Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

348DAD88-A8BD-41FC-A691-3E77E90AA8D9.jpeg
 
D768A66F-7CFD-4627-8951-823F3C2614A1.jpeg
 

 

எனக்கு சீமானின் மேடை உடல் மொழி, பேச்சுத்திறன், அவருடைய சூழலியல், மாநில தன்னுரிமை குறித்த கருத்துக்கள் பிடிக்கும் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். திமுக எதிர்ப்பை அவர் கூவிக்கூவி விற்பதாலும் எனக்கு அவர் மீது கோபமில்லை. திமுக ஒழிப்பை அவர் தன் இலக்காகவும் வைக்கலாம். ஒரு கட்சியின் இலக்கு என்கிற விதத்தில் தப்பில்லை. ஆனால் இந்த மேற்பூச்சுகளை சுரண்டி எடுத்து விட்டால் சீமானிடம் ஒன்றுமில்லை என்பதே பிரச்சனை. இந்த புரட்சிகர கருத்துக்களும் சீமானுடைய சொந்த கருத்துக்கள் அல்ல என்பதே பிரச்சனை. அவர் கல்வி, வேலை வாய்ப்பு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு வைக்கும் மாற்றுகள் பற்றி பேசும் போது அவருடைய போதாமை, அவருக்குள் ஒளிந்திருக்கும் சமூக, பொருளாதார அறியாமை வெளிப்படுகிறது என்பதே பிரச்சனை. அதை விட ஆகப்பெரிய பிரச்சனை ஜனநாயக ஆட்சிமுறையில் அவருக்கு அடிப்படையிலேயே நம்பிக்கை இல்லை என்பது. இந்த சுவாரஸ்யமான வெறும் பேச்சால் அவர் இளந்தலைமுறையினரில் அரசியல் புரிதலோ சமூக வரலாற்று வாசிப்போ முதிர்ச்சியோ இல்லாதவர்களை ஈர்த்து வருகிறார், அவர் எதிர்காலத்தில் ஒரு கவனிக்கத்தக்க சக்தியாக வளர்ந்து விடலாம், (கமலைப் போன்றே) எதிர்காலத்தில் பாஜகவுக்கான கலாச்சார களத்தை அவர் தயாராக அமைத்திடலாம் என நினைக்கும் போது எனக்கு நிஜமாகவே கவலை ஏற்படுகிறது.

 

சீமானின் கல்விக் கொள்கைக்கு முதலில் வருகிறேன். அவர் அரும்பு, மொட்டு, மலர் என ஒரு திட்டத்தை வைக்கிறார். இது மேம்போக்காக கேட்க ஏதோ மனிதாபிமான சிந்தனை கொண்ட புரட்சித் திட்டம் எனத் தோன்றும். ஆனால் அவருடைய பேச்சுக் கவர்ச்சியில் இருந்து வெளிவந்து என்னதான் அவர் சொல்ல வருகிறார் என ஊன்றி கவனித்தால் இது எவ்வளவு அபத்தமான ஆபத்தான கல்விக் கொள்கை என புரியும்:

 ஐந்தாம் வயது முதல் ஒரு குழந்தை முறையான கல்வியை ஆரம்பித்தால் போதும் என்கிறார். சரி தான். அடுத்து தான் விவகாரமே துவங்குகிறது - ஆங்கிலம், தமிழ், வரலாறு, அறிவியல், கணிதம் போன்ற அடிப்படை பாடங்கள் எவையும் கட்டாயமாக கற்பிக்க தேவையில்லை, இவற்றில் தேர்வு எழுதவும் அவசியம் இல்லை என்கிறார். அதாவது இந்த பாடங்களை electivesஆக மாற்றலாம் என்கிறார். அதுவும் தேர்வில்லாத தேர்வுப்பாடங்கள். கேட்க நன்றாக இருக்கிறதல்லவா, ஆனால் இங்கே தான் சிக்கலே. ஒரு குழந்தைக்கு ஆங்கிலம் வேண்டாம் என்றால் தமிழ் மட்டுமே படிக்கலாம். கணிதம், அறிவியல் கூட தவிர்த்து விடலாம் என்பது சீமானின் கொள்கை. எனில் நாளை இந்த குழந்தைக்கு வாழ்க்கையின் அடிப்படைகள் எப்படி புரியும்? நியூட்டனின் மூன்றாவது விதி என்றால் பெயரளவில் கூட புரியாமல் போய் விடும். கேல்குலேட்டர் இல்லாமல் சின்ன பெருக்கல் போட தெரியாமல் போய் விடும். வரலாறு படிக்காத ஒரு குழந்தைகளிடம் நாம் அனைவரும் ஆரியர்கள் என சங்கிகள் சொன்னால் அதை மறுத்துப் பேசும் அறிவு கூட இராது. தமிழ் மொழியின் வளர்ச்சியில் மாற்று மொழியை தாய்மொழியாய் கொண்டவர்களின் பங்களிப்பு என்னவென்று தெரியாது. பொன்னியின் செல்வன் படித்தால் அதில் ஏன் ஆழ்வார்க்கடியான் நம்பி மதப்போர் புரிகிறான் எனப் புரியாது. ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ தெரியாத ஒரு குழந்தைக்கு இந்த உலகின் அறிவுச்செல்வங்கள் எப்படி போய் சேரும்? இதை ஏன் சீமான் வலியுறுத்துகிறார் என்றால் தன்னை கேள்வி கேட்காத ஒரு மூடக் கூட்டத்தை அவர் உருவாக்க விரும்புகிறார் என்பதும், அவருக்கு போதுமான முறையான கல்வி கிடைக்காததன் போதாமை இருக்கிறது என்பதையுமே காரணங்களாக காண வேண்டி உள்ளது. ஏனென்றால் மண்டையில் மசாலா உள்ள எந்த கல்வியாளனுமே இந்த அரும்பு, மொட்டு பின்னாத்தல்களை ஏற்க மாட்டான்.

சீமான் அடுத்து சொல்வதைப் பாருங்கள்:

 சின்ன வயதிலேயே என்ன திறனை, ஆர்வத்தை ஒரு குழந்தை வெளிப்படுத்துகிறதோ அதில் மட்டுமே அக்குழந்தைக்கு பயிற்சி அளிக்க வேண்டும், வேறு விசயங்களில் அதை ஈடுபடுத்த அவசியமில்லை என்கிறார். இதற்கு அவர் உதாரண்மாக காட்டுவது சச்சினையும் ஏ.ஆர். ரஹ்மானையும். ரஹ்மான் அடிப்படை பள்ளிக்கல்வி பெற்றவர். நவீன காலத்தின் அனுகூலங்களை அனுபவித்து தன் இசையை விரிவுபடுத்தியவர். அவரும் சரி, சச்சினும் சரி விதிவிலக்குகள். ஒரு குழந்தை சின்ன வயதில் பாட்டில் ஆர்வம் காட்டுகிறது என்பதற்காக பாட்டு மட்டுமே பயின்றால் போதும் என வளர்ப்பது ஆபத்தானது - ஏனென்றால் ஒருவருடைய திறன் என்பது வெளிப்பட்டு, அதில் முழுமையான ஈடுபாடும் தோன்ற ஒரு குழந்தைக்கு பதின்வயதைத் தாண்ட வேண்டி வரலாம் என உளவியல் கூறுகிறது. எட்டு வயதில் இசையில் ஆர்வம் காட்டும் ஒரு குழந்தை பதிமூன்று வயதில் விமானப் பயணியாக விரும்பலாம். பதினாறு வயதில் நிர்வாகவியல் படிக்க விரும்பலாம். அப்போது என்ன செய்வீர்கள்? அதுவரை வேறெதையுமே படிக்காத அந்த குழந்தையின் நிலை என்னவாகும்? அம்போவென தெருவில் விட்டு விடுவீர்களா?

 

இதே பரிந்துரையைத் தான் பாஜகவின் புதிய கல்விக்கொள்கையும் வைக்கிறது - என்ன தேர்வுகளை சீமான் தவிர்க்கிறார், அதைத் தவிர அவருக்கும் சங்கிகளின் கல்விக் கொள்கைக்கும் வித்தியாசமில்லை. இதை அவர் குறிப்பிட்டு பெருமைப்பட்டு வேறு கொள்கிறார். கேவலமாக இல்லையா? மேலும் சங்கிகளின் குலக்கல்வி பரிந்துரையையும் சீமான் வேறுவடிவில் (தொழிற்கல்வி) முன்வைக்கிறார்.

 

அடுத்து சீமானின் வேலை வாய்ப்பு, வணிக, உற்பத்தி கொள்கைகளுக்கு வருவோம். இங்கு தான் அந்த பிரசித்தமான ஆடு, மாடு வளர்ப்பு கொள்கை வருகிறது. தமிழர்களின் பூர்வீக தொழில்களுக்கு நாம் மீள வேண்டும் என்கிறார். அது என்ன? கடலை மிட்டாய் செய்வதில் இருந்து பயிர்களை விளைவிப்பது வரை குறிப்பிட்டு இவற்றை செய்து வெளிநாட்டுக்கு உற்பத்தி செய்தால் நாம் பல மடங்கு வளர்ச்சியை பெறலாம் என்கிறார். இதற்கெல்லாம் சீமானுக்கு எந்த புள்ளிவிபர ஆதாரமும் இல்லை. தமிழ் நாட்டில் இருந்து பல லட்சம் கோடிகளுக்கு கடலை மிட்டாய், நீராகாரம், வேம்புக்குச்சி போன்றவற்றை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய எந்த வெளிநாட்டு எம்.என்.சியும் இன்னும் அவரை அணுகியதாக தெரியவில்லை. அவர் பாட்டுக்கு அடித்து விடுகிறார். யாரும் அறிவுசார் வேலைகளுக்கு போக வேண்டியதில்லை, கார் தொழிற்சாலைகளை வெளியேற்றுவோம், இங்கு எந்த அயல் தொழில்களுக்கும் இடமில்லை, “அண்ணாமலை”, “சூரிய வம்சம்” பாணியில் பால்விற்றும், பேருந்து ஓட்டியும் நாம் பெரும்பணக்காரர்கள் ஆகி விடலாம் என்கிறார். எந்த பொருளாதார, சமூக அறிவும் இல்லாத ஒரு மாக்கானால் மட்டுமே இப்படியெல்லாம் தனக்கு நிபுணத்துவம் இல்லாத துறைகளை சீர்திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை தயக்கமின்றி சொல்ல முடியும். அதனால் தான் சொல்கிறேன் - சீமானுக்கு (நமது ஜியைப் போன்றே) சொந்த அறிவு இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதை கடன்பெற்று கண்ணை உருட்டி, மீசையை முறுக்கி, அங்கிங்கு திரும்பி போஸ் கொடுத்து, கையை நீட்டி முழக்கி நடித்துக் காட்டி பேசி கைதட்டு வாங்கத் தெரியும். அவருடைய சொந்த சரக்கை எடுத்து விடும் போது தான் இவர் ‘மிக ஆபத்தான ஒரு பேதை’ என நமக்குப் புரிகிறது. 

 

அடுத்து, அவருடைய ‘வடுகர்களை ஒழிப்போம்’ கொள்கைக்கு வருவோம் - தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தபட்ட சாதிகளின் பட்டியல் இணையத்தில் கிடைக்கிறது. அதைத் திறந்து பாருங்கள். நம்மிடைய வாழும் பற்பல சாதி மக்களின் தாய்மொழி தமிழ் மட்டுமல்ல, அது தெலுங்காக, சௌராஷ்டிராவாக, கன்னடாவாக, உருதுவாக வேறு மொழிகளாக உள்ளது. இவர்கள் பல தலைமுறைகளாக இங்கு இருப்பவர்கள்.  இங்கே உழைத்து, வரி செலுத்தி, வாக்களித்து நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு, கலாச்சார, அரசியல் எழுச்சிக்கு பங்களித்தவர்கள். இவர்களா வந்தேறிகள்? 

 

 சீமான் இயக்குநராக இருந்த போது அவர் தமிழர்களிடம் மட்டும் தான் பணியாற்றினாரா? அவருக்கு பெயர் பெற்றுத் தந்த “தம்பி” படத்தின் தயாரிப்பாளர் ஒரு கன்னடியர். “எவனோ ஒருவனை” தயாரித்தது வட இந்தியர். சீமானின் பட நாயகிகள் அனேகமாக வேற்று மொழிப் பெண்கள். வட இந்தியர்களை அடித்து துரத்தும் சீமானுக்கு சினிமா என்று வந்தால் மட்டும் அவர்களுடைய தயவு தேவைப்பட்டதா? கீர்த்தி ரெட்டி, சிவரஞ்சனி எல்லாரும் வடுகர்கள் அல்லவா? சினிமாவில் மட்டும் தனித்தமிழ் கொள்கை கிடையாதா? இல்லை, நீங்கள் வட இந்தியர்களை ஓட விடும் போது கோடம்பாக்கத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பீர்களா?

 

இவர்கள் அந்நியர்கள், எந்த அதிகாரத்துக்கும் வரக் கூடாது என சீமான் சொல்வதை நிறைவேற்றினால் தமிழ்நாட்டின் கதி என்னவாகும்? ஒன்று சீமானுக்கு இங்கு வாழும் பலதரப்பட்ட மக்களின் மொழிப்பின்னணி பற்றி, அவர்களுடைய தாய்மொழி குறித்த புள்ளிவிபரங்கள் தெரியாது. அல்லது அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக உளறுகிறார். ஆனால் ஒருவேளை சீமானைப் போன்றவர்களிடம் ஆட்சி போனால் பாஜக ‘இஸ்லாமிய வந்தேறிகளுக்கு’, ‘இந்து விரோதிகளுக்கு’ சி.ஏ.ஏ முகாம்களை அமைப்பது போல சீமான் மொழிசார்ந்த வந்தேறிகளின் அடிப்படை உரிமைகளை பறித்து, அவர்களுக்கு முகாம்கள் அமைத்து சிறைவைப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. பல பேச்சுகளில் அவர் இத்தகைய மக்களை சிங்களவருடன் ஒப்பிடுவதை கவனியுங்கள். சிங்களவர்கள் தமிழரை அழித்ததற்கு பழிவாங்குவோம் என்கிறார். எவ்வளவு ஆபத்தான பேச்சு இது.

“வடமாநில தொழிலாளர்கள் நான் ஆட்சிக்கு வந்தால் பெட்டியை தூக்கிக் கொண்ட ஓட வேண்டியது தான்” என்று சிரிக்கிறார். அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்? அவர்கள் குறைந்த கூலிக்கு நமது பொருளாதார வளர்ச்சிக்கு நல்கும் பங்களிப்பு முக்கியமில்லையா? உழைக்கும் வர்க்கத்தை ஏதோ கொள்ளைக்காரர்களைப் போன்றா வர்ணிப்பது? சரி நீங்கள் இவர்களை துரத்திய பின் இதையே வேறு மாநில அரசுகள் அங்கு பணி செய்யும் தமிழர்களுக்கு செய்தால் என்னவாகும்? தாராவியில் உள்ள தமிழர்களை சிவசேனா ஆட்கள் சட்டமியற்றி வெளியேற்றினால் அவர்கள் எங்கு போவார்கள்? அவர்களுக்கு நீங்களா வேலை கொடுப்பீர்கள்? அவர்களுக்கு நீங்களா இங்கு வீடு கட்டித் தருவீர்கள்? வெளிமாநிலங்களில் இருந்து துரத்தப்படும் தமிழ் மென்பொருளாளர்களுக்கு, மருத்துவர்கள், வியாபாரிகளுக்கு என்ன வேலை தருவீர்கள்? கருப்பெட்டி, கடலைமிட்டாய் உற்பத்தியா? பால் கறப்பதா? இல்லை நீங்களே பரிந்துரைப்பது போல டீக்கடை வைப்பதா? ஏஸியில் உட்கார்ந்து, வசதியாக வேலை செய்து லட்சங்களில் சம்பாதிக்கிறவர்கள் எதற்கு பால்கறந்து, சாணி அள்ளி, டீ அடித்து அதே பணத்தை ஈட்ட வேண்டும்? உங்கள் ஆட்சியில் உண்மையில் அப்படி ஒரு புலம்பெயர்வு நடந்தால் வேலை இழந்து இங்கு வரும் நிலை ஏற்பட்டால் ஒரு பெருங்கூட்டத்துக்கு உடனடி வேலையளிக்க நமக்கு எந்த கட்டமைப்பும் இல்லை, அவர்கள் கடைசியில் சோறின்றி சாலையில் கிடந்து இரப்பார்கள் என்பதே உண்மை.

 

 மேடைக்கு மேடை பாஜகவை, மோடியை சீமான் விமர்சித்தாலும் அவர் மோடியை போன்றே ஆபத்தான, மனதளவில் ஹிட்லருக்கு இணையான ஒருவர் என்பதில் எனக்கு இப்போது சந்தேகமில்லை. மோடி ஒரு கற்பிதமான ஆதி இந்து தேசத்தை கனவு காண வைத்தால், அந்த அடையாள பெருமிதம் மூலம் வடமாநில வாக்குகளை வென்றால், சீமானோ அதே மாதிரி ஒரு கற்பிதமான பழந்தமிழ் நிலச்சுவாந்தார் சமூகத்தை மீளமைக்க முயல்கிறார், அது ஒரு பரிசுத்தமான உயர்வான சமூக நிலை என கதை விடுகிறார், அப்படி கதைவிட்டு வாக்குகளை வெல்லலாம் என கனவு காண்கிறார். இருவருமே நடைமுறைக்கு பொருந்தாத விசித்திர திட்டங்களை முன்வைத்து அரசியல் பண்ணுகிறார்கள்; இத்திட்டங்களின் விளைவுகள் குறித்த தொலைநோக்கு பார்வை இல்லாமல் இருக்கிறார்கள். இருவருமே மாற்றுத்தரப்புடன் விவாதம் செய்கிற, எதிர்கருத்துக்களை பரிசீலிக்கிற ஜனநாயக மாண்பு இல்லாதவர்களாக இருப்பதுடன் தமது தொண்டர்களையும் அவ்வாறே பயிற்றுவிக்கிறார்கள். இருவருமே பேசிப் பேசியே ஆட்சியைப் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். இருவருமே அறிவியல், வரலாற்றுப் புரிதல் சற்றும் இல்லாதவர்கள். இருவருமே, முக்கியமாக, தன்னை சதா முன்னிறுத்துகிற தன்விருப்ப மனநிலை கொண்ட சர்வாதிகாரிகள். ஒரு உதாரணம் தருகிறேன்:

 

ஒரு உரையில் சீமான் தன்னுடைய ஆட்சியில் நா.த.க செயல்படுத்தும் (தோன்றித்தனமான) முடிவுகளுக்கு எதிராக சிலர் நீதிமன்றம் போவார்கள் எனறு சொல்லி விட்டு “ஹா ஹா ஹா” என சிரிக்கிறார். அடுத்து அத்தகையோரை நாங்கள் ரோட்டில் வைத்து வெட்டுவோம் என்கிறார். அதாவது இவர்களை விமர்சிக்கும், கேள்வி கேட்கும், எதிர்த்து போராடும் யாரையும் படுகொலை செய்வார்களாம். இவருக்கு கைதட்டி ஆதரவு தரும் இளைஞர் கூட்டம் எவ்வளவு கொடூரமானவரக்ளாக இருக்க வேண்டும்? இப்போது ஆளும் அரசை விமர்சித்ததற்காக அந்த ஆளுங்கட்சியின் தொண்டர்கள் உங்கள் சகோதரனை, சகோதரியை, தாய், தந்தையை ரோட்டில் வைத்து வெட்டினால் இப்படி கைதட்டி மகிழ்வீர்களா?

 

ஒரு காலத்தில் சீமானுடன் நெருக்கமாக இருந்த அமீர் அண்மையில் ஒரு பேட்டியில் பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நா.த.கட்சியில் ஊடுருவி உள்ளதாக குறிப்பிட்டதை, சீமானும் பொன்.ராதாகிருஷ்ணனும் மறைமுக புரிந்துணர்வுடன், நட்புடன் அரசியல் செய்து வருவதாக சொன்னதை இங்கு குறிப்பிட வேண்டும். எனில் ஏன் நா.த.கட்சி பாஜகவை எதிர்க்கிறது?

 

சீமான் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் மோடியை திட்டுவதும், ஒரு மனிதகுல விரோதி என அவரை வர்ணிப்பதும் ஒரு ஈடிபல் காம்பிளக்ஸ் என நினைக்கிறேன் - தந்தை உருவாக உள்ள மோடி மீது மகன் உருவான சீமானுக்கு உள்ள பொறாமையும், தந்தை உருவின் பிம்பத்தை மறுத்து அவரது அதிகாரத்தை தான் கைப்பற்ற வேண்டும் எனும் இச்சையே இங்கு வெளிப்படுகிறது. உள்மனத்தில் அவர் ஒரு ‘தமிழக மோடியாக’ உருவாகவே ஆசைப்படுகிறார். ஆனால் தந்தையின் இடத்தை அடைய விரும்பும் எந்த மகனையும் போல அதை ஒப்புக்கொள்ள விரும்பாமல் கசப்பாக வெளிப்படுத்துகிறார்.

 

சீமானுக்கெல்லாம் இவ்வளவு சீரியஸான பதிவு தேவையா என சிலர் கேட்கலாம் - நா.த.க ஒரு வளர்ந்து வரும் கட்சி, அது தன்னுடைய தொண்டர்களை விரிவுபடுத்தி வருகிறது, அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் வளரும் என்று புரிந்தே இதை எழுதுகிறேன். இதைப் போன்ற அபத்தமான கருத்துக்கள் அன்று எண்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ்ஸால் பேசப்பட்டு பொது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டன அல்லவா! ஆனால் அவை இன்று வளர்ந்து பாஜகவின் சித்தாந்தமாகி நம்மை அடிமைப்படுத்தவில்லையா? சீமான் ஒரு தமிழ் சாவர்க்கர். அவரை நாம் இப்போதே அடையாளம் கண்டு கிள்ளி எறிய வேண்டும்!

 

பின்குறிப்பு: சீமான் குறித்து நான் இங்கு சொல்லி உள்ளவை தமிழ் தேசிய இயக்கம் மீதான என் விமர்சனம் அல்ல. தமிழ் தேசியம் மீது எனக்கு மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது. அதன் ஒரு சீரழிந்த பாசிச வடிவம் மட்டுமே சீமான் உளறிக் கொட்டுவது.

 

http://thiruttusavi.blogspot.com/2021/04/blog-post_36.html

 

 

  • Replies 145
  • Views 10.7k
  • Created
  • Last Reply

சீமானின் போலித்தனத்தை தர்க்ககரீதியில் சுட்டிக்காட்டும் சிறப்பான பதிவு. இணைப்புக்கு நன்றி கிருபன். 

இதே போலவே அண்மைய செந்தில் வேலின் தமிழ் கேள்வி நேர காணலும் அமைந்திருந்தது.  சீமான் மீது எந்த வசை மாரியும்  பொழியாமல் ஆதாரங்களுடன் சீமானின் இரட்டை வேடங்களை சுட்டிக் காட்டுகிறார். விரிவான மிக சிறந்த அரசியல் நேர் காணல். இதற்கு சீமான் தரப்பில் இருந்து தகுந்த பதிலை வழங்க முடியாது.  வழமை போல் செந்தில்வேல் ஒரு வந்தேறி என்றோ துரோகி திட்ட மட்டுமே முடியும். 

 பா.ஜ. க போல சீமானின் இனவெறி தேசியவாதமும் அழிக்கப்படவேண்டிய ஒன்றே.

  

Edited by tulpen

பகிர்வுக்கு நன்றி கிருபன். நான் சீமானை பற்றி நினைத்து வைத்திருப்பதை சமன் செய்கின்றது கட்டுரை.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

பகிர்வுக்கு நன்றி கிருபன். நான் சீமானை பற்றி நினைத்து வைத்திருப்பதை சமன் செய்கின்றது கட்டுரை.

அப்படீன்னா, சீமான் குறித்த இந்த வகை கட்டுரைகள், தப்பிக்கும்... சரிதானா, தல? 😁

13 minutes ago, Nathamuni said:

அப்படீன்னா, சீமான் குறித்த இந்த வகை கட்டுரைகள், தப்பிக்கும்... சரிதானா, தல? 😁

இது ஒரு பிரச்சார கட்டுரை அல்ல. நாம் தமிழர் எனும் தமிழக அரசியல் கட்சி  பற்றிய பார்வையை சொல்லும் கட்டுரை. பிஜேபி பற்றிய விமர்சனக் கட்டுரையை, ஆர்.எஸ்.எஸ் எனும் அடிப்படைவாத அமைப்பு பற்றிய கட்டுரையை, திமுகவின் ஊழல்கள் பற்றிய, கமல் எனும் அரசியல்வாதியை பற்றியை கட்டுரையை போன்ற ஒரு கட்டுரை இது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

இது ஒரு பிரச்சார கட்டுரை அல்ல. நாம் தமிழர் எனும் தமிழக அரசியல் கட்சி  பற்றிய பார்வையை சொல்லும் கட்டுரை. பிஜேபி பற்றிய விமர்சனக் கட்டுரையை, ஆர்.எஸ்.எஸ் எனும் அடிப்படைவாத அமைப்பு பற்றிய கட்டுரையை, திமுகவின் ஊழல்கள் பற்றிய, கமல் எனும் அரசியல்வாதியை பற்றியை கட்டுரையை போன்ற ஒரு கட்டுரை இது. 

இதென்ன புதுமையான விளக்கம்?

இதனை வாசிப்பவர்கள், சீமானுக்கு வாக்களிக்காமல் விடலாம் அல்லவா?

சீமான் குறித்து நான் சார்பானதாக போட்டது நீக்கப்பட்டுள்ளது. 

அப்படி நடக்கும் என்று தெரிந்தே, நகைசுவைக்காக, சீமான் - ஒரு பார்வை என்ற திரியை பதிந்தேன்.

செந்தில், உதயநிதியை சந்தித்து, 5 லட்சம் பெற்று, கமரா போன்ற உபகரணங்கள் வாங்கினார் என்ற குற்றசாட்டுக்கு உள்ளாகி உள்ள நிலையில், அவரது வீடியோவில் என்ன நடுநிலை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?    

உங்கள் சில புரிதல்கள்  குறித்து, எனக்கு, சில சங்கடங்கள் உள்ளது. 
 

Edited by Nathamuni

10 minutes ago, Nathamuni said:

இதென்ன புதுமையான விளக்கம்?

இதனை வாசிப்பவர்கள், சீமானுக்கு வாக்களிக்காமல் விடலாம் அல்லவா?

சீமான் குறித்து நான் சார்பானதாக போட்டது நீக்கப்பட்டுள்ளது.

செந்தில், உதயநிதியை சந்தித்து, 5 லட்சம் பெற்று, கமரா போன்ற உபகரணங்கள் வாங்கினார் என்ற குற்றசாட்டுக்கு உள்ளாகி உள்ள நிலையில், அவரது வீடியோவில் என்ன நடுநிலை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?    

உங்கள் சில புரிதல்கள்  குறித்து, எனக்கு, சில சங்கடங்கள் உள்ளது. 
 

இதே கேள்வி ஏன் மிச்ச நேரங்களில் உங்களுக்கு வருவதில்லை? 

கமலஹாசனை பற்றி எதிர்மறையாக கிருபன் ஒரு தொடர் திரியையே இணைத்து வருகின்றார், திமுகவின் ஊழல்பற்றி எத்தனை பதிவுகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன, திமுக ஈழத்தமிழர் விடயத்தில் செய்த துரோகம் பற்றி இந்த 3 மாதங்களில் எத்தனை தடவைகள் எழுதப்பட்டுள்ளன, பிஜேபி யின் அடிப்படைவாதம் பற்றி பல திரிகள் இங்குள்ளன.

நாம் தமிழர் தவிர்ந்த ஏனைய கட்சிகளைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஒரு புரிதலும், நாம் தமிழர் கட்சி பற்றிய எதிர்மறையான விமர்சனத்துக்கு இன்னொரு விதமான புரிதலும் உங்களுக்கு உள்ளது. 

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

இதே கேள்வி ஏன் மிச்ச நேரங்களில் உங்களுக்கு வருவதில்லை? 

கமலஹாசனை பற்றி எதிர்மறையாக கிருபன் ஒரு தொடர் திரியையே இணைத்து வருகின்றார், திமுகவின் ஊழல்பற்றி எத்தனை பதிவுகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன, திமுக ஈழத்தமிழர் விடயத்தில் செய்த துரோகம் பற்றி இந்த 3 மாதங்களில் எத்தனை தடவைகள் எழுதப்பட்டுள்ளன, பிஜேபி யின் அடிப்படைவாதம் பற்றி பல திரிகள் இங்குள்ளன.

நாம் தமிழர் தவிர்ந்த ஏனைய கட்சிகளைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஒரு புரிதலும், நாம் தமிழர் கட்சி பற்றிய எதிர்மறையான விமர்சனத்துக்கு இன்னொரு விதமான புரிதலும் உங்களுக்கு உள்ளது. 

நன்றி.

நிழலி மன்னிக்க வேண்டும்.

எனது புரிதல் அல்ல..... உங்கள் புரிதல் குறித்தே பேசுகிறோம்.

கிருபன் மற்றும் எனது நிலைப்பாட்டுக்கும், உங்களது நிலைப்பாடுக்கும் நிச்சயமாக வித்தியாசம் உண்டு. 

நீங்கள் வெளிப்படையாக நாதக எதிர்த்துக்கொண்டே, மட்டுறுத்து செய்வதால், எமக்கு வரும் சில சங்கடங்கள் நியாமானவை அல்லவா.

நன்றி.

நான் இணைத்த செந்தில்வேலின் விரிவான நேர்காணலில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு சீமானால் கூட பதில் கூற முடியாது என்பது வெளிப்படையானது. அரசியல் என்றால்  துரோகி, வந்தேறி, திமுக கைக்கூலி என்று திட்டுவதுதான் என்றே சீமானால் அவரது கட்சியினருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது 

ஆனால் நாம் தமிழர் தம்பி ஒருவரே அந்த காணொளி பற்றி நான் கூறிய அதே கருத்தை கூறியுள்ளதானது,  நாம் தமிழர் தம்பிகளும் கூட சிந்திக்க தொடங்கி விட்டனர் என்பதை உறுதிப் படுத்துகிறது

https://youtu.be/CZsY1ORLaRU

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் நோக்கம் தேர்தலில் வெற்றி பெறுவது அல்ல, அவருக்கு கொடுக்கப்பட்ட ஒப்படை( Assignment) தமிழ் தேசிய வாக்குகளை பிரிப்பதுவாகும். அதை அவர் நன்றாக செயிகின்றார், சில வேளை அவரை அறியாமலே அதை வெளி படுத்தி விடுகின்றார். பிஜேபி இன் திடடம் இம்முறை தேர்தலில் வெல்வதல்ல அதிமுக வை சிதைத்து, தமிழ் நாட்டில் எதிர்க்கட்சியாய் வருவதே. பிஜேபி இன் சதுரங்க ஆட்டத்தின் பகடை காய்களே சீமானின் தம்பிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

சீமானின் நோக்கம் தேர்தலில் வெற்றி பெறுவது அல்ல, அவருக்கு கொடுக்கப்பட்ட ஒப்படை( Assignment) தமிழ் தேசிய வாக்குகளை பிரிப்பதுவாகும். அதை அவர் நன்றாக செயிகின்றார், சில வேளை அவரை அறியாமலே அதை வெளி படுத்தி விடுகின்றார். பிஜேபி இன் திடடம் இம்முறை தேர்தலில் வெல்வதல்ல அதிமுக வை சிதைத்து, தமிழ் நாட்டில் எதிர்க்கட்சியாய் வருவதே. பிஜேபி இன் சதுரங்க ஆட்டத்தின் பகடை காய்களே சீமானின் தம்பிகள். 

ஓ...அப்பிடீங்களா? வெளிப்படுவதை பாரத்தீங்கோ.....

சரி,... சரி.😁

  • கருத்துக்கள உறவுகள்

இதே யாழ் களத்தில் இதே கிருபன் அண்ணர்.. சீமான் இராமசாமியை கொண்டாடித் திரிந்த போது.. சீமானின் பேச்சுக்களை தேடி தேடி ஒட்டி வந்ததையும் மறக்கக் கூடாது. 

இன்று சீமான் தமிழகத்தில் தமிழர் உணர்வை தமிழ் தேசிய உணர்வை உயர்த்திப் பிடிப்பதால்.. இராமசாமியின் போலித் திராவிடத்தை எதிர்ப்பதால்.. கிருபன் அண்ணா உட்பட அந்த வகையினர்.. சீமானை.. எதிர்ப்பது ஒன்றும்.. வியப்பல்ல.

சீமான்.. ஈழம் எடுத்துத் தருவார்.. சீமான்.. தேசிய தலைவரை புகழ்ந்து திரிவார் என்பதற்காக அல்ல.. அயலில் உள்ள தமிழனின் சோகத்தை தமிழகம் அறியாத வகைக்கு செய்த திராவிடப் பிசாசுகளை விட.. சீமானின் தமிழ் தேசியம்.. கொஞ்சம் என்றாலும்.. நாம் தமிழராக தமிழர்களை இணைக்கும் என்ற ஒரு நப்பாசை 2009 க்குப் பின் மேலுழுந்துள்ளது..

தெற்காசியாவில்.. தமிழர்கள் மொழியால்.. இனத்தால்.. ஒருங்கிணையாமல்.. சிங்கள பெளத்தத்தின் சீன ஆதரவு பேரினவாத ஆக்கிரமிப்பை எதிர்கொள்வது என்பது அசாத்தியமானது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானை மட்டும் நோக்கி சுட்டுவிரலை நீட்டுபவர்கள் ஏன் இதர கட்சிகளின் தவறுகளை/ஊழல்களை பற்றி  கருத்துக்கள் சொல்வதில்லை?
ஒரு சில திராவிட கட்சி தலைவர்களால் தமிழை கூட ஒழுங்காக பேச முடிவதில்லையே? அது மட்டுமல்லாமல் தேர்தல் அரசியலுக்காக மட்டும் ஈழத்தமிழர் பிரச்சனைகளை காவிச்செல்லும் திராவிடத்தை 60 வருடங்களுக்கு மேலாகவே பார்த்து வருகின்றோமல்லவா?


தமிழ்நாட்டில் திராவிடத்தின் வாய்வழி வீரம் தேர்தல் பிரச்சாரத்துட நின்று விடும். மிகுதியை கிந்திய கலாச்சாரமே கோலோச்சும். இதுதான் அன்று தொடக்கம் நடக்கின்றது. அதை விட இந்திய அரசியலை ஈழத்தமிழர்கள் விமர்சிக்க தகுதியற்றவர்கள் அல்லது ஏற்புடையதல்ல என கூறியவர்கள் இன்று காணொலி ஆதாரங்களை இணைத்து புளகாங்கிதம் அடைகின்றார்கள்.

இது குமாரசாமி ஆகிய நான் நிதானத்துடன் எழுதிய கருத்து.😎

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் வாழும்  ஈழத்தமிழரின் கதைகளைக்கேட்டு தமிழகத்தமிழன்  வாக்களிககப்போவதில்லை...எங்களது  இந்த  வாககுவாதங்களால்  தமிழகததில்  எதுவும் செய்து விடமுடியாது...எனவே நாம்எவரையும்  ஆதரிக்காமாலிருப்பது நல்லது..  முன்பும்  எம்.ஜி.ஆர்...கருணநிதி காலத்தில்/ விடயத்தில்   எம்ஜிஆரை ஆதரித்து .பின் கருணநிதி நடத்த விதம். நாம்  அனைவரும்  அறிந்தாதே தோற்கப்போகிறவரை ஆதரித்து. என்ன பலன் 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அவர்கள் கிறிஸ்தவனாக பிறந்து, பெரியாரை பின்பற்றி நாத்தீகம் பேசி. தற்பொழுது கையில் வேல்லெடுத்து  தமிழ் தேசியம் போசுகின்றார் . அயோக்கியனின் கடைசி உறைவிடம் தேசபக்தி  என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கின்றார்.

44 minutes ago, குமாரசாமி said:


ஒரு சில திராவிட கட்சி தலைவர்களால் தமிழை கூட ஒழுங்காக பேச முடிவதில்லையே? அது மட்டுமல்லாமல் தேர்தல் அரசியலுக்காக மட்டும் ஈழத்தமிழர் பிரச்சனைகளை காவிச்செல்லும் திராவிடத்தை 60 வருடங்களுக்கு மேலாகவே பார்த்து வருகின்றோமல்லவா?

 

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி-கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Kandiah57 said:

வெளிநாட்டில் வாழும்  ஈழத்தமிழரின் கதைகளைக்கேட்டு தமிழகத்தமிழன்  வாக்களிககப்போவதில்லை...எங்களது  இந்த  வாககுவாதங்களால்  தமிழகததில்  எதுவும் செய்து விடமுடியாது...எனவே நாம்எவரையும்  ஆதரிக்காமாலிருப்பது நல்லது..  முன்பும்  எம்.ஜி.ஆர்...கருணநிதி காலத்தில்/ விடயத்தில்   எம்ஜிஆரை ஆதரித்து .பின் கருணநிதி நடத்த விதம். நாம்  அனைவரும்  அறிந்தாதே தோற்கப்போகிறவரை ஆதரித்து. என்ன பலன் 

ஈழத்தமிழர்கள் இந்தியாவை ஆதரிப்பவர்கள். ஆதரித்தவர்கள்.இந்தியாவை அடி மடியில் வைத்திருந்தவர்கள்.மொழி மத வேற்றுமை பார்த்தவர்கள் இல்லை. கலை கலாச்சார ரீதியாகவும் வேறுபடில்லாதவர்கள்.
இருந்தும் துரோகங்கள் மறக்க முடியாதவை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

வெளிநாட்டில் வாழும்  ஈழத்தமிழரின் கதைகளைக்கேட்டு தமிழகத்தமிழன்  வாக்களிககப்போவதில்லை...எங்களது  இந்த  வாககுவாதங்களால்  தமிழகததில்  எதுவும் செய்து விடமுடியாது

100 வீதம் உண்மை எதற்காக சீமானுக்காக இங்கே பிரசாரம் நடைபெறுகிறது என்பது விளங்கவில்லை 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அயோக்கியனின் கடைசி உறைவிடம் தேசபக்தி  என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கின்றார். நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி-கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி.

தமிழ் நாட்டில் நிறைய பேருக்கு பொருந்துமே இவை. இது பற்றி நீங்கள் மேலும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

சீமானின் போலித்தனத்தை தர்க்ககரீதியில் சுட்டிக்காட்டும் சிறப்பான பதிவு. இணைப்புக்கு நன்றி கிருபன். 

இதே போலவே அண்மைய செந்தில் வேலின் தமிழ் கேள்வி நேர காணலும் அமைந்திருந்தது.  சீமான் மீது எந்த வசை மாரியும்  பொழியாமல் ஆதாரங்களுடன் சீமானின் இரட்டை வேடங்களை சுட்டிக் காட்டுகிறார். விரிவான மிக சிறந்த அரசியல் நேர் காணல். இதற்கு சீமான் தரப்பில் இருந்து தகுந்த பதிலை வழங்க முடியாது.  வழமை போல் செந்தில்வேல் ஒரு வந்தேறி என்றோ துரோகி திட்ட மட்டுமே முடியும். 

 பா.ஜ. க போல சீமானின் இனவெறி தேசியவாதமும் அழிக்கப்படவேண்டிய ஒன்றே.

  

அப்பா ..இந்த நேர்காணலை பார்க்கைக்க உண்மையாகவே புல் அரிச்சுது 
உதில் செந்தில் வேல் தன்னை அறிமுகம் செய்வார் பாருங்கோ,பெரியாரின் பேரன் ,அம்பேத்காரின் தத்துப்பிள்ளை என்று பட்டியல் போட்டுவிட்டு அதுவரை வேடிக்கை பார்த்து விட்டு இருந்த நாம  கடைசியாக மேதகு பிரபாகரன் அண்ணன் அவர்களை ஏற்றுக்கொண்ட தமிழ்தேசியவாதி என்று ஈழப்போரட்டத்தை வாடகைக்கு எடுப்பார் பாருங்கோ இனி விட்டுவைக்க கூடாது, சீமானுக்கு கொடுக்கும் அதே  ட்ரீட்மெண்டை 
செந்தில்வேலுக்கும் கொடுக்க வேண்டியது தான், 
அண்ணே செந்தில்வேல் வல்லிபுரம் பார்வதியம்மாள் அதுதான் உங்க மேதகு அண்ணன் பிரபாகரன் அவர்களுடைய பாசமிகு தாயார் ஒரு அடிப்படை தனிமனித உரிமையான மருத்துவ சிகிச்சைக்கு தமிழ்நாடு வந்தபோது அவர்களை விமானநிலையத்தில் இறங்க கூட விடாமல் திருப்பிஅனுப்பியது எந்த தமிழ் தேசிய ஆதரவு மனநிலை , அண்ணன் பிரபாகரன் தாயாரை தமிழ்நாட்டிற்குள் இறங்கவிடவில்லேயே என்று நீங்கள் உங்களுடைய சொம்பின் காலரை பிடித்து ஆட்டிய ஆட்டு இருக்குதே வேற லெவல், பார்த்து கண்ணீரே முட்டிட்டு 
இன்னும் நீங்க யாரு என்று தெரியாமல் நீங்கள் அடிக்கும் பிட்டுகளை  பார்த்து சிலாகிச்சு பெருமைபட்டுக்கொள்கிறார்கள் சீமான் எங்கள் போராட்டத்தை விட்கிறார் என்று குத்திமுறியும் சிலர்     

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சீமானை மட்டும் நோக்கி சுட்டுவிரலை நீட்டுபவர்கள் ஏன் இதர கட்சிகளின் தவறுகளை/ஊழல்களை பற்றி  கருத்துக்கள் சொல்வதில்லை?

கணக்க  வேண்டாம் எம்ஜிஆர் பற்றி ஒரு சிறு விமரிசனம் இங்கு யாழில் வைத்து பாருங்கள் அதன் பின் தெரியும் .

சீமானை யாழில்  போட்டு தாக்கினால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும்  வராது ஆனால் சீமானை திட்டும் 100 பங்கில் ஒரு வீதம்  ஒரே ஒரு வீதம் எம்ஜிஆரில்  வைத்து பாருங்க அப்புறம் தெரியும் .😁

அதே புகழுடன் சீமானும் வருவார் இதே யாழில் அந்த நேரம் .............................................................

குசா இதர கட்சிகளை  திட்ட முடியாது ஏனென்றால் இவர்கள் .........................................................சுய தணிக்கை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

இதே யாழ் களத்தில் இதே கிருபன் அண்ணர்.. சீமான் இராமசாமியை கொண்டாடித் திரிந்த போது.. சீமானின் பேச்சுக்களை தேடி தேடி ஒட்டி வந்ததையும் மறக்கக் கூடாது

நெடுக்ஸ், சீமான் பெரியாரை பின்தொடர்ந்தவர், ஈழத்தமிழர் மீது அக்கறை கொண்டவர் என்ற காரணங்களால் அவருடைய சொத்தைப் படமான பாஞ்சாலங்குறிச்சியை திரையரங்கில் போய் பார்த்து ஆதரவும் கொடுத்திருந்தேன். ஆனால் புலிகளையும், தலைவரையும் காட்டி புலம்பெயர் தமிழரிடம் இருந்து டொலர்களாகவும், யூரோக்களாகவும், பவுண்ட்ஸாகவும் கறக்கும் பிழைப்புவாதியை அம்பலப்படுத்தவேண்டிய தேவையும் இருக்கு.

நான் இணைத்ததாக நீங்கள் சொல்லும் லிங்குகளை ஒருக்கால் தாருங்கள். தேடிப்பார்த்தேன். என் கண்ணில் தட்டுப்படவில்லை!

 

பெரியாரின் இன்னும் அறியாததால் தப்பான பார்வையை உங்களால் விலத்தமுடியவில்லை. ஆனால் பெரியாரின் அறிந்தததானால், அவரின் கொள்கைகளால் பலன்பெற்ற மக்களாக இருப்பதால்தான் பிஜேபி தமிழ்நாட்டில் காலூன்ற கடினமாக உழைக்கவேண்டியுள்ளது. 

நீங்கள் பெரியாரின் வரலாற்றை அறிய இன்னமும் காலம் இருக்கின்றது😀

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, zuma said:

சீமான் அவர்கள் கிறிஸ்தவனாக பிறந்து, பெரியாரை பின்பற்றி நாத்தீகம் பேசி. தற்பொழுது கையில் வேல்லெடுத்து  தமிழ் தேசியம் போசுகின்றார் . அயோக்கியனின் கடைசி உறைவிடம் தேசபக்தி  என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கின்றார்.

இதனை தான் உங்களிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். கேட்டதும் எஸ்கேப் ஆவதும், பிறகு வந்து அதனையே சொல்வதுமாக இருக்கிறீர்களே தெய்வமே....

முதலில், அவர் கிறித்தவர், சைமன் என்பதற்கு ஆதாரத்தினை தந்து விட்டு, இதனை சொல்லுங்கள், ஏற்றுக் கொள்கிறோம் 

இல்லாவிடில், இதுவே உங்களுக்கானது:  

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி-கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

 

இதனை தான் உங்களிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். கேட்டதும் எஸ்கேப் ஆவதும், பிறகு வந்து அதனையே சொல்வதுமாக இருக்கிறீர்களே தெய்வமே....

முதலில், அவர் கிறித்தவர், சைமன் என்பதற்கு ஆதாரத்தினை தந்து விட்டு, இதனை சொல்லுங்கள், ஏற்றுக் கொள்கிறோம் 

திரு சீமான் அவர்களின் தந்தை பெயர்
என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, zuma said:

திரு சீமான் அவர்களின் தந்தை பெயர்
என்ன?

எனக்கு அது எதுக்கு தல.... தேவையில்லை.

அவரது தமிழ் என்னை இணைக்கிறது.

இங்கே வந்து, அவர் கிறிஸ்தவர் என்று சொல்கிறீர்களானால், நீங்கள் ஒரு கேடு கெட்ட, இனவாதம் செய்கிறீர்கள். அவர் கிறிஸ்தவராக இல்லை என்பது எனது அவதானிப்பு. 

இருந்தால் என்ன தவறு.. கிறித்தவராக இருப்பது, தாழ்த்தப்பட்ட்து என்று சொல்ல வருகிறீர்களா? உங்கள் இனவாத சிந்தனையினை ஏற்றுக் கொண்டால், என்ன சாதி என்று நீங்கள் மீண்டும் வர எவ்வளவு நேரமாகும்.

இது, சாதிய, மத ரீதியான இழி சிந்தனை.  அதனை ஊரிலேயே விட்டு விடுங்கள். கனடாவுக்கு கடத்த வேண்டாமே.

நானும் பலருடன் விவாதிக்கிறேன். கிருபன் கூட இந்த எல்லையினை தொட்டதே இல்லை.

நீங்கள் மட்டும் ஏன்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, zuma said:

திரு சீமான் அவர்களின் தந்தை பெயர்
என்ன?

அண்ணாமலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.