Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில்12 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில்12 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்

686055.jpg?resize=605%2C379&ssl=1
 3 Views

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 102 பேரை அடையாளம் கண்டு மீட்டுள்ளனர். 99 பேர் எங்குள்ளனர் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது.

கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.

இதில் சில இலத்தின் அமெரிக்க குடியேறிகளும் சிக்கியுள்ளதாக  தூதரகம் தெரிவித்துள்ளது.

பராகுவே நாட்டின் அதிபரின் மனைவி சில்வான லோபெஸ் மொரெய்ராவின் சகோதரி மற்றும் அவரின் குடும்பமும் இந்த இடிபாடிகளில் சிக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து சர்வதேச ஊடகங்களின் தகவலின் படி, மியாமி கடற்கரை ஒரத்தில் இருந்த 12 மாடி கொண்ட கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்தது. விபத்துக்குள்ளான கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது. கட்டிடத்தில் சமீப நாட்களாக புனரமைப்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 100-க்கும் அதிகமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.

https://www.ilakku.org/?p=53371

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்காவில் சீட்டு கட்டு போல் சரிந்த 12 மாடி கட்டிடம் ; 99 பேர் கதி என்ன...?
 
அமெரிக்காவில் சீட்டு கட்டு போல் சரிந்த 12 மாடி கட்டிடம் ; 99 பேர் கதி என்ன...?
 
வாஷிங்டன்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம்  உள்ளது.லத்தீன் அமெரிக்காவின் பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, அர்ஜெண்டினா, உருகுவே   நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் அதிகம் தங்கி இருந்தனர்.1981 களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் பராமரிப்பு  பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த் கட்டிடம் இன்று அதிகாலை 1 மனி அள்வில் சீட்டுக்கட்டு  போல் சரிந்துவிழுந்தது.  கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதும் சரிந்தது. குடியிருப்பின் வடகிழக்கு பகுதியில் உள்ள சுமார் 55 குடியிருப்புகள் இடிந்து சரிந்துள்ளது.இந்த கோர விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டார் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் துரிதப்பட்டுள்ளன. 

இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுவன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர் , 100க்கும் மேற்பட்டோர்  இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவம் நடந்தபோது கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. காணாமல் போனவர்களை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டிடம் இடிந்து விழுவதற்கு என்ன காரணம் என்று அதிகாரிகள் இன்னும் தீர்மானிக்கவில்லை, மியாமி-டேட் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் முழுமையடைந்த பின்னரே உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர், சேதம் குறித்த சரியான தகவல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

1981 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் 1990 களில் இருந்து ஆபத்தான கட்டிடமாக  உள்ளது என 2020 ஆம் ஆண்டில் பூமி மற்றும் சுற்றுச்சூழல் துறையின் பேராசிரியரான ஷிமோன் வோடோவின்ஸ்கி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராகுவே ஜ்னாதியின் உறவினர்கள் உள்பட பராகுவேவை சேர்ந்த 51 பேரை காணவில்லை.சோபியா லோபஸ் மோரேரா, அவரது கணவர் லூயிஸ் பெட்டன்கில் மற்றும் அவர்களது மூன்று இளம் குழந்தைகள் இன்னும் காணவில்லை என்று பராகுவே வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தி உள்ளது.

அர்ஜென்டினாவின் பிரபல  பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஆண்ட்ரஸ் கால்ப்ராஸ்கோனி, அவரது மனைவி மற்றும் புதிதாக தத்தெடுக்கப்பட்ட ஆறு வயது மகள் ஆகியோரையும் காணவில்லை.

https://www.dailythanthi.com/News/TopNews/2021/06/25140935/99-people-missing-after-Florida-condo-collapses.vpf

அமெரிக்கா போன்ற அதுவும் உல்லாசப்பயணத்துக்கு பெயர் போன மயாமி நகரில் இப்படி ஒரு கட்டிடம் பொலபொலவென்று இடிந்து போனது என்பது அதிர்ச்சியான விடயம் தான். எல்லா நாடுகளிலும் பல பேர்களை ஒரே வினாடியில் இல்லாமல் ஆக்கும் அளவுக்கு கவனக்குறைவான விடயங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அதிலும் 40 வருடக்கட்டிடம்???😭

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான காரணங்கள் இன்னும் தெரியவில்லையாயினும், கடற்காற்றின் உப்பினால் இரும்பு துருப்பிடித்து கட்டிடங்களின் பலம் குறையும் என்கிறார்கள். இதனால், இந்த நகரின் கட்டிடங்களை 40 ஆண்டுகளுக்கொருமுறை பரிசோதிக்க வேண்டுமென்று சட்டம் இருக்கிறது - பரிசோதிக்க முதலே அனர்த்தம் நிகழ்ந்து விட்டது, பல குடும்பங்கள் முற்றாகக் காணாமல் போய்/இறந்து விட்டன.

மேலும், புளோரிடாவின் சில பகுதிகளில் மண் உறுதியானதல்ல - இதனால் அத்திவாரம் ஈடாடியிருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

2007 இல் இதே போன்றதொரு அனர்த்தம் மினசோட்டாவின் மினியாபோலிஸ் நகரில் நிகழ்ந்தது. I-35 என்ற நெடுஞ்சாலையில் மிசிசிப்பி நதிக்கு மேலான பாலம் திடீரென்று உடைந்து ஆற்றினுள் விழுந்தது, பலியான சிலரின் உடல் கூடக் கிடைக்கவில்லை. விசாரணையின் போது, வீதி பனிக் காலத்தில் உறையாமலிருக்கப் பயன்படுத்திய உப்பு பாலத்தின் இரும்பை துருப்பிடிக்க வைத்ததால் இந்த அனர்த்தம் நிகழ்ந்தாகக் கண்டறிந்தனர். அதன் பின்னர் அந்தப் பாலத்தை மீள நிர்மாணித்த போது மிக நவீன சென்சர்கள் பொருத்தி தொடர் கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.    

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அதிலும் 40 வருடக்கட்டிடம்???😭

பம்பலப்பிட்டி கடற்க்கரை ஓரமா தொடர்மாடி கட்டிடம் அசையாமல் நிக்குது.... கண காலமா....

இது வேற ஏதோ பிரச்சனை போல கிடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

பம்பலப்பிட்டி கடற்க்கரை ஓரமா தொடர்மாடி கட்டிடம் அசையாமல் நிக்குது.... கண காலமா....

இது வேற ஏதோ பிரச்சனை போல கிடக்குது.

அது இளமையான காட்சிகளை  பார்க்கிறதால இருக்குமோ??😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அது இளமையான காட்சிகளை  பார்க்கிறதால இருக்குமோ??😜

சிங்கத்துக்கு நல்ல அனுபவம் போல காட்சிகளை பார்த்து பார்த்து 🤔

1 hour ago, விசுகு said:

அது இளமையான காட்சிகளை  பார்க்கிறதால இருக்குமோ??😜

பம்பலப்பிட்டி அடுக்குமாடிக்கு பின்னால் உள்ள கடற்கரையில் ஒரு நல்ல செடிகள் வளர்ந்த பத்தை ஒன்றும் இல்லை அண்ண... அதுக்கு வெள்ளவத்தை அல்லது கல்கிசைக்கு தான் போக வேண்டும்...

................................என்று அனுபவப்பட்டவர்கள் சொல்லிச்சினம்.😄

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சிங்கத்துக்கு நல்ல அனுபவம் போல காட்சிகளை பார்த்து பார்த்து 🤔

முன்பு இதுக்காகவே காலிமுகத்திடலை பின்னேரங்களில் காட்சிப்படுத்துவதுண்டு

அதுவும் யாரும் குடைக்குள்  இருக்கப்படாது?😜

5 minutes ago, நிழலி said:

பம்பலப்பிட்டி அடுக்குமாடிக்கு பின்னால் உள்ள கடற்கரையில் ஒரு நல்ல செடிகள் வளர்ந்த பத்தை ஒன்றும் இல்லை அண்ண... அதுக்கு வெள்ளவத்தை அல்லது கல்கிசைக்கு தான் போக வேண்டும்...

................................என்று அனுபவப்பட்டவர்கள் சொல்லிச்சினம்.😄

பம்பலப்பிட்டிய அதுக்கு  சரியான  இடம் இல்லைத்தான்

நானும்  மினக்கெட்டு போய் ஏமாந்திருக்கின்றேன்🤪

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் மராமத்து வேலைகள் செய்யும் பொழுது இசகு பிசகாய் ஏதாவது ஒரு பக்கத்து தூண்கள் உடை பட்டிருக்கலாம்......!   🤔

ஆயினும் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Nathamuni said:

பம்பலப்பிட்டி கடற்க்கரை ஓரமா தொடர்மாடி கட்டிடம் அசையாமல் நிக்குது.... கண காலமா....

இது வேற ஏதோ பிரச்சனை போல கிடக்குது.

 சிலோனிலை ஒல்லாந்தர் காலத்து கோட்டையள்,ஆங்கிலேயர் காலத்து கோட்டை,பாலங்கள் எல்லாம் பயங்கர உப்பு கரிக்கிற கடலுக்கை கம்பீரமாய் நிக்குதெல்லோ????
அதென்ன அங்கை உப்பு அரிக்கேல்லை. புளோரிடா உப்பு அரிச்சு தள்ளுது???? 😎

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 சிலோனிலை ஒல்லாந்தர் காலத்து கோட்டையள்,ஆங்கிலேயர் காலத்து கோட்டை,பாலங்கள் எல்லாம் பயங்கர உப்பு கரிக்கிற கடலுக்கை கம்பீரமாய் நிக்குதெல்லோ????
அதென்ன அங்கை உப்பு அரிக்கேல்லை. புளோரிடா உப்பு அரிச்சு தள்ளுது???? 😎

காசா பணமா சும்மா அடிச்சு விடுவம்  சாமி நீங்க கண்டுகொள்ள கூடாது .🤣

உண்மையான காரணம் வர சில நாட்கள் எடுக்கும் பெரும்பாலான செய்தி நிறுவனம்களின் கணிப்பு the domino effect எனப்படும் சீட்டு  கட்டு சரிவை ஒத்த நிகழ்வு .

பெருமாள் domino பீசா பற்றி விளங்கப்படுத்தி களங்கத்தை உருவாக்கி விட்டார் என்று யாரும் வராமல் இருந்தால் சரி 🤣

6 hours ago, suvy said:

அவர்கள் மராமத்து வேலைகள் செய்யும் பொழுது இசகு பிசகாய் ஏதாவது ஒரு பக்கத்து தூண்கள் உடை பட்டிருக்கலாம்......!   🤔

ஆயினும் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.....!

இதைத்தான் பாரிய ஊகமாக எதிர்வு கூறுகிறார்கள் .

இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.....!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

முன்பு இதுக்காகவே காலிமுகத்திடலை பின்னேரங்களில் காட்சிப்படுத்துவதுண்டு

அதுவும் யாரும் குடைக்குள்  இருக்கப்படாது?😜

கச்சான் கடலை விற்காதவரைக்கும் ஓகே உங்க வயசு அப்படி சிங்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

 சிலோனிலை ஒல்லாந்தர் காலத்து கோட்டையள்,ஆங்கிலேயர் காலத்து கோட்டை,பாலங்கள் எல்லாம் பயங்கர உப்பு கரிக்கிற கடலுக்கை கம்பீரமாய் நிக்குதெல்லோ????
அதென்ன அங்கை உப்பு அரிக்கேல்லை. புளோரிடா உப்பு அரிச்சு தள்ளுது???? 😎

கடலோரத்து கோட்டை  கொத்தளங்கள் எல்லாம் முருகை கற்களால் செப்பனிட்டு கட்டபட்டவை அத்துடன் சீமெந்து + சுண்ணாம்புத்தூள் எல்லாம் கலப்படம் இல்லாதவை......பொருட்கள் விடயத்தில் மக்களை ஏமாற்றி வணிகம் செய்யாத காலம் அது  அதனால்தான் காலங் கடந்தும் கதை பேசுகின்றன கட்டடங்கள்......!  👍 

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த அனைவருக்கும் இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

 சிலோனிலை ஒல்லாந்தர் காலத்து கோட்டையள்,ஆங்கிலேயர் காலத்து கோட்டை,பாலங்கள் எல்லாம் பயங்கர உப்பு கரிக்கிற கடலுக்கை கம்பீரமாய் நிக்குதெல்லோ????
அதென்ன அங்கை உப்பு அரிக்கேல்லை. புளோரிடா உப்பு அரிச்சு தள்ளுது???? 😎

13 hours ago, பெருமாள் said:

காசா பணமா சும்மா அடிச்சு விடுவம்  சாமி நீங்க கண்டுகொள்ள கூடாது .🤣

கார், பாலம், கடற்கரை ஓரமா கறல் பிடிக்கும். விளங்குது.

தூணுக்குளை, இந்த இரும்புக்கம்பியல், எல்லாம் சீமெந்து, கான்கிரீட் போட்டு மூடி இருக்கேக்க, உப்பு காத்து என்னெண்டு போறது எண்டு யோசிக்கிறன்.

இவ்வளவு கட்டிடம் இருக்கேக்க, அதுல மட்டும், காத்து பூந்து, கம்பிகளை கறல் பட வைத்திருக்குது..... என்னத்தை சொல்ல....😬

இதில ஒரு ஆராச்சி கட்டுரை எழுதின யாரையாவது பிடிச்சு விளக்கம் கேக்கோணும்....   🙄

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

கார், பாலம், கடற்கரை ஓரமா கறல் பிடிக்கும். விளங்குது.

தூணுக்குளை, இந்த இரும்புக்கம்பியல், எல்லாம் சீமெந்து, கான்கிரீட் போட்டு மூடி இருக்கேக்க, உப்பு காத்து என்னெண்டு போறது எண்டு யோசிக்கிறன்.

இவ்வளவு கட்டிடம் இருக்கேக்க, அதுல மட்டும், காத்து பூந்து, கம்பிகளை கறல் பட வைத்திருக்குது..... என்னத்தை சொல்ல....😬

இதில ஒரு ஆராச்சி கட்டுரை எழுதின யாரையாவது பிடிச்சு விளக்கம் கேக்கோணும்....   🙄

கட்டிட வடிவமைப்பு செய்யேக்கை கம்பி துருப்பிடிக்காமல் தானே செய்யிறது. இலங்கையில் எண்டால் ஊழலாலை பிழையான கலவையள் போட்டிருப்பினம் எண்டு சொல்லலாம்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

புளோரிடாவில் கட்டடம் சரிந்து விபத்து – உயிரிழப்பு 5 ஆக உயர்வு 156 பேரை தேடும்பணி தீவிரம்

புளோரிடாவில் கட்டடம் சரிந்து விபத்து – உயிரிழப்பு 5 ஆக உயர்வு 156 பேரை தேடும்பணி தீவிரம்

புளோரிடாவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை அன்று ஐந்தாக உயர்ந்துள்ளது.

இதேவேளை காணாமல் போன 150 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்தும் தேடிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடா மாகாணத்தில் மயாமி கடற்கரை ஓரத்தில் இருந்த கட்டடத்தின் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக சரிந்து வீழ்ந்தமையினால் இந்த பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே 4 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் இடம்பெற்ற மீட்பு பணிகளின்போது மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மியாமி-டேட் கவுண்டி மேயர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1225211

######   ############  ##########

இவ்வளவு பெரிய கட்டிடம் சரிந்து விழுந்ததில்... 
5 பேர் வரையான, உயிரிழப்புகள் தான் பதிவு செய்யப் பட்டுள்ளதை பார்க்கும் போது... 
ஆச்சரியமாக  உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

புளோரிடாவில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது – உயிரிழப்பு 12 ஆக உயர்வு

புளோரிடாவில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது – உயிரிழப்பு 12 ஆக உயர்வு

புளோரிடாவில் கட்டடம் இடிந்த பகுதியில் ஆறாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவரும் தேடல் மற்றும் மீட்பு முயற்சியின்படி இதுவரை 12 பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தற்செயலான கட்டமைப்பு தோல்வி என மதிப்பிடக்கூடிய பேரழிவின் காரணமாக 149 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகள் பழமையான அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே உள்ள 12 மாடி குடியிருப்பு கட்டிடம் கடந்த வியாழக்கிழமை திடீரென இடிந்து வீழ்ந்தது.

இதற்கு கட்டமைப்பு குறைபாடுகளே காரணம் என பொறியியலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிற நிலையில் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

https://athavannews.com/2021/1225776

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.