Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேரத்தையும், உழைப்பையும் சுரண்டும் "கிச்சன்" என்னும் வீட்டுச் சிறை.! பெண்களை மீட்பது எப்படி.?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேரத்தையும், உழைப்பையும் சுரண்டும் "கிச்சன்" என்னும் வீட்டுச் சிறை.! பெண்களை மீட்பது எப்படி.?

1587566505751.jpg

சென்னை: "உன்னோட கைப்பக்குவம் மாதிரி யாருக்கும் வராது.." இந்த ஒற்றை வார்த்தையை நம்பி இந்திய பெண்களில் பெரும்பான்மை விழுக்காடு சமையல்கட்டில் முடங்கிப் போய்விட்டது.

ஆண்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரிவதே கிடையாது.. ஆனால் உன்னிப்பாக பார்த்தால் மிகப்பெரிய மனித உழைப்பை நாம் சுரண்டி கொண்டிருக்கிறோம்.. மிகப்பெரிய மனித உரிமை மீறலை, நமது இல்லங்களில் நாம் சத்தமேயில்லாமல், நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஒரு நேர சமையல்.. இருநாட்கள் சாப்பாடு என்பதெல்லாம் நம்ம ஊரில் கிடையாது. காலையில் டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என எந்த நேரமும் சமையலறையில் சிறை வைத்து பழக்கிவிட்டோம் பெண்களை.

mqdefault.jpg

கொஞ்சம் வானம் இருட்டி விட்டால்.. சூடாக பஜ்ஜியை கொடு, வடையை போடு என்ற "செல்ல சுரண்டல்கள்" தனிக்கதை.

சமையல் செய்வதோடு முடியப்போவது கிடையாது பணி. சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைப்பதில் ஆரம்பித்து, சிந்தியிருக்கும் பருக்கைகளை எடுத்து, சாப்பிட்ட இடத்தை துடைத்து வைப்பது என்று.. அது சார்ந்த விஷயங்கள் நீண்டுகொண்டே செல்லும்.

சற்று உன்னிப்பாக கவனித்து பாருங்கள்.. ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறையை, மகிழ்ச்சியாக, அனுபவிக்க படைக்கப்பட்டவை.. பண்டிகை தினங்கள், ஒரே மாதிரியான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு உற்சாகமடைய உருவாக்கப்பட்டவை. ஆனால் இது ஆண்களுக்கு மட்டுமே..

woman_multitask.jpg

நாம் குறிப்பிடும் இந்த தினங்களில்தான் பெண்களுக்கு வழக்கத்தை விடவும் அதிக நேரம் கிச்சனில், முடங்கிக்கிடக்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறோம். மற்ற நாட்களில் தோசைக்கு சட்னி மட்டுமே என்றால், விடுமுறை தினங்களில் அத்தோடு சேர்த்து, வடை, சாம்பார் என்று பல சுவை கேட்கிறது நமது நாவு.

தீபாவளியில் ஆண்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக இருப்பார்கள், பெண்கள் பலகாரம் சுட்டு அடுப்படியில் இருப்பார்கள். பொங்கல் 3 நாள் விழா என்றால் அவர்களுக்கு 3 நாளும் கூடுதல் வேலை என்று அர்த்தம். இப்படி எந்த ஒரு பண்டிகை அல்லது உற்சாக நாள் என்றாலும் அதை சமையலோடும்.. சமையலை பெண்களோடும் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது நமது சமூகம்.

"ரசித்துதானே இதைச் செய்கிறார்கள் பெண்கள்.." என்று நீங்கள் கேட்கலாம்.. பல தலைமுறைகளாக பழக்கப்படுத்தி வைத்ததால் வேறு வழியில்லாமல் போலியாக ரசிக்க கற்றுக் கொண்டு விட்டனர் என்பது தான் எதார்த்தம். "உன்னோட கைப்பக்குவம் மாதிரி யாருக்கும் வராது.." என்பது போன்ற வார்த்தைகள் பெண்களை அடுப்பங்கறையில் கட்டி வைக்க ஆண்கள் பயன்படுத்தும் மாயக்கயிறுதானே!

"சமையலறை பெண்களுக்கு மட்டுமே" என்ற கற்பிதத்தை உடைப்பதுதான் இந்த கட்டுடைப்பை சாத்தியப்படுத்தும் என்கிறார்கள் சமூகவியல் நிபுணர்கள். ஆண்களும் சமையலறையில் பாதி வேலையை பகிர்ந்து கொள்ளும்போது அது பெண்களின் பழுவை குறைக்கும், ஆண்களும் அந்த வேலையின் கஷ்டம் புரிந்து மாற்று வழியை யோசிக்க தொடங்குவார்கள். சொல்லப்போனால் காலப்போக்கில் வீட்டில் சமையலறை என்ற ஒன்று இல்லாமல் போகவும் வழியேற்படக்கூடும்.

இந்த "கட்டுடைப்பு" போன தலைமுறை வரை யோசித்துப் பார்க்க முடியாதது. ஆனால் இந்த தலைமுறை அப்படியில்லை. பெண்களும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததிலிருந்து இந்த மாற்றம் உருவாகி விட்டது. இப்போது 40 வயதுக்கு மேலே உள்ள எந்த ஆண்களாவது வீட்டு வேலையை மனைவியோடு சேர்ந்து செய்து பார்த்திருக்கிறீர்களா? ஆனால் இப்போது வளரும் இளம் தலைமுறையினர் தனது சகோதரியுடன் வீட்டு வேலையைப் பகிர்ந்து கொள்ள பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இந்த தலைமுறையினருக்கு திருமணம் ஆகும்போது தங்களது வாழ்க்கைத் துணையிடம், "இது பெண்களுக்கான வேலை" என்று சொல்வதற்கு நாக்கு எழாது.

நகர்ப்புற பகுதிகளில் இந்த மாற்றம் வேகமாக நடந்து வருகிறது. கிராமங்களில் கோவில் திருவிழாவிற்கு செல்லும் போது அங்கும் வீடுகளில், பெண்கள் சமையல் செய்து கொண்டிருந்த காலம் மாறிவிட்டது. மூன்று நாட்கள் திருவிழா என்றால் மொத்தமாக சமையல் செய்து, தினமும் 3 வேளைகளிலும் கோவில் அருகே பந்தி பரிமாறப்படுவதை பார்க்க முடிகிறது. திருவிழா நடைபெறும் 3 நாட்களில் பெண்கள் முழு விடுதலையடைவதை அவர்கள் முகத்தை பார்த்தே புரிந்து கொள்ள முடியும்.

இந்த மறுமலர்ச்சியை வாழ்க்கை முழுக்க பார்க்க வேண்டும் என்று ஆண்கள் நினைக்க வேண்டாமா? நமது சக பாலினத்தை சேர்ந்த ஒரு ஜீவன் சமையலறைக்குள் முடக்கப்பட்டு அதுவே அவர்களது வாழ்க்கை என்று முடிவு கட்டிவிட்டது நவீன தீண்டாமை என்று உணர வேண்டாமா?

இப்போதுள்ள தலைமுறையின் மனதில் இந்த கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன. எனவேதான், சமயலறையிலிருந்து பெண்களை விடுதலை செய்யவேண்டும் என்ற வாதங்களும் அதிகரித்துவிட்டன.

202008201652576459_Chennai-Swiggy-delive

சமையலறையிலிருந்து பெண்களை விடுவிக்க இப்போது உள்ள ஒரே ஆப்ஷன், ரெஸ்டாரண்ட் செல்வதோ, அல்லது ஸ்விகி போன்ற ஆன்லைன் தளங்கள் மூலமாக  உணவை வீட்டுக்கே வர வைத்து சாப்பிடுவதோதான். ஆனால் தினமும் இதைச் செய்ய முடியுமா? உணவக விலையை ஒப்பிட்டால் வீட்டில் குறைவான செலவில் அதிக உணவு சாப்பிட முடியும் என்ற இந்திய மனநிலையும், யதார்த்தமும் வந்து எட்டிப் பார்க்குமே..? இங்குதான் வருகிறது கம்யூனிட்டி கிச்சன்.

குறைந்தபட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து இதை ஆரம்பிக்கலாம். அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் ஒரே இடத்தில் சமையல்காரர்கள் வைத்து சமைக்கலாம். ஒரு நாளைக்கு 500 ரூபாய் செலவில் நான்கு பேர் கொண்ட குடும்பம் 3 நேரம் சாப்பிட முடியும் என்ற நிலை உருவானால், வீடுகளில் கிச்சன் இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுமே என்கிறார்கள் உணவுத் துறை சார்ந்த நிபுணர்கள்.

இதே நடைமுறையை, பிறகு ஒரு ஏரியா முழுக்க விரிவாக்கம் செய்யலாம். பிறகு அதை ஊர் முழுக்க விரிவாக்கம் செய்ய முடியும். இப்படித்தான் பெண்களுக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்க முடியும். தினந்தோறும் ஒவ்வொரு வீட்டிலும் மனித உழைப்பு பல மணி நேரம் வீணாவதை தவிர்க்க முடியும்.

சேலத்தில் உள்ள குகை என்ற பகுதியில் கிட்டத்தட்ட இந்த ஐடியா செயல்படுகிறது. கொலுசு உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில்கள் அந்த பகுதியில் பிரபலம். எனவே அங்கே பணியாற்றும் தொழிலாளர்கள் சமையல் செய்து அதை கொண்டு வருவதற்கான நேரம் கிடைப்பதில்லை. சோறு பொங்கி எடுத்து வந்து விட்டால் போதும், வகைவகையான குழம்புகளை விற்பனை செய்வதற்கு சுமார் 400க்கும் மேற்பட்ட கடைகள் அங்கே இருக்கின்றன. குழம்பை வாங்கி சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இதனால் ஏகப்பட்ட நேரம் மிச்சம் ஆகிறது என்கிறார்கள் அந்த பகுதி மக்களும், தொழிலாளர்களும்.

பெண்கள்தான் குழம்பு வைக்க வேண்டும் என்ற வாதம் அங்கே அடிபட்டு போவதற்கு காரணம், அதற்கான தேவை எழுந்துள்ளது என்பது தான். தேவை ஏற்படும் போது பெண்களுக்கு விடுதலை தரும் ஆண்கள், அவர்களின் மனது மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் மனதில் வைத்து கம்யூனிட்டி கிச்சன் கலாச்சாரத்துக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பெண்கள் மூன்று வேளைகளிலும் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருப்பது கிடையாது தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் இந்த கலாசாரம் வந்துவிட்டது ஆனால் நமது நாட்டில் தான் உணவு தயாரிப்பதை பெண்களோடு தொடர்புபடுத்தி மனரீதியாக அடிமைப்பட்டு கிடக்கிறோம்.

நூடுல்ஸ் போன்ற உணவு வகைகளின் சமையல் நேரத்தை கணிசமாக குறைக்கின்றன. ஆனால் அது ஆரோக்கியமற்றது என்று நமக்கு நாமே குற்றம் சொல்லிக் கொண்டு பழையபடி அரிசி சோறு தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறோம். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள அரசி சோறு, நமது முன்னோர்களுக்கு அவசியம். அதற்கான உடல் உழைப்பு அவர்களிடமிருந்தது. வயலில் வேலை செய்வோருக்கு சக்தி இழப்பை ஈடு செய்ய அவை பயன்பட்டன. கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நாம் நமது உணவு கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டாமா? பெண் விடுதலை என்பதற்காக மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்திற்கும் அதுதான் நல்லது.

karaikudi_wedding.jpg

வெளிநாடுகளில் மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிகளில் கூட பர்கர், ரொட்டி, அதனுடன் இறைச்சி துண்டுகள், கூல்டிரிங்ஸ் என விருந்து நிறைவு பெறுகிறது. ஆனால் நமது நாட்டில் ஒரு திருமண வீட்டில் கூட 30 வகை பதார்த்தங்கள் வைக்கப்பட்டது என்பது பந்தாவாக பேசப்படுகிறது. உணவுக்கும் கவுரவத்திற்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி, அந்த கயிற்றை பெண்களின் கால்களிலும் நைசாக கட்டி வைத்துள்ளோமே. குறைந்தபட்சம் வட இந்தியர்கள் போல ரொட்டி துண்டுகளை மட்டும் சுவைக்கவாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இட்லிக்கு நாலு வகை சட்னி, சோற்றில் 7 வகை என கார்போஹைட்ரேட் பின்னால் ஓடி வாழ்க்கையை வீணாக்குவதை நிறுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு, ஒரு பிளேட் சோற்றை விட, அல்லது 4 சப்பாத்தியை விட, ஒரு பிளேட் மேகி நூடுல்ஸ் பாதி அளவு கார்போஹைட்ரேட்தான் கொண்டுள்ளது. ஆனால் நாம் சோறுதான் ஆரோக்கியம் எனச் சொல்வோம். சப்பாத்திக்கு வாரம் ஒரு வகை, கிரேவி கேட்டு சமைக்கச் சொல்லி சாப்பிடுவோம்.

கம்யூனிட்டி கிச்சன்கள், குழம்பு கடைகள் போன்றவை, சமையலறையிலிருந்து முழுமையாக பெண்களை மீட்டெடுக்குமா என்றால், அங்கும் சில சவால்களை நாம் எதிர்கொள்ள தேவையுள்ளது. ஹோட்டல்களில் தினமும் நமது மக்கள் சாப்பிடாமல், மனைவி கையால் சமைத்து சாப்பிட காரணம், அவற்றின் தரம் குறித்த சந்தேகம் தான். இதை முதலில் உடைத்தெறிய வேண்டும். பொது இடங்களில் சமையல் என்று ஒரு காலகட்டம் வரும் போது அங்கு முழுக்க முழுக்க தரம் பராமரிக்கப்படுகிறதா என்பதை அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் ரெஸ்டாரண்டில் அடிக்கடி சாப்பிடுவது வாடிக்கையாக இருக்கிறது. அவர்களுக்கு வயிற்று வலி வருவதில்லை. ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால் நம்ம ஊரில் ஒரு வருடம் சேர்ந்தாற்போல ஹோட்டல்களில் சாப்பிட்டால் அத்தனை உடல்நல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இங்கு தான் தரம் முக்கிய பங்காற்றுகிறது.

சமையலறை பெண்களுக்கு மட்டுமே ஆனது என்ற ஒரு பொது புத்தியை உடைத்து எறிய வேண்டிய தேவை அடுத்த சவாலாக இருக்கிறது. "இந்த சவாலில் கிட்டத்தட்ட பாதி கிணறை நாம் தாண்டி விட்டோம் என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவை கிடையாது" என்கிறார்கள் நாம், தொடர்பு கொண்டு பேசிய, பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர்.

"தி கிரேட் இந்தியன் கிச்சன்" போன்ற திரைப்படங்கள், அப்படியே, ஆண்கள் முகத்தில் அறைந்து உண்மைகளை பேச ஆரம்பித்துள்ளன. பொது வெளியில், இப்போதுதான் நாம் இதைப் பற்றி பேசவே ஆரம்பித்துள்ளோம். கட்டுடைப்புக்கான, மனத் தடையை நொறுக்குவதற்கான நல்ல அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

இதுவரை இல்லாத வகையில், குடும்ப உறவுகளில் இந்த இந்திய தலைமுறை பல்வேறு மாற்றங்களை பார்த்து வருகிறது. தனிக்குடித்தனம் சாதாரணமாகிவிட்டது, பெண்களும் வேலைக்கு போவது அடிப்படை தேவையாகிவிட்டது, பெண் பிள்ளைகளுக்கு என்று தனி வேலை கொடுக்காமல் ஆண் குழந்தைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே, அடுத்த தலைமுறை, சமூக கிச்சன் நோக்கி செல்லும் சமுதாயமாக உருவாவதற்கான வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை என்று உறுதியாகச் சொல்கிறார்கள் அவர்கள்.

https://tamil.oneindia.com/how-indian-women-can-comes-out-from-kitchen-and-preparing-food-as-it-consumes-more-time-cs-425951.html

டிஸ்கி :

இந்த தலைப்பு பெண்ணியம் சார்ந்ததா.?  ரெல் மீ .. !

---- இணைக்கபட்டுள்ளது---

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2021 at 15:46, புரட்சிகர தமிழ்தேசியன் said:

“கம்யூனிடி கிச்சன்” கேட்பதற்கு மட்டுமே அழகாகவும் பொருத்தமானதாகவும் உள்ளது.. அவ்வளவுதான்.. நடைமுறையில் எப்படி சரிவரும் என்பது கேள்விக்குறி..

குடும்ப உறுப்பினர்களை ஒன்றினைப்பது சாப்பாட்டு அறையே.. ஒரு தரமாவது குடும்பத்தவர்கள் சேர்ந்து உணவு உண்பது அந்த குடும்பத்தின் பிணைப்பை அதிகரிக்கும், குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து இரவு உணவை சமைப்பதோ, அல்லது வார இறுதி நாட்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து வீட்டுவேலைகள், உணவு சமைப்பதோ, அந்த குடும்பத்தின் பிணைப்பை அதிகரிக்கும்.. 

அதே நேரம்,மேலே கட்டுரையில் கூறியது போல, தற்பொழுது ஆண்பிள்ளைகளுக்கும் தனிசலுகைகள் கொடுத்து வளர்க்காமல் அவர்களுக்கும் வேலைகளை கொடுத்து, இது பெண்களுக்குரியது மட்டுமல்ல, என கூறி வளர்க்கப்படும் பொழுது இயல்பாகவே தனக்கென ஒரு வாழ்க்கை(அது தனித்தோ, சேர்ந்தோ) வரும் பொழுது வேலைகளை பகிர்ந்துகொள்கிறார்கள்.. இல்லை தனித்து இருந்தாலும் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்தவும் தெரிகிறது..

சமூக கிச்சன் - பொதுநிகழ்வுகளுக்கு மட்டுமே.. 

இக் கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கும் அனேகமான விடயங்கள் புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டுமல்ல ஊரில் உள்ள எம் மக்களுக்கும் பொருந்தாது. மூன்று நேரம் சமைப்பதும் இடையில் சிற்றுண்டி சமைப்பதும் இப்ப எம் வாழ்வில் வழக்கொழிந்து வரும் நல்ல விடயங்கள். ஆணும் பெண்ணும் இணைந்து சமைப்பது, சமைக்கும் விடயங்களில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புக் கொடுப்பது வழமையாக மாறிக்கொண்டு வருகின்றது.

கனடாவில் ஆண் திமிர் அதிகமாக கொள்ளாத பல எம்மவர் குடும்பங்களை காண முடிகின்றது. இங்கு வந்து படித்து பின் குடும்பமாக உள்ளவர்களிற்கு இடையில் "பெண் தான் அடுப்படியில் நிற்கவேண்டும்" என்ற மன-நிலை அருகிக் கொண்டு வருகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களை வீட்டுச்சிறையிலிருந்து மீட்பது என்பதை ஓரம் கட்டிவிட்டு முதலில் வீட்டில் சமைத்து உண்ண பழகுங்கள். அதிலும் எமது பாரம்பரிய உணவு கெடுதல் எதுவும் இல்லாதது.
இந்த கம்பேக்கர் கலாச்சாரம்,பிட்சா கலாச்சாரம் கொக்கோகோலா கலாச்சாரம் மனித இனத்திற்கே ஒவ்வாதது.
அதிலும் இந்த பெண்ணடிமை என்ற சொல்லை கேட்டாலே கெட்ட கோபம்தான் வருகின்றது. மன்னிக்கவும் இது எனக்கு மட்டும் தானா? 😁

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உண்மை

உங்க வந்து பார்த்தியல் எண்டால், வெள்ளி, சனி, ஞாயிறு எங்கண்ட பொம்பிளையல் தான், தமிழ் டேக் எவே கடையில் வழிய நிண்டு, இடியப்பம், சொதி, சம்பல்... அப்படியே அத்தாருக்கும் போனை போட்டு, உங்களுக்கு வெள்ளை பிட்டோ, சிவப்பு புட்டோ என்று கேட்டு போட்டு.....

பஞ்சி... கேட்டுப்பாருங்கோ... பிள்ளையளை டியூஷன் ஏத்தி இறக்கிறதே, குசினிகில நிண்டு சமைக்கிறேதே முக்கியம் எண்டு சொல்லிக்கொண்டே போவினம்.

உந்த மாவை குலைத்து, பிழிந்து.... இடியாப்பதை அவிக்க....வேற வேலை ... இல்லையே எண்டுவினம்....  🤗

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

உங்க வந்து பார்த்தியல் எண்டால், வெள்ளி, சனி, ஞாயிறு எங்கண்ட பொம்பிளையல் தான், தமிழ் டேக் எவே கடையில் வழிய நிண்டு, இடியப்பம், சொதி, சம்பல்... அப்படியே அத்தாருக்கும் போனை போட்டு, உங்களுக்கு வெள்ளை பிட்டோ, சிவப்பு புட்டோ என்று கேட்டு போட்டு.....

பஞ்சி... கேட்டுப்பாருங்கோ... பிள்ளையளை டியூஷன் ஏத்தி இறக்கிறதே, குசினிகில நிண்டு சமைக்கிறேதே முக்கியம் எண்டு சொல்லிக்கொண்டே போவினம்.

உந்த மாவை குலைத்து, பிழிந்து.... இடியாப்பதை அவிக்க....வேற வேலை ... இல்லையே எண்டுவினம்....  🤗

நாடகம் பார்க்கிறதை மறந்திட்டியள் … முனி. 🤣 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

நாடகம் பார்க்கிறதை மறந்திட்டியள் … முனி. 🤣🤣

நமக்கேன் பொல்லாப்பு.....

இங்க, கணக்கு வாயை திறந்தால்.... போட்டு தாக்க... ஓடி வருவினம் அக்காமார்..... அதாலை எஸ்கேப்... 😁 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2021 at 07:46, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆண்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரிவதே கிடையாது.. ஆனால் உன்னிப்பாக பார்த்தால் மிகப்பெரிய மனித உழைப்பை நாம் சுரண்டி கொண்டிருக்கிறோம்.. மிகப்பெரிய மனித உரிமை மீறலை, நமது இல்லங்களில் நாம் சத்தமேயில்லாமல், நடத்திக் கொண்டிருக்கிறோம்

வெங்காயம் உரிப்பதற்கும் தேங்காய் திருவுவதற்கும் ஏவல் வேலை செய்வதற்கு........ அதற்கும் திட்டு வாங்கி.......

உள்ள கோவத்தை எல்லாம் குசினிக்குள்ளேயே வைத்து தீர்க்கலாம் என நினைக்கும் பெண்களுடன் சேர்ந்து சமைப்பவர்களுக்குத் தான் தெரியும் அவர்கள்  படும்பாடு🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

நாடகம் பார்க்கிறதை மறந்திட்டியள் … முனி. 🤣🤣

உத பற்றி எழுதுறதெண்டால் இஞ்சை யாழ்களத்திலையும் 250 பக்கங்களை தாண்டும்.
என்ன சிறித்தம்பியர்  திரி ஒண்டு துவங்குவமே?:cool:

"கண்மணிகளும் கன்றாவி  நாடகங்களும்"

 யாழ்கள கூட்டுகளிடமிருந்து தரமான தலையங்கம் எதிர்பார்க்கப்படுகின்றது 😊

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2021 at 17:20, நிழலி said:

இக் கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கும் அனேகமான விடயங்கள் புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டுமல்ல ஊரில் உள்ள எம் மக்களுக்கும் பொருந்தாது. மூன்று நேரம் சமைப்பதும் இடையில் சிற்றுண்டி சமைப்பதும் இப்ப எம் வாழ்வில் வழக்கொழிந்து வரும் நல்ல விடயங்கள். ஆணும் பெண்ணும் இணைந்து சமைப்பது, சமைக்கும் விடயங்களில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புக் கொடுப்பது வழமையாக மாறிக்கொண்டு வருகின்றது.

கனடாவில் ஆண் திமிர் அதிகமாக கொள்ளாத பல எம்மவர் குடும்பங்களை காண முடிகின்றது. இங்கு வந்து படித்து பின் குடும்பமாக உள்ளவர்களிற்கு இடையில் "பெண் தான் அடுப்படியில் நிற்கவேண்டும்" என்ற மன-நிலை அருகிக் கொண்டு வருகின்றது.

கனடாவில் 5 டொலருக்கு 50 இடியப்பம் சொதி சம்பலுடன்

8 டொலருக்கு ஒரு  சாப்பாடு எடுத்தா இரண்டு பேரும்  நன்றாக சாப்பிடலாம் என்றால்..

எதுக்கு  சமைக்கணும்???🤣

எப்படி  சமையல்  பிரச்சினை  வரும்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Nathamuni said:

உங்க வந்து பார்த்தியல் எண்டால், வெள்ளி, சனி, ஞாயிறு எங்கண்ட பொம்பிளையல் தான், தமிழ் டேக் எவே கடையில் வழிய நிண்டு, இடியப்பம், சொதி, சம்பல்... அப்படியே அத்தாருக்கும் போனை போட்டு, உங்களுக்கு வெள்ளை பிட்டோ, சிவப்பு புட்டோ என்று கேட்டு போட்டு.....

பஞ்சி... கேட்டுப்பாருங்கோ... பிள்ளையளை டியூஷன் ஏத்தி இறக்கிறதே, குசினிகில நிண்டு சமைக்கிறேதே முக்கியம் எண்டு சொல்லிக்கொண்டே போவினம்.

உந்த மாவை குலைத்து, பிழிந்து.... இடியாப்பதை அவிக்க....வேற வேலை ... இல்லையே எண்டுவினம்....  🤗

மெயின் சாப்பாடுகளையும்,சிற்றுண்டிகளையும் கடையிலை வாங்கி சாப்பிடுறது. பிறகு வயுத்துக்கை குத்துது குடையுது எண்டு டாக்குத்தரிட்டை ஓடுறது.

எண்ணைச்சாப்பாடும் சுவையூட்டி உப்புகளுமே எங்கடை உடம்புக்கு வில்லன்கள். கடையள்ளை பொரிக்கிற எண்ணைய பார்த்தால் தார் ரேஞ்சிலை இருக்கும்.உப்பு நோர்மலாயே வில்லங்கம். அதிலையும் உந்த சுவையூட்டி உப்பு உலகத்திலை உள்ள எல்லா வருத்தையும் கொண்டுவரும்.

எத்தனையோ வீடுகளிலை ஆண்கள் தான் சமைக்கின்றார்கள்.இருந்தாலும் அம்மாவின் சமையலைத்தான் பிள்ளைகள் அநேகம் விரும்புகின்றார்கள். அப்பிடியிருக்க அம்மாவே கடையிலை சாப்பாடு வாங்கி குடுத்தால்......

அம்மாமார் சமைச்சு குடுத்தால் என்னவாம்? இதுக்கை போய் சமையல் நேரத்தையும் உழைப்பையும் சுரண்டுதாம் 😂🤣😃😄😅😆😎

  • கருத்துக்கள உறவுகள்

House wife என்பது ஒரு உத்தியோகம்.

3 hours ago, விசுகு said:

கனடாவில் 5 டொலருக்கு 50 இடியப்பம் சொதி சம்பலுடன்

8 டொலருக்கு ஒரு  சாப்பாடு எடுத்தா இரண்டு பேரும்  நன்றாக சாப்பிடலாம் என்றால்..

எதுக்கு  சமைக்கணும்???🤣

எப்படி  சமையல்  பிரச்சினை  வரும்???

அதுக்காக எல்லா நாட்களிலும் எல்லாரும் எட்டு டொலருக்கு சாப்பாடு எடுத்து சாப்பிடுவதில்லை. இடியப்பம் வாங்குகின்றவர்கள் கூட அதனுடன் வரும் சொதியை நம்பி வாங்குவதும் இல்லை. வீட்டில் கறி ஏதும் அதனுடன் சாப்பிட கட்டாயம் இருக்கும்.

வேலைக்கு போகும் பெண்கள் வீட்டுக்கு வந்த பின்னும் அவர்கள் மட்டுமே சமையலில் ஈடுபடவேண்டும் எண்ணம் எம் படித்த பண்பான தலைமுறை இடம் அருகி வருகின்றது. 

நாம். நான், நீங்கள் என எல்லோரும் எம் பெண் பிள்ளைகளை நன்கு படிப்பிப்பது அவர்கள் சமூகத்தில் நல்ல நிலைக்கு, நல்ல தொழிலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில். அந்த நோக்கத்துக்கு சமையலும் சமையலறையும் முட்டுக் கட்டை போடுகின்றது எனில், அல்லது முன்னேற்றத்தினை தடுக்கின்றது எனில், அதனை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகின்றது. அங்கு ஆணும் பெண்ணும் சமமாக வேலைகளை பகிரிடும் போது இந்த மாற்றம் நிகழ்கின்றது.

இப்பவே முன்னர் இருந்த குசினியை விட இப்போதுள்ள குசினியின் அளவு குறைந்துள்ளது.  ஆணும் பெண்ணும் வேலையால் களைத்து வந்தால், கடையில் உணவு வாங்க வேண்டிய நிலை வருகின்றது. இது தவிர்க்க முடியாது. இது இன்னும் இன்னும் அதிகரிக்கும். தரமான உணவு விற்கும் இடங்களின் தேவையும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் சமையலறைகள் மிகக் குறுகியதாக மாறும்.

அப்பவும் அரதப் பழசான, பூஞ்சனம் பிடித்த கொள்கைகளை விட்டு அகல விரும்பாத சிலர் அதை பார்த்து புறுபுறுத்துக் கொண்டு தான் இருப்பர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, karu said:

House wife என்பது ஒரு உத்தியோகம்.

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி

ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வேலைக்கு போக வேண்டிய அவசியம் எதனால் வருகின்றது?

ஒரு சாண் வயிற்றில் இன்னும் மாற்றங்கள் வரவில்லை. அது இருந்த படியே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

"குடும்பம் என்கின்ற அழகான மிகப் பாதுகாப்பான அமைப்பொன்றை  எப்படி இல்லாதொழிக்கலாம்" என்பதை இந்தக் கட்டுரை மிக நாசூக்காகச் சொல்கிறது. 

☹️

2 hours ago, karu said:

House wife என்பது ஒரு உத்தியோகம்.

அது உத்தியோகம் அல்ல, பொறுப்பு(Responsibility, Discipline) அதச் சரியான முறையில் புரிந்து கொண்டால்(முக்கியமாக ஆண்கள்) அடுப்படி☹️சமையல் 🤥என்கின்ற பிரச்சனை எழப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எதுவும் செய்ய கூடாது என்ற எண்ணம் இல்லை 
ஒரு தேநீர் கூட நான் போடுவதை விட  ...... பெண்கள் போடுவது மிகவும் சுவையாக இருக்கிறது.
அதே அளவில் நானும் முயற்சி செய்கிறேன் அது ஏனோ சிக்க மாட்டேன் என்கிறது 
ஆனால் சில ஆண்கள் பெண்களை விட நல்ல ருசியாக சமைப்பதை பார்த்து இருக்கிறேன் என்று எழுதுவது அபத்தம் ..... ருசியான உணவு சமைக்கும் ரெஸ்டூரண்ட் குக் 95% ஆண்கள்தான். 

சுவையாக சமைக்க தெரிந்தவர்கள் சமைத்தால் அதுதானே நன்று !
அதை ஏன் குளறுபடி பண்ணுவான்? 

5 hours ago, Kapithan said:

"குடும்பம் என்கின்ற அழகான மிகப் பாதுகாப்பான அமைப்பொன்றை  எப்படி இல்லாதொழிக்கலாம்" என்பதை இந்தக் கட்டுரை மிக நாசூக்காகச் சொல்கிறது. 

☹️

கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கவேண்டும் .....
மாதர் சங்கம் அது இது என்று வருபவர்கள் குடும்பத்தை பிரிப்பதுபோல 
பெண்களுக்கு சோப்பு போடுவதாக இவர்கள் பிரச்சனையை கிளறியும் விடுவார்கள்.

ஆனால் உண்மையில் பெண்கள் மிகுதியான நேரத்தை செலவழிக்கிறார்கள் 
அதுக்கு ஏதும் ஒரு வழியை கண்டுபிடிப்பது நன்று என்றே எண்ணுகிறேன். 

அழகாக எழுதப்பட்ட அர்த்பூர்வமான கட்டுரை. உலகில் வளர்ச்சியடைந்த கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் குடும்ப வாழ்க்கையில் அடுப்பறை நேரம் ஒழுங்குக்கு கொண்டுவரப்பட்டதும் அவர்களின் வளர்ச்சிக்கு காரணம் என்பது கண்கூடு. நம்மவர்களும் அவ்வாறு சிந்தித்து செயல்படுது முன்னேற்றத்திற்கான படியே. 

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் முறையில் நான் ஒரு பொறியியலாளன்.
 வீட்டில் அம்மாவிற்கு உதவி செய்யும் நேரங்களில்
 சமையல் நுணுக்கங்கள் சில கற்றுக் கொண்டேன்.
 திருமணத்தின் போது  
மனைவிக்கு பெரிதாக சமையல் தெரியாது.
 திருமணத்தின் பின் இருவரும் 
வெளிநாடு வந்து விட்டோம்  
இருவரும் அவரவர்  துறையில் வேலை
 மனைவி ஒரு ஆசிரியர்
 பிள்ளைகள் ஓரளவு வளர்ந்ததும்
 மனைவி வேலை செல்வதை நிறுத்தி விட்டார்.
 பிள்ளைகளுக்கு முழுநேர ஆதரவு 
வீட்டில் அவசியம் என்று .
நாங்கள் பொதுவாக 
வெளி கடைகளில் சாப்பிடுவதில்லை
 முன்பென்றாலோ  இப்போதென்றாலோ  
சமையலில் இருவருமே பங்கு கொள்கிறோம் .
எனக்கு மனைவியின் சமையல் பிடிக்கும், 
பிள்ளைகளுக்கு என் சமையல் பிடிக்கும்.
 மனைவிக்கும் அப்பிடித் தான் என நினைக்கிறேன்
 ஆனால் அவர் சொல்வதில்லை
மகளும் கணவரும் ஒரே துறையில் வேலை 
சமையலை இருவருமே சேர்ந்து தான் செய்கிறார்கள் 
புரிந்துணர்வுகள் இருக்கும் போது 
பெண் விடுதலை ஆண் விடுதலை 
என்பன கருத்திழந்து போகின்றன……

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

அதுக்காக எல்லா நாட்களிலும் எல்லாரும் எட்டு டொலருக்கு சாப்பாடு எடுத்து சாப்பிடுவதில்லை. இடியப்பம் வாங்குகின்றவர்கள் கூட அதனுடன் வரும் சொதியை நம்பி வாங்குவதும் இல்லை. வீட்டில் கறி ஏதும் அதனுடன் சாப்பிட கட்டாயம் இருக்கும்.

வேலைக்கு போகும் பெண்கள் வீட்டுக்கு வந்த பின்னும் அவர்கள் மட்டுமே சமையலில் ஈடுபடவேண்டும் எண்ணம் எம் படித்த பண்பான தலைமுறை இடம் அருகி வருகின்றது. 

நாம். நான், நீங்கள் என எல்லோரும் எம் பெண் பிள்ளைகளை நன்கு படிப்பிப்பது அவர்கள் சமூகத்தில் நல்ல நிலைக்கு, நல்ல தொழிலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில். அந்த நோக்கத்துக்கு சமையலும் சமையலறையும் முட்டுக் கட்டை போடுகின்றது எனில், அல்லது முன்னேற்றத்தினை தடுக்கின்றது எனில், அதனை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகின்றது. அங்கு ஆணும் பெண்ணும் சமமாக வேலைகளை பகிரிடும் போது இந்த மாற்றம் நிகழ்கின்றது.

இப்பவே முன்னர் இருந்த குசினியை விட இப்போதுள்ள குசினியின் அளவு குறைந்துள்ளது.  ஆணும் பெண்ணும் வேலையால் களைத்து வந்தால், கடையில் உணவு வாங்க வேண்டிய நிலை வருகின்றது. இது தவிர்க்க முடியாது. இது இன்னும் இன்னும் அதிகரிக்கும். தரமான உணவு விற்கும் இடங்களின் தேவையும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் சமையலறைகள் மிகக் குறுகியதாக மாறும்.

அப்பவும் அரதப் பழசான, பூஞ்சனம் பிடித்த கொள்கைகளை விட்டு அகல விரும்பாத சிலர் அதை பார்த்து புறுபுறுத்துக் கொண்டு தான் இருப்பர்.

யாரோ🚲♥ on Twitter: "Ivan than Da samathiya engayo vangi irukan 😂… "

அதுக்காக, சமையல் உதவி செய்யிறன் எண்டு கிச்சனுகிலை பூந்து, மீனை எறிந்து போட்டு,  மீன் செதில் வறை சமைத்து போட்டால்,  கிச்சனுல் இருந்து திருத்தி அடிக்கப்பட்டு, கிச்சன் பக்கமே போக தேவையில்லை என்ற அதிரடி ஐடியாவை நாங்கள் பின்பற்றுகிறோம்.... 😜

  • கருத்துக்கள உறவுகள்

*House wife என்பது ஒரு உத்தியோகம்.*

எனது அதிஷ்டம்.  சாமிகளில் மிக பெரியவர் உடான்ஸ் சாமியார் என்னை ஆணாக படைத்தவிட்டார் House wife உத்தியோகத்திற்கு போகாமல் தப்பிவிட்டேன்.

On 4/7/2021 at 07:46, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வளர்ந்த நாடுகளில் ரெஸ்டாரண்டில் அடிக்கடி சாப்பிடுவது வாடிக்கையாக இருக்கிறது. அவர்களுக்கு வயிற்று வலி வருவதில்லை. ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால் நம்ம ஊரில் ஒரு வருடம் சேர்ந்தாற்போல ஹோட்டல்களில் சாப்பிட்டால் அத்தனை உடல்நல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இங்கு தான் தரம் முக்கிய பங்காற்றுகிறது.

👍

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எனது அதிஷ்டம்.  சாமிகளில் மிக பெரியவர் உடான்ஸ் சாமியார் என்னை ஆணாக படைத்தவிட்டார் House wife உத்தியோகத்திற்கு போகாமல் தப்பிவிட்டேன்

எனது ஒரு உயரதிகாரி பெண், அவரது கணவர் House Husband.. வீட்டிலிருந்து 3 பிள்ளைகளையும் வீட்டையும் கவனிக்கிறார்.. மேலும்.. இது அவரவர் குடும்ப நிலையையும், கணவன் மனைவிக்குமிடையிலான பரஸ்பர புரிந்துணர்வையும் அடிப்படையாக கொண்டதே..

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

அதுக்காக எல்லா நாட்களிலும் எல்லாரும் எட்டு டொலருக்கு சாப்பாடு எடுத்து சாப்பிடுவதில்லை. இடியப்பம் வாங்குகின்றவர்கள் கூட அதனுடன் வரும் சொதியை நம்பி வாங்குவதும் இல்லை. வீட்டில் கறி ஏதும் அதனுடன் சாப்பிட கட்டாயம் இருக்கும்.

வேலைக்கு போகும் பெண்கள் வீட்டுக்கு வந்த பின்னும் அவர்கள் மட்டுமே சமையலில் ஈடுபடவேண்டும் எண்ணம் எம் படித்த பண்பான தலைமுறை இடம் அருகி வருகின்றது. 

நாம். நான், நீங்கள் என எல்லோரும் எம் பெண் பிள்ளைகளை நன்கு படிப்பிப்பது அவர்கள் சமூகத்தில் நல்ல நிலைக்கு, நல்ல தொழிலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில். அந்த நோக்கத்துக்கு சமையலும் சமையலறையும் முட்டுக் கட்டை போடுகின்றது எனில், அல்லது முன்னேற்றத்தினை தடுக்கின்றது எனில், அதனை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகின்றது. அங்கு ஆணும் பெண்ணும் சமமாக வேலைகளை பகிரிடும் போது இந்த மாற்றம் நிகழ்கின்றது.

இப்பவே முன்னர் இருந்த குசினியை விட இப்போதுள்ள குசினியின் அளவு குறைந்துள்ளது.  ஆணும் பெண்ணும் வேலையால் களைத்து வந்தால், கடையில் உணவு வாங்க வேண்டிய நிலை வருகின்றது. இது தவிர்க்க முடியாது. இது இன்னும் இன்னும் அதிகரிக்கும். தரமான உணவு விற்கும் இடங்களின் தேவையும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் சமையலறைகள் மிகக் குறுகியதாக மாறும்.

அப்பவும் அரதப் பழசான, பூஞ்சனம் பிடித்த கொள்கைகளை விட்டு அகல விரும்பாத சிலர் அதை பார்த்து புறுபுறுத்துக் கொண்டு தான் இருப்பர்.

நான்  எப்பொழுதும்  என்னை  புடம்போட பின் நின்றதில்லை

எனது  மகளின் வீட்டு வேலை  நிர்வாகங்களை  பார்த்த  எனது  மனைவி

அவரும்  வேலைக்கு போய் களைத்து வருவார்  பார்த்து  நடந்துக்கோ என்பதற்கு 

எனது  மகளின் பதில்:

எங்க  அப்பரை பழுதாக்கிய   மாதிரி 🤣 என் புருசனையும்  பழுதாக்காதீர்கள்

5 இல்  வளையாதது  50இல்  வளையாது என்பது...🤣

Edited by விசுகு

42 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனது ஒரு உயரதிகாரி பெண், அவரது கணவர் House Husband.. வீட்டிலிருந்து 3 பிள்ளைகளையும் வீட்டையும் கவனிக்கிறார்.. மேலும்.. இது அவரவர் குடும்ப நிலையையும், கணவன் மனைவிக்குமிடையிலான பரஸ்பர புரிந்துணர்வையும் அடிப்படையாக கொண்டதே..

எங்கள் சமூகத்தில் இப்படி ஒரு நிலை வந்து அவர்கள் சந்தோசமாக வாழ்ந்ததை நான் காணவில்லை. ஒன்று ஆண் தன்னை விட மனைவி நல்லா உழைக்கின்றார் எனும் பொறாமையில் மற்றும் இயலாமையில் பிரச்சனை கொடுப்பார். அல்லது மனைவி கணவனை "கையாலாகதவன்" என்ற ரீதியில் அணுகி (தன் சுற்றங்களுக்கும் ஓயாமல் சொல்லிக் காட்டி) பிரச்சனை ஏற்படுத்துவார்.
 
அண்மையிலும் இப்படி காரணத்தினால் என் நண்பரின் குடும்பம் பிரிந்து போனது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் மிக பெரிய IT கொம்பனியில் ஒன்று HCL. $5பில்லியன் கம்பெனி.

இதன் ceo (ஓனர் தமிழர்: சிவ நாடார்) ஒரு முறை சொன்னார்.

தனது stress குறைப்பு வேலை, சமையல் செய்வது என்று. 

கிச்சினுள் புகுந்து, விதம், விதமா சமைத்துக்கொண்டே, ஐடியா போடவும், பிரச்னைகளுக்கு தீர்வு குறித்து யோசிக்கவும், புதிய யுக்திகள் குறித்து சிந்திக்கவும் முடிகிறது என்றார்.     

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.