Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் ஆலயச் சூழலில்... கழிவு எண்ணெய், ஊற்றியது விசமிகள் இல்லையாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கழிவு எண்ணெய் ஊற்றிய விசமிகள்!

நல்லூர் ஆலயச் சூழலில்... கழிவு எண்ணெய், ஊற்றியது விசமிகள் இல்லையாம்!

நல்லூர் ஆலயச் சூழலின் புனிதத்தைப் பேணும் வகையில் சிலர் நடந்துகொள்ளாமையால் அதனைக் கட்டுப்படுத்தவே கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கோயிலில் விசமிகளால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக இன்று காலை ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் ஆலயத் தரப்பு இதனை மறுத்துள்ளது.

அத்துடன், ஆலயத்தின் தேர் முட்டி உள்ளிட்ட பகுதிகளில் சில காதல் ஜோடிகள் அமர்வதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் ஆலயச் சூழலுக்கு வரும் காதலர்கள் அங்கு அமர்ந்து கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தாகவும் இதுகுறித்து பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டும் இதனைத் தடுக்க முடியாத கட்டத்தில் கழிவு எண்ணெய் ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1205358

  • கருத்துக்கள உறவுகள்

Super

😏

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவும் பொய்யா நல்லகண்ணு😁 ஒவ்வொரு தமிழ் ஊடகமும் ஒவ்வொரு விதமாய் பொங்கியதே?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் முன்பு  குறைந்த சாதியினர் தண்ணி அள்ளுகினம் என்று கிணத்துக்குள் கழிவு ஒயில் உத்தினவை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

இப்படித்தான் முன்பு  குறைந்த சாதியினர் தண்ணி அள்ளுகினம் என்று கிணத்துக்குள் கழிவு ஒயில் உத்தினவை.

எங்கு ? 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

எங்கு ? 

கரவெட்டி ஞானசாரியார் பாடசாலைக்கு முன் உள்ள கிணற்றில் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

கரவெட்டி ஞானசாரியார் பாடசாலைக்கு முன் உள்ள கிணற்றில் 

இந்த சம்பவம் எத்தனையாம் ஆண்டு நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

இந்த சம்பவம் எத்தனையாம் ஆண்டு நடந்தது?

1995 இடம்பெயர்வின் போது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

1995 இடம்பெயர்வின் போது.

நன்றி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, zuma said:

இப்படித்தான் முன்பு  குறைந்த சாதியினர் தண்ணி அள்ளுகினம் என்று கிணத்துக்குள் கழிவு ஒயில் உத்தினவை.

எனது ஊரிலும் உப்படி நடந்ததுண்டு. ஆனால் கழிவு ஒயில் ஊற்றவில்லை. அவன் கிணத்திலை தண்ணி அள்ளீட்டான் எண்டு அந்த கிணற்றில் பழைய தென்னங்குத்தி,பனங்கொட்டை, ஊமல்,பொச்சு தேங்காய், செத்த பாம்புகளை வீசினார்கள். வேடிக்கை பார்த்த அனுபவம் உண்டு. அன்றைய சூழ்நிலையில் தடுத்து நிறுத்த வயது போதவில்லை.பக்க பலமும் இல்லை. கூடி பழகியதால் என்னையும் ஓரம் கட்டியது நான் சார்ந்த சமூகம்.....

இருந்தாலும் இப்படியான செயல்களுக்கு வெட்கி தலைகுனிகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முருகனுக்கு எத்தனை லவ் பேர்ட்ஸ்..இல்ல கேர்ள் பிரன்ஸ்.இளயவர்கள் எங்காவது என்ஜாய் பண்ணிட்டுப் போகட்டுமே..இந்த யாயினிக்கு என்னாச்சு என்று கேட்காதீர்கள்.👋

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, யாயினி said:

முருகனுக்கு எத்தனை லவ் பேர்ட்ஸ்..இல்ல கேர்ள் பிரன்ஸ்.இளயவர்கள் எங்காவது என்ஜாய் பண்ணிட்டுப் போகட்டுமே..இந்த யாயினிக்கு என்னாச்சு என்று கேட்காதீர்கள்.👋

எனக்கு உது துண்டற விளங்கேல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

எனக்கு உது துண்டற விளங்கேல்லை.

விளங்காமல் இருப்பதே நன்று தாத்தா.👋

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது மனித இனத்தின் மிக உன்னதமான உணர்வுகளில் ஒன்று. காதலின் வெளிப்பாடுகளான முத்தங்களையும் தழுவுதல்களையும் ஆலயச் சூழலில் செய்வது தவறுதான் ஆனால் அவற்றைத் தடுப்பபதற்காக ஆலயச் சூழலில் கழிவெண்ணை ஊற்றியது சரியாகப்படவில்லை.    

மற்றைய மதவழிபாட்டு இடங்களில் இல்லாத அளவில் இயற்கைச் சூழலில் சைவ வழிபாட்டிடங்களில் காதலின் இனிமையை உணர்ந்திடலாம்.  தேவாலயத்தில் பாடகர் குழுவில் பாடிக்கொண்டிருக்கும்  ஒரு கன்னிககையை அல்லது பன்சலவில் வாரிசையில் மலர்த் தட்டு ஏந்திவரும் ஒரு காரிகையை சைட் அடிப்பதைவிட  கோயில் பிரகாரத்தை சுற்றிவரும் ஒரு கயல்விழியை சைட் அடிப்பது இனிமையானது. 😍இலகுவானது. (முக்காட்டு நிலாக்கள் பள்ளிவாயல்களுக்கு வருவதே இல்லை.)

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வாலி said:

இன்னும் சொல்லப் போனால் காதலை ஆலயத்தில் சிற்பங்களாக கூட வடித்து இருக்கிறார்கள்..உருவங்களை அம்மணமாக கூட வடித்து இருக்கிறார்கள்..இவற்றையும் பார்க்க கூடாது என்று கழிவு ஒயிலை ஊற்றுவாரகளா..ஆலய சூழலை கண்டதையும் போட்டு அசுத்த மாக்கினால் பறவாயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

காதல் என்பது மனித இனத்தின் மிக உன்னதமான உணர்வுகளில் ஒன்று. காதலின் வெளிப்பாடுகளான முத்தங்களையும் தழுவுதல்களையும் ஆலயச் சூழலில் செய்வது தவறுதான் ஆனால் அவற்றைத் தடுப்பபதற்காக ஆலயச் சூழலில் கழிவெண்ணை ஊற்றியது சரியாகப்படவில்லை.    

மற்றைய மதவழிபாட்டு இடங்களில் இல்லாத அளவில் இயற்கைச் சூழலில் சைவ வழிபாட்டிடங்களில் காதலின் இனிமையை உணர்ந்திடலாம்.  தேவாலயத்தில் பாடகர் குழுவில் பாடிக்கொண்டிருக்கும்  ஒரு கன்னிககையை அல்லது பன்சலவில் வாரிசையில் மலர்த் தட்டு ஏந்திவரும் ஒரு காரிகையை சைட் அடிப்பதைவிட  கோயில் பிரகாரத்தை சுற்றிவரும் ஒரு கயல்விழியை சைட் அடிப்பது இனிமையானது. 😍இலகுவானது. (முக்காட்டு நிலாக்கள் பள்ளிவாயல்களுக்கு வருவதே இல்லை.)

கோவில் கோபுரத்தில் நிர்வாண சிலைகளும் இதர லீலா விநோதங்களும் வடித்திருந்தால் அதெல்லாம் இங்கே செய்யுங்கள் என்று அர்த்தமில்லை.

வாலி நீங்கள் சொன்னது முற்றிலும் ஜதார்த்தம். இதற்குமேல் புரியும்படி எதையும் சொல்லமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

எனக்கு உது துண்டற விளங்கேல்லை.

இதுக்கு ...காதல் உணர்வு வரவேண்டும்...அதாவது.......உஙகள்..............மீது............

ஒருத்திக்கு...............வர.   .....வேண்டும்.............வ....ரு....மா..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kandiah57 said:

இதுக்கு ...காதல் உணர்வு வரவேண்டும்...அதாவது.......உஙகள்..............மீது............

ஒருத்திக்கு...............வர.   .....வேண்டும்.............வ....ரு....மா..?

வருது......வருது.....😍

  • கருத்துக்கள உறவுகள்

அன்பை கொன்றுவிட்டு .....
ஆச்சாரம் வாழ்வதென்ன ?? 

Image

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

அன்பை கொன்றுவிட்டு .....
ஆச்சாரம் வாழ்வதென்ன ?? 

Image

குந்தவே இடமில்லை இங்கு எப்படி முத்தங்கள் பரிமாறித் தழுவல் செய்திருப்பார்கள்?? ஆய கலைகளில் 65தாவதை புதிதாக உருவாக்கியிருப்பார்களோ?????🤔

  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2021 at 12:35, தமிழ் சிறி said:

நல்லூர் ஆலயச் சூழலில்... கழிவு எண்ணெய், ஊற்றியது விசமிகள் இல்லையாம்!

முருகன் தமிழ்க் கடவுள் என்றபடியால் 

எனக்கு பிஜேபி மீது தான் சந்தேகம்.

On 28/3/2021 at 17:18, குமாரசாமி said:

வருது......வருது.....😍

On 28/3/2021 at 15:15, Kandiah57 said:

இதுக்கு ...காதல் உணர்வு வரவேண்டும்...அதாவது.......உஙகள்..............மீது............

ஒருத்திக்கு...............வர.   .....வேண்டும்.............வ....ரு....மா..?

வந்தது வந்தாய்

துணையுடன் வந்தாய்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.