Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் உபசரிப்பில் டுபாய்பிட்டு -சந்திரவதனா அனுபவப் பகிர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அவரு தமிழ்நாடு அரணையூர்க்காரர்..

தமிழகன் அரணையூர்காரராக இருந்தாலும்  இது தமிழ்நாட்டு எழுத்து இல்லை என்று அகன்ற தமிழ்நாடு  அமைக்க போகும் தமிழ்தேசியம் பேசும் வெளிநாட்டு ஈழத்தவர்கள் வேறுபாடு ஏற்ற தாழ்வு காட்டுகிறார்களே

  • Replies 95
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, tulpen said:

இங்கிலாந்தில் அப்படியா நிலைமை? இங்கை 90 களிலை நிலைமையே வேற. தலைவரோட நேரடி  வேண்டுகோள்  என்று வீடியோ கசற் போட்டு காட்டி உசுப்பேத்த அவனவன் 2000- 5000 என்று அள்ளி விசுக்க,  அந்த ருசியில் தான் 2009 ல்  அங்கை முள்ளிவாய்கால்ல மக்கள் இறக்க இங்கை குடும்பம் குடும்பமாக பலரை  கடனாளியாக்கி அப்படியே வறுகிக்கொண்டு போனார்கள் மாபியாக்கள். 

உங்கட இந்த 2009 விட்டு புதுசா ஏதாவது கருத்துக்கள் உள்ளதா ?

7 minutes ago, பெருமாள் said:

உங்கட இந்த 2009 விட்டு புதுசா ஏதாவது கருத்துக்கள் உள்ளதா ?

ஆமா நீங்கள் விடிஞ்சா பொழுதுபட்டா எப்பவும் சுமந்திரனுக்கு பின்னால  அலைஞ்சு திரியிற மாதிரி தான் இதுவும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, பெருமாள் said:

உங்கட இந்த 2009 விட்டு புதுசா ஏதாவது கருத்துக்கள் உள்ளதா ?

நின்ற இடத்திலையே நிற்கின்றாகள். 
புதிதாக ஏதாவது சொன்னால் சேர்ந்து பயணிப்போம் என்றாலும் அம்புக்குறியையோ பாதையையோ காட்டுகின்றார்கள் இல்லை.
வெறும் செம்பை வைத்து குலுக்கிக்கொண்டு திரிகின்றார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

ஆமா நீங்கள் விடிஞ்சா பொழுதுபட்டா எப்பவும் சுமந்திரனுக்கு பின்னால  அலைஞ்சு திரியிற மாதிரி தான் இதுவும் 

உங்களுக்கு முதலில் விளங்கனும்  சுமத்திரனின் இப்போதைய பிரச்சனையை  தவறுகளை நேரடியாய் சுட்டி காட்டி கொள்கிறேன்   உங்களை போல் புனை பெயரில் ஒளிப்பவன் அல்ல நேரடியாகவே போனிலும் அவரின் விசுவாசிகளுடன் கொள்ளுபாடு வந்தது நடு சாமத்தில் வெருட்டலும்  வந்தது .

ஆனால் நீங்கள்  செய்வது என்ன இதே கருத்துக்களை புலிகளின் காலத்தில் உங்கடை ஜிங்சக்கும் சேர்த்தே சொல்கிறேன் அப்போதே சொல்லியிருக்கணும் சிவராம் புலிகள் விட்ட  பிழையை நேரே சொன்ன ஒரு மனிதர்.

அப்போ தூக்கத்தில் இருந்துவிட்டு இப்போ வீரம் காட்டுவது அழகல்ல தற்போதைய பிரச்னைகளை விமரிசிப்பது ஆரோக்கியமானது ஆனால்  உங்களால் முடியாது ஏனென்றால் நீங்கள்  ஒரு புலி வா ......... எடுப்பவர் பொழுது போக்கிற்கு . 

27 minutes ago, tulpen said:

ஆமா நீங்கள் விடிஞ்சா பொழுதுபட்டா எப்பவும் சுமந்திரனுக்கு பின்னால  அலைஞ்சு திரியிற மாதிரி தான் இதுவும் 

சுமத்திரனின் சுத்துமாத்துகளை இங்கு தெளிவுபடுத்துவது உங்களுக்கு பிடிக்காது என்பது தெரியும் அதுக்காக யாழ் பல்லாயிரம் பேர் பார்க்கும் தளம் பொய் செய்தியை கொடுக்க முடியாது உங்களுக்காக .

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அவர்களுடைய அரசியல் பற்றி பலத்த விமர்சனம் உண்டு.ஆனால், ஹொலிடேயில் விருந்தினராக வன்னி சென்று அங்கு விருந்துண்டு இங்கு வந்து பீலா விடுபவர்கள், வன்னியில் இரத்தமும், சதையுமாய் வாழ்ந்த அனந்தியின் கால் தூசுக்கு சமம் ஆகமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, zuma said:

அனந்தி அவர்களுடைய அரசியல் பற்றி பலத்த விமர்சனம் உண்டு.ஆனால், ஹொலிடேயில் விருந்தினராக வன்னி சென்று அங்கு விருந்துண்டு இங்கு வந்து பீலா விடுபவர்கள், வன்னியில் இரத்தமும், சதையுமாய் வாழ்ந்த அனந்தியின் கால் தூசுக்கு சமம் ஆகமாட்டார்கள்.

ஓம் ஓம் டக்கிலஸும்  கவலைப்பட்டவராம் சீமான் பொட்டரை  திட்டினத்துக்கு .

உங்களுக்கு மேல் உள்ள வசனம் விளங்காது விளங்கப்போவதும் கிடையாது பார்ப்பவர்களுக்கு விளங்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற திரிகளின் தலைப்புகளைப் பார்த்தால் பிரபாகரன் படை நடத்தினாரா அல்லது Michelin star தகுதி வாங்கிய சாப்பாட்டுக் கடை நடத்தினாரா என்று சந்தேகம் தான் வருகிறது! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிதிவெடி ரொட்டியை பற்றி யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நின்ற இடத்திலையே நிற்கின்றாகள். 
புதிதாக ஏதாவது சொன்னால் சேர்ந்து பயணிப்போம் என்றாலும் அம்புக்குறியையோ பாதையையோ காட்டுகின்றார்கள் இல்லை.
வெறும் செம்பை வைத்து குலுக்கிக்கொண்டு திரிகின்றார்கள். 😂

செம்பை வைத்து குலுக்குவது மாதிரி தெரியவில்லை 😂

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

 எந்த ஆதாரமோ இன்றி இந்திய அரசியல் வரலாறு, அரசியல் சட்டம் தொடர்பான அடிப்படை அறிவு  கூட யாழ்கள உறுப்பினர்களுக்கு இல்லை என்ற உங்களது   எடுகோளின் அடிப்படையில் தான் இந்த கூற்றை நீங்கள் கூறியுள்ளீர்கள். என்ன இருந்தாலும் இவ்வளவு மோசமான அறிவிலிகளாக எம்மை நீங்கள் அவமானப்படுத்தியிருக்க வேண்டியதில்லை பாஞ்ச்.  

காங்கிரசு அரசு தனியாக அரசை அமைக்கக் கோரமற்ற நேரம். தி.மு.க அரசையும் சேர்த்து ஆட்சி நடத்தியதால் கருனாநிதிக்கு அங்கு பெரும் செல்வாக்கு இருந்தது. அந்தநேரம் ஈழம்போரை அடக்க சிங்கள அரசு மேற்கொண்ட அநீதியான செயல்கண்டு தமிழகம் கொந்தளித்ததால், இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட பிரச்சனையைத் தீர்த்து அமைதிப்படுத்தும் பொறுப்புக்கு, கருனாநிதியை மத்திய அரசு கோரியுள்ளதான செய்திகளும் அன்று வெளிவந்தன. அதனைப் படித்த, கேட்ட ஞாபகம் இன்றும் இருந்ததால் எனது கருத்தைப் பதிந்தேன். இன்று யாழ்களத்தில் இருக்கும் உறவுகள் சிலரும் அந்தத் செய்திகளைப் படித்தோ, அறிந்தோ இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். 

இருந்தாலும்... யாழ்கள உறுப்பினர் அனைவரையும் அறிவிலிகளாக்க என் ஒருவனால் முடிந்துள்ளதாக பதியப்பட்ட உங்கள் எடுகோள் என்னை மலைக்க வைக்கிறது. அத்தனை அறிவும், திறனும் கொண்டவனா நான்.???????????????🤔     

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

சிலோன்லை எந்த இடம்? ஊரிலை எந்த இடம்? எந்தப்பக்கம்?எத்தினையாம் வட்டாரம்? ஆர்ரை வீட்டுக்கு பக்கத்திலை? அவர்ரை பொடியனோ? 

தமிழினமே இருப்பிடம் இல்லாமல்....விலாசம் இல்லாமல் அலைகின்றது.நான் தமிழன் என ஒருவன் சொன்னால் விலாசம் கேட்கின்றார்கள்.

நானும் தமிழன் தான் குமாரசாமியார் இருப்பவர்களின் விலாசம் ஊராவது இருக்கவேண்டுமென ஆசைப்படுபவனில் ஒருவன் நான் அவ்வளவுதாம் விலாசம் இல்லாவிட்டாலும் ஈழத்தமிழர்கள் என நீங்கள் சொல்வீர்கள் நாங்கள் இலங்கை தமிழர்கள் எனவே சொல்லிக்கொள்ள வேண்டும் இதுதான் வித்தியாசம்  இரண்டும் ஒன்றுதான் ஆனால்  இடத்துக்கு இடம் வேறுபடும் 

14 hours ago, குமாரசாமி said:

மிதிவெடி ரொட்டியை பற்றி யாருக்காவது தெரியுமா?

ஏன் எங்கயாச்சும் வச்சு கிளப்பபோறியளோ சாமி?😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் எங்கயாச்சும் வச்சு கிளப்பபோறியளோ சாமி?😀

மிதிவெடி : தெரிந்து கொள்வோம்; பகிர்வோம். நேற்று புதுக்குடியிருப்புக்குச் சென்றிருந்தபோது நண்பர் ஒருவருடன் வெறுந்தேநீரும் மிதிவெடியும் அருந்தும் " பேறு" கிடைத்தது. அப்போது அவர் மிதிவெடியின் உண்மையான வரலாற்றைக் கூற, நானும் உணவக உரிமையாளரும் செவிமடுத்தோம்.
யாழிலிலிருந்து மக்களும் போராளிகளும் இடம்பெயர்ந்த காலமது. புலிகளின் வழங்கற்பகுதிப் பொறுப்பாளர் அம்மா அண்ணை , பின்னர் இவர் மாவீரர் ஆகிவிட்டார், தலைவரை ஒரு நாள் சந்தித்தபோது, போராளிகளுக்கு நல்ல சத்துமிக்க அதேவேளை பசியைப் பிடிக்கக்கூடிய சிற்றுண்டி ஒன்றை தயாரிக்க வேண்டும் எனக் கூறினார். தலைவரும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, வன்னியில் முட்டை தாராளமாக கிடைக்கிறதா எனக் கேட்டார். அந்நேரம் வன்னிப் பெருநிலப்பரப்பில் கோழி முட்டைகள் தாரளமாகக் கிடைத்தன.தலைவர் செய்ய வேண்டியவற்றைச் சொன்னார்; கோதுமை மாவுடன் சேர்க்க வேண்டியவற்றைக் சேர்த்து மாண்டா பிடித்து உருளைகளாக்கி வீச்சு ரொட்டியை மிக மெல்லியதாக வீச வேண்டும்,வீச்சு மேசையில் வைத்தே எலும்புத் துண்டுகளற்ற மாட்டிறைச்சி டெவல் பிரட்டல், வாழைக்காய் உருளைக்கிழங்கு மசியல், அவித்த முட்டை பாதி ஆகியவற்றை வைத்து றோல் போன்று அல்லாது நீள் சதுரப் பெட்டி வடிவில் மேலாக ரொட்டியை சுற்றி அருகுகளை மடித்து பச்சை முட்டைக் கரைசலில் தோய்த்தெடுத்து றஸ்க்தூளில் பிரட்டி கொதிக்கும் எண்ணெய்க்குள் நன்றாகப் பொரித்தெடுக்க வேண்டும் என தெளிவாகக் கூறினார். அம்மா அண்ணைக்கும் மனதில் படம் வந்து விடவே என்ன பெயர் வைப்பது என தலைவரிடமே கேட்க, தலைவர் சற்றும் யோசிக்காமல் 'மிதிவெடி' என வித்தியாசமாக பெயரிட்டார்.
1996 - 1997 காலப்பகுதியில் மிதிவெடி வன்னிப்
பெருநிலப்பரப்பில் புதுக்குடியருப்பு,
ஒட்டுசுட்டான், முள்ளியவளை, மாங்குளம், மல்லாவி, அக்கராயன், கந்தபுரம், திருமுறிகண்டி, வட்டக்கச்சி, விசுவமடு, றெட்பானா, உடையார்காட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய இடங்களிலிருந்த மண்ணால் கட்டப்பட்டு கிடுகினால் வேயப்பட்ட உணவகங்களில் கிடைத்தன. போராளிகளும் பொதுமக்களும் மிதிவண்டி உழக்கி வந்து வெறுந்தேநீர் அல்லது பால்தேநிரோடு ஒரு மிதிவெடியையும் உண்டு பசியாறினர். மிதிவெடியின் தோற்றுவாய் வன்னிப்பெருநிலப்பரப்பேயாகும். மிதிவெடியின் ஆரம்ப விலை 25ரூபா. வெறுந்தேநீர் 3ரூபா. பால்த்தேநீர் 10ரூபா.முப்பத்தைந்து ரூபாவுடன் சத்தான ஆரோக்கியமான ஆகாரத்தை உட்கொண்டு மக்களும் போராளிகளும் பசியாறினர். 2000 ஆம் ஆண்டு வரை மிதிவெடி அளவு குறையாமல் தரத்துடன் 30ரூபாய்க்குக் கிடைத்தது. பின்னர் படிப்படியாக தரமிழக்கத் தொடங்கியது. பாதிமுட்டை கால்வாசியாகியது. வாழைக்காய் உருளைக்கிழங்கு மசியலுக்குப் பதிலாக அவியாத மரவள்ளிக் கிழங்கு பூசணிக்காய்ப் பிரட்டலைப் புகுத்தினர். மாட்டிறைச்சிப் பிரட்டல் மாயமாகி குளிரூட்டியில் உறையவிடப்பட்ட உடல்நலத்திற்குக் கேடான புறொயிலர்க் கோழி சவ்வுப் பொரியல் புகுந்து கொண்டது. அதுகூட மேற்பக்கம் ஒன்று அடிப்பக்கம் ஒன்று. மிதிவெடியும் தேய்ந்து உருச்சிறுத்தது. இப்போதெல்லாம் மிதிவெடிக்குள் என்ன இருக்குது எனக் கேட்டால், சமனும் முட்டையும் என்பார் கடைக்காரர். திரைப்படமொன்றில் மருத்துவமனையில் உருச்சிதைந்து படுக்கையில் இருந்தவரிடம் வாக்குமூலம் பெற பொலிசார் வர அஙகிருந்த சந்தாணம் பொலிசாரிடம் இவனுக்கு வாக்கும் இல்லை மூலமும் இல்லை, இவனட்டை எப்படி வாக்குமூலம் பெறுவது என்பது போலத்தான் இப்ப உள்ள மிதிவெடிகளின் நிலைமை உள்ளது. சமனும் இல்லை உருளைக்கிழங்குமில்லை.
இப்போதெல்லாம் மிதிவெடி உள்ளீடுகளை ஒன்றாக்கிக் குழைத்து (மரவள்ளி பூசணிக்காய்க் குழையல், புறொயிலர்க் கோழிச் சவ்வுப் பொரியல்) பெரியளவில் உருவாக்கி அதனைப் பொலித்தீன் பையில் பொட்டலங்கட்டி குளிரூட்டியில் போட்டுவிடுவர். இந்தப் பிசையலுக்குப் பெயர் "கீமா" வாம். கண்றாவி.. தேவைப்படும்போது றொட்டி தயாரிப்பவர் இந்தக் கசமாலத்தை அள்ளியெடுத்து றொட்டிக்குள் அடைத்து, நாள்ச்சென்ற மிருகக் கொழுப்பு எண்ணெயில் (இதைத்தான் இங்கு கூசாமல் மரக்கறி எண்ணெயென மக்களை முழுமுட்டாள்களாக்கி விற்கிறார்கள்) பொரித்தெடுத்தெடுத்து மிதிவெடியாக்கி விடுவார்.
இப்போது தரமான சத்தான ஆரோக்கியமான மிதிவெடியை நீங்கள் எந்த உணவகத்திலும் வாங்கமாட்டீர்கள், முடியவும் முடியாது. நீங்களே தயாரித்தாலே உண்டு. தற்போதுள்ள இந்தத் ஒன்றுக்குமுதவாத மிதிவெடியின் விலை 60 ரூபா. சில தடபுடல் உணவகங்களில் தங்கள் செல்வாக்கைப் பீற்றுவதற்காக இந்தக் கேடுகெட்டதை 80 ரூபா வரை விற்கிறார்கள். எதையாவது அடைந்து விற்றால்ச் சரி. போட்டி போட்டுக்கொண்டு வாங்கத்தானே நாங்கள் மூடர்கள் இருக்கிறோம்.
இப்போதுள்ள பெரிய சோகம் என்னவென்றால், மொகலாயர் வடகிழக்கு உணவகங்களை ஆக்கிரமித்ததன் பிற்பாடு மிதிவெடி உள்ளீடுகளுடன் ஒவ்வாத எதையோ சேர்த்து ஒரு காறல் புளிப்புத் தன்மைக்குக் கொண்டுவந்துவிட்டனர். இந்தக் காறல் வழிமுறையை எம்மவர்களும் முட்டாள்த்தனமாகப் பின்பற்றி காசு பார்க்கிறார்கள்.
தலைவரின் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட மிதிவெடியை அதே தரமான முறையில் தயாரித்து நல்ல தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுத்தால் இது உடலுக்கு தீங்கில்லாத தரமான சத்துமிக்க சிற்றுண்டி உணவாக விளங்கும். இன்னும் ஒரு படி மேலே சென்று கிழங்குறொட்டி போல இது கல்லில் சுட்டெடுக்கப்பட்டு செய்யப்படுமானால் இன்றைய காலத்திற்கேற்ற மிகுந்த சத்துமிக்க ஆரோக்கியமான சிற்றுண்டி உணவாக இருக்குமென்பது உறுதி.
இதுவே "மிதிவெடி".சிற்றுண்டி உருவான வரலாறாகும். வாசிப்பதுடன் நின்றுவிடாமல் தமிழர்களுக்கெல்லாம் சகல சாத்தியமான வழிகளிலும் இயன்றவரை பகிருங்கள்.
 
வன்னியிலிருந்து பார்மைந்தன்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கருத்திற்கும் இணைப்பிற்கும்  Haha  சிரிப்பு சிரித்த கந்தையாவை மேடைக்கு அழைக்கின்றேன் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

இது போன்ற திரிகளின் தலைப்புகளைப் பார்த்தால் பிரபாகரன் படை நடத்தினாரா அல்லது Michelin star தகுதி வாங்கிய சாப்பாட்டுக் கடை நடத்தினாரா என்று சந்தேகம் தான் வருகிறது! 

காகத்தைப்பற்றி இரண்டு வசனங்கள் எழுதக்கூறினால் ...
நான்.....

காகம் புத்திசாலியான பறவை....
ஒற்றுமையை மக்களுக்கு எடுத்துக் காட்டும் பறவை ....

என எழுதுவேன்.

சிலர்....

காகம் கருப்பு நிறம் கொண்ட மிருகம்...
காகம் எதைக் கண்டாலும் கிளறும்...

என எழுதுவார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எழுதத் தோன்றும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Justin said:

இது போன்ற திரிகளின் தலைப்புகளைப் பார்த்தால் பிரபாகரன் படை நடத்தினாரா அல்லது Michelin star தகுதி வாங்கிய சாப்பாட்டுக் கடை நடத்தினாரா என்று சந்தேகம் தான் வருகிறது! 

நீங்கள் சொன்ன கருத்து, அதாவது படைநடத்தினாரா என்பதில் சந்தேகம் வருவதான பார்வை, பொருத்தமானது இல்லை  என்றாலும், பிரபாகரனை அவமதிப்பதாக இருந்தாலும்,  இதை  எழுதுபவர்கள் பற்றியே  என்னிடம் மிகுந்த சினமும், எரிச்சலும் உண்டாகிறது. 

பிரபாகரன் அவர்களுக்கு செய்தது தனிப்பட்ட மரியாதையை, அதை எழுதுபவர்கள் ஏதோ  தேசிய தலைவர் என்ற மற்றும் தமிழீழ (நிழல்) அரசின் தலைவர்  தளத்தில் மற்றும் தானத்தில்  இருந்து வழங்கியதாக எடுத்து கொள்வதே இந்த பிரச்சனைக்கான முக்கிய காரணம்.

தெரிந்தோ, தெரியாமலோ பிரபாகரனும் இதற்கு உடந்தை ஆகி விட்டார்.

மாவீரர்களுக்கு, புலிகளின், புலிகள் கட்டி எழுப்பிய அரசின், புலிகள் நிர்வாகத்தின் ஒரேயொரு மரியாதை, கெளரவம்  மாவீரர் நாள், வாரம். அது போல,  தனிப்பட்ட மாவீரர்களுக்கு புலிகளின், புலிகள் கட்டி எழுப்பிய அரசின், புலிகள் நிர்வாகத்தின்  மரியாதை, வீதி பெயர், படையணிப் பெயர் போன்றவை.  

இதில் உள்ள பிரச்னை, எழுதுபவர்கள் தனிப்பட்ட மரியாதையை, அரச, நிர்வாக, புலிகள்  மரியாதையாக்குவது.

அரசு, அரசங்கம், மற்றும் நிர்வாகம் என்பது முற்றான அர்பணிப்பாளகளில் இருந்து துரோகம் இழைப்பவர்கள் வரை (தண்டனை இருந்தாலும்) பிரதிநிதித்துவம் செய்வது.

இவர்கள் இப்படி எழுதுவது, பிரபாகரனின் தனிப்பட்ட குணாதிசயங்களை வியந்து, போற்றுவதாக எண்ணிக்கொண்டு, பிரபகரன் வழங்கிய தனிப்பட்ட மரியாதையை தரம் தாழ்த்துகிறார்கள். 

தனிப்பட்ட மரியாதையை, அதுவும் பிரபாகரன் போன்ற தானத்தில் இருந்தவர்கள்  செய்ததை , அவர்களுடன் வைத்து கொள்ள வேண்டும். மிக முக்கியமான தேவைகளிலேயே அதை பகிரங்கமாக்கி வெளிக்கொணர்வது அவசியம் என்பது எழுதுபவர்களுக்கு  புரியவிலாய் என்பது வேதனையாக உள்ளது.  

உ.ம். 3 மாவீரர் என்பது  பிரபாகரனின் தனிப்பட்ட உணர்வு, ஆனால் அதே வேளையில் ஒரே நோடிப்  பொழுதில்   முழுக்குடும்பமும் சண்டையில், இராணுவ நடவடிக்கையில் அழிக்கப்பட்டது போன்றவற்றுக்கு பிரபாகரனால், புலிகளின்     புலிகள் கட்டி எழுப்பிய அரசின், புலிகள் நிர்வாகத்தின் மரியாதை, கெளரவவுமே வழங்க முடியும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2021 at 07:05, தமிழகன் said:

அ. எனக்கு உண்மையாகவே ஈழம் பற்றி அதிகம் தெரியாது. அதிகம் எழுதவும் தெரியாது, பழக்கமில்லை. ஆனால் வரும் செய்திகள் மேதகு சூழ இருந்த பலரால் வீழ்ந்தார் என்பதாகவே சொல்கிறது.

இந்த அறிவை கொண்டு, நீங்கள் கீழே சொல்வதை ஊகிக்க கூட முடியுமா?  ஒன்றையும் சிந்திக்காமல், முதல் எழுந்த கேள்வி. 
 
On 1/5/2021 at 00:11, தமிழகன் said:

இத்தனை இருந்தும் மேதகு இறுதி வெற்றியை அடைய முடியாமல் ஆகியதற்கு காரணம் அவரை சுற்றி இருந்த செயல்பாடு அற்ற அனந்தி, அவரின் கணவர், சிவாஜி போன்ற சிலர் (சில தளபதிகளும்? ) என்பதே என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:
மிதிவெடி : தெரிந்து கொள்வோம்; பகிர்வோம். நேற்று புதுக்குடியிருப்புக்குச் சென்றிருந்தபோது நண்பர் ஒருவருடன் வெறுந்தேநீரும் மிதிவெடியும் அருந்தும் " பேறு" கிடைத்தது. அப்போது அவர் மிதிவெடியின் உண்மையான வரலாற்றைக் கூற, நானும் உணவக உரிமையாளரும் செவிமடுத்தோம்.
யாழிலிலிருந்து மக்களும் போராளிகளும் இடம்பெயர்ந்த காலமது. புலிகளின் வழங்கற்பகுதிப் பொறுப்பாளர் அம்மா அண்ணை , பின்னர் இவர் மாவீரர் ஆகிவிட்டார், தலைவரை ஒரு நாள் சந்தித்தபோது, போராளிகளுக்கு நல்ல சத்துமிக்க அதேவேளை பசியைப் பிடிக்கக்கூடிய சிற்றுண்டி ஒன்றை தயாரிக்க வேண்டும் எனக் கூறினார். தலைவரும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, வன்னியில் முட்டை தாராளமாக கிடைக்கிறதா எனக் கேட்டார். அந்நேரம் வன்னிப் பெருநிலப்பரப்பில் கோழி முட்டைகள் தாரளமாகக் கிடைத்தன.தலைவர் செய்ய வேண்டியவற்றைச் சொன்னார்; கோதுமை மாவுடன் சேர்க்க வேண்டியவற்றைக் சேர்த்து மாண்டா பிடித்து உருளைகளாக்கி வீச்சு ரொட்டியை மிக மெல்லியதாக வீச வேண்டும்,வீச்சு மேசையில் வைத்தே எலும்புத் துண்டுகளற்ற மாட்டிறைச்சி டெவல் பிரட்டல், வாழைக்காய் உருளைக்கிழங்கு மசியல், அவித்த முட்டை பாதி ஆகியவற்றை வைத்து றோல் போன்று அல்லாது நீள் சதுரப் பெட்டி வடிவில் மேலாக ரொட்டியை சுற்றி அருகுகளை மடித்து பச்சை முட்டைக் கரைசலில் தோய்த்தெடுத்து றஸ்க்தூளில் பிரட்டி கொதிக்கும் எண்ணெய்க்குள் நன்றாகப் பொரித்தெடுக்க வேண்டும் என தெளிவாகக் கூறினார். அம்மா அண்ணைக்கும் மனதில் படம் வந்து விடவே என்ன பெயர் வைப்பது என தலைவரிடமே கேட்க, தலைவர் சற்றும் யோசிக்காமல் 'மிதிவெடி' என வித்தியாசமாக பெயரிட்டார்.
1996 - 1997 காலப்பகுதியில் மிதிவெடி வன்னிப்
பெருநிலப்பரப்பில் புதுக்குடியருப்பு,
ஒட்டுசுட்டான், முள்ளியவளை, மாங்குளம், மல்லாவி, அக்கராயன், கந்தபுரம், திருமுறிகண்டி, வட்டக்கச்சி, விசுவமடு, றெட்பானா, உடையார்காட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய இடங்களிலிருந்த மண்ணால் கட்டப்பட்டு கிடுகினால் வேயப்பட்ட உணவகங்களில் கிடைத்தன. போராளிகளும் பொதுமக்களும் மிதிவண்டி உழக்கி வந்து வெறுந்தேநீர் அல்லது பால்தேநிரோடு ஒரு மிதிவெடியையும் உண்டு பசியாறினர். மிதிவெடியின் தோற்றுவாய் வன்னிப்பெருநிலப்பரப்பேயாகும். மிதிவெடியின் ஆரம்ப விலை 25ரூபா. வெறுந்தேநீர் 3ரூபா. பால்த்தேநீர் 10ரூபா.முப்பத்தைந்து ரூபாவுடன் சத்தான ஆரோக்கியமான ஆகாரத்தை உட்கொண்டு மக்களும் போராளிகளும் பசியாறினர். 2000 ஆம் ஆண்டு வரை மிதிவெடி அளவு குறையாமல் தரத்துடன் 30ரூபாய்க்குக் கிடைத்தது. பின்னர் படிப்படியாக தரமிழக்கத் தொடங்கியது. பாதிமுட்டை கால்வாசியாகியது. வாழைக்காய் உருளைக்கிழங்கு மசியலுக்குப் பதிலாக அவியாத மரவள்ளிக் கிழங்கு பூசணிக்காய்ப் பிரட்டலைப் புகுத்தினர். மாட்டிறைச்சிப் பிரட்டல் மாயமாகி குளிரூட்டியில் உறையவிடப்பட்ட உடல்நலத்திற்குக் கேடான புறொயிலர்க் கோழி சவ்வுப் பொரியல் புகுந்து கொண்டது. அதுகூட மேற்பக்கம் ஒன்று அடிப்பக்கம் ஒன்று. மிதிவெடியும் தேய்ந்து உருச்சிறுத்தது. இப்போதெல்லாம் மிதிவெடிக்குள் என்ன இருக்குது எனக் கேட்டால், சமனும் முட்டையும் என்பார் கடைக்காரர். திரைப்படமொன்றில் மருத்துவமனையில் உருச்சிதைந்து படுக்கையில் இருந்தவரிடம் வாக்குமூலம் பெற பொலிசார் வர அஙகிருந்த சந்தாணம் பொலிசாரிடம் இவனுக்கு வாக்கும் இல்லை மூலமும் இல்லை, இவனட்டை எப்படி வாக்குமூலம் பெறுவது என்பது போலத்தான் இப்ப உள்ள மிதிவெடிகளின் நிலைமை உள்ளது. சமனும் இல்லை உருளைக்கிழங்குமில்லை.
இப்போதெல்லாம் மிதிவெடி உள்ளீடுகளை ஒன்றாக்கிக் குழைத்து (மரவள்ளி பூசணிக்காய்க் குழையல், புறொயிலர்க் கோழிச் சவ்வுப் பொரியல்) பெரியளவில் உருவாக்கி அதனைப் பொலித்தீன் பையில் பொட்டலங்கட்டி குளிரூட்டியில் போட்டுவிடுவர். இந்தப் பிசையலுக்குப் பெயர் "கீமா" வாம். கண்றாவி.. தேவைப்படும்போது றொட்டி தயாரிப்பவர் இந்தக் கசமாலத்தை அள்ளியெடுத்து றொட்டிக்குள் அடைத்து, நாள்ச்சென்ற மிருகக் கொழுப்பு எண்ணெயில் (இதைத்தான் இங்கு கூசாமல் மரக்கறி எண்ணெயென மக்களை முழுமுட்டாள்களாக்கி விற்கிறார்கள்) பொரித்தெடுத்தெடுத்து மிதிவெடியாக்கி விடுவார்.
இப்போது தரமான சத்தான ஆரோக்கியமான மிதிவெடியை நீங்கள் எந்த உணவகத்திலும் வாங்கமாட்டீர்கள், முடியவும் முடியாது. நீங்களே தயாரித்தாலே உண்டு. தற்போதுள்ள இந்தத் ஒன்றுக்குமுதவாத மிதிவெடியின் விலை 60 ரூபா. சில தடபுடல் உணவகங்களில் தங்கள் செல்வாக்கைப் பீற்றுவதற்காக இந்தக் கேடுகெட்டதை 80 ரூபா வரை விற்கிறார்கள். எதையாவது அடைந்து விற்றால்ச் சரி. போட்டி போட்டுக்கொண்டு வாங்கத்தானே நாங்கள் மூடர்கள் இருக்கிறோம்.
இப்போதுள்ள பெரிய சோகம் என்னவென்றால், மொகலாயர் வடகிழக்கு உணவகங்களை ஆக்கிரமித்ததன் பிற்பாடு மிதிவெடி உள்ளீடுகளுடன் ஒவ்வாத எதையோ சேர்த்து ஒரு காறல் புளிப்புத் தன்மைக்குக் கொண்டுவந்துவிட்டனர். இந்தக் காறல் வழிமுறையை எம்மவர்களும் முட்டாள்த்தனமாகப் பின்பற்றி காசு பார்க்கிறார்கள்.
தலைவரின் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட மிதிவெடியை அதே தரமான முறையில் தயாரித்து நல்ல தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுத்தால் இது உடலுக்கு தீங்கில்லாத தரமான சத்துமிக்க சிற்றுண்டி உணவாக விளங்கும். இன்னும் ஒரு படி மேலே சென்று கிழங்குறொட்டி போல இது கல்லில் சுட்டெடுக்கப்பட்டு செய்யப்படுமானால் இன்றைய காலத்திற்கேற்ற மிகுந்த சத்துமிக்க ஆரோக்கியமான சிற்றுண்டி உணவாக இருக்குமென்பது உறுதி.
இதுவே "மிதிவெடி".சிற்றுண்டி உருவான வரலாறாகும். வாசிப்பதுடன் நின்றுவிடாமல் தமிழர்களுக்கெல்லாம் சகல சாத்தியமான வழிகளிலும் இயன்றவரை பகிருங்கள்.
 
வன்னியிலிருந்து பார்மைந்தன்.

இந்த மிதிவெடி தொடர்பாக எனது அனுபவம்;

மிதிவெடி கடைகளில் வியாபாரத்திற்கு வந்த காலம் 1996-1997 அல்ல. அந்த உணவு 1990ன் ஆரம்பத்திலேயே யாழ் நகரின் உணவகங்களில் கிடைத்தது. முக்கியமாக நகரின் கரையோரப் பகுதி உணவகங்களில் தாராளமாகக் கிடைக்கும். இதனை நான் எனது நண்பர் குழாமுடன் பலமுறை உண்டிருக்கிறேன். கொத்துறொட்டிக்காக இந்தக் கடைகளுக்கு நாங்கள் அடிக்கடி செல்வதுண்டு.

மிதிவெடியில் வெடி இருக்கிறதோ இல்லையோ  இந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் எக்கச்சக்க வெடி அல்ல வெடி குண்டுகள் இருக்கிறதாக தோன்றுகிறது.

☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, Kapithan said:

இந்த மிதிவெடி தொடர்பாக எனது அனுபவம்;

மிதிவெடி கடைகளில் வியாபாரத்திற்கு வந்த காலம் 1996-1997 அல்ல. அந்த உணவு 1990ன் ஆரம்பத்திலேயே யாழ் நகரின் உணவகங்களில் கிடைத்தது. முக்கியமாக நகரின் கரையோரப் பகுதி உணவகங்களில் தாராளமாகக் கிடைக்கும். இதனை நான் எனது நண்பர் குழாமுடன் பலமுறை உண்டிருக்கிறேன். கொத்துறொட்டிக்காக இந்தக் கடைகளுக்கு நாங்கள் அடிக்கடி செல்வதுண்டு.

மிதிவெடியில் வெடி இருக்கிறதோ இல்லையோ  இந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் எக்கச்சக்க வெடி அல்ல வெடி குண்டுகள் இருக்கிறதாக தோன்றுகிறது.

☹️

 உங்களைப்போன்ற உண்மையான விடயம் தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2021 at 17:02, குமாரசாமி said:

நின்ற இடத்திலையே நிற்கின்றாகள். 
புதிதாக ஏதாவது சொன்னால் சேர்ந்து பயணிப்போம் என்றாலும் அம்புக்குறியையோ பாதையையோ காட்டுகின்றார்கள் இல்லை.
வெறும் செம்பை வைத்து குலுக்கிக்கொண்டு திரிகின்றார்கள். 😂

வைத்துக்கொண்டா வஞ்சனை செய்கிறார்கள். 

நீங்க வேற 😏

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஆனால் எங்க அனந்தி அக்காவுக்கு சம்பலும் சோறும் தானே கொடுத்ததாமே.. என்று யாருக்கோ சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தாய்களே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.