவுக்கு உதவ முடியும்!  ஆனால் இதை நீங்கள் நிச்சயம் மறுக்கக் கூடாது என்றான்! இதைக்  கேட்டுத் திடுக்கிட்ட பிலோமினா, சந்திரன் நீங்கள் எந்தப் பிராயச்சித்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லை! உங்கள் மீது எந்தத் தவறுகளும் இல்லையே என்று கூறினாள்!

இல்லை, எனது ஆத்ம திருப்திக்காக என்னால் முடிந்த ஒரு உதவியை உனக்காகச் செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவே, அவளும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டாள்!

மறு நாள் வங்கிக்குச் சென்று பிலோமினா பெயரிலும், அவளது குழந்தையின் பெயரிலும், அவனது பெயரிலும் ஒரு வங்கிக்கணக்கு ஒன்றைத் திறந்து வலைகளுக்குத் தேவையான பணத்துடன் மேலதிகமாகக் கொஞ்சப் பணத்தை மேலதிகமாகவும் போட்டு, மாதம் ....மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அந்தக் கணக்குக்குத் திரும்பக் கட்டுமாறு கூறியவன்...அந்தக் கடன் கட்டி முடியும் வரை...அந்த வங்கிப் புத்தகம் தன்னிடமேயிருக்கும் என்றும் கூறிய படியே, அந்தக் குழந்தையின் தலையை வருடிய படியே விடை பெற்றான்!

சில நாட்களின் பின்னர்..அவனது வீட்டில் அவன் விடிகாலையில் நித்திரையால் கண் விழிக்கும் போது, அவனது மனைவி 'என்னப்பா...ராத்திரி முழுக்கப் பிலோ...பிலோ எண்டு பினாத்திக் கொண்டிருந்தீங்கள்,  தலைகணி விலகிப் போச்சோ என்று கேட்கவே,  ம்ம்...தலையே விலகிப் போச்சுது என்ற படி....அன்றைய நாளுக்கான கடமைகளில் மூழ்கத் தொடங்கினான்!

அடுத்த வருசம் இந்தப் பாஸ் புத்தகத்தை எப்படியாவது பிலோமினாவிடம் சேர்த்து விட வேண்டும்!

இனிமேல் அவன் ஊருக்குப் போக மாட்டான்!

முற்றும்....!

Edited by புங்கையூரன்
  • Like 19
  • Thanks 1
  • புங்கையூரன் changed the title to கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, புங்கையூரன் said:

எத்தனையோ சந்திப்புகள் பயணங்கள் பார்வைகள் தொடுகைகள்

நினைவுகள் என்றுமே சுகமானவை 

முடிந்தளவு பிராயச்சித்தம்

முடியாதது பல நெஞ்சுள் முள்ளாய்.

ஏதோ நாமே கடந்து வந்த பாதை போன்று??

நன்றி அண்ணா

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்துபோன காதலை பேனையால் கிறுக்குவதுகூட "பூமியை யந்திரக்கலப்பையால் உழுவது" போன்ற வலி மிகுந்தது.......பகிர்வுக்கு நன்றி புங்கை......!   👏

Posted

துணிச்சல் புங்கையூருக்கு வந்திட்டுது.  முடிவு மட்டும் தயக்கமாக முடிச்சிட்டியள். ஒரு கதையின் பலராலும் ஏற்கக்கூடிய முடிவை தந்திட்டீங்கள். ஞாபகங்கள் தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
22 minutes ago, shanthy said:

துணிச்சல் புங்கையூருக்கு வந்திட்டுது.  முடிவு மட்டும் தயக்கமாக முடிச்சிட்டியள். ஒரு கதையின் பலராலும் ஏற்கக்கூடிய முடிவை தந்திட்டீங்கள். ஞாபகங்கள் தொடரட்டும்.

உண்மை தான்.

சில விடயங்களை அப்படியே சொல்லிவிட முடியாது 

ஏனெனில் காலம் பலவற்றை மாற்றி விட்டிருக்கும்.

இப்போது சொல்வது சிக்கலாக வரலாம்

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமை  அருமை அழகாக முடித்துவிட்டீர்களே இந்திய படகுகளின் உண்மைத்தன்மைகளும் உள்ளுக்குள் வந்து போனதும் சிறப்பு

வாழ்த்துக்கள் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புங்கையண்ணாவே இந்தப் பகுதி முடிக்கும் போது மேலதிகமா  குளம்பி முடிச்சுட்டார்..புங்கையண்ணா நேரம் கிடைக்கும் போது மேலும் ஆக்கங்களை கொண்டு வர வேண்டும் என்பது எனது விருப்பம்.. பகிர்வுக்கு நன்றி👋

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, புங்கையூரன் said:

இப்போதெல்லாம் வீட்டு நாய்களைக் காணும் போது...உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது! அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்!

சில நாய்கள் வடைசிவரை துரத்தும்.சரி இந்த நாய் போகுதென்றால் அடுத்த நாய் துரத்தும்.
நாய்க் கோஸ்டிகளுடன் ரொம்ப கஸ்டம்.

5 hours ago, புங்கையூரன் said:

அவரது கண்களில் ஏதாவது செய்தி இருக்கின்றதா என்று உற்றுப் பார்த்த போதும் ஒரு வெறுமை மட்டுமே....அதில் தெரிந்தது!

ஊரில யாரையும் சமாளிக்கலாம்.பெரிசுகளை சமாளிக்க முடியாது.

5 hours ago, புங்கையூரன் said:

மறு நாள் வங்கிக்குச் சென்று பிலோமினா பெயரிலும், அவளது குழந்தையின் பெயரிலும், அவனது பெயரிலும் ஒரு வங்கிக்கணக்கு ஒன்றைத் திறந்து வலைகளுக்குத் தேவையான பணத்துடன் மேலதிகமாகக் கொஞ்சப் பணத்தை மேலதிகமாகவும் போட்டு, மாதம் ....மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அந்தக் கணக்குக்குத் திரும்பக் கட்டுமாறு கூறியவன்...அந்தக் கடன் கட்டி முடியும் வரை...அந்த வங்கிப் புத்தகம் தன்னிடமேயிருக்கும் என்றும் கூறிய படியே, அந்தக் குழந்தையின் தலையை வருடிய படியே விடை பெற்றான்!

அச்சொட்டாக எழுதுறபடியால் எனக்கென்னவோ புங்கையரின் சொந்தக் கதையாகவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இடைவெளிகள் எப்போதும் பிரிவையே தருகின்றன . ஆனால்  பிரிவு  இதயங்களுக்கு அல்ல .அழகாக கோர்த்து கதை சொல்லிய விதம் அருமை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் புங்கையர்! கதையும் எழுத்து நடையும் மிக பிரமாதம்.👍🏽

யாழ் களத்துக்கு கொடுத்த ஒரு கொடுப்பினை புங்கையரும் சுவியரும் தான்.
இவர்கள் இரண்டு பேரும் கதை எழுதினால் வாசிச்சுக்கொண்டே இருக்கலாம். ஊரோடு சேர்ந்து பயணம் செய்யலாம். கோப தாபங்கள் வராது. மனதுக்கு இதமாக இருக்கும்.
இவர்கள் இரண்டு பேரையும் சென்னைக்கு அனுப்பி  தொலைக்காட்சி சீரியல்களுக்கு கதை வசனம் எழுத சொல்ல வேணும். :)

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல கதைதான் புங்கை. உங்களை அப்பிடியே பார்த்தமாதிரி இருக்கு கதையில் 😂

Posted

முழுமையாக வாசித்து முடித்தேன். அருமையான எழுத்து நடை. இந்தளவுக்கு எழுதும் திறமை இருந்தும் குடத்துள் விளக்காக ஏன் இருக்கின்றீர்கள் என்றுதான் புரியவில்லை.

இலங்கை அரசின் அழிவுகள் கொடுக்கும் பொருளாதார சுமைகளில் இருந்து சக மக்களை மீட்கவும் புலம்பெயர் தமிழர் ஒருவர் தான் இப்பவும் தேவையாக இருக்கின்றார் என்றால் தொப்புள் கொடி உறவு என்று சொல்லிவிட்டு கொள்ளை அடிப்பது மட்டுமன்றி வேண்டும் என்றே வலைகளையும் படகுகளையும் நாசப்படுத்தும் தமிழக மீனவர்களின் அட்டூழியங்கள் கொடுக்கும் பொருளாதாரச் சுமையையில் இருந்தும் அதே புலம்பெயர் தமிழன் தான் மீட்க வேண்டி இருக்கு. கரையில் நின்றாலே இந்திய படகுகளின் சத்தங்களை கேட்க கூடியதாக இருக்கின்றதெனில் அவர்கள் தெரியாமல் எல்லை கடக்கவில்லை; நன்கு தெரிந்து கொண்டே எல்லை மீறுகின்றார்கள்.

முடிவை இன்னும் கொஞ்சம் நீட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். வேகமாக முடித்து விட்டீர்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/3/2021 at 20:43, விசுகு said:

எத்தனையோ சந்திப்புகள் பயணங்கள் பார்வைகள் தொடுகைகள்

நினைவுகள் என்றுமே சுகமானவை 

முடிந்தளவு பிராயச்சித்தம்

முடியாதது பல நெஞ்சுள் முள்ளாய்.

ஏதோ நாமே கடந்து வந்த பாதை போன்று??

நன்றி அண்ணா

ஒரு கதையை அல்லது ஒரு கவிதையை எழுதிச் செல்லும் போது, இடைக்கிடை ஆராவது வந்து ஏதாவது ஒரு கருத்தை அது நல்லதோ அல்லது கெட்டதோ எதுவாக இருந்தாலும் சொல்லிச் செல்லும்போது அது எழுதுபவனுக்கு ஒரு உந்து சக்தியை அழிப்பதுண்டு!

அந்த விதத்தில் உங்கள் கருத்துக்களின் பெறுமதி அளவிட முடியாதது! நீங்கள் குறிப்ப்பிபிட்டது போலவே, நினைவு மீட்டல்கள் மிகவும் இனிமையானவை! அவற்றுள் சில பொத்திப் பாதுகாக்கப் பட வேண்டியவை! சில ஓரளவுக்குப் பகிர்ந்து கொள்ளத் தக்கவை! இன்னும் சில கல்லறை வரைக்கும் காவிச் செல்ல வேண்டியவை! நன்றி....விசுகர்..!

On 21/3/2021 at 20:57, suvy said:

கடந்துபோன காதலை பேனையால் கிறுக்குவதுகூட "பூமியை யந்திரக்கலப்பையால் உழுவது" போன்ற வலி மிகுந்தது.......பகிர்வுக்கு நன்றி புங்கை......!   👏

உண்மை தான், சுவியர்!

எங்கேயிருந்து இந்த உவமானங்களை எடுக்கிறீர்களோ தெரியாது! அந்த வலி எப்படியிருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்த்தேன்!

நன்றி சுவியர்...!

  • Like 1
  • Thanks 1
Posted

காதலைபோல அதன் நினைவுகளும் அழகானவை. பகிர்வுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/3/2021 at 23:41, shanthy said:

துணிச்சல் புங்கையூருக்கு வந்திட்டுது.  முடிவு மட்டும் தயக்கமாக முடிச்சிட்டியள். ஒரு கதையின் பலராலும் ஏற்கக்கூடிய முடிவை தந்திட்டீங்கள். ஞாபகங்கள் தொடரட்டும்.

வணக்கம், சாந்தி...!

துணிச்சல் புங்கையூருக்கு வந்திட்டுது என்பதை விடவும்...காலம் துணிச்சலைக் கொடுத்து விட்டது என்பதே அதிகம் பொருத்தமாக இருக்கும்!

மூன்று நாட்களுக்குத் தலயை உடைத்துக் கொண்ட பின் முடிவு ஒரு மாதிரி மனதில் தோன்றி விட்டது!

ஞாபகங்கள் தொடரும்....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறப்பு... நீங்கள் கதையை நகர்த்திய விதம் தொடர்ந்து வாசிக்க வேண்டும் போன்று ஆர்வத்தை தூண்டியது.... நான் வாசித்த ஒழுங்கு பகுதி 2 பகுதி 4 பகுதி 1 பகுதி 3 திரும்ப பகுதி 4
என் என்று மட்டும் கேட்க வேண்டாம் lol   
தொடர்ந்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/3/2021 at 09:37, புங்கையூரன் said:

ஒரு கதையை அல்லது ஒரு கவிதையை எழுதிச் செல்லும் போது, இடைக்கிடை ஆராவது வந்து ஏதாவது ஒரு கருத்தை அது நல்லதோ அல்லது கெட்டதோ எதுவாக இருந்தாலும் சொல்லிச் செல்லும்போது அது எழுதுபவனுக்கு ஒரு உந்து சக்தியை அழிப்பதுண்டு!

அந்த விதத்தில் உங்கள் கருத்துக்களின் பெறுமதி அளவிட முடியாதது! நீங்கள் குறிப்ப்பிபிட்டது போலவே, நினைவு மீட்டல்கள் மிகவும் இனிமையானவை! அவற்றுள் சில பொத்திப் பாதுகாக்கப் பட வேண்டியவை! சில ஓரளவுக்குப் பகிர்ந்து கொள்ளத் தக்கவை! இன்னும் சில கல்லறை வரைக்கும் காவிச் செல்ல வேண்டியவை! நன்றி....விசுகர்..!

உங்கள் கதை

அது நடந்த இடம்

அங்கு எம்மவரின் எல்லைகள் 

அதை தாண்டமுடியாத எம் வளர்ப்பு

அத்தனையும் அந்த ஊரவனாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது?

ஆனாலும் உங்களை தூண்டி விடமுடியாதபடி அனுபவங்களும் வயசும் தடுத்தன. 

ஒரு முறை எனது 3வது மகன் பிறந்திருந்தபோது என்னை விரும்பிய ஒருவர் எனது வீட்டுக்கு வந்திருந்தார். இந்த கதை கொஞ்சம் எனது மனைவிக்கும் தெரியும் என்பதால் அவர் எம்மை தனியே பேச வழி விட்டார்.

மகனை காட்டமாட்டீர்களா எனக்கேட்டபோது அடுத்த அறைக்குள் தொட்டிலில் படுத்திருந்த அவனைக் காட்டினேன்.

தொட்டிலில் வைத்திருந்த என் கைமீது அவர் கை வைத்தார். நான் திரும்பி பார்த்தபோது அவர் என்னையும் மகனையும் மாறி மாறி பார்த்தார். அவரது கண்கள் கலங்கி இருந்தன.

அந்த கண்கள் ஆயிரம் கதைகளையும் விரக்தி களையும் சொல்லின.

இன்றுவரை அந்த கலங்கிய கண்களை மீண்டும் பார்க்கும் சக்தி எனக்கில்லை.

நன்றி அண்ணா பழைய ஞாபகங்களை மீண்டும் மீண்டும்???

அவை சுவையான சுமைகளாகவே இருக்கட்டும். 

  • Thanks 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்" யாழ் அகவை 21 ல் .

சம்பவம் :  சிவன் கோயிலில் துர்க்கை அம்மனின் முன்னால்  தூணுடன் சாய்ந்து இருக்கிறேன்.அம்பாளையே பார்க்கிறேன்.உள்ளம் உலைக்களத்தில் இரும்புபோல் நெக்குருகிறது. தாயே எதோ என்னை நல்லா வைத்திருக்கிறாய்.என்னைவிட எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும். மனம் பிரார்திக்கின்றது. வெளியே வருகின்றேன் யாரோ என்னை தொடர்ந்து பார்ப்பதுபோல் முதுகில் ஒரு குறுகுறுப்பு.சுற்று முற்றும் பார்க்கிறேன் யாரும் இல்லை. சற்றுநேரத்தில் என் அருகாக ஒரு பெண் விரைந்து சென்று சற்று தூரத்தில் நின்ற எனது மனைவியுடன் கதைத்து கொண்டு இருந்து விட்டு (அவர்கள் இருவரும் ஒரே வகுப்புத் தோழிகள்) மின்னல் போல் சென்று மறைந்து விடுகிறாள்.

  அது ஒரு மறக்க நினைத்தாலும் முடியாத பெயர். அன்றாடம் எமது வாழ்வில் நாம் கேட்கும், பார்க்கும், படிக்கும் பெயர்களில் ஒன்று. உதாரணமாக தேவி, கமலா, விஜயா,பத்மா போன்றது.இது வீட்டுக்குள்ளேயே படங்களில்,நாடகங்களில், கதைகளில் வந்து போகும். சுமார் நாற்பது வருடங்கள் தொடர்பே இல்லை.முன்பு இங்கே அப்பப்ப வருவது வழக்கம். இது தற்செயலா.அதுவும் இன்று காலைதான் இந்த கோயிலுக்கு வர முடிவெடுத்தோம்.அவர்களும் எங்காவது வெளிநாட்டில் இருக்கலாம் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். ஒரு மூன்று நிமிடம்தான் இருக்கும் சுனாமி போல வந்து அடிச்சுட்டு போயிட்டாள். வந்தது அவளா அம்பாளா.

                மனைவி வந்து என்னிடம் கேட்கிறாள். இப்ப யார் வந்து என்னோடு கதைத்து விட்டு போனது தெரியுமோ என்று. நான் ஒன்றும் சொல்லவில்லை. (சிவன்  கோயிலுக்குள் பொய் சொல்ல கூடாது. சுந்தரர் பொய் சொல்லி கண் கெட்டது நினைவு வர நான் மௌனமாக இருந்திட்டன்). நன்றியுடன் அம்மனை பார்த்து வணங்கி விட்டு  கதைத்து கொண்டு வெளியில் வருகிறோம். அவள் தொடர்ந்து அவதான் என்று பெயரை சொல்கிறாள்.மகனுக்கும் கொஞ்சம் சொல்கிறாள். நானும்  அப்படியா நான் பார்க்கவே இல்லை.....! 

இது அன்று எழுதியிருந்தேன் ......இதுக்கு மேல் எழுதவும் முடிவதில்லை."வைடூரியத்தின் நடுவே ஓடும் சுவர்ணரேகைபோல்" சிதையிலும் அழியாத நினைவுகள்........!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

பகிர்வுக்கு மிக்க நன்றி, சுவியர்!

இந்த வரிகள் இன்னும் அப்படியே நினைவிலிருக்கின்றன! ஒருத்தியின் அழகில் மயங்கி வருகின்ற 'ரத்ன வாசா' காதல்கள் ஒரு வகை!

ஒருவரது செயல்களாலோ அல்லது அவர்களது கருணை மனதால் கவரப்படுவதாலோ உண்டாகும் காதல் இன்னொரு வகை!

அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்...அருகினில்  வந்த முனிவனும் நோக்கினான் போன்ற காதல்கள் நமக்கு வரச் சாத்தியமேயில்லை! ஒரு வில்லை ஒடிக்கும் வலிமை மட்டும் அல்ல...அந்த வில்லை நினைத்துப் பார்க்கும் வலிமை கூட இல்லை! 

எனவே சில காதல்கள் மறக்க முடியாதவை தான்...!

"வைடூரியத்தின் நடுவே ஓடும் சுவர்ணரேகைபோல்"

உங்கள் உவமானங்களுக்காகவே, நீங்கள் நிறைய எழுத வேண்டும் என்பது எனது ஆவல்...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/3/2021 at 01:00, பசுவூர்க்கோபி said:

அருமை  அருமை அழகாக முடித்துவிட்டீர்களே இந்திய படகுகளின் உண்மைத்தன்மைகளும் உள்ளுக்குள் வந்து போனதும் சிறப்பு

வாழ்த்துக்கள் அண்ணா

பசுவூர்க் கோபி... மிக்க நன்றி....!

உங்கள் கவிதைகளை அடிக்கடி காண ஆசை...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறப்பாக முடித்துள்ளீர்கள், உங்களின் திறமையை மீண்டும் நிருபீத்துள்ளீர்கள் இக்கதை மூலம், அடிக்கடி எங்களுடன் உங்கள் ஞாபகங்களை பகிருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/3/2021 at 01:19, யாயினி said:

புங்கையண்ணாவே இந்தப் பகுதி முடிக்கும் போது மேலதிகமா  குளம்பி முடிச்சுட்டார்..புங்கையண்ணா நேரம் கிடைக்கும் போது மேலும் ஆக்கங்களை கொண்டு வர வேண்டும் என்பது எனது விருப்பம்.. பகிர்வுக்கு நன்றி👋

வணக்கம், யாயினி...!

நான் முடிவை எழுதும் போது கொஞ்சம் குளம்பியது...எப்படி உங்களுக்குத் தெரிந்தது என்று இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்!

கருத்துக்கு மிக்க நன்றி...!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/3/2021 at 01:39, ஈழப்பிரியன் said:

சில நாய்கள் வடைசிவரை துரத்தும்.சரி இந்த நாய் போகுதென்றால் அடுத்த நாய் துரத்தும்.
நாய்க் கோஸ்டிகளுடன் ரொம்ப கஸ்டம்.

ஊரில யாரையும் சமாளிக்கலாம்.பெரிசுகளை சமாளிக்க முடியாது.

அச்சொட்டாக எழுதுறபடியால் எனக்கென்னவோ புங்கையரின் சொந்தக் கதையாகவே தெரிகிறது.

உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கா, ஈழப்பிரியன்!

நாங்கள் கஸ்தூரியார் வீதியால, இரவில மதில் பாய்ஞ்சு படம் பாத்திட்டு வாற நேரம்...அவ்வளவு நாய்களும் எங்களைப் பத்திரமாய்க் கூட்டிக் கொண்டு வந்து ஹொஸ்டலிலை விடுவினம்! பிரச்சனை என்னவெண்டால்....மாணவ மேற்பார்வையாளரையும்  எழுப்பி விட்டிருவினம்!

நாங்கள் மதில் பாய...அவர் நாங்கள் கீழே விழுந்து விடாத படி...பத்திரமாய் இறக்கி விடுவார்!

நாங்கள் சும்மா ஆக்களா? அவரின்ர தம்பிக்கும் ரிக்கற் எடுத்துக் கொடுத்து. எங்களோட கொண்டு போற ஆக்களெல்லோ!😀

பெரிசுகளைச் சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்..!

புங்கையிரின் சொந்தக் கதை....ஒரு சோகக் கதை...! யாழின் இருபத்தி நாலாவது பிறந்த நாளுக்கு அவிட்டு விட யோசிக்கிறன்...!

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/3/2021 at 20:05, புங்கையூரன் said:

அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்!

அருமையான கதை ....ஓவ்வொரு வசனமும் ஊர் ஞாபகத்தை நினைவுபடுத்தி  செல்கின்றது ..எழுத்து நடை பிரமாதமாக இருக்கின்றது என நான் சொல்ல எனக்கு தகுதியில்லை...அருமை அருமை...
சைக்கிள் ஓடும் பொழுது நாய் குரைத்தால் கால்களை தூக்கி நாம் செய்யும் சேட்டை ,,,,ஆஹா ஆஹா....
தொடருங்கள்....இன்னுமொரு ஊர் ஞாபத்தை

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊக்கப் புள்ளிகள்  வழங்கிய அனைத்து உறவுகளுக்கும், கருத்துப் பதிந்து ஊக்கபடுத்திய சொந்தங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளும்.....வாழ்த்துக்களும்...!

  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கள்ளச் சாராயத்தை மட்டும் செந்தமிழன் அண்ணாவின் கண்ணிலை காட்டீடாதேயுங்கோ அப்புறம் அதையும் அடிச்சுப்போட்டு சகலை எண்டுடுவாப்பில!😂
    • அடுத்த வாரமே தன்னைப்  பிரபாகரனின் பேரன் என்பார்.  இந்த உறவு முறை எல்லாம் அண்ணன் அன்றைக்கு  அடிக்கிற (B)பிராண்டை  பொறுத்து மாறுபடலாம். 😂
    • அவர்கள் நம்பிக்கை படி தீர்ப்பு நாளில் இவரை மீள எழுப்பி, சுவன தீர்ப்பு எழுத முடியாமல் போகும். அல்லா தனக்குரிய exceptional powers ஐ பாவித்து ஏரிக்கப்பட்ட இவரை மீள எழுப்ப வேண்டும்.  
    • 12 DEC, 2024 | 03:42 PM ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.  ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பது தொடர்பில் கனடா அரசாங்கத்தின் அனுபவங்களை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.  இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம் என சுட்டிக்காட்டிய கனடிய உயர்ஸ்தானிகர், தற்போதைய அரசாங்கம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.  இலங்கைக்கான கனடிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் (அரசியல்) பெட்ரிக் பிகரிங் (Patrick Pickering) அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.  https://www.virakesari.lk/article/201089
    • ஐசிசியிடம் எழுத்துபூர்வமான உத்தரவாதம் கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான சலசலப்பு இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம், ஐசிசியிடமிருந்து எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை கோரியுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம்திகதியிலிருந்து மார்ச் 9 ஆம் திகதி வரை சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஏற்று நடத்துகிறது. ஆனால் இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ மறுத்து வருகிறது. மேலும், இந்திய அணிக்கான போட்டிகளை, ‘ஹைபிரிட்’ மாடலில் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியிருந்தது. இந்த கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொள்ளும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், இனி வரும் காலங்களிலும், ஐசிசி தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை ‘ஹைபிரிட்’ மாடலிலேயே நடத்த வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை ஐசிசி எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ஐசிசி இதை கொடுக்கும் பட்சத்தில், இனி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐசிசி தொடர்கள் என்றுமே ஹைபிரிட் மாடலில் தான் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஹெரிபை சந்தித்து பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசின் வழிமுறைகளை தான் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் பின்பற்றும் என ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கூறியது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை, துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அட்டவணை நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/313493
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.