Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத்திற்கும் கேரளாவுக்கும் உள்ள நீண்ட கால வரலாற்றுத் தொடர்பு

Featured Replies

யாழ்ப்பாண மண்ணிற்கும் கேரளாவுக்கும் இடையில் இருந்த  நீண்ட கால தொடர்புகள் சம்பந்தமாக பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா எழுதிய நூல் குறித்து “எழுதும் கரங்கள்” என்ற  நூல் ஆய்வு நிகழ்ச்சியில்  ஐபிசி தமிழில் பேராசிரியருடனான நேர காணல்.  கேரளாவுக்கும் யாழ் பாணத்திற்குமிடையில் பல திருமண உறவுகள் கூட இருந்ததாக நேர்காணலில் கூறுகிறார்.  அத்துடன் உணவு, உடை தொடர்பிலும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. 

யாழ்பாணத்திற்கும் கேரள மக்களுக்குமிடையிலான வரலாற்றுரீதியான உறவுமுறை குறித்து குறித்து மறைந்த எழுத்தாளர் செங்கை ஆழியான்(க. குணராசா)  முன்பொருமுறை கூறியிருந்தார். 

Edited by tulpen

  • tulpen changed the title to யாழ்பாணத்திற்கும் கேரளாவுக்கும் உள்ள நீண்ட கால வரலாற்றுத் தொடர்பு
  • Replies 104
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு புங்குடுதீவு மக்கள் கேராளாவில் இருந்து போர்த்துகீசரால்
குடியேற்றபட்ட மலையாளிகள்தான்.

அவர்களை போர்த்துக்கீசருக்கு விற்றவர்கள் எஞ்சிய பல்லவ மன்னர்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, tulpen said:

யாழ்ப்பாண மண்ணிற்கும் கேரளாவுக்கும் இடையில் இருந்த  நீண்ட கால தொடர்புகள் சம்பந்தமாக பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா எழுதிய “எழுதும் கரங்கள்” என்ற  நூல் குறித்து ஐபிசி தமிழில் பேராசிரியருடனான நேர காணல்.  கேரளாவுக்கும் யாழ் பாணத்திற்குமிடையில் பல திருமண உறவுகள் கூட இருந்ததாக நேர்காணலில் கூறுகிறார்.  அத்துடன் உணவு, உடை தொடர்பிலும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. 

யாழ்பாணத்திற்கும் கேரள மக்களுக்குமிடையிலான வரலாற்றுரீதியான உறவுமுறை குறித்து குறித்து மறைந்த எழுத்தாளர் செங்கை ஆழியான்(க. குணராசா)  முன்பொருமுறை கூறியிருந்தார். 

இந்த ஆசிரியர்களுக்கும் இந்த  கத்தோலிக்க கல்வி நிறுவனங்களை 
நிறுவிய வெள்ளையர்களுக்கு ஈழத்தமிழர்கள் என்றும் நன்றி உள்ளவர்களாக இருக்கவேண்டும் 
காரணம்.

ஆறுமுக நாவலர் போன்ற சைவர்கள் .. சைவமதத்தை இந்து என்ற போலி 
மதத்துக்கு விற்று மாற்றாக சாதியை அவர்களிடம் வாங்கி இங்கு விதைத்துக்கொண்டிருந்தபோது 
இந்து உயர்சாதியினருக்கு மட்டுமே கல்வி என்றும் மற்றவர்களுக்கு கல்வி மறுப்பையும் செய்தார்கள் 

இந்த கத்தோலிக்க கல்வி நிறுவனங்களை அவர்கள் நிறுவியதாலேயே எல்லோருக்கும் 
கல்வி வாய்த்தது.. மட்டுமின்றி பல வெளிநாட்டு தொடர்புகள் ஈழத்தவர்களுக்கு கிட்டியது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயே.. சேட்டா.. சேச்சி..! எண்ட ஈழத்தமிழர்கள் 'மல்லு'களா..? 😟

அப்ப சரிப்பட்டு வராதே..?

Escape..!  running-away.gif?w=349&h=372

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெலுங்கர்கள் என நிறுவி களைத்து விட்டார்கள். இனி மலையாளிகளா?

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு இந்த விடயம் தெரியாமல் பாதுகாத்து கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

அடிக்க வரப்போறாங்கள். 

எங்க மீரா.. ஆளக் காணோம்.

😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

ஐயே.. சேட்டா.. சேச்சி..! எண்ட ஈழத்தமிழர்கள் 'மல்லு'களா..? 😟

அப்ப சரிப்பட்டு வராதே..?

Escape..!  running-away.gif?w=349&h=372

🤣 இந்த திரியின் தலையங்கத்தை பார்த்ததும் உங்கள் நினைவுதான் வந்தது வன்னியர். வந்து பார்த்தால் ….🤣.

நமக்குள் முன்பு புட்டு பற்றி ஒரு உரையாடல் திண்ணையில் நடந்தது நினைவிருக்கலாம் -அப்போ நான் சொன்னேன் மொழியை தவிர, மிகுதி எல்லாமே ஈழத்தமிழருக்கு கேரளாவுடந்தான் ஒற்றுமை அதிகம் என்று. உணவு, உடை, இசை, பேச்சின் தொனி எல்லாமே. 

சென்னையில் இப்போ நான் போய் யாழ்பாணத்தமிழ் பேசினாலும் என்னை மலையாளியா என்றே கேட்பார்கள்.

போத்துகேசர் காலத்தில் இருக்கும் அத்தனை முதன்மை ஆவணங்களும் மலபாரி வழித்தோன்றல்கள் அல்லது மலபாரிகள் என்ற சொல்லை உபயோகிக்கின்றன. 

தவிர நீங்கள் மலையாளிகளிடம் வெறுக்கும் பல அம்சங்கள் எம்மிடமும் உண்டு.

முழுக்க முழுக்க மலையாளிகள் வழி என சொல்ல முடியாவிட்டாலும் கணிசமான எமது மரபுரிமை, குறிப்பாக யாழ் மாவட்டத்தில் கேரள பக்கம்தான்.

வன்னியில் கிழக்கில் தமிழ்நாட்டில் ஆற்காடு, சோழ மண்டல எச்சங்களை காணலாம்.

இவை எல்லாம் கலந்த கூட்டு மரபுரிமைதான் -ஈழத்தமிழர். இதில் வெட்கம் ஏதும் இல்லை.

1 hour ago, குமாரசாமி said:

தெலுங்கர்கள் என நிறுவி களைத்து விட்டார்கள். இனி மலையாளிகளா?

அது நிறுவல் இல்லை அண்ணை வறுவல்.

ஆய்வு, அங்கதம், நையாண்டி மூன்றும் வேறு வேறு.

செல்வநாயகம் தெலுங்கர் - அங்கதம்

கூன் பிள்ளைகாரன் - நையாண்டி

மேலே பேராசியர் சொல்லி இருப்பது ஆய்வு (நான் இன்னும் வீடியோ பார்க்கவில்லை).

அண்ணை இப்போ DNA test kits ஓடர் பண்ணி எடுக்கலாம். அதில் உங்கள் மரபுரிமையில் எந்தனை சதவீதம் எங்கே என கணித்து சொல்வார்கள். சும்மா விளையாட்டாக ஒருக்கால் எடுத்து பாருங்கோ - நிச்சயம் உங்கள், எமது மரபுரிமை பற்றிய புரிதல் மாறும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சீமானுக்கு இந்த விடயம் தெரியாமல் பாதுகாத்து கொள்ளவேண்டும்.

அவருக்கு இது பிரச்சனை இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சீமானுக்கு இந்த விடயம் தெரியாமல் பாதுகாத்து கொள்ளவேண்டும்.

தெரிஞ்சால்....???????

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

யாழ்ப்பாண மண்ணிற்கும் கேரளாவுக்கும் இடையில் இருந்த  நீண்ட கால தொடர்புகள் சம்பந்தமாக பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா எழுதிய நூல் குறித்து “எழுதும் கரங்கள்” என்ற  நூல் ஆய்வு நிகழ்ச்சியில்  ஐபிசி தமிழில் பேராசிரியருடனான நேர காணல்.  கேரளாவுக்கும் யாழ் பாணத்திற்குமிடையில் பல திருமண உறவுகள் கூட இருந்ததாக நேர்காணலில் கூறுகிறார்.  அத்துடன் உணவு, உடை தொடர்பிலும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. 

யாழ்பாணத்திற்கும் கேரள மக்களுக்குமிடையிலான வரலாற்றுரீதியான உறவுமுறை குறித்து குறித்து மறைந்த எழுத்தாளர் செங்கை ஆழியான்(க. குணராசா)  முன்பொருமுறை கூறியிருந்தார். 

அருமையான வீடியோ துல்பென். 

இந்த புத்தகத்தை வாசித்தே ஆக வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது.

விக்டோரியா கல்லூரியையும் அதன் ஆங்கில வழி கல்வியையும் எனது தந்தையார் ஏற்றி புகழ்வார். நான் பார்த்த காலத்தில் பாசி மண்டி போய் இருந்தது.

யாரிந்த பேராசிரியர்?

https://ourjaffna.com/cultural-heroes/கலாநிதி-சிவலிங்கராஜா

பேராசிரியர் சிவலிங்கராஜா

பேராசிரியர் சிவலிங்கராஜாசிறந்த பேச்சாளரும் தமிழ் அறிஞருமான பேராசிரியர் சிதம்பரப்பிள்ளை சிவலிங்கராஜா (தோற்றம் – 16.12.1945) அவர்கள் கரவெட்டியை பிறப்பிடமாகவும், பிள்ளையார் வீதி திருநெல்வேலியை வாழ்விடமாகவும் கொண்டவர். பல்கலைக்கழகம் புகுமுன்பே வாணி கலைக்கழகத்தில் தமிழை மரபுவழி கற்றவர். வடமராட்சி தந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவரான பண்டிதர் க. வீரகத்தியிடம் தமிழ் பயின்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களான சு. வித்தியானந்தன், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ்முதலிய ஆளுமைகளால் புடமிடப்பட்டவர். யாழ் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டதாரியாக முதல் பிரிவில் தேறிய இவர் அப் பல்கலைக்கழகத்திலேயே கலாநிதிப் பட்டத்தையும் பெற்ற தற்போது யாழ் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவராக விளங்குகின்றார்.

ஈழத்து இலக்கியம்” இவருடைய சிறப்புத் துறையாகும். “வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்“, “வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்வும் பணியும்”, “சி. வை. தாமோதரம்பிள்ளை வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்”, “தமிழியல் கட்டுரைகள்”, “ஈழத்து இலக்கிய செந்நெறி”, யாழ்ப்பாணத்து வாழ்வியல் கோலங்கள்”, யாழ்ப்பாணத்து தமிழ் உரை மரபு”, “19 ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ் கல்வி”ஆகிய ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.

எழுபதுகளில் பல கவியரங்குகளில் முத்திரை பதித்த இவர் “சொல்லினால் ஒரு மாளிகை” என்ற கவிதைக் காரருக்கு சொந்தக்காரர். ஐம்பதுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள பேராசிரியர் சிவலிங்கராஜா இந்தியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு தமிழ் இலக்கிய நாயகனாக உலா வந்தவர். உலகத் தமிழியல் ஆய்வுக் கருத்தரங்குகள்   பலவற்றிலே கலந்து கொண்டுள்ளார். இவருடைய மேடைப்பேச்சுக்கள் மிகவும் வான்மை நிறைந்தவை. அவரது பேச்சில் சிலேடையும், நகைச்சுவையும் அதேநேரத்தில் மிகவும் ஆழமான கருத்தும் நிறைந்திருக்கும். வடமராட்சி பெற்றெடுத்த தமிழ் அறிஞர்களுள் மிகச் சிறந்தவராகப் போற்றப்படுபவர்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீமானுக்கு இந்த விடயம் தெரியாமல் பாதுகாத்து கொள்ளவேண்டும்.

சீமானுக்கு முதல் கோசானுக்கு தெரிய கூடாது.  அவர் எழுதிய ஆய்வு என்னாகிறது?

ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் 20(%?) வீதம் மலையாளிகள் இருந்ததாக அவுஸ்திரேலியாவில் இருந்து ஒரு அறிஞர் எழுதியது நினைவில்  உள்ளது. 220_F_180980941_s5F5DsVVYie35lVTCGJHKT8Z

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nunavilan said:

சீமானுக்கு முதல் கோசானுக்கு தெரிய கூடாது.  அவர் எழுதிய ஆய்வு என்னாகிறது?

ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் 20(%?) வீதம் மலையாளிகள் இருந்ததாக அவுஸ்திரேலியாவில் இருந்து ஒரு அறிஞர் எழுதியது நினைவில்  உள்ளது. 220_F_180980941_s5F5DsVVYie35lVTCGJHKT8Z

என்னாது கோஷான் ஆய்வு எழுதினாரா? 🤣

வாய்வு ஒன்றன்றி வேறொன்றும் பறையோம் பராபரமே 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

அட விடுங்கப்பா .. எல்லாரும் திராவிடர்கள்..👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

என்னாது கோஷான் ஆய்வு எழுதினாரா? 🤣

வாய்வு ஒன்றன்றி வேறொன்றும் பறையோம் பராபரமே 🤣.

உள்ளி - தமிழ் விக்சனரி

உந்த... வாய்வுப் பிரச்சினைக்குத்தான், 
"உள்ளி" சுட்டு.. சாப்பிட வேணுமென்று ஊரில் சொல்வார்கள்.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது எல்லோரும் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போதைய பெரும்பாலான தமிழர்கள் இப்போதுள்ள கேரளா மக்களை ஆரிய கலப்புள்ள மலையாளிகள்  என்றே விளங்கி கொள்கிறார்கள்.   அதாவது வேறு மக்கள் என்று.

இது முற்றிலும் தவறானது.

1820 களில்  நம்பூதிரி மற்றும் நாயர் களின் தூண்டுதலால், கேரளா மக்களின் மொழியே வலோற்கரமாக பிரித்தானியரால் மாற்றப்பட்டது.

இந்த ஈனச் செயலை, வரலாற்றை, பிரித்தானியர், ஹிந்தியை மற்றும் கேரளாவில் உள்ள விடயம் அறிந்த இப்போதை உயர் குழாம் எல்லாம் மறைத்து விட்டனர் (hidden history).

கேரளா மக்கள் மாறவில்லை, மாற்றப்படுவும்  இல்லை ஆரிய கலப்புகளால்.

1820 வரை, கேரளாவின் மொழியின் பெயர் மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ்.

இதனால் தான் இபோதும்,  தற்போதுள்ள மலையாளத்துக்கு எந்த வித முன்  பரீட்சயமும் இன்றி, தமிழரால் வாய்மொழி மலையாளம் புரிந்து கொள்ள கூடியதக இருக்கிறது.

ஓர் சிறிய ஆதாரம் இதற்கு போதுமானது. 

தமிழில் முதலில் அச்சில் வந்த நூல் கேரளாவில், கொல்லத்தில், 1578 இல். நூலின் பெயர் தம்பிரான் வணக்கம், கிறிஸ்தவ கோட்பாடுகள் பற்றியது.              

இந்த மறைக்கப்பட்ட வரலாற்றை பற்றி  முன்பு விளக்கமாக எழுதி இருக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

நெடுந்தீவு புங்குடுதீவு மக்கள் கேராளாவில் இருந்து போர்த்துகீசரால்
குடியேற்றபட்ட மலையாளிகள்தான்.

அவர்களை போர்த்துக்கீசருக்கு விற்றவர்கள் எஞ்சிய பல்லவ மன்னர்கள்  

இது நம்ப கூடியதாக இல்லை. இதற்கு ஏதும் குறிப்பு ஆதாரங்கள் உள்ளதா?

ஏனெனில், போத்துக்கேயர் முதலில்  தீவு பகுதி ஊடக யாழ் இராச்சியத்தை பிடிக்க பலதடவைகள் முனைந்த போது இயலாமல் போனது.

அதனால், அங்கு உள்ளூர் மக்கள் இல்லாமல் யாழ் இராச்சிய படைகள் போத்துக்கேயரை தடுத்து இருக்க முடியாது.
  
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அண்ணை இப்போ DNA test kits ஓடர் பண்ணி எடுக்கலாம். அதில் உங்கள் மரபுரிமையில் எந்தனை சதவீதம் எங்கே என கணித்து சொல்வார்கள். சும்மா விளையாட்டாக ஒருக்கால் எடுத்து பாருங்கோ - நிச்சயம் உங்கள், எமது மரபுரிமை பற்றிய புரிதல் மாறும். 

எனக்கு நீண்ட நாள் குழப்பம் இந்த Dna சிங்களவனுக்கு எப்படி காட்டும் ?

யாழ் முகநூலை விட மோசமாக போகுது போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அண்ணை இப்போ DNA test kits ஓடர் பண்ணி எடுக்கலாம்.

செய்து இருந்தால், எந்த கம்பனி அல்லது இணைய முகவரி என்பதை பகிர முடியுமா?

ஏனெனில், இது இனமும் ஆசியாவில் பிரபல்யம் அடையவில்லை என்றே தெரிகிறது. 

அதனால், எமது DNA  பரம்பலை மிக கூடிய ளவு கொண்ட சேவையாக  இருத்தல் அவசியம் ஏறத்தாழ சரியாக இருப்பதற்கு.      

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Maruthankerny said:

நெடுந்தீவு புங்குடுதீவு மக்கள் கேராளாவில் இருந்து போர்த்துகீசரால்
குடியேற்றபட்ட மலையாளிகள்தான்.

அவர்களை போர்த்துக்கீசருக்கு விற்றவர்கள் எஞ்சிய பல்லவ மன்னர்கள்  

எனது தந்தையார்

தனது ஒப்பாட்டன்  பெயர் 

ராஐராஐ கொம்பந்த  முதலியார்  என்பார்

உதைக்குதே???

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா ஒரு மலையாளி என்பார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அட விடுங்கப்பா .. எல்லாரும் திராவிடர்கள்..👍

சீமானை இழுத்துவிடும் நோக்கமோ.. 😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

போத்துகேசர் காலத்தில் இருக்கும் அத்தனை முதன்மை ஆவணங்களும் மலபாரி வழித்தோன்றல்கள் அல்லது மலபாரிகள் என்ற சொல்லை உபயோகிக்கின்றன. 

இதன் காரணம், நான் முன்பே சொல்லிய 1820 வரை  கேரளத்தில் இருந்த மொழி, அதாவது மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ்.  

போத்துக்கேயர் அப்போதைய (1500 களில்) மலையாளம்மாவை அல்லது  மலையாளத் தமிழை, கோரோமண்டல் கரையோர தமிழை (Coromandel Coast, அதாவது இப்போதைய தமிழ் நாடு) மற்றும் ஈழத் தமிழ் இடையே உள்ள நுணுக்கமான  ஆனால் முக்கியமான வேறுபாட்டை அவதானிக்க முற்றப்படவும் இல்லை, அப்படி அறிவதற்கான   நிறுவன மயப்பட்ட மொழியியல், மானிடவியல், சரித்திர மாற்றம் தொல்பொருள் ஆய்வு   அறிவும்  போத்துக்கேயரிடம் இருக்கவில்லை.

போத்துக்கேயர் அப்போதைய, அவர்களுக்கு தெரிந்த தமிழை (மலையாளம்மாவை அல்லது  மலையாளத் தமிழை, கோரோமண்டல் கரையோர தமிழை (Coromandel Coast, அதாவது இப்போதைய தமிழ் நாடு) மற்றும் ஈழத் தமிழ்) Lingua Malabar Tamul என்று அழைத்தனர்.

இதுவே, அதாவது நிறுவன மயப்பட்ட மொழியியல், மானிடவியல், சரித்திர மாற்றம் தொல்பொருள் ஆய்வு   அறிவு இன்மையால்,  முஸ்லிம்களை போத்துக்கேயர் moors என்று வகைப்படுத்தகியதன் காரணமும். முஸ்லிம்களின் தோற்றமும், சமயமும் (மொரோக்கோ மக்களின் தோற்றத்தை ஒத்த தோற்றமும், சமயமும், அதை போத்துக்கேயர் moors என்றே வகைப்படுத்தி வைத்தும் இருந்தனர்). 

ஆனால், இவை (மொழியியல், மானிடவியல், சரித்திர மாற்றம் தொல்பொருள் ஆய்வு) வளர்ந்து வந்த அன்றைய ஜேர்மன் பாதிரியார் இந்த வேறுபாட்டை (அதாவது கேரளா மொழி மாற்றப்பட்ட பின்), அதாவது கேரளம்,  இப்போதைய தமிழ் நாடு, மற்றும் ஈழ தமிழ்  வேறுபாடுகள் பற்றி  அறிந்து எழுதி உள்ளார். 

முன்பு எழுதியதின் ஓர் பகுதியின் பிரதி,

 1875 இல், ஜேர்மன் பாதிரியார் E. R. Baierlein இற்கு தெரிந்திருந்தது இப்போதைய தமிழ்நாடு, மற்றும் ஈழத்தமிழரை தமிழர்கள் என்று. இது அவர் 1875 இல் எழுதிய THE LAND OF THE TAMULIANS எனும் நூலில் இருக்கிறது. 

அதில் இருந்து சில வரிகள்,

"I have not been able to omit the primitive Church of Southern India, although its present place of residence is beyond the present boundaries of the land of the Tamulians. For the separation of Malabar from the Tamil country, is of recent date; even our first missionaries call Tamil land Malabar and the language – even not very much different – Malabarish."

Google இல் இணைப்பு: 

https://books.google.co.uk/books?id=lFoqn9NvLRAC&pg=PA105&lpg=PA105&dq=“I+have+not+been+able+to+omit+the+primitive+Church+of+Southern+India,+although+its+present+place+of+residence+is+beyond+the+present+boundaries+of+the+land+of+the+Tamulians.+For+the+seperation+of+Malabar+from+the+Tamil+country,+is+of+recent+date;+even+our+first+missionaries+call+Tamil+land+Malabar+and+the+language+–+even+not+very+much+different+–+Malabar+Ish.”&source=bl&ots=EjCHBaBGhG&sig=ACfU3U3uxrzm9v-xQDyP0OD_OWXeNrpVWw&hl=en&sa=X&ved=2ahUKEwicyf_XmsfsAhW9SRUIHRIRBDgQ6AEwAHoECAEQAg#v=onepage&q=“I have not been able to omit the primitive Church of Southern India%2C although its present place of residence is beyond the present boundaries of the land of the Tamulians. For the seperation of Malabar from the Tamil country%2C is of recent date%3B even our first missionaries call Tamil land Malabar and the language – even not very much different – Malabar Ish.”&f=false 

முன்பு எழுதிய திரி:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

எனக்கு நீண்ட நாள் குழப்பம் இந்த Dna சிங்களவனுக்கு எப்படி காட்டும் ?

பகிடியாக இல்லை.

சிங்களவரின் DNA மிகவும்  பரவலாக (diverse) இருக்க வாய்ப்புகள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

செய்து இருந்தால், எந்த கம்பனி அல்லது இணைய முகவரி என்பதை பகிர முடியுமா?

ஏனெனில், இது இனமும் ஆசியாவில் பிரபல்யம் அடையவில்லை என்றே தெரிகிறது. 

அதனால், எமது DNA  பரம்பலை மிக கூடிய ளவு கொண்ட சேவையாக  இருத்தல் அவசியம் ஏறத்தாழ சரியாக இருப்பதற்கு.      

வணக்கம் கடஞ்சா,

எனது பதில் கீழே.

பொறுப்பு திறப்பு 

இது எனது துறை அல்ல. நான் இத்துறை விற்பனரும் அல்ல. நான் சொல்வதெல்லாம் நான் அறிந்தவை மட்டுமே.

DNA மாதிரிகளை மூன்று வகைக்கு பயன்படுத்துகிறார்கள்.

1. பெற்றோரை, நெருங்கிய உறவுகளை அறிதல் -paternity - இதை யூகே கோர்ட்டே ஏற்கிறது.

https://www.gov.uk/get-a-dna-test 

2. ஒருவரின் மரபுரிமையை மிக மேலோட்டமாக அண்ணளவாக கணிப்பது. Macro level estimate. அதாவது, எத்தனை சதவீதம் ஆபிரிக்க, ஆசிய, இப்படி கணிப்பது. இந்த அண்ணளவான கணிப்பை ஓரளவுக்கு நம்பலாம். As a pointer not as an exact finding. டெஸ்ட் செய்பவர்களின் டேட்டா பேசின் சாம்பிள் அளவில் துல்லியம் தங்கியுள்ளது. அத்தோடு  மேலும் மேலும் மைக்ரோ லெவலுக்கு இறக்க துல்லியம் குறைய வாய்ப்புகள் கூட.

ஆனால் எம்மில் எத்தனை சதவீதம் ஆசிய மரபணு எனும் கணிப்பு நம்பகமாக இருக்கும். நாம் 100% தெற்காசியர் என்று வராதவிடத்து - நாம் 100% தூய தமிழாக இருக்க வாய்பில்லைதானே?

https://www.bbc.co.uk/programmes/articles/tBX9dq9V9qWV687ddP6lK9/dna-ancestry-kits

BBC யின் investigation மேலே. இங்கே இரு வேறு டெஸ்ட்களை ஆராய்கிறார்கள்.

3.  மருத்துவ நோய்களை எதிர்வுகூறல் - இது இன்னும் வளர்ந்து வருகின்ற விஞ்ஞானம் - இதன் பயன்பாடு பற்றிய முரண்பாடான நிலைபாடுகள் உள்ளன.

4 hours ago, பெருமாள் said:

எனக்கு நீண்ட நாள் குழப்பம் இந்த Dna சிங்களவனுக்கு எப்படி காட்டும் ?

யாழ் முகநூலை விட மோசமாக போகுது போல் உள்ளது .

தொடர்ந்து முக நூல் டுபாகூரை நம்பி ஏமாந்த மனம்- பின்னர் சகலதையும் நம்ப மறுக்கும் நிலைக்கு தள்ளபடுவது இயல்புதான். 

சிங்களவன் இதை உணர்ந்த படியால்தான் பல ஆராய்சிகளில் பங்கெடுப்பதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.